எனும் இடுகையிலே எஸ்.ஜே.வி.செல்வநாயகம் பற்றி நான் குறிப்பிட்டிருக்கிறேன். அங்கே சொல்லப்பட்ட விடயங்கள் பொய் என்று சொல்பவர்களுக்கு இன்னும் சில விளக்கங்களை தருகின்றேன்.
முதலாவது பந்தியிலே என்ன சொல்லி இருக்கின்றேன்.
//யாழ்ப்பாணத்தின் காங்கேசன்துறைப் பகுதியில் பெருமளவு நிலங்களுக்கு சொந்தக்காரராக மட்டுமல்ல மலையகத்திலும் பெரும் எஸ்டேட்டுகளின் சொந்ததக்காறராகவும் இருந்தார் இந்த செல்வநாயகம். அதேவேளை 1947 ஆம் ஆண்டு ஜுன் மாதம் முதலாம் திகதி இலங்கை தமிழ் காங்கிரஸில் இருந்தபோது ஆரம்பிக்கப்பட்ட சுதந்திரன் பத்திரிகை நிறுவனத்தின் உரிமையாளராகவும் இந்த செல்வநாயகமே இருந்தார்.//
இதை பொய் என்று சொல்பவர்களிடம் கேட்கின்றேன். காங்கேசன்துறைப் பகுதியில் இவருக்கு பெருமளவு நிலம் இருக்கவில்லையா? மலையகத்திலும் பெரும் எஸ்டேட்டுகளின் சொந்ததக்காறராக இவர் இருக்கவில்லையா? 1947 ஆம் ஆண்டு ஜுன் மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்பட்ட சுதந்திரன் பத்திரிகை நிறுவனத்தின் உரிமையாளர் செல்வநாயகம் இல்லையா? தெரியவில்லை என்றால் தெரிந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
இரண்டாவது பந்தியிலே மலையக மக்களின் ஆதரவாளனாக தன்னைக் காட்டிக்கொண்டு புதிய கட்சியை ஆரம்பித்த செல்வநாயகம் தனது தனிப்பட்ட நலன்களையே கணித்து செயற்பட்டிருக்கின்றார். என்று குறிப்பிட்டிருக்கிறேன். 1957 இல் கொண்டுவரப்பட்ட நெற்காணி சட்டத்தை எதிர்த்தமையையும் சுட்டிக் காட்டி இருக்கிறேன்.
மலையகத்தில் பெரிய பெரிய எஸ்டேட்டுக்களை தன்வசம் வைத்திருந்த இவர் மலையக மக்களுக்கு அரசியல் உரிமைகளை பெற்றுக்கொடுப்பதற்கு குரல் கொடுப்பதன் ஊடாக தமது நிலச்சுவாந்தர் அந்தஸ்துகளுக்கு பக்கபலமாக அவர்களைப் பயன்படுத்த நினைத்திருக்கின்றார் என்று குறிப்பிட்டிருக்கிறேன்.
//இக் கருத்தை இல்லை என்று சொல்லப்போகின்றீர்களா? அப்படியானால் மலையக மக்களின் வாக்குரிமை பாதிக்கப்பட்டபோது தீவிரமாக குரல் கொடுத்த இவர் 1952 தேர்தலில் தான் நிலைகொண்டிருந்த யாழ்ப்பாணத்தவர்கள் எங்கோ இருந்த மலையக மக்களின் பிரச்சனையையிட்டு அக்கறை கொள்ளாமையினால் யாழ்ப்பாணத்தில் தம்மை ஸ்திரப்படுத்திக்கொள்ள அடுத்துவந்த தேர்தலில் மலையக மக்களின் பிரச்சனைகளைக் கைவிட்டார். அதுமட்டுமல்ல 26-ஜுலை – 1957 இல் நடைபெற்ற பண்டா – செல்வா பேச்சுவார்தையின்போது அதுவரை மலையகத் தமிழர்களின் குடியுரிமையை கோரிவந்த எஸ்.ஜே.வி.செல்வநாயகம் பண்டாரநாயக்காவின் வற்புறுத்தலின் பேரில் அக்கோரிக்கைகளைக் கைவிட்டார். அதன் பின்னரே பண்டா-செல்வா ஒப்பந்தம் ஏற்பட்டது.//
மலையாக மக்களுக்காக குரல் கொடுத்து வந்த இவர் உண்மையாக மலையாக மக்களில் அக்கறை கொண்டவராக இருந்தால் 26-ஜுலை – 1957 இல் நடைபெற்ற பண்டா – செல்வா பேச்சுவார்தையின்போது மலையாக மக்களின் குடியுரிமை பற்றி பேசி வந்த அவர் அந்த ஒப்பந்தத்திலே மலையாக தமிழர்களின் குடியுரிமை பிரச்சினையை கை விட்டது ஏன்?.
