Showing posts with label லோஷன். Show all posts
Showing posts with label லோஷன். Show all posts

Monday, 23 November 2009

இவர் பின்னால் ஒரு கூட்டமே இருக்கு



இன்று வலைப் பதிவுகளை பார்த்துக்கொண்டிருந்தபோது. நண்பர் வந்தியின் வலைப் பதிவைப் பார்த்ததும் மனதிலே மிகவும் சந்தோசமாக இருந்தது. நான் அதிகம் நேசிக்கின்ற லோஷன் அண்ணாவுக்கு சாகித்திய விருது கிடைக்கப்போகின்றது என்ற சந்தோசமான செய்தியை நண்பர் வந்தியின் வலைப்பதிவு முலமாக அறிந்து  கொண்டேன். லோஷன் அண்ணாவைப் பற்றி நீண்ட நாட்களாக பதிவிட வேண்டும் என்ற ஆவலோடு இருந்த நான் இன்று அவரைப் பற்றி சில விடயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

நான் சிறு வயதிலிருந்தே (என் நினைவு தெரிந்த நாள்முதல்) வானொலிக்கு அடிமையான ஒருவன். அன்று முதல் இன்றுவரை பல ஒலிபரப்பாளர்களால் அறிவிப்புத் துறைக்கு  ஈர்க்கப்பட்டவன். அதன் பயனாக இன்று நானும் ஒரு ஒலிபரப்பாளன்.

நான் ஒலிபரப்புத் துறைக்கு ஈர்க்கப்படுவதட்கு முதல் காரணமாக இருந்தவர் கே. எஸ். ராஜாவாக இருந்தாலும். நான்  ஒலிபரப்புத் துறைக்கு போக வேண்டும் என்று அதிக ஆசையை என்னுள்ளே வளர்ப்பதற்கு காரணமானது லோஷன் அண்ணாவின் அறிவிப்புத்தான்.


எப்பொழுதும் என் கையில் ஒரு சிறிய வானொலி பெட்டி  இருக்கும் சாப்பிடும் போதும்,படிக்கும்போது, எங்கேயாவது போவதென்றாலும் கையிலே அந்த வானொலிப்பெட்டி இருக்கும். அந்தளவுக்கு   வானொலிமீது காதல் கொண்டவன். சுனாமி வந்தபோது நான் எடுத்துக்கொண்டு ஓடிய ஒரு பொருள் வானொலிப் பெட்டி மட்டுமே.

நான் சிறு வயது முதல் இலங்கை ஒலிபரப்புக்  கூட்டுத்தாபன நிகழ்சிகளை கேட்டு வருவேன்.  தனியார் வானொலிகள் வந்தபோதும் ஒரு போதும்  என்ன நிகழ்சிகள் தனியார் வாநோளிகளிலே போகின்றது என்று கூட ஒரு போதும் பார்த்ததில்லை.

ஒருநாள் காலையில் எதிர் பாராத விதமாக வானொலியைக் கிறுக்கிக் கொண்டிருக்கும்போது சக்தி வானொலி என்னை அறியாமலேயே பிடிபட்டது. அப்போது எப்படி நிகழ்சி போகிறது என்று 5 நிமிடம் பார்ப்போம் என்று இருந்த எனக்கு மாற்றுவதற்கு மனம் இடம் கொடுக்கவில்லை. ஒரு போதும்  என்னால் அறியப்படாத ஒரு குரல் மிகவும் சிறப்பான முறையிலே நிகழ்சிகளை தொகுத்து வழங்குவதை பார்த்ததும் தொடர்ந்து அவரது நிகழ்சிகளை கேட்கவேண்டும் என்ற ஆவல் என்னுள்ளே வந்தது. தொடர்ந்து சக்தியின் நிகழ்சிகளை கேட்க ஆரம்பமானேன்.

அவரால் நிகழ்சிகள் தொகுத்து வழங்கப்படும் விதம். வழங்கப்படும் தகவல்கள், குரல் எல்லாமே என்னை கவர்ந்து விட்டன. ஆனாலும் நான் பாடசாலைக்கு செல்வதால் அவரது காலை நேர நிகழ்சிகளை கேட்க முடியவில்லையே என்ற கவலைதான். அப்போது என்னுள்ளே ஒரு எண்ணம் தோன்றியது. ஒளிப்பதிவு செய்யக்கூடிய ஒரு வானொலிப் பெட்டியை வாங்கினால் நான் இல்லாத நேரம் வீட்டில் உள்ளவர்களால் நிகழ்சிகளை ஒலிப்பதிவு செய்ய முடியும்  நான் வந்து கேட்டுக்கொள்ளலாம் என்ற எண்ணம் வந்தது. செயலிலும் இறங்கிவிட்டேன்.

