Monday, 28 June 2010

சொல்ல வேண்டியதை சொல்கிறேன்

தமிழர் நம்  வரலாறு சொல்லும் கதைகள் பகுதி -23

முக்கிய நிகழ்வுகள்..
1970 -07-13 அன்று தேர்தல் முடிந்த கையோடு பிரதியமைச்சர் சந்திரசிறியின் காருக்குள் குண்டு வைத்து வன்முறை ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த  குண்டுவெடிப்புத்தான் இனப்போராட்டம் எனும் பெயரில் வடகிழக்கில் தொடங்கி வைக்கப்பட்ட முதலாவது வன்முறையாகும்.

 1971 இல் யாழ்ப்பாண மேயராக இருந்த (சிறிலங்கா சுதந்திரக்கட்சி சார்பில்) அல்பேட் துரையப்பாவின் காருக்குள்  குண்டு வைக்கப்பட்டது.

 1972 திருகோணமலையில் நடத்தப்பட்ட மகாநாட்டில் தமிழர் கூட்டணி ஆரம்பிக்கப்பட்டது.

 1972 இல் நிறைவேற்றப்பட்ட குடியரசு யாப்பை எதிர்த்து எஸ்.ஜே.வி.செல்வநாயகம் தமது பதவிதுறப்பு.

 1973 இல் தமிழ் இளைஞர் பேரவை ஆரம்பிக்கப்பட்டது. இந்தப் பேரவையில் பெயரில் கூட்டணியினர் இலங்கை குடியரசு தின முதலாவது ஆண்டை பகிஸ்கரிக்கக் கோரி வடகிழக்கு எங்கும் கர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டது.

 1973 இல் வடமாகாணத்துக்கு வந்த அமைச்சர்களை எதிர்த்து கறுப்புக்கொடி காட்டும் போராட்டங்களில் கூட்டணியினர் ஈடுபட்டனர்.

 1974 இல் தமிழாராட்சி மாநாட்டில் இனவெறி பித்து தலைக்கேறிய சிவகுமாரன் தலைமையிலான இளைஞர் குழாமினால் திட்டமிடப்பட்டபடியே ௯ உயிர்களை மின்சாரத்துக்கு பலிகொடுத்தனர்.

 1975 இல்  யாழ்மேயர் அல்பிரட் துரையப்பாவை சுட்டுக்  கொன்றனர்.

  1976 இல் தமிழர்விடுதலைக் கூட்டணி நிறைவேற்றிய வட்டுக்கோட்டைத் தீர்மானம் எனும் பிரிவினைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ழூ 1977 இல் கருணாநிதி எனும் பொலிசார் மாவட்டபுரத்தில் வைத்து தமிழ் தீவிரவாத இளைஞர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

 1977 யூலை 21 இல் பாராளுமன்றத்துக்கான பொதுத்தேர்தல் நடாத்தப்பட்டது.


மேற்படி எதிர்ப்பு நடவடிக்கைகளின் ஊடாக 1977 ஆம் ஆண்டுத் தேர்தல்வரை அரச பிரதிநிதிகளையும் அரசபடைகளையும் எதிர்ப்பது தான் தமிழ்மக்களின் கடமை எனும் புதிய மரபொன்றினை தமிழர் விடுதலைக் கூட்டணி தோற்றுவித்தது. அதுமட்டுமன்றி சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்த தமிழ் பிரதிநிதிகளை தமிழ்மக்களின் துரோகி என பட்டம் சூட்டிவிடுவது என்பதினையும் வழக்கமாகக் கொண்டனர். இதனு}டாக தமது அரசியல் எதிரிகளை எதிர்கொண்டு வெல்லுவது என்பதைவிட அழித்து வெல்லும் குறுக்கு வழியை நோக்கி தமிழர் விடுதலைக் கூட்டணியினர் தமது கவனத்தைத் திருப்பினர். அமைச்சர்களுக்கு கறுப்புக்கொடி காட்டுதல், குடியரசுத் தினத்தை பகிஸ்கரித்தல் என்பதெல்லாம் தனி ஈழம் ஒன்றை அமைப்பதற்கான முன்னோடி நிகழ்வுகளாக மக்கள் உணரவைக்கப்பட்டனர்.

