Saturday, 15 January 2011

வலைப்பதிவர்களுக்கும் வலைப்பதிவு வாசகர்களுக்கும் அவசர வேண்டுகோள்

கடும் மழை வெள்ளம் காரணமாக கிழக்கு மாகாண மக்கள் கடுமையாகப் பாதிக்கப் பட்டிருக்கின்றனர். அதிலும் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டமே அதிகளவாகப் பாதிக்கப் பட்டிருக்கின்றன.


மட்டக்களப்பிலே மழை குறைந்திருந்தாலும் தொடர்ந்து மழை பெய்து கொண்டுதான் இருக்கின்றது. படுவான் கரைப் பிரதேசத்துக்கான (புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசம்) தரைவழித் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. அப்பிரதேசத்துக்கான  போக்குவரத்து படகு மூலம் இடம் பெறுகின்றது.

அரசாங்கத்தினால் நிவாரணப் பணிகள் துரிதமாக முன்னெடுக்கப் பட்டு வருகின்றபோதிலும். பல இடங்களிலே சரியான முறையிலே உதவிகள் கிடைக்கவில்லை. இதற்கு சில அரச அதிகாரிகளின் அக்கறையில்லாத் தன்மையே காரணமாகும்.


பல பிரதேச மக்கள் பல்வேறுபட்ட கஸ்ரங்களை எதிர்நோக்கி வருகின்றனர். அம்மக்களுக்கு உடனடியாக உதவிகள் தேவைப்படுகின்றன.

இலங்கை வலைப்பதிவர்கள் பல்வேறுபட்ட உதவிகளைச் செய்து வருகின்றனர். பதிவர் வதீஸ் இப்போழுது மட்டக்களப்பிலேதான் இருக்கின்றார்.

வெளிநாடுகளிலே இருக்கின்ற சில பதிவர்கள் எவ்வாறு உதவலாம் என்று என்னுடன் தொடர்பு கொண்டு கேட்டிருந்தனர். வெளிநாடுகளிலே இருக்கின்ற பதிவர்கள் மாத்திரமல்ல வலைப்பதிவு வாசகர்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளைச் செய்ய முன்வரவேண்டும்.

வெளிநாடுகளிலே இருக்கின்றவர்கள் உதவ முன்வருகின்றபோது அவர்களை நிவாரணப் பணிகளிலே ஈடுபடுகின்ற அமைப்புக்களோடு இணைந்து தங்கள் பங்களிப்பினை வழங்குவதற்கு நான் ஏற்பாடுகளைச் செய்து கொடுக்க தயாராக இருக்கின்றேன்.

வெளிநாடுகளிலே இருப்பவர்களிடமிருந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை கண்டிப்பாக எதிர் பார்க்கின்றோம். எமது மக்களுக்காக குரல் கொடுக்கும் நாம் எமது மக்களின் துயரினையும் துடைப்போம். அனைவரும் முன்வாருங்கள்.


நானும் என்னுடைய நண்பர்கள் அனைவருமே நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றோம். இணையப்பக்கம் தொடர்ந்து இருக்க முடியாது.

என்னோடு தொடர்பு கொள்ள தொலைபேசி 0094778548295

read more...

Wednesday, 12 January 2011

வலைப்பதிவர்களுக்கு… அவசர உதவிக்கான அழைப்பு.

கிழக்கு மாகாணத்திலே தொடர்ந்தும் கடும்மழை பெய்து வருகின்றது. பல கிராமங்கள் நீரில் மூழ்கியிருக்கின்றன. அதிலும் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டம் அதிகமாகப் பாதிக்கப் பட்டிருக்கின்றன. 

தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால். தொடர்ந்தும் வெள்ள நிலமை மோசமடைந்து வருகின்றது. பல இடங்களிலே மக்கள் முகாம்களில் கூட இருக்க முடியாத அளவுக்கு வெள்ளம் இருக்கின்றது.

அரசாங்கத்தினாலும் அரச சார்பற்ற நிறுவனங்களினாலும் கிழக்கு மாகாண முதலமைச்சரினாலும் உடனுக்குடன் உடனடி நிவாரண சேவைகள் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இருந்தபோதும் தொடர்து பெய்துவரும் மழையினால் வெள்ளப் பெருக்கு அதிகரிப்பதனால். தினமும் மக்கள் தற்காலிக முகாம்களில் தஞ்சமடைகின்றனர்.

ஆகவே உடனடியாக அவர்களுக்கு உலருணவுப் பொருட்கள் உடைகள் சிறுவர்களுக்கான பால்மா வகைகள் பிஸ்கட் நுளம்பு வலைகள் மருந்துப் பொருட்கள் என்பன உடனடித் தேவையாக இருக்கின்றன.

வலைப்பதிவர்கள் நாமும் கஸ்ரப்படுகின்ற இந்த மக்களுக்கு எங்களால் முடிந்தவற்றை செய்ய வேண்டும். 

இலங்கை வலைப்பதிவர்கள் மட்டுமன்றி உலகெங்கும் இருக்கின்ற தமிழ் வலைப்பதிவர்களும். பாதிக்கப் பட்ட மக்களுக்கு எவ்வாறு உதவலாம் என்பதனைப் பற்றி சிந்திக்க வேண்டும்.

வெறுமனே எழுத்துக்களோடு மட்டும் நின்று விடாமல் வலைப்பதிவிற்கு வெளியே செயலிலும் இறங்க வேண்டும்.

read more...

Tuesday, 11 January 2011

கொள்கை இல்லாக் கூத்தாடிகள்...

தமிழக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அரசாங்கத்திற்கு எதிராகவும் மற்றும் சிலர் அரசாங்கத்தை மறைமுகமாச் சாடியும் வெளியிட்டுவரும் கருத்துக்கள் தொடர்பாகத் தமிழ் மக்கள் மத்தியில் பல்வேறுவிதமான சந்தேகங்கள் எழுந்துள்ளது. இன்று தமிழ் ஊடகங்களை மட்டுமே நம்பி அதன் மூலமாக அரசியல் நடத்திவரும் கூட்டமைப்பு அரசியல் தீர்வில் இதுவரை தமது உண்மையான நிலைப்பாட்டைத் தெரிவிக்கவில்லை.
நேற்று ஒரு அறிக்கை, இன்று அதற்கு முரணான கருத்து நாளை மற்றொரு சம்பந்தமே இல்லாத அறிக்கை என்பதாகவே இவர்களது காலம் கடந்து வருகிறது. தாளம்போடும் தமிழ் ஊடகங்கள் இவர்கள் சொல்வதுதான் தமிழ் மக்களது வேதவாக்கு என்பதாக அவர்களது சகல அறிக்கைகள் மற்றும் கருத்துக்களுக்கு அதிமுக்கியத்துவம் அளித்து வருகிறது கவலைக்குரிய விடயமே.
புலிகள் அழிக்கப்பட்ட பின்னர் தமிழ் மக்களின் இன்றைய உண்மையான மன உணர்வு என்ன என்பது கூட்டமைப்பால் புரிந்து கொள்ளமுடியாதுள்ளது. அதனால்தான் அவர்களால் ஒரு தீர்க்கமான முடிவிற்கு இன்னமும் வரமுடியாதுள்ளது. மாறுபட்ட கருத்துக்களை தமிழ் ஊடகங்களிலும், முகவரியற்ற இணையத்தளங்களிலும் தெரிவித்து உள்நாட்டிலுள்ள மக்களை ஒருவிதமாகவும், புலம்பெயர் சமூகத்தை இன்னொருவிதமாகவும் கூட்டமைப்பு குழப்பி வருகிறது. மக்கள் தம்மைப் புறக்கணித்து விடுவார்களோ எனும் பயம் கூட்டமைப்பு மத்தியில் இப்போது மிக வலுப்பெற்றுள்ளது.


அதே நிலையில்தான் உள்நாட்டிலுள்ள தமிழ் ஊடகங்களின் நிலையும் உள்ளது. தமிழ்க் கூட்டமைப்பிற்கு ஆதரவாக செய்திகளைப் பிரசுரிப்பதன் மூலமாகத் தமிழ் மக்களின் உணர்வுகளுக்குத் தாம் மதிப்பளிப்பதுபோல மதிப்பளித்து தமது ஊடகங்களைப் பிரபல்யமாக்கி விற்பனையையும் அதிகரித்து வருகின்றன. இந்த சாதகமான நிலைமையை கூட்டமைப்பும் சரியாகவே பயன்படுத்தி வருகின்றது.


அதேசமயம் வெளிநாடுகளிலிருந்து இங்கும் முகவரியில்லாத இணையத்தளங்கள் பலவற்றில் கூட்டமைப்பு முக்கியஸ்தர்கள், இலங்கைப் பத்திரிகைகளில் தாம் வெளியிடும் கருத்துக்களுக்கு முற்றிலும் முரணான வகையில் பிரசாரம் செய்து வருகின்றனர். இது புலிகளின் நினைவுடன் இன்னமும் தமது வாழ்வை வாழ்ந்துவரும் புலம்பெயர் சமூகத்தைத் திருப்திப்படுத்தவே என்பது எல்லோருக்கும் தெரியும்.


அவ்வாறு செயற்பட்டால்தான் உள்ளூர் மக்களுக்கு நிதி என புலம்பெயர் சமூகத்திடம் வசூல் செய்யலாம் என்பதை கூட்டமைப்பிலுள்ள ஒரு சிலர் நன்கறிந்து வைத்துள்ளனர். போட்டிபோட்டு விளம்பரத்தைத் தேடும் இணையத்தளங்களுக்கும் இந்தக் காலகட்டம் ஒரு உச்சமான காலகட்டம்தான். தம்மைப் பற்றிய நல்ல செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் இவர்கள் தாம் ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்லும்போது இணையத்தளங்களுக்கு விசேட கவனிப்பையும் செய்து வருகிறார்கள்.