நிகழ்சிகளை நேரடியாக கேட்க முடியாவிட்டாலும் ஒலிப்பதிவு செய்து கேட்பதிலே சந்தோசம் இருந்தது.  அவரால் சக்தி வானொலியிலே செய்யப்பட்ட வணக்கம் தாயகம், ஆனந்த இரவு போன்ற நிகழ்சிகள் இன்றும் என்னால் மறக்க முடியாத நிகழ்சிகளே. என்னை பிரமிக்க வைத்த அமாவாசை இரவு நிகழ்சி என்றும் என்னால் மறக்க முடியாது. ஒரு பேய் பங்களாவுக்குள்ளே ஒரு அமாவாசை இரவிலே ஆய்வு செய்ய புறப்பட்ட குழுவின் துணிச்சலை பார்த்து வியந்ததோடு இப்போது நினைக்கும்போதும் அவர்கள் அத்தனை பேரினதும்  திறமைகளையும் பாராட்டவேண்டும்.

அப்போது எதிர்பாராதவிதமாக எனக்கு கிடைத்த ஏமாற்றம் லோஷன் அண்ணா சூரியன் வானொலிக்கு மாற்றம் பெற்று சென்றதுதான். காரணம் கிழக்கு மாகாணத்திலே சூரியன் ஒலிபரப்பாவதில்லை என்பதுதான். இருந்தாலும் சில காலத்தின் பின் சூரியன் கிழக்கிலே ஒலிக்க ஆரம்பித்ததும் மட்டற்ற மகிழ்சி அடைந்தேன்.

அவரால் சூரியனிலே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தலைப்பிலே நிகழ்சிகள் வழங்கப்படும் பொது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். அதிலும் குறிப்பாக வெள்ளிக் கிழமைகளிலே இலக்கிய நாள்  நிகழ்சி என்னை மிகவும் கவர்ந்தது. பல நிகழ்சிகள் நேரடியாக கேட்க முடியவில்லை. ஒலிப்பதிவு செய்தே கேட்டு வந்தேன்.

இன்று பல அறிவிப்பாளர்கள் தங்களை மற்றவர்களிடம் வெளிக்காட்டிக் கொள்ளவும் தாங்களே பெரியவர்கள் என்று அகங்காரத்தோடு இருக்கும்போது லோஷன் அண்ணாவோ தான் ஒரு பிரபலமான அறிவிப்பாளன் என்று இல்லாமல் எல்லோருடனும் சமமாக மதிக்கின்ற நிலைதான் அவரை இன்றும் பல புகழோடு நிலைத்திருப்பதட்கு காரணமாகும்.

இவர் தனக்கு  கீழ்வேலை செய்கின்றவர்களையும் சமமாக மதிக்கின்ற பண்பினைக் கொண்டவர். ஒலிபரப்புத் துறை போட்டி நிறைந்த இந்த   சூழலிலே ஒலிபரப்புபரப்பு நுட்பங்களை மற்றவர்களுக்கு சொல்லிக்கொடுக்க எவரும் விரும்பமாட்டார்கள் ஆனால் இவரோ பலரின் வளர்ச்சிக்கு பல ஒலிபரப்பு நுட்பங்களை சொல்லிக்கொடுத்து வருகின்றார். பல ஒலிபரப்பாளர்களை உருவாக்கி இருக்கின்றார்.

எந்த ஒரு விடயத்தை எடுத்துக் கொண்டாலும், என்ன கேள்வியை கேட்டாலும் அது தொடர்பான அனைத்து விபரங்களையும் உடனே சொல்லுகின்ற விதம் எப்படி இவரால் முடிகின்றது என்று இன்றும் நான் யோசித்துப் பார்ப்பதுண்டு.

யாராக இருந்தாலும் திறமையானவர்களை பாராட்டுகின்ற நல்ல குணமும், விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளும்  நல்ல மனப்பாண்மையும் இவர் எல்லோராலும் விரும்பப்படுவதட்குரிய காரணங்களில் ஒன்றாக இருக்கலாம். யாராக இருந்தாலும் சரியான விமர்சனங்களாக இருந்தால் ஏற்றுக் கொள்ளும்  இவரது கொள்கை என்னை மிகவும் கவர்ந்தது.

