இன்று வலைப் பதிவுகளை பார்த்துக்கொண்டிருந்தபோது. நண்பர் வந்தியின் வலைப் பதிவைப் பார்த்ததும் மனதிலே மிகவும் சந்தோசமாக இருந்தது. நான் அதிகம் நேசிக்கின்ற லோஷன் அண்ணாவுக்கு சாகித்திய விருது கிடைக்கப்போகின்றது என்ற சந்தோசமான செய்தியை நண்பர் வந்தியின் வலைப்பதிவு முலமாக அறிந்து கொண்டேன். லோஷன் அண்ணாவைப் பற்றி நீண்ட நாட்களாக பதிவிட வேண்டும் என்ற ஆவலோடு இருந்த நான் இன்று அவரைப் பற்றி சில விடயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
நான் சிறு வயதிலிருந்தே (என் நினைவு தெரிந்த நாள்முதல்) வானொலிக்கு அடிமையான ஒருவன். அன்று முதல் இன்றுவரை பல ஒலிபரப்பாளர்களால் அறிவிப்புத் துறைக்கு ஈர்க்கப்பட்டவன். அதன் பயனாக இன்று நானும் ஒரு ஒலிபரப்பாளன்.
நான் ஒலிபரப்புத் துறைக்கு ஈர்க்கப்படுவதட்கு முதல் காரணமாக இருந்தவர் கே. எஸ். ராஜாவாக இருந்தாலும். நான் ஒலிபரப்புத் துறைக்கு போக வேண்டும் என்று அதிக ஆசையை என்னுள்ளே வளர்ப்பதற்கு காரணமானது லோஷன் அண்ணாவின் அறிவிப்புத்தான்.
எப்பொழுதும் என் கையில் ஒரு சிறிய வானொலி பெட்டி இருக்கும் சாப்பிடும் போதும்,படிக்கும்போது, எங்கேயாவது போவதென்றாலும் கையிலே அந்த வானொலிப்பெட்டி இருக்கும். அந்தளவுக்கு வானொலிமீது காதல் கொண்டவன். சுனாமி வந்தபோது நான் எடுத்துக்கொண்டு ஓடிய ஒரு பொருள் வானொலிப் பெட்டி மட்டுமே.
நான் சிறு வயது முதல் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன நிகழ்சிகளை கேட்டு வருவேன். தனியார் வானொலிகள் வந்தபோதும் ஒரு போதும் என்ன நிகழ்சிகள் தனியார் வாநோளிகளிலே போகின்றது என்று கூட ஒரு போதும் பார்த்ததில்லை.
ஒருநாள் காலையில் எதிர் பாராத விதமாக வானொலியைக் கிறுக்கிக் கொண்டிருக்கும்போது சக்தி வானொலி என்னை அறியாமலேயே பிடிபட்டது. அப்போது எப்படி நிகழ்சி போகிறது என்று 5 நிமிடம் பார்ப்போம் என்று இருந்த எனக்கு மாற்றுவதற்கு மனம் இடம் கொடுக்கவில்லை. ஒரு போதும் என்னால் அறியப்படாத ஒரு குரல் மிகவும் சிறப்பான முறையிலே நிகழ்சிகளை தொகுத்து வழங்குவதை பார்த்ததும் தொடர்ந்து அவரது நிகழ்சிகளை கேட்கவேண்டும் என்ற ஆவல் என்னுள்ளே வந்தது. தொடர்ந்து சக்தியின் நிகழ்சிகளை கேட்க ஆரம்பமானேன்.
அவரால் நிகழ்சிகள் தொகுத்து வழங்கப்படும் விதம். வழங்கப்படும் தகவல்கள், குரல் எல்லாமே என்னை கவர்ந்து விட்டன. ஆனாலும் நான் பாடசாலைக்கு செல்வதால் அவரது காலை நேர நிகழ்சிகளை கேட்க முடியவில்லையே என்ற கவலைதான். அப்போது என்னுள்ளே ஒரு எண்ணம் தோன்றியது. ஒளிப்பதிவு செய்யக்கூடிய ஒரு வானொலிப் பெட்டியை வாங்கினால் நான் இல்லாத நேரம் வீட்டில் உள்ளவர்களால் நிகழ்சிகளை ஒலிப்பதிவு செய்ய முடியும் நான் வந்து கேட்டுக்கொள்ளலாம் என்ற எண்ணம் வந்தது. செயலிலும் இறங்கிவிட்டேன்.
