உண்மைகளை யாராவது சொல்ல வந்தால் பிரதேச வாதம் பற்றி பேசுகின்றான் என்று சொல்லி துரோகி பட்டம் வழங்கி அவனை இல்லாதொழிக்க நினைக்கும் தேசமிது. இது வரலாறு சொல்லும் பாடம்.
இந்த தொடர் பதிவு மூலம் தமிழர்கள் ஏமாற்றப்பட்ட, மறைக்கப்பட்ட துரோகங்களை வெளியிடுகின்றேன். காலம்காலமாக எமது தமிழ் தலைவர்கள் பலர் தமிழர்களை ஏமாற்றி வந்திருக்கின்றனர். அவை மறைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றை இக்கால சந்ததியினர் அறிந்து கொள்ள வேண்டும்.
நான் பொய்களை எழுதுகின்றேன் என்று சொல்பவர்கள் நான் எந்த இடத்திலே பொய் சொல்கின்றேன் என்று சொல்லுங்கள். நான் சொல்பவைகள் பொய் என்றால் உண்மையான வரலாறுகளை சொல்லுங்கள்.
காலங்காலமாக என்ன நடக்கிறது உண்மைகளை சொல்ல வருபவர்களை பிரதேசவாதம் பேசுகின்றான் என்று சொல்லி சொல்ல வருபவனின் வாயை மூடி உண்மைகளை குழி தோண்டி புதைத்திருக்கிண்றீர்கள். அதே போன்றுதான் இன்று என்னையும் நினைக்கின்றீர்கள்.
எனது இந்த தொடர் பதிவிலே யாழ்ப்பாணத் தமிழர்களை மோசமான வார்த்தைகளால் சொல்லி இருக்கின்றேனா? ஆனால் தமிழர்களுக்கு எதிராக துரோகமிழைத்த தமிழ் தலைவர்களையும், அரசியல்வாதிகளையுமே (நயவஞ்சகம்,துரோகம்,ஏமாற்று,) போன்ற வார்த்தைகளால் அடையாள படுத்தி இருக்கின்றேன். இந்த தமிழ் தலைவர்களின், அரசியல்வாதிகளின் துரோகங்களையும், ஏமாற்றுக்களையும் மூடி மறைப்பதற்காக பிரதேசவாதம் பேசுகின்றேன் என்று சொல்ல வேண்டாம்.
//உங்கள் பதிவுகளுக்கான ஆதாரத்தைக் காட்டுவது நல்லது.
காரணம் இந்த இனப்பிரச்சினை ஆரம்பித்த போது நீங்கள் பிறந்திருக்கவே மாட்டீர்கள்..//
நான் பிறக்க முன்னர் இடம்பெற்ற சம்பவங்களை அறிந்திருக்கமாட்டேன் என்று நினைப்பது தவறானது. நான் பிறக்க முன்னர் இடம்பெற்ற சம்பவங்களை என்னால் அறிந்து கொள்ள முடியாதா?
ஆதாரங்கள் இருக்கின்றன நான் எந்த இடத்திலே பொய் சொல்கின்றேன் என்று சொல்லுங்கள் ஆதாரத்தை காட்டுகிறேன்.
திரும்பவும் சொல்கின்றேன் நான் பொய்களை எழுதுகின்றேன் என்று சொல்பவர்கள் நான் எந்த இடத்திலே பொய் சொல்கின்றேன் என்று சொல்லுங்கள், சுட்டிக் காட்டுங்கள். உண்மையான கதைகளை சொல்லுங்கள். அதைவிடுத்து வெறுமனே பொய்யை எழுதுகின்றான் என்று துள்ளிக் குதிக்காதீர்கள்.
லோஷன் அண்ணா என்னுடைய இந்த தொடர் பதிவு தொடர்பாக தனது கருத்தை பதிவிட்ட போது அப்பதிவிலே எனக்கு விளம்பரம் கிடைத்துவிட்டது என்று சொன்ன பதிவர்களுக்கு சொல்கின்றேன். எனக்கு எவரும் விளம்பரம் செய்ய வேண்டிய அவசியமில்லை. என்னுடைய பதிவுகளை வாசிப்பதற்கு என்று சிலர் இருக்கின்றனர்.
உங்களைப் போன்று அனானியாக வந்து பிரதேசவாதத்தை தூண்டுகின்ற வகையிலே நான் கருத்துரை இடுபவன் நானல்ல . எனக்கு மோசமான வார்த்தைகளால் அனானியாக கருத்துரை இடுபவர். அனானிகளை இல்லாதொழிக்க வேண்டும், போலிகளை ஒழிப்போம் என்று சொல்லிக்கொண்டிருக்கும் ஒரு பதிவர்தான்.
அண்மையில் என்னுடைய புகைப்படம் ஒன்று ஒரு இணையத்தளத்தில் வெளியாகியது. வெளியாகிய அந்த நிமிடத்தில் என்னோடு அரட்டையில் இணைந்திருந்த அந்த பதிவருக்கு என் புகைப்படம் வெளியாகிய இணையத்தளத்தின் தொடுப்பை வழங்கினேன். உடனடியாக அந்த நிமிடத்திலேயே என்னுடைய வலைப்பதிவுக்கு அனானியாக ஒரு கருத்துரை வந்தது அந்த புகைப்படத்தை சம்பந்தப்படுத்தி மோசமான வார்த்தைகளால் திட்டி தீர்த்து. இப்படி இருக்கின்றார்கள் பதிவர்கள்.
