Friday, 13 July 2012

ஆடையின்றி இன்பம் காணும் இணைய அரட்டை



இணையமானது பல்வேறு பட்ட நன்மைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டாலும் அதிகமானவர்கள் அவற்றை தவறாக பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக அதிகமானவர்கள் இணையத்தினை செக்ஸ்  தேவைகளை பூர்த்தி செய்வதற்காகப் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக தமது காம, செக்ஸ் வக்கிரங்களை தீர்த்துக் கொள்வதற்காக சமூகத்தளங்களையும், அரட்டை இணையத்தளங்களையும் பயன்படுத்தி வருகின்றனர்.

இவ்விடயம் தொடர்பில் நான் பல தடவை எழுதி இருந்தாலும். செக்ஸ் அரட்டை தொடர்பாக இன்னும் நிறையவே எழுதவேண்டும். சில தகவல்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும்என்பதற்காக செக்ஸ் அரட்டை தொடர்பாக பல விடயங்களை ஆராய முற்பட்டேன் கடந்த மூன்று மாதங்களாக என்னுடைய அதிக நேரங்களை சமூகத்தளங்களிலும் அரட்டை இணையத்தளங்களிலும் செலவிட்டேன். காரணம் இவ்வாறான செக்ஸ் அரட்டை மூலம் பலர் தமது வாழ்க்கையை சீரழித்துக் கொண்டிருக்கின்றனர் அவர்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

மூன்று மாதங்கள் சமூகத்தளங்களிலும், அரட்டை இணையத்தளங்களிலும் அதிக நேரம் செலவிட்டதன் பயனாக இவ்விடயம் தொடர்பாக பல விடயங்களை மற்றவர்களுக்கும் பகிர்ந்துகொள்ளவேண்டி இருக்கின்றது. காரணம் எமது இளம் சமூகம் எந்தளவிற்கு சீரழிந்து கொண்டிருக்கின்றது என்பதனை மற்றவருக்கும் சொல்லவேண்டியிருக்கின்றது.

உண்மையில் நான் நினைத்தக்கூட பார்க்கவில்லை இந்தளவிற்கு எமது இளம் சமூகம் சீரழிந்து செல்கின்றது என்று. உண்மையில் அரட்டை இணையத்தளங்கள் செக்ஸ் அரட்டைக்காகவே பயன்படுத்தப்படுகின்றன.  இவ் அரட்டை இணையத்தளங்களில் பலர் தினமும் அதிக நேரத்தை செலவிடுகின்றனர். இதில் ஆண்கள் மாத்திரமல்ல அதிகமான பெண்களும் அடங்குகின்றனர். முகத்தை மறைத்து வீடியோ அரட்டைகளில் ஈடுபடுகின்றனர். பல நாட்கள் பழகிய பின்னர் நேரடியாக சந்தித்துக்கூட தமது காம வேட்கையை தீர்த்துக் கொள்கின்றனர்.

சமூகத்தளங்களும் இதற்கு விதிவிலக்கல்ல பலரை நாடி பிடித்தப் பார்த்தேன். அதிகமானவர்கள் இவ்வாறான அரட்டைகளில் ஈடுபடுகின்றனர். இத்தொடரில் எவருடைய தனிப்பட்ட விபரங்களையும் நான் வெளியிடமாட்டேன். எவரும் பயப்பட தேவையில்லை.

அரட்டை இணையத்தளங்களிலே செக்ஸ் அரட்டை அடிப்பவர்கள் அவர்களுக்குள்ளே ஒரு வலையமைப்பை வைத்திருக்கின்றனர். நானும் சில அரட்டை இணையத்தளங்களுக்குள் பிரவேசித்து அவர்களின் தொடர்புகளைப் பெற்றேன். அவர்கள் பற்றிய முழு விபரங்களும் எனக்கு கிடைத்தன. இவ் இணையத்தளங்களிலே 20 - 30 வயதுக்குட்டபட்ட இளம் பெண்கள் அதிகம் ஈடுபடுகின்றனர்.
நீண்டநாட்களுக்கு முன்னர் இவ்விடயங்களை எழுத நினைத்து பல நண்பர்களிடம் இவ்விடயம் பற்றி பேசினேன் சிலர் இவைகளை வெளியிடவேண்டாம் என்று கூறினார்கள். பலர் எழுதும்படி கூறினார்கள். நான் பல ஆதாரங்களையும் புகைப்படங்களையும் இத் தொடரில் வெளியிட இருக்கின்றேன். இது ஒரு விழிப்புணர்வுக்கான பதிவு யாரையும் புண்படத்தும் நோக்கம் இல்லை. எவர் பற்றிய தனிப்பட்ட தகவல்களையும் வெளியிடமாட்டேன்.

ஆனாலும் பல உண்மையான விடயங்களையும் ஆதாரங்களையும் தொடர்ந்து வெளியட இருக்கின்றேன். சில நண்பர்கள் கேட்டார்கள் அது அவரவர் சுதந்திரம் இதில் மற்றவர் தலையிடவேண்டிய அவசியமில்லை என்று எது எப்படி இருப்பினும் எமது கலாசாரத்தை நாம் பாதுகாக்கவேண்டிய பொறுப்பு இருக்கின்றதல்லவா?


தொடரும்...

read more...

Monday, 9 July 2012

கிழக்கு மாகாணசபைக்காக நாக்கை தொங்கவிட்டு நாயாய் அலையும் கூட்டம்



கிழக்கு மாகாணத்தின் இன  விகிதாசாரம் தெரியாமல் கிழக்கு மாகாணசபையினை நாமே கைப்பற்றுவோம், முதலமைச்சர் பதவி எமக்குத்தான் என்றெல்லாம். கூட்டமைப்பினர் தம்பட்டமடிப்பது சிறு பிள்ளைத்தனமானது. கிழக்கு மாகாணத்தில் ஒரு சமூகம் மாத்திரம் மாகாணசபை ஆட்சியை அமைக்க முடியுமா இல்லையா என்பதனைக்கூட அறியாத கூட்டமைப்பினர் கிழக்கு மக்களுக்கு என்ன செய்யப்போகின்றனர்.

கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை மூவின மக்களும் வாழ்ந்து வரும் ஒரு பிரதேசம், கிழக்கு மாகாணத்தின் அரசியல் நிலைமைகளை எடுத்துப் பார்க்கின்றபோது கிழக்கு மாகாணத்தின் இன விகிதாசாரம் கிழக்கு மாகாண அரசியலை தீர்மானிப்பதிலே பெரும் பங்கு வகிக்கின்றது. தனித்து ஒரு சமூகத்தினால் அட்சி அமைக்க முடியாத இன விகிதாசாரம் கிழக்கு மாகாணத்திலே இருக்கின்றது.

இன்று கூட்டமைப்பினர் சொல்வதுபோது தமிழர்கள் மட்டும் ஆட்சியமைக்க முடியுமா? வெறுமனே கண்ணை மூடிக்கொண்டு பேசிக்கொண்டிருக்கின்றனர். தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையிலான விகிதாசார வேறுபாடு ஒருசில வீதங்களே. முஸ்லிம்கள் உச்ச அளவில் வாக்களிப்பார்கள் குறிப்பாக 80-90 வீதம் வாக்களிப்பார்கள். ஆனால் தமிழர்களோ 50-60 வீதம் வாக்களிப்பார்கள். இது கடந்தகால புள்ளிவிபரங்கள் சொல்கின்றன. தொடரும் பகுதிகளில் புள்ளிவிபரங்களை இணைக்கிகின்றேன். மறு புறத்தில் இத் தேர்தலில் முஸ்லிம்களின் வாக்களிப்பு வீதம் இன்னும் அதிகரிக்கலாம். காரணம் முஸ்லிம் ஒருவரை முதலமைச்சராக பெற வேண்டும் என்பதில் முஸ்லிம்கள் உறுதியாக இருக்கின்றனர்.

கிழக்கின் இன விகிதாசாரமோ வாக்களிப்பு வீதங்களோ அரசியல் நிலைமைகளோ தெரியாமல் எங்களுக்குத்தான் முதலமைச்சர் கிடைக்கும் என்று கூட்டமைப்பினர் சொல்வதற்கும் காரணம் இல்லாமல் இல்லை. அவர்களின் ஒரே நோக்கம் தமிழ் முதலமைச்சரை இல்லாமல் செய்ய வேண்டும் என்பதாகும். அதுவும் குறிப்பாக பிள்ளையானை அரசியலில் இருந்து துரத்தவேண்டும் என்பதே அவர்களின் ஒரே நோக்கம்.

இன்று கிழக்கிலே ஒரு பாரிய அரசியல் சக்தியாக பிள்ளையானும் அவரது கட்சியும் உருவெடுத்துவிட்டது. இனிமேலும் பிள்ளையானை விட்டுவைத்தால் கிழக்கிலே தாம் அரசியல் நடாத்த முடியாது. கிழக்கு மாகாணம் பாரிய அபிவிருத்தி கண்டு வருகின்றது. கிழக்கு மக்கள் பிள்ளையான் பின்னால் அணி திரள்கின்றனர். என்பதை எல்லாம் பார்க்கின்றபோது கூட்டமைப்பினருக்கு என்றுமில்லாத ஒரு அச்சமும் நடுக்கமும் பிடித்துவிட்டது.

பூசாரியை வைத்து பூசை முடித்து சில சதித் திட்டங்களைத் தீட்டி கிழக்கு மாகாணத்தில் தமிழ் முதலமைச்சரை இல்லாமல் செய்ய முயற்சிக்கினறனர். பாவம் இவர்கள் கிழக்கு மக்கள் உண்மைகளையும் யதார்த்தங்களையும் உணர்ந்துவிட்டனர். கூட்டமைப்பினரை தூக்கி எறிந்துவிட்டனர் என்பதை அறிந்தும் தாம் தோல்லி அடைவோம் என்று தெரிந்தும் ஆசாமியும் அவரது அடிவருடிகளும் முதலமைச்சர் பதவி ஆசையோடு நாக்கை தொங்ஙவிட்டு நாயாய் அலைகிறார்கள்.

காரணம் பல தசாப்த அரசியல் நடத்திய கூட்டமைப்பினருக்கு எப்படி அரசியல் செய்வது என்பது தெரியாது. பிள்ளையான் நடாத்திய அரசியலைப் பார்த்து தாமும் பிள்ளையானைப் போன்று கிழக்கு மாகாணசபையை ஆட்சி செய்து பார்ப்போம் என்ற ஆசைதான்

தொடரும்...
read more...

Thursday, 5 July 2012

கிழக்கு மாகாணசபைத் தேர்தலுக்காக கொக்கரிக்கும் கூட்டங்கள் - கொக்கரிப்பு -04

கிழக்கு மாகாணத்தின் இன்றைய நிலையும் மக்களின் அரசியல் மீதான அக்கறை பற்றியும் இந்தத் தொடரில் ஆராயலாம் என நினைக்கின்றேன். அண்மைக் காலமாக கிழக்கு மாகாண தமிழ் மக்கள் அரசியலிலும் வெறுப்புக் கொண்டவர்களாகக் காணப்பட்டனர். இதனால் தேர்தல்களில் வாக்களிப்பதிலிருந்து விலகியிருந்தனர். மறு புறத்தில் தமது அரசியல் இஸ்திரத் தன்மையினைப் பேணுவதிலும் தமது பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதிலும் தமது வாக்குப் பலத்தினை முஸ்லிம் மக்கள் பயன்படுத்தத் தவறியதில்லை.

இவ்வாறு தமிழ் மக்கள் அரசியலில் நாட்டமற்றுச் சென்றமைக்கான முக்கிய காரணம் கடந்தகால அரசியல்வாதிகள் மக்களை திட்டமிட்டு ஏமாற்றியிருக்கின்றனர். என்பதனை மக்கள் நன்கு உணர்ந்ததன் வெளிப்பாடே மக்கள் வாக்களிப்பதிலிருந்து விலகியிருந்தனர். தேர்தல் காலங்களில் வருவார்கள் ஆயிரம் பொய்களையும் உணர்ச்சி வார்த்தைகளையும் மக்கள் மத்தியில் விதைத்தவிட்டு மக்கள் ஓட்டுப் போட்டதும் தெரிவு செய்யப்பட்டபின் அந்த மக்களையும் அவர்களின் அவலங்களையும் மறந்து அரசாங்கம் வழங்கும் சலுகைகளைப் பெற்று சுயபோக வாழ்க்கை வாழ்ந்து வருவார்கள்.

எப்போதாவது மக்களை சந்தித்தால் உணர்ச்சி வார்த்தைகளைக்கூறி மக்களை சூடேற்றி பலிக்கடாவாக்குவது பாராளுமன்றம் சென்று எதிர்க் கட்சி ஆசனங்களிலே அமர்ந்திருந்து பாராளுமன்றக் கதிரைகளைச் சூடேற்றியதைத் தவிர மக்களுக்கு கடந்தகால தமிழ் அரசியல்வாதிகள் என்ன செய்தனர்? ஆனால் முஸ்லிம் மக்களும் அரசியல்வாதிகளும் அரசியல் யதார்த்தங்களை நன்கு உணர்ந்து செயற்பட்டு அரசாங்கத்தில் அங்கம் அமைச்சுப் பொறுப்புக்களைப் பெற்று அரசாங்கத்துடன் பேரம்பேசி தமது அரசியல் இஸ்திரத் தன்மையினைப்பேணி தமது பிரதேசங்களை அபிவிருத்தி செய்து வருகின்றனர்.

இந்த மாகாணசபைத் தேர்தலிலும் கிழக்கிலே முஸ்லிம் முதலமைச்சர் ஒருவரைப் பெறவேண்டும் என்பதில் முஸ்லிம் மக்களும், முஸ்லிம் அரசியல்வாதிகளும் முனைப்பாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆனால் தமிழர் ஒருவர் முதலமைச்சராக வரக்கூடாது என்பதற்காக கூட்டமைப்பினரும் அவர்களுடன் சார்ந்த ஒரு சிலரும் சில சதித் திட்டங்களை செய்து வருகின்றனர்.

இன்று கிழக்கிலே ஒரு கட்சி உதயமாகி யுத்தத்தால் சின்னாபின்னமாக்கப்பட்ட கிழக்கை துரிதமாக அபிவிருத்திப் பாதைக்கு இட்டுச் செல்கின்றது. கிழக்கு மக்கள் நிம்மதியாக வாழ்கின்றனர் என்பதனை உணர்ந்த கூட்டமைப்பினர் இவைகளை இல்லாமல் செய்யவே கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்திருக்கின்றனர்.

இன்று கிழக்கிலே பிள்ளையான் முதலமைச்சராக பதவியேற்றதன் பின்னர் பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் இடம்பெற்று கிழக்கு மாகாணம் துரிதமாக வளர்ச்சியடைந்து வருவதை எவராலும் மறுக்கவும் முடியாது இடம்பெற்ற அபிவிருத்திகளை மறைக்கவும் முடியாது. யாரால் இவ்வாறான அபிவிருத்திகள் சாத்தியமாகின யார் மக்களுக்காக சேவை செய்கின்றனர் என்பதனை கிழக்கு மக்கள் நன்கு உணர்ந்துவிட்டனர். இதன் காரணமாகவே தமிழரசுக் கட்சியினரின் தேசிய மாநாட்டை புறக்கணித்தனர். அவர்களின் மாநாடு மட்டக்களப்பில் படு தோல்வியில் முடிவடைந்தது. இதனை பார்க்கவும் (தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு வெற்றியா? தோல்வியா? http://www.shanthru.com/2012/05/blog-post_28.html) கூட்டமைப்பினர் மாhகாணசபையை தாம் கைப்பற்றுவோம் முதலமைச்சர் பதவி தமக்குத்தான் என்று கொக்கரித்துத் திரிகின்றனர். இவர்கள் எல்லாம் படித்த முட்டாள்காளா? கிழக்கு மாகாணத்தில் இன விகிதாசாரம் தெரியாமலா இவ்வாறு பிதற்றுகின்றனர். தமிழர்கள் மாத்திரம் வாக்களித்து ஆட்சியமைக்க முடியுமா? இவர்கள் நாங்கள்தான் முதலமைச்சர் பதவியை பெறுவோம் என்;று சொல்வது சிறு பிள்ளைத் தனமாக இருக்கின்றது...

