Thursday, 24 June 2010

ஏமாற்றுக்காரர்களின் மறு பக்கம் தொடர்கிறது

தமிழர் நம் வரலாறு சொல்லும் கதைகள் பகுதி 18

இதன் பின்னர் எந்த யு.என்.பி. கட்சி பண்டா – செல்வா ஒப்பந்தத்த கிழிக்க மூலகாரணமாயிற்றோ அதே யு.என்.பி யுடன் 1965 ஆண்டு ஒரு அமைச்சு பதவிக்காக தமிழரசுக்கட்சி கூட்டுச்சேர்ந்தது. இதே யு.என்.பி. இல் 1947 ஆம் ஆண்டில் அமைச்சுப் பதவி பெற்றுக்கொண்டு ஆட்சியல் பங்கெடுத்த ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் முடிவினை கடுமையாக ஆட்சேபித்து அவருடன் முரண்பட்டுத்தான் இந்த தமிழரசுக்கட்சிக்கு வழிகாட்டும் எஸ்..ஜே.வி.செல்வநாயகம் வெளியேறியிருந்தார் என்பதும் அதன் பின்னரே தமிழரசுக்கட்சி தோற்றம் பெற்றது என்பதும் குறிப்படத்தக்க விடயங்களாகும்.
read more...

Wednesday, 23 June 2010

பதிவுலக பித்தலாட்டங்கள்

என் பதிவுகளைப் பொறுத்தவரை உண்மைகள் வெளிவரவேண்டும். என்று நினைப்பவன் நான்.  தமிழர் நம் வரலாறு சொல்லும் கதைகள் எனும் என்னுடைய தொடர் பதிவு தொடர்பாக என்னை வம்புக்கு இழுத்து வருகின்றனர். நான் பிரதேச வாதம் பற்றி பேசுவதாக குறிப்பிடுகின்றனர்.
read more...

Tuesday, 22 June 2010

எஸ்.ஜே.வி.செல்வநாயகமும் அவரது மறுபக்கமும் தொடர்கிறது....

தமிழர் நம் வரலாறு சொல்லும் கதைகள் பகுதி 17


யாழ்ப்பாணத்தின் காங்கேசன்துறைப் பகுதியில் பெருமளவு நிலங்களுக்கு சொந்தக்காரராக மட்டுமல்ல மலையகத்திலும் பெரும் எஸ்டேட்டுகளின் சொந்ததக்காறராகவும் இருந்தார் இந்த செல்வநாயகம். அதேவேளை 1947 ஆம் ஆண்டு ஜுன்  மாதம் முதலாம் திகதி இலங்கை தமிழ் காங்கிரஸில் இருந்தபோது ஆரம்பிக்கப்பட்ட சுதந்திரன் பத்திரிகை நிறுவனத்தின் உரிமையாளராகவும் இந்த செல்வநாயகமே இருந்தார்.
read more...

Monday, 21 June 2010

காதலர்கள் எப்படி தன் காதலிக்கு கடிதம் எழுதலாம்.

காதலர்கள் தங்களுக்குள்ளே கடிதங்களைப் பரிமாறிக் கொள்வார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக கடிதம் எழுதுவார்கள் ஆனால் எனக்கு அனுபவம் இல்லை.

சில பிரபலங்கள் தங்கள் காதலிகளுக்கு அனுப்பிய கடிதங்களை தருகிறேன். காதலர்களே நீங்களும் இப்படி கடிதம் எழுதலாம்.
read more...

எஸ்.ஜே.வி.செல்வநாயகமும் அவரது மறுபக்கமும்

தமிழர் நம் வரலாறு சொல்லும் கதைகள் பகுதி 16
எஸ்.ஜே.வி.செல்வநாயகமும் அவரது மறுபக்கமும்

“தந்தை செல்வா” என்று வடக்கில் மட்டும் அல்ல கிழக்கு மாகாண மக்களாலும் அன்பாகவும் மரியாதை உணர்வுடனும் அழைக்கப்படுபவர் இந்த செல்வநாயகம் ஆவார்.
read more...

Sunday, 20 June 2010

ஏமாற்றப்பட்ட தமிழர்களும் ஏமாற்றும் துரோகிகளும்

தமிழர் நம் வரலாறு சொல்லும் கதைகள் பகுதி 15

பகுதி 14  பார்க்க கிளிக்கவும்.
இந்த குறுகிய நோக்கிலான மொழி வெறிப்பிரச்சாரமே சின்னத்தனமான சிங்கள எதிர்ப்பாகவும் சிறி எதிர்ப்பாகவும் மாறியது. இதனு}டாக தமிழரசுக் கட்சியினர் வடகிழக்கு எங்கும் பெரும் கலவர சூழ்நிலையொன்றை தோற்றுவித்தனர்.
read more...

Saturday, 19 June 2010

இன்றைய கல்வி சமுகத்தின் நகைப்புக்கிடமான செயற்பாடுகள்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வந்தாறுமூலையில் அமைந்திருக்கின்ற மிகப் பிரபல்யமான கிழக்கு பல்கலைக்கழக விடுதியிலே 17.06.2010 அன்று இரவு இரு மாணவ குழுக்களிடையே ஏற்பட்ட தகராறு மிகவும் பூதாகரமாக வெடித்துள்ளது.
read more...

Friday, 18 June 2010

தமிழர் நம் வரலாறு சொல்லும் கதைகள் பகுதி 14

முழு இலங்கையிலும் மொழிப்பிரச்சனையை அடிப்படையாகக் கொண்ட பிரச்சாரங்களே 1956 ஆம் ஆண்டுத் தேர்தலில் முன்நிலை வகித்தது. இதன்காரணமாக சிங்கள மொழி உணர்வின் அடிப்படையில் அணிதிரட்டப்பட்ட மக்களையும்
read more...

Wednesday, 16 June 2010

தமிழர்களை ஏமாற்றிய துரோகிகள்

தமிழர் நம் வரலாறு சொல்லும் கதைகள் பகுதி 13

இதுபோன்ற பலவகைகளிலும் பௌத்தம் குறித்தும் சிங்கள மொழி குறித்தும் தீவிரமாக செயற்பட்டுவந்த தேசிய மரபுசார்ந்த பலதரப்பட்டோரின் ஒன்றிணைப்பில் “லங்கா ஜாதிக குருசங்கமய” எனும் மதவாதிகளின் அமைப்பு களத்தில் இறங்கியது.
read more...

Tuesday, 15 June 2010

பிரபல இந்து ஆலயத்தில் பௌத்தம் சார்ந்த கலை நிகழ்வுகள்.

ஆலயங்களிலே திருவிழாக்கள் நடைபெறுகின்றபோது தமிழர் நம் கலை , கலாசாரங்களை பிரதிபலிக்கின்ற பல களை நிகழ்வுகள் இடம் பெறுகின்றன. திருவிழாக் காலங்களிலாவது எமது மறைந்து வருகின்ற கலை, கலாசாரங்கள் புத்துயிர் பெறுகின்றன என்று சந்தோசப் பட்டுக்கொண்டிருக்கும் போது எமது கலை, கலாசாரங்களை பாதிக்கின்ற நிகழ்வுகளும் இடம் பெறாமல்  இல்லை.
read more...

தமிழர் நம் வரலாறு சொல்லும் கதைகள் பகுதி - 12

1956ஆம் ஆண்டு சிங்கள அரசகரும மொழிச்சட்டம்.

1920களில் இருந்து இலங்கையில் உருவான சுயபாஷைகளுக்கான இயக்கம் காலப்போக்கில் ஏற்பட்ட இன, மத, பொருளாதார, கலாச்சார நெருக்கடிகளினாலும், தேர்தல் அரசியலை நோக்கிய தமிழ் – சிங்கள அரசியல்வாதிகளின் குறுகிய நலன்களினாலும் உருமாறி சிங்கள அரசகருமமொழிச்சட்டம் ஆக குறுக்கப்பட்டு இறுதியில் (1956இல்) நிறைவேற்றப்பட்டது.
read more...

Monday, 14 June 2010

விஜய் இலங்கை தமிழரை வைத்து அரசியல் நடாத்துவாரா?

read more...

Sunday, 13 June 2010

தமிழர் பாரம்பரிய விளையாட்டுக்களில் சிறப்பான இடத்தினைப் பெறும் கொம்புமுறி விளையாட்டு... .

எனது முன்னைய இடுகை மீண்டும் உங்களுக்காக

தமிழர் நம்  கலை, கலாச்சாரங்கள் மறைந்துவரும் நிலையில். நான் நீண்ட நாட்களாக அறிய ஆவலாக இருந்த விடயம் ஒன்றுக்கு முற்று முழுதான விளக்கம் கிடைத்திருக்கின்றது. அது வேறு ஒன்றுமல்ல. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்றான கொம்புமுறி விளையாட்டு பற்றிய பல்வேறு விடயங்களை நேற்று அறிந்து கொள்ள முடிந்தது.
read more...