பதிவுலகத்தில் பிரதேச வேறுபாடு இல்லை என்று சொல்லுங்கள் பார்க்கலாம். இன்று மட்டக்களப்பு அம்பாறை பிரதேசங்களிலே பல பதிவர்கள் இருக்கின்றனர். இலங்கை வலைப்பதிவர்களின் திரட்டி என்று சொல்லிக் கொண்டிருக்கும் யாழ்தேவியிலே சிலர் பதிவு செய்திருக்கின்றார்கள். அவர்களில் எத்தனை பேரை நட்சத்திர பதிவராக அறிமுகம் செய்திருக்கின்றார்கள் என்று சொல்லுங்கள் பார்க்கலாம்?
இன்னும் ஒன்றைக் கேட்கின்றேன். வன்னியிலே யுத்த நடவடிக்கை ஆரம்பிக்க முன்னர் கிழக்கிலே பாரிய யுத்தம் இடம் பெற்றது. அப்போது பல்லாயிரக் கணக்கான மக்கள் அனாதைகளாக அகதி முகாம்களிலே பல மாதங்கள் சொல்லொண்ணா துயரங்களை அனுபவித்தனர். அப்போது ஒரு பதிவராவது அவர்களுக்காக எழுதியிருக்கின்றீர்களா?
ஆனால் நான் அன்று வன்னியிலே மக்கள் பல்வேறு அவலங்களை சந்தித்தபோது. அத்தனையையும் பதிவிட்டிருக்கின்றேன். அவலங்களை சித்தரிக்கின்ற புகைப்படங்களை வெளியிட்டிருக்கின்றேன். அப்போது புலிகளின் அடிவருடி என்று எத்தனை மிரட்டல்கள், அச்சுறுத்தல்கள். எதனையும் பொருட் படுத்தாது எழுதியவன் நான்.
இன்று உண்மைகளை எழுதுகின்றபோது. உண்மைகளை மூடி மறைப்பதற்காக பொய் எழுதுகிறேன், பிரதேச வாதத்துக்கு வித்திடுகிறேன் என்று சொல்லவேண்டாம்.
இன்று உண்மைகளை எழுதுகின்றபோது. உண்மைகளை மூடி மறைப்பதற்காக பொய் எழுதுகிறேன், பிரதேச வாதத்துக்கு வித்திடுகிறேன் என்று சொல்லவேண்டாம்.
எந்த இடத்திலே பொய்யை எழுதுகின்றேன் என்று சுட்டிக்காட்டுங்கள். உண்மையான வரலாறை சொல்லுங்கள்.
எனது பயணம் தொடரும்...
21 comments: on "பதிவுலக பித்தலாட்டங்கள்"
உங்களுடைய(?) தொடர்பதிவு மீது கருத்துத் தெரிவிக்குமளவிற்கு நான் இன்னும் தாழ்ந்து போகவில்லை.
அதனால் அதை அப்படியே விட்டுவிடுகிறேன்.
நீங்கள் தொடர்ந்து அரட்டை செய்த பின்னர் உங்கள் தளத்தில் அனானிப் பின்னூட்டம் வந்தது என்று சொல்லி வருகிறீர்கள்.
உங்களால் உங்களில் தைரியமிருந்திருந்தால் அதை நேரடியாக என் பெயரைப் பயன்படுத்தியே சொல்லலாமே?
நீங்கள் என்னுடன் முகப்புத்தகத்தில் உரையாடி அந்த சுட்டியைத் தந்தது எனக்கு மட்டுமான பிரத்தியேகத் தளத்திலல்ல.
அது மீனகம் என்ற ஒரு பொதுவான தளத்தில்.
எனக்கு முதல் அதை எத்தனையோ பேர் பார்த்திருக்கலாம், உங்களை அடையாளம் கண்டிருக்கலாம்.
உங்களுடைய அரசியற் பிரவேசம் பற்றி நான் யாருடனும் கதைக்கவில்லை என்று பொய் சொல்ல மாட்டேன், ஆனால் நான் கதைத்த ஒரு சிலருக்கு எனக்கு முன்பே அந்த விடயம் தெரிந்திருந்தது.
அன்று நானோ, அல்லது அந்த நபர்களோ சொல்லிக் கொண்ட வார்த்தைகள் 'அது அவர் தெரிவு, அவரின் தனிப்பட்ட முடிவு' என்று.
இதை நம்பினாலும் நம்பாவிட்டாலும் அது உங்களைப் பொறுத்தது.
உங்களது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பெயரின்றித் தாக்கும் கேவலமான எண்ணம் எனக்குக் கிடையாது.
அந்தப் பின்னூட்டத்துக்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது.
இங்கே சிலர் வந்து 'எங்கப்பன் குதிருக்குள் இல்லை' என்கிறேன் என்பார்கள்.
ஆனால் இவர் என்னைச் சுட்டிக் காட்டி ஏற்கனவே ஒருமுறை பதிவில் கூறியிருந்தாலும் அமைதி காத்தேன், திரும்பவும் அதையே தொடங்கியதால் தான் பதிலளிக்கிறேன்.
சில விடயங்களை வெறுமனே ஊகிப்பதன் மூலம் முடிவெடுத்துவிடாதீர்கள்.
நீங்கள் என்னைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்பது எனக்குத் தேவையில்லாத விடயம், அதைப் பற்றி நான் கவலைப்படப் போவதும் இல்லை.
(எனக்குத் தெரிந்து முதன்முதலாக ஒருவரின் பதிவுக்கு மறைவாக்குச் செலுத்தியிருக்கிறேன். நன்றி.)