ஆனால் தமிழரசுக்கட்சியினர் யு.என்.பி. ஆட்சியில் இருந்த 1965 – 1970 காலப்பகுதியில் தாமும் அந்த அரசில் பங்கெடுத்திருந்தனர். இந்தவேளைகளில் இத்தகைய அரசஎதிர்ப்பு நடவடிக்கைகள் ஒன்றில் கூட ஈடுபடாதிருந்தனர். ஒவ்வொரு ஆண்டும் சுதந்திரதினம் அனுஸ்டிக்கப்பட்டது ஏன் அதை பகிஸ்கரிக்கக் கோரவில்லை? தாம் அமைச்சர்களாய் இருந்த 5ஆண்டுகளிலும் சிங்களஅரச பொலிசாரின் பாதுகாப்புடன் தானே வலம் வந்தனர்? அந்த 5 ஆண்டுகளிலும் தாங்கள் அமைச்சராக இருக்கலாம் என்றால் சி.சு.கட்சி ஆட்சியின் போது ஏன் அல்பிறட் துரையப்பா மேயராக இருக்க முடியாது? இப்போது மட்டும் ஏன் பிரதி அமைச்சர்களுக்கு கறுப்புக்கொடி காட்டப்பட வேண்டும் என்கின்ற கேள்விகள் எல்லாம் அப்போது கேட்கப்படவில்லை.

தமிழரசுக் கட்சியினதும் செல்வநாயகம் அமிர்தலிங்கம் போன்றோரதும் மக்களை ஏமாற்றுகின்ற இந்த அரசியல் நாடகங்கள் அவ்வேளை அம்பலப்படவில்லை. இத்தகைய நாடகங்கள் அனைத்தும் தமது தேர்தல் தோல்வியை சகித்துக்கொள்ள முடியாத மனநிலையில் பழிவாங்கும் உணர்வுடனும் பதவி மோகத்திலும் பக்குவம் இழந்து வெறிபிடித்து அலைந்த தமிழர் தலைவர்கள் என சொல்லப்பட்ட சுயநலவாதக் கும்பல்களின் அடாவடித்தனங்களாகவே உண்மையில் இருந்தன.

ஆனால் இவற்றின் ஊடாக பரப்பட்ட தமிழ் உணர்வில் கிழக்கிலங்கை மக்களும் ஆட்கொள்ளப்படுவது அவ்வேளையில் தவிர்க்க முடியாமல் போனது. தேவையானபோது அமைச்சு பதவிகளைப் பெற்றுக் கொண்டதற்கு “மக்களின் அபிவிருத்தி குறித்த அக்கறை” என சாக்குப் போக்குச் சொல்லும் திறமை இந்த அப்புக்காத்து அரசியல்வாதிகளுக்கு இருந்தது.

அப்படியானால் ஏன் ஒரு சந்தர்ப்பத்தில் கூட கிழக்கிலங்கையில் தமிழரசுக்கட்சிக்காக உழைத்த தலைவர்களுக்கு அமைச்சுப்பதவி பெறும் அந்த வாய்ப்புகள் வழங்கப்படவில்லை? 1952ஆம் ஆண்டுத் தேர்தலில் வடமாகாணத்தில் ஒருவரைத் தவிர பெரும்தலைவர்கள் எல்லோரும் படுதோல்வி அடைந்த நிலையில் திருகோணமலையில் தமிழரசுக்கட்சிக்கு பெரு வெற்றியீட்டிக் கொடுத்த இராஜவரோதயம் அவர்களுக்கு என் அந்த வாய்ப்புக் கொடுக்கப்படவில்லை? செனட்சபை உறுப்பினர்களான மட்டக்களப்பு கல்விமான் கனகரெட்னம் அவர்களுக்கு ஏன் அந்த வாய்ப்பு வழங்கப்படவில்லை? கொழும்புச் சீமான் திருச்செல்வத்திற்கு பெற்றுக் கொடுக்கப்ட்ட உள்ளுராட்சி பதவி 1956ஆம் ஆண்டில் இருந்து தமிழ் மக்களின் தனிப்பெரும் தலைவனாக தொடர்ந்து வெற்றியீட்டி வந்த சொல்லின் செல்வர் இராஜதுரைக்கு ஏன் வழங்கப்பட்டிருக்கக் கூடாது? தமிழரசுக்கட்சியின் தலைமை கதிரையைக்கூட அலங்கரித்த பெருந்தலைவரும் தனித்தமிழ் தொகுதியான பட்டிருப்பின் பிரதிநிதியுமான மு.இராசமாணிக்கம் அவர்கள் அமைச்சுப் பதவிக்கு தகுதி அற்றவரா? என்கின்ற கேள்விகள் அன்று இல்லாவிடினும் இன்று கிழக்கிலங்கை மக்களிடையே கிளறப்படத் தொடங்கியுள்ளன.

