தமிழர் நம் வரலாறு சொல்லும் கதைகள் பகுதி 13
இதுபோன்ற பலவகைகளிலும் பௌத்தம் குறித்தும் சிங்கள மொழி குறித்தும் தீவிரமாக செயற்பட்டுவந்த தேசிய மரபுசார்ந்த பலதரப்பட்டோரின் ஒன்றிணைப்பில் “லங்கா ஜாதிக குருசங்கமய” எனும் மதவாதிகளின் அமைப்பு களத்தில் இறங்கியது.
சிங்கள ஆசிரியர்கள்இ எழுத்தாளர்கள்இ விவசாயிகள்இ ஆயுள்வேத வைத்தியர்கள்இ பௌத்த பிக்குகள் போன்ற பலதரப்பட்ட சமூகப் பிரிவனரையும் ஒன்றிணைத்து 1954 ஆம் ஆண்டு செப்ரம்பர் 4 ம் திகதி “பஞ்ச மகா பலமண்டலய” எனும் அமைப்பு உருவாக்கப்பட்டது. 1950 ஆம் ஆண்டில் புத்தபகவானுடைய 2500 ஆவது வருட பிறந்தநாள் கொண்டாட்டங்களில் நிகழ்த்தப்பட்ட பேச்சுகளும்இ வெளியிடப்பட்ட நு}ல்களும் ஒரு மிகப்பெரிய பௌத்த எழுச்சியை சிங்கள மக்களிடையே தோற்றுவித்திருந்தது. இவ்வாறான பௌத்தம் குறித்த தீவிரமான உந்துசக்தியை சிங்களமக்களிடம் அது ஏற்படுத்தியது.
இதுபோன்ற பலவகைகளிலும் பௌத்தம் குறித்தும் சிங்கள மொழி குறித்தும் தீவிரமாக செயற்பட்டுவந்த தேசிய மரபுசார்ந்த பலதரப்பட்டோரின் ஒன்றிணைப்பில் “லங்கா ஜாதிக குருசங்கமய” எனும் மதவாதிகளின் அமைப்பு களத்தில் இறங்கியது.
சிங்கள ஆசிரியர்கள்இ எழுத்தாளர்கள்இ விவசாயிகள்இ ஆயுள்வேத வைத்தியர்கள்இ பௌத்த பிக்குகள் போன்ற பலதரப்பட்ட சமூகப் பிரிவனரையும் ஒன்றிணைத்து 1954 ஆம் ஆண்டு செப்ரம்பர் 4 ம் திகதி “பஞ்ச மகா பலமண்டலய” எனும் அமைப்பு உருவாக்கப்பட்டது. 1950 ஆம் ஆண்டில் புத்தபகவானுடைய 2500 ஆவது வருட பிறந்தநாள் கொண்டாட்டங்களில் நிகழ்த்தப்பட்ட பேச்சுகளும்இ வெளியிடப்பட்ட நு}ல்களும் ஒரு மிகப்பெரிய பௌத்த எழுச்சியை சிங்கள மக்களிடையே தோற்றுவித்திருந்தது. இவ்வாறான பௌத்தம் குறித்த தீவிரமான உந்துசக்தியை சிங்களமக்களிடம் அது ஏற்படுத்தியது.
இதன் காரணமாக இவர்களது சிங்கள மொழியினதும் சிங்கள மக்களினதும்இ பௌத்த மதத்தினதும் உயர்வுக்கான கோரிக்கைகள் மென்மேலும் அதிகரித்த வண்ணம் இருந்தன. ஆனால் இவற்றையெல்லாம் அசட்டைசெய்த அன்றைய பிரதமர் ஜோன்.கொத்தலாவல பிரச்சனைகளை ப10தாகாரமாக மாற்றினார். இந்த நிலையில் சிங்களப் புத்திஜீவிகளான ஆனந்தா கல்லு}ரி அதிபரான எல்.எச்.மெத்தானந்தாஇ லேக்கவுஸ் உரிமையாளர் டி.ஆர்.விஜயவர்த்தனா (ரணில் விக்கிரமசிங்காவின் பாட்டனார்.) போன்றவர்கள் மேலும் தமது எழுத்துகளிலும் பேச்சுகளிலும் இனவாத எண்ணை ஊற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இத்தகைய சூழ்நிலைகள் அனைத்தினதும் திரட்சியே இலங்கைத் தேசியம் என்கின்ற ஒருமிப்பு சிங்களத் தேசியமாக உருமாற வழிசமைத்தன என்பதை நாம் கண்டுகொள்ளத் தவறக்கூடாது.