//கன்கொன் || Kangon கூறியது...//
என் புகைப்படம் வெளியான இணையத்தளத்தின் சுட்டியை புகைப்படம் வெளியான அதே நிமிடத்தில் ஒரு நண்பருக்கு கொடுத்தேன். அதே நிமிடத்தில் அனானி கருத்துரை வந்தது. அதன் பின்னர் சில நண்பர்களுக்கு அரட்டையில் அந்த இணையத் தளத்தின் சுட்டியை கொடுத்திருந்தேன். நான் வேறு எவருக்கும் சுட்டி தெரிந்திருக்காது என்று சொல்லவில்லை. உங்களைப்போன்று பல நண்பர்களுக்கு சுட்டியை வழங்கினேன். உங்களுக்கு மட்டுமே வழங்கினேன் என்று தவறாக புரிந்து கொள்ள வேண்டாம்.
அந்த பதிவருக்கு புரிந்திருக்கும்...
//கன்கொன் || Kangon கூறியது...
உங்களுடைய(?) தொடர்பதிவு மீது கருத்துத் தெரிவிக்குமளவிற்கு நான் இன்னும் தாழ்ந்து போகவில்லை.//
சிரிப்பு வருகிறது...
யார் உயர்ந்தவர்? யார் தாழ்ந்தவர்?
அன்புள்ள சந்ரு,
கொள்கைப்பிடிப்பு உள்ள அனைவரும் எதிர்கொள்ள வேண்டிய எதிர்ப்புகளே இவை. மன தைரியத்துடன் உங்கள் கருத்துக்களை சொல்லி வாருங்கள்.
நானும் தமிழீழத்தை ஆதரித்தவந்தான், தமிழீழம் மலரும் என்று கனவு கண்டவன்தான், தமிழனுக்கு என்று ஒரு நாடு கிடைக்கும் என்றால் எந்தத் தமிழனுக்குத்தான் சந்தோசமில்லை.
ஆனால் என்ன நடந்தது? இன்று தமிழீழம் கிடைத்ததா? எத்தனை உயிர்களை தியாகம் செய்திருக்கின்றோம், இந்த யுத்தத்தால் தமிழ் பிரதேசமே அழிந்ததே. தமிழீழம் எங்கே போனது?
தமிழீழத்துக்காக போராடுங்கள், போராடுங்கள் என்று வெளிநாடுகளிலும், கொழும்பிலும் இருந்து வீர வசனம் பேசியவர்களே உங்களிடம் ஒன்றை மட்டும் கேட்கின்றேன் தமிழீழம் மலரும் என்ற கனவுகளோடு வீரச்சாவை தழுவிய போராளிகளையும், அவர்களது குடும்பத்தின் நிலையையும் அந்த பெற்றோரின் மன வேதனையையும் நீங்கள் அறிவிர்களா? அவர்களைப் பற்றித்தான் சிந்தித்தீர்களா?
ஒரு வெற்றிகரமான தாக்குதலை நடாத்திவிட்டால் அதனை கொண்டாடினீர்கள். அந்த தாக்குதலிலே உயிரிழந்த போராளியையும், அந்த போராளியின் குடும்பத்தை பியும் சிந்தித்திருக்கின்றீர்களா?
தமிழீழமென்பதுன்பது இன்றைய நாளில் அடைய முடியாத இலக்கு அல்லவா. இதை அன்று சிந்தித்திருந்தால் இத்தனை அழிவுகளையும் தவிர்த்து வேறு வழிகளில் தமிழர் உரிமைகளை பெற முயற்சி செய்திருக்கலாமல்லவா?
சந்துரு,
லூசனின் சமுதாய முகம் தான் பலருக்கு தெரியும், உண்மை முகம் தெரியாது, அது தெரியாமல் நீங்களும் அவனுக்கு நிறையவே ஆதரவு கொடுத்திருக்கிறீர்கள், இப்பொழுது நல்லாவே புரிந்திருப்பீர்கள்.
தான் காலடி வைக்கும் துறையில் தன்னை ஒருவனும் முந்தக்கூடாது என்ற நல்ல மனம் படைத்தவன். 'தான் நல்லா இருக்கணும் எண்டா, எவனை வேணுமானாலும் போட்டு தள்ளலாம்' என்ற தல வழியை பின்பட்டுபவன். அதற்கு சில அடிவருடிகளை வைத்திருக்கிறான். தற்போது அதில் முக்கியமானவன் 'யாழ்பாணத்தில் மாணவர் அமைப்பு என்ற பெயரால் சமூக சீர்கேடுகளில் ஈடுபட்ட தேடப்பட்ட பிரபல குற்ற்றவாளியின் தம்பி கோபி.
அவனது தற்போதைய தொழில் இணையத்தில் 24 மணி நேரமும் குந்தியிருந்து கும்மியடிப்பது.
வெகு விரைவில் தலையும் வாலும் அகப்பட்டு நசுக்கப்படும்
சந்துரு உமது பதிவில் எதிர்பதிவு போட்டால் மட்டும் காணாது விரிவாக சிந்தியும். பிரபலம் வேண்டாம் என்கிறீர் பிறகேன் யாழ்தேவியில் உமது புகைப்படம் வரவில்லை என்று புலம்புகிறீர். அதைவிட இத்தனை கதைக்கிறீரே இந்தபோராட்டம் தோற்று போனதன் பிரதான காரணமே மட்டக்களப்பை சேர்ந்தவரை தளபதியாக்கி அதிகளவு நம்பிக்கை வைக்க அவர் பணத்திற்கு அடிமையாகிஅனைத்து இரகசியங்களையும் காட்டிகொடுத்த பின்னர் தான் என்பதனையும் புரிந்து கொள்ளும். அத்துடன் எத்தனை படித்த மட்டக்களப்பை சேர்ந்தவர்கள் கருணாவிற்கு பின்னால் சென்றார்கள் என்றும் தெரிந்து கொள்ளும். அவரவரை வைக்கும் இடத்தில் வைக்காதது யாழ்ப்பாணத்தவர்களின் பிழை தான்.
