Showing posts with label அனானிகள். Show all posts
Showing posts with label அனானிகள். Show all posts

Sunday, 20 December 2009

நானும், என் சுய புராணமும்.

நான் வலைப்பதிவுக்கு வந்தது புகழ் தேட வேண்டும் என்பதற்காகவோ, பிரபல பதிவராக வேண்டும் என்பதற்காகவோ அல்ல,  தமிழர்களுக்கே தனித்துவமான, மறைந்து வருகின்ற எமது கலை, கலாசாரங்களை வெளி உலகுக்கு பகிர்ந்து கொள்ள வேண்டும், எமது மக்கள் படுகின்ற அவலங்களை என்னால் முடிந்தவரை வெளி உலகுக்கு கொண்டு செல்ல வேண்டும், என் கருத்துக்களையும் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளவேண்டும் என்பதற்காகவே வலைப்பதிவை ஆரம்பித்தேன்.

வலைப்பதிவு மூலம் நிறையவே நண்பர்கள் கிடைத்திருக்கின்றனர், என் கருத்துக்களையும் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்கின்றேன் எனும்போது மட்டற்ற மகிழ்சியே.  அண்மைக் காலமாக ஏன் இந்த வலைப் பதிவுலகத்துக்கு வந்தேன் என்று எண்ணத் தோன்றுகின்றது.

நான் அதிகமாக பிரச்சினைகளைப் பற்றி பதிவிட்டு வருகின்றேன். எங்கு தவறு நடக்கின்றது, பிரச்சினைகள்  இருக்கின்றதோ அதனை நான் ஒரு போதும் சுட்டிக்காட்ட தயங்கப் போவதுமில்லை.  அது யார் செய்த தவறாக இருந்தாலும்.  என் பதிவுகளிலே தவறு இருந்தால் நேர்மையான முறையிலே யார் சுட்டிக் காட்டினாலும் நான் திருத்திக்கொள்ள தயாராக இருக்கின்றேன்.

அதனை விடுத்து அச்சுறுத்தல் விடுவது, தகாத வார்த்தைகளால் பின்னூட்டமிடுவது, என் பெயரிலே தவறான முறையிலே என் நண்பர்களது வலைப்பதிவுகளுக்கு பின்னூட்டமிடுவது   இவ்வாறு பல்வேறு இழிவான செயலிலே சிலர் ஈடுபடுவது மன வேதனையைத் தருகின்றது.

இச்செயற்பாடுகள் தொடர்பாக நான் சில இடுகைகளிலே சுட்டிக்காட்டிய போது நான் பிரபலமாவதட்காக சுய புராணம் பாடுவதாக இந்த  செயல்களிலே ஈடுபட்டவர்கள் சில வலைப்பதிவுகளிலே பின்னூட்டமிட்டு  இருந்தனர். என் வலைப்பதிவிலும் மோசமான வார்த்தைகளால் பின்னூட்டமிட்டு  இருந்தனர்.

இந்த மோசமான கிழ்த்தரமான வேலைகளை செய்கின்றவர்களுக்கு நான் சொல்லிக்கொள்கிறேன். துணிவும் தன்நம்பிக்கையும் என்னுடன் கூடப் பிறந்த ஒன்றாகும். எவரது மிரட்டல்களுக்கும் நான் பயப்படப் போவதில்லை. மரணத்துக்கு பயப்படுபவனுமல்ல மரணமென்பது ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. அது இன்று வந்தாலும் சரி, நாளை வந்தாலும் சரி அதுவரை நல்ல மனிதனாக வாழவேண்டும்.  என்பதுதான் என் எண்ணம்.

கடந்த சில நாட்களாக நாகரிகமற்ற சிலரின்  பின்நூட்டங்களால்   மனதிலே மிகவும் கவலையாக இருந்தது. வேண்டத்தகாத வார்த்தைகள் வேண்டுமென்றே என்னை சீண்டுவதாக அமைந்திருந்தன. நான் என்  கருத்தை சொல்லுகின்ற, வெளியிடுகின்றபோது போது தவறு இருந்தால் சுட்டிக்காட்டலாம். அதனை விடுத்து தேவையற்ற விடயங்களை சொல்லி மற்றவர்களது மனதை புண்படுத்தும் செயலானது மனிதத் தன்மையான ஒரு செயலல்ல.