Saturday, 12 June 2010

தமிழர் நம் வரலாறு சொல்லும் கதைகள் பகுதி - 11

ஆங்கிலேய ஆட்சியாளர்கள் இலங்கையில் அதிகமான நிர்வாக உத்தியோகங்களை இலங்கையருக்கே கொடுத்த பின்னரும்கூட ஆங்கில அறிவுபெற்ற மத்தியதர வர்க்கத்தை சேர்ந்தவர்களிடம் மட்டுமே அவ்வுத்தியோகங்கள் முடக்கப்பட்டிருந்தது. இந்நிலை தொடரக்காரணம் ஆங்கிலமே அரசகரும மொழியாக தொடர்ந்தும் இருந்து வந்தமையாகும்.
read more...

தூக்கம் விற்ற காசுகள்

நண்பர் சசி எனக்கு மின்னஞ்சலில் ஒரு கவிதை அனுப்பி இருந்தார். எனக்கு பிடித்திருந்தது உங்களோடும் பகிர்ந்து கொள்கின்றேன்.


இந்தக் கவிதை 'ரசிகவ் ஞானியார்' எழுதியது.
read more...

Friday, 11 June 2010

திருந்துவார்களா இந்த ஜென்மங்கள்?

அண்மையில் நான் ஒரு வங்கிக்கு சென்றிருந்தேன். அங்கே என்னுடன் படித்த ஒரு நண்பி வேலை செய்கின்றார்.
read more...

Thursday, 10 June 2010

தமிழர் நம் வரலாறு சொல்லும் கதைகள் பகுதி - 10

தமிழரசுக் கட்சி
தமிழர் நெஞ்சங்களில் அழியாத இடம்பிடித்த பெருந்தலைவர் தந்தை செல்வா 1952 ஆம் ஆண்டுத் தேர்தலில் ஏன் தோற்கடிக்கப்பட்டார்?
இக்கட்சியானது ஆங்கிலத்தில் பெடரல் பாட்டி என பதிவு செய்யப்பட்டிருந்தாலும் (அதாவது சமஸ்டிக்கட்சி எனும் அர்த்தத்தில்) வடகிழக்கு பகுதிகளில் இது “தமிழரசுக்கட்சி”யெனும் பிரச்சார நோக்கிலான பெயர்கொண்டே இக்கட்சியினரால் அறிமுகப்படுத்தப்பட்டது.

read more...

Wednesday, 9 June 2010

இனி என்ன... கொண்டாட்டம்தான்

read more...

Tuesday, 8 June 2010

இதெல்லாம் ஒரு பதிவுலக அரசியல்?

இன்று பதிவுலகம் ஒரு போட்டி நிறைந்த ஒன்றாக மாறிவிட்டது.  போட்டி இருப்பது ஆரோக்கியமான விடயமே.  ஆனால் இன்றைய நிலையைப் பார்க்கின்றபோது ஒரு சிலர் பதிவுலகை சீரழித்துக் கொண்டிருப்பது வருத்தப்படவேண்டிய விடயமே.
read more...

Sunday, 6 June 2010

தமிழர் நம் வரலாறு சொல்லும் கதைகள் பகுதி - 9

ஒரு துரோக வரலாற்றின் தொடர்ச்சியில் இலங்கைத் தமிழ் காங்கிரஸ் வகித்த பங்கு.

தமிழீழம் என்கின்ற கிழக்கு மாகாண மக்களுக்கு முன்பின் சம்பந்தமற்ற நச்சுக்கொடியை அவர்கள் மீது ஆழமாகப் பதித்து படரவிட்டவர் ஜீ.ஜீ.பொன்னம்பலம் என்பவராவர்.

read more...

Monday, 31 May 2010

தமிழர் நம் வரலாறு சொல்லும் கதைகள் பகுதி -8

1920 ம் ஆண்டுவரை அரசியல் அதிகாரம் குறிப்பிட்ட ஒரு சிலரிடையே மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. எனினும் 1920 ன் பின்னர் ஏற்பட்ட மனிங் சீர்திருத்தம் கொண்டுவந்த மாற்றங்கள் இனவாரியான ஒதுக்கீட்டை மக்கள் பிரதிநிதித்துவத்திற்கு வழங்கியது. அதனு}டாக அரசியல் உரிமைகள் பொதுமக்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது.

read more...

Sunday, 30 May 2010

விஜயுடன் போட்டி போடும் அஜித், சூர்யா, விக்ரம் யாருக்கு வெற்றி

திரையுலகத்திற்கு பதிவுலகம் வழங்கும் விருதுகள் 2010

read more...

தமிழர் நம் வரலாறு சொல்லும் கதைகள் பகுதி -7

யாழ்ப்பாணம்

read more...

Friday, 28 May 2010

தமிழர் நம் வரலாறு சொல்லும் கதைகள் பகுதி - 6

தமிழீழப் போராட்டம்
நமது நாட்டில் வாழும் சிறுபான்மை இனமான நாம் தமிழர்கள் எனும் வகையில் தனிநாடொன்றுக்கான கோரிக்கையை முன்வைத்து போராடி வந்தோம். இன்று அந்தக் கோரக்கை நம் கண்முன்னேயே பலமிழந்து நிற்கின்றது.

read more...

Thursday, 27 May 2010

தமிழர் நம் வரலாறு சொல்லும் கதைகள் பகுதி - 5

ஊ) காலனித்துவரின் வருகை

1505 ல் முதன் முதல் இலங்கையில் காலடி எடுத்து வைத்த போத்துகேயர் 1597ல் தான் கோட்டை ராச்சியத்தை தமது முழுக்கட்டுபாட்டில் கொண்டு வந்தனர். அதனை தொடர்ந்து 1619ல் யாழ்ப்பாண ராச்சியமும் போத்துகீசர் வசம் வீழ்ந்தது.
read more...

Wednesday, 26 May 2010

தமிழர் நம் வரலாறு சொல்லும் கதைகள் பகுதி - 4

read more...

Tuesday, 25 May 2010

தமிழர் நம் வரலாறு சொல்லும் கதைகள் பகுதி - 3

read more...

Monday, 24 May 2010

ஏதோ செய்கிறாய்

உன்னால்
 கவிஞனாக்கப்பட்டவன் நான்
என் உளறல்களையும்
கிறுக்கல்களையும்
கவிதை என்று
முகவரி கொடுத்து
கவிஞன் எனும்
மகுடம் சூட்டியவள் நீ...
read more...

தமிழர் நம் வரலாறு சொல்லும் கதைகள் பகுதி - 2

2) கிழக்கு மாகாணம்

அ) புவியியல் அமைப்பு

இலங்கையின் கிழக்கு கரையோரமாக அமைந்துள்ளது இந்த மாகாணம். மத்திய மலைப்பகுதியில் ஆரம்பித்து வங்க கடலில் பாயும் இலங்கையின் மிகப்பெரும் நதியான மகாவலி கங்கை இம்மாகாணத்தை இரு பகுதிகளாக கூறாக்கி கடலில் கலக்கிறது.
read more...

Sunday, 23 May 2010

தமிழர் நம் வரலாறு சொல்லும் கதைகள் பகுதி - 1

தமிழர்களுக்கென்று  தனித்துவமான வரலாறுகள் இருக்கின்றன. அந்த வரலாறுகள் மறுக்கப்படவோ, மறைக்கப்படவோ முடியாதவை, ஒவ்வொரு கதைகளை சொல்வார்கள். இருந்தபோதும் எது உண்மை, எது  பொய் என்று நாம் தெரிந்து கொள்ள வேண்டியவர்களாக இருக்கின்றோம். 

தமிழர் நம் வரலாறு கூறும் கதைகள் எனும் இந்த தொடர் மூலம் நமது வரலாறுகளைக் கூறுகின்ற ஒரு தொடராகவே அமைய இருக்கின்றது.  என் கருத்துக்களோடு நீங்கள் உடன்படவில்லையாயின் தாரளமாக உங்கள் கருத்துக்களை சொல்லலாம்.

வேறொரு வலைப் பதிவிலே எழுதப்படுகின்ற விடயங்களை நான் தொகுத்துத் தருகிறேன் தமிழர் நம் வரலாறுகளின் உண்மைத் தன்மை வெளி வர வேண்டும் என்பதற்காக. உங்களது மாற்றுக் கருத்துக்களையும் எதிர் பார்க்கின்றேன். மாற்றுக் கருத்துக்களும்  முட்டி மோதுகின்ற போதுதான் உண்மைகள் வெளிவரும்.

1) அறிமுகம்

அரசியல் சூழல் பற்றிய பொதுநோக்கு பிறக்கின்ற ஒவ்வொரு மனிதனும் வாழ்வதற்காகவே பிறக்கின்றான். ஆனால் இவ்வுலகில் எந்த ஒரு மனிதனும் சகல உரிமைகளுடனும் சுதந்திரமாகவும் வாழமுடிகிறதா? வாழுகின்ற ஒவ்வொரு நொடிப்பொழுதும் வாழ்வதற்கான போராட்டங்களிலேயே அவனது காலம் கழிகின்றதே? அதனால்தான் இந்த மனித குலத்தின் வரலாறு என்பதே போராட்டங்களின் வரலாறாக……. புரட்சிகளின் வரலாறாக…… நிரம்பிக் கிடக்கிறது.

