பிரதேசவாதம் பேசும் பினாமிகள் யார்? கிழக்கு மக்களே சிந்தியுங்கள்
யாழிலுள்ள தந்தை செல்வநாயகத்தின் நினைவு சதுக்கத்தில்தந்தை செல்வாவின் நினைவு தினம் கூட்டத்திம் இன்று (26.04.2012) வியாழக்கிழமை நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் செல்லையா இராஜதுரை உரையாற்றுவதற்குஅமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கறுப்பு கொடிகாட்டி எதிர்புப் போராட்டத்தில் ஈடுபட்டார்
சிவாஜிலிங்கம் தனது கறுப்பு கொடி எதிர்ப்பின் போது, “தமிழ் தேசிய துரோகி இராஜதுரையை வெயேற்று எனவும் மட்டக்களப்பு துரோகி அரசின் அடிவருடி துரோகியை வெளியேற்ற வேண்டும்” என போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதன்போது தந்தை செல்வாவின் நினைவஞ்சலிக் கூட்டத்தில் குழப்ப நிலை ஏற்பட்டது. மட்டக்களப்பு மகானுக்கா இந்த நிலை நான் ஒரு மட்டக்களப்பான் என்ற வகையில் நான் படித்த அரசியல் வரலாறுகளையும் அழியாத மட்டக்களப்பின் அரசியல் சரித்திரத்தையும் இன்று வெளிப்படுத்த வேண்டும் யார் துரோகி ? மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினராக 33ஆண்டுகள் தொடர்ச்சியாக பதவி வகித்த பெருமைக்குரிய இராசதுரை துரோகியா ? அல்லது இன்றய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் துரோகியா சங்கரி துரோகியா என வெளிப்படுத்த வேண்டும் இன்று ரெலோ அமைப்பின் அரசியல் பிரிவு தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும்; எம்.கே.சிவாஜிலிங்கம் கறுப்பு கொடிகாட்டி மட்டக்களப்பு துரோகி யை வெளியேற்ற வேண்டும் என கோசம் இட்டுள்ளார் இவர் இராசதுரைக்கு இட்ட கோசம் அல்ல ஒட்டு மொத்த மட்டக்களப்பு மக்களுக்கு இட்ட கோசம் 33 வருடம் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த மக்கள் பிரதி நிதிக்கு கொடுத்த பட்டம் மக்களுக்கும் கொடுக்கப்பட்டது என்பதே பதே உண்மை இதற்க்கு பின்னும் வெட்கம் கெட்ட மட்டக்களப்பு கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாய் முடியுள்ளனர் ?
யார் இந்த இராஜதுரை ?
சொல்லின் செல்வன் செல்லையா இராசதுரை என்று மட்டக்களப்பில் பெரும்பாலானவர்களால் அழைக்கப்படும் இராசதுரை 1956ஆம் ஆண்டு தமிழரசுக்கட்சியில் போட்டியிட்டு மட்டக்களப்பு தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட போதிலும் அதற்கு முதல் 1950ஆம் ஆண்டுகளில் தமிழரசுக்கட்சியில் இணைந்து மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வராக தெரிவு செய்யப்பட்டதன் மூலம் அரசியலுக்கு பிரவேசித்திருந்தார்.
1956ஆம் ஆண்டிலிருந்து 1979ஆம் ஆண்டுவரை 23ஆண்டுகள் தமிழரசுக்கட்சியிலும் அதன் பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியிலும் இருந்தவர்
தந்தை செல்வநாயகத்தின் பின் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர்நாயகமாக தெரிவு செய்யப்பட்டவர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கம், இராசதுரையும் அமிர்தலிங்கமும் 1956ஆம் ஆண்டில் சமகாலத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்ட போதிலும் அமிர்தலிங்கம் 1970ஆம் ஆண்டு தேர்தலில் வட்டுக்கோட்டை தொகுதியில் தோல்வியடைந்திருந்தார்.
இராசமாணிக்கத்திற்கு பின்னர் கிழக்கில் தமிழரசுக்கட்சியிலும் அதன் பின் தமிழர் விடுதலைக் கூட்டணியிலும் இராசதுரையே மூத்தவராக இருந்தார். தந்தை செல்வநாயகத்தின் பின் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமைப்பதவி தனக்கே கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த இராசதுரைக்கு அமிர்தலிங்கம் அப்பதவியை பெற்றுக்கொண்டது முதல் கசப்புணர்வு வளர ஆரம்பித்தது. தமிழர் விடுதலைக் கூட்டணியில் தலைவர் அல்லது செயலாளர் பதவிகளில் ஒன்று கிழக்கை சேர்ந்தவர் ஒருவருக்கு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை அமிர்தலிங்கம் போன்ற தலைவர்களால் நிராகரிக்கப்பட்டது அன்றே வடக்கு கிழக்க பிரிவினை உருவாகியது தவிர இன்றல்ல என்பதை யாராவது மறுக்கமுடியுமா?