நிகழ்சிகளை நேரடியாக கேட்க முடியாவிட்டாலும் ஒலிப்பதிவு செய்து கேட்பதிலே சந்தோசம் இருந்தது. அவரால் சக்தி வானொலியிலே செய்யப்பட்ட வணக்கம் தாயகம், ஆனந்த இரவு போன்ற நிகழ்சிகள் இன்றும் என்னால் மறக்க முடியாத நிகழ்சிகளே. என்னை பிரமிக்க வைத்த அமாவாசை இரவு நிகழ்சி என்றும் என்னால் மறக்க முடியாது. ஒரு பேய் பங்களாவுக்குள்ளே ஒரு அமாவாசை இரவிலே ஆய்வு செய்ய புறப்பட்ட குழுவின் துணிச்சலை பார்த்து வியந்ததோடு இப்போது நினைக்கும்போதும் அவர்கள் அத்தனை பேரினதும் திறமைகளையும் பாராட்டவேண்டும்.
அப்போது எதிர்பாராதவிதமாக எனக்கு கிடைத்த ஏமாற்றம் லோஷன் அண்ணா சூரியன் வானொலிக்கு மாற்றம் பெற்று சென்றதுதான். காரணம் கிழக்கு மாகாணத்திலே சூரியன் ஒலிபரப்பாவதில்லை என்பதுதான். இருந்தாலும் சில காலத்தின் பின் சூரியன் கிழக்கிலே ஒலிக்க ஆரம்பித்ததும் மட்டற்ற மகிழ்சி அடைந்தேன்.
அவரால் சூரியனிலே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தலைப்பிலே நிகழ்சிகள் வழங்கப்படும் பொது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். அதிலும் குறிப்பாக வெள்ளிக் கிழமைகளிலே இலக்கிய நாள் நிகழ்சி என்னை மிகவும் கவர்ந்தது. பல நிகழ்சிகள் நேரடியாக கேட்க முடியவில்லை. ஒலிப்பதிவு செய்தே கேட்டு வந்தேன்.
இன்று பல அறிவிப்பாளர்கள் தங்களை மற்றவர்களிடம் வெளிக்காட்டிக் கொள்ளவும் தாங்களே பெரியவர்கள் என்று அகங்காரத்தோடு இருக்கும்போது லோஷன் அண்ணாவோ தான் ஒரு பிரபலமான அறிவிப்பாளன் என்று இல்லாமல் எல்லோருடனும் சமமாக மதிக்கின்ற நிலைதான் அவரை இன்றும் பல புகழோடு நிலைத்திருப்பதட்கு காரணமாகும்.
இவர் தனக்கு கீழ்வேலை செய்கின்றவர்களையும் சமமாக மதிக்கின்ற பண்பினைக் கொண்டவர். ஒலிபரப்புத் துறை போட்டி நிறைந்த இந்த சூழலிலே ஒலிபரப்புபரப்பு நுட்பங்களை மற்றவர்களுக்கு சொல்லிக்கொடுக்க எவரும் விரும்பமாட்டார்கள் ஆனால் இவரோ பலரின் வளர்ச்சிக்கு பல ஒலிபரப்பு நுட்பங்களை சொல்லிக்கொடுத்து வருகின்றார். பல ஒலிபரப்பாளர்களை உருவாக்கி இருக்கின்றார்.
எந்த ஒரு விடயத்தை எடுத்துக் கொண்டாலும், என்ன கேள்வியை கேட்டாலும் அது தொடர்பான அனைத்து விபரங்களையும் உடனே சொல்லுகின்ற விதம் எப்படி இவரால் முடிகின்றது என்று இன்றும் நான் யோசித்துப் பார்ப்பதுண்டு.