அடுத்து மட்டக்களப்பு மக்கள் கொல்லப்பட்டபோது எத்தனை பதிவர் எழுதினார்கள் என்று கேட்கிறீர் உமது காலத்தில் நடப்பவை கூட உமக்கு புரியாதா...... தற்போது பிரபலமாகி இருக்கும் பதிவர்கள் ஓரிருவரை தவிர எத்தனை பேர் 2007 இற்கு முன்னர்(2005 ,2006 ) எழுதியிருக்கிறார் என தகவல் எடுத்து பாரும். இந்த சின்ன விடயமே புரிந்து கொள்ள முடியாமல் பெரிய வரலாறை ................................
//DrPKandaswamyPhD கூறியது...
அன்புள்ள சந்ரு,
கொள்கைப்பிடிப்பு உள்ள அனைவரும் எதிர்கொள்ள வேண்டிய எதிர்ப்புகளே இவை. மன தைரியத்துடன் உங்கள் கருத்துக்களை சொல்லி வாருங்கள்.//
உங்கள் நேர்மையான கருத்துக்கு நன்றிகள்.
உங்கள் கருத்துக்களுக்கும் நன்றிகள் தர்சன்
//archchana கூறியது...
சந்துரு உமது பதிவில் எதிர்பதிவு போட்டால் மட்டும் காணாது விரிவாக சிந்தியும். பிரபலம் வேண்டாம் என்கிறீர் பிறகேன் யாழ்தேவியில் உமது புகைப்படம் வரவில்லை என்று புலம்புகிறீர். அதைவிட இத்தனை கதைக்கிறீரே இந்தபோராட்டம் தோற்று போனதன் பிரதான காரணமே மட்டக்களப்பை சேர்ந்தவரை தளபதியாக்கி அதிகளவு நம்பிக்கை வைக்க அவர் பணத்திற்கு அடிமையாகிஅனைத்து இரகசியங்களையும் காட்டிகொடுத்த பின்னர் தான் என்பதனையும் புரிந்து கொள்ளும். அத்துடன் எத்தனை படித்த மட்டக்களப்பை சேர்ந்தவர்கள் கருணாவிற்கு பின்னால் சென்றார்கள் என்றும் தெரிந்து கொள்ளும். அவரவரை வைக்கும் இடத்தில் வைக்காதது யாழ்ப்பாணத்தவர்களின் பிழை தான்.
அடுத்து மட்டக்களப்பு மக்கள் கொல்லப்பட்டபோது எத்தனை பதிவர் எழுதினார்கள் என்று கேட்கிறீர் உமது காலத்தில் நடப்பவை கூட உமக்கு புரியாதா...... தற்போது பிரபலமாகி இருக்கும் பதிவர்கள் ஓரிருவரை தவிர எத்தனை பேர் 2007 இற்கு முன்னர்(2005 ,2006 ) எழுதியிருக்கிறார் என தகவல் எடுத்து பாரும். இந்த சின்ன விடயமே புரிந்து கொள்ள முடியாமல் பெரிய வரலாறை ................................//
நான் யாழ்தேவிக்கு எதிராக பதிவேளுதியதன் காரணத்தை பதிவை வாசித்து நன்றாக விளங்கிக் கொள்ளுங்கள் என் படம் போடவில்லை என்பதற்காக அல்ல. இலங்கை பதிவர்களின் திரட்டி என்று சொல்லும் யாழ்தேவி பல பதிவர்களை புறக்கணிக்கின்றது என்பதற்காகவேதான்.
கிழக்கு மக்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து அனாதைகளாக அகதி முகாம்களிலே இருந்தபோது எந்த பதிவரும் அது பற்றி பதிவிட்டவில்லை என்று நான் நான் குறிப்பிடும் காலம் 2005 , 2006 , காலப்பகுதியல்ல அண்மையிலே வன்னி படை நடவடிக்கைக்கு முன்னர் கிழக்கிலேதான் படை நடவடிக்கை ஆரம்பமானது. அப்போது அகதிகளான கிழக்கு மாகாண மக்கள் பட்ட இன்னல்களையும், அவலங்களையும் யாராவது பதிவிட்டிருக்கின்றார்களா என்றுதான் கேட்கிறேன்.
வரலாறுகள் பலராலும் திரிபுபடுத்தப்படும் இந்த நேரத்தில் உண்மையான வரலாறை அறியாவலாயிருக்கிறேன். அதற்காகத்தான் ஆதாரம் கேட்கிறேன். உங்கள் தொடரை தொடர்ந்து வாசித்துவரும் நிலையில் இது தொடர்பாக நாலு பேருடன் பேசுவதற்கு/ விவாதிப்பதற்கு ஆதாரம் இருந்தால் நல்லதல்லவா? அதற்காகவேனும் ஆதாரங்களைத் தெரிவியுங்களேன்
- உங்கள் வாசகன்
திருவாளர் சந்த்ரு, இனியும் என்ன இருக்கு? பேசாமல் உண்மையைச் சொல்லுங்கோவன். உங்கட கட்சி போன தேர்தலில பெற்ற பெரு வெற்றிக்குப் பிறகு உங்களுக்கு அரசியல் நடத்த பிரதேசவாதம் எண்ட ஆயுதம் தேவைப்படுது. அதுதானே? பிறகு எதுக்கு சும்மா கஸ்டப்பட்டுக்கொண்டு?
