Showing posts with label பதிவர். Show all posts
Showing posts with label பதிவர். Show all posts

Sunday, 25 December 2011

இலங்கைப் பதிவர்களின் அராஜகமும் தலைக்குமேல் ஏறிய ஏழரைச் சனியனும்

இது என்னுடைய 400 வது பதிவு


Christmas Myspace Graphics

அனைத்து நண்பர்களுக்கும் இனிய நத்தார் வாழ்த்துக்கள்.



நான் பதிவுலகிற்கு வந்து நிறைய விடயங்களை கற்றிருக்கின்றேன். பல மனச் சங்கடங்களை எதிர் கொண்டீருக்கின்றேன். என் வாழ்க்கையின் எல்லா விடயங்களிலும் தலைக்கு மேல் ஏறிக்கொண்டிருக்கும் ஏழரைச் சனியன் வலைப்பதிவிரும் என்னை விடுவதாக இல்லை.
நான் வலைப்பதிவில் எழுதுவதும் அடிக்கடி காணாமல் போவதும் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. எல்லாம் என் குடும்ப சூழ்நிலை. அது ஒரு பக்கம் இருக்கட்டும் விடயத்துக்கு வருகின்றேன் எனது இந்த 400 வது பதிவிலே சில விடயங்களை மனம் விட்டு பேச நினைக்கின்றேன்.
இலங்கையில் அதிகமாக அனானித் தாக்குதலுக்கு இலக்கான பதிவர் நானாகத்தான் இருக்க முடியும். 400 பதிவுகளை தந்திருந்தாலும் நான் எதனையும் சாதிக்கவுமில்லை. தலைக்கனமும் எனக்கு இல்லை. புதிய பதிவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் உடையவன் பலரை ஊக்கப்படுத்தி இருக்கின்றேன். 

இப்போதெல்லாம் அதிகமான நேரம் இணையத்தில் எனது பொழுதைப் போக்கினாலும் வலைப்பதிவெழுத மனம் வருவதில்லை. காரணம் நான் வாங்கிய அனானித் திட்டுக்களும். இலங்கை பதிவர்களின் போக்கும் ஒரு காரணமாகும்.

இப் பதிவில் என்னைப் பற்றி சில விடயங்களை சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன். இவ் வலைப்பதிவினை வெறுமனே பொழுது போக்குக்காக இல்லாமல் எமது சமூகத்தின் அவலங்களையும் பிரச்சினைகளையும் வெளிப்படத்தும் ஒரு தளமாகவே பயன் படுத்துகின்றேன். தொடர்ச்சியாக எமது சமூகத்தின் பிரச்சினைகளை எழுதி வருகின்றேன். 

ஒவ்வொருவருக்கும் கருத்துச் சுதந்திரம் இருக்கின்றது. ஒவ்வொருவருக்கும் வௌ;வேறு மாற்றுக் கருத்துக்கள் இருக்கும் கருத்துக்களை கருத்துக்களால் வெல்ல வேண்டும். மாற்றுக் கருத்துக்கள் இருக்கின்றபோதுதான் உண்மைகள் வெளிவரும். எனது கருத்துக்களை நான் எனது வலைப்பதிவில் எழுதுகின்றபோது அக் கருத்துக்களில் எங்கே தவறிருக்கின்றது என்பதனை சுட்டிக்காட்டினால் நான் ஏற்றுக் கொள்ள தயங்கப் போவதில்லை. 

நான் மறைக்கப்பட்ட துரோகங்கள் எனும் அரசியல் சார்ந்து தொடர் பதிவொன்றை எழுதியிருந்தேன். அத் தொடர் பதிவினை ஒரு சிலர் எதிர்த்தனர் பொய்யான தகவல்களை வழங்குவதாக. எந்த இடத்திலே பொய் இரக்கின்றது என்று சுட்டிக் காட்டச் சொன்னேன் குற்றம் சாட்டிய எவரும் எது பொய்யான தகவல்கள் என்று சுட்டிக்காட்டவில்லை. ஆனாலும் ஆதாரமாக தொடர்ந்த பதிவுகளில் 24 க்கு மேற்பட்ட புத்தகங்களையும் கட்டுரைகளையும் ஆதாரம் காட்டியிருந்தேன்.

