Showing posts with label பட்டதாரிகள். Show all posts
Showing posts with label பட்டதாரிகள். Show all posts

Friday, 30 November 2012

மட்டக்களப்பு வாவட்ட HNDA பட்டதாரி பயிலுனர்கள் தாம் திணைக்களங்களில் இணைக்கப்படாமை தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் HNDA பட்டதாரிப் பயிலுனர்களை திணைக்களங்களில் இணைத்தக் கொள்ளப்படாமை தொடர்பாக மடமக்களப்பு  HNDA பட்டதாரிகள் கெளரவ ஜனாதிபதிக்கும் அமைச்சர்களுக்கம், அரசியல்வாதிகளுக்கும் கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்திருக்கின்றனர். 
அக்கடித்தில் குறிப்பிடப்பட்டள்ள விடயங்கள்..
மட்டக்களப்பு மாவட்ட HNDA பட்டதாரி பயிலுனர்கள் அரச திணைக்களங்களுக்கு உள்வாங்கப்படாமை
மேற்படி விடயம் தொடர்பாக எமது மாவட்டத்தில் சுமார் 115 HNDA பட்டதாரி, பட்டதாரிப் பயிலுனர்களாக கடடமையாற்றி வருகின்றோம். எமக்கு தொடர்ச்சியாக விளைவிக்கப்பட்டு வருகின்ற அநீதிகளை தங்களின் மேலான கவனத்திற்கு இத்தால் கொண்டு வருவதன் மூலம் மன உழைச்சலுடன் கூடிய எமது நிலைக்கு தீர்க்கமான முடிவு கிட்டுமென எதிர்பார்க்கின்றோம்.
உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் 46/90 - 111 சுற்ற நிருபப்படி HNDA  பட்டதாரிகள் B.Com பட்டத்திற்கு சமமான பட்டதாரிகள் என அங்கிகரித்து இதுவரை காலமும் பல நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதுடன் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் அங்கிகரிக்கப்பட்ட பட்டம் பெற்றசர்கள் எனும் உரித்துடையவர்களாக இருக்கின்றோம். இருப்பினும் சில அதிகாரிகள் தெளிவின்மை காரணமாக எமது இரண்டு வருட படிப்பினையும் மீதி இரண்டு வருட திணைக்கள பயிற்சியுடனான படிப்பினையும் உதாசினம் செய்வதுபோல் நடந்துகொள்வது மனவருத்தத்தினைத் தருகின்றது. மேலும் எமக்கு இளைக்கப்பட்ட அநீதிகளாக..
01. கணக்கியல் துறைசார் பட்டம் பெற்ற எம்மால் துறைசார் பயிற்சிகள் (பயிலுனர்களாக நியமிக்கப்பட்ட பின்) பெறப்பட்டு திணைக்களங்களுக்கு பெயர்கள் வழங்கப்பட்டிருந்தன தற்போது HNDA பட்டதாரி பயிலுனர் அனைவரின் பெயர்கள் மட்டும் வெட்டப்பட்டு விளம்பரப் பலகைகளில் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது.
02. மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் இவ்விடயம் இவ்வாறு இடம்பெற்றுள்ளது. வேறு மாவட்டங்களில் முற்றிலும் முரணாக காணப்படுவதுடன் திணைக்களங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டு தெரிவுகளும் இடம்பெற்று எமது சக பட்டதாரிகள் வேறு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
03. குறிப்பிட்ட திகதிக்கு முன்னர் (30.11.2012) திணைக்களங்களுக்கான தெரிவுகள் அடங்கிய ஆவணம் தயார் செய்ய வேண்டும் என்பதால் எம்மை வெட்டிய இடங்களுக்கு புதியவர்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது (நாங்கள் பட்டதாரியாக வெளியேறிய திகதிக்குப் பின்னர் வெளியேறிய பட்டதாரிகளின் பெயர்கள்)
04. கடந்த 28.11.2012 ம் திகதி வெளியாகிய பத்திரிகையில் திணைக்களங்களுக்கள் உள்வாங்கப்படாதவர்கள் வெளி மாவட்டங்களுக்க போக வேண்டம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படியாயின் எமது நிலை என்ன? இது திட்டமிட்டு செய்யப்படும் சதியா என வலுப்பெறுகின்றது.
05. இவ்வாறான சூழ்நிலையில் பயிலுனர்களாக கடமை புரியும்போது எமக்கு ஏற்படுகின்ற மன உழைச்சல்கள், தாக்கங்கள் சொல்லி மாள முடியாது. மற்றும் தற்போது  HNDA படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் பயிற்சி நெறியினைத் தொடர்வதா எனும் ஐயப்பாட்டில் இருப்பதுடன் இவ்விடயத்தில் அவதானிப்புடன் இருக்கின்றனர்.
06. தாங்கள் மற்றும் அனைத்து உயர் அதிகாரிகளும் அறிந்த விடயமே HNDA பட்டதாரிகளுக்கு அரச நிதி நடவடிக்கைகள் நிர்வாக நடவடிக்கையில் உள்ள ஈடுபாடுகள், யாராலும் மறுக்கவொ, மறைக்கவோ முடியாது. இதற்கு ஆதாரமாக பல கணக்காய்வாளர்கள், கணக்காளர்களாக, உயர் அதிகாரிகளாக பதவி வகிக்கின்றனர்.
எனவே எமக்கும் ஏனைய மாவட்டத்தில் இடம்பெறும் திணைக்களங்களுக்கான நியமனம்போல் எமது படிப்பிற்கு மதிப்பளித்து நியமனங்கள் வழங்கப்படுவதையும் எதிர்வரும் காலங்களில் பிரச்சினைகள் வராதவண்ணம் நடவடிக்கை எடுக்கும்படியும் தாழ்மையுடன் உருக்கமாக வேண்டி நிற்கின்றோம். 
இவ்வாறு அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுளள்து.
read more...

