Tuesday, 29 June 2010

இன்றைய ஒரு சில அரசியல்வாதிகளின் மறு முகங்கள் - திருந்துவார்களா? மக்கள் நலனுக்காக?

மக்களுக்காக சேவை செய்ய என்று சொல்லி அரசியலுக்கு வந்து. தங்களை தெரிவு செய்த மக்களை ஏமாற்றி அரசியல் நடாத்தி வரும் அரசியல் வாதிகள் அன்றுதொட்டு இன்றுவரை இருந்துதான் வருகின்றனர்

அபிவிருத்தி திட்டங்களுக்காக வருகின்ற பணங்களை சுருட்டுவது. கஸ்ரப்படுகின்ர மக்களுக்கு வருகின்ற உதவிகளை சுருட்டுதல் போன்ற கைங்கரியங்களை சில அரசியல்வாதிகள் செய்யாமல் இல்லை.

மட்டக்களப்பிலே நடந்த சம்பவங்கள்....

மட்டக்களப்பு மாவட்டத்திலே வீதி அபிவிருத்தி துரிதமாக நடைபெற்று வரும் இந்த கால கட்டத்தில் மட்டக்களப்பு நகரித்திலே பல வர்த்தக நிலையங்களும் வீடுகளும் அகற்றப் பட்டன.  ஆனால் மட்டக்களப்பிலே இருக்கின்ற ஒரு அரசியல்வாதியின் வீடு வீதியில் இருக்கின்றது அந்த வீடு மட்டும் அகற்றப்படாமல் வீதி வளைத்து எடுக்கப்பட்டிருக்கின்றது.

பல கஸ்ரப்பட்ட மக்களின் வீடுகள், கடைகள் என்பன இடிக்கப்பட்டபோது இந்த அரசியல்வாதியின் வீடு மட்டும் ஏன் இடிக்கப்படவில்லை. எங்களுக்கு ஒரு சட்டம் அரசியல்வாதிகளுக்கு ஒரு சட்டமா என்று மக்கள் கேட்கின்றனர்.

அதே போன்றுதான் சில அரசியல்வாதிகள் மதுபானசாலைகளுக்கு அனுமதியினை வழங்கி பல சமுக சீர் கேடுகளுக்கு வழி வகிக்கின்றனர். சமூகம் எப்படிபாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை தான் உழைக்க வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே இவர்களிடம் காணப்படுகின்றது.

மதுபானசாலைகளுக்கு அனுமதி வழங்கும்போது மதுபானசாலை உரிமையாளர்களிடம் பல இலட்சம் ரூபா பணத்தை வாங்குகின்றனர். இதனால் இந்த மதுபானசாலை உரிமையாளர்களுக்கு அந்த அரசியல்வாதிகளாலேயே சில வசதிகள் செய்து கொடுக்கப்படுகின்றன.

மதுபானசாலை உரிமையாளர்கள் மக்கள் அதிகம் வசிக்கின்ற பிரதேசங்களிலே மதுபானசாளையினை அமைக்கின்றனர். இதனால் அப்பிரதேச மக்கள் பல பிரச்சினைகளை எதிர் நோக்குவதோடு சமுக சீர்கேடுகளுக்கு ஆளாகின்றனர்.

(28.06.2010) காலை 7.00 மணியளவில் மட்டக்களப்பு மாவட்டத்தின் சித்தாண்டிப்பிரதேசத்தில் புதிய மதுபான சாலை ஒன்று அமைக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து சித்தாண்டி பொதுமக்கள், பொது அமைப்புக்கள் ஒன்றிந்து பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்கள்.


மேற்படி அமைக்கப்பட்ட மதுபானச்சாலை ஏற்கனவே வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு அண்மையில் அமைந்திருந்தது இதனால் பல சமூக சீர்கேடுகள் ஏற்படுகின்றது. பல்கலைக்கழக மாணவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் என்பதனால் பல்கலைக்கழக மாணவர்கள் ஆணைக்ககுழு மற்றும் பல்கலைக்கழக நிருவாகம் உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்ததையிட்டு அவ் மதுபானசாலை உடனடியாக அகற்றப்பட்டது. அக்குறித்த மதுபான சாலை தற்போது சித்தாண்டிப்பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


மேற்படி அர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் சுமார் 1மணி நேரம் மதுபானசாலைக்கு முன்பாக நின்று ஆரவாரம் செய்தார்கள், இவ் இடத்திற்கு விரைந்த ஏறாவூர் பொலீஸ் பொறுப்பதிகாரி குறித்த ஆர்ப்பாட்டகாரர்களை உடனடியாக கலைந்து செல்லும்படியும் இன்றிலிருந்து இவ் மதுபானசாலை மூடப்படும் எனவும் அதற்கு தானே பொறுப்பு எனவும் குறித்த பொலீஸ் உயரதிகாரி உறுதியளித்தார். இதனை தொடர்ந்து மக்கள் கலைந்து சென்றார்கள். இவ் மதுபானச் சாலை தொடர்பில் ஓர் ஆமைச்சருக்கு நேரடி தொடர்பு இருப்பதாக அறியமுடிகின்றது என அப்பிரதேச வாசிகள் குறிப்பிடுகின்றனர்.


 அத்தோடு இது போன்ற பல மதுபானச்சாலைகள் கிராமங்கள் தோறும் அமைக்கப்பட்டுக் கொண்டே வருகின்றது. இதற்கு குறித்த ஓர் அமைச்சர் துணைபுரிந்து செயற்பட்டு வருவதாக அறியக்கிடைக்கிறது. உதாரணமாக வாகரைப் பிரதேசத்தில் ஒரு மதுபானச்சாலை அமைத்துத் தருவதாக கூறி 30 இலட்சம் ரூபாயை அவ்வமைச்சர் பெற்றிருப்பதாகவும், அவ் மதுபான சாலை வாகரையில் இயங்கி வருவதாகவும் அறியமுடிகின்றது. யுத்தத்தினாலும், சுனாமி மற்றும் இயற்கை அனர்த்தங்களாலும் பல வழிகளிலும் நலிவடைந்து இருக்கும் எமது சமூகத்தினை மீட்சி பெறச் செய்யாமல் இது போன்ற சமூக விரோத நடவடிக்கைகளில் ஈடுபடத்தூண்டுகின்ற இவ்வாறான செயற்பாடுகளுக்கு எமது பிரதேசம் சார்ந்த அரசியல் பிரமுகர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் உடந்தையாக இருப்பது வேதனையே



Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "இன்றைய ஒரு சில அரசியல்வாதிகளின் மறு முகங்கள் - திருந்துவார்களா? மக்கள் நலனுக்காக?"

Post a Comment