அரசாங்கத்தை கடுமையான தொனியில் விமர்சித்துவரும் கூட்டமைப்பு எவ்வாறு அரசுடன் உண்மையான பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள முடியும் என்பதில் பலருக்கும் சந்தேகம் உள்ளது. தமிழ் மக்களது பிரச்சினைகளில் அக்கறையுடன் செயற்படும் அனைத்துக் கட்சிகளினதும் கருத்துக்களை உள்வாங்கியே தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளதாகத் தெரிவித்துள்ளது


தமிழ்க் கட்சிகளின் அரங்கமானது அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஆதரவாகவும், பலமான எதிர்ப்புக்கள் எதனையும் வெளிக்காட்டாதும் செயற்பட்டு வருகிறது. இதனால் அவர்கள் அரசிடமிருந்து தமிழ் மக்களுக்கு ஒரு சாதகமான தீர்வைப் பெற்றுத் தரலாம் என்று கூடக் கூறலாம். ஆனால் கூட்டமைப்பு நடந்து கொள்ளும் விதமானது அரசாங்கத்தை வெறுப்பூட்டுவதாகவே அமைந்துள்ளது. இதனால் இன்று அரங்கத்தின் கையே மேலோங்கியுள்ளது.


தமிழ் மக்களிடையே செல்வாக்கும், ஆதரவும் எமக்கே உள்ளது என இருதரப்பும் பீற்றிக் கொண்டாலும் அம்மக்களின் உண்மையான நிலைப்பாடு என்ன என்பது இன்று புரியாத ஒன்றாகவே உள்ளது. விடுதலைப் புலிகள் இருந்தபோது முதலிரு தடவைகள் தெரிவாகி அவர்கள் அழிந்த பின்னரும் அந்தப் பொய்யான வீரவசனங்களைத் தொடர்ந்தும் பேசி தமிழ் மக்களை ஏமாற்றி வெற்றி பெற்ற பலர் இன்னமும் கூட்டமைப்பில் அங்கம் வகித்து வருகின்றனர். அதனால் இவர்கள் தமிழ் மக்களின் இன்றைய உண்மையான நிலைப்பாட்டை முதலில் அறிந்து கொள்ள வேண்டும்.


தமிழ் மக்கள் இன்று பழம்பெரும் தமிழ்க் கட்சிகள் மீது மிகவும் வெறுப்புற்றுக் காணப்படுகின்றனர். அதனால் புதிதாக மாற்றுக் கட்சியையும், துடிப்புள்ள தலைவர்களையும் காணத் துடிக்கிறார்கள். புலி இருக்கும்போது பாடிய அதே பல்லவியைப் பாடிக் கொண்டு அரசாங்கத்தின் சலுகைகளையும் கிடைக்க விடாது தடுத்துக் கொண்டு தாம் மட்டும் சகல பாராளுமன்ற வரப்பிரசாதங்களையும் குறைவில்லாது, அனுபவித்தவரும் தமிழ்க் கட்சிகளின் தலைவர்களை தமிழ் மக்கள் வெறுத்து ஒதுக்கத் தொடங்கியுள்ளனர்.


யாழ்ப்பாணத்திலே இடம்பெறும் சம்பவங்களுக்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் பல இணையத்தளங்களில் தெரிவித்து வருகின்றார். அங்கு நடப்பது என்ன என்பதை இவர் அறியாதிருக்க வாய்ப்பில்லை. ஒரு ஆயுதக் குழுவிலிருந்து போராட்டத்தில் ஈடுபட்ட இவரால் எவ்வாறு? எதற்காக? இப்படியான சம்பவங்கள் இடம்பெறுகின்றன என்பதை இலகுவாக அறிந்து கொள்ள முடியும்.


அரசாங்கத்தின் மீது பழிபோடுவதற்காக எவரும் இதனைச் செய்யலாம். அதற்காக இவர் செய்கிறார். அல்லது இவரது ஆட்கள் செய்கிறார்கள் என்று அர்த்தமில்லை. அரசாங்கத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்த ஆயுதக் குழுக்கள் எவற்றையெல்லாம் செய்வர் என்பது போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இவருக்கும், அனைவருக்கும் தெரிந்த விடயமே.


இவற்றைக் கட்டுப்படுத்த அரசாங்கம் தீவிரமாகச் செயற்பட்டால் தமிழர் பிரதேசத்தில் இராணுவமும், பொலிஸாரும் அடாவடித் தனமாகச் செயற்படுகின்றனர் என்று கூட்டமைப்பின் இதே தலைவர்கள் குற்றம் சாட்டுவார்கள். அதனால்தான் அரசாங்கம் இவ்விடயத்தை மிகுந்த அவதானத்துடன் கையாண்டு வருகின்றது.


எனவே அரசாங்கத்தின் மீது பழிபோடுவதை நிறுத்தி ஆக்கபூர்வமாகச் சிந்திக்க வேண்டும். கூட்டமைப்பிலுள்ள ஆயுதக் குழுவில் அங்கம் வகிக்காத சிரேஷ்ட அங்கத்தவர்கள் ஓரளவு பொறுப்புடன் செயற்பட்டு வருகின்றனர் எனக் கூறலாம். ஆனால் ஆயுதக் குழுவில் அங்கம் வகித்து அரசியலுக்கு வந்த பலரது போக்கு புலிகளின் ஆழிவுக்குப் பின்னர் சற்றே மாறுபட்டுக் காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது.


முன்னாள் புலி உறுப்பினர்களை முன்னிலைப்படுத்தி புலம்பெயர் சமூகத்திடம் வசூல் செய்வதில் வடக்கிலுள்ள சிலர் ஷிuஷிவிதி!8 ஈடுபட்டுள்ளனர். இவ்வாறானவர்களில் சிலர் கையும் களவுமாகப் பிடிப்பட்டும் உள்ளனர். இதனால் கூட்டமைப்பிற்கே அவப் பெயர் எற்படுகிறது. எனவே கூட்டமைப்பு இப்போது தமது அணிக்குள்ளே உள்ள புல்லுருவிகளை களைய வேண்டும்.


எவ்விடயத்திலும் காத்திரமான ஒரு அறிக்கையை தலைமை மட்டுமே விட வேண்டும். பக்குவமடையாத அனுபவமில்லாத உறுப்பினர்கள் மக்களது தேவைகளை மட்டும் பூர்த்தி செய்பவர்களாக இருக்க வேண்டும். மக்களுக்குப் பல தேவைகள் உள்ளன. அரசியல் அதிகாரத்தை அனுபவம் உள்ளவர்களே கையாள வேண்டும். உங்களை நம்பியே மக்கள் வாக்குகளை வழங்கியுள்ளனர். அதற்கு கைமாறு செய்ய வேண்டியது உங்கள் பொறுப்பு அல்லவா?


அரசாங்கத்திற்கு தமது நல்லெண்ணத்தைக் காட்டுகின்றோம் எனப் புறப்பட்டு இன்று அரசாங்கத்தின் மீது வசைபாடும் வேலையிலேயே கூட்டமைப்பு ஈடுபட்டு வருகின்றது. குறிப்பாக தமிழ் மக்கள் தொடர்பாக கலந்துரையாடப் பல விடயங்கள் உள்ளன. அவை தொடர்பாக எதுவுமே பேசப்படுவதில்லை, முயற்சி எடுப்பதுவும் இல்லை. இறுதி யுத்தத்தின்போது பாதிக்கப்பட்ட மக்கள் இன்னமும் முழுமையாக இயல்பு வாழ்வுக்குத் திரும்பவில்லை. பலரைத் தேடி இன்றும் அவர்களது உறவுகள் அங்கும் இங்கும் அலைகின்றன. இவற்றைத் துரிதப்படுத்தி தமது மக்களுக்கு உதவுமாறு அரசாங்கத்திடம் கூட்டமைப்பு எப்போதாவது கேட்டார்களா? அரசாங்கமே கருணையுடன் அவை தொடர்பாக தீவிர கவனம் செலுத்தி செயற்பட்டு வருகின்றது.


கூட்டமைப்பு ஒரு கொள்கையில்லாது செயற்பட்டு வருவதாகப் பலரும் வெளிப்படையாகவே விசனம் தெரிவிக்கத் தொடங்கியுள்ளனர்.
தற்போது வடக்கில் தேர்தல் தொடர்பாக கதைக்கப்படுவதால் கூட்டமைப்புப் பிரதிநிதிகளின் செயற்பாடுகள் அப்பகுதியில் சற்று தடல்புடலாகக் காணப்படுகிறது. ஆனால் மீள்குடியேற்றம், குடியேறியுள்ள மக்களுக்குள்ள குறைபாடுகள், சரணடைந்த இளைஞர்களின் நிலை, சிறையில் வாடும் அப்பாவித் தமிழ் இளைஞர், யுவதிகளின் நிலை தொடர்பாக எவ்விதமான அக்கறையும் இவர்களுக்கு இல்லை போலவே தெரிகிறது.
அப்படியே யாராவது ஞாபகப்படுத்தினால் ஒரு அறிக்கையை அல்லது கடிதத்தை எழுதி இவர்களது தமிழ் ஊடகங்களுக்கு வழமைபோல அனுப்பி வைத்துவிடுவர். அவர்களுக்கும் செய்தி வேண்டுமே. தலைப்புச் செய்தியாகக் கூடப் பிரசுரித்து விடுவர். அந்தக் கடிதம் ஜனாதிபதிக்கோ அல்லது சம்பந்தப்பட்ட அமைச்சருக்கோ கிடைக்குதோ இல்லையோ பத்திரிகைகளுக்கு சரியான நேரத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு அது கிடைத்ததா என உறுதியும் செய்யப்பட்டு முக்கியத்துவம் அளித்துப் பிரசுரிக்குமாறும் கேட்டுவிட்டுத்தான் மற்ற வேலை, ஆனால் எல்லோரும் அல்ல. ஒரு சிலர் என்றாலும் கூட்டமைப்பிற்கே அவப்பெயர்.