// archchana கூறியது...
இந்தபோராட்டம் தோற்று போனதன் பிரதான காரணமே மட்டக்களப்பை சேர்ந்தவரை தளபதியாக்கி அதிகளவு நம்பிக்கை வைக்க அவர் பணத்திற்கு அடிமையாகிஅனைத்து இரகசியங்களையும் காட்டிகொடுத்த பின்னர் தான் என்பதனையும் புரிந்து கொள்ளும். அத்துடன் எத்தனை படித்த மட்டக்களப்பை சேர்ந்தவர்கள் கருணாவிற்கு பின்னால் சென்றார்கள் என்றும் தெரிந்து கொள்ளும். அவரவரை வைக்கும் இடத்தில் வைக்காதது யாழ்ப்பாணத்தவர்களின் பிழை தான். //
ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள். விடுதலைப் போராட்டத்திலே பல வெற்றிகளையும் சாதனைகளையும் படைத்தவர்கள் கிழக்கு மாகாண போராளிகளே. புலிகள் அமைப்பிலே எத்தனை பிரிவுகள் இருந்தன. ஒவ்வொரு பிரிவும் ஒவ்வொருவரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன. அத்தனையும் வடக்கை சேர்ந்தவர்களுக்கே வழங்கப்பட்டிருந்தன. கிழக்கை சேர்ந்த யாருக்கு வழங்கப்பட்டது.
சண்டை செய்வதற்கும் வெற்றிகளையும், சாதனைகளையும் படைப்பதற்கு மட்டுமா கிழக்கு போராளிகள். இதனை கேட்டபோதுதான் கருணா அம்மான் அவர்கள் துரோகி பட்டம் வழங்கப்பட்டது.
அவர் அன்று பிரியாமல் இருந்திருந்தால் அவரும் மண்டையில் போடப்பட்டிருப்பார். எதிர் கருத்துடையவர்களையும், பிழைகளை தட்டிக்கேட்கின்றவர்களுக்கும் என்ன நடக்கும் என்று நான் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை.
// கிழக்கு மக்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து அனாதைகளாக அகதி முகாம்களிலே இருந்தபோது எந்த பதிவரும் அது பற்றி பதிவிட்டவில்லை என்று நான் நான் குறிப்பிடும் காலம் 2005 , 2006 , காலப்பகுதியல்ல அண்மையிலே வன்னி படை நடவடிக்கைக்கு முன்னர் கிழக்கிலேதான் படை நடவடிக்கை ஆரம்பமானது. அப்போது அகதிகளான கிழக்கு மாகாண மக்கள் பட்ட இன்னல்களையும், அவலங்களையும் யாராவது பதிவிட்டிருக்கின்றார்களா என்றுதான் கேட்கிறேன். //
வரலாறு?
ம்...
கிழக்கு நோக்கிய படை நடவடிக்கை மாவிலாறில் ஆரம்பித்தது ஜூலை 21, 2006.
முடிவடைந்தது ஜூலை 11, 2007.
http://www.reuters.com/article/idUSCOL15933520070711
//பெயரில்லா கூறியது...
திருவாளர் சந்த்ரு, இனியும் என்ன இருக்கு? பேசாமல் உண்மையைச் சொல்லுங்கோவன். உங்கட கட்சி போன தேர்தலில பெற்ற பெரு வெற்றிக்குப் பிறகு உங்களுக்கு அரசியல் நடத்த பிரதேசவாதம் எண்ட ஆயுதம் தேவைப்படுது. அதுதானே? பிறகு எதுக்கு சும்மா கஸ்டப்பட்டுக்கொண்டு?//
இந்தப் பதிவிலே முதலமைச்சர் சந்திரகாந்தனுக்கும் T .M .V .P கட்சிக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கின்றதா? முதலமைச்சர் சந்திரகாந்தனையும் T .M .V .P கட்சியையும் வேண்டுமென்றே சிலர் தவறான முறையில் குறிப்பிட்டிருப்பதை கண்டிக்கின்றேன்.
பொதுத் தேர்தலிலே T .M .V .P கட்சியானது தோல்வி அடைந்ததாக நாம் கருதவில்லை. வெற்றியாகவே கருதுகின்றோம். 20000 மேற்பட்ட வாக்காளர்கள் T .M .V .P கட்சிக்கு வாக்களித்திருக்கின்றனர்.
பல தசாப்தங்களாக மக்கள் மத்தியிலே பரப்பப் பட்ட தமிழீழம் என்ற விசமப் பிரசாரங்களை இரண்டு, முன்று ஆண்டுகளில் மக்கள் மனதை விட்டு அகற்றிவிட முடியாது. அந்த அளவுக்கு பல தசாப்தங்களாக வீர வசனங்களைப் பேசி மக்களை உணர்ச்சிவசப் படுத்தி இருக்கின்றார்கள்.
கடந்த தேர்தலிலே நான்கு ஆசனங்களை பெற்ற தமிழரசு கட்சி மூன்று ஆசனங்களை இந்த தேர்தலிலே பெற்றது என் மக்கள் உணர்கின்றார்கள். கடந்த தேர்தலோடு ஒப்பிடும்போது எந்த தேர்தலிலே தமிழரசு கட்சி பல ஆயிரக் கணக்கான வாக்குகளை இழந்திருக்கின்றது.
