இன்று நாளுக்கு நாள் வலைப்பதிவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. பல துறை சார்ந்தவர்கள் வலைப்பதிவுகளிலே பதிவிடுகின்றனர். நல்ல பல விடயங்கள் பதிவிடப்படுகின்றன. இருந்தபோதும் சிலர் எல்லோரும் வலைப்பதிவு வைத்திருக்கின்றார்களே நாங்களும் வைத்திருப்போமே என்று வலைப்பதிவை ஆரம்பிக்கின்றனர். பதிவிடுவதற்கு எதுவும் இல்லை அவர்களிடம் என்ன செய்வது இன்னொருவரின் பதிவினை திருடி பதிவிடுகின்றனர்.
என் வலைப்பதிவு வித்தியாசமான முறையிலே திருடப்படுகின்றது. நான் பதிவிட்டு சில நிமிடங்களிலே எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே இன்னோர் வலைப்பதிவிலே பதிவிடப்படுகின்றது. இதிலே விசேசம் என்னவென்றால் என் பதிவு மட்டுமே பதிவிடப்படுகின்றன. என் இடுகைகள் அத்தனையும் நான் பதிவிட்டு சிறிது நேரத்திலே அந்த வலைப்பதிவிலே பதிவிடப்படுகின்றன.
இது ஒருபுறமிருக்க இன்னும் சிலரோ ஒரு சிலரை தாக்குவதற்காகவே வலைப்பதிவுகளை ஆரம்பித்திருக்கின்றனர். போலியான பெயரிலே சிலர் வலைப்பதிவுகளை வைத்துக்கொண்டு ஒரு பதிவரைப் பற்றி தேவையற்ற விதத்திலே, நாகரிகமற்ற முறையிலே பதிவிடுதல், நாகரிகமற்ற முறையிலே கெட்ட வார்த்தைகளால் பின்னூட்டமிடல் போன்ற செயல்களிலே ஈடுபடுவதட்காகவே சிலர் வலைப்பதிவுகளை ஆரம்பித்திருக்கின்றார்கள்.
இன்று இலங்கைப் பதிவர்களைப் பொறுத்தவரை இவர்களில் தொல்லையும் அதிகரித்திருக்கின்றது. இலங்கைப் பதிவர்களுக்கு அனானிகளின் தொல்லையோடு சேர்த்து இன்னுமோர் தலையிடி இந்த போலிப் பதிவர்கள்தான். இவர்கள் நாகரிகமற்ற முறையிலே பதிவர்களைத் தாக்கி பதிவிடுகின்றனர், பின்னூட்டமிடுகின்றனர்.
இந்த போலிப் பதிவர்களின் தொல்லை வேறு நாடுகளிலே எப்படி என்று தெரியவில்லை. இலங்கையைப் பொறுத்தவரை இலங்கைப் பதிவர்களைத் தாக்கவே ஒரு சில போலிப் பதிவர்கள் புறப்பட்டிருக்கின்றனர். தங்களது பதிவுகளிலே ஒரு பதிவரைப் பற்றி தவறான முறையிலே எழுதுதல் தேவையற்ற பட்டங்களை அந்தப் பதிவருக்குச் சூட்டுதல் என்று அவர்களின் அட்டகாசம் தொடர்கின்றன.
பதிவர்கள் என்றால் பெரிய கொம்போ என்று கேட்டு சில போலிப்பதிவர்கள் பதிவர்கள் பதிவிட்டிருந்தனர். இன்று நல்ல பதிவுகளைத் தருகின்ற பலர் இருக்கின்றனர், பல துறைசார்ந்த பதிவுகளைத் தருகின்றனர். இவர்கள் எவரும் வேலையின்றி வீட்டிலே இருப்பவர்களல்ல. இன்று எல்லோரது பார்வையும் பதிவர்கள் பக்கம் திரும்பியிருக்கின்ற இந்த காலகட்டத்தில் இப்படியான போலிப் பதிவர்களால் நல்ல பதிவுகளைத் தருகின்ற பல பதிவர்கள் தாக்கப்படுகின்றனர். இந்நிலை மாறவேண்டும் போலிப் பதிவர்கள் உணர்ந்து திருந்தவேண்டும்.
24 comments: on "கொம்பு முளைத்த பதிவர்கள் யார்?"
Cheap Publicity க்காக அபபடி செய்கின்றனர் போலும். போலிகள் நீண்ட நாள் நிற்காது.
உங்களோட இந்த பதிவையும் யாராவது சுட்டு போட்டிருக்காங்களான்னு பாருங்க தோழா
என்ன செய்வது....