தமிழ் தமிழ் என்று கிழக்கிலங்கை மக்களை ஏமாற்றிக்கொண்டு அவர்களின் ஆதரவினால் வருகின்ற எல்லாவித அரசியல் இலாபங்களையும் வடக்குக்குள் மட்டுமே சுருட்டிக்கொள்ளும் தமிழரசுக்கட்சியினரின் கபடத்தனங்களை இன்று கிழக்கிலங்கை மக்கள் உணரத் தலைப்பட்டுள்ளார்கள்.

அடுத்துவரும் தேர்தலை வெல்ல எந்தத் தலைமையை பிழை என்றும் துரோகம் என்றும் சொல்லி செல்வநாயகம் வெளியேறி புதியகட்சியை ஆரம்பித்தாரோ அதே தமிழ் காங்கிரசுடன் சந்தர்ப்பவாத கூட்டுச் சேர்ந்தனர். 1972இல் திருமலையில் கூடிய தமிழரசுக்கட்சி தமிழ் காங்கிரஸ் இலங்கை தோட்டத்தொழிலாளர் காங்கிரஸ் போன்றவை ஒன்றிணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணியாக மலர்ந்தது. 1970 தேர்தலில் படுதோல்வி கண்ட தமிழரசுக்கட்சியும் ஒருநபர் கட்சியாக குறுகிப்போய் இருந்த தமிழ் காங்கிரசும் தமது எதிர்கால தேர்தல் நலனை ஒட்டியே கைகோர்த்துக் கொண்டனர். ஆனால் இது மறுதலையாகவே புரிந்துகொள்ளப்பட்டது. தமிழ் இளைஞர்களிடையே பெரும் உற்சாகத்தை இது கொடுத்தது. எல்லா அப்புக்காத்துமாரும் ஒன்றாக இருக்கையில் நாம் எதற்கு பயப்பிட வேண்டும் எனும் தோரணையில் தமிழ் இளைஞர்கள் தீவிரவாத நடவடிக்கைகளில் துணிந்து இறங்கினர். வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்தன. இதன் காரணமாக அரச இயந்திரத்தின் கெடுபிடிகளும் அதிகரித்தது இயல்பே.

இது கடந்தகால அரசியல் வரலாறுகள் சொல்பவை. ஆண்டுகளோடு குறிப்பிட்டிருக்கிறேன். தவறு என்று சொல்பவர்கள் எந்த இடத்தில் தவறிருக்கிறது என்று சுட்டிக் காட்டுங்கள்.
தொடரும்...

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

1 comments: on "சொல்ல வேண்டியதை சொல்கிறேன்"

Sabarinathan Arthanari said...

நண்பரே நான் தமிழக தமிழன். இலங்கை நிலை குறித்து இலங்கை நண்பர்கள் சொல்வதை வைத்தே அறிந்து கொள்ள இயலும்.

//1974 இல் தமிழாராட்சி மாநாட்டில் இனவெறி பித்து தலைக்கேறிய சிவகுமாரன் தலைமையிலான இளைஞர் குழாமினால் திட்டமிடப்பட்டபடியே ௯ உயிர்களை மின்சாரத்துக்கு பலிகொடுத்தனர்//

எனும் கருத்து கீழே உள்ள நண்பரின் கருத்துக்கு மாற்றாக அமைந்துள்ளது.
http://santhyilnaam.blogspot.com/2010/06/blog-post_28.html

விளக்க இயலுமா ?

Post a Comment