கீழ்வரும் விடயங்களே பண்டா-செல்வா ஒப்பந்தத்தின் குறிப்பிடப்பட்ட முக்கிய சரத்துகள் ஆகும்.
1) பிரதேச சபைகளைக் கொண்ட சுயாட்சிப் பிரதேசங்கள் வரையறுக்கப்படும்.
மலையாக மக்களின் நலனுக்காகவும், மலையாக தமிழர்களின் குடியுரிமைக்காகவும் குரல் கொடுத்து வந்த இவர் பண்டா - செல்வா ஒப்பந்தத்தின் பின்னர் மலையாக தமிழர்களை மறந்தது ஏன்? இது சந்தர்ப்பவாத அரசியல் இல்லையா?
//இத்தகைய விட்டுக்கொடுப்புகளுடன் கைச்சாத்தான பண்டா-செல்வா ஒப்பந்தம்கூட யு.என்.பி இல் இருந்த சிங்கள இனவாதிகளின் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாக நேர்ந்தது. அவர்களுக்கு தலைமை வகித்த ஜே.ஆர்.ஜெயவர்த்தனா தெற்கில் இருந்து இனவெறியர்களுடன் சேர்ந்துகொண்டு இவ்வொப்பந்தத்தை கிழித்தெறியக் கோரி கண்டிக்கு பாதயாத்திரை மேற்கொண்டார். சிங்கள மக்களிடையே ஏற்பட்ட எதிர்ப்பின் காரணமாக பண்டாரநாயக்கா இவ்வொப்பந்தத்தினை கிழித்தெறிய வேண்டிய நிலைக்கு உள்ளானார். நாட்டு மக்களுக்குhக அவர் ஆற்றிய உரையில் இந்த ஒப்பந்தமானது கிழித்தெறியப் படுவதனால் எதிர்காலத்தில் ஏற்படப்போகும் பாதகமான விளைவுகளுக்கு தாம் பொறுப்பல்ல. என சுயநிலை விளக்கம் கூறினார்.//
இது அத தொடரிலே இறுதிப் பந்தி இந்து உண்மை இல்லையா? தெரியவில்லை என்றால் கடந்தகால அரசியல் தெரிந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
எஸ்.ஜே.வி.செல்வநாயகமும் அவரது மறுபக்கமும் தொடர்கிறது....) எனும் அந்த பகுதியிலே வேறு என்ன சொல்லி இருக்கிறேன். இவற்றிலே எங்கே தவறிருக்கிறது சொல்லுங்கள்?
தொடரும்....
1 comments: on "எங்கே நியாயம் இருக்கிறது?"
வரலாறு என்பது நான்கு திசைகள் போல். எவரையும் அத்தனை சீக்கிரம் திருப்திபடுத்தி விடாது. தங்களால் விரும்பப்பட்டவர்களை தரம் குறைந்த நபராக சுட்டிக் காட்டப்படும் போது ஒவ்வொருவரும் பொங்குவது இயல்பே. முதலில் நீங்கள் உங்களை அமைதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஓட்டுக்கள் விமர்சனங்கள் என்ற அத்தனையும் கருத்தில் எடுத்துக் கொள்ளாமல் நீங்கள் சொல்ல வந்ததை தெளிவாகவே கொண்டு போய்க் கொண்டு இருங்கள்.
ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஓராயிரம் பக்கங்கள்.
புகழ்ந்து அல்லது இகழ்ந்து மட்டும் எழுத வேண்டுமென்றால் அதற்குப் பெயர் வரலாறு அல்ல. தவறு என்று சுட்டிக்காட்டும் போது அதற்கான ஆதாரங்களையும் கொடுத்து விட்டு அடுத்த நகர்வுக்கு முன்னேறுங்கள்.
வாலை பிடித்தாகி விட்டது. முயற்சி ஜெயிக்க வாழ்த்துகள்.
Post a Comment