Saturday, 24 November 2012

மட்டக்களப்பில் சில பட்டதாரிகளை இடை நிறுத்த சதி மேற்கொள்ளப்படுகின்றதா?

மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டதாரிப் பயிலுனர்களை திணைக்களங்களுக்கு நியமிப்பது தொடர்பில் பல குளறுபடிகள் இடம்பெற்று வருவதாக பட்டதாரிப் பயிலுனர்கள் குற்றம்சாட்டி வந்த நிலையில் இப்போது 1000 க்கு மேற்பட்ட பட்டதாரிப் பயிலுனர்களை வெளி மாவட்டங்களுக்கு அனுப்பப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

இது ஒரு புறமிருக்க பட்டதாரிப் பயிலுனர்களாக இணைத்துக் கொள்ளப்பட்ட உயர் தேசியக் கணக்கியல் பட்டதாரிகள் (HNDA) புறக்கணிக்கப்பட்டு வருவதாக (HNDA) பட்டதாரிகள் குற்றம் சுமத்துகின்றனர். நியமனம் வழங்கப்பட்டு ஓரிரு தினங்களில் இடை நிறத்தப்பட்டு பின்னர்  நான்கு நாட்களின் பின்னர் மீண்டும் இணைத்துக் கொள்ளப்பட்டனர். 

இவ்வாறு இணைத்துக் கொள்ளப்பட்டதன் பின்னர் வேலையில் இருந்து நிறுத்திய நாட்களுக்குரிய சம்பளம் சில பிரதேச செயலகங்களில் வழங்கப்படவில்லை ஆனால் பல பிரதேச செயலகங்களில் வழங்கப்பட்டுள்ளன. ஒரு பிரதேச செயலகத்திற்கு ஒரு நியதியா? 

அதே போன்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சில் (HNDA) பட்டதாரிகள் இணைத்துக் கொள்ளப்படவில்லை. தொடர்ந்து ஏனைய திணைக்களங்களுக்கும் (HNDA) பட்டதாரிகள் பிரதேச செயலகங்களால் அனுப்பப்படவில்லை. ஒரு சில பிரதேச செயலகங்களால் (HNDA) பட்டதாரிகளை தெரிவு செய்து அனுப்பியிருந்தும் திணைக்களங்கள் திணைக்களங்கள் (HNDA) பட்டதாரிகளை இணைத்துக் கொள்ள முடியாது என்று திருப்பியனுப்பி இருக்கின்றது.

இவ்விடயங்கள் தொடர்பாக சில அதிகாரிகள் கேட்கின்றனர் (HNDA) பட்டத்துக்கு சமமானதா? சமனானது என்பதற்கான சுற்றறிக்கையை கொண்டு வாருங்கள் என்று சொல்கின்றனர். இவ்விடயங்கள் தெரியாத அதிகாரிகள் இவ்விடயங்களை தெரிந்தாவது வைத்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறான செயற்பாடுகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டுமே நடைபெறுகின்றன. ஏனைய மாவட்டங்களில் (HNDA) பட்டதாரிகள் திணைக்களங்களுக்கு இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் சில உயர் அதிகாரிகள் தங்களது தனிப்பட்ட நலனுக்காக இவ்வாறு செயற்படுவதாக சொல்லப்படுகின்றது.