ஒரு சிலர் செய்யும் தவறுக்காக எல்லோரையும் தகாத வார்த்தைகளால் திட்டித் தீர்ப்பதும்  மனிதத் தன்மையல்ல. நான் என் தாய் மொழி தமிழ்மொழியையும், என்னை வெளி உலகிற்கு அறிமுகப் படுத்திய அறிவிப்புத் துறையையும்  என் உயிரிலும் மேலாக மதிப்பவன். இவை இரண்டைப் பற்றியும் யார் தவறாக பேசினாலும் அவர்களுக்கு எதிராக நான் எதனை  செய்யவும் தயங்கமாட்டேன்.

தமிழ்மொழிப் பற்று என்பது ஒவ்வொரு தமிழனுக்கும் இருக்க வேண்டும். தமிழ் மொழிப் பற்று ஒரு பிரதேசம் சார்ந்தவனுக்குத்தான் இருக்க வேண்டுமென்று இல்லை. நான் மட்டக்களப்பை சேர்ந்தவன் ஆனாலும் வலைப்பதிவு மூலம் யாழ்ப்பாணத்தை சேர்ந்த நண்பர்களே எனக்கு அதிகம். இந்த நட்பை இல்லாமல் செய்ய வேண்டுமென்று சிலர் தேவையற்ற பிரதேச வாதத்தை துண்டுகின்ற பல பின்னூட்டங்களை   நாள்தோறும் என் வலைப் பதிவிலே இட்டு வருகின்றனர்.

நான் பிரதேச வாதத்தையும், பிரதேசவாத அரசியலையும் முற்றாக  வெறுப்பவன். ஒருசிலர் செய்யும் தவறுக்காக எல்லோரையும். விரோதிகளாக பார்க்க முடியாது.  பிரதேச வாத பின்னூட்டங்களை  தவிர்த்து விடுங்கள் நேர்மையான கருத்துக்களை சொல்லுங்கள் என்று அனானிகலிடம்  கேட்டுக் கொள்கிறேன்.

 எனது நண்பர்களின்   வலைப்பதிவுகளிலே எனது பெயரிலே தேவையற்ற பின்னூட்டங்கள் சில விசமிகளால் இடப்பட்டதனால் நான் சில காலம் வெளி நாட்டு நண்பர்களின் வலைப் பதிவுகளுக்கு பின்னூட்டமிடுவதை தவிர்த்து.  இலங்கையிலே இருக்கின்ற என்னோடு நெருங்கிய நண்பர்களுக்கு மட்டுமே பின்னூட்டமிட்டு வந்தேன்.

சில நாட்களாக அனானிகள்  என்னை மோசமான முறையிலே திட்டித் தீர்த்ததனால் நான் சில காலம் வலைப்பதிவுப் பக்கம் வருவதில்லை என்றும், எவருக்கும் பின்னூட்டமிடுவதில்லை என்றும் நினைத்திருந்தேன். ஆனால் சில நண்பர்கள் எனக்கு உச்சாகத்தை வழங்கினார்கள் தொடர்ந்து எழுதுங்கள் என்று. அவர்களுக்கு எனது நன்றிகள்.

இந்த சீண்டுதல்கள்   என்னை இன்னும் நிறையவே எழுதத் தூண்டுகின்றது என்பதுதான் உண்மை. இனிவரும் என் எழுத்துக்கள் இன்னும் புத்துணர்ச்சி பெறும்.