இதுவா தமிழ் மக்களுக்கான இவர் களது அரசியல்? இதற்காகவா தமிழ் மக்கள் இவ்வளவு வேதனைகளுக்கு மத்தியிலும் இவர்களைத் தெரிவு செய் தனர்? இன்று தமிழ் மக்களுக்காக இவ ர்கள் சிந்தித்துச் செயலாற்ற வேண்டிய உதவிகளை அரசாங்கம் தனது பிரதி நிதிகளூடாகச் செய்து வருகின்றது. இப் படி எழுதுவதால் அரசாங்கத்திற்கு வக் காளத்து வாங்குவதாக எண்ணிவிடக் கூடாது. இதுவே உண்மை. இதுவே யதார்த்தம்.
எனவே இத்தகைய விடயங்களில் அதிக கவனத்தைச் செலுத்துமாறு கூட்டமைப்பு உறுப்பினர்களைச் சம்மந்தன் ஐயா வற்புறுத்திக் கேட்க வேண்டும். அறிக்கைகள் விடுவதையும், கருத்துக்கள் கூறுவதையும் விடுத்து செயலில் காட்ட கூட்டமைப்பு முயல வேண்டும். தலைவரும் செயலாளரும் நல்லெண்ணத்தைக் காட்டினால் மட்டுமே போதாது, எல்லோருமே ஓரணியில் நிற்க வேண்டும். பிரிந்து சென்றமையால் ஏற்பட்ட இழப்புக்களை இன்னுமும், இனியும் உணராதிருந்தால் எவருமே தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக இருப்பதற்குத் தகுதியற்றவர்களே!

நன்றிகள். உண்மைகள் 
read more...

தொடர் அவலங்களில் சிக்கித் தவிக்கும் தமிழ் மக்கள்

பெரியநீலாவணையில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மூவரில் ஒருவரை காணவில்லை

bildeஅம்பாறை மாவட்டத்தின் கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியநீலாவனை கடற்பரப்பில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை மீன்பிடிக்கச் சென்ற மூவரில் ஒருவர் கடலலையில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.

பெரியநீலாவனை, நாதன் ஸ்டேர்ஸ் வீதியைச் சேர்ந்த மூவரே இவ்வாறு மீன்பிடி தொழிலுக்குச் சென்றுள்ளார்.

எனினும் இவர்கள் சென்ற படகு இடையில் விபத்துக்குள்ளானதையடுத்து கடற்கரையிலிருந்து மற்றுமொரு படகில் சென்ற சிலர் அவர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

எனினும் படகில் இருந்த இருவரை மாத்திரம் காப்பாற்ற முடிந்ததாகவும், ஒருவர் அலையில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

56 வயதுடைய முருகபிள்ளை நவராஜா என்பவரே அலையில் அடித்துச் செல்லப்பட்டவராவார். அவருடைய சடலம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

கிழக்கு பல்கலைக்கழகம் ஒரு வாரகாலத்துக்கு மூடப்படும்.

image356விடுதியில் தங்கியுள்ள ஒருதொகுதி மாணவர்கள் தமது வீடுகளுக்கு சென்றுள்ளனர். ஏனைய மாணவர்களையும் அவர்களது வீடுகளுக்கு அனுப்பும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.

அதேவேளை இம்மாதம் 12ஆம் திகதி நடைபெறவிருந்த பல்கலைக்கழக கலாசார விழா காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் விமல்ராஜ் தெரிவித்தார்.

இதேவேளை பதில் உபவேந்தர், மாணவர்கள் சேர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தொடர்ந்தும் நிவாரண நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் மாணவர் ஒன்றியத்தின் தலைவர் விமல்ராஜ் மேலும் தெரிவித்தார்

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு


நிவாரணப் பணிகள் முதலமைச்சரினால் முன்னெடுப்பு


எப்போதும் இல்லாதவாறு மட்டக்களப்பு மாவட்டத்திலே தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணத்தினால் மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. முதற்கட்டமாக மக்களை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றுகின்ற பணிகள் சகல பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அத்தோடு கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் வெகுவாகப் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை நேரில் சென்று பார்வையிட்டதோடு அவர்களுக்கான முதற்கட்ட நிவாரணப் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றார்.
உணவு சமைத்து வழங்குவதற்காக அரிசி சீனி மற்றும் பருப்பு போன்ற பொருட்களை முதற்கட்டமாக வழங்கி வருகின்றார். இன்று சித்தாண்டிஇ வாழைச்சேனை. கோம்மாதுறை, செங்கலடி, வந்தாறுமூலை, கல்குடா இபுதுக்குடியிருப்பு, பேத்தாழைஇகிண்ணையடி, கறுவாக்கேணி போன்ற இடங்களில் முகபாம்களில் தங்கியிருக்கின்ற மக்களுக்கு வழங்கி வைத்தார். குழந்தைகளுக்கான பிஸ்கட்டும் முதல்வர் சந்திரகாந்தன் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது. மட்டக்ளப்பிற்கான போக்கு வரத்து தடைப்பட்டிருந்த பொதிலும் படகில் சென்று மக்களுக்கான நிவாரணப் பணியில் முதல்வர் சந்திரகாந்தன் ஈடுபட்டமை விசேட அம்சமாகும்.
நான்கு பக்கமும் நீரினால் சூழப்பட்டு எந்தவொரு போக்குவரத்து தெர்ர்புகளும் அற்று இருக்கின்ற வாழைச்சேனை நாசுவன் தீவு மக்களுக்கு சமைத்த உணவினை தொடர்ந்து வழங்குவதற்கு முதல்வர் சந்திரகாந்தன் நடவடிக்கை மேற்கொண்டுள்ளாh.

image4661
image419
image475
image473


தொடரும் வெள்ள அபாயம் தொடர்பாக நாளை மட்டு கச்சேரியில் அவசர கூட்டம் இடம்பெற இருக்கிறது.  

நன்றி மீன்மகள்
read more...

Monday, 10 January 2011

அவலங்களில் சிக்கித் தவிக்கும் மக்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்திலே கடும் மழை பெய்துகொண்டிருக்கின்றது. அதனால் பாரிய வெள்ளப் பெருக்கு ஏற்பட்டிருக்கின்றது. பல மக்கள் இடம் பெயர்ந்து தற்காலிக முகாம்களிலே தங்க வைக்கப் பட்டிருக்கின்றனர். 

மழை ஓய்வதாகத் தெரியவில்லை நானும் நிவாரணப் பணிகளிலே நண்பர்களோடு ஈடுபட்டிருக்கின்றேன். எனது களுதாவளைக் கிராமத்திலும் 2 இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அரசாங்கத்தினால் உடனுக்குடன் நிவாரணப் பொருட்கள் வழங்கப் பட்டுக்கொண்டிருப்பதுடன் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தனது விசேட நிதி ஒதுக்கீட்டின் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி வருகின்றார். 

நேற்று முழுவதும் அவருடன் பாதிக்கப்பட்ட பல பிரதேசங்களுக்கு சென்றிருந்தேன். மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் தாராளமாக வழங்கப்பட்டிருக்கின்றன. 

கழுதாவளை மகிழுர் முனை மற்றும் செட்டிபாளையத்தை சேர்ந்த மக்களுக்கு வெள்ள நிவாரணப் பொருட்கள் வழங்கி வைக்கப்படுவதை படங்களில் காணலாம்.
 _mg_9019
_mg_9010
_mg_9018
_mg_9048

dsc00957
_mg_9184
_mg_9020
read more...

Sunday, 9 January 2011

நான் ரெடி... நீங்க ரெடியா...

  • எதற்கு நான் ரெடி நீங்க ரெடியா என்று கேட்கிறேன் என்று கேட்கின்றீர்களா  கொம்புமுறி விளையாடலாம் வாங்க.. பகுதி 04 பார்ப்பதற்கு...  அதற்கு முன் இதனைப் பாருங்கள். ...
  • கொம்புமுறி விளையாடலாம் வாங்க.. பகுதி 03

பள்ளியங் கட்டிலில் கண்ணகை அம்மன் விக்கிரகம் இல்லை. களுதாவளையில் கண்ணகையம்மன் கோவில்களோ கண்ணகை விக்கிரகமோ இல்லை. எனவே கொம்புமுறி விழையாட்டின் இறுதியில் நடைபெறும் பொங்கலுக்கு செட்டிபாளையம் கண்ணகையம்மன் ஆலயத்திலுள்ள கண்ணகையம்மனையே எழுந்தருளப் பண்னுவது பாரம்பரியம்.

செட்டிபாளையம் கண்ணகையம்மன் நிருவாகத்தினருக்கும் சடங்கு செய்யும் கட்டாடியாருக்கும் முன்னறிவித்தல் கொடுக்கப்படும். அத்துடன் அம்மன் எழுந்தருளி வரும் நாள் என்பனபற்றி செட்டிபாளையம் மாங்காடு தேற்றாத்தீவு களுதாவளை மக்களுக்கு பகிரங்கமாக வள்ளுவன் மூலம் அறிவித்தல் கொடுக்கப்படும்.

இவ்வறிவித்தல் கிடைத்ததும் வீடு வீதி வாசல் அனைத்தையும் சுத்தம் செய்து பிரதான தெருவிலே நிறைகுடம் குத்துவிளக்கு என்பன வைத்து வழிபட்டு வரவேற்பர். மேளதாள வாத்தியங்களுடன் மேற்கட்டி பிடித்துவர கட்டாடியார் கண்ணகையம்மனை எழுந்தருளப்பண்ணுவார். அம்மன் காவியங்களை மந்திரவாதிகளும் பூசாரிமார்களும் உடுக்கடித்துப் பாடிவர சிலம்பு அம்மானைக்காய் ஆகியவற்றின் ஒலியுடன் தேவாதிகள் ஆடிவருவர்.

வீதிகளிலே நிறைகுடம் மங்கல விளக்கு வைத்தவர்கள் பெரிய பாத்திரங்களிலே மஞ்சள் நீர் கரைத்து வைத்திருப்பார்கள். தேவாதிகள் தங்கள் கைகளிலே இருக்கின்ற வேப்பங்குழைகளை மஞ்சள் நீரினுள் தோய்த்து குழுமியுள்ள பக்தர்கள் மீது தெளிப்பர். அந்த நீர் பேய் பிசாசு பில்லி வஞ்சனை சூனியங்களை போக்கடிக்கும் என்னும் நம்பிக்கை மக்களுக்கு உண்டு.