உலகின் வரலாற்றினுடைய ஒவ்வொரு போராட்டமும், ஒவ்வொரு புரட்சியும் தமக்கான சுதந்திரத்தை கொண்டுவரும் என்று எல்லா மனிதர்களும் காலம் காலமாக நம்பிக்கிடக்கிறார்கள். ஆனால் அவர்கள் ஏமாற்றப்படுவது மட்டுமே நடந்துவருகிறது.

அதேவேளை விடுதலையை கொண்டுவருவதாக வீறு கொண்டு எழுபவர்கள் அதிகாரங்கள் தம்மிடம் வந்ததும் அவரவர்களே புதிய எசமானர்களாகவும் வலம் வரத் தொடங்குகிறார்கள். ஆனாலும் அவர்களின் புதிய அரியாசனங்களும் மக்களின் கோபகனலிலிருந்து தப்பமுடியாது போகும் என்பதையும் வரலாறுகள் நமக்கு நிறையவே கற்றுத் தந்திருக்கின்றன.

நமது நாட்டின் கடந்த நூற்றாண்டின் இறுதிதசாப்தங்கள் மிக மோசமான முறையில் இனவாதம் கோலோச்சும் நாடாக இலங்கையை அடையாளப்படுத்தி வந்திருக்கின்றன. இலங்கை அரசினது பேரினவாத போக்கும் தமிழர்தம் தேசியவாத போக்கும் ஜனநாயக உரிமைகளை குழிதோண்டி புதைப்பதில் ஒன்றிலிருந்து ஒன்று சளைத்தவை அல்ல என்பதை நிரூபித்திருக்கின்றன.பெரும்பான்மை சிங்கள அரசு சிறுபான்மைத் தமிழர்களை ஓரவஞ்சகமாக நடத்துகிறது என்பதற்காக உரிமைக்குரல் எழுப்பிய தமிழர்தம் தேசியவாதம் ஆயுதபோராட்டத்தை முன்மொழிந்தது. தமிழ்பேசும் இருவேறு மாகாணங்களாய் இருந்த வடக்கும் கிழக்கும் இணைந்து இந்த ஆயுதபோராட்டத்தை நடாத்தியும் வந்தன.

இந்த ஆயுத போராட்டத்தின் களபலிகளின் தொடக்கமாக கருதக்கூடியது 1974.06.05எனும் நாள். இலங்கை அரச படைகளிடம் பிடிபடகூடாது என்பதற்காக உரும்பிராய் பொன்.சிவகுமாரன் எனும் இளைஞன் தானே தன்னுயிரை மாய்த்துக்கொண்ட அன்று தொடங்கி வைக்கப்பட்டது.

அன்று ஆரம்பித்த இழப்பு ஆனது ஏறக்குறைய போராளிகளாக 27000 இளம் உயிர்களையும் பொதுமக்கள் 70000 பேருமாக தமிழர் தரப்பில் மட்டும் மொத்தம் ஒரு இலட்சத்திற்கு அதிகமானோரை பலிகொண்டுள்ளது.கிட்டத்தட்ட 30 ஆண்டுகால ஆயுத போராட்டத்தில் மிக முக்கியமான இராணுவ பலம் வாய்ந்த அமைப்புத்தான் தமிழீழ விடுதலை புலிகள். இந்த இயக்கத்தினது இராணுவ தந்திரோபாயங்களின் முதுகெலும்பாகவும் அமைப்பின் இரண்டாம் தலைமையாகவும் இருபத்தியொரு வருடகாலம் களத்தில் நின்றவர் தான் கேர்ணல் கருணா அம்மான் என அழைக்கப்படும் முரளிதரன் ஆகும்.இவர் 2004.03.02 ம் திகதி எடுத்த பாரிய முடிவானது முழுமொத்த போராட்டத்தையே ஒரு உலுப்பு உலுக்கியது.

ஐம்பது வருடங்களுக்கு மேல் பழைமை வாய்ந்த “வட-கிழக்கு இணைந்த தாயகம்” என்கின்ற தமிழ் அரசியலின் உயிர் மூச்சு கோஷம் தகர்த்தெறியப்பட்டது. இதுவே எதிர்கால இலங்கையின் அரசியல் போக்கிலும் பென்னம் பெரிய மாறுதல் ஒன்றிற்கு வழிகோலியுள்ளது.மட்டக்களப்பு-அம்பாறை பிரதேசங்கள் இனிமேல் வடக்கு தலைமைக்கு கட்டுப்படாது என்று அதுவரை தன்மூச்சையே தமிழீழத்திற்கு அர்ப்பணித்து வாழ்நாள் முழுக்க உழைத்த ஒரு மூத்ததளபதி விசுவாசமான தளபதி அறிவிப்பதென்பது பலருக்கும் அதிர்ச்சியானதொன்று தான்.

அதேநேரம் கிழக்குவாழ் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் அது அதிர்ச்சியுடன் மகிழ்ச்சியையும்சேர்த்தே கொடுத்திருந்ததென்பதும் நாம் கண்ணால் கண்டதே.ஏன் இப்படி நடந்தது? இது சரியானதா? எப்படி இப்படியொரு வெடிப்புக்கான நியாயங்கள் கவனிக்கப்படாமல் போனது? வெடிப்பின் பின் இதை எப்படி அணுகியிருக்க வேண்டும்? இதன் தொடர்ச்சி எங்கேபோய் முடியும்? என்கின்ற கேள்விகள் நம் ஒவ்வொருவர் மனதுள்ளும் மட்டுமல்ல இந்த அரசியலின் போக்கில் அகப்பட்டு தவிக்கின்ற பலரது மனதிலும் எழுந்துள்ள கேள்விகள் தான். ஆனால் இதுபோன்ற அரசியல் மாற்றங்களால் விரும்பியோ விரும்பாமலோ பாதிக்கப்படுகின்ற சாதாரண வட, கிழக்கு பிரஜைகளிடம் இவற்றுக்கான பதில்கள் கதைகதையாய் உள்ளன. ஆனால் அதற்காக வாய் திறத்தல்கள் என்பது எழுதாத சட்டங்களாக தடைசெய்யப்பட்டுள்ளன.
read more...

Thursday, 20 May 2010

கலையுலக, திரையுலக, பதிவுலக நண்பர்களே கொஞ்சம் நில்லுங்கள்

இது என்னுடைய 200 வது பதிவு இது என்னுடைய 200௦௦ வது பதிவாக இருந்தாலும் நான் எதனையும் சாதித்து விடவில்லை. வலையுலகுக்கு வந்து நிறையவே படித்திருக்கின்றேன். நல்ல பல நண்பர்கள் கிடைத்திருக்கின்றனர். மிக மிக மோசமான வார்த்தைகளால் அனானிகளால் அதிகமாக திட்டு வங்கி இருக்கின்றேன். இவ்வாறு நான் வலையுலகுக்கு வந்து பலவற்றை சம்பாதித்திருக்கின்றேன்.

என்னுடைய கருத்துக்களை வெளியிடுகின்ற ஒரு ஊடகமாகவே நான் வலைப் பதிவைப் பயன்படுத்துகின்றேன். தவறுகளை சுட்டிக்காட்டவும் உண்மைகளை வெளியிடவும் நான் ஒரு போதும் தயங்குவதில்லை.

என் கருத்துக்கள் தவறானவைகளாக இருந்தால் சுட்டிக்காட்டுகின்றபோது திருத்திக் கொள்ளும் மனப் பான்மையும் கொண்டவன் நான்.

நான் வலையுலகில் ஏதோ கிறுக்கியிருக்கிறேன். எனக்கு உற்சாகமூட்டிய வலையுலக நண்பர்கள், அனானிகள் ( என்னை அதிகம் எழுதத் தூண்டியவர்கள்) திரட்டிகள் குறிப்பாக தமிழிஷ், தமிழ்மணம், தமிழ் 10 போன்ற திரட்டிகளுக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். சில நாட்களாக என் இடுகைகளை இணைத்து என் வலைப்பதிவுக்கு அதிகமான பார்வையாளர்களை அனுப்பியிறுக்கின்ர தினமணிக்கும் எனது நன்றிகள் தொடர்ந்தும் பல  பதிவுகளோடு உங்களை சந்திப்பேன் உங்கள் உங்கள் ஆதரவு என்றும் இருக்கும் என்ற நம்பிக்கையோடு.

குறும்படம் தயாரிக்க நாம் தயார். நீங்கள் தயாரா?
என்னுடைய நீண்டநாள் ஆசை எமது கலைஞர்களைக் கொண்டு ஒரு குறும் படம் தயாரிக்க வேண்டும் என்பதே.. பல கலைஞர்கள் வாய்ப்புக்கள் கிடைக்காமல் இருக்கின்றனர் அவர்களை வெளி உலகுக்கு கொண்டு வர வேண்டும் என்பதே எனது ஆசை.

ஆனால் பல துறை சார்ந்த கலைஞர்கள் இருந்தும் ஒரு குறும்படம் தயாரிக்க வேண்டுமாக இருந்தால் முக்கியமாக தேவைப்படுகின்ற நிதி, தொழிநுட்பம் போன்ற பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க முடியாமல்தான் கலைஞர்கள் பின் வாங்குகின்றனர்.

அது ஒரு புறமிருக்க என்னுடைய நண்பர்கள் சிலர் தடைகளையும் தாண்டி நாம் குறும்படம் ஒன்றினை தயாரிக்க வேண்டும் என்று முடிவெடுத்திருக்கின்றனர்.

