முன்னைய பதிவின் தொடராகவே இப் பதிவு
முன்னைய பதிவு
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழரா முஸ்லிமா முதலமைச்சர் பகுதி -01
கிழக்கு மாகாணசபை கலைக்கப்பட்டு விரைவில் மாகாணசபை தேர்தல் இடம்பெறும் என்று இன்று பரவலாகப் போசப்படுகின்ற நிலையில் கிழக்கு மாகாணசபை கலைப்பு மற்றும் மாகாணசபை தேர்தலும் மக்கள் மத்தியில் பெரும் எதிர் பார்ப்புக்களையும் குழப்பங்களையும் ஏற்படுத்தி இருக்கின்றன. மக்கள் மத்தியில் மட்டுமல்ல அரசியல் கட்சிகள் அரசியல்வாதிகள் என்று எல்லோருமே பல குழப்பங்களுக்கு மத்தியில் பல சதித்திட்டங்கள் வயூகங்களை வகுத்துக் கொண்டிருக்கின்றனர்.
தமிழரா முஸ்லிமா முதலமைச்சர் என்பதிலே பாரிய எதிர்பார்ப்புக்களும் தமிழ் மக்கள் மத்தியில் பாரிய சவாலும் இருக்கின்றது. தமிழ் முதலமைச்சர் வரக்கூடாது என்பதிலே பிரதான தமிழ் கட்சிகள் உறுதியாக இருப்பதுடன் பல சதித் திட்ட்களையும் மேற்கொள்ள திட்டமிடுகின்றன. தமிழ் கட்சிகளைப் பொறுத்தவரை பல தமிழ் கட்சிகள் தனித்து போட்டியிட தீர்மானித்திருப்பதாக அறிய முடிகின்றது. இதனால் தமிழ் மக்களின் வாக்குகள் சிதறடிக்கப்பட்டு தமிழ் முதலமைச்சரை நாம் இழக்க நேரிடும்.
மறு புறத்திலே முஸ்லிம் மக்கள் தாங்கள் முதலமைச்சரை பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றனர். அதற்குரிய திட்டங்களையும் முஸ்லிம் கட்சிகள் தீட்டிக்கொண்டிருக்கின்றனர். முஸ்லிம் மக்கள் ஒன்று படுகின்றபோது இலகுவாக முஸ்லிம்கள்முதலமைச்சரைப் பெற முடியும். தமிழர்களின் வாக்குகள் சிதறடிக்கப்பட வாய்ப்புக்கள் அதிகமாகவே இருக்கின்றன.
தமிழர் ஒருவர் மதலமைச்சராக வரவில்லை என்றால் அதற்கான முழுப்பொறுப்பையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரே ஏற்க வேண்டும். கிழக்கிலே தமிழ் முதலமைச்சரை இல்லாமல் செய்த வரலாற்றுத் தவறினை கூட்டமைப்பினர் செய்ய இருக்கின்றனர். கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தியினை சகித்துக் கொள்ள முடியாத கூட்டமைப்பினர் காலங்காலமாக கிழக்கு மக்களுக்கு பல வரலாற்றுத் தவறுகளை செய்து வருபவர்கள் இம் மாகாணசபை தேர்தலையும் கிழக்கு தமிழ் மக்களுக்கு எதிராக பயன் படுத்த திட்டமிடுகின்றனர்.
கிழக்கு மாகாணத்தில் கிழக்கு மாகாணசபை உருவாக்கப்பட்டு கிழக்கு மாகாணம் துரிதமாக அபிவிருத்தி கண்டு வருவதை வடக்கு தலைமைகளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. கிழக்கின் அபிவிருத்தியை இல்லாமல் செய்ய பல சதித்திட்டங்கள் தீட்டுகின்றனர். அதற்கு மட்டக்களப்பு மாவட்ட மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் உடந்தையாக இருந்து கிழக்கு மக்களுக்கு துரோகம் செய்கினறனர். இவர்களின் துரோகங்களை கிழக்கு மக்கள் மறந்துவிடக் கூடாது.
இன்று கூட்டமைப்பினர் கிழக்கு மாகாணசபை தேர்தலில் போட்டியிட இருப்பதாக அறிய முடிகின்றது. கூட்டமைப்பினரின் நிலைப்பாடுகள் என்ன? கொள்கைகள் என்ன? வடக்கு கிழக்கு இணைக்கப்பட வேண்டும் என்பதே அவர்களின் நிலைப்பாடு. கிழக்கு மாகாணசபையை சந்திரகாந்தன் பொறுப்பேற்றபோது சம்பந்தன் அவர்களை முதலமைச்சர் சந்திரகாந்தன் அவர்கள் சந்திக்க சென்றபோது கிழக்கு மாகாணசபை ஒன்று இல்லை கிழக்கில் ஒரு முதலமைச்சரும் இல்லை. கிழக்கு மாகாணசபையை நாம் ஏற்கவில்லை என்று திருப்பி அனுப்பியிருந்தார்.
இன்று கிழக்கு மாகாணசபையில் போட்டியிட தீர்மானிப்பதன் நோக்கம் என்ன? தமது வடக்கு கிழக்கு இணைந்த மாகாணசபை கொள்கையை குழி தோண்டிப் புதைத்துவிட்டனரா? இவர்களிடம் நிரந்தர கொள்கைகள் இல்லையா? தமிழ் மக்களை இவ்வாறு தொடர்ந்து ஏமாற்றப் போகின்றனரா?
தமிழீழம் தமிழீழம் என்று இலச்சக்கணக்கான தமிழர்களை உரிமைப் போராட்டம் என்று அழித்தவர்கள். இதுவரை தமிழர்களுக்காக எதனைச் செய்தனர். கிழக்கு மாகாணசபை உருவாக்கப்பட்டு மாகாணசபை மூலம் தமிழர்களுக்கான தீர்வுகளை பெற முடியும் என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் சி;. சந்திரகாந்தன் சாதித்துக் காட்டியதன் பின்னர். இன்று கூட்டமைப்பினருக்கு மாகாணசபை மீது ஆசை வந்துவிட்டது. மாகாணசபைக்கு கனவு காண்கின்றனர்.
அண்மையில் அரியநேத்திரன் அவர்கள் ஒரு நிகழ்வில் பேசியிருந்தார் மக்கள் சாகலாம் கொள்கை சாகாது என்று கொள்கைகள் சாக வைக்காத கொள்கைகளாக இருக்க வேண்டும். கொள்கைகளுக்காக மக்களை சாக வைப்பவர்கள் இவர்கள்.அது ஒரு புறமிருக்க கொள்கை சாகாது என்று சொல்பவர்கள் வடக்கு கிழக்கு இணைந்த மாகாணம் வேண்டும் என்ற கொள்கைகளுடன் இருப்பவர்கள். கொள்கைகளை சாக வைத்து குழி தோண்டி புதைத்துவிட்டா கிழக்கு மாகாணசபை தேர்தலில் போட்டியிடப் போகின்றார்கள்.
தொடரும்...
0 comments: on "கொள்கைகளை குழி தோண்டிப் புதைக்கும் கூட்டம்"
Post a Comment