குறித்தவர்கள் என்னை குற்றம் சாட்டுவதற்காகவும் என்னுடன் ஏனையவர்கள் பகைத்துக் கொள்வதற்காகவும் கையாண்ட விடயம் நான் பிரதேச வாதம் பேசுகின்றேன் என்பதாகும். நான் மட்டக்களப்பைச் சேர்ந்தவன் என்பதனாலும் அரசியல் சார்ந்து தொடர்பதிவு எழுதியதனாலும் பிரதேசவாதம் பேசுகின்றான் என்று; என்னுடன் பதிவர்களை மோதவிட்டு வேடிக்கை பார்க்க நினைத்தவர்களும் இருக்கின்றனர். 

ஆனாலும் என்னுடைய மறைக்கப்பட்ட துரோகங்கள் எனும் தொடர் பதிவிற்கு எதிர்த்த குழுவினரைத் தவிர பலர் மத்தியிலே வரவேற்பு இருந்தது. அத் தொடர் பதிவானது கடந்தகால அரசியல் வரலாறுகளை புரட்டிப் பார்க்கும் ஒரு பதிவாக அமைந்திருந்தது. 60 பகுதிகளுக்குமேல் எழுதி இருந்தேன். இந்த இடத்தில் ஒன்றை சொல்கின்றேன் நான் பொய்களை எழுதுகிறேன் என்று என்னுடன் சண்டைக்கு வந்தவர்கள் எந்த இடத்தில் பொய் சொல்லி இருக்கின்றேன் என்பதனை இப்பொழுதாவது சுட்டிக்காட்ட முடியுமா?

இது ஒருபுறமிருக்க இலங்கையின் பதிவர்களின் நடவடிக்கைகளைப் பார்க்கும்போது வெட்கித் தலைகுனியவேண்டிய நிலையில் இருக்கின்றது. ; இலங்கையிலிருந்து புதியவர்கள் பலர் பதிவுலகத்துக்கு வந்துகொண்டிருக்கின்றனர். நல்ல பல பதிவுகளைத் தந்துகொண்டிருக்கின்றனர். அவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள். 

இலங்கையில் வலைப்பதிவர்களிடையே ஒற்றுமை இல்லை. பல குழுக்களாக செயற்பட்டுக் கொண்டிருக்கும் நிலை காணப்படுகின்றது. பல புதிய பதிவர்கள் வந்திருக்கின்றபோதிலும் பழையவர்களுக்கும் புதியவர்களுக்குமிடையில் ஒரு புரிந்துணர்வு இல்லாத நிலை காணப்படுகின்றது. 

இலங்கையின் இன்றைய நிலையினைப் பொறுத்தவரையில் எவ்வளவோ முக்கியமான விடயங்களை பதிவிட வேண்டிய அவசியமிருக்கின்றது. இருந்தும் வெறுமனே மொக்கைப் பதிவுகளையும் கும்மிப் பதிவுகளையும் எழுதிக் கொண்டிருக்கின்றனர். பதிவெழுதுவது எதை எழுதுவதென்பது அவரவர் விருப்பம். ஆனாலும் இவ்வாறான பதிவெழுதுபவர்கள் தாங்கள்தான் இலங்கையின் சிறந்த பதிவர்கள் என தங்களை காட்டிக்கொள்ள நினைப்பதுதான் கேலிக்கிடமானது. இலங்கை பதிவர்களைப் பொறுத்தவரை ஒருவரை ஒருவர் மாறிமாறி தங்களை தாங்களே புகழ்ந்து எழுதிக் கொள்ளும் செயற்பாடு இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.