தொடரும்.....
read more...

பட்டதாரிகளின் வாழ்க்கையோடு விளையாடுகிறார்கள்

மட்டக்களப்பில் HNDA பட்டதாரி பயிலுனர்களுக்கு வழங்கப்பட்ட நியமனங்கள் இரத்து HNDA பட்டதாரிகள் விசனம்

கடந்த மாதம் 29ம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்தில் வேலையற்றிருந்த பட்டதாரிகளுக்கு பட்டதாரிப் பயிலுனர் நியமனங்கள் வழங்கப்பட்டன. இதன்போது HNDA பட்டதாரிகளுக்கும் பட்டதாரிப் பயிலுனர் நியமனங்கள் வழங்கப்பட்டன. இதனடிப்படையில் மட்டக்களப்பு கச்சேரியிலும், பிரதேச செயலகங்களிலும் பட்டதாரிகள் பயிற்சிக்காக இணைக்கப்பட்டிருக்கின்றனர்.

இவ் நியமனக் கடிதத்தினை மட்டக்களப்பு அரச அதிபர் திருமதி P.S.M.சார்ள்ஸ் அவர்கள் கையொப்பமிட்டு வழங்கியிருக்கின்றார். ஆனால் இன்று மட்டக்களப்பு அரச அதிபரினால் பிரதேச  செயலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடித்தில் HNDA பட்டதாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள நியமனங்கள் நிறுத்தப்பட இருப்பதனால். HNDA பட்டதாரிப் பயிலுனர்களை பயிற்சியல் இணைத்துக் கொள்ள வேண்டாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்ட HNDA பட்டதாரிகள் இவ்விடயம் தொடர்பில் குழப்பமடைந்திருக்கின்றனர். காரணம் மண்முனை தென் எருவில் பற்று (களுவாஞ்சிகுடி) பிரதேச செயலகம் உட்பட ஒருசில பிரதேசசெயலகங்களில் HNDA பட்டதாரிகளை நாளை முதல் வேலைக்கு வரவேண்டாம் என்று கூறப்பட்டிருக்கின்றது. ஆனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல பிரதேச செயலகங்களில் HNDA பட்டதாரிகளை வேலைக்கு வரவேண்டாம் என்ற கட்டளை பிறப்பிக்கப்படவில்லை. பிரதேச செயலகங்களுக்கு வெவ்வேறு சட்டதிட்டங்களா?

HNDA கற்கை நெறியும் பல்கலைக் கழக பட்டங்களுக்கு சமமானது என்கின்ற சுற்று நிருபம் அரசினால் வெளியிடப்பட்டு கடந்த காலங்களில் HNDA பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டன. HNDA பெறுமதி வாய்ந்த ஒரு கற்கைநெறி என பலராலும் பேசப்படுகின்ற இக் கற்கை நெறிக்கு வருடந்தோறும் ஆயிரக்கணக்கானவர்கள் விண்ணப்பித்து இக் கற்கை நெறியை நான்கு வருடங்கள்  பயின்று தொடர்ந்து வேலை வாய்ப்பில் ஈடுபடுத்தப்பட்டு வந்தனர்.

ஆனாலும் இந்தப் பட்டதாரிப் பயிலுனர் நியமனத்தில் HNDA பட்டதாரிகள் புறக்கணிக்கப்படுவது ஏன்? நான்கு வருடங்கள் கஸ்ரப்பட்டு படித்து பட்டம் பெற்றது இதற்குத்தானா? அரசாங்கம் ஏமாற்ற நினைக்கின்றதா? இதற்கு முன்னர்  HNDA பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்பட்டு  இப்போது புறக்கணிக்கப்படுவது ஏன்? பல்கலைக்கழக பட்டங்களுக்கு சமமான கற்கைநெறி என்ற சுற்று நிருபம் எங்கே போனது. அரசாங்கம் ஏன் ஏமாற்ற நினைக்கின்றதா?

இவை ஒரு புறமிருக்க நியமனம் வழங்கும்போது இவை பற்றி ஏன் இவர்கள் சிந்திக்கவில்லை. நியமனத்தை அரச அதிபர் சார்ள்ஸ் அவர்கள்தான் கையொப்பமிட்டு அன்று வழங்கினார். இன்று இரண்டு நாட்கள் வேலைக்கு சென்றபின்னர் வேலையிலிருந்து நீக்கியிருக்கின்றார். இது மனித உரிமை மீறலில்லையா?

 நியமனம் வழங்கப்பட்டபோது 2400 பட்டதாரிகளுக்கு முன்னிலையில் HNDA பட்டதாரிகளுக்கும் நியமனம் வழங்கப்பட்டது. இரண்டு நாட்கள் வேலைக்கு சென்றபின்னர். எந்தவித காரணங்களும் சுட்டிக்காட்டப்படாமல் நியமனத்தை இரத்துச்  செய்வது மனித உரிமை மீறலில்லையா? இவ்வாறான செயற்பாடுகளினால் எத்தனை பேரின் மனநிலை பாதிக்கும் எத்தனைபேர் தற்கொலைக்குக்கூட செல்லக்கூடிய நிலையில் இருப்பார்கள் என்பதனை இவர்கள் அறியாமலா வாழ்க்கையில் விளையாடுகின்றனர். 
read more...

Wednesday, 4 July 2012

கிழக்கு மாகாணசபைத் தேர்தலுக்காக கொக்கரிக்கும் கூட்டங்கள் - கொக்கரிப்பு 03

கடந்த பதிவில் குறித்த நண்பர் விதண்டாவாதமான கருத்துக்களை தெரிவித்திருந்தார் அவருக்கு இப்பதிவிலே சில கருத்துக்களைத் தருகின்றேன். முதலில் நீ்ங்கள் உண்மைகளையும், நிஜங்களையும் அறிந்து கொள்ளுங்கள் கிழக்கு மாகாணம் அபிவிருத்தி அடையவில்லை என்பது முட்டாள்தனமானது.

யாழ்ப்பாண மக்களிடம் பிரதேச வாதம் இல்லை என்று சொல்வது உங்கள் அறியாமை நான் பல யாழ்ப்பாண நண்பர்களுடன் பழகி இருக்கின்றேன் அவர்களே இதனை ஏற்றுக் கொண்டிருக்கின்றர்.

கருணா எதற்காகப் பிரிந்தார் அவரது தற்போதைய நடவடிக்கைகள் என்ன என்பது வேறு விடயம். அவரின் நடடிக்கைகள் தொடர்பில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனாலும் கருணா பிரிந்து வந்தபோது அவரால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் உண்மையே.
அடுத்து பிள்ளையான் சொத்து சேர்ப்பதாகச் சொல்லி இருக்கின்றீர்களே எங்கே சொத்துச் சேர்த்திருக்கின்றார் என்பதனை பட்டியலிடுங்கள் கண்ணை மூடிக்கொண்டு கதைப்பதை விட்டுவிட்டு. எல்லோரும் கண்ணை மூடிக்கொண்டு அப்பட்டமான பொய்களைக் கதைக்கலாம். ஆனாலும் உண்மைகள் உறங்குவதில்லை. போராளியாக இருந்த பிள்ளையான் இன்று ஒரு ஜனநாயக அரசியல் பாதையில் வந்திருக்கின்றார். அவருக்கும் ஆசா பாசங்கள் இருக்கின்றன அவர் நகைகள் போடக்கூடாது என்பது உங்கள் முட்டாள்தனம். புலிகள் அமைப்பில் இருந்த போராளிகள் இன்று நகைகள் அணியவில்லையா? புலிகளின் நடவடிக்கைகள் தவறானவை என்று பிரிந்து வந்த பிள்ளையான் எதற்கு புலிகளின் கொள்கைகளைப் பின்பற்ற வேண்டும். எதற்காக நகை அணியக்கூடாது.

அரசால் வழங்கப்படுகின்ற சலுகைகளை கூட்டமைப்பினர் பெறுகின்றனர் என்பதற்கு ஆதாரம் என்னிடம் கேட்பதற்கு முன்னர் உங்கள் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கேட்டுப் பாருங்கள். அரியநேந்திரன் அவர்கள் அரசிடம் இருந்து மூன்று வேலைவாய்ப்புக்களைப் பெற்று மனைவிக்கும், மச்சாளுக்கும், மகளுக்கும் கொடுத்திருக்கின்றார். இதை அரியநேந்திரனிடம் கேட்டுப் பாருங்கள்.

மிக அண்மையில் நடந்த சம்பவம் செல்வராஜா அவர்கள் ஒரு அமைச்சரைச் சந்திக்க முந்திரிப்பருப்பு தயிர் போன்றவற்றை கொண்டு சென்றிருக்கின்றார். எதற்காகத் தெரியுமா? குடிநீர் இல்லாமல் கஸ்ரப்படுகின்ற துறைநீலாவணை மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக வந்த திட்டத்தினை தடுத்து தனது கிராமமான கல்லாற்றுக்கு அத் திட்டத்தினை மாற்றி கேட்டிருக்கின்றார் குறித்த அமைச்சரிடம். இது மாத்திரமல்ல தமது உறவினர்களுக்கு அரசிடமிருந்து அரசிடமிருந்து பல உதவிகளைப் பெற்றுக் கொடுத்திருக்கின்றார். அண்மையில்கூட அரசாங்கத்தின் விருந்துபசாரத்தில் கலந்து கொண்டார்களே கூட்டமைப்பினர்.

எல்லைப் புறங்களை பாதுகாக்கவும் எல்லைப்புற கோவில்களை புனரமைக்குவும் பிள்ளையான் அவர்கள் பெருந்தொகையை ஒதுக்கி இருக்கின்றார். கூட்டமைப்பினர் விகாரை கட்டுகிறார்கள், காணி பிடிக்கின்றார்கள் என்று அறிக்கைகள் மூலம் கொக்கரிப்பார்கள் அதை வைத்து அரசியல் நடத்துவார்கள் ஆனால் பிள்ளையான் எதையும் செயலில் காட்டிவிடுவார். முஸ்லிம்களால் பிடிக்கப்பட்ட தமிழ் பிரதேசங்கள் எத்தனை காப்பாற்றப் பட்டிருக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா?

விகாரைகள் கட்டப்படுகின்றன என்று சொல்லும் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கின்றேன். சிங்களப் பிரதேசங்களிலே தமிழர்கள் கோவில்கள் கட்டவில்லையா? சிங்களவர்கள் செறிந்து வாழும் கொழும்பிலோ தமிழர்கள் எத்தனை பெரிய கோவில்களைக் கட்டியிருக்கின்றனர். உங்களை சங்கள மக்கள் தடுத்து நிறுத்தியிருக்கலாம்தானே?

பிள்ளையான் குழு கொள்ளையிட்டதாகச் சொல்கின்றீர்களோ நீங்கள் பத்திரிகைகள்கூட பார்ப்பதில்லைபோலும் வங்கிக் கொள்ளை உட்பட அனைத்துக் கொள்ளையுடனும் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். அவர்களில் எவரும் பிள்ளையான்குழு அல்ல. இதுகூட தெரியாமல் கண்ணை மூடிக்கொண்டு பேசுகின்றீர்கள்.

அப்பட்டமான பொய்களை சொல்ல நினைக்காதீர்கள் கொலை கொள்ளைகள் தொடர்பாக UN REPORT இருப்பதாகச் சொல்லும் நீங்கள் அதனை வெளியிடுங்கள். பிள்ளையான்குழு எந்த ஒரு புலனாய்வு அமைப்புடனும் சேர்ந்து செயற்படவில்லை. ஆட்களை கடத்தவும் இல்லை கொள்ளை இடவும் இல்லை. அவர்கள் ஆயுதம் ஏந்திய காலமும் இருந்தது. வன்னிப்புலிகள் வந்து பிள்ளையானின் ஆட்களை சுட்டுவிட்டுப்போக பிள்ளையான் குழுவினர் கையைக்கட்டிக்கொண்டிருக்க வேண்டும் என்றா சொல்கின்றீர்கள்.

வெருகல் படுகொலை கிட்டத்தட்ட 150 போராளிகள் கொடுரமாக வன்னிப் புலிகளால் படுகொலை செய்யப்பட்டார்கள். இவர்களில் அதிகமான பெண் போராளிகளும் அடங்குவர். முந்திய பதிவிலே கொடுரமான சித்திரவதை என்று நான் சொன்னது பாலியல் ரீதியான சித்திரவதைகளைத்தான். அது மட்டுமல்ல அந்தக்கால கட்டத்தில் வன்னியிலே இருந்த மட்டக்களப்பு போராளிகளை கொடுரமாகச் சித்திரவதைப் படுத்திய விடயம் உங்களுக்குத் தெரியுமா?

நான் ஒரு ஊடகம் சார்ந்தவன் வாகரைப் பிரதேசத்திலே புலிகள் அமைப்பிலே இருந்த 200 க்கு மேற்பட்ட போராளிகளை பேட்டி கண்டிருக்கின்றேன் அவர்களில் அதிகமானவர்கள் பெண் போராளிகள். கருணா பிரிந்த சந்தர்ப்பத்தில் அவர்கள் கடுமையான சித்தரவதைகள் செய்யப்பட்டிருக்கின்றார்கள். ஒரு பெண் போராளியின் கால்களைக்கூட முறித்திருந்தார்கள்.

பிள்ளையான் அரசோடு சேர்ந்திருப்பதாக குற்றம்சாட்டுகிறீர்கள். எமது பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதற்காக அரசுடன் சேர்ந்திருக்கும் அதேவேளை அரசுக்கு எதிராகவும் செயற்பட தயங்குவதுமில்லை. அண்மையில் நாடு, நகர சட்டமூலம் வந்தபோது அதனை எதிர்த்தவர்கள் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாணசபை என்பதனை எவராலும் மறுக்க முடியாது. இவ்வாறு பல விடயங்கள் பின்னர் அவைகளை விரிவாக தருகின்றேன்.

படுகொலைகளை பட்டியலிடும் நீங்கள் கிழக்கிலே கொல்லப்பட்ட புத்திஜீவிகளையும், கிழக்குப் போராளிகளையும் ஏன் பட்டியலிடவில்லை. அரியநேந்திரனிடம் கேளுங்கள் அவர் யாரை கொலை செய்துவிட்டு பாராளுமன்றம் வந்தார் என்பதனை.

தொடரும்.....




read more...

Tuesday, 3 July 2012

குடித்துவிட்டு கும்மாளமிடும் தமிழ் பெண்கள்



மேலே இருக்கின்ற படத்தினை மூஞ்சிப் புத்தகத்தில் ஒரு நண்பர் இணைத்திருந்தார். பலரும் பெண்களை குற்றம்சாட்டி கருத்திட்டிருந்தனர். பெண்கள் மது அருந்துதல் தவறா? எனக்குள் பல சந்தேகங்கள். பொதுவாகவே மது அருந்துவது தவறுதான் என்னிடமும் இல்லை. மது அருந்துபவர்களை மது அருந்துவதை தடுப்பதே என் எண்ணம்.

ஆனாலும் இப் படத்திற்கு போடப்பட்டிருக்கின்ற கருத்துக்களை வைத்தே இப்பதிவினை எழுதுகின்றேன். பெண்களை குட்டிச் சுவராக்க எங்களில் சில சமூகங்கள் நினைப்பதுண்டு. பெண்களை இரண்டாம் பட்சமாகவும் ஆண்களை முன்னிலைப்படுத்தியும் வருவதுண்டு. ஆண்கள் எதனைச் செய்தாலும் வீரனாகப் பார்க்கும் சமூகம் பெண்கள் எதனைச் செய்தாலும் தவறாக தூற்றுகின்றனர்.