(HNDA) என்பது நான்கு வருடங்கள் மிகவும் கஸ்ரப்பட்டு படிக்க வேண்டிய ஒரு கற்கைநெறி என்பது இந்த அதிகாரிகளுக்கு எங்கே தெரியப் போகின்றது. கடந்த காலங்களில் (HNDA) பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்கி வேலை வாய்ப்புக்கள் வழங்கப்பட்டதையும் இப்போது வெளி மாவட்டங்களில் (HNDA) பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்படுவதனையும் இந்த அதிகாரிகள் தெரியாமலா இருக்கின்றனர்.

(HNDA) பட்டதாரிகளை வெளி மாவட்டங்களுக்கு அனுப்புவதற்குரிய ஏற்பர்டுகளாக இது அமையுமாக இருந்தால் இவ் அதிகாரிகளுக்கு எதிராக (HNDA) பட்டதாரிகள் வீதியில் இறங்கி போராடவும் தயங்கப்போவதில்லை. 

மறு புறத்தில் இவ்வாறு (HNDA) பட்டதாரிகள் இழிவாக நடாத்தப்படுகின்ற செயற்பாடுகள் இடம்பெற்று வரும் வேளையில் உயர் தொழில்நுட்ப நிறுவனத்திற்கென பாரிய கட்டிடம் அமைக்கப்பட்டு வருகின்றது. இக் கட்டடம் தேவையா? இதன் மூலம் எத்தனை மாணவர்களின் எதிர்காலத்தை இல்லாமல் செய்ய திட்டமிடப் படுகின்றதா? 

இப்படி (HNDA) பட்டதாரிகள் இழிவாக நடாத்தப்படுவார்கள் என்று தெரிந்திருந்தால் நான்கு வருடங்களை வீணடித்திருக்க வேண்டிய அவசியமில்லை வேறு கல்வியைத் தொடர்ந்திருக்க முடியும் இவ்விடயம் தொடர்பில் அரசியல்வாதிகள் மெளனம் சாதிப்பது ஏன்?

Syllabus - 1st Year

1st Semester
1. Fundamentals of Financial Accounting
2. Business Mathematics
3. Commercial Awareness
4. Introduction to Computer
5. Business Communication - i
2nd Semester
1. Intermediate Financial Accounting
2. Statistical Analysis for Management
3. Micro and Macro Economics
4. Business Communication - ii
5. Computer Applications

Syllabus - 2nd Year

1st Semester
1. Advanced Financial Accounting
2. Operation Management
3. Principle of Auditing & Taxation
4. Database Management Systems & Data Analysis
5. Business Communication - iii
2nd Semester
1. Cost and Management Accounting
2. Computer Application for Accounting
3. Marketing Management
4. Business Communication - iv
5. Project Management Tools & Programming

Syllabus - 3rd Year

1st Semester
1. Advanced Management Accounting
2. Financial Reporting
3. Business Law
4. Business System - I
2nd Semester
1. Advanced Financial Reporting
2. Corporate Law
3. Organizational Behavior and Human Resources Management
4. Business System - II

Syllabus - 4th Year

1st Semester
1. Financial Management
2. Strategic Management
3. Advanced Taxation
4. Computer based Accounting
2nd Semester
1. Strategic Management Accounting
2. Financial Statement Analysis
3. Strategic Management Financial
4. Advanced Auditing & Assurance

HNDA B.com க்கு சமனானது என்பதனை காட்டும் சுற்றறிக்கை




2008 B COM - Circular 46 1990(e) III from Priyal Kulathilaka

புதிதாக அமைக்கப்படும் கட்டடம்

 பட்டதாரிகள் ஒன்றியம்


யோகராசா சந்திரகுமார் 
பாதிக்கப்ட்ட HNDA பட்டதாரி
(முன்னாள் HNDA மாணவர் ஒன்றிய செயலாளர்) 
read more...

Thursday, 5 July 2012

பட்டதாரிகளின் வாழ்க்கையோடு விளையாடுகிறார்கள்

மட்டக்களப்பில் HNDA பட்டதாரி பயிலுனர்களுக்கு வழங்கப்பட்ட நியமனங்கள் இரத்து HNDA பட்டதாரிகள் விசனம்

கடந்த மாதம் 29ம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்தில் வேலையற்றிருந்த பட்டதாரிகளுக்கு பட்டதாரிப் பயிலுனர் நியமனங்கள் வழங்கப்பட்டன. இதன்போது HNDA பட்டதாரிகளுக்கும் பட்டதாரிப் பயிலுனர் நியமனங்கள் வழங்கப்பட்டன. இதனடிப்படையில் மட்டக்களப்பு கச்சேரியிலும், பிரதேச செயலகங்களிலும் பட்டதாரிகள் பயிற்சிக்காக இணைக்கப்பட்டிருக்கின்றனர்.