யாராக இருந்தாலும் திறமையானவர்களை பாராட்டுகின்ற நல்ல குணமும், விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளும் நல்ல மனப்பாண்மையும் இவர் எல்லோராலும் விரும்பப்படுவதட்குரிய காரணங்களில் ஒன்றாக இருக்கலாம். யாராக இருந்தாலும் சரியான விமர்சனங்களாக இருந்தால் ஏற்றுக் கொள்ளும் இவரது கொள்கை என்னை மிகவும் கவர்ந்தது.
அதேபோன்று பல வலைப்பதிவர்களை உருவாக்கி இருக்கின்றார். நான் கூட இவரது வலைப்பதிவைப் பார்த்துத்தான் எப்படி எழுதலாம் என்ற விடயங்களை அறிந்து கொண்டேன்.
இன்னும் இவரைப் பற்றி பல விடயங்களை சொல்லிக்கொண்டே போகலாம். ஒரு சிறந்த ஒலிபரப்பாளன். சிறந்த வலைப்பதிவர். ஒரு சிறந்த மனிதர் என்று மொத்தத்தில் சொல்லிவிடலாம்.
இவருக்கு நாளை சாகித்திய விருது கிடைப்பது எனக்கு மட்டற்ற மகிழ்சியை தருகின்றது. இந்த விருது மட்டுமல்ல இன்னும் பல விருதுகளை பல துறைகளிலும் பெற வேண்டும் என்று வாழ்த்துவதோடு இறைவனையும் பிராத்திக்கின்றேன்.
மற்றும் நாளை சாகித்திய விருதினைப் பெறும் எமது வலைப்பதிவர் மேமன் கவி உட்பட அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.
48 comments: on "இவர் பின்னால் ஒரு கூட்டமே இருக்கு"
முதல்ல லோஷனுக்கு எனது வாழ்த்துக்கள்
திறமைக்கு கிடைத்த பரிசு,
நானும் என் பங்குக்கு சொல்லுறேன், அப்போ எனக்கு 11 அல்லது 12 வருடங்கள் தான் எனக்கு வயது, இவர் வானொலி மாமாவோடு நிகழ்ச்சி செய்த காலம் சிறுவர் மலர் என்று நினைக்கிறேன் வானொலிப் பெட்டிகருகில் தவளத் தொடகியதே இந்த நிகழ்ச்சியின் பால்தான், என் முதல் கவிதையை வாசித்தவரும் இவர்தான். இந்தப் புயலோடு எனக்கும் நட்பு இருக்கு.
மகிழ்ச்சி அடைகிறேன் அவர் அறிவாரோதெரியல
நன்றி சந்த்ரு
நல்லா இருக்கு இந்தப் பதிவுவும்
சாகித்திய விருது பெறும் தமிழில் சாதனை சாதித்த லோஷன் அண்ணாவுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்..............
ஸ்ரீ.அச்சுதன்
பங்குச்சந்தை - ஸ்ரீலங்கா
லோஷன் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் .
அவருடனான உங்கள் அனுபவம் ரொம்ப நல்லாருந்திருக்கும் போல !
லோஷனுக்கும், விருது பெறும் மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி சந்ரு.
//நான் சிறு வயதிலிருந்தே (என் நினைவு தெரிந்த நாள்முதல்) //
அப்ப உங்களுக்கு இபப் வயசு போய்ற்று எண்டு ஒத்துக் கொள்றீங்க தானே?
சரி சரி...
சாகித்திய விருதினைப் பெறும் பதிவர், ஒலிபரப்பாளர் லோஷன் அண்ணா, மேமன் கவி ஐயா ஆகியொருக்கும் ஏனையோருக்கும் எனது வாழ்த்துக்கள்....
தொடர்ந்து உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்...
