இனி வரும் நாட்களில் தமிழ் கிராமங்கள் விழாக் கோலம் பூண்டிருப்பதோடு மக்கள் சந்தோசமாக இருக்கின்ற காலமிது என்று சொல்லலாம். இந்து ஆலயங்களிலே திருவிழாக்கள் நடைபெறுகின்ற காலமிது. திருவிழா என்று சொன்னால் ஆலயம் அமைந்திருக்கின்ற இருக்கின்ற கிராமங்கள் மட்டுமல்ல அயல் கிராமங்களெல்லாம் விழாக்கோலம் பூண்டிருக்கும்.
இந்த திருவிழாக் காலங்களில் தமிழர் நம் களை, கலாசாரங்களை பிரதிபலிக்கின்ற கரகம், கும்மி, கோலாட்டம், கூத்து என்று பல்வேறுபட்ட களை நிகழ்சிகள் திருவிழாக் காலங்களில் ஆலயத்தில் இடம்பெறும்.
கிழக்கிலங்கையிலே பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றாக திகழும் மட்டக்களப்பு களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையாரின் வருடாந்த அலங்கார உற்சவம் நாளை ஆரம்பமாகி எதிர்வரும் 19 ம் திகதி திகதி தீர்த்த உற்சவத்துடன் நிறைவடைகின்றது. எனது சொந்த கிராமத்தில் இருக்கின்ற ஆலயம் சொல்லவா வேண்டும் பத்து நாட்களும் கொண்டாட்டம்தான்.
ஆலயத்தைப் பற்றி சில விடயங்கள்.
இந்த ஆலயத்தை பெறுத்தவரை பன்னெடுங்கால வரலாற்றை கொண்டுள்ளதோடு தம்மை நாடி வருவோர்க்கெல்லாம் வாரி வழங்கும் வள்ளலாகவும் இருக்கின்றார். இந்த ஆலயத்தின் வரலாற்றினை களுதேவாலயக் கல்வெட்டு விளக்கமாக சொல்கின்றது. இந்த ஆலயத்திலே தானாக தோன்றிய சுயம்புலிங்கம் கருவறையுள்ளே இருக்கிறது சுயம்புலிங்கமாக இருந்தாலும் விநாயகராக மக்கள் வழிபடுகின்றனர்.
இந்த ஆலயத்துக்கு நாள் தோறும் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் இன, மத பேதமின்றி வருகை தந்து கொண்டு இருக்கின்றனர். மக்கள் வைக்கின்ற நேர்கடன்களை நிவர்த்தி செயும் பொருட்டு அதிகமான மக்கள் வருகை தருவது வழக்கம். பக்தர்கள் நேர்கடன் வைத்ததும் உடனடியாக தீத்து வைப்பவர் என்ற நம்பிக்கை மக்களுக்குண்டு அதுதான் உன்மையும்கூட.
வாய் பேசாத பிள்ளைகளை பேச வைக்கின்ற பெருமை படைத்தவர் இந்த பிள்ளையார். அதே போல் பல அற்புதங்கள் நிறைந்த ஆலயமாகவும் இந்த ஆலயம் இருக்கின்றது.
திருவிழாக்காலங்களில் சமய சம்மந்தமான பல கலை நிகழ்வுகள் இடம் பெறுவதோடு பிரதேசமே விழாக்கோலம் பூண்டிருக்கின்றது. இந்த ஆலயத்தை பற்றிய பாடல்கள் அடங்கிய பல பாடல் தொகுப்புக்கள் வெளியிடப்பட்டுள்ளன. பல புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்தஆலயத்திலே மாம்பழத்திருவிழா இடம் பெறுவது சிறப்பு அம்சமாகும் இந்த தொகுப்புக்கள் பார்ப்பதுக்கு என்று அதிகமான பக்தர்கள் வருவார்கள்.