களுதாவளையில் கொம்புச் சந்தியில் தேர்ப் புரைகட்டிய பெரு மரங்கள் அண்மைக் காலம்வரை பிரதான வீதியின் மேற்குப் புறமாக நடப்பட்டிருந்தன. இந்த மரங்கள் வைரமானதும் உயரமானதுமாகும். 

தாம் செய்கின்ற சோடனைகள் மற்றைய வாரத்தினருக்கு தெரியக்கூடாது என்பதிலே கண்ணும் கருத்துமாக இருப்பர். தேர்ச் சோடனைகள் இடம்பெறும்போது அதனை தென்னோலையினால் இழைத்த கிடுகு மட்டைகளினால் முற்றாக மூடிமறைத்து வைத்துக் கொள்வர்.

தங்கள் வாரக்கட்டிலே நம்பிக்கை நாணயம் மிக்கவர்களாகவும் இரகசியம் பேணக்மூடியவர்களையுமே உள்ளே அனுமதிப்பதோடு 24 மணிநேரமும் காவல் புரிந்தனர். தங்கள் தேர்கள் பேர் பெற வேண்டும் என்பதே இவர்களது எண்ணம். 

இதற்காக வலம்புரிச்சங்கு யானைத்தந்தம் போன்ற அபூர்வமான பொருட்களை காட்சிக்கு வைத்தனர். அரும்பொருட்காட்சி அறை போலவும். அலங்காரப் போட்டி போலவும் தேர்கள் அமைந்திருந்தன.

இரு வாரத்தினருக்கும் ஒவ்வொரு தேர்முடி இருந்தது. வடசேரி வாரத்தினர் கோவலன் கடசியினராகையால் அவர்களது தேர்முடி ஆணுக்குரிய தேர்முடியாகவும். தென்சேரி வாரத்தினர் கண்ணகை கடசியினராகையால் அவர்களது தேர்முடி பெண்ணுக்குரிய உருவச் சாயலில் அமைந்திருந்தன.

கொம்புமுறி விளையாட்டுக்கு ஏற்பட்ட செலவுகளை ஈடுசெய்ய முடியாத நிலையிலே தமது வாரத்துக்குரிய தேர்முடி ஏகாவடம் என்பவற்றை ஈடுவைத்த சம்பவங்களும் இடம்பெற்றிருக்கின்றன.

1897 ஆம் ஆண்டு ஜப்பசி மாதம் 01ம் திகதி எருவில் பற்று களுதாவளை கதிராமர் கண்ணப்பனுக்கு வடசேரி வாரத்துக் கடுக்கண்டவர்களாகிய… என்று 19 கடுக்கண்டவர்களின் பெயர் குறிப்பிடப்பட்டு…..

தேருக்கு முடி ஏகாவடம் செய்ததிலும் கடைகளில் வாரக்காரர் கொடுக்கவேண்டிய நிலுவைகளை தேர்ச்சீலை அவிழ்ப்பித்தவகளுக்கு வேணுமென்று சிலர் கூடிக் குழப்பினதால் குறித்த முகாமைக் காரராகிய நாங்கள் முற் குனுறித்த க.கண்ணப்பனிடம் காசி ரூபாய் இருபத்து நாலு (24) இந்த 24 ரூபாய்க்கும் குறித்த தேர் முடியும் ஏகாவடம் ஜந்தையும் குறித்த பணத்துக்கு ஆதாரமாகக் கொடுத்த படியால் இனிமேல் கொம்பு விளையாட்டு நடைபெற வேண்டுமென்று வாரக்காரர்கூடி தேவை என்று வரும்போது குறித்த பணத்துக்கு ஞாயமான லாபம் கூட்டி இவருக்கு கொடுத்து குறித்த சாமான்களை வாரக்காரர் எடுத்துக்கொள்ளும்படி சம்மதித்து இத்துண்டு கொடுத்தோம்.

1897ம் ஆண்டிற்குப் பின்னர் கொம்புமுறி விளையாட்டு இடம்பெற்றமைக்கான ஆவணங்களைக் காணமுடியவில்லை கண்ணப்பனிடமிருந்து மீளப் பெற்றுக் கொண்ட விபரமும் இல்லை.

தேர்முடி ஏகாவடம் முதலியன சில ஆலயங்களுக்கு வழங்கப் பட்டதாக அறிய முடிகின்றது. தென் சேரி வாரத்துக்குரியவற்றுள் சில களுதாவளை திருநீற்றுக்கேணி சிவசக்தி ஸ்ரீ முருகன் ஆலய வீரமாகாளி கோவிலிலே வைத்துப் பேணப்பட்டு வருகின்றன.


தொடர்ந்தும் விளையாடலாம்.

read more...

Friday, 7 January 2011

இவர்களெல்லாம் வலைப்பதிவர்கள்?... திருந்துங்கடா...

இது என்னுடைய 300 வது இடுகை நண்பர்களே…

300 வது இடுகைக்கு வந்துவிட்டேன். இருந்தும் வலைப்பதிவில் எதையும் நான் சாதிக்கவில்லை. 300 வது இடுகைவரை வந்திருக்கின்றேன் என்றால் நண்பர்களே நீங்கள் கொடுத்த உற்சாகம்தான் காரணம்.

வலைப்பதிவுலகில் நிறையவே நண்பர்களைத் தேடியிருக்கின்றேன். தேடிய நண்பர்களை இழந்திருக்கின்றேன். பதிவு எழுதுவதென்பது சந்தோசமான நாட்களாக இருந்தது. ஆனால் நாட்கள் செல்லச் செல்ல ஏன்தான் இந்த பதிவுலகப் பக்கம் வந்தேன் என்றும் தோன்றியது. இதனால் பதிவுலகில் இருந்து சில காலம் ஒதுங்கியிருந்தேன்.

பதிவுலக சண்டைகள் ஒரு புறம் அனானிகள் தொல்லைகள் ஒருபுறம் பதிவர்களை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் கூட்டம் ஒருபுறம். இவற்றுக்கிடையில் பதிவர்கள் படும்பாடு…

கஸ்ரப்பட்டு தேடல்கள் மூலம் பல புத்தகங்களை பெற்று எழுதிய விடயங்களை (இடுகைகளை) பார்ப்பவர்கள் மிக மிகக் குறைவாக இருக்கும் ஆனால் மொக்கைப் பதிவுகளை அதிகமானவர்கள் பார்ப்பார்கள். அதுதான் கவலைக்குரிய விடயம்.

இவையெல்லாம் ஒருபுறமிருக்க பதிவுத் திருடர்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. தங்களால் சுயமாக சிந்தித்து எழுதத் தெரியாதவர்கள் எல்லாம் எதற்காக பதிவர்கள் என்று இருக்கின்றனர்.

பதிவுத் திருடர்கள் திருந்துவதாக இல்லை. நாம்தான் திருத்த வேண்டும். பதிவுகள் திருடப்படும்போது உடனுக்குடன் அந்த பதிவுத் திருடனை நாம் சுட்டிக்காட்டுகின்றபோதுதான் புதிய பதிவுத் திருடர்கள் உருவாகமாட்டார்கள்.

நான் ஒரு முன்னணிப் பதிவர் இல்லை என்றாலும் நான் கஸ்ரப்பட்டு பதிவிடுகின்றேன் அதனை தங்கள் பதிவாக போடுகின்றார்களே. அவர்கள் எல்லாம் பதிவர்களா?

பல இணையத் தளங்களும் வலைப்பதிவுகளும் என்னுடைய இடுகைகளை தங்கள் தளங்களிலே போட்டு நன்றி சந்ரு என்று குறிப்பிட்டிருக்கின்றனர். ஆனால் சில வலைப்பதிவர்கள் எனது இடுகைகளை தங்கள் பெயரிலே இடுகையிட்டிருக்கின்றனர்.

அவற்றிலே ஒரு சிலவற்றை பட்டியலிடுகின்றேன்.

http://kannan3h.blogspot.com இவர் என்னுடைய பல பதிவுகளைத் திருடி இருக்கின்றார் அவற்றுள் சில…


என்னுடையது 
http://shanthru.blogspot.com/2009/09/blog-post_19.html
(திருமணத்தின் பின் ஒரே பெண்ணைப் பார்த்தபடி அலுப்படிக்காமல் மெயின்டெய்ன் பண்ணுவது எப்படி)

அவரது திருட்டு...
http://kannan3h.blogspot.com/2010/09/blog-post_8775.html

************************************************


என்னுடையது...
http://shanthru.blogspot.com/2009/08/blog-post_14.html

(மேல் நாட்டுக் கலாசாரம் தேவையா..)



அவரது திருட்டு ..
http://kannan3h.blogspot.com/2010/07/blog-post_1591.html

******************************************************


என்னுடையது...
http://shanthru.blogspot.com/2010/07/blog-post_28.html

(பெண்கள் ஆண்களை தங்கள் பின்னால் அலைய வைப்பது எப்படி சில ஆலோசனைகள்)

அவரது திருட்டு...
http://kannan3h.blogspot.com/2010/09/blog-post_9839.html


இவ்வாறு பல இடுகைகளை திருடி தனது பெயரிலே பதிவிட்டிருக்கின்றார்.


*******************************************************


மற்றுமொருவர்....

http://vinothnews.blogspot.com

எனது பதிவு..
http://shanthru.blogspot.com/2009/11/blog-post_13.html


(இணையத்தில் காதலித்துச் சம்பாதிக்கலாம்)


*******************************************************

எனது பதிவு.
http://shanthru.blogspot.com/2010/07/blog-post_19.html
(கடவுளுக்கு மாடு எழுதும் கடிதம்)


http://vinothnews.blogspot.com/2010/07/blog-post_20.html

******************************************************

மற்றுமொருவர்...

http://kathalikkiren.blogspot.com

என்னுடைய பதிவு..
http://shanthru.blogspot.com/2010/08/blog-post.
(திருமணத்தின் பின்னும் பெண்களை கவர சில ஆலோசனைகள்)


அவரது திருட்டு...

http://kathalikkiren.blogspot.com/2010/08/blog-post_09.html

*******************************************************

என்னுடையது...

(பெண்கள் ஆண்களை தங்கள் பின்னால் அலைய வைப்பது எப்படி சில ஆலோசனைகள்)


அவரது திருட்டு... 


