ஆலயங்களிலே திருவிழாக்கள் நடைபெறுகின்றபோது தமிழர் நம் கலை , கலாசாரங்களை பிரதிபலிக்கின்ற பல களை நிகழ்வுகள் இடம் பெறுகின்றன. திருவிழாக் காலங்களிலாவது எமது மறைந்து வருகின்ற கலை, கலாசாரங்கள் புத்துயிர் பெறுகின்றன என்று சந்தோசப் பட்டுக்கொண்டிருக்கும் போது எமது கலை, கலாசாரங்களை பாதிக்கின்ற நிகழ்வுகளும் இடம் பெறாமல் இல்லை.
மட்டக்களப்பிலே பிரசித்தி பெற்ற ஆலயமொன்றிலே திருவிழாவின்போது பௌத்த மதம் சார்ந்த கலை, கலாசாரங்களை பிரதிபலிக்கின்ற பல நிகழ்வுகள் இடம் பெற்றிருக்கின்றன. இது வேறு எங்கேயும் இல்லை எனது கிராமத்தில்தான் இடம்பெற்றிருக்கின்றது. மட்டக்களப்பு களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயத்திலேதான் இடம்பெற்றது.
மட்டக்களப்பிலே ஆலயங்களிலே திருவிழாக்கள் நடைபெறும்போது அவை கிராம ரீதியாகவோ, குடும்ப ரீதியாகவோ , ஏதோ ஒரு வகையில் பிரித்து திருவிழாக்கள் வழங்கப்பட்டிருக்கும். யார் திருவிழாவை சிறப்பாக செய்வது என்ற போட்டி நிலவும். அதன் வெளிப்பாடுதான் நேற்று இந்த ஆலயத்திலும் இடம் பெற்றிருக்கின்றது.
கதிர்காமத்திலோ, அல்லது கண்டி தலதா மாளிகையிலோ இடம் பெறுவது போன்று பேரகரா ஒன்றை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று நேற்றைய விழாக்குழுவினர் தீர்மானித்து செயலிலும் இறங்கி பலரது விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கின்றனர்.
பல இலட்சம் ரூபாய்களை செலவு செய்து பல சிங்கள கலைஜர்களை பெரகராவுக்கு ஏற்பாடு செய்திருக்கின்றனர். பெரகரா ஊரை சுற்றி வரும்போதுதான் தெரிந்தது. பெரகராவிலே இடம்பெற்ற விடயங்கள் பௌத்தம் சார்ந்ததாக இருந்தது.
எத்தனையோ தமிழ் கலைஞர்கள் இருக்கின்றனர். எத்தனையோ தமிழருக்கே உரித்தான பல கலைகள் மறைந்து வருகின்றன. அவற்றை செய்திருக்கலாம். செலவு செய்த பல இலட்சம் ரூபாய்களையும் நல்ல பல திட்டங்களுக்கு பயன்படுத்தி இருக்கலாம்.
ஒரு இந்து ஆலயத்திலே பௌத்தம் சார்ந்த நிகழ்வுகள் இடம் பெறுவதற்கு இடமளித்தவர்கள் என்ன நோக்கத்துக்காக செயற்பட்டனர். நேற்றைய திருவிலாவானது ஆலயத்தின் புனித தன்மையைக் கெடுத்து ஒரு களியாட்ட நிகழ்வு போலவே அமைந்திருந்தது. பலரது விமர்சனத்துக்கும் உள்ளாக்கப்பட்டிருந்தது.
0 comments: on "பிரபல இந்து ஆலயத்தில் பௌத்தம் சார்ந்த கலை நிகழ்வுகள்."
Post a Comment