இத்தகைய சிங்கள தேசியத்தின் எழுச்சியொன்றிற்கு தலைமையேற்கவேண்டிய வரலாற்றுக்கடமை ஒன்றை அவ்வேளைதான் உருவாகியிருந்த சிறிலங்கா சுதந்திரக்கட்சி சரியாகப் புரிந்துகொண்டு தனது முதலாவது தேர்தலை சந்திக்கத் தயாரானது. அதுமட்டுமன்றி 1945 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இலவசக்கல்வியினு}டாக பெரும்திரளாக ஆரம்பக்கல்விக்குள் நுழைந்த சிங்கள மாணவர்கள் பத்து வருடங்கள் கடந்த நிலையில் (1955 ஆண்டு) படித்த இளைஞர் குழாமாக பாடசாலைகளில் இருந்து வெளியேறி வேலைவாய்;ப்புகளுக்காகக் காத்திருந்தனர். 1945 ஆம் ஆண்டு சுமார் 21336 ஆக இருந்த வேலையில்லாதோர் தொகை இலவசக் கல்வியின் பலனாக 10 வருட இடைவேளையில் 71010 ஆக உயர்ந்தது. கிட்டத்தட்ட மூன்றரை மடங்கு உயர்வை எட்டியிருந்த வேலையற்றோர் தொகை அதீத வளர்ச்சியின் அறிகுறியாகும். இந்த இளைஞர் சக்திகளை தம்வசம் இழுப்பதற்காக அவர்களுக்கான எதிர்கால நம்பிக்கையைத் தரக்கூடிய பெரும்தலைவராகவும் சிங்களத் தேசியத்தின் காப்பாளராகவும் எஸ்.டபிள்யு.பண்டாரநாயக்கா தன்னைப் பிரகடனப்படுத்திக்கொள்ள முயன்றார். இந்நிலைமைகள் அனைத்தினதும் பின்னணியில்தான் (அவர் எதிர்கொண்டிருந்த) 1956 ஆம் ஆண்டுத் தேர்தலை ஒட்டிய அவரது நகர்வுகள் அமைந்திருந்தன. வெற்றிவாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள அவர் கையாண்ட குறுகிய நோக்கங்களில் ஒன்றாகவே சிங்களத்தை மட்டும் அரசகரும மொழியாக்கும் பிரகடனத்தை அவர் வெளியிட நேர்ந்தது என்பதே உண்மை.
இவ்வனைத்து நிலைமைகளும் சிங்களப் பகுதியில் அதுவரை காலமும் உருவாகி வந்த இலங்கைத் தேசியம் எனும் மனப்பாங்கை பின்னடித்து பௌத்த சிங்களத் தேசியமாக உருவாக்குவதில் போய் நின்றது. இன்னிலைமைக்கு சிங்களத் தலைமைகளை மட்டும் குற்றம் கூற முடியாது என்பதையும் யாழ்ப்பாணத்து அடிப்படைவாதிகளின் ஏகாதிபத்திய ஆங்கில அருவருடித்தனமும் சிங்கள மக்களை சிங்களத்தேசியம் நோக்கி கொண்டுசென்றதில் மிகப்பெரிய பங்குவகித்தது என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். அவ்வேளையிலும் கூட இடதுசாரி கட்சிகளான லங்கா சமசமாச கட்சிஇ கம்யுனிஸ்ட் கட்சி போன்றவை இருமொழிகளுக்காகக் குரல்கொடுத்தன. 1956 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தனிச்சிங்களச் சட்டத்திற்கு முன்னோடியாக 1955 செப்ரம்பரில் சிறிலங்கா சுதந்திரக்கட்சி மகாநாட்டில் நிறைவேற்றப்பட்ட மொழிபிரகடனமானது தமிழ் குறித்து அக்கறை கொண்டிருந்தமையும் சிங்களவெறி அதில் காணப்படாமையையும் நமது தமிழ்த் தலைமைகள் வசதியாக மறைத்துவிட்டன. 1956 ஆண்டு பெப்ரவரியில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதும் அடுத்த தேர்தலை களனியில் கூடிய ஐ.தே.கட்சி மகாநாடு “தனிச்சிங்களம்” அரசகருமமொழியாக்கப்படவேண்டும் என்கின்ற தீர்மானத்தை எடுத்தது. அதுமட்டுமன்றி அக்கட்சியில் இருந்து தமிழ் உறுப்பினர்களின் “மனித உரிமைகள்” சட்ட யாப்பில் இடம்பெறவேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இவை சிறிலங்கா சுதந்திரக் கட்சியைவிட இன்னுமொருபடி மேலே போய் யு.என்.பி. ஆனது இனவாதத்தினை கக்கிய நிகழ்வாகவே இது இருந்தது.
