தமிழர் நம் வரலாறு சொல்லும் கதைகள் பகுதி 22
தமிழர் நம் வரலாறு சொல்லும் கதைகள் என்றும் ஏன் தொடரிலே தவறான கருத்துக்களை சொல்கிறேன் என்று சொல்பவர்களுக்காக எனது முன்னைய இடுகைகளில் இருந்து சில விளக்கங்களை தருகின்றேன்.
தமிழர் வரலாறு சொல்லும் கதைகள் பகுதி - 01
தமிழர் வரலாறு சொல்லும் கதைகள் பகுதி - 01
இந்த பகுதியிலே என்ன சொல்லப்பட்டிருக்கின்றது....
எனது இந்த தொடரைப் பற்றிய அறிமுகம்
//கடந்த நூற்றாண்டின் இறுதிதசாப்தங்கள் மிக மோசமான முறையில் இனவாதம் கோலோச்சும் நாடாக இலங்கையை அடையாளப்படுத்தி வந்திருக்கின்றன. என்றும் இலங்கை அரசினது பேரினவாத போக்கும் தமிழர்தம் தேசியவாத போக்கும் ஜனநாயக உரிமைகளை குழிதோண்டி புதைப்பதில் ஒன்றிலிருந்து ஒன்று சளைத்தவை அல்ல என்பதை நிரூபித்திருக்கின்றன.பெரும்பான்மை சிங்கள அரசு சிறுபான்மைத் தமிழர்களை ஓரவஞ்சகமாக நடத்துகிறது என்பதற்காக உரிமைக்குரல் எழுப்பிய தமிழர்தம் தேசியவாதம் ஆயுதபோராட்டத்தை முன்மொழிந்தது. தமிழ்பேசும் இருவேறு மாகாணங்களாய் இருந்த வடக்கும் கிழக்கும் இணைந்து இந்த ஆயுதபோராட்டத்தை நடாத்தியும் வந்தன.//
இலங்கையில் இனவாதம் இல்லையா? தமிழர்களிடம் தேசியவாதம் இல்லையா? சிங்கள அரசு தமிழர்களை ஓர வஞ்சகமாக நடத்துகின்றது என்பதற்காக இல்லையா ஆயுதப் போராட்டம் ஆரம்பமானது? வடக்கும் கிழக்கும் இணைந்து இல்லையா இந்த போராட்டத்தை நடத்தவில்லையா/
//இந்த ஆயுத போராட்டத்தின் களபலிகளின் தொடக்கமாக கருதக்கூடியது 1974.06.05எனும் நாள். இலங்கை அரச படைகளிடம் பிடிபடகூடாது என்பதற்காக உரும்பிராய் பொன்.சிவகுமாரன் எனும் இளைஞன் தானே தன்னுயிரை மாய்த்துக்கொண்ட அன்று தொடங்கி வைக்கப்பட்டது.//
இது பொய்யானா கருத்தா? இது உண்மை இல்லையா?
இந்த விடுதலைப் போராட்டத்திலே ஆயிரக் கணக்கான போராளிகளையும், இலட்சக் கணக்கான மக்களையும், உடமைகளையும் இழந்திருக்கின்றோம் என்று சொல்லப்பட்டிருக்கின்றது அது பொய்யா?
//இருபத்தியொரு வருடகாலம் களத்தில் நின்றவர் தான் கேர்ணல் கருணா அம்மான் என அழைக்கப்படும் முரளிதரன் ஆகும்.இவர் 2004.03.02 ம் திகதி எடுத்த பாரிய முடிவானது முழுமொத்த போராட்டத்தையே ஒரு உலுப்பு உலுக்கியது
தன்மூச்சையே தமிழீழத்திற்கு அர்ப்பணித்து வாழ்நாள் முழுக்க உழைத்த ஒரு மூத்ததளபதி விசுவாசமான தளபதி அறிவிப்பதென்பது பலருக்கும் அதிர்ச்சியானதொன்று தான்.
அதேநேரம் கிழக்குவாழ் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் அது அதிர்ச்சியுடன் மகிழ்ச்சியையும்சேர்த்தே கொடுத்திருந்ததென்பதும் நாம் கண்ணால் கண்டதே.ஏன் இப்படி நடந்தது? இது சரியானதா? எப்படி இப்படியொரு வெடிப்புக்கான நியாயங்கள் கவனிக்கப்படாமல் போனது? வெடிப்பின் பின் இதை எப்படி அணுகியிருக்க வேண்டும்? இதன் தொடர்ச்சி எங்கேபோய் முடியும்?//
இவ்வாறு சொள்ளப்பட்டிருப்பதிலே என்ன பொய் இருக்கின்றது. கருணாவின் இந்த முடிவால் பலரும் அதிர்ச்சி அடையவில்லையா? கிழக்கு மக்கள் அதிர்ச்சியோடு, மகிழ்சியையும் கொண்டாடவில்லையா?
கருணா அம்மான் பிரிந்து வந்தபோது மட்டக்களப்பின் ஒவ்வொரு என்ன நடந்தது. மக்கள் புலிகள் இயக்கத்துக்கு எதிராக வீதிகளில் இறங்கவில்லையா? ஆர்ப்பாட்டங்கள் செய்யவில்லையா?
இந்த விடயங்களைத் தவிர வேறு என்ன பகுதி 01 ல் சொல்லப்பட்டிருக்கின்றது? பகுதி 01 ல் என்ன பொய் இருக்கின்றது?