இதற்காக இலங்கை மற்றும் வெளிநாட்டுகளில் இருக்கின்ற ஆர்வமுடைய பல துறை சார்ந்தவர்களின் ஆலோசனைகளையும் ஒத்துழைப்புக்களையும்  நாம் எதிர்பார்க்கின்றோம்.  

தொடர்புகளுக்கு shanthruslbc@gmail.com
read more...

யாழ்தேவியின் கடிதமும் என் பதிலும்

யாழ்தேவி திரட்டி தொடர்பாக நான் இரண்டு இடுகைகளை இட்டிருந்தேன். அவற்றுக்கு விளக்கமளித்து யாழ்தேவி நிர்வாகத்திடமிருந்து சற்று நேரத்துக்கு முன்னர் எனக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டிருக்கின்றது அந்த மின்னஞ்சலையும் எனது விளக்கத்தையும் தருகிறேன்.

வணக்கம் சந்ரு….

யாழ்தேவி இணையம் தொடர்பாக தங்களுடைய குற்றச்சாட்டுக்கள் மற்றும் விமர்சனங்களை அண்மைக்காலத்தில் காணக் கிடைத்தது. மகிழ்ச்சி.

யாழ்தேவியில் தாங்கள் நட்சத்திரமாக அறிவிக்கப்பட்டு குறைந்தது 4 மாதங்களாவது சென்றிருக்கும். ஆனால், இன்னும் தங்களை தினக்குரல் பத்திரிகையில் அறிமுகப்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டை தாங்கள், பதிவர்கள் உள்ளிட்ட பலரிடமும் முன்வைத்துள்ளீர்கள். அது தொடர்பில் நாங்கள் அறிவோம்.

யாழ்தேவியில் நட்சத்திரமாக அறிமுகமாகும் பதிவர் அடுத்த வாரம் தினக்குரல் பத்திரிகையில் அறிமுகப்படுத்தப்படுகிறார். அதற்கு அந்த நட்சத்திரப்பதிவர் நட்சத்திர வாரத்திலேயே ( முடிவடைவதற்கு இரண்டு நாட்களுக்கு முன் அதாவது குறைந்தது சனிக்கிழமைக்கு முன்) தங்களுடைய விபரங்களை அனுப்பி வைக்க வேண்டும். அப்பொழுது தான் தினக்குரல் பத்திரிகை ஆசிரிய பீடத்துக்கு நட்சத்திரத்தின் விபரங்களை அனுப்ப முடியும். (தினக்குரல் பத்திரிகைக்கு குறைந்தது 6 நாட்களுக்கு முன்னர் விபரங்களை அனுப்ப வேண்டும்). இவைதான் நட்சத்திர வாரத்தில் கடைப்பிடிக்கப்படும் அணுகுமுறை.

தாங்கள் நட்சத்திரமாக அறிவிக்கப்பட்டதும் விபரங்களையும், படத்தினையும் அனுப்புமாறு கோரியிருந்தோம். ஆனால், நீங்கள் அனுப்பவில்லை. அதுதவிரவும், பதிவர் சந்திப்பொன்றில் தங்களை நேரில் சந்தித்த நான் (புருஜோத்தமன் தங்கமயில்) விபரங்களை சீக்கிரத்திலேயே அனுப்புமாறு கோரியிருந்தேன். அப்பொழுதும் நாட்கள் சில கடந்து விட்ட நிலையிலேயே தங்களுடைய விபரங்களை அனுப்பியிருந்தீர்கள். அப்பொழுது தினக்குரல் பத்திரிகைக்கு நட்சத்திரத்தின் விபரங்களை அனுப்பவேண்டிய காலக்கெடு முடிந்து விட்டது. அதனாலேயே, யாழ்தேவியில் ஆரம்ப காலத்தில் நட்சத்திரமாக இருந்த பதிவர் ஒருவர் அறிமுகப்படுத்தப்பட்டார்.

தற்பொழுதும், சில நட்சத்திர பதிவர்கள் விபரங்களை காலம் தாழ்த்தி அனுப்புவதால் பழைய நட்சத்திரங்களை தினக்குரலில் அறிமுகப்படுத்தி வருகிறோம். அவர்கள் தினக்குரலில் அறிமுகமாகியிருக்கவில்லை. அவை, ஒரு கிரமத்திலேயே நடைபெறுகிறது. அப்படியே தங்களுடைய விபரங்களும் எம்முடைய சேமிப்பில் இருக்கிறது. காலக் கிரமத்தில் தாங்களும் அறிமுகப்படுத்தப்படுவீர்கள். நீங்கள் யாழ்தேவியில் இணைத்தாலும், இணைக்காவிட்டாலும் விமர்சனங்கள் மற்றும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தாலும் அது நடக்கும்.

அத்துடன், தங்களுடைய பதிவுகளை இணைக்க முடியவில்லை என்கிற குற்றச்சாட்டு தொடர்பில் சில தொழிநுட்ப காரணங்கள் இருக்கலாம். அது தொடர்கில் எங்களுக்கு நீங்கள் எந்த தருணத்திலும் அறியத்தரவில்லை. அதாவது, யாழ்தேவி இணையத்தில் பக்க வடிவமைப்பு எமது வடிவமைப்பாளர்களினால் மீளமைக்கப்பட்டது. அதனால், பல பதிவர்களின் பதிவுகளை இணைக்க முடியாமல் இருந்தது. அவர்கள் எமக்கு அறிவுறுத்தியதன் பெயரில் அது திருத்தப்பட்டது. தங்களுடைய பதிவுகளை இணைக்க முடியவில்லை என்று தாங்கள் யாழ்தேவிக்கு அறிவிக்கவேயில்லை. (ஆனால், யாழ்தேவியில் நீங்கள் தற்போது பதிவுகளை இணைப்பதில்லை என்று சிலரிடம் கூறிய விடயமும் எம் காதுகளுக்கு கிடைத்தது. அது தொடர்பில் நாங்கள் அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை. ஏனெனில், சில முறையற்ற வார்த்தை மற்றும் குற்றச்சாட்டுக்களுக்கு நாங்கள் பதிலளிப்பதில்லை.)

யாழ்தேவி இணையம் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து தொடர்பிலிருந்த சந்ரூ என்கிற பதிவர், தன்னுடைய அறிமுகம் தினக்குரலில் ஏன் வரவில்லை என்று எங்களிடம் நேரடியாகவோ அல்லது மின்னஞ்சலினூடாகவே கேட்டிருக்கலாம். அதுதானே சிறந்த பண்பு. அதை விடுத்து எங்களின் மீது நியாயமற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்.

யாழ்தேவி இணையம் தொடர்ந்தும் தன்னுடைய செயற்பாடுகளை முன்னெடுக்கும். விமர்சனங்களும், குற்றச்சாட்டுக்களும் எம்மை வளப்படுத்த உதவினால் அதனை நாங்கள் உள்வாங்கத் தயாராகவே இருக்கிறோம்.

(கடந்த இரு வாரங்களாக ஒரு பதிவரே நட்சத்திரமாக அறிவிக்கப்பட்டதற்கு யாழ்தேவியின் சில மேம்படுத்தல் வேலைகளே காரணமாக இருந்தது. அது, யாழ்தேவியின் நிர்வாகிகள் மற்றும் ஆசிரியபீடம் கலந்தாலோசித்து எடுத்த முடிவே)

அரசியல் சமூக இலக்குகளை நோக்கி பயணிக்கிற பதிவர்களையும் யாழ்தேவி தொடர்ந்தும் இணைத்து வருகிறது. ஒவ்வொரு தனி நபரின் அரசியல் மற்றும் சமூக விருப்பு வெறுப்புக்களில் யாழ்தேவி தலையிடுவதில்லை.

(இந்தக் கடிதத்தை தங்களுடைய வலைப்பக்கத்தில் வெளியிட கோருகிறோம். தங்களுடன் உரையாடுவதற்காக அலைபேசியில் அழைத்தபோதும் அது சாத்தியமாகவில்லை)

நன்றி,

புருஜோத்தமன் தங்கமயில்.
யாழ்தேவி இணையம்.

--
PURUJOTHTHAMAN THANGAMAYL (PRAVEEN)
Editor,
WWW.YAALDEVI.COM
+94773236285

நான் நட்சத்திரமாக அறிவிக்கப்பட்டு பல மாதங்கள் கடந்தும் இன்னும் தினக்குரலில் பிரசுரிக்கப்படாமைக்கான காரணம் நான் எனது விபரங்களை காலம் தாழ்த்தி அனுப்பியதாக சொல்லப்பட்டிருக்கின்றது. இது தொடர்பாக என்னுடைய பதிவுகளிலே சொல்லி இருக்கின்றேன்.

நான் நட்சத்திரமாக தெரிவு செய்யப்படும் நாளுக்கு ஓரிரு நாட்களுக்கு முன்னரே நான் நட்சத்திரமாக தெரிவு செய்யப்படுகிறேன் என்று மின்னஞ்சல் அனுப்பப் பட்டிருக்கின்றது. அந்தக் காலப்பகுதி நான் பதிவேளுதுவதிளிருந்து விலகி இருந்த காலம் ஏன் மின்னஞ்சல்களையும் பார்வையிட முடியாத நிலையில் இருந்தேன்.