களுதாவளைப் பிள்ளையாரின் பெருமை கூறும் சில பாடல் வரிகள்
களுதாவளைப் பதிக்கு வாருங்கள் - உங்கள்
கவலைகளை கணபதியின் காதில் கூறுங்கள்
தொளுபவர்க்கும் அழுபவர்க்கும் வினைகள் நீக்குகிறார் - இங்கு
சுயம்புலிங்கராய் அமர்ந்து அருள் பொழிகிறார்
பிள்ளையாரை நம்பி வாருங்கள் - அவர்
பிள்ளையாகி மகிழ்ச்சி ஊட்டுவார்
துள்ளி ஓடும் எலியில் ஏறுவார் - அவர்
வள்ளலாகி வாரி வழங்குவார்.
கணங்களுக்கு நாதனாக அமர்ந்து இருப்பவர் - தன்னை
வணங்குவோர்க்கு வாழ்க்கையினை வசதி ஆக்குவார்
இணங்குவோர்க்கு நலன்கள் நாட்டுவார் - தன்னை
பிணங்குவோர்க்கு பிணிகள் காட்டுவார்.
கரத்தை நீட்டி கருணை கேளுங்கள் - ஐந்து
கரத்தை நீட்டி உரத்தை ஊட்டுவார்
சிரத்தையோடு சிரத்தைத தாழ்த்துங்கள் - கேட்கும்
வரத்தை தந்து பரத்தை காட்டுவார்
பெனையாக கொம்பை நாட்டினார் - எம்
ஊனை உருக்கும் திருமுறை எமக்கு காட்டினார்
ஆணையாககாட்டி ஓடினார்கள் - குற
வள்ளிமானை வேலன் கையில் ஊட்டினார்.
முக்கண்ணனார் புத்திரனே வா விநாயகா
முதற்பொருளே மூத்தவனே கேள் விநாயகா
முக்கனி தேன் சக்கரை பால் வா விநாயகா
முத்தமிழால் உனைத் தொழுவோம் கேள் விநாயகா
அறுகம்புல் மலரென்றவரே வா விநாயகா
அழகாக அமர்ந்திருந்து கேள் விநாயகா
வறுமை பிணி துயர் போக்க வா விநாயகா
பொறுமையுடன் எம் குறையைக் கேள் விநாயகா
சோதி லிங்கமானவரே வா விநாயகா
சுயம்புவென வந்தவரே கேள் விநாயகா
ஆதி சக்தி நாயகரே வா விநாயகா
ஆலமுண்டன் தன மகனே கேள் விநாயகா
களுதாவளைப் பொங்கலுன்ன வா விநாயகா
பிள்ளையாரின் கதை படிப்போம் வா விநாயகா
களுதாவளைத் திர்த்தமாட வா விநாயகா
கனி ரசம் போல் ஊஞ்சலிசை கேள் விநாயகா
6 comments: on "இனி என்ன... கொண்டாட்டம்தான்"
பதிவு நல்லா இருக்கு ..பாடல் வரிகள் அருமை .
நன்று
திருவிழாவுடன் மட்டுப்படுத்தப்படாமல் கலை நிகழ்வுகளும் இடம்பெறுவது மிக நல்ல விடயமே. சில ஆண்டுகளுக்கு முன்னர் இதே திருவிழா நாட்களில் இந்த கோவிலுக்கு வந்திருக்கின்றேன். பதிவுக்கு நன்றிகள்.
//malarvizhi கூறியது...
பதிவு நல்லா இருக்கு ..பாடல் வரிகள் அருமை .//
வருகைக்கு நன்றிகள்.
//உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) கூறியது...
நன்று//
வருகைக்கு நன்றிகள்.
//Jana கூறியது...
திருவிழாவுடன் மட்டுப்படுத்தப்படாமல் கலை நிகழ்வுகளும் இடம்பெறுவது மிக நல்ல விடயமே. சில ஆண்டுகளுக்கு முன்னர் இதே திருவிழா நாட்களில் இந்த கோவிலுக்கு வந்திருக்கின்றேன். பதிவுக்கு நன்றிகள்.//
மறைந்து வருகின்ற தமிழர் கலை, கலாசாரங்கள் இது போன்ற விழாக்கள் முலமே புத்துயிர் பெறுகின்றன.
கருத்துக்களுக்கு நன்றிகள்.
Post a Comment