இன்று பல்வேறு வழிகளிலே தமிழ்மொழி கொலைசெய்யப்பட்டு வருகின்றது. இன்று எங்கு பார்த்தாலும் தமிழ் மொழியோடு தேவையற்ற விதத்திலே வேற்று மொழியினைக் கலந்து தமிழ் மொழியின் இனிமையினையும், தமிழ் மொழியின் சிறப்பினையும் குழி தோண்டிப் புதைக்கின்றனர்.
தமிழ் மொழியினை கொலை செய்வதிலே இன்று திரையுலகம்கூட விட்டு வைக்கவில்லை. திரையுலகத்தைப் பொறுத்தவரை பல வழிகளிலே எமது தமிழ் மொழியினை வளர்க்க முடியும். ஆனால் இன்று என்ன நடக்கின்றது? தமிழ் மொழியை வளர்ப்பதற்குப் பதிலாக எப்படி எல்லாம் தமிழ் மொழியினை கொலை செய்ய முடியுமோ அப்படி எல்லாம் கொலை செய்து கொண்டிருக்கின்றனர்.
திரையுலகம் சார்ந்த எல்லோரையும் குற்றம் சொல்லவில்லை. தமிழ் மொழியை வளர்ப்போரும் திரையுலகத்திலே இருக்கின்றார்கள். இருந்தாலும் இன்று திரைப்படங்களிலே பல்வேறு வழிகளிலே தமிழ்மொழி கொலை செய்யப்படுகின்றது.
அன்றைய திரைப்படங்களிலே தமிழ் மொழி இன்றுபோல் கொலை செய்யப்பட்டதா இல்லையே? இன்று என்ன செய்கின்றார்கள்.
இன்றைய தமிழ் திரைப்படங்களை எடுத்துக் கொண்டால் எமது கலாசாரத்துக்கு போருத்தமிலாத குடும்பத்தோடு பார்க்க முடியாத திரைப்படங்களே அதிகம் எனலாம். அதனை விட்டுவிடுவோம். திரைப்படங்களிலே தமிழ் மொழியிலே எத்தனை வீதம் பேசுகின்றார்கள் என்பதனை பார்த்திருக்கின்றீர்களா. ஏன் நாங்கள் தேவையற்ற முறையிலே வேற்று மொழிகளை பயன்படுத்துவதனை தவிர்த்து எமது தாய் மொழி தமிழினை பயன் படுத்துவதிலே என்ன தவறிருக்கின்றது.
இன்று வருகின்ற பாடல்களிலே என்ன செய்திருக்கின்றார்கள் அவர்கள் என்ன மொழியிலே பாடல்கள் எழுதியிருக்கின்றார்கள் என்பதே புரிந்து கொள்ள முடியாமலிருக்கின்றது. ஏன் தமிழ் பாடலிலே வேற்று மொழிகளை கலக்கின்றார்கள் தமிழ் மொழியிலே அழகான சொற்கள் இல்லையா? எத்தனை சொற்கள் இருக்கின்றன. இந்தக் கவிஞர்களுக்கு தமிழ் சொற்களுக்கு பஞ்சமா அல்லது தமிழ் மொழி தெரியாதவர்களா?
தமிழ் மொழியிலே பாடல் எழுதத் தெரியவில்லை என்றால் இவர்களுக்கு எதற்கு தமிழ் கவிஞர்கள் எனும் பட்டம். இவர்களுக்குத் இவர்களுக்குத் தெரிந்த வேற்று மொழிகளிலே பாடல்களை எழுதலாமல்லவா? ஏன் தமிழ் மொழியை கொலை செய்து தமிழ் மொழியின் சிறப்பை இல்லாதொழிக்க நினைக்கின்றனர்.