இவ்வாறு பல இடுகைகள்..

*****************************************************

மற்றுமொருவர்...


என்னுடைய பதிவு...


(பெண்கள் ஆண்களை தங்கள் பின்னால் அலைய வைப்பது எப்படி சில ஆலோசனைகள்)


அவரது திருட்டு...


இவ்வாறு பல இடுகைகள்...
இடுகைத் திகதிகளைப் பார்க்கவும்.. 


இன்னும் பல பல திருட்டு வலைப்பதிவுகள் இருக்கின்றன...
இன்னும் எத்தனை பேர் எங்களுக்கு தெரியாமல் இருக்கின்றார்களோ... 



read more...

Thursday, 6 January 2011

பதிவுத் திருடர்களுக்கு எச்சரிக்கை

இன்று பலரும் பதிவுத் திருட்டுக்கள் பற்றிப் பேசிக்கொண்டிருக்கின்றோம். ஆனாலும் பதிவுத் திருடர்கள் திருந்துவதாக இல்லை நாம் எவ்வளவோ வேலைகளுக்கு மத்தியில் நேரத்தை செலவு செய்து பதிவிடுகின்றோம். ஆனால் ஓரிரு நிமிடங்களில் தங்கள் பதிவாக திருடி பதிவிடுகின்றனர்.

அவர்கள் ஒருபோதும் திருந்துவதாக இல்லை. அவர்களை திருத்த வேண்டிய கட்டாயம் ஒவ்வொரு பதிவருக்கும் இருக்கின்றது.

என்னுடைய பல பதிவுகளும் திருடப்பட்டிருக்கின்றன. யார் யார் எந்த எந்த பதிவுகளை திருடி இருக்கின்றனர். முகத்திரை கிழிக்கின்றேன் அடுத்த பதிவில்.

 அதுவரை இதனைப் பாருங்கள் 

read more...

கொம்புமுறி விளையாடலாம் வாங்க.. பகுதி 03


கொம்புமுறி விளையாடலாம் வாங்க.. பகுதி - 01



கொம்புமுறி விளையாடலாம் வாங்க.. பகுதி 02



1897ம் ஆண்டு ஒப்பந்தத்தில் முண்டந்திருகி கிடுகி கட்டிக்கொள்வது பற்றியும் சுள்ளிக் கொம்பு கட்டிக் கொள்வது பற்றியும் வசந்தன் கூத்து ஆடிக் கொள்வது தேர்க்கல்யாணத்துக்கு கப்பல் யானை கட்டிக்கொள்வது பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கொம்பு வெற்றியிலும் தேர் அழுக்கின்ற தினத்திலும் வெடி வாணம் கொழுத்திக் கொள்ளலாம். தேரிழுத்து 15 நாட்களுக்குள் அம்மன் எழுந்தருளப்பண்ணி பொங்கிப்போட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கோம்பு முறி விழையாட்டு வன்னிமையின் அனுமதி பெற்று விதானைமார் கடுக்கண்டவர்களின் உத்தரவாதத்துடன் எழுத்து மூலமான உடன்படிக்கையின்படி நடைபெற்றுள்ளது. வேற்றியீட்டிபோர் தோல்வியுற்றோரின் மனித உரிமைகளை மதித்து மானஈனம் ஏற்படாத வகையில் வெற்றி கொண்டாட வேண்டும். ஏந்த வாரத்தினராவது கொம்புமுறி விழையாட்டை இடை நடுவில் குழப்பித் தடை பண்ணினால் மற்றைய வாரத்திற்கு நட்டஈடு கட்டுதல் வேண்டும். பேரியவர்களோ சிறு பிள்ளைகளோ எவராயினும் சரி ஒழுங்கு முறையாக நடந்து கொள்ளத் தவறினால் அந்தந்த வாரத்துக்குரியவர்கள் குற்றவாளியாகக் கருதப்படுவர்.

தத்தமது வாரத்துக்குரிய மக்கள் அனைவரையும் கட்டுப்படுத்தும் ஆற்றலும் ஆளுமையும் செல்வாக்கும் நிறைந்தவர்களே கடுக்கண்டவர் என்ற பெயர் பெற்றனர். ஊர்ப் பெரியார் என்றும் ஊர்ப்போடி என்றும் இவர்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றனர்.

களுதாவளையில் இப்பொழுதும் கடுக்கண்டவர் எனும் கௌரவ உத்தியோகம் இன்றும் நிலைத்துள்ளது. இப்பொழுது களுதாவளையில் கோவில் உரிமை முறையில் ஆறு குடும்பங்கள் நிருவாகம் நடாத்துகின்றன. குடும்பம் என்பதனை அதிகமாக குடி என்றே சொல்கின்றனர். ஓவ்வொரு குடும்பத்துக்கும் ஒவ்வொருவர் வண்ணக்கர் எனும் பெயரில் கௌரவ உத்தியோகம் பார்த்து வருகின்றனர்.

கோவிற் திருவிழா பூசை முதலியவற்றுக்கு அந்தந்த குடும்பத்தின் வண்ணக்கரே பொறுப்பு. வண்ணக்கரைப் போன்றே ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒவ்வொரு கடுக்கண்டவர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். கோவில் விடயங்களில் தமது குடும்ப வண்ணக்கரின் உதவியாளர் போன்றும் ஊர்க்கடமைகளில் தலைமை வகித்தும் இவர்கள் செயலாற்றுகின்றனர்.

ஊர்க் கடமைகள் எனும்போது மரணவீடு புதுமனை புகுதல் பூப்பூ நீராட்டுவிழா பிறந்தநாள் வழா என்பனவற்றில் நடைபெறவேண்டிய  சில ஒழுங்குகளாகும்.  அந்நாளின் வழக்கத்தினையும் மரபினையும் சம்பிரதாயத்தினையும் பேணிப்பாதுகாத்து கடுக்கண்டவர் பதவி களுதாவளையில் இன்றும் நிலைத்துள்ளது.

கோம்புமுறி விழையாட்டு பயபக்தியுடன் கூடிய கலை கலாசாரம் சம்பந்தப்பட்ட நிகழ்வு விக்கினங்கள் தீர்க்கும் விநாயகப் பெருமானையும் கற்புக் கனலாம் கண்ணகையினையும் பணிந்து போர்த் தேங்காய் அடித்தலுடன் கொம்புமுறி விழையாட்டு ஆரம்பமாகும்.

பொது மக்கள் அனைவரும் ஒன்று கூடுவதற்கு வசதியான ஊருக்கு மத்தியான இடத்திலேயே கொம்புமுறி விழையாட்டு இடம்பெறும். களுதாவளையில் இராமகிரு~;ண வித்தியாலயமும் பள்ளியங்கட்டில் என்றும் கொம்புச்சந்தி அம்மன் என்றும் சொல்லப்படுகின்ற அம்மன் ஆலயமும் அமைந்துள்ள இடம் முன்னர் நிழல்தரு பெரு மரங்கள் நிறைந்த ஒரு இடமாகவும் வசதியான இடமாகவும் ஊருக்கு மத்தியில் இருப்பதனாலும் இவ்விடத்திலே தேர்ப்புரைக்கட்டி தேரிழுத்து கொம்பு முறித்து விழையாடினர். முடிவில் பள்ளியங்கட்டிலில் கண்ணகையம்மனை எழுந்தருளப்பண்ணி பொங்கல் திருக்குளிர்த்தி என்பனவும் நடாத்தினர்.

புள்ளியங்கட்டில் என்பது கோவில் அமைப்புடையது. எனினும் இங்கே மூல விக்கிரகங்கமோ எழுந்தருளி விக்கிரகமோ இல்லை. சுக்தி பூசை வழிபாட்டுக்குரிய இடமாக இது கருதப்படுகின்றது. களுதாவளைப் பிள்ளையார் ஆலயத்துக்கோ அல்லது களுதாவளை திருநீற்றுக்கேணி சிவசக்தி ஸ்ரீ முருகன் ஆலயத்துக்கோ காவடி வேலாயுதம் முதலிய நேர்கடன்களை நிறைவேற்றுவோர் இங்கிருந்துதான் எடுத்துச் செல்கின்றனர்.

இவ்விடம் கொம்புச் சந்தி எனும் பெயரினாலேயே அழைக்கப்படுகின்றது. கோம்புமுறி விழையாட்டு இங்கே இடம்பெற்றமையினாலேயே இப்பெயர் வரக் காரணமாயிற்று. கொம்புமுறி கண்ணகையம்மனுக்குரியது. தேர்க்கல்யாணம் நடாத்தி முடிந்தபின்பு அம்மனை எழுந்தருளப்பண்ணி பொங்கல் நடாத்த வேண்டும் என்பது கொம்புமுறி விழையாட்டுக்குரிய உடன்படிக்கையின் ஒரு சரத்து. இவ்விடத்திலே செட்டிபாளையம் கண்ணகையம்மன் களுதாவளை கோம்புமுறி விழையாட்டுடன் சம்பந்தப்படுகின்றார்.


தோடர்ந்து விளையாடலாம்….


read more...

Saturday, 1 January 2011

பறிபோகும் தமிழர் பிரதேசங்கள்… தாந்தாமலை முருகன் ஆலயத்தை இழக்க நீங்கள் தயாரா?

20101227160627thandamalai203a

இந்த புதிய ஆண்டில் கடந்த வருடத்தின் சுவடுகளை திரும்பிப் பார்க்கின்றேன். தமிழன் தமிழ்மொழி இந்த நாடு ஒப்பிட்டுப் பார்க்கின்றேன். என்னுள்ளே பல எண்ண அலைகள். இந்த நாட்டில் தமிழ் மொழியின் எதிர்காலம்……

தமிழர் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்கள் புத்தர் சிலைகள் புத்த விகாரைகள் பரவலாகப் பேசப்பட்டுக் பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் தமிழர்களுக்கே தனிப்பெருமை சேர்க்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க பல இடங்கள் பறிபோகின்ற நிலை காணப்படுகின்றது.