என்று முதல் நான் அனைத்து நண்பர்களது வலைப்பதிவுக்கும் பின்னூட்டமிட இருக்கின்றேன். நான் எனது பின்னூட்டத்தினால்   தனிப்பட்ட எவரையும் தாக்குவதில்லை, எதிர்க் கருத்துக்களை சொன்னாலும் தகாத வார்த்தைகளை பிரயோகிக்க மாட்டேன் அப்படி பின்னூட்டமிடப்பட்டால் அது நான் இட்ட பின்னூட்டமல்ல உடனடியாக எனக்கு தெரியப்படுத்துங்கள் நண்பர்களே.


நான் என்றும் தமிழனாக இருக்கவே ஆசைப்படுகிறேன்.
read more...

Monday, 9 November 2009

கொம்பு முளைத்த பதிவர்கள் யார்?

இன்று நாளுக்கு நாள் வலைப்பதிவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. பல துறை சார்ந்தவர்கள் வலைப்பதிவுகளிலே பதிவிடுகின்றனர். நல்ல பல விடயங்கள் பதிவிடப்படுகின்றன. இருந்தபோதும் சிலர் எல்லோரும் வலைப்பதிவு வைத்திருக்கின்றார்களே நாங்களும் வைத்திருப்போமே என்று வலைப்பதிவை ஆரம்பிக்கின்றனர். பதிவிடுவதற்கு எதுவும் இல்லை அவர்களிடம் என்ன செய்வது இன்னொருவரின் பதிவினை திருடி பதிவிடுகின்றனர்.

என் வலைப்பதிவு வித்தியாசமான முறையிலே திருடப்படுகின்றது. நான் பதிவிட்டு சில நிமிடங்களிலே எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே இன்னோர் வலைப்பதிவிலே பதிவிடப்படுகின்றது. இதிலே விசேசம் என்னவென்றால் என் பதிவு மட்டுமே பதிவிடப்படுகின்றன. என் இடுகைகள் அத்தனையும் நான் பதிவிட்டு சிறிது நேரத்திலே அந்த வலைப்பதிவிலே பதிவிடப்படுகின்றன.

இது ஒருபுறமிருக்க இன்னும் சிலரோ ஒரு சிலரை தாக்குவதற்காகவே வலைப்பதிவுகளை ஆரம்பித்திருக்கின்றனர். போலியான பெயரிலே சிலர் வலைப்பதிவுகளை வைத்துக்கொண்டு ஒரு பதிவரைப் பற்றி தேவையற்ற விதத்திலே, நாகரிகமற்ற முறையிலே பதிவிடுதல், நாகரிகமற்ற முறையிலே கெட்ட வார்த்தைகளால் பின்னூட்டமிடல் போன்ற செயல்களிலே ஈடுபடுவதட்காகவே சிலர் வலைப்பதிவுகளை ஆரம்பித்திருக்கின்றார்கள்.

இன்று இலங்கைப் பதிவர்களைப் பொறுத்தவரை இவர்களில் தொல்லையும் அதிகரித்திருக்கின்றது. இலங்கைப் பதிவர்களுக்கு அனானிகளின் தொல்லையோடு சேர்த்து இன்னுமோர் தலையிடி இந்த போலிப் பதிவர்கள்தான். இவர்கள் நாகரிகமற்ற முறையிலே பதிவர்களைத் தாக்கி பதிவிடுகின்றனர், பின்னூட்டமிடுகின்றனர்.

இந்த போலிப் பதிவர்களின் தொல்லை வேறு நாடுகளிலே எப்படி என்று தெரியவில்லை. இலங்கையைப் பொறுத்தவரை இலங்கைப் பதிவர்களைத் தாக்கவே ஒரு சில போலிப் பதிவர்கள் புறப்பட்டிருக்கின்றனர். தங்களது பதிவுகளிலே ஒரு பதிவரைப் பற்றி தவறான முறையிலே எழுதுதல் தேவையற்ற பட்டங்களை அந்தப் பதிவருக்குச் சூட்டுதல் என்று அவர்களின் அட்டகாசம் தொடர்கின்றன.