சொந்தமாக எழுத ஒன்றும் இல்லாவிட்டால் ஒன்றில் இன்னொருவரின் பதிவைத்திருடுவது, இல்லாவிட்டால் பதிவர்களைத் தனிப்பட்ட ரீதியில் விமர்சிப்பது....
மனநோயாளிகள் சந்ரு அண்ணா.....
இந்நிலை மாறவேண்டும் போலிப் பதிவர்கள் உணர்ந்து திருந்தவேண்டும்.////
சீக்கிரம் மாறும் என நம்புவோம்
கவலை வேண்டாம் நண்பா, காய்ந்த மரமே கல்லடிபடும். உங்களது பதிவு காத்திரமாக இருப்பதால் தான் அதை பிரதியிடுகிறார்கள்.
உங்களது பதிவை பிரதி பண்ண இயலாதவாறு HTML Coding இணைத்து கொள்ளுங்கள்.
//ஸ்ரீராம். கூறியது...
Cheap Publicity க்காக அபபடி செய்கின்றனர் போலும். போலிகள் நீண்ட நாள் நிற்காது.//
அவர்களாகத் திருந்தினால்தான்.
உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.
//சுப.தமிழினியன் கூறியது...
உங்களோட இந்த பதிவையும் யாராவது சுட்டு போட்டிருக்காங்களான்னு பாருங்க தோழா//
போடலாம் நண்பா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.
//கனககோபி கூறியது...
என்ன செய்வது....
சொந்தமாக எழுத ஒன்றும் இல்லாவிட்டால் ஒன்றில் இன்னொருவரின் பதிவைத்திருடுவது, இல்லாவிட்டால் பதிவர்களைத் தனிப்பட்ட ரீதியில் விமர்சிப்பது....
மனநோயாளிகள் சந்ரு அண்ணா.....//
சரியாகச் சொன்னீர்கள் கோபி..
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்
//உங்கள் தோழி கிருத்திகா கூறியது...
இந்நிலை மாறவேண்டும் போலிப் பதிவர்கள் உணர்ந்து திருந்தவேண்டும்.////
சீக்கிரம் மாறும் என நம்புவோம்//
திருந்துவார்களா
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்
//RR கூறியது...
இந்தியாவில் வேலையோ,வேலைக்கு மக்களோ தேடுகிறீர்களா..எந்த துறையாக இருப்பினும் கட்டணமில்லாத சேவைக்கு எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.
http://job2flourish.blogspot.com/
acadjobtn@gmail.com//
வருகைக்கு நன்றிகள்
//யோ வாய்ஸ் (யோகா) கூறியது...
கவலை வேண்டாம் நண்பா, காய்ந்த மரமே கல்லடிபடும். உங்களது பதிவு காத்திரமாக இருப்பதால் தான் அதை பிரதியிடுகிறார்கள்.
உங்களது பதிவை பிரதி பண்ண இயலாதவாறு HTML Coding இணைத்து கொள்ளுங்கள்.//
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்
கவலை தரும் தகவல். போலிகள் நிலைக்காது. அதுசரி, இந்தப் பதிப்பைத் திருட மாட்டார்கள் என்று நம்புகிறேன்.
சந்ரு! மின்னஞ்சலில் கிடைத்த... வலைத் தளத்தை
பார்த்தவுடன் அதிர்சி ஏன்?
தெரியுமா? நீங்கள் கருணாநிதி அவர்கட்கு
எழுதிய மடலை அவர் எழுதியதாக
அவர் வலைத் தளத்தில் பார்த்தேன் இன்னும் பல...
யார் அந்த ?????
இப்படியும் மனிதர்களாஆஆஆஆஆ????ழ
நன்றி சந்ரு
என்ன செய்ய ... அவர்களாக திருந்தினால்தான் உண்டு.
இந்த மன உளைச்சல் எனக்கும் உண்டு சந்ரு.
//ஜெஸ்வந்தி கூறியது...
கவலை தரும் தகவல். போலிகள் நிலைக்காது. அதுசரி, இந்தப் பதிப்பைத் திருட மாட்டார்கள் என்று நம்புகிறேன்.//
இதனையும் திருடிப்போடக்கூடியவர்கள்தான்..
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்
//Kala கூறியது...
சந்ரு! மின்னஞ்சலில் கிடைத்த... வலைத் தளத்தை
பார்த்தவுடன் அதிர்சி ஏன்?
தெரியுமா? நீங்கள் கருணாநிதி அவர்கட்கு
எழுதிய மடலை அவர் எழுதியதாக
அவர் வலைத் தளத்தில் பார்த்தேன் இன்னும் பல...
யார் அந்த ?????
இப்படியும் மனிதர்களாஆஆஆஆஆ????ழ
நன்றி சந்ரு//
பாருங்கள் யார் உரிமை கொண்டாடுகின்றனர் என்று நேரத்தை செலவிட்டு நாம் பதிவிடுகின்றோம் அவர்கள் எங்களது இடுகையை copy பண்ணி பெயரெடுக்க நினைக்கின்றனர்.