ஒரு ஆணிண் மனைவி இறந்தால் மறு கணமே அவனுக்கு மறுமணம் செய்து வைக்க நினைக்கும் சமூகம் பெண்ணை மட்டும் மறுமணம் செய்ய விடுவதில்லை. விதவை எனும் மகுடம் சூட்டி வேடிக்கை பார்க்கின்றது. இவ்வாறு பல விடயங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

ஆண்களும் பெண்களும் சரிசமம் என்று சொல்லும் நாம் ஏன் பெண்களை வேறு படுத்தி பார்ப்பதுண்டு. பெண்களுக்கும் ஆசா பாசங்கள் இருக்கத்தானே செய்யும். பெண்கள் மட்டும் தமது ஆசாபாசங்களை ஏன் துறக்க வேண்டும். இந்தப் பெண்கள் மது அருந்துகிறார்கள் இது தவறா? ஒட்டு மொத்தத்தில் மது அருந்துவது தவறுதான் ஆனால் பெண்கள் மது அருந்துவதனை தவறு என்று ஒரு பக்க சார்பாக வாதிடுவது தவறு என நினைக்கினி்றேன்.

பெண்களுக்கும் கலாசார பண்பாடுகள் இருக்கின்றன என்று சொல்ல வருகின்றீர்களா? ஏன் ஆண்களுக்கு இல்லையா? குடித்துவிட்டு சமூகத்தை சீரழித்து தமது கலாசார பண்பாடுகளை காற்றில் பறக்கவிட்ட குடிகார ஆண்களே அதிகம். மானத்தைக்கூட காற்றில் பறக்கவிட்டு நிர்வாணமாக வீடுவந்த குடிகாரர்கள் எத்தனைபேர்.

ஆனால் குடித்தாலும் இவ்வாறான நடவடிக்கைகள் குறைவு. சந்தர்ப்ப சூழ்நிலைகளில் குடிக்கலாம் ஆனால் குடியே வாழ்க்கை என்று இருப்பவர்கள் பலர் ஆண்களே. பெண்கள் குடிப்பதற்கு அவர்களின் சமூகமே காரணம். இன்று எத்தனை குடும்பங்கள் பிள்ளை, குட்டி குடும்பத்தோடு குடித்து கும்மாளமிடுகின்றனர்.

ஒட்டுமொத்தத்தில் குடிப்பது தவறுதான் என்றாலும் பெண்கள் குடித்தால் பெரிதா தவறென்று குற்றம்சாட்டுவது சரியா?
read more...

கிழக்கு மாகாணசபைத் தேர்தலுக்காக கொக்கரிக்கும் கூட்டங்கள் - கொக்கரிப்பு 02

முந்திய என்னுடைய பதிவிற்கு ஒரு நண்பர் நீண்ட ஒரு கருத்துரையினை விட்டுச் சென்றார் அவருக்கு பதிலாகவே இந்த பகுதி இடம்பெறுகின்றது.

உங்கள் கருத்துக்கள் அடிமட்ட முட்டாள்தனமாக இருக்கின்றது. வெறுமனே கண்ணை மூடிக்கொண்டு பிள்ளையான் கொலை செய்தான் கடத்தினான் கப்பம் பெற்றான் என்றெல்லாம் சொல்வது உங்களைப்போன்ற யாழ்ப்பாண மேலாதிக்கவாதிகளின் கொள்ளை. கொலைகளை தடுத்து நிறுத்தி கிழக்கில் உண்மையான ஜனநாயகத்தை ஏற்படுத்திய பெருமை பிள்ளையானையே சாரும்.

வெறுமனே கண்ணை மூடிக்கொண்டு கொலை செய்தான் கொள்ளையடித்தான் என்று குற்றம்சாட்டாதீர்கள் ஆதாரங்களோடு உண்மைகளைச் சொல்லுங்கள்.

கிழக்கு மாகாண புத்திஜீவிகளைக் கொன்றொழழித்தது யார் என்பதனை மறந்துவிட்டீர்களா? இராஜன் சத்தியமூர்த்தி உட்பட எத்தனையோ புத்தியீவிகளை கொன்றொழித்தவர்கள் யார்? கிழக்கிலே புத்திஜீவிகள் கொன்றொழிக்கப்படுகின்றபோது இந்தக் கூட்டமைப்பினர் மெளனம் சாதித்தது ஏன்? சாவது கிழக்குத் தமிழன் என்பதனாலா?

புலிகளிலிருந்து கருணா பிரிந்து வந்தபோது. பல வெற்றிச் சமர்களைப் படைத்து உங்களையும் வடக்கையும் காப்பாற்றிய காவல் காத்த கிழக்குப் போராளிகளை கொன்றொழித்தவர்கள்யார்? கிழக்குப் பொராளிகள் பிரிந்து வந்தபோது வெருகலிலே சகோதரப் படுகொலைகளை மேற்கொண்டு 150க்கு மேற்பட்ட போராளிகளை கொன்றொழித்தவர்கள் யார்? இதிலே வெட்கித் தலை குனியவேண்டிய விடயம் உங்களோடு சேர்ந்து போராடிய பெண் போராளிகளை வெருகலில் கதறக்கதற சித்திரவதை செய்து கொன்று குவித்தீர்கள். உங்களுக்காக பல வெற்றிச் சமர்களை புரிந்தவர்களுக்கு நீங்கள் செய்த கைமாறு இதுதானா?

ஒன்று இரண்டல்ல பல நூற்றுக்கணக்கான புத்திஜீவிகளும் நூற்றுக்கணக்கான போராளிகளும் கிழக்கிலே கொலை செய்யப்பட்டிருக்கின்றனர். அப்போது எங்கே போனார்கள் இந்தக் கூட்டமைப்பினர்?

இதுவரை கிழக்கு மக்களுக்காக இந்தக் கூட்டமைப்பினர் என்ன செய்திருக்கின்றனர்? தாம் சொத்துச் சேர்த்தனர், அரசாங்கத்திடம் சலுகைகளைப் பெற்று அனுபவித்து வருகின்றனர். கூட்டமைப்பு அரசியல்வாதிகள் சொத்துச் சேர்க்கவில்லையா? அரசாங்கத்திடமிருந்து சலுகைகளைப் பெறவில்லையா? அமைச்சர்களோடு சேர்ந்து கொஞ்சிக் குலாவுவது பிள்ளைகள் உறவினர்களுக்கு வேலை வாய்ப்புக்களைப் பெறுவது இவை எல்லாம் கூட்டமைப்பினர் செய்யலாம்.

ஆனால் 30 வருடங்களாக யுத்தத்தால் சின்னாபின்னமாக்கப்பட்ட கிழக்கினை அபிவிருத்தி செய்ய பிள்ளையான் அரசுடன் பேரம்பேசினால் துரோகம் என்கின்றீர்கள் எங்கே இருக்கின்றது உங்கள் நீதி நியாயம்?

எங்கேயோ இருந்துகொண்டு பிள்ளையான் கொள்ளையடிக்கின்றான் சொத்துச் சேர்க்கின்றான் என்று சொல்வது உங்கள் முட்டாள்தனம். முதலில் கிழக்கின் தற்போதைய நிலைமைகளையும் உண்மைகளையும் யதார்த்தங்களையும் உணர்ந்துகொள்ளுங்கள்.

கிழக்கிலே தற்போது என்ன நடடக்கின்றது யார் மக்களுக்காக சேவை சேய்கின்றார் என்பதனை மக்கள் நன்கு உணர்ந்திருக்கின்றனர். இனிமேலும் கிழக்கு மக்களை எவராலும் ஏமாற்ற முடியாது. இன்று கிழக்கு மாகாணம் துரித கதியில் அபிவிருத்தி நோக்கி சென்றுகொண்டிருக்கின்றது. இவை யாரால் சாத்தியமானது என்பது கிழக்கு மக்களுக்கு தெரியும். கிழக்கு மக்களை இனிமேலாவது நிம்மதியாக வாழ விடுங்கள். கிழக்கை கிழக்காகவே இருக்க விடுங்கள்.


தொடரும்...
read more...

Friday, 29 June 2012

கிழக்கு மாகாணசபைத் தேர்தலுக்காக கொக்கரிக்கும் கூட்டங்கள்



கிழக்கு மாகாணசபை கலைக்கப்பட்டிருக்கின்றது. வேட்புமணுத்தாக்கல் செய்வதற்கான திகதியும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. எதிர்வரும் செப்டெம்பர் மாதம் எட்டாம் திகதி தேர்தல் இடம்பெறலாம் என பரவலாக பேசப்படுகின்ற நிலையில் அரசியல் கட்சிகள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றன.

தாங்கள் ஆடசியை அமைப்போம், தங்களுக்குத்தான் முதலமைச்சர் பதவி கிடைக்கும் என்றெல்லாம் ஒவ்வொரு கட்சியும் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். யார் முதலமைச்சர் என்பதனை மக்கள் தீர்மானிப்பார்கள். யார் கிழக்கு மக்களுக்காக சேவை செய்யக்கூடியவர்கள், சந்தர்ப்பவாத அரசியலை நடாத்துபவர்கள் யார் என்பதனை கிழக்கு மக்கள் நன்கு உணர்ந்திருக்கின்றனர். அரசியல் கட்சிகளோ அல்லது அரசியல்வாதிகளோ பொய்ப்பிரச்சாரங்கள் மூலமாக மீண்டும் கிழக்கு மக்களை ஏமாற்றலாம் என்று நினைப்பார்களானால் அது அவர்களின் முட்டாள்தனமாகும். இன்று கிழக்கு மக்கள் உண்மைகளையும் , யதார்த்தங்களையும் நன்கு உணர்ந்திருக்கின்றனர்.

யுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டு கிழக்கிலே ஜனநாயகக் கதவுகள் திறக்கப்பட்டிருக்கின்ற இன்றைய நிலையில். நடைபெற இருக்கின்ற மாகாணசபைத் தேர்தலிலே போட்டியிடுவதற்கு பலரும் முண்டியடித்துக் கொண்டிருக்கின்றனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் நடைபெற இருக்கின்ற கிழக்கு மாகாணசபைத் தேர்தலிலே களமிறங்க இருக்கின்றனர். இவர்கள் இத் தேர்தலில் களமிறங்குவதன் மூலமாக சாதிக்கப் போவது என்ன? இவர்கள் இத் தேர்தலில் போட்டியிடுவதன் நோக்கம் என்ன?

தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் கொள்கைகள் என்ன என்பதனையே நான் அடிக்கடி கேட்டுக்கொண்டு வருகின்றேன். இதுவரை யாரும் பதில் சொன்னதாகத் தெரியவில்லை. அடிக்கடி கொள்கைகள் மாற்றப்படுவதாகவே நான் உணர்கின்றேன். தமிழீழமே இறுதி மூச்சு, புலிகளே எமது ஏக பிரதிநிதிகள், வடக்கு, கிழக்கு இணைந்ததே எமது தாயகம் என்ற கொள்கைகளும் கோசங்களும் எங்கே போனது?

இன்று கிழக்கு மாகாணத்தில் தனித்த கிழக்கு மாகாணசபையில் போட்டியிட தீர்மானித்திருக்கும் கூட்டமைப்பினர் வடக்கு கிழக்கு பிரிந்திருப்பதனை விரும்புகின்றனரா? தமது கொள்கைகளை கைவிட்டனரா? அப்படியானால் நீங்கள் அரசியல் சுயலாபம் தேடுவதற்காகவா வீரவசனங்களைப் பேசி எமது மக்களை சூடேற்றி போராட்டத்திற்கு அனுப்பி பலிக்கடாவாக்கினீர்கள். இன்று நீங்கள் எடுத்திருக்கும் முடிவுகளை அன்று எடுத்திருந்தால் இத்தனை இலட்சக்கணக்கான தமிழ் உறவுகளின் உயிர்களை பலி கொடுத்திருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காதே.

தமிழர்களுக்காக குரல் கொடுக்கின்றோம் என்று கூறும் கூட்டமைப்பினர் இதுவரை தமிழர்களுக்காக என்ன செய்தனர்? தாயக மீட்பு போராட்டம் எனும் போர்வையில் நீங்கள் அரங்கேற்றிய நாடகங்களில் எந்த ஒரு கூட்டமைப்பு அரசியல்வாதியின் குடும்பம் பங்கெடுத்திருக்கின்றதா? எந்த கூட்டமைப்பு அரசியல்வாதியாவது தலை நிமிர்ந்து சொல்லட்டும் பார்க்கலாம்.

அது போகட்டும் முள்ளிவாய்க்கால் படுகொலை என்று இன்று கொக்கரிக்கின்ற கூட்டமைப்பின் ஒரு பாராளுமன்ற ஒறுப்பினராவது முள்ளிவாய்க்காலில் உக்கிர மோதல் நடைபெற்றபோது வாய் திறந்தார்களா? யாராவது ஒருவர் குரல் கொடுத்தாரா? சின்னச்சின்ன விடயங்களுக்கெல்லாம் அறிக்கைவிடும் அறிக்கை மன்னர்கள் அன்று மெளனம் சாதித்தது ஏன்?

தொடரும்.....

read more...

Wednesday, 20 June 2012

இந்துப் பண்பாட்டை அதிகம் பேணுபவர்கள் ஆண்களா பெண்களா பட்டிமன்றம் -நேரலை

மட்டக்களப்பு களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய வருடாந்த அல்கார உற்சவ நிகழ்வுகளின் 4 ம் நாளாகிய இன்று இந்துப் பண்பாட்டை அதிகம் பேணுபவர்கள் ஆண்களா பெண்களா எனும் தலைப்பில் பட்டிமன்றம் இடம்பெற இருக்கின்றது.
இப்பட்டிமன்றத்தை அகில இலங்கை சைவப்புலவர் சங்கச் செயலாளர் சைவப்புலவர் சக்தி சக்தியநாதன் தலைமையில் மாவை சிவநாதன் குழுவினர் இப்போது பேசிக்கொண்டிருக்கின்றனர்

Watch live streaming video from pillayar at livestream.com
read more...

களுதாவளை பிள்ளையார் ஆலயத்தில் இந்துப் பண்பாட்டை அதிகம் பேணுபவர்கள் ஆண்களா பெண்களா பட்டிமன்றம் -நேரலை

மட்டக்களப்பு களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய வருடாந்த அல்கார உற்சவ நிகழ்வுகளின் 4 ம் நாளாகிய இன்று இந்துப் பண்பாட்டை அதிகம் பேணுபவர்கள் ஆண்களா பெண்களா எனும் தலைப்பில் பட்டிமன்றம் இடம்பெற இருக்கின்றது.

இப்பட்டிமன்றத்தை அகில இலங்கை சைவப்புலவர் சங்கச் செயலாளர் சைவப்புலவர் சக்தி சக்தியநாதன் தலைமையில் மாவை சிவநாதன் குழுவினர் நடாத்த இருக்கின்றனர்.

இப் பட்டிமண்றம் எமது இணையத்தளத்தில் 8.30 மணியளவில் நேரடியாக ஒளிபரப்பாகும்
pillayar on livestream.com. Broadcast Live Free
read more...

Friday, 8 June 2012

இளம் ஜோடி தற்கொலை நடந்தது என்ன? நேரடி ரிப்போர்ட்

இன்று மட்டக்களப்பு மாவட்டத்திலும் ஊடக்களிலும் பரவலாகப் பேசப்படுகின்ற விடயம் இளம் ஜோடி தற்கொலை. மட்டக்களப்பு மாவட்டத்தின் வயல் நிறைந்த பசுமை சோலை வவுணதீவு பிரதேசம் அங்கிருந்து ஆயித்திய மலைக்கு செல்லும் பாதையில் முள்ளாமுனை கிராமம் அமைந்துள்ளது அங்குள்ள ஒரு வயல் வாடியிலே இந்த இளம் ஜோடிகள் தற்கொலை செய்துள்ளனர். இவர்கள் வெல்லாவெளி பிரதேசத்துக்குட்பட்ட திக்கோடையை சேர்ந்த அழகதுரை மேகலா (22வயது) எனவும் மற்றவர் களுவாஞ்சிகுடி பிரதேசத்துக்குட்பட்ட களுதாவளை 38ஆம் கொலணியை சேர்ந்த அரசரெட்னம் இளங்கோ (34வயது) இவர்களின் சடல்கள் இன்று (07.06.2012) அடக்கம் செய்யப்பட்டன.