இலங்கையின் புதிய தமிழ் வலைப்பதிவர்களிடம் கேட்கின்றேன். இலங்கை தமிழ் வலைப்பதிவர் குழுமம் என்று ஒன்று இருக்கின்றது. அதில் பலர் சேர்ந்து கொள்ளாமல் இருக்கின்றனர். சேர்ந்து கொள்ளாமல் இருப்பதற்கான காரணம் என்ன? குறித்த சிலரே குழுமத்தில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர். பலர் இக் குழுமத்தில் இணைந்து கொள்ளவில்லையாயின் எதற்காக இலங்கை தமிழ் வலைப் பதிவர் குழுமம் என்று சொல்ல வேண்டும். 

இலங்கை தமிழ் மக்களின் சமூக கலை கலாசார பாரம்பரியங்களை ஆவணப்படுத்த வேண்டிய அவசியம் இருக்கின்றது. எமது கலை கலாசார பாரம்பரியங்கள் இன்று அழிவடைந்து வருகின்றன. இவற்றை பேணிப் பாதுகாக்க வேண்டும் எனும் நோக்குடன்தான் ஈழத்து முற்றம் எனும் தளம் உருவாக்கப்பட்டது என்று நினைக்கின்றேன். இதில் பல இலங்கை பதிவர்கள் பதிவிட்டுக் கொண்டிருக்கின்றனர்.

நானும் ஈழத்து முற்றத்திலே பதிவிடவேண்டும் சந்தர்ப்பம் கிடைக்காதா என்று எதிர் பார்த்துக் கொண்டிருந்தபோது எனக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. ஆனாலும் அது நிலைக்கவில்லை. மிக மிகக் குறிகிய காலமே ஈழத்து முற்றத்தில் உறுப்புரிமையுடன் இருக்க முடிந்தது நான்கு இடுகைகளே இட்டிருக்கின்றேன். 

நான் எனது வலைப்பதிவில் அரசியல் சார்ந்து எழுதியதனால் ஈழத்து முற்றத்திற்கான எனது உறுப்புரிமை என்னிடம் சொல்லாமலே பறிக்கப்பட்டது. அரசியல் பதிவெழுதும் அல்லது மாற்றுக் கருத்துள்ள ஒருவனுக்கு தனது சமூகம் சார்ந்த கலை கலாசாரம் சார்ந்த விடயங்களை எழுத உரிமை இல்லiயா? அல்லது அவன் எழுதக் கூடாதா? 

இன்று இலங்கை தமிழ் வலைப்பதிவர்களிடையே அதிகம் பேசப்படுகின்ற விடயம் ஈழவயல் ஈழவயலானது பல நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்டிருப்பது பாராட்டத்தக்க விடயம். ஈழத்தின் கலை கலாசார பாரம்பரியங்களை ஆவணப்படுத்தும் தளமாகவும். தளத்தில் பதியப்படும் விடயங்களை நூலுருவில் ஆவணப்படுத்தல். நிதியம் ஒன்றினை ஆரம்பித்து பல சமூக சேவைகளைச் செய்யவும் என்று பல நல்ல நோக்கங்களோடு உருவாக்கப்பட்டிருப்பதாக ஈழவயல் குழுவினர் அறிவித்திருக்கின்றனர். இவர்களின் இச் சேவை பாராட்டத்தக்கது.

ஆனாலும் சிலர் ஈழவயல் தளத்தின் வருகையை பொறுத்துக் கொள்ள முடியாமல் கொக்கரித்துக் கொண்டிருக்கின்றனர். ஈழத்து முற்றம் இருக்கும்போது ஈழவயல் எதற்கு என்று கேட்கின்றனர். ஈழத்து முற்றம் புதியவர்களை உள்வாங்குவதுடன் சரியாக செயற்பட்டிருந்தால் இன்னொரு தளத்தின் தேவை உணரப்பட்டிருக்காது. 