நான் நட்சத்திரமாக தெரிவு செய்யப்பட்ட விடயம் எனக்கு தெரியாது. நான் நட்சத்திரமாக தெரிவு செய்யப்பட்ட அன்று காலையில் தங்க முகுந்தன் தொலைபேசியில் அழைத்து நட்சத்திரமானதுக்கு வாழ்த்த்துக்கள் என்றபோதுதான் விபரங்களை தங்க முகுந்தனிடமிருந்து அறிந்து கொண்டேன்.

நான் அந்தக் காலப்பகுதியில் வேறு இடத்தில் இருந்ததால் பதிவிட முடியாத நிலையில் இருந்தேன். பதிவர்களைப் பொறுத்தவரை பதிவு இடுதலோ   முழு நேரத் தொழிலல்ல. எப்பொழுதும் வலைப் பதிவோடு இருக்கப்போவதில்லை. பல நாட்களுக்கு இணையப் பக்கமோ, வலைப்பதிவு பக்கமோ வரமுடியாத நிலை இருக்கும்.

நட்சத்திரமாக தெரிவு செய்யப்படுகின்ற பதிவருக்கு ஒரு வாரத்துக்கு முன்னரோ அதற்கு முன்னரோ தெரியப்படுத்த வேண்டும் என்று யாழ்தேவி நிரவாகத்திடம் கேட்டு பல பதிவர்கள் ஆரம்ப நாட்களிலே பதிவிட்டிருக்கின்றனர்.

ஓரிரு நாட்களுக்கு முன்னர் அறிவிக்கின்றபோது பதிவர்கள் தங்களை ஆயத்தப் படுத்துவதிலே பல சிக்கல்கள் இருக்கின்றன. பதிவர்கள் முழுநேர தொழிலாக பதிவிடுதலை  செய்யவில்லை.

நட்சத்திரமாக நான் அறிவிக்கப்பட்ட காலத்தில் பல நாட்கள் நான் கொழும்பிலே இருக்க வேண்டிய கட்டாயம் இருந்தது அதனால் என்னால் உடனடியாக என்னைப் பற்றிய விபரங்களை அனுப்ப முடியவில்லை.  என்னால் இணையப் பக்கமே வர முடியாமல் இருந்தபோது நான் நட்சத்திரப் பதிவராக அறிவிக்கப்பட்டதை ஓரிரு வாரத்துக்கு முன்னர் தெரியப் படுத்தாதது தவறா? பல மாதங்கள் கடந்தும் ஏன் இன்னும் தினக்குரலில் பிரசுரிக்கவில்லை?

யாழ்தேவியில் பதிவுகளை இணைக்க முடியாமைக்கு காரணம் சில மேம் படுத்தல்களால் பல பதிவர்கள் இணைத்துக் கொள்வதிலே சிக்கல் இருப்பதாக மின்னஞ்சலிலே சொல்லப்பட்டிருக்கிறது. இந்த விடயங்களை பதிவர்களுக்கு தெரியப் படுத்தி இருக்கலாம்தானே. யாழ்தேவி தொடர்பிலே அந்த பதிவர்கள் சந்தேகப்படவேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது.

//(ஆனால், யாழ்தேவியில் நீங்கள் தற்போது பதிவுகளை இணைப்பதில்லை என்று சிலரிடம் கூறிய விடயமும் எம் காதுகளுக்கு கிடைத்தது. அது தொடர்பில் நாங்கள் அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை. ஏனெனில், சில முறையற்ற வார்த்தை மற்றும் குற்றச்சாட்டுக்களுக்கு நாங்கள் பதிலளிப்பதில்லை.) //

நான் எங்கேயும் எந்தப் பதிவரிடமும் முறையற்ற வார்த்தைப் பிரயோகத்தை மேட்கொள்ளவில்லை. நான் யாழ்தேவி தொடர்பிலே எவரிடமும் தவறாக கதைத்ததில்லை. எனக்கு தவறாக படுகின்றவைகளை பதிவிடுவேன். அதை விடுத்து எவரிடமும் பேசவேண்டிய அவசியமும் எனக்கில்லை.

சில பதிவர்கள் ஏன் யாழ்தேவியில் இணைப்பதில்லை என்று கேட்டபோது. நட்சத்திரமாக தெரிவு செய்யப்பட்டு பல மாதங்களாகியும் இதுவரை தினக்குரலில் பிரசுரிக்கவில்லை அதனால் நான் இணைப்பதில்லை என்று மட்டுமே சொல்லி இருக்கின்றேன். அதனைவிடுத்து தேவையற்ற வார்த்தைப் பிரயோகங்களை எங்கே பயன் படுத்தினேன் என்று சொல்லுங்கள். எந்த விடயத்துக்கும் தேவையற்ற வார்த்தைப் பிரயோகங்களை பயன் படுத்துவதில்லை.

நான் எனது முந்திய பதிவிலே சொல்லி இருந்தேன் ஏன் இரண்டு வாரங்கள் ஒருவர் நட்சத்திரமாக தெரிவு செய்யப்பட வேண்டும் என்று பல பதிவர்கள் இதுவரை நட்சத்திரமாக அறிமுகம் செய்யப்படாமல் இருக்கும்போது ஏன் ஒருவர் இரு வாரங்கள் நட்சத்திர பதிவராக இருக்க வேண்டும் இன்னொருவருக்கு இடம் கொடுக்கலாமே என்றுதான் சொல்லி இருக்கின்றேன். உங்கள் நிரவாகத்தின் முடிவுகளில் நான் தலையிட முடியாது.

முதலாவது பதிவர் சந்திப்புக்கு பின்னர் யாழ்தேவி தொடர்பாகா யாழ்தேவிக்கு எதிராக எழுதிய பதிவுகளுக்கு யாழ்தேவிக்கு அதரவாக கருத்துரையிட்டவர்களில் நானும் ஆனாலும் இலங்கைப் பதிவர்களின் திரட்டி என்று சொல்லிக்கொண்டு இலங்கைப் பதிவர்களை புறக்கணிப்பதை பார்த்துக்கொண்டு சும்மா இருந்துவிட முடியாது. நானும் ஒரு இலங்கைப் பதிவர் என்ற ரீதியில். இலங்கைப் பதிவர்கள் எனும்போது இலங்கையில் இருக்கின்ற அத்தனை பதிவர்களையும்தான்  குறிக்கும்.

எனது பதிவுகளை யாழ்தேவியில்  இணைக்க வேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை. இருந்தாலும் இலங்கை தமிழ் பதிவர்களின் திரட்டி என்று சொல்லிக்கொண்டு சில இலங்கைப் பதிவர்களை புறக்கணிக்கப் படுவதனையும் பார்த்துக்கொண்டிருக்கமுடியாது. நானும் ஒரு இலங்கைப் பதிவர் என்ற ரீதியில்.

இன்று காலை 08 .21 க்கு யாழ்தேவி நிர்வாகத்திடமிருந்து ஒரு  அழைப்பு வந்தது அந்த நிலையில் எனக்கு தொலைபேசியை பதிலளிக்க முடியாத நிலையில் இருந்தேன். அழைப்பு வரும்போது யாழ்தேவியின் தொலைபேசி அழைப்பு என்பது தெரியாது எப்போது அவர்களின் மின்னஞ்சல் முலம்தான் அறிந்தேன்.

யாழ்தேவி தொடர்பாக நான் இட்ட இடுகைகள்.

read more...

Wednesday, 19 May 2010

யாழ்தேவி இலங்கைப் பதிவர்களுக்கான திரட்டி அல்ல

இலங்கை வலைப்பதிவர்களின் பதிவுகளின் திரட்டி என்று சொல்லிக்கொண்டிருக்கின்ற யாழ்தேவி திரட்டி உண்மையாகவே இலங்கைப் பதிவர்களின் திரட்டியா? சில நடவடிக்கைகளைப் பார்க்கின்றபோது அது ஒரு சிலரின் நலனுக்காக செயற்படுகின்றது போன்று தெரிகின்றது.

இந்தத் திரட்ட்டியானது வாரம் ஒரு பதிவரை நட்சத்திரப்பதிவராக அறிமுகம் செய்து அடைத்த வாரத்தில் தினக்குரல் பத்திரிகையில் அப்பதிவர் தோழர்பாக அறிமுகம் செய்கின்றார்கள் இது வரவேற்கத்தக்க விடயமே.

இன்று இலங்கையைப் பொறுத்தவரை பல பதிவர்கள் இருக்கின்றார்கள். அவர்களில் பலர் எந்தத் திரட்டிகளிலுமே இணைப்பதில்லை அது வேறு விடயம். ஆனால் யாழ்தேவியில் பதிவு செய்யப்பட்டவர்கள் மட்டுமே நட்சத்திரமாக தெரிவு செய்யப்படுகின்றனர்.

யாழ்தேவியில் பதிவு செய்யப்பட்ட பதிவர்கள் அனைவரும் நட்சத்திரமாக தெரிவு செய்யப்பட்டுவிட்டனரா? இன்னும் எத்தனையோ பதிவர்கள் நட்சத்திரமாக பதிவு செய்யப் படாமல் இருக்கின்றனர்.