பதிவர்கள் என்றால் பெரிய கொம்போ என்று கேட்டு சில போலிப்பதிவர்கள் பதிவர்கள் பதிவிட்டிருந்தனர். இன்று நல்ல பதிவுகளைத் தருகின்ற பலர் இருக்கின்றனர், பல துறைசார்ந்த பதிவுகளைத் தருகின்றனர். இவர்கள் எவரும் வேலையின்றி வீட்டிலே இருப்பவர்களல்ல. இன்று எல்லோரது பார்வையும் பதிவர்கள் பக்கம் திரும்பியிருக்கின்ற இந்த காலகட்டத்தில் இப்படியான போலிப் பதிவர்களால் நல்ல பதிவுகளைத் தருகின்ற பல பதிவர்கள் தாக்கப்படுகின்றனர். இந்நிலை மாறவேண்டும் போலிப் பதிவர்கள் உணர்ந்து திருந்தவேண்டும்.
read more...

Tuesday, 15 September 2009

இலங்கை அனானிகள் சந்திப்பு இன்று பல முக்கிய விடயங்கள் ஆராயப்பட்டன...

இலங்கை அனானிகள் சந்திப்பு இன்று காலை ஒன்பது மணியளவில் மறைவான, ஒதுக்குப்புறமான ஒரு இடத்திலே இடம் பெற்றன. இந்தச் சந்திப்பிலே சில அனானிகள் கலந்து கொண்டனர்.

இந்தச் சந்திப்பிலே வலைப்பதிவுகளையும், வலைப்பதிவர்களையும் எப்படி தாக்குவது என்று பல்வேறுபட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்திருக்கின்றன.

இந்தச் சந்திப்பிலே தலைமை தாங்கும் அனானி தனது தலைமை உரையிலே. நாம் ஆரம்பகாலங்களைவிட தப்போது தொழினுட்ப வளர்ச்சிக்கு ஈடுகொடுத்து வருகின்றோம். அன்று ஒருசில வலைப்பதிவர்களையும் வலைப்பதிவுகளையும் தாக்கி வந்த நாம் இன்று எமது சேவையினை வியாபித்திருக்கின்றோம். எமது எதிர்காலத்திட்டங்கள் தொடர்பாக நல்ல முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்றார்.

தொடர்ந்து ஒரு அனானியினால் கடந்தகால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதிலே எந்தெந்த வலைப்பதிவுகள் எப்படி எப்படித்தாக்கப்பட்டன போன்ற விடயங்கள் அலசி ஆராயப்பட்டிருந்தது.

ஒரு அனானி எழுந்து தான் சில வலைப்பதிவுகளிலே மோசமான வசனங்களினால் பின்னூட்டமிட்டும் அந்த வலைப்பதிவர்கள் அதனை கருத்தில் எடுத்துக்கொள்வதில்லை என்றும். கொபப்படுவதாகத் தெரிவதில்லை என்றும் இவர்களைக் கோபப்படவைக்க அல்லது இவர்களைத்தாக்க வேறு ஏதாவது வழியினைச் சொல்லுங்கள் என்றார்.

மற்றுமோர் அனானி எழுந்து சில வலைப்பதிவுகளிலே கருத்துரை மட்டுறுத்தல் இருப்பதனால் கஷ்டமாக இருக்கின்றது என்றார்.


தலைமைதாங்கும் அநாநி௮ மீண்டும் எழுந்து வலைப்பதிவுகளில் மாற்றங்களைச் செய்யும். பதிவர்களின் பெயரிலே பின்னூட்டமிடும் முறைகளை தான் பல வருட முயற்சியின் பின் பெற்றிருப்பதாகவும் பரிச்சார்த்தமாக சில வலைப்பதிவுகளை மாற்றி அமைத்து பார்த்ததாகவும் எதிர்காலத்திலே கைகொடுக்கும் என்ற நம்பிக்கை இருந்தது என்றும் இப்போது அந்த நம்பிக்கை வீண் போய் விட்டதாகவும் குறிப்பிட்டார்.