ஈழத்து முற்றம் இருக்கும்போது எதற்கு ஈழவயல்  என்று கேட்டிவர்களின் மனநிலையை பார்த்தீர்களா? தமிழர்களின் கலை கலாசார பாரம்பரியங்களை எழுத பல தளங்கள் இருந்தால் எமக்குத்தானே பெருமை. இவர்கள் வரவேற்க வேண்டியவர்கள். எதிர்க்கின்றனர். உண்மையான நல்ல மனமுள்ளவர்கள் நல்ல விடயம் இரண்டிலும் பதிவிடுவோம் என்று வரவேற்றிருக்க வேண்டும்.

ஒரு சிலர் வேண்டுமென்று திசை திருப்பி என்னுடன் சில பதிவர்களை மோதவிட்டு பிரச்சினைகளை ஏற்படுத்த நினைக்கின்றனர். ஈழவயல் தளம் சந்ருவுக்காகவா உருவாக்கப்பட்டது என்று இலங்கை வலைப்பதிவர் குழுமத்திலே கேள்வியினைத் தொடுத்து விவாதத்ததை என் பக்கம் திசை திருப்பியிருந்தனர். இது எனக்காக உருவாக்கப்பட்ட தளமல்ல. புதிய தளத்தின் தேவை உணரப்பட்டதன் வெளிப்பாடாக ஈழவயல் குழுமத்தினர் உருவாக்கியிருக்கின்றனர். என்னிலும் என் எழுத்துக்களிலும் நம்பிக்கை இருந்தால் ஈழவயல் குழுமத்தினர் என்னை அழைக்கட்டும். அழைத்தார்களானால் அவர் என்ன நோக்கத்திற்காக ஈழவயலினை உருவாக்கினார்களோ அந் நோக்கத்திற்கமைய செயற்படுவேன்.

இன்று இலங்கையைப் பொறுத்தவரை பதிவர் சந்திப்பு ஒன்று மிக மிக அவசியம் இலங்கைப் பதிவர்கள் சந்திப்புப்பற்றி சிந்திக்க வேண்டும். இச் சந்திப்பு மட்டக்களப்பில் இடம்பெறுவது நல்லதென நான் நினைக்கின்றேன். காரணம் நான் மிகவும் கவலைப்படுகின்ற விடயம் மட்டக்களப்பு அம்பாரை மாவட்டங்களில் பதிவெழுதுபவர்கள் மிக மிகக் குறைவு இதற்கு காரணம் வலைப்பதிவு பற்றி பலருக்கு தெரியாது. மட்டக்களப்பிலே பதிவர் சந்திப்பு ஒன்றினை செய்கின்றபோது ஒரு விழப்புணர்வினை ஏற்படுத்த முடியும். (இதனையும் பிரதேசவாத முத்திரை குத்த வேண்டாம்)

இனிவரும் காலங்களில் தொடர்ந்தும் பதிவிட நினைத்திருக்கின்றேன். இன்று முதல் உங்கள் பதிவுகளுக்கும் வலம் வர இருக்கின்றேன்.




read more...

Tuesday, 8 September 2009

இன்று கொண்டாட்டம்தான்






நண்பர் பிரபா (விழியும் செவியும் வலைப்பதிவுக்கு சொந்தக்காரரான நம்ம பிரபாதான்) இன்று தனது ................. வது பிறந்த நாளை வெகு விமர்சையாகக் கொண்டாடுகின்ற்றார்


அவரை .............. பல பெற்று பெரு வாழ்வு வாழ வாழ்த்துகின்றேன்.
இவர் எனக்கு நல்ல ஒரு நண்பர். நேற்று அவரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. இன்று விருந்துபசாரம் இருப்பதாகவும். தனது பிறந்தநாளுக்காக உலகளாவிய ரீதியிலும் (எழுத்தறிவு தினம்), மற்றும் நாட்டிலும் (கிரிக்கெட்) பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் சொன்னார்.
விருந்துக்கு போவதற்கு நான் தயார் நீங்களும் வந்திடுங்க.
இவரைப்பற்றி

ஒரு அறிவிப்பாளர் மட்டுமன்றி சிறந்த தொழினுட்ப உதவியாளரும் கூட. எமது வானொலியின் தொழினுட்ப செயற்பாடுகளில் இவரின் பங்கு அளப்பெரியது.