அது ஒரு புறமிருக்க சில பதிவர்கள் இரண்டு, மூன்று வாரங்கள் நட்சத்திரப் பதிவராக அறிமுகம் செய்யப்படுகின்றனர். இதற்கான காரணம் என்ன? பல பதிவர்கள்  இதுவரை தெரிவு செய்யப்படாமல் இருக்கின்றபோது ஒரு சிலருக்கு மாத்திரம் ஏன் இரண்டு ,மூன்று வாரங்கள் நட்சத்திரப் பதிவராக இருக்க வேண்டும்.

நான் நட்சத்திரமாக தெரிவு செய்யப்பட்டு பல மாதங்களாகியும் இன்னும் தினக்குரலில் அறிமுகம் செய்யப்படாமைக்கான காரணம் என்ன? இன்று எனது பதிவுகளை யாழ் தேவியில் இணைக்க முடியாமல் இருக்கின்றது ஏன் இந்த பாகுபாடு?  எனது பிரட்சினைகள் இங்கே

எனக்கு மட்டுமல் சிதறல்கள் ரமேஸ்க்கும் இதே நிலைதான அவரது வலைப்பதிவையும் யாழ்தேவியில் இணைக்க முடியாதுள்ளது. அவர் சில காலம் அரசியல் சார்ந்த பதிவுகளை இட்டார்.  அதன் பின்புதான் அவரால் பதிவுகளை இணைத்துக் கொள்ள முடியவில்லை.

யாழ்தேவியில் அரசியல் சார்ந்த பதிவர்களை இணைத்துக் கொள்வதில்லையா? அப்படியானால்  எத்தனையோ அரசியல் சார்ந்த பதிவர்கள் யாழ்தேவியில் இணைக்கப்பட்டிருக்கின்றார்களே?
read more...

Sunday, 16 May 2010

இன்னும் என்ன செய்யப் போகிறாய்

உன்னிடம் இருந்த -என்
இதயத்தைத் தூக்கி
எறிந்துவிட்டாய் இன்னும்
என்னிடம் வந்து சேரவில்லை
அலைமோதி திரிகின்றது
என் இதயம்.....


என்னிடம் இருந்த
உன் இதயத்தை - நான்
தரமறுத்தபோது
தட்டிப்பறித்துவிட்டாய்......


சொர்க்கம், நரகம்
இரண்டும் இருப்பதாக
அறிந்தேன் - பின்
உணர்ந்தேன் உன்னை
காதலித்ததனால்.....


அன்று உன்னைக்
காதலித்தபோது - நாம்
சொர்க்கத்தில் வாழ்கின்றோம்
என்று நீயே சொன்னாய்
நானும் சொர்க்கத்தில்
வாழ்வதாய் உணர்ந்தேன்....


இன்று என்னை - நீ
தூக்கி எறிந்தபோது
நரகத்தின் வேதனையில்
தவிக்கின்றேன்.....


இன்று என்னிடம்
மீதமிருப்பது - உன்
நினைவுகளைத்தவிர
வேறெதுவுமில்லை....


அன்று நீ என்னோடு
பேசிய இரவுகள்
குறுகியதென்று - அந்த
இரவுகளோடு நான்
கோபப்பட்டதுண்டு...


இன்று இரவுகளோ - உன்
நினைவுகளால் என்னை
வதைக்கின்றன - என்
துன்ப துயரங்களில்
சரி பாதி நீ என்றாய்
இன்று ??????????????


இன்றைய இரவுகளில்
என் கண்ணிரைத்
துடைத்து என்னைத்
தாலாட்டும் -என்
தலையணைக்கு தெரியும்
உன்னால் நான் படும்
நரக வேதனை....


இன்று உணர்ந்து
கொள்கின்றேன் - இது
உன் தவறல்ல
நான் ஏழையாய்
பிறந்ததுதான்
தவறென்று...
read more...

Saturday, 15 May 2010

போகிற போக்கில்

வறட்சியால் பாதிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்திலே கடும் வரட்சி நிலை காணப்படுகின்றது. பகல் நேரங்களில் விடுகளுக்குள்ளேயும் இருக்க முடியாத அளவில் வெயிலின் கொடுரம் இருக்கின்றது.

சிறு மழை கூட  இல்லாத நிலை காணப்படுகின்றன இதனால் அதிகமாக விவசாயிகளே பாதிக்கப்பட்டிருக்கின்றனர். கடும் வறட்சியின் காரணமாக விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டிருப்பதோடு மேட்டுநில பயிர்கள் பயிர்கள் மட்டுமல்லாது வேளாண்மையும் பாதிக்கப்பட்டிருக்கின்றது.

மேட்டு நிலப் பயிர்களைப் பொறுத்தவரை அதிகமான விவசாயிகளைக் கொண்ட களுதாவளை, களுஞ்வாசிகுடி, தேற்றாத்தீவு போன்ற பிரதேசங்களிலே இருக்கின்ற விவசாயக் குடும்பங்களே பாதிக்கப்பட்டிருக்கின்றன.

கடும் வறட்சியால் பயிர்களுக்குரிய நீரைப் பெருவதிலேயும் பல சிக்கல்களை எதிர் நோக்குகின்றனர். மழை இல்லாததாலும், கடும் வறட்சியின் காரணமாகவும் மரங்கள், புற்கள் போன்றன  அளிவடைந்திருப்பதனால் கால்நடைகளுக்குரிய உணவுகளைப் பெறுவதிலும் பல சிரமங்களை எதிர் நோக்குகின்றனர்.

அதிகரிக்கும் வீதிவிபத்துக்கள்
 இலங்கையிலே பரவலாக வீதி அபிவிருத்திகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு  வருகின்றன.   மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியும் மிக நீண்ட காலத்துக்குப் பின் துரிதமாக அபிவிருத்தி செய்யப்பட்டு இப்போது இறுதிக்க கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கின்றது.

இந்த வீதிகளில் இப்போது அதிகமான விபத்துக்கள் இடம்பெறுகின்றன. காரணம் வீதிகள் அகலமாகப்பட்டு சிறப்பாக செய்யப்பட்டிருப்பதனால் வாகன சாரதிகள் மிக அதிகமான வேகத்தில் வாகனங்களை ஒட்டி  செல்கின்றனர்.

அதேபோன்று தடங்கல்கள் அற்ற முறையிலே நேர்த்தியாக இருப்பதனால் வாகன சாரதிகள் போட்டி போட்டுக்கொண்டு ஓடுகின்றனர். இதனாலும் பல விபத்துக்கள் ஏற்படுகின்றன.

இன்னொரு புரத்திலே பாதசாரிகளைப் பொறுத்தவரை பாதையைக் கடப்பதற்கு இரு பக்கங்களையும் பார்க்கின்றபோது வாகனங்கள் நீண்ட தூரத்தில் வருவதனால் பாதையைக் கடக்க முற்படுகின்றனர். ஆனால் அதிக வேகத்தில் வந்த வாகனம் விரைவாக வந்து வாகனத்தின் வேகத்தை சடுதியாக கட்டுப் படுத்த முடியாமல் பல விபத்துக்கள் ஏற்பட்டிருக்கின்றன.
read more...

Friday, 14 May 2010

காலம் மாறிப் போச்சு

ஞாபகங்களை மீட்டுப்பார்க்கும்போது ஏன் அன்று போல் இன்று எதுவும் இல்லையே என்று தோன்றுகின்றது. இந்த நவின உலகில் எல்லாமே மாறிவருகின்றது. எல்லாமே மாறி வருகின்றது என்பதற்காக நாம் எல்லாவற்றையும் இழக்கமுடியாது எமது கலை, கலாச்சார, பாராம் பரியங்களை மறக்க முடியாது.

என்னடா இவன் கலை, கலை என்றே பேசிக்கொண்டு இருக்கிறான் இன்று நினைக்கிறீங்களா. கலைகளில் அதிக நாட்டம் அத்தோடு கலைகளோடு பின்னிப்பிணைந்த கிராமிய சூழலில் வளர்ந்தவன். அதனால் கலைகளில் அதிக நாட்டம். மறைந்து வரும் கலைகள் பற்றி சிந்தித்தபோது எனது கடந்தகால நினைவுகள் என் கண்முன்னே வந்தது. அதை உங்களோடு பகிர்ந்து கொள்ளலாமே இன்று நினைக்கிறேன்....

அன்று கலைகளோடு மக்கள் பின்னிப்பிணைந்து வாழ்ந்தார்கள் இன்று நிலை என்ன? இவற்றுக்கு பல காரணங்கள் இருந்தாலும். நம் கலைகளை வளர்க்கவேண்டியது நம்ம கடமை அல்லவா.

எனக்கு வயது 5 இருக்கும் அன்று நடந்த அந்த பசுமையான நினைவுகளை இன்று மீட்டு பார்க்கும் பொது எத்தனையோ நினைவுகள் கண் முன்னே. என் தந்தை கலைகளிலே ஆர்வம் மிக்கவர். தமிழர்களோடு பின்னிப்பினைந்திருந்த கலைகளில் ஒன்றான கூத்து ஆடுவதிலே அதித ஈடுபாடு கொண்டவர். பல கூத்துக்களை ஆடி இருக்கிறார்.