தமிழ் ஊடகங்களினதும் அரசியல்வாதிகளினதும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் மிதான பொய்ப் பிரச்சாரமுமே முக்கிய காரணமாகும். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஆசனங்களை பெற முடியாமல் போனமைக்கான காரணமாகும்.
யார் இந்த தேர்தலிலே தோல்வி அடைந்தார்கள் என்று சொல்லுங்கள்.
//தர்சன்..............//
// ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள். விடுதலைப் போராட்டத்திலே பல வெற்றிகளையும் சாதனைகளையும் படைத்தவர்கள் கிழக்கு மாகாண போராளிகளே. புலிகள் அமைப்பிலே எத்தனை பிரிவுகள் இருந்தன. ஒவ்வொரு பிரிவும் ஒவ்வொருவரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன. அத்தனையும் வடக்கை சேர்ந்தவர்களுக்கே வழங்கப்பட்டிருந்தன. கிழக்கை சேர்ந்த யாருக்கு வழங்கப்பட்டது. //
நீங்களும் ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள்....கிழக்கு முழுதாக கொடுத்து தானே கருணாவை தளபதியாக்கியது ஏறக்குறைய 2 வது தலைவராக அவர்தானே இருந்தார். இதற்கு மேல் என்ன வேண்டும். அதனை தவிர ஒவ்வொரு பிரிவும் அவரவர்க்கு அதில் துறை சார்ந்தவர்களுக்கே வழங்கபட்டிருந்தது. அதில் எத்தனை கிழக்கு மாகாணத்தவர் இருந்தார்கள் என அறிந்தவர்களை கேளும். கருணா தான் விட்ட பிழையை நியாய படுத்த சொன்ன காரணங்களை ஆதாரங்கள் இல்லாமல் நீரும் சொல்ல வேண்டாம். பிரதான தலமைசெயலக பொறுப்பே கிழக்கு மாகாணத்தவரே..வகித்திருந்தார்.அதனைவிட பலர் இருக்கிறார்கள் நான் சொல்லவில்லை.நீர் தேடி அறியும். ஆனால் என்னை பொறுத்தவரை இப்படியும் காரணம் இருக்கலாம். ஒரு துறையை வழிநடத்தக்கூடிய ஆளுமை இருந்தால் தான் அதற்குரிய பொறுப்பு வழங்கப் படலாம் .அந்த திறமை வடக்கினை செந்தவர்களிற்கு அதிகமாக இருக்கிறது என எண்ணிக்கொள்ளும். முழு இலங்கையிலே யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் தான் கல்வியில் சிறந்து விளங்குகிறார்கள். வெட்டுப்புள்ளிகளும் அவர்களுக்கே வழங்கப்படுகிறது. இனியாவது புரிந்து எழுதுங்கள்.....
ஒன்றைதட்டிகேட்டல் தட்டுவது யாரென கருணாவையும் அவரது சகாக்களையும் கேளும்....
//archchana கூறியது...
நீங்களும் ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள்....கிழக்கு முழுதாக கொடுத்து தானே கருணாவை தளபதியாக்கியது ஏறக்குறைய 2 வது தலைவராக அவர்தானே இருந்தார். இதற்கு மேல் என்ன வேண்டும். அதனை தவிர ஒவ்வொரு பிரிவும் அவரவர்க்கு அதில் துறை சார்ந்தவர்களுக்கே வழங்கபட்டிருந்தது. அதில் எத்தனை கிழக்கு மாகாணத்தவர் இருந்தார்கள் என அறிந்தவர்களை கேளும். கருணா தான் விட்ட பிழையை நியாய படுத்த சொன்ன காரணங்களை ஆதாரங்கள் இல்லாமல் நீரும் சொல்ல வேண்டாம். பிரதான தலமைசெயலக பொறுப்பே கிழக்கு மாகாணத்தவரே..வகித்திருந்தார்.அதனைவிட பலர் இருக்கிறார்கள் நான் சொல்லவில்லை.நீர் தேடி அறியும்.//
நான் உங்களிடம் கேட்பது புலிகள் அமைப்பிலே பல பிரிவுகள் இருந்தது அந்த பிரிவுகளிலே ஒரு பிரிவிலாவது மட்டக்களப்பு தமிழருக்கு பதவி வழங்கப்பட்டதா என்றுதான். வழங்கப்பட்டிருந்தால் சொல்லுங்கள் பார்க்கலாம்.
நான் போராட்ட வரலாறுகளை நன்கு அறிந்தவன்தான். //
ஆனால் என்னை பொறுத்தவரை இப்படியும் காரணம் இருக்கலாம். ஒரு துறையை வழிநடத்தக்கூடிய ஆளுமை இருந்தால் தான் அதற்குரிய பொறுப்பு வழங்கப் படலாம் .அந்த திறமை வடக்கினை செந்தவர்களிற்கு அதிகமாக இருக்கிறது என எண்ணிக்கொள்ளும். முழு இலங்கையிலே யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் தான் கல்வியில் சிறந்து விளங்குகிறார்கள். வெட்டுப்புள்ளிகளும் அவர்களுக்கே வழங்கப்படுகிறது. இனியாவது புரிந்து எழுதுங்கள்.....
ஒன்றைதட்டிகேட்டல் தட்டுவது யாரென கருணாவையும் அவரது சகாக்களையும் கேளும்....//
இங்கே நான் சொன்னதில் என்ன தவறிருக்கின்றது. எதுவரை போலி வேஷம் போட்டு நாடகம் நடத்தியா கருத்துரை இட்டீர்கள். இப்போ நீங்களே உங்கள் யாழ்ப்பான மேலாதிக்க புத்தியையும் மற்றவரை அடிமைப் படுத்தும் புத்தியையும் காட்டிவிட்டீர்களே.