வலைப்பதிவுகளை வாசிப்பதோடு இருந்த என்னை வலைப்பதிவினை ஆரம்பிக்கத்தூண்டியவர். சூது வாது, பொறாமை என்று சொல்வார்களே அது இவரிடம் நெருங்கவே முடியாது. எல்லோருக்கும் உதவும் உள்ளம் படைத்தவர்

பிரபாதான் என்னை வலை உலகத்துக்குள் நுழைவதற்கு ஊக்கப்படுத்தியவர் என்பதனால் அவருக்கு நான் ஊக்கப்படுத்தல் விருதினை அவரது பிறந்த தினத்திலே வழங்குவதில் மகிழ்வடைகின்றேன்.

இவ்விருதினை எனக்கு நண்பர்களான யோ வாய்ஸ் , குறை ஒன்றுமில்லை, மேனகா சத்தியா, வீட்டுப்புறா சக்தி ஆகியோர் வழங்கி இருந்தனர் அவர்களுக்கு எனது நன்றிகள்.


நான்கு விருதுகளையும் என்னை ஊக்கப்படுத்தும் நாற்பது பேருக்கு வழங்க வேண்டுமே.

LOSHAN - லோஷன்


வந்தியத்தேவன்

புல்லட்டின் *டுமீல்*


SShathiesh


கடலேறி

ஐந்தறைப்பெட்டி

யாழினி

ஆ.ஞானசேகரன்

பிரியமுடன் வசந்த்

ஜமால்

தமிழரசி - எழுத்தோசை

ஹேமா - வானம் வெளித்த பின்னும்

பிரிவையும் நேசிக்கும் காயத்ரி

கானா பிரபா

வால்பையன்

சிந்து

சுசி

ஜெகநாதன்

ilangan

சுப.நற்குணன்

நிலாமதி

சப்ராஸ் அபூ பக்கர்

ஸ்டார்ஜன்


பிரியங்கா

Vidhoosh/விதூஷ்

மிக முக்கிய பின் குறிப்பு : இந்த விருது உங்களை யார் அதிகமாக ஊக்கப்படுத்துகிறார்களோ அதிகமாக பார்வையிடுபவர்கள்,உங்களுக்கு பிடித்த மற்றவர்களின் சமையல் குறிப்புகள் இப்படி பல காரணங்கள் இருக்கு.அதுதான் இந்த அவார்ட்டின் அர்த்தம்

சுசி எனக்கு நட்புக்கு விருது தந்திருக்கிறார் அவருக்கும் நன்றிகள்.


இவர்களோடு எனக்கு விருது தந்த நண்பர்களுக்கும் வழங்குகின்றேன்.

யோ வாய்ஸ்
குறை ஒன்றுமில்லை
மேனகா சத்தியா
வீட்டுப்புறா சக்தி

இவர்களுக்கு நான் நட்புக்கு விருதும் கொடுக்கின்றேன்.
read more...

Saturday, 22 August 2009

இலங்கைப் பதிவர்கள் சந்தோசத்தில்.