சிங்களக் குடியேற்றங்கள் புத்தர் சிலைகள் பற்றி கூறவேண்டிய அவசியமில்லை எல்லோருராலும் பேசப்பட்ட விடயம். இலங்கையின் தேசிய கீதம் சிங்கள மொழியில் மட்டுமே பாடப்படவேண்டும் தமிழ் மொழியில் பாடப்படக்கூடாது என்று சொல்லப்பட்டபோது. நான் ஏன் இந்த நாட்டில் பிறந்தேன் என்று எண்ணத் தோன்றியது.

தமிழ் மொழியிலே பாடக்கூடாது என்று சொன்னவர்கள். செம்மொழியாம் எங்கள் தமிழ்மொழியின் சிறப்பு தெரியாதவர்கள்தானே அவர்கள் தமிழிலே கதைக்கக்கூட தெரியாதவர்கள் அப்படித்ததான் சொல்வார்கள் என்று என்னை நானே தேற்றிக் கொண்டேன்.

இருந்தபோதும் தாங்களும் தமிழர்கள்தான் என்று அரசாங்கத்தோடு ஒட்டிக்கொண்டு தமிழர்களுக்காகப் பாடுபடுகின்ற சில அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் மௌனம் சாதித்ததைப் பார்த்து வெட்கித்தலை குனிந்தேன்.

நான் யோசித்தேன் இலங்கையின் தேசிய கீதம் தமிழிலே பாடுவதற்கு அருகதை அற்றதோ என்று அத்தனை சிறப்பு வாய்ந்ததுதானே நம் தமிழ்மொழி.

அல்லது இலங்கை அரசாங்கமே தமிழர்களுக்கு தனி ஒரு நாடு என்பதனை ஒத்துக்கொண்டுவிட்டார்களா? தமிழ் மொழியில் பாடுவதற்கு தனி ஒரு தேசிய கீதமா?

இவை அனைத்தையும் தாண்டி தமிழர்களின் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பல பிரதேசங்கள் பறிபோய்க் கொண்டிருக்கின்றன.

இலங்கையின் சின்னக் கதிர்காமம் என்று எல்லோராலும் அழைக்கப்படுகின்ற தாந்தாமலை முருகன் ஆலயம் தமிழர் கைகளில் இருந்து பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. தாந்தாமலை மட்டக்களப்பு – அம்பாறை மாவட்ட எல்லையில் அமைந்துள்ள தமிழர் பிரதேசமாகும்.

இப்பிரதேசம் போர்க் காலத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசமாகும். இப்பொழுது தாந்தாமலை முருகன் ஆலயத்திலே பிள்ளையார் ஆலயம் நிர்மானிக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் அம்பாறை மாவட்ட தொல்பொருள் ஆராட்சி நிலைய அதிகாரிகள் பிள்ளையார் ஆலயம் அமைக்கக்கூடாது என்று தடை விதித்திருக்கின்றனர். தாந்தாமலை அமைந்துள்ள பிரதேசம் தொல்போருள் ஆராட்சிக்கு உட்பட்ட பிரதேசம் அதனால் ஆலய அமைப்பு வேலைகளை இடை நிறுத்தும்படி உத்தரவிட்டுள்ளனர்.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற தமிழ் அரசியல்வாதிகள் அவ்வாறான செயற்பாடுகள் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.


இவைகளை எல்லாம் பார்க்கும்போது நாளை இலங்கையில் தமிழினம்………………….

read more...

Friday, 31 December 2010

காதலி காதலன்மீது எப்போதும் அன்பாயிருக்க சில ஆலோசனைகள்...


யாரும் என்னை திட்ட நினைத்திடாதிங்க இது ஒரு நகைச்சுவைப் பதிவு.

இப்போது சில வலையுலக நண்பர்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சனை பற்றி இந்த பதிவுல தரலாம் என்று இருக்கிறன்.


1. காதலி எங்கே போகின்றார், வருகின்றார் என்ற விடயங்களை காதலியிடம் கேட்கக்கூடாது. நீங்கள் அதிகம் வெளியில் செல்லக்கூடாது.

2. நீங்கள் அதிக நேரம் எவருடனும் தொலை பேசியில் உரையாடக்கஊடாது. ஆனால் காதலி யாருடனும் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் கதைக்கலாம். நீங்கள் கண்டுகொள்ளக்கூடாது.
3. நீங்கள் உங்கள் பெண் நண்பிகளோடு காதலி இருக்கும்போது கதைப்பதனை தவிர்த்துக்கொள்ளுங்கள். அல்லது முற்றாக நண்பிகளை மறந்து விடுங்கள். உங்கள் காதலி அவரது நண்பர்களோடு பழகுவதற்கு இடமளியுங்கள்.

4. உங்கள் காதலி அழகில்லை என்றாலும் உன்னைப்போல் அழகி உலகிலில்லை என்று புகழ்ந்து பேசுங்கள்.

5. நீங்கள் காதலிக்க ஆரம்பித்ததும் ஆடம்பரங்களை தவிருங்கள். நீங்கள் அழகாக இருந்தால் ஏனைய பெண்கள் உங்களை அபகரித்து விடுவார்கள் என்ற எண்ணம் உங்கள் காதலிக்கு இருக்கும். நீங்கள் ஆடம்பரமாக இருந்தால் உங்களை நோட்டம்விட ஆரம்பித்து விடுவார். சந்தேகப்பட்டு விடக்கஊடிய சந்தர்ப்பங்கள் இருக்கிறது.

6.உங்கள் காதலிக்கு என்னவெல்லாம் பிடிக்குமோ எல்லாவற்றையும். உங்களிடம் பணமில்லை என்றாலும் எங்காவது கடன் பட்டாவது வாங்கிக் கொடுங்கள். ஆனால் உங்களிடம் பணம் இல்லை என்பதனைக் காட்டிக்கொள்ளவேண்டாம்.

7. அதிகமாக இளம் பெண்கள் இருக்கின்ற இடங்களுக்கு போவதனைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். அல்லது காதலிக்குத் தெரியாமல் போய் வாருங்கள்.

8. உங்கள் காதலி பலர் மத்தியிலே இருக்கும்போது உங்கள் காதலியைப் பற்றி அவர்களிடம் புகழ்ந்து பேசுங்கள். (காதலி இல்லாத நேரங்களில் திட்டித்தீர்க்கலாம்)

9.நீங்கள் இதற்கு மூன்னர் வேறு யாரையும் காதலித்திருந்தாலும் உங்கள் காதலியிடம் எனக்கு பெண்களைப் பார்க்கவே பிடிக்காது ஆனால் உன்னை எப்பவும் பார்த்துக் கொண்டே இருக்கணும்போல இருக்கு என்பது போன்ற வசனங்களை அடிக்கடி பேசுங்கள்.


10. இதுதான் முக்கியமான விதி முதலில் ஒரு பெண்ணை காதலிக்கவேண்டும்.
read more...

கொம்புமுறி விளையாடலாம் வாங்க.. பகுதி 02

கொம்புமுறி விளையாடலாம் வாங்க.. பகுதி - 01

தாயும் தந்தையும் ஒரே குடியாகவும் ஒரே வாரமாகவும் அமையும் வழக்கம் நடைமுறையில் இல்லை சில விதி விலக்குகள் இருக்கலாம் அவை முறை மாறிய திருமணங்களினால் ஏற்பட்டவை. கோவிலிலே பூசைகள் திருவிழாக்கள் என்பன குடிவழி நடக்கும்போது ஏற்படும் போட்டிகளில் தாயுடன் குழந்தைகள் அனைவரும் ஒத்து நிற்பர். தந்தை மட்டும் தனித்து நிற்பார்.


 வாரக் கட்டாக கூத்து வசந்தன் கொம்புமுறி வந்துவிட்டால் குழந்தைகள் அனைவரும் தந்தையின் பக்கம் சார்ந்து நிற்பர்தாய் மட்டும் தனித்து நிற்பாள். வாரக்கட்டு உணர்ச்சியினால் வாய்க்கொழுப்புச் சீலையால் வடிந்த கதை ஒன்றுண்டு. பிள்ளைகள் தாய் தந்தை இருவர் பக்கமும் சார்ந்து நிற்கும் வகையிலே குடிவழியும் வாரக்கட்டும் பிரித்து வைத்த மட்டக்களப்பு மக்களின் மதிநலம் வியந்து போற்றுதற்குரியது.

அம்மன் கோதாரி என்ற நோய்கள் பரவினால் அல்லது பரவும் என்ற எண்ணம் தோன்றினால் அல்லது மழைவளம் வேண்டுமென்று கருதினால் ஊர் நன்மை கருதி கொம்புமுறி விழையாட்டு நடாத்துவது பற்றி ஆலோசிப்பர். கண்ணகை அம்மனை மகிழ்வூட்டி தமது காரிய சித்திகளை பெற முனைவோரும் இது பற்றிச் சிற்திப்பர்.

ஊர்மக்கள் அனைவரும் பங்குபற்றுகின்ற நிகழ்ச்சியாதலால் பொதுத் தீர்மானமின்றி கொம்பு விழையாட்டு நடாத்த முடியாது. கட்சி வேறுபாட்டினால் குழப்பநிலை தோன்றாது என்ற உத்தரவாதம் தேவை. அதுமட்டுமன்றி கொம்புமுறி விழையாட்டு இடைநடுவே குழம்பிவிட்டால் குழப்பிய பகுதியினர் குற்றப்பணம் கட்டவேண்டியும் நேரிடும். ஊர் ஒற்றுமையாகவும் கட்டுப்பாடாகவும் இருந்தால் மட்டுமே கொம்புமுறி விழையாட்டு நடாத்தலாம். இல்லையேல் விழையாட்டு வினையாக முடிந்த கதையாகும். இன்று இந்த விழையாட்டு அருகிப் போனமைக்கு இவையும் காரணம் எனலாம்.