இவர்களின் தற்கொலைக்கு என்ன காரணம். சடலம் கிடப்பதாக சொல்லப்பட்ட முள்ளாமுனை கிராமத்திற்கு எமது செய்தியாளர்கள் சென்றதுடன் இவர்களின் தற்கொலைக்கான காரணத்தையும் அறிய முற்பட்டது. 

நடந்தவை என்ன?

அழகரெத்தினம் இளங்கோ 38 ம் கிராமத்தைச் சேர்ந்தவர். இவரின் குடும்பம் தற்போது களுதாவளையில் நிரந்தரமாக வசித்து வருகின்றார்கள். திக்கோடையைச் சேர்ந்தவர் அழகுதுரை மேகலா. இவர்  இளங்கோவின் வீட்டில்  களுதாவளையில் இளங்கோவின் வீட்டில் தங்கி படித்து வந்திருக்கின்றார். அப்போது இளங்கோவிற்கும் மேகலாவிற்கும் காதல் ஏற்பட்டிருக்கின்றது. இவர்களின் காதல் எவராலும் பிரித்து விட முடியாத அளவிற்கு மிக நெருக்கமான காதலாக இருந்தும் பெற்றோர்களுக்கு விருப்பம் இல்லாத காரணத்தினால் இவர்களின் காதல் பிரிக்கப்பட்டிருக்கின்றது. காதல் பிரிக்கப்பட்டது என்பதனைவிட இவர்கள் இருவரையும் பிரித்து விட்டனர். ஆனாலும் அவர்களின் காதல் தொடர்ந்தது. 

அவ்வேளையில் மேகலாவிற்கு வேறு ஒருவரை திருமணம் செய்து வைத்திருக்கின்றனர். ஆனாலும் திருமணத்தின் பின்னரும் இளங்கோ மேகலா இருவரது காதலும் தொடர்ந்திருக்கின்றது. அடிக்கடி தாம் இருவரும் சந்தித்து இருக்கின்றனர். கால ஓட்டத்தில் மேகலாவின் கணவன் வெளிநாடு சென்றிருக்கின்றார். கணவன் வெளிநாடு சென்ற பின்னர் மேகலாவின் வீட்டுக்கு அடிக்கடி இளங்கோ சென்றுவர ஆரம்பித்து விட்டார். 

வெளிநாட்டில் இருந்த மேகலாவின் கணவன் இதனை அறிந்துவிட்டார். மேகலா தன்னை கல்யாணம் செய்வதற்கு முன்னர் இளங்கோவை காதலித்த விடயம் தற்போதும் காதல் தொடர்வது, அடிக்கடி மேகலாவின் வீட்டிற்கு இளங்கோ சென்று வருகின்ற விடயம் அனைத்தையும் மேகலாவின் கணவன் அறிந்து கொண்டார்.

இதனால் மேகலாவிற்கும் கணவருக்கும் குடும்பதகராறு அடிக்கடி ஆரம்பிக்க ஆரம்பித்து சட்ட ரீதியாக இருவரும் பிரிகின்ற நிலைக்கு சென்றிருக்கின்றனர். இதனை அறிந்த இளங்கோ மேகலாவை தன்னுடன் வரும்படி அழைத்திருக்கின்றார். அதன் பின்னர் மேகலா இளங்கோவின் கட்டுப்பாட்டில் இருந்திருக்கின்றார்.

இது இவ்வாறிருக்க சிங்கப்பூரில் வசிக்கும் மட்டக்களப்பைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் களகனகளனயன மூலம் ஏற்பட்ட நட்பு காதலாக மாறி இருக்கின்றது. சிங்கப்பூரில் வசிக்கும் இளங்கோவின் புதிய காதலி மாமாங்கப் பிள்ளையார் ஆலய திருவிளாவிற்கு சி்கப்பூரிலிருந்து வந்திருக்கின்றார். அப்போது இளங்கோவும் சிங்கப்பூரிலிருந்து வந்த காதலியும் பதிவுத் திருமணம் செய்திருக்கி்ன்றனர். பதிவுத் திருமணத்தின் பின்னர் சிங்கப்பூர் காதலி சிங்கப்பூர் போய் விட்டார். விரைவில் சிங்கப்பூர் போய் விடுவேன் என்று இளங்கோ தனது நண்பர்களிடம் அடிக்கடி சொல்லி வந்திருக்கின்றார்.

காலம் உருண்டோடிக் கொண்டிருந்தது. இளங்கோ மேகலாவுடன் சந்தோசமாக வாழ்ந்துவரும் வேளை கடந்த 7 நாட்களுக்கு முன்னர் சி்கப்பூரிலிருந்து காதலி மட்டக்களப்புக்கு வந்து இளங்கோவின் வீட்டிற்கு வந்திருக்கின்றார். ஓரிரு நாட்கள் இளங்கோவின் வீட்டில் தங்கியிருக்கிறார். இளங்கோவின் வீட்டவர்களுக்கு சிங்கப்பூர் பெண்ணை  இளங்கோ திருமணம் முடிப்பது விருப்பம். ஆனாலும் இளங்கோவால் மேகலாவை மறக்கவோ மேகலாவை விட்டுப் பிரியவோ முடியவில்லை. 

வீட்டில் பிரச்சினையாகிவிட்டது.  சிங்கப்பூர்  பெண் இளங்கோ வீட்டுக்கு வந்திருப்பதனை மேகலா அறிந்து விட்டார். இதனால் மேகலாவும் குழப்பமடைந்துவிட்டார். தான் மேகலாவை விட்டு பிரிய முடியாமல் போய்விட்டது. மேகலா இளங்கோவின் குடும்பத்தவர்களிடம் சொல்லி இருக்கின்றார் நான் வாழ்வதோ சாவதோ இளங்கோவோடுதான். எங்களைப் பிரிக்க நினைத்தால் நாம் இறந்து விடுவோம் என்று சொல்லி இருக்கின்றார். இளங்கோவும் தனது வீட்டில் தான் சாகப்போவதாக சோல்லி இருக்கின்றார். 

இளங்கோவும் மேகலாவும் சாவதாக பல திட்டங்களோடு முடிவெடுத்திருக்கின்றனர். இளங்கோ தனது பெயரில் வங்கியில் இருந்த பணத்தினை தனது தம்பியின் பெயரில் மாற்றியிருப்பதாக அறிய முடிகி்றது. 

அது மாத்திரமல்ல தான் எடுப்பது முட்டாள்தனமான முடிவு என்பதனையும் இளங்கோ அறியாமல் இல்லை. தனக்கு தானே மரண அறிவித்தல் ஒன்றினையும் மூன்று பக்கங்கள் கொண்ட கடிதம் ஒன்றினையும் எழுதி வைத்திருக்கின்றார். அக்கடிதத்தை தனது மரணச் சடங்கின்போது ஒலி பெருக்கியில் எல்லோருக்கும் வாசித்து காட்டும்படியும் குறிப்பிட்டிருக்கின்றார்.

அக் கடிதத்தில் தான் வாழ்ந்த 34 வருடகாலத்தில் சாதி மத இன பேதங்களை மறந்து தன்னோடு பழகிய அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்திருப்பதோடு தான் எடுக்கும் இந்த முடிவு முட்டாள்தனமான ஒரு முடிவாகும் என்றும் இவ்வாறான முடிவுகளை எவரும் எடுக்க வேண்டாம் என்றும் தான் எடுக்கும் இந்த முடிவு முட்டாள் தனமான முடிவு என்பதை தான் அறிந்திருந்தும் தன்னால் எதுவும் செய்ய முடியாத நிலையில் இந்த முடிவை எடுப்பதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இளங்கோவிற்கும் மேகலாவிற்கும் காதல் ஏற்பட்டபோது பெற்றோர் அவர்களின் காதலிற்கு எதிரிகளாக இல்லாமல் இருந்திருந்தால் இளங்கோ மேகலா இருவரும் சந்தோசமாக வாழ்ந்திருப்பார்கள். இன்று இளம் வயதில் இரு உயிர்களையும் பறி கொடுக்க வேண்டிய அவசியமிருந்திருக்காது. பெற்றோர்களோ சிந்தியுங்கள்.....

இளங்கோ தனது கையால் எழுதிய கடிதத்தினை வெளியிட இருந்தோம் அவரது உறவினர்கள் அவற்றை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதனால் நாம் அவற்றை வெளியிடவில்லை.

இளங்கோ ,மேகலா இருவரினதும் ஆத்மா சாந்தியடைய நாமும் பிராத்திக்கின்றோம்.



நன்றிகள் www.makkalinkural.com
read more...

Saturday, 2 June 2012

தமிழீழ ஆதரவாளர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக போர்க்கொடி

தமிழீழமே எமது மூச்சு என்றிருந்த தமிழரசுக் கட்சியினரின் அண்மைக்கால செயற்பாடுகள் மற்றும் தமிழரசுக் கட்சியினரின் 14வது தேசிய மாநாடு என்பன தமிழீழ ஆதரவாளர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கின்றன. இவ்விடயம் குறித்த செய்தியினை அப்படியே தருகிறேன்.


விடுதலைப் புலிகளையும், போராட்டத்தையும் களங்கப்படுத்திய தமிழரசுக் கட்சியின் மாநாடு!

"விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வளர்ச்சியும் மறைவும் எமக்கு உணர்த்தி நிற்பது என்னவெனில் - எவ்வளவுதான் பலம் வாய்ந்ததாக இருந்தாலும் எவ்வளவுதான் தர்மத்தின் பாற்பட்டதாக இருந்தாலும் தமிழர்கள் இந்தத் தீவில் வன்முறை அரசியல் செய்வது நடைமுறைச் சாத்தியமானதாக என்றைக்குமே இருக்கப் போவதில்லை என்பதாகும், அத்தோடு இராணுவ பலத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு உலக ஓட்டத்திற்கு ஒத்திசைவு இல்லாத அரசியல் கோட்பாட்டின் ஊடாகக் கட்டி எழுப்பப்படும் எந்த ஒரு போராட்டமும் நின்று நிலைக் காது என்பதுமாகும். இவ்வாறு தனது மாநாட்டு கொள்கை விளக்க உரையில் தெரிவித்துள்ளார்". சம்மந்தர் அவர்கள் அவர் மேலும் தெரிவிக்கையில்...

"தத்தமது தேச நலன்களை மட்டுமே மையப்படுத்தி உலக ஒழுங்கை வகுத்துச் செல்லும் உலகப் பெரும் சக்திகளின் சூட்சுமங்களைப் புரிந்து அதற்கேற்ப மட்டுமே நாங்கள் இனி காய்களை நகர்த்திச் செல்ல வேண்டும் என்பதுதான் - கடந்த 60 ஆண்டு காலப் போராட்டம் குறிப்பாக கடந்த 30 ஆண்டு கால வன்முறை வடிவிலான ஆயுதப் போராட்டம் எமக்குக் கற்பித்துச் சென்றிருக்கும் வரலாற்றுப் பாடம். என்று தனது உரையில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை வன்முறை கலந்த போராட்டம்" என்று விமர்சித்துள்ளார் தமிழரசுக் கட்சியின் தலைவர் சம்மந்தன். விடுதலைப் புலிகள் தொடர்பாக மேலும் குறிப்பிடுகையில்..



"நீண்ட ஆயுதப் போராட்டமும், அது நடத்தப்பட்ட விதமும் - எமது மக்களுக்கு இழப்பையும் அழிவையும் களைப்பையும் சலிப் பையும் ஏற்படுத்தியிருக்கலாம், ஆனால் போர் முடிந்ததன் பின்னான நிகழ்வுகள் எமது மக்களுக்கு விரக்தியையும் சினத்தையும் சீற்றத்தையுமே கொடுத்தபடி உள்ளன என்பதை இந்த உலகம் தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும்".


"விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வளர்ச்சியும் மறைவும் எமக்கு உணர்த்தி நிற்பது என்னவெனில் - எவ்வளவுதான் பலம் வாய்ந்ததாக இருந்தாலும் எவ்வளவுதான் தர்மத்தின் பாற்பட்டதாக இருந்தாலும் தமிழர்கள் இந்தத் தீவில் வன்முறை அரசியல் செய்வது நடைமுறைச் சாத்தியமானதாக என்றைக்குமே இருக்கப் போவதில்லை என்பதாகும், அத்தோடு இராணுவ பலத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு உலக ஓட்டத்திற்கு ஒத்திசைவு இல்லாத அரசியல் கோட்பாட்டின் ஊடாகக் கட்டி எழுப்பப்படும் எந்த ஒரு போராட்டமும் நின்று நிலைக் காது என்பதுமாகும். அந்த வகையில் தான் - அனைத்துலகப் பரிமாணங்களுடன் பிறந்திருக்கின்ற தற்போதைய புதிய சூழலில் அந்தச் சூழலுக்கு ஏற்ற வகையான நெகிழ்வுத் தன்மைகளுடன் சர்வதேச சமூகத்தின் அனுசரணையுடனும் பக்கபலத்துடனும் எமது உரிமைப் போராட்டத்தை நகர்த்திச் செல்லும் புதிய வழிமுறைகளை நாம் கையாளத் தொடங்கியுள்ளோம்". என்று தனது பாணியில் சர்வாதிகாரிபோல் தெரிவித்துள்ளார்.



"எவ்விதமாக ஆறு தசாப்தங்களுக்கு முன்னர் எமது கட்சிக்கு வரலாறு ஓர் அரசியல் பிறப்பைத் தந்ததோ அதே விதமாகவே பத்தாண்டுகளுக்கு முன்னர் எமது இனத்தின் விடுதலைப் போராட்டம் இருந்த அன்றைய காலச் சூழலுக்கு இசைவாக வரலாறு எமது கட்சிக்கு ஒரு புதிய அரசியற் பாத்திரத்தையும் தந்தது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற குடையின் கீழ் கொள்கை ரீதியாக ஒன்றிணைந்த தமிழ் அரசியல் கட்சிகளைத் தலைமையேற்று வழி நடத்தும் பாத்திரமே அது. அந்தத் தலைமைப் பாத்திரம் என்பது கூட எமது கட்சியின் வரலாறு பாரம்பரியம் தனித்துவம் என்பவற்றின் அடிப்படையிலிருந்துதான் வந்தது. அந்தப் புதிய கூட்டமைப்பின் தலைமைக் கட்சியாக இலங்கைத் தமிழரசுக் கட்சியே இன்றுவரை விளங்கி வருகின்றது, அவ்வாறே அது என்றும் விளங்கி வரும்".  என்றும் சம்மந்தர் தெரிவித்துள்ளார்.


"ஆயுதப் போராட்டத்தின் வீழ்ச்சிக்குப் பின்னரான தற்போதைய சூழலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ஆகிய நாம்தான் தமிழ் மக்களின் முதன் மைப் பிரதிநிதிகள். முற்றுமுழுதான சிறீலங்காப் படை மயமாக்கத்தின் கீழ் சிறீலங்கா அரசாங்கத்தின் முழுமையான ஆளுகையின் கீழ் பலவிதமான அழுத்தங்களுக்கு மத்தியிலும் - துணிவுடனும் உறுதியு டனும் தெளிவுடனும் - வாக்களித்த தமிழ் மக்களால் சுதந்திரமாகத் தேந்தெடுக்கப்பட்ட தனிப் பெரும் கட்சி எமது கட்சி. அந்த வகையில் இப்போது - நாம்தான் தமிழர்களின் அதிகாரபூர்வமான பிரதிநிதிகள். எவ்விதமான ஆயுதப் பின்னணிகளும் அற்ற - வன்முறைப் போராட்ட வடிவங்களை என்றைக்கும் நிராகரித்த - நீண்ட ஜனநாயகப் பண்பு களைத் தன்னகத்தே கொண்ட - நடைமுறைச் சாத்தியமான தீர்வுத் திட்டங்களையே எப்போதும் முன்வைத்த - இலங்கைத் தமிழரசுக் கட்சியான எமக்குத்தான்; - அதிகூடிய இராஜீய அங்கீகாரமும் அனைத்துலக சமூகத்தால் வழங்கப்படுகின்றது. இந்த இராஜீய அங்கீகாரம் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஏற்புடையதாகவும் உரித்துடையதாகவும் கூட பரிணமித்துள்ளது". என்றும் சம்மந்தர் தனதுரையில் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் கண்டிக்கப்பட வேண்டியவை.


தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் முற்றுமுழுதாக அழிக்கப்பட்டு விட்டதாகவும், ஒரு தோற்றப்பாட்டை உருவாக முனைகிறார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இல்லாத இடத்தில் தமிழரசுக் கட்சியை பிரதிநிதித் துவப்படுத்தும் நோக்கில் இவர்களில் செயற்பாடுகள் நகர்வதை அவதானிக்க முடிகிறது. தமிழர்களின் ஒன்றுபட்ட சக்தியாக உருவாக்கப்பட்டு தமிழர்கள் அனைவராலும் பெரும் நம்பிக்கையுடன் வரவேற்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒரு பேசுபொருளாக வைத்துக்கொண்டு, தமிழரசுக் கட்சியை வளர்க்கவே இவர்கள் முனைகின்ற விடையம் சம்மந்தர் அவர்களின் மாநாட்டு உரையின் ஊடாக தெளிவாக அம்பலமாகியுள்ளது.


இவரின் உரையினை ஆராய்ந்து பார்க்கும் பொழுது தமிழரசுக் கட்சியின் தலைமைகளும் இந்தியாவுடன் இணைந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அழிக்க துனைபோயிருப்பார்களா? என்றும் சந்தேகம் கொள்ளவும் வைக்கிறது.


இவர்களின் இந்த திட்டங்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். தமிழ்த் தேசியக் கூடமைப்புக்கான தலைமைப் பதவி சுழற்சி முறையில் தெரிவு செய்யப்பட வேண்டும். அத்தோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆரம்பகாலத்தில் மக்களால் தெரிவுசெய்யப்பட்டு பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்து, பின்னர் சம்மந்தர் குழுவினால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் அனைவரும் மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைக்கப்பட வேண்டும். இவர்களை மீண்டும் கட்சியில் இணைப்பதின் ஊடாக சம்மந்தர் அவர்கள் தான் ஒரு தமிழ்த் தேசியப் பற்றாளன் என்பதையும், தானொரு ஜனநாயகவாதி என்பதையும் நிரூபிக்க வேண்டும்.


ஐயா பெரியவர்களே! இன்றைய சூழலில் அனைவரும் ஒவ்வெரு கருத்துக்களுடன் தமிழர்களுக்கான தீர்வாக சிங்களம் போடுவதை பெற்றுக்கொள்ள முனைகிறார்கள். அந்தவகையில்தான் ஐயா சம்மந்தர் அவர்களும் "அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு" என்றும், "ஒன்றுபட்ட இலங்கைக்குள் சமஉரிமை"என்றும் கூறிக்கொண்டு 40 ஆயிரத்திற்கும் அதிகமான மாவீரர்களின் மாபெரும் தியாகங்களின் ஊடாக கண்ணியமான முறையில் தமிழர்களின் கலாச்சார பண்பாடுகளுடன் கட்டி வளர்க்கப்பட்ட தமிழீழ விடுதலைப் போராட்டத்தை தமிழரசுக் கட்சியின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாநாடு ஒன்றில் மனச்சாட்சியின்றி திட்டமிட்ட வகையில் களங்கப்படுத்தியுள்ளார்.

நன்றிகள் - இணையம்
read more...

Monday, 28 May 2012

தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு வெற்றியா? தோல்வியா?


பிள்ளையானின் பின்னால் ஒன்று பட்ட மட்டக்களப்பு மக்கள்

தமிழரசுக் கட்சியின் 14வது தேசிய மாநாடு 25, 26, 27ம் திகதிகளில் மட்டக்களப்பில் இடம் பெற்று முடிந்திருக்கின்றன. இந்த மாநாடு வெற்றிகரமாக நடந்து முடிந்ததா அல்லது தோல்வியில் முடிவடைந்ததா என்பதனை ஆராய்வதற்கு முன்னர் இம் மாநாடு ஆரம்பிப்பதற்கு முன்னரும் இறுதி வரையும் நடைபெற்ற சில சம்பவங்களையும், விடயங்களையும் நாம் ஆராய வேண்டும்.

தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு மட்டக்களப்பில் இடம்பெற இருக்கின்றது எனும் செய்தி வெளியாகிய நாள்முதல் இம் மாநாட்டுக்கு மட்டக்களப்பில் பாரிய எதிர்ப்பு இருந்தது என்பதனை எவராலும் மறுக்க முடியாது. இன்று சில இணையத்தளங்கள் பிள்ளையான் குழுவினர் மாநாட்டை குழப்ப சதி செய்தனர் என்று குறிப்பிட்டு இருக்கின்றன. இது முற்று முழுதான உண்மையல்ல என்பதனை மட்டக்களப்பு மக்கள் அறிவர்.

உண்மையில் இன்றைய கால கட்டத்தில் மட்டக்களப்பு மக்கள் மத்தியிலே முதலமைச்சர் பிள்ளையான் மீது நம்பிக்கையும் ஒரு பற்றும் இருக்கின்றது. காரணம் அவரது அயராத உழைப்பும் கிழக்கின் துரித அபிவிருத்தியுமாகும். இன்று எந்த ஒரு விழா மட்டக்களப்பில் இடம்பெற்றாலும் முதலமைச்சரை பிரதம அதிதியாக அழைத்து விடுவார்கள். அவர் மீது மக்களுக்கு நம்பிக்கையும் மதிப்பும் இருக்கின்றது.

மறு புறத்திலே கிழக்கில் ஒரு தனித்துவ கட்சி இருக்கின்றபோதுதான் கிழக்கை துரிதமாக அபிவிருத்திப் பாதைக்கு கொண்டு செல்ல முடியும் என்பதனையும் மக்கள் உணர்ந்திருக்கின்றனர். இது ஒரு புறமிருக்க  கூட்டமைப்பினரின் அண்மைக்கால நடவடிக்கைகள் தொடர்பாக பாரிய அதிருத்தியில் மட்டக்களப்பு மக்கள் இருந்தனர்.  பல அமைப்புக்கள் இம் மாநாட்டினை புறக்கணிக்கும்படி அழைப்பு விடுத்திருந்ததுடன் கறுப்பு கொடிகளை பறக்கவிட்டு கறுப்பு கொடி போராட்டத்தினையும் நடாத்தி இருந்தனர். 

தமிழரசுக் கட்சியினர் தமது மாநாட்டை தேவநாயகம் மண்டபத்திலே நடாத்துவதற்கு  ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.  மட்டக்களப்பு மக்களின் ஆதரவு தமக்கு இல்லை என்பதனை படிப்படியாக உணர்ந்து கொண்ட தமிழரசுக் கட்சியினர். மாற்று வழிகளிலே தமக்கு ஆதரவு தேடவும் முன் வந்திருந்தனர்.

தமிழரசுக் கட்சியின் மாநாடு இடம்பெற இருந்த தேவநாயகம் மண்டபம் தீப்பிடித்து மேடைப்பகுதி எரிந்தது. இது மாநாட்டைக் குழப்ப சிலர் சதி செய்வதாக கூட்டமைப்பினர் கூறினர். சின்னச்சின்ன விடயங்களுக்கெல்லாம். பெரிதுபடுத்தி அறிக்கைகளைவிடும் கூட்டமைப்பினர் இத் தீப்பிடித்த விடயத்தினை சாதாரண விடயமாக மட்டுமே எடுத்துக் கொண்டு சிலர் சதி செய்கின்றனர் என்று பிரச்சாரம் செய்தனர். 

மட்டக்களப்பில் தமக்கு ஆதரவு இல்லை என்பதனை உணர்ந்த கூட்டமைப்பினர். ஆதரவு தேடுவதற்கு தாம் மேற்கொண்ட யுக்தியே மண்டபத்தின் மேடைப்பகுதி எரிப்பு. இது கூட்டமைப்பினர் திட்டமிட்டு செய்த செயலாகும்.

உடனடியாக மாநாடு இடம்பெறும் இடம் மட்டக்களப்பு ஊறணி அமேரிக்கன் மிஷன் மண்டபத்திற்கு மாற்றப்பட்டது. 27ம் திகதி மாநாடு இடம்பெற்றது. இம் மாநாடு வெற்றியா? தோல்வியா? பாரிய வெற்றியாக கூட்டமைப்பினர் மார் தட்டிக் கொள்கின்றனர். 
உண்மையில் வெற்றியா? அமேரிக்க மிஷன் மண்டபத்தில் 300ர-400 பேர்தான் இருக்க முடியும். இம் மாநாட்டுக்கு யாழ்ப்பாணத்திலிருந்து இரண்டு பஸ்களிலும், திருகோணமலையிலிருந்து இரண்டு பஸ்களிலும், அம்பாறையிலிருந்து ஒரு பஸ்ஸிலும் கொழும்பிலிருந்தும் மலையகத்திலிருந்தும் ஆதரவாளர்கள் வந்திருந்தனர். 

யாழ்ப்பாணம் , திருகோணமலை, அம்பாறை மாவட்ட்ளிலிருந்து வருகை தந்தவர்கள் ஒரு பஸ்ஸில் 50 பேர் வீதம் பார்த்தால் 250 பேர். தனிப்பட்ட வாகன்களிலும் பலர் மூன்று மாவட்டங்களிலிருந்தும் வருகை தந்திருந்தனர். அதனைவிட கொழும்பு மற்றும் மலையகத்திலிருந்தும் ஆதரவாளர்கள் வருகை தந்திருந்தனர். அதனைவிட கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் 50 மேற்பட்டவர்கள். 

மொத்தமாக மண்டபத்தில் 300-400 பேர் மட்டுமே இருக்க முடியும் மேலே சொன்ன கணக்கின்படி பார்த்தாலே மண்டபம் நிநை்துவிடும். ஆனாலும் மாநாட்டை குழப்ப வந்ததாக  கூட்டமைப்பினர் கூறும் மண்டபத்திற்குள்ளே சர்ச்சையை ஏற்படுத்தியவர்கள் 50 க்கு மேற்பட்டவர்கள். இவை அனைத்தையும் ஒப்பிட்டு பார்க்கின்றபோது மாநாட்டுக்கு மட்டக்களப்பிலிருந்து சென்றவர்கள் 50 க்கும் குறைவானவர்களே எனது களுதாவளைக் கிராமத்தினைச் சேர்ந்தவர்தான் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் த.கனகசபை களுதாவளைக் கிராமத்திலிருந்து மாநாட்டுக்கு சென்றவர்கள் இரண்டு பேர் மட்டுமே. கனகசபை மற்றும் இன்னொருவர். இந்த மாநாட்டின் உப தலைவரான கனகசபை தனது சொந்தக்காரர்களைக்கூட மாநாட்டுக்கு அழைத்துச் செல்லவில்லை.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேசிய மாநாட்டுக்கு களுதாவளையில் இருந்து சென்றவர்கள் 374 பேர். இவர்களை யாரும் வற்புறுத்தி அழைக்கவில்லை தாமாகவே மாநாட்டுக்கு வந்தவர்கள்.

கறுப்புக் கொடிகள் கட்டியது துண்டுப் பிரசுர்கள் வெளியிட்டது பிள்ளையான் குழுவினர் என்று யோகேஸ்வரன் சொல்கின்றார். அப்படியானால் மட்டக்களப்பு மக்கள் ஏன் மாநாட்டுக்கு வரவில்லை. மாநாட்டை புறக்கணித்தனர். பிள்ளையான் சொல்வதனை கேட்கின்றனர். பிள்ளையானின் பக்கம் மட்டக்களப்பு மக்கள் நிக்கின்றார்கள் அல்லவா?

இந்த மாநாடு தோல்லியா வெற்றியா என்பதனை மட்டக்களப்பு மக்கள் புறக்கணித்ததனை வைத்தே தீர்மானிக்கலாம். இம் மாநாடு மட்டக்களப்பு மக்கள் கூட்டமைப்பினரை தூக்கி எறிந்துவிட்டனர் பிள்ளையானின் பின்னால் ஒன்று பட்டுவிட்டனர் என்பதனை பறை சாற்றுகின்றன. 
இறுதியாக யோகேஸ்வரனிடம் ஒரு கேள்வி உங்கள் ஊரிலிருந்து எத்தனைபேர் மாநாட்டுக்கு வந்திருந்தனர்  என்று சொல்ல முடியுமா?

read more...

Wednesday, 23 May 2012

யார் இந்த இராஜதுரை பகுதி -02

அடுத்துவந்த 1956 ஆம் ஆண்டு தேர்தலுக்கு மட்டக்களப்பு மாவட்டத்தின் மூன்று தொகுதிகளிலும் தமிழரசுக்கட்சியை போட்டியிட வைப்பதிலும் இராஜதுரை மும்முரமாக உழைத்தார். கல்குடாவில் மாணிக்கவாசகரும், பட்டிருப்பில் இராஜமாணிக்கமும் இராஜதுரையால் தமிழரசுக்கட்சிக்காக உள்வாங்கப்பட்டனர். மட்டக்களப்புத் தொகுதியில் தானே முன்வந்து போட்டியிட துணிந்தார்.
பகுத்தறிவு இயக்கம், மட்டக்களப்பு முற்போக்கு வாலிபர் சங்கம், வரியிறுப்பாளர்கள் சங்கம், இலக்கியம், எழுத்துலகம் என்று விரிந்துகிடந்த தனது ஆற்றல்களையும் அனுபவங்களையும் தமிழரசுக்கட்சிக்காக தாரைவார்த்தவர் இராஜதுரையாகும். தமிழரசுக்கட்சியால் வளர்ந்தவர்கள் பலர் உண்டு. இன்றும் தமிழரசுக்கட்சியின் பெயரை உச்சாடனம் செய்வது ஒன்றே பதவி சுகத்தை தக்கவைப்பதற்கான அரசியல் மந்திரமாக பலருக்கு இருக்கின்றது. (இந்த பட்டியல் இரா.துரைரெட்ணம் வரை நீண்டு செல்கிறது) இராஜதுரை விடயத்தில் இந்த சூத்திரம் தலைகீழானது. இராஜதுரை தமிழரசுக்கட்சியால் வளர்ந்தார் என்பதைவிட இராஜதுரையால்தான் தமிழரசுக்கட்சி வளர்ந்தது என்பதே சாலப்பொருத்தமும் சத்தியமுமாகும். 1956 ஆம் ஆண்டு தேர்தலில் மட்டக்களப்பு தொகுதியின் இரண்டு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களை கட்டுக்காசு இழக்கவைத்து அபார வெற்றியீட்டினார் இராஜதுரை. அன்று தொடங்கி ஆறு தேர்தல்களில் தொடர்ச்சியாக ஒரே தொகுதியில் வெற்றியீட்டிய தமிழ் தலைவர்கள் இராஜதுரையை தவிர வேறு யாருமிலர்.
தமிழர்களுடன் முஷ்லிம்களும் இணைந்து வாழும் மட்டக்களப்பு தொகுதியில் தன்னால் தோற்றகடிக்கப்பட்ட சின்னலெவ்வை அவர்கள் பதவியை இழந்ததன் ஊடாக முஷ்லிம்களுக்கான பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டதென்பதை இராஜதுரை உணர்ந்துகொண்டார். அதன் அடிப்படையில் முஷ்லிகளின் பிரதிநிதித்துவத்தை தொடர்ச்சியாக உறுதிப்படுத்திக்கொள்ள மட்டக்களப்பு தொகுதியை இரட்டை அங்கத்தவர் தொகுதியாக்கும் முயற்சியில் இராஜதுரை இறங்கினார். தேர்தல் ஆணையாளர் தல்கொட பட்டியா முன்னிலையில் சாட்சியம் அளித்து மட்டக்களப்பில் இரட்டை அங்கத்துவ தொகுதியின் அவசியம் பற்றி விளக்கிக் கூறினார்.
அதன்பலனாகவே மட்டக்களப்பு தொகுதியானது இரட்டை அங்கத்துவ தொகுதியாக்கப்பட்டமையும் தொடர்ச்சியாக முஷ்லிம்களின் பிரதிநிதித்துவம் காப்பாற்றப்படவும் ஏதுவாயிற்று.
1956 ஆம் ஆண்டு முதற்தடவையாக பாராளுமன்றத்திற்கு தெரிவான போது மட்டக்களப்பு நகரின் கூலித்தொழிலாளர்களும், நகரசுத்தித் தொழிலாளர்களும் உரிய வசிப்பிடம் இன்றி அல்லலுற்றதை கண்ணுற்றார். புகையிரத நிலையத்தை அண்டிய முடிக்குரிய காணிகள் அனைத்தையும் காடுவெட்டி குடிசைகள் அமைக்கத் தூண்டினார். அதற்காக அரசஅதிகாரிகளால் நீதிமன்றத்தில் குற்றவாளியாக நிறுத்தப்பட்டார். தனது பாராளுமன்றப் பதவியை பயன்படுத்தி பாராளுமன்றில் தொழிலாளர்களின் காணிப்பிரச்சனையை எழுப்பியதின் ஊடாக அன்றைய காணிஅமைச்சர் சி.பி.டி.சில்வாவைக் கொண்டு அவர்களுக்கு காணி உறுதி வழங்கச்செய்தார். அந்த குடியேற்றப்பிரதேசங்களை இன்று இருதயபுரம் எனும் பெரும் பிரதேசமாக எழுந்துநிற்கின்றது.
கடல் கடந்த நாடுகளில் நிறுவப்பட்ட முதலாவது காந்திசிலையை மட்டக்களப்பு மாநகரில் இராஜதுரையே திறந்துவைத்தார். அண்மையில் மட்டக்களப்பு நகரில் உடைக்கப்பட்ட மகாத்மாகாந்தியின் சிலையே அதுவாகும்.