சந்ரு உங்களுக்கு வெற்றியில் வேலை நிச்சயம்? இதெல்லாம் ஒரு பிழைப்பு....
//அதேபோன்று பல வலைப்பதிவர்களை உருவாக்கி இருக்கின்றார். நான் கூட இவரது வலைப்பதிவைப் பார்த்துத்தான் எப்படி எழுதலாம் என்ற விடயங்களை அறிந்து கொண்டேன்.//
உணமைதான் சந்ரு நானும் வலைப்பக்கம் தொடங்குவோமா? அப்படி தொடங்கினால் என்ன எழுதுவது என யோசித்திருந்த போது இவரது பக்கத்தை பார்த்து தான் பல விடயங்களை கற்றுக் கொண்டேன்..
லோஷனின் சக்தியில் முதல் நாள் அறிவிப்பு சூரியனின் முதல் நாள் அறிவிப்பிலிருந்து தொடர்ந்து அவரை ரசித்திருக்கிறேன். இன்று விடியலோடுதான் எனக்கும் விடிகிறது.
லோஷனுக்கு வாழ்த்துக்கள், மேலும் பல சிகரங்களை அவர் தொட வாழ்த்துவோம்...
திறமைக்கு கிடைத்த பரிசு,
வாழ்த்துக்கள் லோஷன் அண்ணா!! இது அவராக சேர்த்த கூட்டம் இல்லை. அன்பால தானாக சேர்ன்த கூட்டம்.
//நான் ஒலிபரப்புத் துறைக்கு போக வேண்டும் என்று அதிக ஆசையை என்னுள்ளே வளர்ப்பதற்கு காரணமானது லோஷன் அண்ணாவின் அறிவிப்புத்தான்.//
shame shame puppy shame
நான் சிறு பிள்ளையாக இருக்கும் போது, எங்கள் வீட்டில் இரண்டு வானொலி பெட்டிகள் இருந்தன. ஒன்று அப்பாவுக்கு, மற்றொன்று பிள்ளைகளுக்கு. அந்த வானொலியை கைப்பற்ற எனக்கும், என் அண்ணாவுக்கும் இடையே மிகப் பெரிய யுத்தமே நடக்கும். கே.எஸ்.ராஜா, ராஜேஸ்வரி சண்முகம, நடராஜர் சிவம் வரிசையில் லோஷனும். வாழ்த்துக்கள்.
சந்ரு முதலில் உங்கள் லோஷன் அண்ணாவுக்கு
வாழ்த்துக்கள் அவரின் உழைப்புக்குக் கிடைத்த
மகத்தான வெற்றி. நானும் பெரும் மகிழ்ச்சி
அடைகிறேன்.
இதே விருதை நீங்களும் வாங்குவீர்கள் என்ற
நம்பிக்கை எனக்கு உண்டு .காலம் வரும்
அதுவரை.... உங்கள் துடிப்பு, ஆர்வம்,முயற்சி,
நம்பிக்கை, புரிந்துணர்வு,பணிவன்பு,விசுவாசம்
இத்துடன் என்னால் முடியும் என்ற மந்திரம்
தினம் மனதில் ஒலித்தால் ..நம்மால் ஆகாதது
ஒன்றுமில்லை.
ஒருவர் செய்தவற்றை{இதில் பல உதவிகளும் அடங்கும்}
நாம் ஒருபோதும் மறக்கக் கூடாது என்பதற்காக ஓர்
உதாரணம் உங்கள் இடுகை .இதைவிட ஓர் நன்றி
உணர்வுக்கு வேறென்ன வேண்டும்?
உங்களுக்கு என் நன்றி.