களுதாவளையில் கொம்புமுறி விழையாட்டு நடாத்துவது பற்றி 1812ம் ஆன்டு ஆவணிமாதம் 1ம் திகதி எழுதப்பட்ட ஆவணம் இப்பொழுதும் இருக்கின்றன. களுதாவளை ஊர் மக்களின் நன்மை கருதி கொம்புமுறி விழையாட்டு நடாத்துவதற்கு ஊர்க்கடுக்கண்டவர்கள் தென்சேரி வடசேரிவாரத்திற்கு தெரிபட்டு குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு அமைய நடநடது கொள்வோம் என்று கையொப்பமிட்டுள்ளனர். அவர்கள் இவ்வாறு நடந்து கொள்வார்கள் என்பதை பொலிஸ் தலமை உத்தியோகம் பார்த்த அந்நாளைய விதானைமார் வன்னிமை முன்னிலையில் கையொப்பம் வைத்து உத்தரவாதம் அளித்துள்ளனர்.

கொம்பு முறிபற்றி இவ்வாறு எழுதப்பட்ட பல வருடங்களுக்குரிய ஆவணங்கள் உண்டு ஆவணங்களில் குறிப்பிட்டுள்ள நிபந்தனைகளில் அநேகமானவை ஒரே விதமானவை. ஒருசில விசேட நிபந்தனைகள் சில ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

1894ம் ஆண்டு ஆனிமாதம் 16ம் திகதி மட்டக்களப்பு எருவில் பற்று களுதாவளையில் ஊர் நன்மை கருதி கொம்புமுறி விழையாட்டு நடாத்துவது பற்றிய உடன்படிக்கை எழுதப்பட்டுள்ளது. தென்சேரி வாரக்கடுக்கண்டவர்களும் வடசேரி வாரக் கடுக்கண்டவர்களும் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.

உடன்படிக்கை விபரமாக எழுதப்பட்டுள்ளது. 5 நிபந்தனைகள் பற்றிய சுருக்கம் பின்வருமாறு அமைந்துள்ளன.

01. இப்போது நடந்தேறிவரும் தேங்காய் அடிப்பதை 15 நாட்களுக்கு நடாத்தவும். இந்த நாட்களிலே தேர் வேலை புரைவேலைகளை முன்னீடு பின்னீடாக முடித்துக் கொள்ளவும்.

02. 11 நாளைக்குள் கொம்புத் தட்டெடுத்து குத்துக்கால் நாட்டி தேர் வரிந்து கப்பல் கேடகம் முதலிய கட்டு வேலைகளையும் முன்னீடு பின்னீடாய் செய்து முடிக்கவும். கொம்புத்தட்டு வழமைப்படி சதங்கை கட்டி வழக்கமான இடங்களிலே அவரவர் வசந்தனாடிக் கொள்ளவும்.

03. கொம்புத் தட்டெடுத்து அடுத்த நாளில் இருவாரத்துக்காரர்களும் பேசி இணங்கியபடிக்கு தங்களாலியன்ற வெடி வாணம் முடி பிறவாடை முதலிய சகல தளபாடங்களும் செய்து தேர் கல்யாணம் முடித்து தேருக்கு தண்ணீர் சொரிந்து சீலை போட்டு முடிகவிழ்த்து வழமைப்படி முடிக்கவும்.

04. தங்களால் இயன்றளவு இரண்டு நாளைக்கு தேர்களைச் சோடித்து ஏழு நாளைக்குள் தேர் இழுக்கவும் நேருக்கு இரண்டே முக்கால் விரக்கடையில் சரி கொம்புக்குத் தோடு இரண்டு விரக்கடை குச்சித் தோடும் பிடித்து அவ்அவ் இடத்தில் பில்லி வைத்து கொம்பு கட்டிக் கொள்ளவும். கொம்பு இரண்டு வாரக் காரர்களும் ஏற்க எடுத்துக் கொள்ளவும். நியாயமாய் கட்டிப்பிடித்து முறித்துக் கொள்ளவும்.

05. முற் சொல்லியபடி தேரிழுத்து முடிந்த அடுத்த நாளில் அம்மனைக் கொண்டு வந்து பொங்கிப் போடவும்.

இவ்வாறு இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப் பட்டுள்ளன.

தொடர்ந்தும் விளையாடலாம்.....
read more...

உங்களால முடிஞ்சா இதை படிச்சு பாருங்க…



என்ன தலைப்ப பார்த்து ஓடி வந்து எனக்கு திட்டவேண்டாம் முதலில் இதைப் பாருங்க. கொம்புமுறி விளையாடலாம் வாங்க.. பகுதி 02

இன்னும் சில மணித்தியாலங்களில் 2010 ஜ வழியனுப்பி 2011 ஜ வரவேற்கக் காத்திருக்கின்றோம். 2010 பலருக்கு நல்ல ஆண்டாக அமைந்திருக்கும் இருந்தாலும் சில மறக்க முடியாத விடயங்களும் இடம்பெற்றிருக்கலாம்.

மட்டக்களப்பு மாவட்டத்திலே கடும் மழை பெய்துகொண்டிருக்கின்றது. பல ஆயிரக்கணக்கான மக்கள் 50 க்கும் மேற்பட்ட முகாம்களிலே தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர். சில இடங்களுக்கான போக்குவரத்துக்கள்கூட துண்டிக்கப்பட்ட நிலையில் இருக்கின்றது. மட்டக்களப்பு மக்கள் வெளியில் வரக்கூட முடியாத அடை மழையில் புதிய ஆண்டை வரவேற்கக் காத்திருக்கின்றனர்.

என்னைப் பொறுத்தவரை நான் நினைத்திருந்த விடயங்கள் எதுவும் நிறைவேறவில்லை என்றே சொல்ல வேண்டும். அனைத்தும் புதிய ஆண்டில் நிறைவேறும் என்ற நம்பிக்கை இருக்கின்றது.

வலைப்பதிவைப் பொறுத்தவரை சில நண்பர்களை கருத்து முரண்பாடுகளால் இழந்திருக்கின்றேன். எல்லோருடைய கருத்துக்களும் ஒத்திருப்பதில்லை கருத்துக்கள் முட்டிமோதும்போதுதான் உண்மைகள் வெளிவரும்.


வலைப்பதிவோடு கருத்து முரண்பாடுகள் நின்றுவிடும் என்று நினைத்தேன் ஆனால் சில நண்பர்களின் நட்புக்களைக்கூட இழந்திருக்கின்றேன்.

இலங்கை வலைப்பதிவுலகைப் பொறுத்தவரை பதிவர்களை மோதவிட்டு வேடிக்கை பார்க்கவென்றே சிலர் இருக்கின்றனர். அவர்கள் புது வருடத்திலாவது திருந்துவது நல்லதென்று நினைக்கின்றேன்.

2010ஜ பொறுத்தவரை நான் அதிகம் அரசியல் சார்ந்த பதிவுகளை இட்டிருந்தேன். அதனால்தான் சில நண்பர்கள் என்னுடன் கருத்து முரண்பட்டுக் கொண்டனர்.

நம் கருத்துக்கள் முரண்படலாம் ஆனாலும் கருத்து முரண்பாட்டினால் நம் நட்பு இல்லாமல் போகக்கூடாது. நான் எதனையும் துணிந்து சொல்பவன் எத்தனையோ அச்சுறுத்தல்கள் வந்தபோதும். என் கருத்துக்களில் தவறிருந்தால் எவரும் தவறுகளை சுட்டிக் காட்டலாம்.

கருத்து வேறுபாடுகளினால் நட்புக்களை இழக்க நான் விரும்புவதில்லை. அண்மையில் இலங்கைப் பதிவர் சந்திப்ப நடந்தபோது நான் கொழும்பில்தான் இருந்தேன். சந்திப்புக்கு செல்ல வேண்டும் என்ற ஆசையிருந்தது. ஆனாலும் மனது இடம் கொடுக்கவில்லை. காரணம் முன்னைய சந்திப்புக்களிலே என்னோடு நன்பர்களாக இருந்தவர்கள் இப்போது என்னுடன் கதைப்பதில்லை.

இனிவரும் காலங்களிலாவது கருத்து வேறுபாடுகளினால் நட்பை முறித்துக் கொள்ளாமல் இருப்போம்.

மறுபுறத்திலே நான் வலைப்பதிவிலே எதனையும் சாதித்து விடவில்லை ஏதோ கிறுக்கியிருக்கின்றேன். புது வருடத்திலாவது ஏதாவது மக்களுக்காகவும் தமிழுக்காகவும் எழுதவேண்டும்.

புது வருடம் இனைவருக்கும் இனிய ஆண்டாக அமையட்டும்.
படங்கள் இணையம்.. 
read more...

Tuesday, 28 December 2010

கொம்புமுறி விளையாடலாம் வாங்க.. பகுதி - 01

இது என்னுடைய முன்னைய பதிவு மீண்டும் பதிவாகிறது... கொம்பு முறி விளையாட்டைப் பற்றி தொடர் ஒன்று எழுத வேண்டும் என்று பகுதி 01 பதிவிட்டுவிட்டு வலைப்பதிவு பக்கம் வராததால் பகுதி இரண்டு இன்னும் பதிவிடவில்லை பகுதி 02  இன்று பதிவிட இருப்பதனால் பகுதி ஒன்றை மீண்டும் பதிவிடுகிறேன். 

தமிழருகே  தனித்துவமான கலை, கலாசார, பாரம்பரியங்கள் இருக்கின்றன. அவை இன்று மறைந்து வருகின்றன. அன்று நடைபெற்ற பல விடயங்களை நமது முன்னோர்கள் சொல்லியே நாம் அறியவேண்டி இருக்கின்றது.



எமது பாரம்பரிய கலைகளை நாம் கட்டிக்காக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். பல விடயங்களை நாம் எமது முன்னோர்கள் சொல்லியே அறியவேண்டி இருக்கின்றது. எமது எமது எதிர்கால சந்ததியினர் எமது பாரம்பரிய கலை, கலாசாரங்களை எதிர்காலத்தில் தெரியாமல் இருப்பதற்கும் சந்தர்ப்பங்கள் இருக்கின்றன.

தமிழருக்கே தனித்துவமான ஒரு விளையாட்டாக கொம்புமுறி விளையாட்டு விளங்குகின்றது. கொம்புமுறி விளையாட்டுக்கு பிரசித்தி பெற்ற இடமும் எனது கிராமம் களுதாவளை. கொப்புமுறி விளையாட்டு இடம் பெற்ற  இடம் கொம்புச்சந்தி என்று இப்போதும் எல்லோராலும் பயன்படுத்தப் படுகின்றது ஆனால் இங்கே இருக்கின்ற பலருக்கு கொம்புமுறி விளையாட்டு என்றால் என்ன என்று தெரியாது.