ஒரு வார காலமாக வலைப்பதிவுப் பக்கம் வர முடியவில்லை. எனது மற்றுமொரு முயற்சியாக மாதாந்தம் சிறுவர் சஞ்சிகை ஒன்றினை வெளியிடுவதற்குரிய ஏற்பாடுகளை செய்து கொண்டு இருப்பதனால் நேரம் என்பது கிடைக்கவில்லை. விரைவில் எனது முயற்சியில் சிறுவர் சஞ்சிகை வெளிவர இருக்கின்றது.
நாட்களை எண்ணிக்கொண்டு இருந்த இலங்கைப் பதிவர்கள் இப்போது நிமிடங்களை எண்ணிக்கொண்டு இருக்கின்றனர். இலங்கைப் பதிவர்கள் அனைவரும் ஆவலோடு எதிர் பார்த்த நாள் நாளை மலர இருக்கின்றது. இலங்கைப் பதிவர்களின் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு நாளை இடம் பெற இருக்கின்றது.

இலங்கைப் பதிவர் சந்திப்பு தொடர்பான விடயங்களைத் தருகின்ற லோஷன் அண்ணா அவர்களின் பதிவிலிருக்கும் விடயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கின்றேன். (http://loshan-loshan.blogspot.com/2009/08/blog-post_22.html)
வர்றீங்க தானே?
இது ஒரு ஞாபகமூட்டல் பதிவு..

நாளை ஞாயிறு காலை ஒன்பது மணிக்கு என்ன வேலை இருந்தாலும் போட்டுவிட்டு ஓடி வந்து விடுங்கள்..

வருவீங்க என்று தெரியும்.. இருந்தாலும் ஒரு நினைவுறுத்தல் தான்..


எல்லா ஏற்பாடுகளும் பூர்த்தி.. பங்கேற்பாளர்கள் (நீங்க தானே முக்கியம்) வந்து நிகழ்ச்சியைப் பூரணப்படுத்தி வெற்றியாக்குவது மட்டும் தான் மிச்சம்..
முதலில் வந்து முந்துவோருக்கு சொகுசான இருக்கைகள், புல்லட் வழங்கும் விசேட உணவுகள் கிடைக்கும்..உண்மையா.. நம்புங்கப்பா.. அட ச்சே இந்த புல்லட் பெயரைப் போட்டால் எதையும் யாரும் நம்புறாங்க இல்லை.. (அதுக்கு தானே ஆரம்பம் முதலே வருவோர் உறுதிப்படுத்துமாறு கேட்டு எண்ணிக்கை எடுத்தோம்)

விஜயகாந்த் ஸ்டைலில் சில புள்ளி விபரங்கள்..


இலங்கையைச் சேர்ந்த பதிவர்கள் பல நூறு.. ;) (இப்ப ஆயிரம் தாண்டும் என்றும் நண்பர்கள் சொல்கிறார்கள்)

அதில் இலங்கையில் இருந்தே பதிவிடுவோர் சில நூறு..
நாம் சேர்ந்து அழைப்பு விட்டது எல்லோருக்கும்..
வாழ்த்து சொன்னவர்கள் பல பேர்..
வருவதாக சொன்னோர் பலர்..
ஒழுங்குபடுத்தலை ஆரம்பித்த அப்பாவிகள் நாலு பேர்..
இப்போ எங்களோடு ஆதரவாக இன்னும் ஒரு நாலைந்து பேர்.. ((பக்க பலமாக இன்னும் பல பேர் - வெளியிலருந்து ஆதரவு ;))


நாங்கள் வருவார்கள் என்று நினைத்தது முதலில் ஒரு 25.(அதுக்கே நொண்டியடிக்கும் என்று பார்த்தோம்.. ஆனா இப்போ.. :))
உறுதிப் படுத்தியோர் மட்டும் இப்போதைக்கு தாண்டியிருக்கிறது 80.
சொல்லாமல் கொள்ளாமல் வரும் அன்புள்ளங்களையும் அழைக்கிறோம்..
பல பயனுள்ள விடயங்கள் பகிரப்படும் ஒரு சந்திப்பாக மாற்ற வரும் உடன்பிறப்புக்களே.. (கட்சி பீலிங் வருதா?) நேரத்துக்கே வாருங்கள்..
நேரத்துக்கு ஆரம்பித்து ஒரு புதிய கூட்ட பரம்பரைப் பரிணாமத்தை ஏற்படுத்துவோம்..