இவர்களால் எத்தனை இலக்கியப் பாடல்கள் கொச்சைப் படுத்தப்பட்டிருக்கின்றன. எத்தனை இலக்கியப் பாடல்களை தமது பாடல்களிலே புகுத்தி எமது தமிழ் மொழியினை கொச்சைப் படுத்தியிருக்கின்றனர்.எத்தனை தேவாரங்களை கொச்சைப் படுத்தியிருக்கின்றனர். வேறொரு மொழியிலே இவ்வாறு செய்ய அந்த மொழியினை சார்ந்தவர்கள் விடுவார்களா?
இவர்களால் தமிழிலே பாடல்களை எழுதுவதற்கு என்ன. தமிழ் மொழியிலே சொற்களுக்கு பஞ்சமா? அல்லது இவர்களுக்கு தமிழ்மொழி தெரியாதா? தமிழ் மொழியிலே பாடல் எழுதத் தெரியாதவர்கள் எதற்கு தமிழ் கவிஞர்கள் என்று தங்களை சொல்லவேண்டும். தமக்கு தெரிந்த மொழிகளிலே எழுதலாமே. எங்கள் தமிழ்மொழியை ஏன் சாகடிக்கவேண்டும்.
இன்று இரசிகர்கள் இதனைத்தான் விரும்புகிறார்கள் என்று சொல்லப்போகின்றார்களா? இரசிகர்கள் விரும்புவதை விட அவர்களால் திணிக்கப்படுகிறது. இரசிகர்களை பழக்கப்படுத்தி விட்டது யார்? இவர்களால் திணிக்கப்பட்டபோது ஆரம்பத்திலே சகித்துக் கொண்டு கேட்க ஆரம்பித்தனர். பின்னர் தங்களை பழக்கப் படுத்திக்கொண்டனர் என்றுதான் சொல்லவேண்டும்.
அன்று வேற்று மொழிக் கலப்பிலாத பாடல்கள் வெளிவரவில்லையா? அந்தப் பாடல்கள் இன்றும் மக்கள் மனதிலே இடம்பிடித்திருக்கின்றன. ஆனால் இன்றைய பாடல்கள் எவ்வளவு காலம் நிலைத்திருக்கின்றன? சினிமாப் பாடல்கள் இன்று தமிழ் மொழியினைக் கொலை செய்வதனை ஒரு தொடர் பதிவே எழுத முடியும்.
தமிழ் மொழியினை வளர்ப்பதற்காக தமிழ் மொழியிலே திரைப்படங்களின் பெயர்களை வைத்தால் வரி விலக்கு..... சரி திரைப்படங்களிலே தமிழ் மொழியும் எமது இலக்கியங்களும் கொலை செய்யப்படுவதை என்னவென்றே பார்க்காது. வேற்று மொழியிலே பெயர் வைப்பதை தடை செய்வதிலே என்ன இருக்கிறது? திரைப்படமே ஒட்டு மொத்தத்தில் தமிழ் மொழியை கொலை செய்கிறது.திரைப்பட பெயரினை தமிழில் வைத்து தமிழை கொலை செய்யும் திரைப்படங்களை என்ன செய்வது.
தமிழ் மொழி பற்றிப் பேசுகின்றவர்கள் திரைப்படப்பாடல்களும், திரைப்படமும் தமிழை கொலை செய்வதை பற்றி சிந்தித்திருக்கின்றார்களா?
இன்று தமிழ் மொழியை வளர்க்கின்ற திரையுலகம் சார்ந்தோரும். திரைப்படங்களும் இல்லாமல் இல்லை. தமிழ் மொழியினை கொலை செய்கின்றவர்கள் எமது மொழியின் வளர்ச்சிக்காக தமிழ் மொழியினை தமது பாடல்களிலே கொலை செய்வதனையாவது நிறுத்தி தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக நல்ல பாடல்களைத் தருவார்களா?
34 comments: on "தமிழ் மொழியை கொலை செய்து வளர்ந்து வரும் தமிழ் சினிமா."
நன்றாகத் தான் எழுதியிருக்கிறீர்கள் நண்பரே!
இன்றைய திரைப்படக்காரர்களிடம் மொழி உணர்வையெல்லாம் பார்க்க முடியாது.. கூடாது!