கூத்து ஆரம்பித்தாலே கிராமப்புறங்களே விழாக்கோலம் பூண்டு இருக்கும். கூத்து பழகி சதங்கை கட்டி அரங்கேற்றம் செய்யும் வரை, இரண்டு, மூன்று மாதங்கள் செல்லும் தினமும் மாலை நேரத்தில் ஆரம்பித்து இரவு 11,12 மணிக்கே நிறைவு பெறும் கூத்து பழகுவதை பார்ப்பதற்கு கிராமத்தில் இருக்கின்ற எல்லோரும் கூத்து இடம் பெறும் இடத்துக்கு வந்து விடுவார்கள். வட்டமான ஒரு களரியிலே கூத்து இடம் பெறும் மின்சார வசதி இருந்தாலும் மின்னொளி பயன் படுத்தமாட்டார்கள் மரபினை மாற்ற விரும்பமாட்டார்கள்.

நெறியாள்கை செய்பவர், அண்ணாவியார் பக்கப்பாட்டு படிப்பவர்கள் இப்படி ஒரு பட்டாளமே களரியை சுற்றி இருப்பார்கள். கிராமத்திலே இருக்கின்ற மக்கள் அனைவரும் ஆவலோடு கூத்தினை கண்டு கழித்து கொண்டு இருப்பார்கள். எமது புராண இதிகாசங்களை பற்றிய கதைகளை மையமாக வைத்து கூத்துக்கள் ஆடப்படும். கூத்திலே வடமோடி, தென்மோடி என்று இரு வகை உள்ள போதிலும் மட்டக்களப்பை பொறுத்தவரை தென்மோடி நாட்டுக்குத்தே பிரசித்தி பெற்றது.

இப்பொழுது கூத்துக்களை காண முடியாமல் இருக்கின்றது. கடந்த எட்டு வருடங்களுக்கு முன் எனது நண்பர்கள் கூத்தினை புத்துயிர் ஊட்ட வேண்டும் என்று நினைத்து முன்று நான்கு கூத்துக்களை அரங் கேற்றினார்கள். அதிலே பல சுவாரசியமான சம்பவங்கள் இடம் பெற்றன. அவற்றையும் தர இருக்கின்றேன். இன்று அவர்களும் கை விட்டு விட்டார்கள் இன்றைய அவசர யுகத்தில் அவர்களாலும் அவற்றை முன்னெடுக்க முடியவில்லை. எது இப்படி இருந்தாலும் இரண்டு , முன்று வருடத்தில் ஒரு தடவையாவது ஒரு கூத்தினை அரங்கேற்றினால் எமது எதிர்கால சந்ததி இதுதான் கூத்து என்பதை அறிவார்கள் அல்லவா. என்றைய இளைஞர்கள் முன்வரவேண்டும்


கூத்து ஆடுபவர்களுக்கு அவர்களின் பெயர் மருவி அவர்கள் ஏற்று நடித்த கதா பாத்திரத்தின் பெயர் இன்று வழங்கப்பட்டு வருகின்றது.
கூத்து ஆடுவதாக இருந்தால் ஆட, பாட தெரிய வேண்டும், எனது நண்பர்கள் பல்ர் கூத்து ஆட ஆசை பட்டு ஆட, பாட முடியாமல் போனது. நான் ஒதுங்கி இருந்துவிட்டேன் கூத்து ஆடும் ஆசையை விட்டு. ஆட, பாட தெரியும் இருந்தும்.... சில நண்பர்கள் இந்த ஆசையால் முக்குடை பட்டதும் உண்டு. ஒரு நண்பர் எங்களுடன் கதைப்பதே எங்களுக்கு விளங்குவதில்லை அவருக்கும் ஆசை வந்துவிட்டது. அவரிடம் பல தடவை சொல்லியும் கேட்கவில்லை. சரி என்று விட்டு விட்டோம். ஊர் மக்களே திரண்டு இருக்கின்றனர். அவரோ கலரிக்கு வருகின்றார். எல்லோரும் ஆவலோடு எதிர்பார்த்துக்காத்துக்கொண்டு இருக்கின்றனர்.
இவருக்கு வழங்கப்பட்ட பாடல் "கரடிகள் கூட்டமே கதறிக்கொண்டு ஓடுதே" அவரோ பாடினார் கதடிகள் கூத்தமே கததிக்கொண்டு ஓதுதே. எல்லோரும் சிரித்து விட்டார்கள் பல தடவை சொல்லிப்பார்த்தார்கள் அவரால் முடியவில்லை மூக்குடை பட்டதுதான் மிச்சம்.

பக்கப்பாட்டு பாடுபவர்களோ சற்று உற்சாகமாகவே இருப்பார்கள் அவர்களுக்கு ஆரம்பத்திலே உற்சாக பானம் வழங்கப்பட்டு இருக்கும் உற்சாக பானம் வழங்கினால்தான் அன்று கூத்து களை கட்டும்.

எல்லோரும் கூத்து பார்க்க வருவார்கள் எங்களை போன்ற சில நண்பர்கள் வருவது கூத்து பார்க்க அல்ல அங்கெ வருகின்ற இளம் பெண்களை பார்ப்பதற்குத்தான். இளம் பெண்கள் மட்டும் சும்மாவா. இருப்பாங்க அவங்க கண்ணாலேயே நம்ம பசங்கள கவிள்கிரவங்க இல்லையா.

இந்த நாட்கள் பல காதலர்களை சேர்த்து வைத்து இருக்கின்றது. நம்ம நண்பர்கள் பல பெண்களிடம் திட்டு வாங்கியதும் உண்டு. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க நம்ம தெரு நாய்களுக்கும் நித்திரை இல்லை எல்லோரையும் வெருட்டுவதிலே பொழுது போய்விடும்.

என்னும் பல நினைவுகளை சொல்லிக்கொண்டே போகலாம். நம் கலைகள் புத்துயிர் ஊட்டப்பட வேண்டும் என்பதே உண்மை.
read more...

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி தலைமையிலான உள்ளுராட்சி மன்றங்களில் எதுவித ஊழல்களும் இடம்பெறவில்லை- கிழக்கு மாகாண அளுனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமையிலான திருகோணமலை நகரசபையில் ஊழல்கள் இடம்பெறுவதாக அறிவிப்பு.

கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினர் வழிநடத்துகின்ற உள்ளுராட்சி மன்றங்களில் எவ்வித ஊழல் மோசடிகளும் நடைபெறவில்லை. முறைகேடுகள் நடைபெற்றதாக நிருபிப்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை ஆனால், தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த தவிசாளர் தலைமையிலான திருகோணமலை நகராட்சி மன்றத்தில் ஊழல்கள் மலிவடைந்திருப்பதாக கிடைக்கப்பெற்றிருக்கின்ற முறைப்பாடுகளை தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறித்த சபையின் தலைவருக்கெதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளும் இடம்பெற்று வருகின்றன என கிழக்கு மாகாண ஆளுனர் அட்மிரல் மொஹான் விஜய விக்ரம தெரிவித்துள்ளார்.


அண்மையில் ஆங்கில வார இதழான சன்டே ரைம்ஸ்சில்(கொழும்பு பதிப்பு) வெளியான வெளியான செய்தி தொடர்பான மறுப்பறிக்கையினை வெளியிடுகின்ற போது மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார். தொடர்ந்து அவர் குறிப்பிடுகையில் நடந்து மடிந்த நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் முதலமைச்சர் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியானது தனித்து போட்டியிட்டது. அதனால் அக்கட்சியின் சில அரசியல் எதிர்ப்பாளர்கள் மாகாண சபையில் வழமையான சில நடவடிக்கைகளை ஊடகங்கள் மூலம் திரிவு படுத்துவதன் ஊடாக முதலமைச்சருக்கும் அவரது கட்சியினருக்கும் களங்கம் ஏற்படுத்த முனைந்தார்கள். இலங்கையில் உள்ள அனைத்து மாகாண சபைகள், அமைச்சுக்கள்,திணைக்களங்கள், உள்ளுராட்சி மன்றங்களில் கணக்காய்வுகள் வருட இறுதியில் மேற்கொள்வது வழமையான விடயமாகும். இதனைக்காரணம் காட்டி முதலமைச்சருக்கோ அல்லது அவரது கட்சிக்கு எதிராக திசைதிருப்ப முனைவது வேடிக்கையான விடயம் எனவும் குறிப்பிட்டார் அதே நேரம் முதலமைச்சரின் கட்சி கடந்த தேர்தலில் தனித்து போட்டியிட்டதனால் அரசிற்கும் முதலமைச்சரது கட்சிக்கும் இடையில் பாரிய பிளவு ஏற்பட்டதுபோல் மாயையை தோற்றுவிக்க ஊடகங்கள் மூலம் சிலர் எத்தணிக்கின்றார்கள் எனவும் அவர் தனது மறுப்பறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
read more...

