இன்று கிழக்கிலே எல்லோராலும் பரவலாகப் பேப்படுகின்ற விடயம் கிழக்கு மாகாணசபைக் கலைப்பும் மாகாணசபைத் தேர்தலும் முதலமைச்சர் தமிழரா அல்லது முஸ்லிமா என்கின்ற விடயமுமாகும். இன்றைய கால கட்டத்தில் இவ்விடயங்களை கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தமிழ் மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டும்.
கிழக்கு மாகாணசபை கலைப்பும் தொடர்ந்து இடம்பெறும் தேர்தலும் முதலமைச்சர் தெரிவுமே கிழக்கு தமிழர்களின் தலைவிதியை தீர்மானிக்கின்ற ஒன்றாக அமைய இருக்கின்றது. இம் மாகாணசபைத் தேர்தலானது தமிழ் மக்களிடையே சாவால் நிறைந்த ஒன்றாகவும் கிழக்கு வாழ் தமி்ழ் மக்களின் தலைவிதியினைத் தீர்மானிக்கின்ற ஒரு தேர்தலாகவும் அமைய இருக்கின்றது.
இத் தேர்தலில் முதலமைச்சரை தீர்மானிப்பதில் பல சவால்களை கிழக்கு தமிழ் மக்கள் எதிர்நோக்க இருக்கின்றனர். கடந்த மாகாணசபை தேர்தலையும் இன்றைய கால சூழ்நிலைகளையும் அரசியல் நிலைமைகளையும் நாம் ஆராய்ந்து பார்க்கவேண்டி இருக்கின்றது. கடந்த மாகாணசபைத் தேர்தலிலே முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனா அல்லது ஹிஸ்புல்லாவா என்று தீர்மானிப்பதிலே பல சவால்களை எதிர்நோக்கி தமிழ் மக்கள் வெற்றி பெற்று இருந்தனர் சிவநேசதுரை சந்திரகாந்தன் முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்டார்.
சந்திரகாந்தன் அவர்கள் முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்டதன் வெளிப்பாடுதான் இன்றை கிழக்கின் துரித அபிவிருத்தியாகும். ஹஸ்புல்லாவோ அல்லது வேறு ஒருவரோ அன்று முதலமைச்சராக பதவி ஏற்றிருந்தால் கிழக்கு மாகாணம் குறிப்பாக தமிழர் பிரதேசங்கள் இந்தளவிற்கு அபிவிருத்தியினைக் கண்டிருக்க முடியாது.
அன்று மாகாணசபைத் தேர்தல் இடம்பெற்ற சூழ்நிலைக்கும் இன்றைய சூழ்நிலைக்கும் பாரிய வேறுபாடுகளும ;தமிழ் மக்களுக்கு பாரிய சவால்களும் இருக்கின்றன. அன்று மாகாணசபை தேர்தல் இடம்பெற்றபோது தமிழ் கட்சிகளுக்கிடையே போட்டி இருக்கவில்லை தமிழ் மக்கள் அனைவரும் ஒரு கட்சிக்கே வாக்களித்திருந்தனர். அனைவரும் ஒருமித்து ஒரு கட்சிக்கு வாக்களித்தும் கூட தமிழ் முதலமைச்சரை தீர்மானிப்பதிலே பல சவால்கள் நிறைந்திருந்தன.
அன்றை நிலையைவிட இன்றைய நிலை மிக மோசமான பல சவால்கள் நிறைந்ததாக அமைய இருக்கின்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட தமிழ் கட்சிகள் பல இத் தேர்தலிலே போட்டியிட தீர்மானித்திருப்பதாக அறிய முடிகின்றது. இதனால் தமிழ் மக்களின் வாக்குகள் சிதறடிக்கப்பட இருக்கின்றது. இதன் காரணமாக தமிழ் முதலமைச்சரை இழக்கக்கூடிய துப்பாக்கிய நிலையினை தமிழ் மக்கள் பெறப்போகின்றார்கள்.
பல கட்சிகள் போட்டியிட்டு தமிழர்களின் வாக்குகள் சிதறடிக்கப்பட்டு தமிழ் முதலமைச்சரை பெற முடியாமல் போகின்றபோது. நேரடியாகவே ஒரு முஸ்லிம் வேட்பாளர் முதலமைச்சராக வரப் போகின்றார். இதனால் அபிவிருத்தி கண்டு வரும் தமிழ் பிரதேசங்களின் அபிவிருத்திகள் தடைப்பட வாய்ப்புக்கள் இருக்கின்றன. இவ்வாறு பல பிரச்சினைகள் இருக்கின்றன.
இவ்வாறான பிரச்சினைகளை தமிழ் கட்சிகள் உணராமலும் இல்லை. கூட்டமைப்பு உட்பட பல தமிழ் கட்சிகள் கிழக்கில் ஒரு தமிழ் முதலமைச்சர் வரக்கூடாது என்பதற்காகவே தமிழர்களின் வாக்குகளை சிதறடிப்பதற்காக தேர்தலில் போட்டியிட தீர்மானித்திருக்கின்றனர்.
மறு புறத்தில் முஸ்லிம்கள் தாங்கள் முதலமைச்சரை பெற வேண்டும் என்பதற்காக ஒன்று பட்டு செயற்படுகின்றனர்.
தொடரும்..
0 comments: on "கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழரா முஸ்லிமா முதலமைச்சர் பகுதி -01"
Post a Comment