இங்கே இருப்பவர்கள் எல்லாம் முட்டாள்கள் படிக்காதவர்களா? என் இப்படி அடிமைப்படுத்த முயற்சி செய்கிறீர்கள். முதலில் உங்கள் மனங்களிலே இருக்கின்ற கறைகளை அகற்றுங்கள் அதன் பின்னர் மற்றவரைப் பற்றி கருத்துரை இடுங்கள்.
இப்படி எல்லாம் மனதிலே கறைகளை வைத்துக்கொண்டு மறைக்கப்பட்ட உண்மைகளை, துரோகங்களை எழுதுகின்றபோது பொய்களை எழுதுகின்றோம் பிரதேசவாதம் பேசுகின்றோம் என்று சொல்ல உமக்கு வெட்கம் எல்லா? உன் மனதிலேதான் பிரதேசவாதமும், மேலாதிக்க மனப்பாண்மையும் இருக்கிறது அதை இங்கே உன் கருத்தாக வெளிப்படுத்தி இருக்கின்றீர். நீ எல்லாம் ஒரு மனிதர்?????? தூ....
நீ யாரென்பதும் தெரியும் கொழும்பிலே இருக்கின்றாய் என்பது நாம் அறியாமல் இல்லை. உண்மைப் பெயருடன் வர ஏன் தயக்கம்.
//கன்கொன் || Kangon கூறியது...
உங்களுடைய(?) தொடர்பதிவு மீது கருத்துத் தெரிவிக்குமளவிற்கு நான் இன்னும் தாழ்ந்து போகவில்லை.
அதனால் அதை அப்படியே விட்டுவிடுகிறேன்.//
நான் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று நாம் சொல்ல வேண்டியதில்லை. எம்மைப் பார்த்து இவன் உயர்ந்தவன் என்று மற்றவர்கள், சமூகம் சொல்ல வேண்டும்.
நீங்கள்தானே குறிப்பிட்டிருக்கின்றீர்கள் என் பதிவுக்கு கருத்து தெரிவிக்கும் அளவுக்கு நீங்கள் தாழ்ந்து போகவில்லை என்று. அதுதான் உங்கள் கருத்துரைகளை நான் வெளியிடவும் இல்லை. உங்கள் கருத்துரைகளை என் வலைப்பதிவில் கருத்தில் எடுக்கவுமில்லை.
பதிவுலகில் எவரும் தாழ்ந்தவன் உயர்ந்தவன் இல்லை. எல்லோரும் பதிவர்கள்தான். இன்று பதிவுலகத்தில் பதிவர்களுக்கிடையில் சண்டை வரக் காரணமே உங்களைப் போன்றவர்களால்தான்.
உங்களைப் போன்றவர்கள் தான்தான் சிறந்த பதிவர் என்று காட்டிக்கொள்ள நினைப்பதுதான் பதிவுலகை சீரழித்துக் கொண்டிருக்கின்றது.
உங்கள் பதிவுகளையும், எனது பதிவுகளையும் ஒப்பிட்டு பாருங்கள் யாருடைய பதிவுகளுக்கு யார் கருத்து தெரிவிக்கும் அளவுக்கு தாழ்ந்து போயிருக்கிறார்கள் என்பது புரியும்.
பதிவுலகம் என்பது உங்களைப் போன்றவர்களுக்கு பொழுது போக்காக இருக்கலாம் என்னைப் போன்ற பலருக்கு இது பொழுது போக்கல்ல.
கன்கொன் || Kangon கூறியது...
உங்களுடைய(?) தொடர்பதிவு மீது கருத்துத் தெரிவிக்குமளவிற்கு நான் இன்னும் தாழ்ந்து போகவில்லை.
அதனால் அதை அப்படியே விட்டுவிடுகிறேன்.
நீங்கள் தொடர்ந்து அரட்டை செய்த பின்னர் உங்கள் தளத்தில் அனானிப் பின்னூட்டம் வந்தது என்று சொல்லி வருகிறீர்கள்.
உங்களால் உங்களில் தைரியமிருந்திருந்தால் அதை நேரடியாக என் பெயரைப் பயன்படுத்தியே சொல்லலாமே?
நீங்கள் என்னுடன் முகப்புத்தகத்தில் உரையாடி அந்த சுட்டியைத் தந்தது எனக்கு மட்டுமான பிரத்தியேகத் தளத்திலல்ல.
அது மீனகம் என்ற ஒரு பொதுவான தளத்தில்.
எனக்கு முதல் அதை எத்தனையோ பேர் பார்த்திருக்கலாம், உங்களை அடையாளம் கண்டிருக்கலாம்.
உங்களுடைய அரசியற் பிரவேசம் பற்றி நான் யாருடனும் கதைக்கவில்லை என்று பொய் சொல்ல மாட்டேன், ஆனால் நான் கதைத்த ஒரு சிலருக்கு எனக்கு முன்பே அந்த விடயம் தெரிந்திருந்தது.
அன்று நானோ, அல்லது அந்த நபர்களோ சொல்லிக் கொண்ட வார்த்தைகள் 'அது அவர் தெரிவு, அவரின் தனிப்பட்ட முடிவு' என்று.
இதை நம்பினாலும் நம்பாவிட்டாலும் அது உங்களைப் பொறுத்தது.