Thursday, 13 May 2010

படுவான்கரை மக்களுக்கு விடிவு விரைவில் கிடைக்கட்டும்

இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்திலே படுவான்கரை, எழுவான்கரை என்று சொல்வார்கள்.  சூரியன் உதிக்கின்ற திசையினை எழுவான்கரை என்றும், சூரியன் மறைகின்ற பகுதியை படுவான்கரை என்றும் சொல்வார்கள். எழுவான்கரை, படுவான்கரை என்பதனை மட்டக்களப்பு வாவியை வைத்துப் பிரித்துக் கொள்வார்கள்.

படுவான்கரைப் பிரதேசம் அழகிய வயல்வெளிகளையும், சிறிய மலைகள், காடுகள் என்று பல இயற்கை அம்சங்களைக் கொண்டுள்ளது. ஆனாலும் அப்பிரதேசங்களிலே இருக்கின்ற மக்கள் பல பிரட்சினைகளை எதிர் நோக்கி வருகின்றனர். பல இடங்களிலே அடிப்படை வசதிகளற்ற மக்களாகவே வாழ்ந்து வருகின்றனர்.

உள் நாட்டில் இடம் பெற்ற யுத்தத்தினால் அதிகமாகப் பாதிக்கப்பட்ட பிரதேசமும் இதுவாகும். கடந்த காலங்களிலே இப் பிரதேசங்கள் புலிகளின் கட்டுப் பாட்டில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் அப்பிரதேசத்தின் அத்தனை கிராமங்களுக்கும் செல்ல வேண்டிய சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. அவர்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

பல வீதிகள் மிகவும் மோசமான நிலையில் இருக்கின்றன தப்போது பல வீதிகள் விஷ்த்தரிக்கப் பட்டுக்கொண்டிருக்கின்றன.   அதிகமான பகுதிகளிலே மின்சார வசதி இல்லை. காட்டுப் பிரதேசமாக இருப்பதனால். யானையின் அட்டகாசம், பாம்புகளின் தொல்லை என்று பல பிரச்சினைகளை மின்சார வசதி இன்மையால் எதிர் நோக்கி வருகின்றனர்.

மின்சார வசதி இன்மையால் தொலைக்காட்சி வசதிகளோ, வானொலி கேட்கின்ற வசதிகளோ இல்லை. பின்தங்கிய பிரதேசங்களாகையால் பத்திரிகைகள் வாசிக்கின்ற பழக்கங்களும் பல மக்களிடம் இல்லை. உலக நடப்பு விவகாரங்களையும்  இந்த மக்கள் அறிந்து கொள்ள முடியாத நிலையில் இருக்கின்றனர். அத்தோடு படிக்கின்ற மாணவர்களும் மின்சாரமின்றி பல சிக்கல்களை எதிர் நோக்குகின்றனர்.

போக்குவரத்துப் பிரச்சினையே மக்களின் மற்றுமோர் பிரச்சினையாகும். வாகன போக்குவரத்து வசதிகள் மட்டுப் படுத்தப் பட்ட அளவில் குறிப்பிட்ட சில பிரதேசங்களிலேயே  இருப்பதனால் நீண்ட தூரம்  என்றாலும்  மக்கள் நடந்து செல்லவேண்டி இருக்கின்றது.

அத்தோடு அப்பிரதேசங்களிலே சுகாதார வசதிகளோ, வைத்தியசாலைகளோ இல்லை என்பதனால் வாகன போக்குவரத்து வசதி இல்லாததனால் பல மரணங்களை எதிர் கொள்ளவேண்டி இருக்கின்றனர். இலகுவாக காப்பாற்றப் படக் கூடிய நோயாளர்கள் நீண்ட  தூர வைத்திய சாலைகளுக்கு  மாட்டு வண்டிகளில் கொண்டு சென்று மரணம் சம்பவித்த பல நிகழ்வுகள் இடம் பெற்றிருக்கின்றன.

இவ்வாறு பல்வேறுபட்ட இன்னல்களை படுவான்கரை மக்கள் எதிர் நோக்கி வருகின்றனர்.

இன்று பல்வேறுபட்ட அபிவிருத்தித் திட்டங்கள் அப்பிரதேசங்களிலே கிழக்கு மாகாண சபை மூலம் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. இருந்தாலும் அப்பிரதேசத்துக்குரிய அபிவிருத்தித் திட்டங்களையும், அம்மக்களின் நலனில் அக்கறையினையும் துரிதப் படுத்தவேண்டிய பொறுப்பு கிழக்கு மாகாண முதலமைச்சரையும், அப்பிரதேச மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையுமே சாரும். 
read more...

Wednesday, 12 May 2010

கையேந்தும் நாளைய தலைவர்கள்

இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள் என்று சொல்கின்றோம். இன்று பல சிறுவர்களின் நிலை கேள்விக்கிடமாகி உள்ளது. ஒரு நேர சாப்பாட்டுக்கு மற்றவர்களிடம் பிச்சை கேட்டு கையேந்தும் சிறுவர்கள். உணவுக்காக, தன் குடும்பத்தை காப்பாற்ற குடும்ப சுமையோடு படிக்கவேண்டிய வயதிலும் தொழில் செய்யும் சிறுவர்கள் பலர்.

இந்த நிலை இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளிலேதான் அதிகம். இதற்கு முக்கிய காரணம்   நாட்டில் இடம்பெற்ற யுத்தமேயாகும். சிறுவர் உரிமைகள், உரிமைகள் என்று பேசிக்கொண்டிருக்கின்றோம். ஆனால் இச் சிறுவர்கள் பற்றி சிந்திப்போர் மிக, மிகக் குறைவு என்றுதான் சொல்லவேண்டும்.

இன்று வீதிகளிலே நாம் எத்தனை பிச்சை எடுக்கின்ற சிறுவர்களைப் பார்த்திருக்கின்றோம். அவர்களின் எதிர்காலம்தான் என்ன. அவர்களுக்கும் அபிலாசைகள் இருக்கின்றன. இந்த சிறுவர்களை வைத்து உழைக்கின்றவர்களும் அதிகம்பேர் இருக்கின்றனர். இந்த சிறுவர்களை பிச்சை எடுக்க அனுப்புவது கிடைக்கும் பணத்தை தான் வாங்கி எடுத்துவிட்டு ஒரு நேர சாப்பாட்டுக்கு போதுமான அளவுக்கேனும் பணம் கொடுக்காமல் சிறுவர்களை வைத்து உழைக்கின்றவர்களும் இருக்கின்றனர்.

தாய், தந்தை, சொந்தங்கள், உடமைகளை இழந்து அநாதரவற்று வீதிகளிலும், மரநிழல்களிலும் வாழுகின்ற பல சிறுவர்கள் இருக்கின்றனர். அவர்களைப் பற்றி, அவர்களின் எதிர் காலத்தைப் பற்றி யாராவது சிந்தித்து இருக்கின்றோமா?

இது ஒரு புறமிருக்க சிறுவர்களை வைத்து வேலை வாங்குகின்றவர்களும் பலர் இருக்கத்தான்   செய்கின்றனர்கள். சிறுவர்களை வேலை வாங்கக் கூடாது என்பது தெரிந்திருந்தும் பலர் சிறுவர்களை வேலைக்கு வைத்திருந்து அதிகமாக வேலை வாங்குவதோடு மட்டுமல்லாமல். வேலைகளை செய்ய மறுக்கின்ற சிறுவர்களை சித்திரவதை செய்கின்ற பலரும் இருக்கத்தான் செய்கின்றனர்.

இன்னொரு புரத்திலே படிக்க ஆசை, கெட்டித்தனம் இருந்தும் படிக்க முடியாமல் எத்தனையோ சிறுவர்கள் தமது கல்வியை இடை நடுவில் விட்டிருக்கின்றனர். 

தாய், தந்தையரை இழந்த பல சிறுவர்கள் சிறுவர் இல்லங்களிலே இருக்கின்றனர் அவர்கள் தொடர்பிலே நாம் ஒவ்வொருவரும் கவனம் செலுத்த வேண்டும். சிறுவர் இல்லங்களிலே இருக்கின்ற பெண் பிள்ளைகளின் எதிர் காலத்தைப் பற்றி நாம் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். 

மொத்தத்தில் எமது சிறுவர்களில் நாம் ஒவ்வொருவரும் அக்கறை கொள்ளவேண்டியவர்களாக இருக்கின்றோம்.  
read more...

மட்டக்களப்பு ,திருகோணமலை மாவட்டங்களில் கைத்தொழில் வலயங்கள்.

வட கிழக்கு மாகாணங்களில் நான்கு விசேட கைத்தொழில் வலயங்கள் அமைக்கவுள்ளதாக கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சின் உதவி செயலாளர் எஸ்.கே.ஜயசிங்க தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலும் வட மாகாணத்தில் மன்னார்இயாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களிலும் இக்கைத்தொழில் வலயங்கள் அமைக்கப்படவுள்ளன. திருகோணமலை மாவட்ட கைத்தொழில் வலயம் 35 ஏக்கர் நிலப்பரப்பில் தம்பலகமப் பிரதேசத்தில் அமைக்கப்படுகிறது.

இதேவேளை யாழ்ப்பாணத்தில் அச்சுவேலி பிரதேசத்தில் கைத்தொழில் பேட்டை ஒன்றை அமைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்

நன்றிகள் மீன்மகள்
read more...