மாற்றத்திற்கான மக்கள் அமைப்பு
People Organization for Change
அண்மையில்
வடக்கில் இடம்பெற்ற தந்தை செல்வாவின் நினைவு தினத்திற்கு கிழக்கு மக்களால்
சொல்லின் செல்வர் என போற்றப்படுகின்ற இராஜதுரை அழைக்கப்பட்டு
சிவாஜிலிங்கம் அவர்களால் கறுப்புக்கொடி காட்டப்பட்டு மட்டக்களப்பான்
துரோகி என்றும், சக்கிலியன் என்றும் திட்டமிட்டு அவமானப்படுத்தப்பட்டார்.
இவ் விடயம் இடம்பெற்று வாரங்கள் கடந்துவிட்ட இன்றைய நிலையில் தமிழ்
தேசியக் கூட்டமைப்பினர் சிவாஜிலி்ங்கம் அவர்களின் இச் செயற்பாடு தொடர்பில்
இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கூட்டமைப்பினர்
இவ்வாறு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமை சிவாஜிலி்கத்தின் கூற்றை
ஆதரிப்பது போன்று அமைந்திருக்கின்றது.
ஆகவே மட்டக்களப்பான் மடையன் என்றும் சக்கிலியன் என்றும் கூறிய
சிவாஜிலிங்கத்துக்கு எந்தவித நடவடிக்கையும் எடு்காமல் அவரின் கூற்றை
ஆதரிக்கும் கூட்டமைப்பின் வடக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் யாராவது
மட்டக்களப்புக்கு வருவார்களானால் அவர்களுக்கு எதிராக கறுப்புக்கொடி
போராட்டத்தினை முன்னெடுப்பதோடு மக்கள் அவர்களுக்கெதிராக வீதியில் இறங்கிப்
போராடுவார்கள்
மாற்றத்திற்கான மக்கள் அமைப்பு
கிழக்கிலங்கை
15.05.2012
1 comments: on "வடக்கு அரசியல்வாதிகள் கிழக்கிற்கு வந்தால் கறுப்புக்கொடி போராட்டம் நடத்துவோம் - மாற்றத்திற்கான மக்கள் அமைப்பு"
nee oru santharpavathi
Post a Comment