1960 ஆம் ஆண்டுவரை சிறுநகரசபையாக இருந்துவந்த மட்டக்களப்பை பெருநகரமாக மாற்ற இராஜதுரை அவர்கள் பெருமுயற்சி எடுத்தார். மட்டக்களப்பின் புறநகர் பகுதியாக இருந்துவந்த கல்லடி கிராமசபைக்குட்பட்ட கிராமங்களை மட்டக்களப்பு நகருடன் இணைத்து மாநகரசபையாக மாற்றினார். மட்டக்களப்பு மாநகர சபைக்கு முன்னே வெறிச்சோடிக்கிடந்த முற்றவெளி மைதானத்தை புனநிர்மானம் செய்து ஷ்ரேடியங்கள் அமைத்து மட்டக்களப்பின் விளையாட்டுத்திறனை தேசிய அளவில் பரிணமிக்கச் செய்த அருட்தந்தை வெபர் அவர்களின் பெயரை அந்த ஷ்ரேடியத்துக்கு சூட்டி மகிழ்ந்தார்.
1961 ஆம் ஆண்டு தமிழரசுக்கட்சியில் முதற்தடவையாக மே தினக்கூட்டம் ஒன்றை மட்டக்களப்பில் நடத்தி சாதனை படைத்தவர் இராஜதுரை. வைரமுத்து என்கின்ற ஒரு சாதாரண தொழிலாளியை அம்மேதின ஊர்வலத்திற்கு தலைமை ஏற்கச்செய்து தமிழரசுக்கட்சியின் பாரம்பரிய மேட்டுக்குடிப் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்த முயன்றார். அதுமட்டுமன்றி தமிழரசுக்கட்சியின் சார்பிலான அந்த மே தினக்கூட்டத்தை கம்ய+னிசக்கட்சிக்காக மட்டக்களப்பில் அயராது பாடுபட்டுக்கொண்டிருந்த கிரு~;ணகுட்டியை கௌரவிக்கும் விழாவாக மாற்றினார். மட்டக்களப்பு மக்களுக்கு தன்னால் முடிந்த சேவைகளையாற்றி தொடர்ச்சியாக பாடுபட்டுவந்த இராஜதுரைக்கு உரிய கௌரவம் கட்சியில் வழங்கப்படவில்லை. தந்தை செல்வா இறந்தபின்னர் தலைமைப் பொறுப்புக்கு தகுதியாக இருந்த இராஜதுரை திட்டமிட்டவகையில் கட்சியால் ஒதுக்கப்படத் தொடங்கினார். கட்சியின் உருவாக்க காலத்தில் இருந்து தந்தை செல்வாவின் வலதுகையாக செயற்பட்டுவந்த இராஜதுரை அவர்கட்கு தந்தையின் மறைவை அடுத்து தலைமைப்பதவி வழங்கப்பட்டிருக்க வேண்டும். அந்த உரிமை மறுக்கப்பட்டது மட்டுமல்ல அவரை கட்சியில் இருந்து நீக்கிவிடுவதற்கான சதிகள் மெதுமெதுவாக பின்னப்பட்டன.

1977 ஆம் ஆண்டு தேர்தலையொட்டி கட்சியில் அவருக்கு தேர்தலில் நிற்பதற்கான வாய்ப்பை மறுப்பதற்கு கூட திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. கட்சிக்காக இராஜதுரையால் வளர்த்தெடுக்கப்பட்ட காத்தமுத்து சிவானந்தன் எனும் இளைஞனுக்கு பதவியாசை ஊட்டி மட்டக்களப்பு தொகுதியில் இராஜதுரையை போட்டியிடாமல் தடுக்கும் முயற்சி அமிர்தலிங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டது. இராஜதுரையை தன் அரசியல் குருவாகவே எண்ணிவளர்ந்த காசி ஆனந்தன் மட்டக்களப்பு தொகுதியில் “நான் களையெடுக்கப்போகின்றேன்” என்று கட்சிப்பத்திரிகையான சுதந்திரனில் அறிக்கை விட்டார். கட்சிக்குள்ளேயே இரண்டு பேர் மட்டக்களப்பு தொகுதியில் ஒரே நேரத்தில் போட்டியிட சதி தீட்டப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த இராஜதுரை கட்சித்தலைமையை அணுகியபோது அதனை தேர்தல் நியமனக் குழு பார்த்துக்கொள்ளும் என்று அமிர்தலிங்கம் பதிலளித்தார். வேட்புமனு தாக்கல் செய்வதற்கான வேளை வந்தபோது 1952 ஆம் ஆண்டில் இருந்து 1970 ஆம் ஆண்டுவரை கட்சியின் தேர்தல் நியமனக் குழு உறுப்பினராக இருந்து வந்த இராஜதுரை அப்பதவியில் இருந்து நீக்கப்படுவதாக கட்சியின் தலைமை ஒருதலைப்பட்சமாக அறிவித்தது. இது இராஜதுரைக்கு விழுந்த முதுலாவது அடியாகும். அதுமட்டுமல்ல தொடர்ச்சியாக ஐந்து தேர்தல்களில் (இருபது ஆண்டுகள்) வெற்றியீட்டிய இராஜதுரையை தேர்தல் நியமனக் குழுவின் முன்னர் நேர்முகப்பரிட்சைக்கு ஆஜராகுமாறு அழைத்து அவமானப்படுத்தினார் அமிர்தலிங்கம். அந்த நேர்முகப்பரிட்சைக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை என்றும் செல்லக்கூடாது என்றும் ஆதரவாளர்கள் இராஜதுரையை வேண்டிக்கொண்டனர். ஆனபோதிலும் கட்சி ஒழுங்கும், கட்சியின் நன்மையையும் கருதி தேர்தல் நியமனக்குழு முன்னர் ஒரு புதுமுக வேட்பாளரைப்போன்று இராஜதுரை ஆஜராகினார். அங்கு மட்டக்களப்பு தொகுதிக்கு புதிய வேட்பாளர்கள் எவரையும் போடவேண்டிய அவசியம் ஏதும் இல்லை என்பதற்கான காரணங்களை எடுத்துச் சொன்னதோடு இரட்டை அங்கத்தவர் தொகுதியான மட்டக்களப்பில் ஒரு பிரதிநிதித்துவம் தொடர்ச்சியாக முஷ்லிம்களுக்குரியதாகவே இருந்துவரும் நிலையில் தமிழரசுக்கட்சி சார்பில் இரண்டு வேட்பாளர்கள் களத்தில் நிற்பதுவும் முஷ்லிம்களுக்குரிய பிரதிநிதித்துவத்தை மறுக்கும் செயலாகும் என்றும் விளக்கிக் கூறினார். அவரது எந்த விளக்கங்களும் தேர்தல் நியமனக்குழுவின் தலைமை நீதிபதியாக இருந்த அமிர்தலிங்கத்திடம் எடுபடவில்லை. இறுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணியில் இராஜதுரையையும், தமிழரசுக்கட்சியில் காசி ஆனந்தனையும் நிறுத்த கட்சி முடிவுசெய்தது. வடக்கு கிழக்கின் அனைத்து தொகுதிகளிலும் தமிழர் விடுதலைக் கூட்டணியாக பரிணமித்து சூரியன் சின்னத்தில் போட்டியிட்ட தமிழரசுக்கட்சியினர் மட்டக்களப்பில் மட்டும் மேலதிகமாக தமிழரசுக்கட்சியை இராஜதுரைக்கு போட்டியாக களமிறக்கினர். சுமார் இருபத்தைந்து ஆண்டுகள் தமிழரசுக்கட்சியின் சின்னமாக இருந்துவந்த வீட்டுச்சின்னம் காசி ஆனந்தனுக்கு வழங்கப்பட்டமை, புதிய சின்னத்தில் போட்டியிட நேர்ந்த இராஜதுரையின் ஆதரவாளர்களுக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.

தேர்தல் நெருங்கிய வேளைகளில் இராஜதுரையின் தேர்தல் மேடைகளில் உரையாற்ற எந்தவொரு கட்சி முக்கியஷ்தர்களும் முன்வரவில்லை. ஈழவேந்தன், கோவை மகேசன், மாவை சேனாதிராஜா போன்றோர் மட்டக்களப்பில் களமிறக்கப்பட்டு காசி ஆனந்தனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தனர். அவர்களது விசமத்தனமான பேச்சுகளும் கட்சிப்பத்திரிகையான ‘சுதந்திரனில்’ இராஜதுரைக்கு எதிராக வெளிப்படையாகவே எழுதிய பண்புகெட்ட எழுத்துகளும் அளவற்றன. பட்டிருப்பு தொகுதியிலும் கல்குடா தொகுதியிலும் உதயசூரியனை ஒளிரச் செய்யுங்கள் என்று பேசிய கட்சித் தலைவர்கள் அதே வாயால் மட்டக்களப்பு தொகுதியில் உதயசூரியனை உதிக்காமல் செய்யுங்கள் என்று பேசினர். 1977 ஆம் ஆண்டு தேர்தலில் ஒரே கட்சிக்குள்ளேயே இராஜதுரைக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட அவமானங்களுக்கும் குத்துவெட்டுகளுக்கும் நிகர்த்த பிறிதொன்று இலங்கை வரலாற்றில் எங்கேனும் நிகழ்ந்ததில்லை.
1977 ஆம் ஆண்டு தேர்தலில் இராஜதுரைக்கு எதிராக அரங்கேற்றப்பட்ட இந்த சதி மட்டக்களப்பு மக்களால் தோற்கடிக்கப்பட்டது. வழமைபோலவே அந்தத் தேர்தலிலும் இராஜதுரை அமோக வெற்றியீட்டினார். வெற்றியின் பின்னர் தேர்தலில் நடந்த கழுத்தறுப்புகளை எல்லாம் மறந்துவிட முயன்று கட்சியில் தொடர்ந்து பணியாற்ற அவர் சித்தம் கொண்டேயிருந்தார். அதன் காரணமாகவே பட்டிருப்பு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகியிருந்த ப+.கணேசலிங்கத்தின் வீட்டில் இடம்பெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்திற்கு வருமாறு விடப்பட்ட அழைப்பை ஏற்று அங்கு சென்றார். ஆனால் அவர் எதிர்பார்த்தது போன்று அங்கு சமரச முயற்சியில் யாரும் ஈடுபடவில்லை. செயற்குழுக்கூட்டம் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையில் கூட்டம் இடம்பெற்ற வீட்டைச்சுற்றி திட்டமிடப்பட்ட வகையில் குவிக்கப்பட்டிருந்த கட்சித் தொண்டர்களால் இராஜதுரை கேவலப்படுத்தப்பட்டார். அன்று மாலை பாட்டாளிபுரத்தில் இடம்பெற்ற கட்சியின் நன்றி நவிலல் பொதுகூட்டத்தில் இராஜதுரைக்கு பேச சந்தர்பம் மறுக்கப்பட்டது. தேர்தலில் தோற்ற காசி ஆனந்தன் முன்னணி பேச்சாளராக திகழ்ந்தார். மேடையிலே வீற்றிருந்த அமிர்தலிங்கமும் சிவசிதம்பரமும் செய்த சதியே அதுவாகும். தமிழரசுக்கட்சியின் தூணாக இருந்து கட்சியை வளர்த்தெடுத்த இராஜதுரைக்கு மட்டக்களப்பு மண்ணிலேயே பேசும் சந்தர்ப்பம் மறுக்கப்பட்டமை அவமானத்திலும் அவமானமாகும்.
இந்த நேரத்தில்தான் 1978 ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தையே அழித்தொழித்த ‘சூறாவளி” வீசியது. வரலாறு காணாத பேரழிவுக்கு இலக்காகி நூற்றுக்கணக்கான மக்கள் இறந்துகிடக்க, பதினைந்து அடிகளுக்கு மேல் எழுந்த கடல்கொந்தளிப்பு பல கிராமங்களை தடைமட்டமாக்கிவிட, 14 லட்சம் தென்னைமரங்கள் வீழ்ந்துகிடக்க, வீதிகள் எங்கும் உடைந்து மறிபட்டு சிதிலமடைந்து சீரழிந்த நிலையில் அவ்வழிவுகளை பார்வையிட பிரதமர் பிறேமதாசா மட்டக்களப்பிற்கு விஜயம் செய்தார். மக்கள் முன்னிலையில் மட்டக்களப்பின் அழிவுநிலையை எடுத்துச் சொல்லவேண்டிய பொறுப்பும் அவசரமும் மட்டக்களப்பு பாராளுமன்ற பிரதிநிதி எனும் வகையில் இராஜதுரைக்கு இருந்தது. அந்தவகையில் இராஜதுரை பிரதமர் பிறேமதாசாவை சந்தித்து மட்டக்களப்பின் அழிவுநிலையை எடுத்தியம்பினார்.