1977ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் வடக்கு தலைமைக்கு கிழக்கு மக்கள் மரண அடி கொடுத்தனர் கிழக்கு தலைமையை அழிக்க நினைத்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமாக இருந்த அமிர்தலிங்கம்.அந்த தேர்தலின் மூலம் காசி ஆனந்தனை மட்டக்களப்பு தொகுதியில் போட்டியிட வைத்து இராசதுரையை தோற்கடிக்க வேண்டும் என அமிர்தலிங்கம் திட்டமிட்டார்.
தொகுதிவாரியான தேர்தலில் ஒரு தொகுதியில் ஒரு கட்சியை சேர்ந்த ஒருவர் மட்டுமே போட்டியிட முடியும் என்பதால் மட்டக்களப்பு தொகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில்இராசதுரைக்கே சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என மட்டக்களப்பில் உள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி கிளைகளும் பொது அமைப்புக்களும் பெரும் போராட்டம் செய்தன இதனால் இராசதுரைக்கு மட்டக்களப்பு தொகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணியில் போட்டியிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கிய போது அடுத்த கபட நாடகத்தை அமிர்தலிங்கம் திட்டம் தீட்டினார். அதேதொகுதியில் செயலிழந்து போய் இருந்த தமிழரசுக்கட்சியில் காசி ஆனந்தனை மட்டக்களப்பு தொகுதியில் போட்டியிடவைத்தார்
இராசதுரையின் தேர்தல் பிரசார மேடைகளில் யாழ்ப்பாண அரசியல் தலைமைக்கு எதிராக மிக காரசாரமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. யாழ்ப்பாண தலைமையின் கீழ் நாம் இருக்க கூடாது என்று கூட சிலர் பேசினர்.அன்றய தலைமைகள் குரல் எழுப்பின அன்று எடுத்த முடிவின் வெளிப்பாடு மட்டக்களப்பில் இன்னும் சில காலத்தில் எடுக்கப்படும் என்பது இன்றய அரசியல் நிரோட்டத்தில் இருந்து உணரக்குடியதாகவுள்ளது
தேர்தலில் இராசதுரை அமேக வெற்றி பெற்றார்
இந்நிலையில்தான் 1978ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கிழக்கு மாகாணத்தை சூறாவளி முற்றாக அழித்திருந்தது. சிதைந்து போன பகுதியை சிரமைக்கும் பணியில் இடுபட அரசின் உதவியை நாடினார் மட்டக்களப்பு தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் செல்லையா இராசதுரை அனால் மட்டக்களப்பின் சிதைவை அழிவை சிந்திக்காத யாழ்பானத்தலமை
தமிழர் விடுதலைக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரும் அரசாங்க அமைச்சர்கள் கலந்து கொள்ளும் எந்த கூட்டத்திலும் கலந்து கொள்ளக் கூடாது என உத்தரவு இட்டிருந்தது
சூறாவளியால் பாதிக்கப்பட்ட சிதைவடந்துள்ள புனரமைப்பு பணிகள் பற்றி ஆராய்வதற்குமாக 1979ஆம் ஆண்டு பிரதமராக இருந்த பிரேமதாஸ மட்டக்களப்புக்கு வருகை தந்தார்.பிரேமதாஸாவை பாராளுமன்ற உறுப்பினர் செல்லையா இராசதுரை மட்டக்களப்பு மக்களுக்காக சென்று வரவேற்றார். மாவட்ட செயலகத்தில் பிரேமதாஸ தலைமையில் நடைபெற்ற கூட்டத்திலும் இராசதுரை கலந்து கொண்டார்.
அதில் இருந்த கட்சி தலமைக்கும் இராசதுரைக்கும் கடிதப் போராட்டம் நடைபெற்றது அழிந்து போன மட்டக்களப்பை மீட்டெடுப்பதற்காக அந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டியது மக்கள் பிரதிநிதி என்ற வகையில் எனது கடமை. அந்த கடமையை செய்த என் மீது கட்சி தலைமை கேள்வி கேட்க முடியாது. விளக்கம் கேட்க முடியாது என இராசதுரை பதிலளித்திருந்தார்.