உங்களது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பெயரின்றித் தாக்கும் கேவலமான எண்ணம் எனக்குக் கிடையாது.
அந்தப் பின்னூட்டத்துக்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது.
இங்கே சிலர் வந்து 'எங்கப்பன் குதிருக்குள் இல்லை' என்கிறேன் என்பார்கள்.
ஆனால் இவர் என்னைச் சுட்டிக் காட்டி ஏற்கனவே ஒருமுறை பதிவில் கூறியிருந்தாலும் அமைதி காத்தேன், திரும்பவும் அதையே தொடங்கியதால் தான் பதிலளிக்கிறேன்.
சில விடயங்களை வெறுமனே ஊகிப்பதன் மூலம் முடிவெடுத்துவிடாதீர்கள்.
நீங்கள் என்னைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்பது எனக்குத் தேவையில்லாத விடயம், அதைப் பற்றி நான் கவலைப்படப் போவதும் இல்லை.
(எனக்குத் தெரிந்து முதன்முதலாக ஒருவரின் பதிவுக்கு மறைவாக்குச் செலுத்தியிருக்கிறேன். நன்றி.)//
நான், ‘பெயரில்லா’ என்ற பின்னூட்ட வழியைப் பய்ன்படுத்தியே இதை எழுதிகிறேன்.
நான் என்னை யார் எனக்காட்டிக்கொள்ளவில்லை, அதனால் நீங்கள் என்னைவிட உய்ர்வு என இறுமாப்பு அடைவீர்களா?
இல்லை, நாந்தான், உங்களை விட தாழ்ந்தவன் என நினைத்துக்கொள்வேனா? நல்ல நகைச்சுவை.
நான் யார் எனக்காட்டிகொள்வது உங்களுக்கு எந்தவகையில் உதவும்?
The great beauty of modern life is choices. We should have choices to exercise. We should have freewill to choose and pick up that choice which suits us well.
Why do you impose your will on others, and poke fun at those who dont accept your choice?
Be modern. Be open. Be fair to all.
I look forward to reading your reply.//
wow. இரண்டிற்கும் வித்தியாசம் என்ன?
வணக்கம் , சந்ரூ , மற்றும் பின்னூட்டம் வழங்குபவர்களே..!!
உங்களது பதிவை பார்ப்போம் என வந்தேன் .. நீங்கள் இட்ட தொடர் பதிவை இன்னும் வாசித்து முடிக்க வில்லை ..
நான் இங்க சிலரின் பின்னூட்டத்தை வாசித்ததும் . சிரிப்பா வருது ..
நான் எதுவித மக்களையும் பாதிக்க சொல்ல வரவில்லை.
அறிய வேண்டிய விடயம் .
உங்களிடம் ஒண்டு சொல்ல விரும்பிறேன் . முதலில் உங்கள் பெருமைகளை சொல்வதை நிறுத்துங்கள் . உங்கள் பலவீனத்தை என்னால் அறிய முடிகிறது .
நீங்கள் இட்ட பின்னோட்டதிலே உங்கள் பிரதேசவாதம் புரிகிறது .
நான் நிறைய வடக்கு நண்பர்களுடன் பழகி இருக்கேன் . என்னதான் இருந்தாலும் . வெளிப்படையாக சொல்கிறேன் . இவர்கள் பிரதேசவாதம் பார்க்கிறவர்கள் ... நானே அடிகடி சொல்லி இருக்கன், இப்படி பிரித்து பார்கிறத நிறுத்துங்க என.
அவர்களே ஒப்பு கொண்டிருகின்றார்கள் , மட்டு அம்பாறை மக்கள் , ஈழ போராட்டத்தில் நிறைய வெற்றி க்கு முக்கியமானவர்கள் .
யாரோ ஒருத்தர் சொல்லி இருந்தார் , """இன்னும் தாழ்ந்து போகவில்லை""
உங்களை போன்ற சிலரினால் தான் தமிழர்களின் நிலை இப்படி . நிறைய பெருமிதம் கொள்ளதிர்கள் . நிறை குடம் தளம்பாது ..
வெளி நாட்டவர்களை பாருங்கள் , இப்படி பட்டவர்கள் இருக்க மாட்டர்கள் .
தாழ்வு , உயர்வு இல்லை ..
மீண்டும் பின்னோட்டம் இடுவேன் .
உங்களது பெருமை குணத்தை , சாதி, கல்வி , அது இது , என நொட்டை காரணங்கள் சொல்லாமல்.
ஒரு சாதாரண மனிதனாக இருக்க பாருங்கள் ..
என்னை பொருத்தவரைக்கும் , நான் ஏலரையும் ஒன்றாகவே பார்கிறேன் . எவன் இப்படி பிரித்து பார்கிரானோ . அவனை மனிதனாக கனகேடுப்பது இல்லை ..
இங்கே சில தமிழில் பிழைகள் விட்டுள்ளேன் , அவசரத்தில எழுதுவதால் .. அதுக்கு மீண்டும் கருத்து சொல்ல வேணாம் ...
யாழ்ப்பாணத்துப் பொட்டப் பசங்களுக்கு எதுக்குடா போராட்டம்... எதோ மட்ட்க்களப்பாண்ட புண்ணியத்தில காலம் கடத்திப்புட்டு, அவன் இல்லை என்றவுடன் பொட்டப் புள்ள மாதிரி தோற்று ஒட்டு மொத்த தமிழனின் மானத்தையும் வாங்கினது யாழ்ப்பாணத்தான் ...
இப்ப புரியுதா மட்டக் களப்பானின் அருமை
Post a Comment