//நான் அதிகம் நேசிக்கின்ற லோஷன் அண்ணாவுக்கு சாகித்திய விருது கிடைக்கப்போகின்றது என்ற சந்தோசமான செய்தியை நண்பர் வந்தியின் வலைப்பதிவு முலமாக அறிந்து கொண்டேன்//
நண்பர் லோஷன் அவர்களுக்கு வாழ்த்துகள்
//அதேபோன்று பல வலைப்பதிவர்களை உருவாக்கி இருக்கின்றார். நான் கூட இவரது வலைப்பதிவைப் பார்த்துத்தான் எப்படி எழுதலாம் என்ற விடயங்களை அறிந்து கொண்டேன்.//
என்னையும் எழுத வைத்தவர் இவர்தான். வாழ்த்துகள் லோஷன் அண்ணா
//ramesh-றமேஸ் கூறியது...
முதல்ல லோஷனுக்கு எனது வாழ்த்துக்கள்
திறமைக்கு கிடைத்த பரிசு,
நானும் என் பங்குக்கு சொல்லுறேன், அப்போ எனக்கு 11 அல்லது 12 வருடங்கள் தான் எனக்கு வயது, இவர் வானொலி மாமாவோடு நிகழ்ச்சி செய்த காலம் சிறுவர் மலர் என்று நினைக்கிறேன் வானொலிப் பெட்டிகருகில் தவளத் தொடகியதே இந்த நிகழ்ச்சியின் பால்தான், என் முதல் கவிதையை வாசித்தவரும் இவர்தான். இந்தப் புயலோடு எனக்கும் நட்பு இருக்கு.
மகிழ்ச்சி அடைகிறேன் அவர் அறிவாரோதெரியல
நன்றி சந்த்ரு
நல்லா இருக்கு இந்தப் பதிவுவும்//
நானும் சிறுவர் மலர் நிகழ்சிகளை கேட்டிருக்கிறேன் அப்போது என்னால் லோஷன் அண்ணாவைத் தெரியாது.
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.
//Atchu கூறியது...
சாகித்திய விருது பெறும் தமிழில் சாதனை சாதித்த லோஷன் அண்ணாவுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்..............
ஸ்ரீ.அச்சுதன்
பங்குச்சந்தை - ஸ்ரீலங்கா//
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்.
//Starjan ( ஸ்டார்ஜன் ) கூறியது...
லோஷன் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் .
அவருடனான உங்கள் அனுபவம் ரொம்ப நல்லாருந்திருக்கும் போல !//
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்.
//சுசி கூறியது...
லோஷனுக்கும், விருது பெறும் மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி சந்ரு.//
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்.
லோஷன் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் .
///கனககோபி கூறியது...
//நான் சிறு வயதிலிருந்தே (என் நினைவு தெரிந்த நாள்முதல்) //
அப்ப உங்களுக்கு இபப் வயசு போய்ற்று எண்டு ஒத்துக் கொள்றீங்க தானே?///
எப்பவும் சிறுவனாகவே இருக்க முடியுமா? இப்போ நான் இளைஞன்.
//சரி சரி...
சாகித்திய விருதினைப் பெறும் பதிவர், ஒலிபரப்பாளர் லோஷன் அண்ணா, மேமன் கவி ஐயா ஆகியொருக்கும் ஏனையோருக்கும் எனது வாழ்த்துக்கள்....
தொடர்ந்து உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்...//
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்.
வானொலி ரசிகன் பார்வையில் சிறப்பாகத் தந்தீர்கள்
லோஷனுக்கும் மேமன் கவி அவர்களுக்கும் இங்கேயும் ஒரு முறை வாழ்த்துக்கள் ;)
//என்ன கொடும சார் கூறியது...
சந்ரு உங்களுக்கு வெற்றியில் வேலை நிச்சயம்? இதெல்லாம் ஒரு பிழைப்பு....//
எனக்கு வேலை கிடைப்பதைப் பற்றி நீங்கள் சொல்லவேண்டிய அவசியமில்லை. ஒருவரை நாங்கள் வாழ்த்துகிறோம் என்றால். அவரிடம் எதனையும் எதிர் பார்த்துத்தான் வாழ்த்த வேண்டும் என்பதில்லை. வேண்டுமானால் நீங்கள் யாரிடமாவது எதனையும் எதிர் பார்த்துத்தான் வாழ்த்துவிர்களோ தெரியாது.