இராசதுரை உரிய காலத்தில் சரியான பதிலை கட்சி தலைமைப்பீடத்திற்கு வழங்கவில்லை என்றால் அவரை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என அமிர்தலிங்கம் தரப்பு கூறிக்கொண்டிருந்தது. அப்போது உயிருடன் இருந்த திருமதி செல்வநாயகம், திருமதி திருச்செல்வம், ஆகியோருக்கு இராசதுரை உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். தந்தை செல்வநாயகம் உயிருடன் இருந்திருந்தால் தான் இவ்வாறு பழிவாங்கப்பட்டிருக்க மாட்டேன் என்றும் தன்னை திட்டமிட்டு ஒதுக்கி ஓரங்கட்ட வைப்பதும் கட்சியிலிருந்து நீக்க நினைப்பதும் மட்டக்களப்பு மக்களுக்கு செய்யும் துரோகம் என எழுதியிருந்தார். மக்களை பற்றி சிந்தித்த தலைவன் சிதைந்த தனது மண்னை கட்டியேழுப்ப 1979ஆம் ஆண்டு மார்ச் மாதமளவில் இராசதுரை ஆளும் கட்சிக்கு மாறினார். அவருக்கு பிரதேச அபிவிருத்தி அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இதுதான் இராசதுரையின் வரலாறு மட்டக்களப்பு மக்களை மதிக்காத கட்சியை விட்டு ஒதுங்கினார்
1978ல் அன்று ஜனாதிபதியாக இருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவுடன் உறவாடி பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழ் மக்களுக்கு செய்த அநீதியை போல இராசதுரை தமிழ் மக்களுக்கு அநீதி செய்ய வில்லை
அமிர்தலிங்கம், சிவசிதம்பரம், சம்பந்தன், ஆனந்தசங்கரி போன்றோர் நாடாளுமன்றத்தில் ஆதரவாக வாக்களித்து நிறைவேற்றிய பயங்கரவாத தடைச்சட்டத்தால்சிறையில் அடைக்கப்பட்டனர். கொல்லப்பட்டனர். இன்றும் அந்த பயங்கரவாத தடைச்சட்டத்தின் தமிழர்கள் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றனர் இன்று உயிருடன் உள்ள சம்பந்தன் ஆனந்தசங்கரி போன்றவர்களின் இந்த மகா தவறை விடவா இராசதுரை அரசின் பக்கம் சேர்ந்து அமைச்சர் பதவி பெற்றது பிழையா ?
இன்று தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி செய்யும் போரினால் அழிந்த தேசத்தை கட்டமைப்பதை அன்று இராசதுரை சூறாவளியால் பாதிக்கப்பட்ட புனரமைப்பு பணிகளில் இடுபட்டவர் இவருக்கு ரெலோ அமைப்பின் அரசியல் பிரிவு தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் எம்.கே.சிவாஜிலிங்கம் கறுப்பு கொடிகாட்டி மட்டக்களப்பு துரோகியை வெளியேற்ற வேண்டும் என கோசம் இடுவது. எந்த வகையில் நியாயம் யார் துரோகி இன்றும் வடக்கு தலைவர்கள் மட்டக்களப்பு தலைவர்களை மக்களை துரோகியாய் பார்க்கும் படலம் இன்றும் தொடர்ந்துள்ளது ? இவர்களிடம் இன்னும் கைகோர்த்து பயனிப்பது சரியா பிழையா என தீர்மாணித்து தீர்க்கமாண முடிவெடுத்து கூட்டமைப்பிற்க்கு மரண அடி கொடுப்பது மாணமுள்ள மட்டக்களப்பானின் கடமையாகும்.
3 comments: on "பிரதேசவாதம் பேசும் பினாமிகள் யார்?"
well said
shanthru, dont just simply say bad about Jaffna, why i am saying this, Mr. Rajathurai was invited by Mr. S.C.Chandrahasan, a son of Thanthai Selva. So its nothing to do with Jaffna People. This is only for the people who doesnt know the history. The Crack Sivajilingam is nothing infront of Rajathurai, Sivalingam is a useless person. Nothing to worry about him. You might have notice that video. He was alone and wanted to be a popular man.
Palliyai adiththu paavam theda vendam.
யாழ்பாணிகளின் குணம் என்றைக்கும் மாறாது என்பதுக்கு எடுத்துக்காட்டு . யாழ் பா. உ oruvarum வாய் திறக்கவில்லையே?
Post a Comment