மறந்துடாதீங்க இலங்கை நேரம் (கொழும்பு நேரம்) காலை ஒன்பது மணிக்கு..
கொழும்பு தமிழ் சங்கத்துக்கு வரும் வழி தெரியும் தானே?? தெரியாதவர்கள் வெள்ளவத்தையில் உள்ள உங்கள் உறவுகள் நண்பர்களிடம் கேளுங்கள்.. இல்லையெனில் ஆதிரையின் பதிவில் காட்டப்பட்டுள்ள வரைபடம் பாருங்கள்..


நிறைய சந்தோஷங்கள் எதிர்பாராத எதிர்காலத்துக்கான நல்ல விஷயங்கள் காத்திருக்கின்றன..
Bloggerஇன் பத்தாவது பிறந்த நாள் சிறப்பு நிகழ்ச்சியும் எங்கள் இலங்கைப் பதிவர் சந்திப்பை சிறப்பு செய்து சரித்திரம் படைக்க வைக்கிறது
வர்றீங்க தானே?
எதிர்காலத்துக்கான் பெரிய முயற்சிகளுக்கான இந்த சின்ன முதலடியை நாளை சரித்திரபூர்வமாக்குவோம்..
குறுகிய காலத்தில் இதை சாத்தியப்படுத்திய அத்தனை நண்பர்களுக்கும் நன்றிகள் & வாழ்த்துக்கள்..
மீதி சந்தித்த பிறகு.. ;)
வர்றீங்க தானே?

(இது நம்ம லோஷன் அண்ணாவின் பதிவில் இருந்து )


மேலதிக விபரங்களை அறியக்கூடிய நண்பர்களின் பதிவுகள்...



அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
நன்றிகள் - லோஷன் அண்ணா
read more...

Monday, 10 August 2009

இலங்கைப் பதிவர்களுக்கோர் அழைப்பு.

இலங்கைப் பதிவர்களிடையே தப்போது அதிகமாகப் பேசப்படுகின்ற விடயம்தான் இலங்கைப் பதிவர்கள் சந்திப்பு. சந்திப்புக்கான நேரம், இடம், நோக்கங்கள் என்பன தீர்மானிக்கப் பட்டுவிட்டன.


எதிர்வரும் 23.08.2009 ஞாயிற்றுக்கிழமை காலை 09.00 மணிக்கு கொழும்பு தமிழ் சங்க வினோதன் மண்டபத்திலே இடம்பெற இருக்கின்றன.

இப் பதிவர் சந்திப்பு இலங்கைப் பதிவர்களுக்கோர் முக்கிய திருப்பு முனையாக அமைய இருக்கின்றன. நீண்ட காலமாக எதிர் பார்க்கப்பட்ட விடயம் தற்போது கை கூடியிருக்கிறது.

இச் சந்திப்பிலே பல முக்கிய விடயங்கள் பற்றி ஆராயப்பட இருக்கின்றன.

மேலதிக விளக்கங்களுக்கும் தகவல்களுக்கும் பின்வருவோரைத் தொடர்பு கொள்ளவும்.
லோஷன் : arvloshan@gmail.com
புல்லட் : bullettheblogger@gmail.com
வந்தி : vanthidevan@gmail.com
ஆதிரை : caskaran@gmail.com



இந்த பதிவர்கள் சந்திப்புக்கு வலைப்பதிவாளர்கள், புதிதாக வலைப்பதிபவர்கள், வலையுலக வாசகர்கள், பின்னூட்டமிடுபவர்கள் என அனைவரும் அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.

சந்திப்புத் தொடர்பான அனைத்து விபரங்களையும் லோஷனின் வலைப்பதிவில் பார்வையிடவும்.

அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

read more...