கொம்புமுறி விளையாட்டு தொடர்பாக நான் முன்னர் மேலோட்டமாக ஒரு இடுகை இட்டிருந்தேன்.  இந்த பதிவின் மூலம் கொம்புமுறி விளையாட்டு பற்றியும் எமது கிராமத்திலே எவ்வாறு கொம்புமுறி விளையாட்டு இடம் பெற்றது என்ற பல சுவாரஷ்யமான விடயங்களை வரலாற்று தகவல்களோடு பகிர்ந்து கொள்ள இருக்கின்றேன்.

கண்ணகை மாநாய்கரின்  வளர்ப்பு மகள். மாசாத்துவரின் மருமகள். கோவலன் மனைவி. செட்டி குலத்திலே வளர்ந்த செட்டிச்சி அம்மை. மாவின் கனியாக வந்த மாறன் விழி மாற வழி செய்தவள்.  மாதவிக்குப் போன்தோற்ற கணவருடன் பூம்புகார் விட்டுப் புறப்பட்டு மதுரை சென்றாள்.  ஆயர் இடை சேரியில் கண்ணகியை அடைக்கலமாக வைத்து கண்ணகியின் ஒரு கால் சிலம்பு விற்க  சென்றான் கோவலன்.

தட்டான் ஒருவன் கோவலனை "சிலம்புத் திருடன்" என்று குற்றம் சாட்டினான். விதி வலியால் அறிவிழந்த  பாண்டிய மன்னன் தீர்க்கமாக விசாரணை செய்யாமல் கோவலனை மழுவிலே வெட்டிக் கொன்றான். 

தன் கணவன் கள்வன் எனும் குற்ற  சாட்டின் பேரில் கொலை செய்யப் பட்டத்தை அறிந்த கண்ணகை கடும் கோபமுற்றாள். ஒரு கையில் சிலம்பு மற்றொரு கையில் வேப்பம் குழை.  விரித்த தலை முடி  நீர் வடியும் கண்கள் . கோபா வேசமாக சென்று பாண்டியனோடு வழக்குரைத்த கண்ணகை இடது முலை திருகி எரிந்து பாண்டிநகர் எரித்தாள்.

அடைக்கலமாக இருந்த ஆயர்ப்பாடிக்கு வந்தபோது ஆய்ச்சியர்கள் வெண்ணெய், தயிர் முதலானவற்றை கண்ணகியின் வேப்பம் தனிவித்தனர். கண்ணகை சீரிய தோற்றம் மாறவில்லை. பொங்கிய சினம் தணியவில்லை. இளைஞர்கள் கண்ணகி கட்சி கோவலன் கட்சி என்று இரண்டு பிரிவாகப் பிரிந்து கொம்பு எனப்படும் வளைந்த தடிகள்  இரண்டினை ஒன்றோடு ஒன்று கொழுவி இழுத்து முறித்து விளையாடி கண்ணகை கட்சிக்கு வெற்றி கொடுத்து ஆடிப் பாடி மகிழ்ந்தனர்.

இந்த வினோத விளையாட்டினை கண்ணுற்ற கண்ணகை கோபம் தணிந்து மணம் மகிழ்வுற்று சிரித்ததாகவும் கண்ணகையை மகிழ்சி அடைய செய்யும்  நோக்கிலே தோன்றி வளர்ச்சி அடைந்ததே இந்த கொம்புமுறி விளையாட்டு. இது விளையாட்டு என்று பேர் பெறினும் சமய சம்மந்தமானதும் இலக்கிய இராசனைக்குரியதும் என்பது குறிப்பிடத்தக்கது.

கிழக்கிலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்திலே வெற்றிலை செய்கையின் மூலம் புகழ் பெற்ற கிராமம் களுதாவளை கிராமம். பழம் பெருமை மிக்க இக் கிராமத்தின் வெற்றிலை தனி சுவை மிக்கது. "காலி  விளை பாக்கிற்கும் களுதாவளை வெற்றிலைக்கும் ஏலம் கிராம்பிட்கும் ஏற்றதுதான் உன் எழில் வாய்"  என்று நாட்டுப்புற பாடலிலே பாடும் அளவுக்கு பிரசித்தி பெற்றதுதான் இக் கிராமம்.

கண்ணகை வழிபாடு இந்தியாவிலே ஆரம்பமானது. சேரன் செங்குட்டுவன் இமய மலையில் கல்லெடுத்து கனக, கனக விஜயன் தலைமையிலே சுமந்து வர செய்து கண்ணகிக்கு சிலை செய்தான். கோவில் கட்டி விழாக் கொண்டாடினான். விழாவுக்கு சென்ற இலங்கை கஜபாகு வேந்தன் கண்ணகை சிலைகளையும், வழிபாட்டினையும் இலங்கைக்கு கொண்டு வந்ததாக சிலப்பதிகாரம் சொல்கின்றது.

கிழக்கிலங்கையில் மட்டக்களப்பு மாவட்டத்திலே கண்ணகை வழிபாடு பிரசித்தி பெற்றது.  கொம்புமுறி விளையாட்டு கண்ணகை அம்மனை முன்னிறுத்தியே நடை பெறும். அம்மை, கொப்பளிப்பான், கண்நோய், போன்ற நோய்களை "அம்மன் கோதாரி"  என்று அழைப்பது மட்டக்களப்பு பிரதேச வழக்கு.

மழை வளங்குன்றி, வரட்சி அதிகமான காலத்திலேயே இந்த நோய்கள் அதிகம் பரவும். மஞ்சலும், வேப்பிலையும் இதற்கு மருந்து. கண்ணகை அம்மனுக்கு விழா நடத்தினால் கண்ணகை மகிழ்சியுற்றால் மழை பொழியுமெனவும் கோதாரிகள் (நோய்கள்) குறையும் எனவும் மக்கள் நம்பினர். இதனாலேயே கண்ணகையை வேண்டி மக்கள் மழைக் காவியம் பாடினர்.

"கப்பல் திசை கேட்டது கரைக்குள் அடையாதோ
கட்டையினில் வைத்த பின மற்றுயிர் கொள்ளாதோ
உப்பளமத்தில்  பதர் விதைக்க முளையாதோ 
உத்தரவு ஊமையனுரைக்க அறியானோ
இப்பிரவியர் குருடு இப்ப தெளியாதோ
எப்பமா மழை தருவ தென்றினி திருந்தாய் 
தப்பினால் உலக முறுவார்கள்  துயர் கண்டாய் 
தற்பரா பரனுதவு சத்தி கண்ணகையே"

என்பது மழைக் காவியத்தில் சில வரிகள்.

கொம்புமுறி விளையாட்டு நடத்துவதானாலும் கண்ணகையினுடைய அருளையும், கருணையும் பெற்று நோய் நொடியின்றி  மழைவளம் பெற்று வளமாக வாழலாம் என்று மக்கள் நம்பினர். அவர்களுடைய நம்பிக்கை நிறைவேரியமையினாலேயே இன்றும் கண்ணகை வழிபாடு நிலைத்து நிக்கின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்திலே கொம்புமுறி விளையாட்டு பரவலாக நடைபெற்றிருக்கின்றது. களுதாவளையிலே மிக நீண்ட காலமாக இக் கொம்புமுறி விளையாட்டு சிறப்பாகவும், ஒழுங்காகவும் திட்டமிட்டும் நடைபெற்று வந்திருக்கின்றது. மட்டக்களப்பு தமிழகம் எனும் நூலில்  இது பற்றி விபரமாக குறிப்பிடப் பட்டுள்ளன.

கொம்பு என்ற சொல் பல்வேறுபட்ட கருத்திலே வழங்குகின்றது. பழங்காலத்தில் கொம்பு என்றோர் துளைக் கருவி இருந்தது. கொம்பு போன்று வளைந்த இதனை "ஊதிடு கொம்பு" என்றனர். கோடு, இரலை, ஆம்பல், வபிர், என்றும் அதனைக் குறிப்பிட்டனர்.

கோடு என்பது ஏரிக்கோடி, கோல், நந்து, மேன்மை, விலங்கின் கொம்பு, மரக் கொம்பு என்பனவற்றையும் குறிக்கும். "கொம்பு விளையாட்டு என்று சொல்லும்போது அது மரக் கொம்பினையே குறிக்கின்றது. அதிலும் இதற்கு என்று குறிக்கப்பட்ட அளவு, தகமை பெற்ற வளைந்த மரக் கொம்பே இதனால் கருதப் படுகின்றது.

கொம்புமுறி விளையாட்டு நடைபெறுவதற்கு இரண்டு கட்சிகள் தேவை ஒன்று கோவலன் கட்சி மற்றொன்று கண்ணகை கட்சி. கோவலன் கட்சியை வடசேரி என்றும், கண்ணகை கட்சியை தென்சேரி என்றும் குறிப்பிடுவர். வடசேரி, தென் சேரி  என்பவற்றை வடசேரி வாரம் தென் சேரி வாரம் என்று அழைப்பது மட்டக்களப்பு வழக்காறு.

மட்டக்களப்பு பிரதேசத்திலே கோவில் உரிமை அதிகமாக குடிவழியாக கணிக்கப்படுகின்றது.  பல குடிகள் இருக்கின்றன, குடும்பம் என்றும் சில இடங்களிலே சொல்வார்கள். ஒரு தாயின் பிள்ளைகள் ஆண் என்றாலும் சரி பெண் என்றாலும் சரி அனைவரும் தாயின் குடியினராகவே கணிக்கப் படுவர்.

வடசேரி, தென்சேரி வாரம் கணிக்கப்படும்போது மாறாக தந்தையின் வாரமாகவே ஆண் பெண் பிள்ளைகள் அனைவரும் கருதப்படுவர். வாரம் என்பதனை வாரக் கட்டு என்றும் சொல்வதுண்டு...



தொடரும். 
read more...