இன்று இப்படியான வேலைகளைச் செய்பவர்களை பிடிக்க முடியும் என்றும் தான்தான் இந்த வேலைகளைச் செய்கின்ற அனானி என்றும் சிலருக்கு தெரியவந்துவிட்டதாகவும் குறிப்பிட்டார்.

இன்னுமொருவர் எழுந்தார் பார்த்தால் அவர் ஒரு பதிவர் தான் பதிவராக இருந்தாலும் அனானியாகவே அதிக பின்னூட்டங்களை இட்டு பல பதிவர்களை திக்குமுக்காட செய்து கொண்டிருக்கின்றேன். நான் வலைப்பதிவர் சந்திப்புக்கு போகவில்லை வலைப்பதிவர் சந்திப்பை நேரடி ஒலிபரப்பு மூலம் பார்த்து என்னால் முடிந்த சில வேலைகளைச் செய்திருக்கின்றேன் என்றார்.

அடுத்து அனானிகள் ஒன்று சேர்ந்து இலங்கை பதிவர்களுக்கான திரட்டி ஒன்றை ஆரம்பித்தால் அதன் மூலம் பதிவர்கள் தொடர்பான விபரங்களை இலகுவாக அறிந்து கொள்வதோடு நமது எதிர்காலச் செயற்பாடுகளுக்கு இலகுவாக இருக்கும் என்றார். யார் அந்த திரட்டியை நிர்வகிப்பது என்பது எவருக்கும் தெரியக்குடாது என்றும் குறிப்பிட்டார்.

அடுத்து கடந்த காலங்களில் அதிகம் தாக்கப்பட்ட பதிவர்களின் பெயர்களும் தாக்கப்பட்ட விதங்களும் ஏனைய புதிய அனானிகளுக்காக தெரியப்படுத்தப்பட்டது.

அப்பொழுது ஒரு அனானி அடிக்கடி சந்திப்புக்களை ஏற்பாடு செய்யவேண்டும் என்றும். இலங்கையில் இருக்கின்ற முக்கிய பதிவர்களை அடிக்கடி தாக்கிக்கொண்டிருக்கவேண்டும் என்றும் கூறினார்.

அடுத்து புதிய திட்டங்கள் பற்றி ஒவ்வொருவரும் தங்கள் கருத்துக்களை சொல்லுங்கள் என்று தலைமைதாங்கும் அனானி சொன்னார். எல்லோரும் மெளனமானார்கள். சரி சிந்தித்து சொல்லுங்கள் என்று சொன்னார் தலைமை அனானி. இரண்டு மணித்தியாலங்களாகியும் எவரும் வாய் திறக்கவில்லை. எவருமே சுயமாக சிந்திக்கும் ஆற்றல் அற்றவர்கள் என்பதனை உணர்ந்து கொண்ட தலைமை அனானி ஒரு மாதத்தின்பின் மீண்டும் சந்திப்பதாகவும் அதுவரைக்கும் யோசித்து நல்ல திட்டங்களோடு வாருங்கள் என்றார். (எவருக்குமே மூளை இல்லை என்பது தலைமை அனானிக்கு மூளை இருந்தால்தானே புரியும்)

இந்து மணித்தியால சந்திப்பிலே எந்த முடிவுகளும் எடுக்கப்படவில்லை என்பதுதான் உண்மையான விடயம்.

இந்த சந்திப்பு இடம்பெற்ற மண்டபத்துக்கு அருகிலே இருக்கும் வீதியால் நான் சென்ருகொண்டிருன்தேன். அப்போது அந்த மண்டபத்தின் காவலாளி என்னைப்பார்த்து என்ன கொடுமை சார் என்றான் என்ன என்று கேட்டேன் அவர்தான் இந்த விடயங்களை என்னிடம் கூறினார். நானும் எல்லா விடயங்களையும் கேட்டுவிட்டு என்ன கொடுமை சார் இது என்று போய்விட்டேன்.

அனானிகள் ஒழிக....
read more...