எனக்கு வெற்றியில் வேலை கிடைக்கவேண்டும் என்ற அவசியமில்லை பலதடவை நான் குறிப்பிட்டிருக்கின்றேன். ஒருவரை பின்பற்றுவது அவரிடம் இருந்து எதனையும் எதிர் பார்த்து அல்ல.
ஒருவரை வாழ்த்தத்தான் பிடிக்கவில்லை பொறாமை என்றாலும் வாழ்த்துவோரையாவது வாழ்த்த விடுங்கள். பொறாமையா விலகி விடுங்கள்.
உங்கள் பிரஷ்சினைதான் என்ன பதிவர்களுக்கு இப்படி பின்னுட்டமிடுவதுதான் உங்கள் வேலையா? உங்கள் பிரஷ்சினைகளை சொல்லுங்கள். இப்படிப்பட்ட நாகரிகமற்ற வேலைகளை செய்யாதீர்கள்.
உங்களிடம் நேரடியாக சொல்கிறேன் எனது வலைப்பதிவு பக்கம் நீங்கள் வரவேண்டாம். நான்கு பேராவது நல்லவர்கள் வரட்டும்.
//யோ வொய்ஸ் (யோகா) கூறியது...
//அதேபோன்று பல வலைப்பதிவர்களை உருவாக்கி இருக்கின்றார். நான் கூட இவரது வலைப்பதிவைப் பார்த்துத்தான் எப்படி எழுதலாம் என்ற விடயங்களை அறிந்து கொண்டேன்.//
உணமைதான் சந்ரு நானும் வலைப்பக்கம் தொடங்குவோமா? அப்படி தொடங்கினால் என்ன எழுதுவது என யோசித்திருந்த போது இவரது பக்கத்தை பார்த்து தான் பல விடயங்களை கற்றுக் கொண்டேன்..
லோஷனின் சக்தியில் முதல் நாள் அறிவிப்பு சூரியனின் முதல் நாள் அறிவிப்பிலிருந்து தொடர்ந்து அவரை ரசித்திருக்கிறேன். இன்று விடியலோடுதான் எனக்கும் விடிகிறது.
லோஷனுக்கு வாழ்த்துக்கள், மேலும் பல சிகரங்களை அவர் தொட வாழ்த்துவோம்...//
பல இலங்கைப் பதிவார்கள் லோஷன் அண்ணாவைப் பார்த்துத்தான் பதிவெழுத வந்தவர்கள் என்பது லோஷன் அண்ணாவுக்குத்தான் பெருமை.
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்.
//தியாவின் பேனா கூறியது...
திறமைக்கு கிடைத்த பரிசு,//
உண்மைதான் அவரது திறமைக்கும் நல்ல உள்ளத்துக்கும் கிடைத்த பரிசுதான்.

//Abiman கூறியது...
வாழ்த்துக்கள் லோஷன் அண்ணா!! இது அவராக சேர்த்த கூட்டம் இல்லை. அன்பால தானாக சேர்ன்த கூட்டம்.//
முற்று முழுதான உண்மை
//VARO கூறியது...
//நான் ஒலிபரப்புத் துறைக்கு போக வேண்டும் என்று அதிக ஆசையை என்னுள்ளே வளர்ப்பதற்கு காரணமானது லோஷன் அண்ணாவின் அறிவிப்புத்தான்.//
shame shame puppy shame//
ஆஹா நீங்களுமா?.
// tamiluthayam கூறியது...
நான் சிறு பிள்ளையாக இருக்கும் போது, எங்கள் வீட்டில் இரண்டு வானொலி பெட்டிகள் இருந்தன. ஒன்று அப்பாவுக்கு, மற்றொன்று பிள்ளைகளுக்கு. அந்த வானொலியை கைப்பற்ற எனக்கும், என் அண்ணாவுக்கும் இடையே மிகப் பெரிய யுத்தமே நடக்கும். கே.எஸ்.ராஜா, ராஜேஸ்வரி சண்முகம, நடராஜர் சிவம் வரிசையில் லோஷனும். வாழ்த்துக்கள்.//
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்.