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்
//சி. கருணாகரசு கூறியது...
என்ன செய்ய ... அவர்களாக திருந்தினால்தான் உண்டு.
இந்த மன உளைச்சல் எனக்கும் உண்டு சந்ரு.//
அவர்களாகத் திருந்தினால்தான்.
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்
இந்த செயல் கண்டிக்கதக்கது. அப்படி என்ன அவர்களுக்கு இதில் சந்தோசம் தெரியவில்லை. :-(
நான் கூட கொம்பு முளைத்த பதிவர்னு தலைப்பை பார்த்தவுடன் ஏதோ, தல வால் பையனைப் பத்தின்னு வேகமா வந்தேன். ஏன்னா, அவர் வலைப்பூவுல தான் கொம்பு முளைத்த தலைப்புப் படம் இருக்கு :-))))
அவரு ரொம்ப நல்லவருய்யா....
நண்பர் சந்ரு அவர்களுக்கு,
இந்த மாதிரி விவகாரங்களை, மேலோட்டமாக எழுதினால் சரிப்பட்டு வராது.
எந்த பதிவு, எப்பொழுது நீங்க எழுதியது, அது எந்த வேறு பதிவில் வந்துள்ளது - என்பதை, விவரமாக எழுதினால்,
இரண்டு நன்மைகள் உண்டு.
ஒன்று : நாங்க அசல் எது போலி எது என்று தெரிந்துகொண்டு, அசலை எடுத்துக்கொண்டு,
நகலை விலக்கிவைப்போம்.
இரண்டு: வலைப் பதிவர்களாகிய எங்களுக்கு - இந்த விவரங்கள் - எதிர்காலத்தில் எச்சரிக்கையாக இருக்க உதவும்.
//ரோஸ்விக் கூறியது...
இந்த செயல் கண்டிக்கதக்கது. அப்படி என்ன அவர்களுக்கு இதில் சந்தோசம் தெரியவில்லை. :-(
நான் கூட கொம்பு முளைத்த பதிவர்னு தலைப்பை பார்த்தவுடன் ஏதோ, தல வால் பையனைப் பத்தின்னு வேகமா வந்தேன். ஏன்னா, அவர் வலைப்பூவுல தான் கொம்பு முளைத்த தலைப்புப் படம் இருக்கு :-))))
அவரு ரொம்ப நல்லவருய்யா....
//
ஆமா வால்ப்பையன் ரொம்ப நல்லவருதான். எனக்கும் நண்பர்தான்.
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்
//kggouthaman கூறியது...
நண்பர் சந்ரு அவர்களுக்கு,
இந்த மாதிரி விவகாரங்களை, மேலோட்டமாக எழுதினால் சரிப்பட்டு வராது.
எந்த பதிவு, எப்பொழுது நீங்க எழுதியது, அது எந்த வேறு பதிவில் வந்துள்ளது - என்பதை, விவரமாக எழுதினால்,
இரண்டு நன்மைகள் உண்டு.
ஒன்று : நாங்க அசல் எது போலி எது என்று தெரிந்துகொண்டு, அசலை எடுத்துக்கொண்டு,
நகலை விலக்கிவைப்போம்.
இரண்டு: வலைப் பதிவர்களாகிய எங்களுக்கு - இந்த விவரங்கள் - எதிர்காலத்தில் எச்சரிக்கையாக இருக்க உதவும்.//
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்
சந்ரு!அந்தக் காலத்திலேயே போலிகள் இருந்தனர் என்றால் இந்தக் கலிகாலத்தில் கேட்கவா வேண்டும், எனவே நாம்தான் கவனமாக இருந்து உண்மையையும் போலியையும் கண்டு கொள்ள வேண்டும்.
இந்தப் போலிகளின் முகத்திரையைக் கிழிக்க வேண்டும்
//Atchu கூறியது...
சந்ரு!அந்தக் காலத்திலேயே போலிகள் இருந்தனர் என்றால் இந்தக் கலிகாலத்தில் கேட்கவா வேண்டும், எனவே நாம்தான் கவனமாக இருந்து உண்மையையும் போலியையும் கண்டு கொள்ள வேண்டும்.
இந்தப் போலிகளின் முகத்திரையைக் கிழிக்க வேண்டும்//
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்
இதற்கு என்ன தான் தீர்வு என்று தெரியவில்லை.
நானும் "மீள்பதிவிடுவோர் கவனத்திற்கு" என ஒரு பதிவு இட்டுள்ளேன்.
http://aangilam.blogspot.com/2009/08/blog-post.html
Post a Comment