மட்டக்களப்பின் பரிதாபநிலையை ஆதரவற்றுக்கிடந்த மக்களுக்கான அவசரத் தேவைகளை பிரதமரிடம் எடுத்துக்கூறியது மன்னிக்க முடியாத குற்றம் என்று கட்சியின் மேலிடம் குற்றம் சுமத்தியது. இதற்கான விளக்கம் கோரி உடனடியாக பதிலிறுக்குமாறு கட்சி மேலிடம் இராஜதுரைக்கு நெருக்கடி கொடுத்தது. அந்த வேளையில் யாழ்ப்பாணம் செல்வதோ கட்சியினுடனான சமரச முயற்சிகளில் ஈடுபடுவதற்கோ கால அவகாசம் இருக்கவில்லை. மட்டக்களப்பு மண் அழிந்துகிடக்க உடனடியாக யாழ்ப்பாணம் செல்லமுடியாத நிலை முப்பது நாட்கள் அவகாசம் கேட்டு கட்சி மேலிடத்திற்கு கடிதம் எழுதினார் இராஜதுரை. முப்பது வருடங்கள் கட்சி வளர்த்தவனுக்கு தன் மீது சுமத்தப்பட்ட அபாண்டமான பழி பற்றி சுயவிளக்கம் சொல்ல முப்பது நாட்கள் அவகாசம் மறுக்கப்பட்டது. இன்னிலையில் கட்சித் தலைமையினால் தனக்கு எதிராக இழைக்கப்பட்டு வந்த அலட்சியங்கள், அநீதிகள், உபத்திரவங்கள், உத்தரிப்புகள், கழுத்தறுப்புகள் அனைத்துக்கும் முடிவாக கட்சியை விட்டே விலகிவிடுவதென்ற முடிவுக்கு இராஜதுரை வந்தார். தனது அரசியல் லாபத்திற்காக நாளொரு கட்சிதேடி அலைந்தவர் அல்ல இராஜதுரை. யாழ்ப்பாணத்து மேட்டுக்குடி அரசியல் மட்டக்களப்பானை எப்படியெல்லாம் அலைகழிக்கும் என்கின்ற பாடங்களை வருடக்கணக்கில் அனுபவித்த பின்னரே தமிழரசுக்கட்சி அரசியலை விட்டுத்தொலைக்க அவர் முடிவெடுத்தார். தர்மத்தின் ஆவேசம் அது.

யாழ் மேட்டுக்குடி அரசியலில் மொத்த வடிவமாகிவிட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியில் இருந்து அவர் தன்னை விலக்கிக்கொண்டார். சூறாவழி காரணமாக நிர்கதியாக கிடந்த மட்டக்களப்பு மக்களின் துயர்துடைக்க அரசாங்கத்தில் இணைவதா? அன்றில் அரசியலை விட்டே ஒதுங்கிவிடுவதா? என்கின்ற கேள்வியில் சிக்கித் தவித்தார். தமது ஆதரவாளர்களினதும் மட்டக்களப்பு புத்திஜீகளினதும் ஆலோசனையின் பேரில் அரசியலில் இருந்து ஒதுங்குவதில்லை எனும் முடிவுக்கு வந்தார். அரசாங்கத்தில் இணைய முன்வந்தபோது அரசாங்கம் அவருக்கு அமைச்சுபதவி வழங்கி கௌரவித்தது. பிரதேச அபிவிருத்தி, இந்துசமய கலாசார தமிழ்மொழி அமூலாக்கல் அமைச்சு எனும் புதிய அமைச்சு ஒன்றை உருவாக்கி வடக்கு கிழக்கு மக்களின் பல அரசியல் கோரிக்கைகளை தீர்க்க அவருக்கு சந்தர்ப்பத்தைக் கொடுத்தது. இலங்கையில் முதன் முதலாக இரண்டு மாகாணங்களை விசேடமாக குறிப்பிட்டு அப்பிரதேசத்திற்கான அபிவிருத்தி செய்வதை நோக்காகக் கொண்டு பிரதேச அபிவிருத்தி அமைச்சு உருவாக்கப்பட்டது. இதனூடாக கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, வேலைவாய்ப்பு …. போன்ற அனைத்து துறைகளிலும் வடகிழக்கில் அபிவிருத்தி மேற்கொள்ள இவ்வமைச்சுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மட்டுமல்ல, கொழும்பு பல்கலைக்கழகத்திலும் தமிழ் பேராசிரியராய், இராஜாஜியின் ஆட்சிக்காலத்தில் நிறுவப்பட்ட தமிழ் கலைச்சொல் அகராதி கழகங்கள் அனைத்துக்குமான பொதுத்தலைவராய், 2000 ஆண்டுகால தமிழ் இசையை மீட்டெடுத்து யாழ் நூல் ஆக்கித்தந்த இசைமுனியாய் வாழ்ந்த தமிழ் இலக்கியப் பேரூலகின் ஒரே முத்தமிழ் வித்தகன் விபுலானந்தனின் ஒப்பற்ற சாதனைகளை பிரதேசநலம் பேணும் தமிழ் அறிவுலகம் பேரூவகை கொண்டு அணுக மறுத்து வந்தபோது இராஜதுரை தமது அமைச்சு பதவி உதவியுடன் விபுலானந்தருக்கு பெரும் கௌரவம் அளித்தார்.
விபுலானந்தா இசைநடனக்கல்லூரி என்கின்ற பென்னம்பெரு மையத்தினை அமைத்து அப்பெருமானரின் பெயரை நீக்கமற நிலைக்கச்செய்தார். அந்த இசைநடனக் கல்லூரியே இன்று கிழக்கு பல்கலைக்கழத்தின் நுண்கலைத்துறையாக பரிணமித்துள்ளது. அதுமட்டுமன்றி இலங்கை அரசைக்கொண்டே (1979 ஆம் ஆண்டு) அப்பெருமகனாருக்கு நினைவு முத்திரை வெளியிடச்செய்தார். மட்டக்களப்பு நகரின் மீன்பாடும் வாவியை அழகுபடுத்தும் பெரும்திட்டத்தை ஆரம்பித்தார். விபுலானந்தருக்குரிய மணிமண்டபத்தை அமைத்தது மட்டுமல்ல, யாழ்ப்பாண மக்களின் வேண்டுகோளுக்கிணங்க அங்கு நாவலர் மணிமண்டபத்தை அமைத்தது இந்த இராஜதுரையேயாகும்.
இராஜதுரை தமிழ் மொழி அமுலாக்க அமைச்சராக இருந்த காலத்திலேயே இலங்கையில் தமிழ் மொழி அரசகரும மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. 1956 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அரசகருமமொழிச் சட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி 12 வது சட்டதிருத்தத்தை உருவாக்கியதினூடாக தமிழ் மொழிக்கும் சம அந்தஷ்து வழங்கப்பட்டது. இதனை வரலாற்றில் திட்டமிட்டு அனைவரும் மறைத்துக்கொண்டிருக்கின்றார்கள். சட்டமேதைகள் நிறைந்த தமிழரசுக்கட்சியினரால் வாதப்பிரதிவாதங்களை எழுப்ப முடிந்ததே தவிர எதையும் சாதிக்க முடியவில்லை. ஆனால் தமிழ் மொழிக்கு அரசகருமமொழி அந்தஷ்து வழங்கப்பட்டது இந்த இராஜதுரையால் நிகழ்த்தப்பட்ட சாதனையேயாகும். அமைச்சராக இருப்பது துரோகமாய் இருந்தால் அதுவரை காலமும் தமிழ் தலைவர்கள் யாரும் அரசுடன் இணைந்து அமைச்சராய் இருக்கவில்லையா? 1947 இல் ஜி.ஜி.பொன்னம்பலம் அமைச்சராகி பத்து லட்சம் மலையகமக்களின் வாக்குரிமைகளைப் பறிக்க அரசுக்கு துணைபோனாரே, அவரை துரோகி என்று வரலாற்று ஆசிரியர் யாரும் குறிப்பிடுவதில்லையே?
1965 இல் ஐம்பதுக்கு ஐம்பது பெற்றுத்தருகிறேன் என்று அதே ஜி.ஜி.பொன்னம்பலமும் சம~;டி ஒன்றே தீர்வாகும் என்று தமிழரசுக்கட்சியும் கன்னை பிரித்து நின்று தமிழ் மக்களை ஏமாற்றிவிட்டு டட்லி சேனநாயக்காவின் அரசாங்கத்தில் பதவிகளுக்காக சங்கமமானது துரோகமில்லையா? தமிழரசுக்கட்சியினரை சமாளிக்க பட்டிருப்பு இராசமாணிக்கத்திற்கு அமைச்சர் பதவியை வழங்குகிறோம் என்று ஆசை காட்டிவிட்டு தமிழரசுக்கட்சியின் கொழும்பு புறோக்கறான திருச்செல்வத்திற்கு அமைச்சுபதவியை வழங்கியது செல்வநாயகம் செய்த நம்பிக்கைத்துரோகம் இல்லையா? தமது பங்கிற்கு ஜி.ஜி.பொன்னம்பலம் வாங்கிய உபசபாநாயகர் பதவியை பெற்றுக்கொண்ட சிவசிதம்பரத்தை துரோகி என்று யாரும் சொல்வதில்லையே?

இராஜதுரை யாழ் மேட்டுக்குடி தமிழரசுக்கட்சியினால் வஞ்சிக்கப்பட்டு ஆறாத ரணங்களை நெஞ்சிலே சுமந்துகொண்டு அரசாங்கத்தில் இணைந்தது மட்டும் எப்படிக் குற்றமாகும்?
read more...

Thursday, 17 May 2012

தமிழ் தேசியக் கூட்டமைப்பை உடைக்கும் இரகசிய முயற்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.பா.அரியநேந்திரன் - பின்னனியில் சில திரைமறைவு சக்திகள்.

தமி;ழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான திரு.பாக்கியசெல்வம் அரியநேந்திரன், புலம்பெயர்ந்தவர்களால் நடாத்தப்பட்டுவரும் இணையத்தளமான – தினக்கதிருக்கு தெரிவித்திருக்கும் கருத்துக்கள் தொடர்பில், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) இவ்வறிக்கையை வெளியிடுகின்றது.
 
தனது செய்தியில், திரு அரியநேந்திரன் -  எமது அமைப்பை தமிழ் தேசியக் கூட்டமைப்பில் ஒரு அங்கமாக இணைத்துக் கொள்வதை ஆட்சேபித்திருப்பதுடன், இதனை மீறி நாம் இணைத்துக் கொள்ளப்பட்டால் பாரதூரமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்திருக்கின்றார். மேலும் அரியநேந்திரன், எமது அமைப்பை இராணுவத்துடன் தொடர்புபடுத்தி உண்மைக்கு மாறான ஒரு அபிப்பிராயத்தையும் மக்கள் மயப்படுத்த முற்பட்டிருக்கின்றார். அவர் எமது அமைப்பு தொடர்பில் குறிப்பிட்டிருக்கும் அனைத்து விடயங்களும் அடிப்படையற்றவை.
 
சமீபத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இராஐவரோதயம் சம்பந்தன் அவர்களின் தலைமையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் ஓர் ஆரோக்கியமான சந்திப்பு இடம்பெற்றிருந்த சூழலில், உருத்திரண்டு வரும் ஒற்றுமைக்கான சூழலை சீர்குலைக்கும் வகையில், அரியநேந்திரன் திட்டமிட்டு இத்தகையதொரு செய்தியை வெளியிட்டிருக்கின்றார். இதனை நாம் வன்மையாக கண்டிப்பதுடன், இவ்வாறான சீர் குலைவு நடவடிக்கைகள் குறித்து மக்களை விழிப்பாக இருக்குமாறும் கேட்டுக் கொள்கின்றோம். 
 
தமிழ் மக்களுடைய விடுதலைக்கான போராட்டத்தில் பங்குகொண்ட எந்தவொரு அமைப்போ அல்லது கட்சிகளோ விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டதல்ல. அந்தவகையில், நாம் கடந்தகாலம் குறித்த ஆரோக்கியமான விமர்சனங்களை எப்போதுமே வரவேற்று வந்திருக்கிறோம். ஆனால் இரண்டாம்தரமான வார்த்தை பிரயோகங்கள் மூலம், எமது அமைப்பை கொச்சைப்படுத்த முற்படும்போது அது குறித்து நாம் அமைதியாக இருக்க முடியாது. இந்த அடிப்படையில், நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரனின் அரசியல் நம்பகத்தன்மை குறித்தும், அவரது சமீபகால தீய உள்நோக்கம் கருதிய செயற்பாடுகள் குறித்தும் சில உண்மைகளை மக்கள்முன் வைக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு நாம் ஆளாகியுள்ளோம்.
 
நாம் கடந்த காலத்தில், விடுதலைப்புலிகளின் அணுகுமுறைகளையும், அவர்களால் திணிக்கப்பட்ட ஏகப்பிரதிநிதித்துவ அரசியலையும் எதிர்த்து வந்திருக்கிறோம். இது அனைவரும் அறிந்த உண்மை. கடந்த காலத்தில் விடுதலைப்புலிகள் எமது அமைப்பின் உறுப்பினர்களை கொல்லும் நோக்கத்துடன் எதிர்கொண்ட போது, எமது உறுப்பினர்களும் தங்களை தற்பாதுகாத்துக் கொள்வதற்காக புலிகளின் உறுப்பினர்களை எதிர்கொண்டிருக்கின்றனர். இதுவும் அனைவரும் அறிந்த உண்மை. இவற்றை நாம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மறைக்க முயன்றதும் இல்லை. அப்படி மறைத்து அரசியல் செய்ய வேண்டிய எந்தவொரு அவசியமும் எமக்கில்லை. நாம் அப்போது மட்டுமல்ல, இப்போதும் எந்தவொரு ஏகப்பிரதிநிதித்துவ அரசியல் வாதங்களையும் ஏற்றுக் கொள்ளவில்லை. ஏகப்பிரதிநிதித்துவ வாதம் என்பது ஒரு சமூதாயத்தின் பன்முகத் தன்மையை மறுக்கும் ஒரு ஜனநாயக விரோத செயலாகும்.
 
ஒரு கொள்கைநெறியால் வழிநடத்தப்பட்ட அரசியல் இயக்கம் என்ற வகையில் எம்மால் எம்மை பகிரங்கமாக வெளிப்படுத்த முடியும். ஆனால் எம் மீதான அவதூறுகளை பரப்ப முற்படும் அரியநேந்திரனால் அது முடியாது.
 
பாக்கியசெல்வம் அரியநேந்திரனின் அரசியல் நம்பகத்தன்மை எத்தகையது?
 
தொழில் ரீதியாக மிருக வைத்தியரின் உதவியாளரான(மிருக சினைப்படுத்தும் அலுவலர்), திரு.அரியநேந்திரன், அடிப்படையில் ஓரு ஜக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளராவார். அன்று மட்டக்களப்பில் இருந்து வெளிவந்து கொண்டிருந்த தினக்கதிர் என்னும் செய்தி பத்திரிகையில் ஒரு செய்திசேகரிப்பாளராக இவரும் இணைந்து கொண்டார். மிருகவைத்திய உதவியாளர்(மிருக சினைப்படுத்தும் அலுவலர்), செய்தியாளர் என்னும் இரு முகங்களுடனும் சமூகத்துடன் ஊடாடிய அரியநேந்திரன், அப்போது விடுதலைப்புலிகளின் மட்டக்களப்பு முக்கியஸ்தர்களில் ஒருவராக இருந்த கௌசல்யனுடன் இருந்த உறவுமுறையைப் பயன்படுத்தி புலிகளின் விசுவாசியாக தன்னை உருமாற்றிக் கொண்டார். புலிகளின் தொடர்பு ஜக்கிய தேசியக் கட்சியின் அரியநேந்திரனை, தமிழ் தேசியவாதியாக காட்டிக்கொள்ள உதவியது.
 
2004 இல் இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் புலிகளின் மட்டக்களப்புக்கான வேட்பாளர்கள் பட்டியலில் கௌசல்யனூடாக இடம்பிடித்துக் கொண்ட அரியநேந்திரனால்  தேர்தலில் வெற்றிபெற முடியவில்லை. அன்று புலிகள் இயக்கத்தில் கருணாவின் பிரிவால் ஏற்பட்டிருந்த குழப்பநிலையை சாதுரியமாக பாவித்து அப்போது வெற்றிபெற்றிருந்த சிறந்த சமூக சேவையாளரான கிங்ஸ்லி ராசநாயகத்தை பதவியில் இருந்து விலக்குவதன் மூலம் தான் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு வருவதற்கான சதி முயற்சியை அரியநேந்திரன் எடுத்தார். கௌசல்யனின் ஊடாக கிங்ஸ்லி ராசநாயகத்தை இராஜினாமா செய்யுமாறு அரியநேந்திரன் தூண்டியிருந்தார். ஆனால் ராசநாயகம் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர் என்றவகையில் புலிகளின் அழுத்தங்களுக்கு அடிபணிந்திருக்கவில்லை. இதன் விளைவாக ஒக்டோபர் 14-2004 அன்று நாடாளுமன்ற உறுப்பினர் கிங்ஸ்லி ராசநாயகம் படுகொலை செய்யப்பட்டு அவரது இடம் அரியநேந்திரனுக்கு வழங்கப்பட்டது. கிங்ஸ்லியின் கொலைக் குருதியால் பாக்கியசெல்வம் அரியநேந்திரன் தனது பட்டாபிசேகத்தை நிறைவு செய்து கொண்டார்.
 