அதேபோன்று பல வலைப்பதிவர்களை உருவாக்கி இருக்கின்றார். நான் கூட இவரது வலைப்பதிவைப் பார்த்துத்தான் எப்படி எழுதலாம் என்ற விடயங்களை அறிந்து கொண்டேன்.

இன்னும் இவரைப் பற்றி பல விடயங்களை சொல்லிக்கொண்டே போகலாம். ஒரு சிறந்த ஒலிபரப்பாளன். சிறந்த வலைப்பதிவர். ஒரு சிறந்த மனிதர் என்று மொத்தத்தில்  சொல்லிவிடலாம்.

இவருக்கு நாளை சாகித்திய விருது கிடைப்பது எனக்கு மட்டற்ற மகிழ்சியை தருகின்றது. இந்த விருது மட்டுமல்ல இன்னும் பல விருதுகளை பல துறைகளிலும் பெற வேண்டும் என்று வாழ்த்துவதோடு இறைவனையும் பிராத்திக்கின்றேன்.


மற்றும் நாளை சாகித்திய விருதினைப் பெறும் எமது வலைப்பதிவர் மேமன் கவி உட்பட அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.
read more...

Tuesday, 27 October 2009

அந்தரங்கம் என்றால் என்ன?

எப்பொழுதோ எழுத நினைத்தது நேரம் இடம் கொடுக்காததால் இன்று இடுகையாக வருகின்றது.


அண்மையிலே நண்பர் சதீஸ் லோஷனுடன் அந்தரங்கம். பகுதி- 1 எனும் தலைப்பிலே ஒரு பதிவிட்டிருந்தார். இப்பதிவிலே ஒலி, ஒளிபரப்பாளரும், வலைப்பதிவருமாகிய லோஷன் அவர்களை பேட்டி கண்டு இருந்தார் சதீஸ். இதிலே லோஷன் தன்னைப் பற்றிய பல விடயங்களைப் சொல்லி இருந்தார்.

இந்த இடுகைக்கு சில அனானிகள் திட்டித் தீர்த்து இருந்தனர். தலைப்பு தவறானது என்றும் வேறு அர்த்தத்தினைக் கொடுப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தனர். அவர்கள் அந்தரங்கம் என்பதனை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கின்றனர் என்பதனை மட்டும் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. எல்லோரும் ஆவலோடு எதிர் பார்த்த லோஷன் பற்றிய தொடர் பதிவு இன்னும் வரவில்லை.

அந்தரங்கம் என்பது என்ன? இந்த இடத்திலே பயன் படுத்தப்பட்டது சரியா? தவறா? என்னைப் பொறுத்தவரை இதனை தீர்மானிக்க வேண்டியது சதீஸ், மற்றும் லோஷன் இருவருமே இதில் நாம் அந்தரங்கம் எனும் சொல் பயன்படுத்த முடியாது என்று சொல்ல முடியாது.

அந்தரங்கம் என்பது வெளியிடப்படாத, வெளிவராத தகவல்களாக அமையலாம். இது எந்தத் தகவலாகவும் அமையலாம். அந்தரங்கம் எனும்போது நாம் தவறான எண்ணத்தோடு நோக்குவது தவறானது. நல்ல பல விடயங்கள் இதுவரை வெளியிடப்படாத விடயங்கள் வெளியிடப்பட்டிருக்கலாமல்லவா? இங்கே அந்தரங்கம் என்பது லோஷனால் இதுவரை வெளியிடப்படாத விடயங்கள் இந்த பேட்டியிலே வெளியிடப்பட்டிருக்கலாம். அது எந்த விடயமாகவும் அமையலாம்.

அப்பதிவுக்கு பின்னூட்டமிட்டிருப்போரின் பின்னூட்டத்தைப்பார்க்கும்போது. அந்தரங்கம் என்பதை வேறு விதமாக நோக்கியிருந்தனர். அப்படியானால் ஒருவரின் அந்தரங்க செயலாளர் எனும்போது நாம் தவறான கண்னோட்டத்தில் பார்ப்பதில்லையே. அப்படி இருக்கும்போது ஏன் இங்கே மட்டும் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கின்றோம்.

இத் தலைப்பு தவறானது என்று சொல்வோர் அந்தரங்கம் என்பதற்கான வரைவிலக்கணத்தினைச் சொல்லவும்.

நண்பர் சதீஸிசிடமிருந்து லோஷன் பற்றிய தொடர் பதிவையும் விரைவில் எதிர்பார்க்கின்றேன்
read more...