Tuesday, 24 November 2009

நமக்காக நாம். மீண்டும் சந்திப்போம்.


இலங்கைத் தமிழ்ப் பதிவர் சந்திப்பு


இலங்கைப் பதிவார்கள் அனைவரும் ஆவலோடு எதிர் பார்த்துக்கொண்டிருந்த பதிவர் சந்திப்பு - 2 எதிர்வரும் 13 ம் திகதி தேசிய கலை இலக்கியப் பேரவை, (வெள்ளவத்தை) இடம்பெற இருக்கின்றது. இச் சந்திப்பிலே பல விடயங்கள் இடம்பெற இருக்கின்றன. இலங்கையின் அனைத்து தமிழ் வலைப் பதிவர்களும் அன்றைய தினம் ஒன்றாக சந்திப்போம்.

சந்திப்பு தொடர்பான விபரங்களை தருகின்றேன்....

இடம் : தேசிய கலை இலக்கியப் பேரவை, வெள்ளவத்தை (ரொக்சி திரையரங்கு முன்னால்)

காலம் : டிசம்பர் 13 (தமிழ் கார்த்திகை 27) , மாலை இரண்டு மணி, ஞாயிற்றுக் கிழமை ( 13-12-2009 )

நிகழ்ச்சி நிரல்

• அறிமுகவுரை
• புதிய பதிவர்கள் அறிமுகம்
• கலந்துரையாடல் ஒன்று : பயனுறப் பதிவெழுதல்
• கலந்துரையாடல் இரண்டு : பின்னூட்டங்கள்
• சிற்றுண்டியும் சில பாடல்களும்
• கலந்துரையாடல் மூன்று : இலங்கைத் தமிழ்ப் பதிவர் குழுமத்தை எவ்வாறு சிறப்பாகப் பயன்படுத்துவது?
• கலந்துரையாடல் நான்கு : பெண்களும் பதிவுலகமும்
• பதிவர்களுக்கிடையான குழுப் போட்டி
• உங்களுக்குள் உரையாடுங்கள்

பதிவர்கள் தங்கள் வருகையை  அமைப்புக்குழுவினரில் ஒருவருக்கு தொலைபேசியோ, நேரிலோ அல்லது ஏதோ ஒரு வழியிலோ தெரிவித்தால் நலம்பெறும்.

எம்மால் எமக்காக நடாத்தப்படும் இந்தச் சந்திப்பை சிறப்பாக நடாத்த பதிவர்கள் குறைந்தது நூறு ரூபாய்களாவது கொடுத்து சிறப்பாக நடாத்துங்கள்.

இந்தப் பதிவர்சந்திப்பு நேரடி ஒளிபரப்புச் செய்யப்படும்.

அதன் சுட்டி http://livestream.com/srilankatamilbloggers
இம்முறை அமைப்புக் குழுவினர்

கனககோபி, சம்யுக்தா, மன்னார் அமுதன், மதுவர்மன், மதுவதனன், சுபாங்கன், மு மயூரன்

இங்ஙனம்
ஏற்பாட்டுக் குழுவினர்.

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

10 comments: on "நமக்காக நாம். மீண்டும் சந்திப்போம்."

Unknown said...

இது பதிவர்களுக்காக பதிவர்கள் நடத்துவது என்பதால் அனைவரும் ஒத்துழைத்து மிக வெற்றிகரமான சந்திப்பொன்றை நடத்த உறுதிபூணுவோம்....

இது நமக்காக நாம் தான்....

Ramesh said...

முதல்ல வாழ்த்துக்கள் பதிவர்களே ஏற்பாட்டுக் குழுவினரே.
நிகழ்வை வெற்றிகரமாக நிகழ்த்த எம் பெருமான் இறைவன் துணை புரிவான்.

அது சரி..../////எம்மால் எமக்காக நடாத்தப்படும் இந்தச் சந்திப்பை சிறப்பாக நடாத்த பதிவர்கள் குறைந்தது நூறு ரூபாய்களாவது கொடுத்து சிறப்பாக நடாத்துங்கள்.//////
ஆரம்பிச்சுட்டுடேயலா சும்மா ஹா ஹ அஹா
நன்றி சந்த்ரு

ஆ.ஞானசேகரன் said...

சந்திப்பு சிறப்பாக நடைபெற வாழ்த்துகள்..

வந்தியத்தேவன் said...

உள்ளேன் ஐயா.

என்னுடைய வருகையையும் பதிந்துகொள்கின்றேன்.

Anonymous said...

ம்ம்ம்ம்ம் வரணும் என்று ஆவல் ஆனால் இயலாதே..சிறப்புடன் நடைபெற வாழ்த்துக்கள்

Anonymous said...

//கலந்துரையாடல் நான்கு : பெண்களும் பதிவுலகமும்//

How dare you guys? Naan illaamal intha kalanthuraiyadala? hmph.. he he

P.S:- Is there any other site to type tamil. unicode thing is not working here...

தர்ஷன் said...

வர முயல்கிறேன் நண்பரே தூரமும் நேரமும்தான் பிரச்சினை

மேமன்கவி பக்கம் said...

நமக்காக நாம் மீண்டும் சந்திபோம்.
சரியாக சொன்னீர்கள்.
நமக்காக நாம்தான் சந்திக்கவேண்டும்.
நமக்கான சந்திப்பை பிறர் ஏற்பாடு பண்ணக் கூடாது.

மேமன்கவி பக்கம் said...

அதாவது நான் என்ன சொல்ல வந்தேன் என்றால்
நமக்கான சந்திப்பை ஏற்பாடு செய்ய நாங்கள் இருக்கிறோம் என்பதுதான்.

ஸ்ரீராம். said...

வாழ்த்துக்கள்.

Post a Comment