தேர்தலுக்காக இரு பெரும் கட்சிகளும் இனவாதச் சேற்றில் மூழ்கினர். 1956 ஆண்டு நடந்த தேர்தலில் சிங்களக் கட்சிகள் மட்டுமன்றி தமிழ் கட்சிகளும் மொழிவெறியையே பரப்பினர் என்பதை நாம் காணத்தவறக்கூடாது. 1952 இல் யாழ்ப்பாணத்துக்கு சம்பந்தம் இல்லாத கிழக்கு மாகாணத்தில் அமைந்திருந்த கல்லோயா குடியேற்றத்திட்டத்தையும்இ மலையக மக்களின் வாக்குரிமைப் பிரச்சனையையும் படுதோல்வியடைந்த செல்வநாயகம் இத்தேர்தலில் மொழியுணர்வை தனது பிரச்சாரங்களில் முன்னிறுத்தினார். “மொழியுணர்வை முன்னிறுத்தினார்” என்பதைவிட மொழியுணர்சிகளை கிளறிவிட்டார் என்பதே பொருத்தமானதாய் இருக்கும் ஏனெனில் பாராளுமன்ற விவாதங்களில் ஆங்கிலத்தை தக்க வைப்பதற்காகவே குரல் எழுப்புவதை கடமையாகக் கொண்டிருந்த இவர்கள் தமிழ் மொழி குறித்து கிஞ்சித்தும் அக்கறை கொண்டிருக்கவில்லை.
இலங்கையின் ஆட்சி அதிகாரங்களில் ஆங்கிலம் தனது இடத்தை இழந்துவிடக்கூடாது என்பதற்காக சுயபாசைகளின் வரவை ஒட்டுமொத்தமாக எதிர்த்தவர்கள் இவர்கள். காலப்போக்கில் சுயபாசைகள் என்பது சிங்களம் மட்டுமாகவே சுருங்கிப் போனபோது அதை தாம் எதிர்ப்பதானது தமிழ் மொழிக்கான சம அந்தஸ்தை கோரியே என்கின்ற வகையில் தமது பிரச்சாரத்தை கட்டவிழ்த்து வி;ட்டனர். இதில் தமிழ் மொழியைக் காப்பதற்காகவும் தமிழ் மொழியின் உரிமைக்காகவும் தமது போராட்டங்கள் அமைவதாக மேலோட்டமாக இவர்கள் காட்டிக்கொண்டாலும் உண்மையில் இந்த எதிர்ப்பு நடவடிக்கைளின் உள்நோக்கம் அதுவன்று. சிங்களம் அரசகரும மொழி ஆகக் கூடாது என்பதோடு இதன் மறுபக்கம் ஆங்கிலம் அரசகருமமொழி அந்தஸ்தை இழந்துவிடக்கூடாது என்பதாகவே இருக்கிறது. கடந்தகால மொழி விவாதங்களில் ஆங்கிலம் அகற்றப்பட்டுவிடக்கூடாது என்பதில் யாழ்ப்பாணத் தலைமைகள் கொண்டிருந்த குள்ளநோக்கத்தின் தொடர்சியே இந்த தமிழ்மொழிக்காக போராடுவதாக சொல்லிக்கொண்ட வேளைகளிலும் உள்ளோட்டமாக தொடர்ந்தது. இதனை அவ்வேளை கிழக்கிலங்கைவாழ் மக்கள் புரிந்துகொண்டிருக்கவில்லை.
தமிழ்மொழிக்கான போராட்டத்தையே யாழ்ப்பாணத் தலைமைகள் மேற்கொள்வதாக இவர்கள் நம்பினர். தாமும் தமிழர்கள்இ தமது மொழியும் தமிழ் என்பதால் கிழக்கிலங்கைவாழ் முஸ்லிம் தமிழ் சமூகங்கள் இந்தப் போராட்டத்தில் தம்மை இணைத்துக்கொண்டனர். அவ்வேளைகளில் மட்டக்களப்பு பிரதிநிதிகளாய் இருந்தவர்கள் கூட இத்தகைய யாழ்ப்பாணத் தலைமைகளின் வழிநடத்தல்களின் பின்னே கிழக்கிலங்கை மக்களை அணிதிரட்டியது இதற்கு காரணமாகும். இதனு}டாக யாழ்ப்பாணத்தின் நரித்தனமான அரசியல் பிரச்சாரங்களின் கிழக்கிலங்கை மக்கள் ஏமாறத் துணைநின்ற வரலாற்றுத் தவறை இவர்கள் தமது மக்களுக்கு இழைத்திருந்தனர்.
துரோகங்கள் தொடரும்....
1 comments: on "தமிழர்களை ஏமாற்றிய துரோகிகள்"
இத்தனை வருச காலமும் யாழ்ப்பாணத்தலைமைகள் கொண்டிருந்த குள்ள நோக்கத்தைப் புரிந்து கொள்ளாத அப்பாவிகளா அவர்கள், ஐயோ பாவம்.
அது சரி கிழக்கிலங்கையில் இருந்து வந்த தமிழ் அரசியல்வாதிகள் எல்லோரும் கறைபடியா அரசியல்வாதிகள் போலும்.
ஆரம்பத்தில் உங்களின் வரவு பெருமையானதாக இருந்தது, நீங்களும் இந்தக் கேடுகெட்ட பிரதேசவாத வலைக்குள் விழுந்ததால் வலைப்பக்கம் வரவே அருவெருப்பாக இருக்கிறது. தொடரும் உமது பணியை
Post a Comment