இவ் நியமனக் கடிதத்தினை மட்டக்களப்பு அரச அதிபர் திருமதி P.S.M.சார்ள்ஸ் அவர்கள் கையொப்பமிட்டு வழங்கியிருக்கின்றார். ஆனால் இன்று மட்டக்களப்பு அரச அதிபரினால் பிரதேச  செயலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடித்தில் HNDA பட்டதாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள நியமனங்கள் நிறுத்தப்பட இருப்பதனால். HNDA பட்டதாரிப் பயிலுனர்களை பயிற்சியல் இணைத்துக் கொள்ள வேண்டாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்ட HNDA பட்டதாரிகள் இவ்விடயம் தொடர்பில் குழப்பமடைந்திருக்கின்றனர். காரணம் மண்முனை தென் எருவில் பற்று (களுவாஞ்சிகுடி) பிரதேச செயலகம் உட்பட ஒருசில பிரதேசசெயலகங்களில் HNDA பட்டதாரிகளை நாளை முதல் வேலைக்கு வரவேண்டாம் என்று கூறப்பட்டிருக்கின்றது. ஆனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல பிரதேச செயலகங்களில் HNDA பட்டதாரிகளை வேலைக்கு வரவேண்டாம் என்ற கட்டளை பிறப்பிக்கப்படவில்லை. பிரதேச செயலகங்களுக்கு வெவ்வேறு சட்டதிட்டங்களா?

HNDA கற்கை நெறியும் பல்கலைக் கழக பட்டங்களுக்கு சமமானது என்கின்ற சுற்று நிருபம் அரசினால் வெளியிடப்பட்டு கடந்த காலங்களில் HNDA பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டன. HNDA பெறுமதி வாய்ந்த ஒரு கற்கைநெறி என பலராலும் பேசப்படுகின்ற இக் கற்கை நெறிக்கு வருடந்தோறும் ஆயிரக்கணக்கானவர்கள் விண்ணப்பித்து இக் கற்கை நெறியை நான்கு வருடங்கள்  பயின்று தொடர்ந்து வேலை வாய்ப்பில் ஈடுபடுத்தப்பட்டு வந்தனர்.

ஆனாலும் இந்தப் பட்டதாரிப் பயிலுனர் நியமனத்தில் HNDA பட்டதாரிகள் புறக்கணிக்கப்படுவது ஏன்? நான்கு வருடங்கள் கஸ்ரப்பட்டு படித்து பட்டம் பெற்றது இதற்குத்தானா? அரசாங்கம் ஏமாற்ற நினைக்கின்றதா? இதற்கு முன்னர்  HNDA பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்பட்டு  இப்போது புறக்கணிக்கப்படுவது ஏன்? பல்கலைக்கழக பட்டங்களுக்கு சமமான கற்கைநெறி என்ற சுற்று நிருபம் எங்கே போனது. அரசாங்கம் ஏன் ஏமாற்ற நினைக்கின்றதா?

இவை ஒரு புறமிருக்க நியமனம் வழங்கும்போது இவை பற்றி ஏன் இவர்கள் சிந்திக்கவில்லை. நியமனத்தை அரச அதிபர் சார்ள்ஸ் அவர்கள்தான் கையொப்பமிட்டு அன்று வழங்கினார். இன்று இரண்டு நாட்கள் வேலைக்கு சென்றபின்னர் வேலையிலிருந்து நீக்கியிருக்கின்றார். இது மனித உரிமை மீறலில்லையா?

 நியமனம் வழங்கப்பட்டபோது 2400 பட்டதாரிகளுக்கு முன்னிலையில் HNDA பட்டதாரிகளுக்கும் நியமனம் வழங்கப்பட்டது. இரண்டு நாட்கள் வேலைக்கு சென்றபின்னர். எந்தவித காரணங்களும் சுட்டிக்காட்டப்படாமல் நியமனத்தை இரத்துச்  செய்வது மனித உரிமை மீறலில்லையா? இவ்வாறான செயற்பாடுகளினால் எத்தனை பேரின் மனநிலை பாதிக்கும் எத்தனைபேர் தற்கொலைக்குக்கூட செல்லக்கூடிய நிலையில் இருப்பார்கள் என்பதனை இவர்கள் அறியாமலா வாழ்க்கையில் விளையாடுகின்றனர். 
read more...