சொல்லப்பட்ட விடயங்கள் என்ன?.. கிழக்கு மாகாணத்தைப் பற்றியும் கிழக்கு மாகாணத்தின் புவியியல் அமைப்பு பற்றியும் சொல்லப்பட்டிருக்கின்றது. யாழ்ப்பாணத்தைப் பற்றி குறிப்பிடுகின்ற விடயங்கள்ய்தான் பொய் என்று சொல்லப்படுவதால் பகுதி 02 பற்றி விளக்கம் சொல்ல வேண்டியதில்லை என்று நினைக்கிறேன். ஆனாலும் சொல்லப்பட்ட விடயங்கள் அத்தனையும் உண்மை.
கிழக்கு மாகாணத்தை பற்றி சொல்லி இருப்பதோடு,
யாழ்பாணமென்றொரு ராச்சியம் அக்காலை இருந்திருக்கவில்லை. அப்பிரதேசம் மானிடமில்லா வெறும் மணற்றிடராயிருந்தது.
//“மணற்றி என்பது அதன் பூர்வ நாமம் பின்னாளில் அது மணற்றிடல் எனவும் வழங்கிற்று” என்று யாழ்ப்பாண சரித்திரத்தை 1915இல் எழுதிய ஆ.முத்துதம்பிபிள்ளை என்பார் குறிப்பிடுகிறார் (பக்-01).
யாருமில்லா வெறும்தரையாய் உப்பு கரித்துகிடந்தமையாற்றான் யாழ்பாடிய பாணனுக்கு அது பரிசாக கொடுக்கப்பட்டிருக்கிறது போலும் இந்த பரிசளித்தவன் தான் மேற்கூறிய எல்லாளன்.இதனை முத்துதம்பிபிள்ளை இப்படிக்கூறுகிறார். ‘யாழில் வல்ல ஒரு பாணனுக்கு பரிசாக கொடுக்கப்பட்டமையின் யாழ்பாணமாயிற்று’ //
இது பொய்யா? இங்கே யாழ்ப்பான சரித்திரத்திலே சொல்லப்பட்ட விடயங்களை பக்கத்தை குறிப்பிட்டு சொல்லப்பட்டிருக்கின்றது. இது பொய் என்றால் ஆ.முத்துதம்பிபிள்ளை அவர்கள் எழுதிய யாழ்ப்பான சரித்திரம் பொய்யானதா?
அத்தோடு இந்த பகுதியிலே ஆதாரங்களாக மகாவம்சம் எனும் நூலினையும் மட்டக்களப்பின் வரலாறுகளை சொல்லுகின்ற மட்டக்களப்பு மான்மீகம் கல்வெட்டினையும் நூலினையும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. ஆதாரங்கள் கேட்பவர்களுக்கு இவைகள் கண்ணுக்கு தெரியவில்லையா?
இதிலே முஸ்லிம்களும், முற்குகர்களும் பற்றி சொல்லப்பட்டிருக்கின்றது.
ஆதாரங்களாக அங்கே சொள்ளப்பாடிருப்பவை...
மட்டக்களப்பு மான்மீக கல்வெட்டுபாடல்.
இன்றைய உலகில் உள்ள மிக தொன்மையான இன்றைய உலகில் உள்ள மிக தொன்மையான இன்றைய உலகில் உள்ள மிக தொன்மையான பூகோள வரை படங்களுள் முக்கியமானதொன்று தொலமி வரைந்த படமாகும். இதில் இலங்கை குறிப்பிடப்பட்டுள்ளதோடு கி.மு.147 வரையப்பட்ட இப்படத்தில் கல்முனை உள்ள இடம் குறிப்பிடப்பட்டுள்ளது.
காரைதீவு, தம்பிலுவில், வீரமுனை போன்ற கண்ணகியம்மன் ஆலயங்களிலும் திருக்கோயில், கொக்கட்டிசோலை எனுமிடங்களிலுள்ள கோயில்களிலும் காணப்படுகின்ற கல்வெட்டுக்கள், பட்டயங்கள்
‘கலியான செப்பு’ எனும் கரவாகு பகுதியில் இருக்கும் கல்வெட்டு பாடல்
கரவாகு வரலாறு எழுதிய எம்.எம்.காசிம்
இன்னும் பல ஆதாரங்கள். சொல்லப்பட்டிருக்கின்றன கிழக்கு மாகாணம் பற்றியே சொல்லப்பட்டிருப்பதனால் அதிகம் ஒவ்வொன்றாக ஆராயவில்லை.
இதிலே காலனித்துவரின் வருகை, முஸ்லிம்கள், போன்ற விடயங்கள் சொல்லப்பட்டிருக்கிறது. அதனால் அதனையும் ஆராயவில்லை.
இப்பொழுது சொல்லுங்கள் இந்த ௫ பகுதிகளிலும் உண்மை இல்லையா? இங்கே காட்டப்பட்டிருக்கின்ற ஆதாரங்கள் பொய்யா?
தொடரும்....
3 comments: on "யார் திருந்த வேண்டும்?"
முகத்திரை கிழிக்கிறோம்.
இதை வாசியுங்கோ.
http://agasiyam.blogspot.com/2010/06/blog-post.html
முகத்திரை கிழிக்கிறோம்.
இதை வாசியுங்கோ.
http://agasiyam.blogspot.com/2010/06/blog-post.html
மட்டக்களப்பு மான்மீக கல்வெட்டுபாடல்.
‘கலியான செப்பு’ எனும் கரவாகு பகுதியில் இருக்கும் கல்வெட்டு பாடல்
இந்த இரண்டு கல்வெட்டுகளையும் வலையேற்ற முடியுமா?
நன்றி
Post a Comment