விடுதலைப் புலிகளிலிருந்து கருணா பிரிந்தபோது, கருணாவின் பிளவை நியாயப்படு;த்தி அரியநேந்திரன் செயற்படலானார். ராஐன் சத்தியமூர்;த்தி, ஜெயானந்த மூர்;த்தி, சிவராம் ஆகியோருடன் இணைந்து கருணாவின் செயற்பாட்டை பிரதேசவாதம் பேசி நியாயப்படுத்தினார். ஜக்கிய தேசியக் கட்சியில் இருந்து தமிழ்  தேசியத்திற்கு தாவிய அரியநேந்திரன் இறுதியில் மட்டக்களப்பு வாதத்திற்கு தாவினார். ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகள் தம்மை மீளவும் ஸ்திரப்படுத்திய பின்பு அரியநேந்திரன் தடாலடியாக கருணாவிற்கு எதிராக திரும்பியதுடன், புலிகளின் ஆதரவாளனாகவும் தன்னை காட்டிக் கொண்டார். ஒருவேளை கருணாவின் கை மட்டக்களப்பில் ஓங்கியிருந்திருந்தால், இன்;றைய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் கருணாவின் விசுவாசியாக இயங்கியிருப்பார். இத்தகைய சந்தர்ப்பவாத அரசியலை மேற்கொண்டு வரும் அரியநேந்திரன் என்பவரே, எமது அமைப்பின் நம்பகத் தன்மை பற்றி பேசியிருக்கிறார்.  
 
அரியநேந்திரன் இவ்வாறு செயற்படுவதன் பின்னணி என்ன?
                                            
சமீபகாலமாக அரியநேந்திரன் அவ்வப்போது அறிக்கைகளை வெளியிடுவதன் மூலம் தன் மீதான கவனஈர்ப்பை ஏற்படுத்த முயற்சித்து வருகின்றார். இதன் தொடர்ச்சியாகவே தற்போது மட்டக்களப்பு தமிழசுக் கட்சியை மீறி, தமிழ் தேசியக் கூட்டமைப்பில் எமது அமைப்பை இணைத்துக் கொண்டால் பாரதூரமான விளைவுகளை சந்திக்க வேண்டிவரும் என்றும் எச்சரிக்கை ஒன்றை விட்டிருக்கின்றார். இதன் மூலம், தன்னை மட்டக்களப்புக்கான தமிழரசுக் கட்சியின் தலைவராக காண்பிக்க முயன்றிருக்கிறார். இந்த இடத்தில் கருணாவின் மட்டக்களப்பு அரசியலை ஆதரித்து புலிகளை உடைக்கத் துணைபோனது போன்று, மட்டக்களப்புக்கான தமிழசுக் கட்சியின் தலைமையாக காட்டி, தமிழ் தேசியக் கூட்டமைப்பை உடைக்க முற்படுகின்றார். நாம் மேலே குறிப்பிட்ட பாக்கியசெல்வம் அரியநேந்திரனின் தீய உள்நோக்கம் இதுவே ஆகும். சூழ்ச்சியாலும் சதியாலும் நாடாளுமன்ற கதிரையில் அமர்ந்த அரியம், தன்னை மட்டக்களப்பின் ஏகதலைவனாக காட்டிக்கொண்டு தனது பதவி-பட்டங்களுக்கு இடைய+று வந்துவிடக்கூடாதென்ற  முன்னெச்சரிக்கையுடன் தமிழ் மக்களின் ஒற்றுமையையும், கட்சிகளின் கூட்டினையும் சவாலுக்கு உட்படுத்துகின்றார். அண்மையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழு கூட்டத்தின்போது கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனை பல தடவைகள் துரோகி என விளித்துப் பேசியதும் கூட்டமைப்பை சிதைக்கும் முயற்சியின் ஒரு அங்கம் என்பதில் சந்தேகமில்லை.
 
இலங்கைக்குள் ஒரு நியாயமான அரசியல் தீர்வுக்கான முயற்சியில் தமிழ் மக்களாலும், சர்வதேசத்தாலும் தலைவராக அங்கீகரிகப்பட்டிக்கும் திரு. இராஜவரோதயம் சம்பந்தன் அவர்கள் எடுத்துவரும் முயற்சிகளை சீர்குலைக்கும் வகையில், இலங்கைக்குள்ளும் வெளியிலிருந்தும் சில தீய சக்திகள் மிகவும் நுட்பமாக செயற்பட்டுவருவதாகவே எமது அமைப்பு திட்டவட்டமாக நம்புகிறது. அத்தகையதொரு சக்தியின் ஏவலாளியாக நாடாளுமன்ற உறுப்பினர் திரு.அரியநேந்திரன் செயற்பட்டு வருகின்றாரா என்னும் சந்தேகம் வலுக்கின்றது.
 
இதன் மூலம் அத்தகைய சக்திகள் இரண்டு விடயங்களை எதிர்பார்க்கின்றன…
 
1.    இன்றைய இக்கட்டானதொரு அரசியல் சூழலில், தமிழ் மக்களின் அரசியல் சக்தியாகவும், மக்களின் ஒன்றுபட்ட குரலாகவும் செயற்பட்டுவரும் தமிழ் தேசியக் கூட்டமைபபில் இருந்து ஒரு சில கட்சிகளை வெளியேற்றுவதன் மூலம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பதற்கான அரசியல் கட்டமைப்புசார் பலத்தை சிதைப்பது.
2.    ஜக்கியப்பட்ட இலங்கைக்குள் நியாயமான தீர்வு என்னும் இலக்கில் முன்னேறி வரும் இராசம்பந்தருக்கு உள்ளுக்குள்ளும் வெளியிலும் நெருக்கடிகளை கொடுப்பதன் மூலம் அவரின் மீது ஒருவகை உளவியல் தாக்குதலை தொடுப்பதன் மூலம் அவரை அரசியலில் இருந்து ஒரங்கட்டுவது. 
 
இந்த இரண்டு விடயங்களையும் மேற்கோள்ளும் நோக்கிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேந்திரன் களமிறங்கியிருக்கின்றார். இது போன்ற செயற்பாடுகளை எமது அமைப்பு வன்மையாக எதிர்த்து நிற்கும் என்பதை நாம் இந்த சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்கின்றோம். இது போன்று எத்தகைய அவதூறுப் பிரச்சாரங்களை அரியநேந்திரன் போன்றவர்கள் மேற்கொண்டாலும், எமது அமைப்பு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எமது மக்களை மேலும் அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்லும் எந்தவொரு செயற்பாடுகளையும் அனுமதிக்கப் போவதில்லை என்பதையும் இந்த சந்தர்ப்பத்தில் உறுதியாக தெரிவித்துக் கொள்கின்றோம்.
 
 
 
ரி. பாலசிங்கம்,
மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர்,
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்,
15.05.2012.

read more...

Wednesday, 16 May 2012

வடக்கு அரசியல்வாதிகள் கிழக்கிற்கு வந்தால் கறுப்புக்கொடி போராட்டம் நடத்துவோம் - மாற்றத்திற்கான மக்கள் அமைப்பு

மாற்றத்திற்கான மக்கள் அமைப்பு 
People Organization for Change

அண்மையில் வடக்கில் இடம்பெற்ற தந்தை செல்வாவின் நினைவு தினத்திற்கு கிழக்கு மக்களால் சொல்லின் செல்வர் என போற்றப்படுகின்ற இராஜதுரை அழைக்கப்பட்டு சிவாஜிலிங்கம் அவர்களால் கறுப்புக்கொடி காட்டப்பட்டு மட்டக்களப்பான் துரோகி என்றும், சக்கிலியன் என்றும் திட்டமிட்டு அவமானப்படுத்தப்பட்டார்.

இவ் விடயம் இடம்பெற்று வாரங்கள் கடந்துவிட்ட இன்றைய நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சிவாஜிலி்ங்கம் அவர்களின் இச் செயற்பாடு தொடர்பில் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும்  எடுக்கப்படவில்லை. கூட்டமைப்பினர் இவ்வாறு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமை சிவாஜிலி்கத்தின் கூற்றை ஆதரிப்பது போன்று அமைந்திருக்கின்றது.

ஆகவே மட்டக்களப்பான் மடையன் என்றும் சக்கிலியன் என்றும் கூறிய சிவாஜிலிங்கத்துக்கு எந்தவித நடவடிக்கையும் எடு்காமல் அவரின் கூற்றை ஆதரிக்கும் கூட்டமைப்பின் வடக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் யாராவது மட்டக்களப்புக்கு வருவார்களானால் அவர்களுக்கு எதிராக கறுப்புக்கொடி போராட்டத்தினை முன்னெடுப்பதோடு மக்கள் அவர்களுக்கெதிராக வீதியில் இறங்கிப் போராடுவார்கள்

மாற்றத்திற்கான மக்கள் அமைப்பு 
கிழக்கிலங்கை
15.05.2012
read more...

கிழக்கில் இடம்பெற இருக்கின்ற மாகாணசபை தேர்தல் தொடர்பில் கிழக்கிலங்கை மாற்றத்துக்கான மக்கள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை

மாற்றத்திற்கான மக்கள் அமைப்பு 
people Organization for Change (POC)

கிழக்கு மாகாணசபை கலைக்கப்படும் என பரவலாக தமிழ் ஊடகங்களில் பேசப்படுகின்ற இன்றைய நிலையில் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடும் என்று மட்டக்களப்பு மாவட்ட கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டி இடுவதன் உண்மை நோக்கம் வெறுமனே கிழக்கு மாகாணத்தின் மீதும் கிழக்கு மக்கள் மீதும் இருக்கின்ற அக்கறை அல்ல. கிழக்கிலே இடம்பெறுகின்ற துரித அபிவிருத்தியினை இல்லாமல் செய்ய வேண்டும் என்பதே அவர்களின் உண்மை நோக்கம்.

பரவலாக அவர்கள் இப்போது மேடைகளில் பேசுகின்ற விடயம் பிள்ளையான் முதலமைச்சராக வரக்கூடாது என்பதாகும். இவர்கள் மாகாணசபை தேர்தலில் போட்டியிடுவது கிழக்கு மக்களின் மீதும் கிழக்கின் மீதும் இருக்கின்ற அக்கறை இல்லை. கிழக்கில் பிள்ளையான் அவர்கள் முதலமைச்சராக இருக்கக்கூடாது. என்பது மட்டுமே.

கிழக்கில் பிள்ளையான் முதலமைச்சராக இருப்பதனால் கூட்டமைப்பினர் கிழக்கு மக்களை ஏமாற்ற முடியாது. மறு பக்கத்தில் கிழக்கு மாகாண துரிதமாக அபிவிருத்தி கண்டு வருகின்றது கிழக்கை அபிவிருத்தி அடைய விடக்கூடாது எனும் யாழ்ப்பாண தலைமைகளின் எண்ணங்களுக்கு மட்டக்களப்பு மாவட்ட கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் செயலுருவம் கொடுத்து வருகின்றனர். 

உண்மையாகவே கிழக்கில் மாகாணசபை தேர்தல் ஒன்று நடக்குமாக இருந்தால் கூட்டமைப்பு தனித்து போட்டியிட்டால் தமிழர்களின் வாக்குகள் சிதறடிக்கப்பட்டு தமிழ் முதலமைச்சரை இழக்க நேரிடும். இது கூட்டமைப்பினருக்கு தெரியும். அதனையே கூட்டமைப்பினரும் விரும்புகின்றனர். தமிழ் முதலமைச்சரை பெற முடியாமல் போணால் கிழக்கின் அபிவிருத்தி தடைப்படும் கூட்டமைப்பினரின் நோக்கமும் அதுதான்.

அது ஒரு புறமிருக்க வடக்கு, கிழக்கு இணைப்பே கூட்டமைப்பின் கொள்கை ஆனால் தனியாக பிரிந்திருக்கின்ற கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவது. அவர்களின் கொள்கைக்கு முரணானது இல்லையா? அல்லது கொள்கைகளை கைவிட்டு விட்டனரா? அல்லது தொடர்ந்தும் மக்களை ஏமாற்ற நினைக்கின்றனரா எனும் கேள்விகள் எழுகின்றன.

கூட்டமைப்பினர் கிழக்கு மாகாணசபை தேர்தலில் போட்டியிட்டு ஆட்சி அமைக்கவும் முடியாது தமிழர்கள் எதிர்க் கட்சிக்கே செல்ல வேண்டும். அதனால் தமிழர்களால் எதுவும் செய்ய முடியாது என்பதும் கூட்டமைப்பினருக்கு தெரியும். இவை அனைத்தையும் அறிந்தும் கிழக்கில் பிள்ளையான் முதலமைச்சராக இருக்கக்கூடாது கிழக்கில் அபிவிருத்தி இடம்பெறக்கூடாது என்பதற்காக மாகாணசபை தேர்தலில் போட்டியிட தீர்மானிக்கும் கூட்டமைப்பின் செயற்பாட்டை நாம் வண்மையாகக் கண்டிப்பதோடு வடக்கு மேலாதிக்க தலைமைகளின் கிழக்கு மீதான மேலாதிக்க சிந்தனைகளுக்கு துணைபோகும் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக குரல்கொடுக்க வேண்டும் 

மாற்றத்திற்கான மக்கள் அமைப்பு
கிழக்கிலங்கை
06.05.2012
read more...

Saturday, 12 May 2012

இன்னும் சில நிமிடங்களில் நேரடியாக ஒளிபரப்பாகும்

இன்னும் சில நிமிடங்களில் நேரடியாக ஒளிபரப்பாகும். குமாரதுரை அருணாசலம் அவர்கள் எழுதிய "இலங்கை அரசியல் வரலாறு இழப்புக்களும் பதிவுகளும்" எனும் நூல் வெளியீடு நேரடி ஒளிபரப்புச் செய்யப்பட இருக்கின்றன 




Watch live streaming video from puthiyavidiyal at livestream.com
read more...

Friday, 11 May 2012

இலங்கை அரசியல் வரலாறு இழப்புக்களும் பதிவுகளும்" எனும் நூல் வெளியீட்டு நிகழ்வுகள் நேரடி ஒளிப்பரப்பப்படும்

குமாரதுரை அருணாசலம் அவர்கள் எழுதிய "இலங்கை அரசியல் வரலாறு இழப்புக்களும் பதிவுகளும்" எனும் நூல் வெளியீடு நாளை (12.05.2012) சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற இருக்கின்றது. இப் புத்தக வெளியீட்டு நிகழ்வுகள் காலை 10.00 மணிமுதல் நேரடி ஒளிபரப்புச் செய்யப்பட இருக்கின்றன .

நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் இணையத்தளங்கள்

www.meenmagal.net
www.puthiyavidiyal.com
www.shanthru.com
www.unmaikal.com
www.makkalinkural.com





Watch live streaming video from puthiyavidiyal at livestream.com
read more...

Tuesday, 1 May 2012

மட்டக்களப்பில் இடம்பெறும் மேதின நிகழ்வுகள் நேரடியாக ஒளிபரப்பு

மட்டக்களப்பில் இடம்பெறும் மேதின நிகழ்வுகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட இருக்கின்றன. இவ் ஒளிபரப்பானது இன்று (01.05.2012) மாலை 03.00 மணிமுதல் மட்டக்களப்பிலிருந்து நேரடியாக ஒளிபரப்பாகும்.
ஒளிபரப்பாகும் இணையத்தளங்கள்

www.shanthru.com
www.puthiyavidiyal.com
www.meenmagal.net
www.unmaikal.com
www.makkalinkural.com




read more...