//Kala கூறியது...
சந்ரு முதலில் உங்கள் லோஷன் அண்ணாவுக்கு
வாழ்த்துக்கள் அவரின் உழைப்புக்குக் கிடைத்த
மகத்தான வெற்றி. நானும் பெரும் மகிழ்ச்சி
அடைகிறேன்.
இதே விருதை நீங்களும் வாங்குவீர்கள் என்ற
நம்பிக்கை எனக்கு உண்டு .காலம் வரும்
அதுவரை.... உங்கள் துடிப்பு, ஆர்வம்,முயற்சி,
நம்பிக்கை, புரிந்துணர்வு,பணிவன்பு,விசுவாசம்
இத்துடன் என்னால் முடியும் என்ற மந்திரம்
தினம் மனதில் ஒலித்தால் ..நம்மால் ஆகாதது
ஒன்றுமில்லை.
ஒருவர் செய்தவற்றை{இதில் பல உதவிகளும் அடங்கும்}
நாம் ஒருபோதும் மறக்கக் கூடாது என்பதற்காக ஓர்
உதாரணம் உங்கள் இடுகை .இதைவிட ஓர் நன்றி
உணர்வுக்கு வேறென்ன வேண்டும்?
உங்களுக்கு என் நன்றி.//
நம்பிக்கை வைத்தால் முடியாதது எதுவுமில்லை.
உங்கள் அன்புக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்.
//ஆ.ஞானசேகரன் கூறியது...
//நான் அதிகம் நேசிக்கின்ற லோஷன் அண்ணாவுக்கு சாகித்திய விருது கிடைக்கப்போகின்றது என்ற சந்தோசமான செய்தியை நண்பர் வந்தியின் வலைப்பதிவு முலமாக அறிந்து கொண்டேன்//
நண்பர் லோஷன் அவர்களுக்கு வாழ்த்துகள்//
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்.
//Subankan கூறியது...
//அதேபோன்று பல வலைப்பதிவர்களை உருவாக்கி இருக்கின்றார். நான் கூட இவரது வலைப்பதிவைப் பார்த்துத்தான் எப்படி எழுதலாம் என்ற விடயங்களை அறிந்து கொண்டேன்.//
என்னையும் எழுத வைத்தவர் இவர்தான். வாழ்த்துகள் லோஷன் அண்ணா//
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்.
//Mrs.Menagasathia கூறியது...
லோஷன் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் .//
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்.
//கானா பிரபா கூறியது...
வானொலி ரசிகன் பார்வையில் சிறப்பாகத் தந்தீர்கள்
லோஷனுக்கும் மேமன் கவி அவர்களுக்கும் இங்கேயும் ஒரு முறை வாழ்த்துக்கள் ;)//
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்.
சாகித்திய விருதினைப் பெறும் பதிவர், ஒலிபரப்பாளர் லோஷன் அண்ணா,அவர்களுக்கு வாழ்த்துகள்.
மேலும் பல சிகரங்களை அவர் தொட வாழ்த்துவோம்...//
மன்னிக்கவும் சந்ரு, நமது வானொலியில் கொஞ்சம் வேலை அதிகமான காரணத்தால் பதிவுலகுக்கு அடிக்கடி வரமுடியவில்லை, அத்தோடு கொஞ்சம் காச்சலும் நம்மை அடிக்கடி காதலித்ததால் இன்னும் சிரமாகிவிட்டது ...
இருந்தாலும் தாமதமாக வாழ்த்துக்கள் சொல்வதற்கு மன்னிக்கவும்,,,,
இருந்தாலும் சகோதரர் லோஷனுக்கு அன்பான வாழுக்கள் , அத்தோடு கவிக்குக் என் அன்பு வாழ்த்துக்கள்......
அன்பு நண்பர்
லோஷனோடு நிறைய இருக்கிறது பேச ஒரு நாள் பதிவின் மூலமாக பேசலாம்......
லோஷனுக்கும், விருது பெறும் மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
நான் கேட்டதில்லை என்றாலும் நீங்கள் சொல்வதிலிருந்து நன்றாக இருக்கும் என்று உணர்கிறேன்
தகுதியானவர்களுக்கு விருதுகிடைத்தது மகிழ்ச்சியாக உள்ளது. தகுதி இல்லாதவர்களுக்கும் கிடைப்பது வருத்தமாக உள்ளது. விருதைப்பற்றி தரக்குறைவாக பத்திரிகையில் எழுதியவருக்கும் விருது கிடைத்துள்ளது.
வானதி
வாழ்த்துக்கள் திரு லோசன் அவர்களுக்கு.
//sivatharisan கூறியது...
சாகித்திய விருதினைப் பெறும் பதிவர், ஒலிபரப்பாளர் லோஷன் அண்ணா,அவர்களுக்கு வாழ்த்துகள்.
மேலும் பல சிகரங்களை அவர் தொட வாழ்த்துவோம்...//
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்.
//பிரபா கூறியது...
மன்னிக்கவும் சந்ரு, நமது வானொலியில் கொஞ்சம் வேலை அதிகமான காரணத்தால் பதிவுலகுக்கு அடிக்கடி வரமுடியவில்லை, அத்தோடு கொஞ்சம் காச்சலும் நம்மை அடிக்கடி காதலித்ததால் இன்னும் சிரமாகிவிட்டது ...
இருந்தாலும் தாமதமாக வாழ்த்துக்கள் சொல்வதற்கு மன்னிக்கவும்,,,,
இருந்தாலும் சகோதரர் லோஷனுக்கு அன்பான வாழுக்கள் , அத்தோடு கவிக்குக் என் அன்பு வாழ்த்துக்கள்......
அன்பு நண்பர்
லோஷனோடு நிறைய இருக்கிறது பேச ஒரு நாள் பதிவின் மூலமாக பேசலாம்......//
தெரியும்தானே எனக்கு உங்களுக்கு நேரம் கிடைக்கவில்லை என்பது..
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்.
//அக்பர் கூறியது...
லோஷனுக்கும், விருது பெறும் மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்.//
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்.
//ஸ்ரீராம். கூறியது...
நான் கேட்டதில்லை என்றாலும் நீங்கள் சொல்வதிலிருந்து நன்றாக இருக்கும் என்று உணர்கிறேன்//
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்.
//வானதி கூறியது...
தகுதியானவர்களுக்கு விருதுகிடைத்தது மகிழ்ச்சியாக உள்ளது. தகுதி இல்லாதவர்களுக்கும் கிடைப்பது வருத்தமாக உள்ளது. விருதைப்பற்றி தரக்குறைவாக பத்திரிகையில் எழுதியவருக்கும் விருது கிடைத்துள்ளது.
வானதி//
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்.
//சி. கருணாகரசு கூறியது...
வாழ்த்துக்கள் திரு லோசன் அவர்களுக்கு.//
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்.
//சந்ரு உங்களுக்கு வெற்றியில் வேலை நிச்சயம்? இதெல்லாம் ஒரு பிழைப்பு....//இது வேறுயாரோ என்னுடைய பெயரைப்பாவித்து இட்டுள்ள பின்னூட்டம். உங்க்ளால் proof பண்ணமுடியுமா?
என்னுடைய பெயரைப்பாவித்து யாரோ சொல்வதெற்கெல்லாம் நான் பதில் சொல்லவேண்டிய அவசியம் இல்லை..
என் மீது அளவு கடந்த அன்பு வைத்துள்ள உங்களுக்கு நன்றி சந்த்ரு..
உங்கள் ஒலிபரப்பு வாழ்க்கைக்கு நான் எதோ ஒருவிதத்தில் உந்துதலாய் அமைந்ததில் மகிழ்ச்சி..
உங்களுக்கும் வாழ்த்திய ஏனைய நண்பர்களுக்கும் நன்றிகள்..
Post a Comment