அது மில்லியன் கணக்கான பணம் புரளும் வணிகமாகிவிட்டது. அதில் தமிழ் மிதிபட்டு கொண்டிருப்பதில் அவர்களுக்கு கவலை இருக்கும் என்று நினைக்கிறீர்கள்..?
ஒருகாலத்தில் நல்லதமிழ் பேசி வயிறுகழுவிய சினிமா.. இன்று தமிழைக் கொச்சைப்படுத்தி தின்று கொழுக்கிறது.
நண்பர்கள் கவனத்திற்கு
HOME Tamil SEO Submit
Video Search Top Blogs Trends Blog Video Images India News
சந்ரு அண்ணா!
இரசிகர்களை பழக்கப்படுத்திவிட்டார்கள்.
ஆரம்பத்தில் ஒழுங்காக இருந்தவர்களை ஒருவாறு இவ்வகை மொழிக்குள் திணித்துவிட்டார்கள்.
சுத்த மரக்கறி உணவுகளை உண்ட ஒருவனுக்கு அசைவ உணவுகளை பழக்கப்படுத்தி பழக்கப்படுத்தி விட்டால் அதன் பிறகு அவனால் அசைவ உணவின்றி உண்ண முடியாமல் போன கதைதான் எங்களுக்கும்.
ஓரிரண்டு வலைத்தளங்களில் அண்மைக்காலத்தில் தமிங்கில பிரயோகத்தை ஆதரித்து ஏராளமான கருத்துரைகள் இடப்பட்டிருந்தன.
கவலையும் அதீத கோபமும் வந்திருந்தது...
உதித் நாராயணன் தமிழைச் சப்புதை இரசிப்பதாக பெரிய கூட்டமே அலைகிறது....
ஒன்று மட்டும் சொல்வேன்...
எப்போது தமிழர்கள் வெள்ளைத் தோலும், வெள்ளைக் காரன் மொழியும் எம்மை விட சிறந்தன, எம்மை விட மதிப்பு கூடியன என்று மாயையிலிருந்து வெளிவருகிறானோ, அப்பொது தான் தமிழ் அழியாமலாவது இருக்கும்....
நல்ல பதிவுங்க சந்ரு...
விபச்சாரம் கூட அவரவர் உடலை விற்பதுதான். ஆனால் காசுக்காக ஒரு இனத்தின் அடையாளத்தை விற்பதை என்னவென்று சொல்ல???
அன்றைய திரைப்படங்களிலே தமிழ் மொழி இன்றுபோல் கொலை செய்யப்பட்டதா இல்லையே?
அன்று கவிஞர்கள் தமிழ் அறிஞர்களாக இருந்தார்கள் இன்று கவிஞர், கவியரசர், என்பவர்கள் எல்லாம் மலட்டுக் கவிஞர்கள் அதனால்தான் இந்த நிலமை.
//இன்று இரசிகர்கள் இதனைத்தான் விரும்புகிறார்கள் என்று சொல்லப்போகின்றார்களா? இரசிகர்கள் விரும்புவதை விட அவர்களால் திணிக்கப்படுகிறது. இரசிகர்களை பழக்கப்படுத்தி விட்டது யார்? இவர்களால் திணிக்கப்பட்டபோது ஆரம்பத்திலே சகித்துக் கொண்டு கேட்க ஆரம்பித்தனர். பின்னர் தங்களை பழக்கப் படுத்திக்கொண்டனர் என்றுதான் சொல்லவேண்டும்.//
100% உன்மை... நல்ல பதிவு!
மொழிப்பற்று இனப்பற்று காசுக்கு விற்கப்படுகிறது.விரும்பினால் வாங்கிகொள்ளலாம்.இல்லாட்டி இன்னொரு மொழியைக் கடனாய்ப் பாவிக்கலாம்தானே.என்ன இது !தமிழனின் அழிவுக்கே காரணம் இதுதான்.
தமிழ் படப் பெயர்கள். - போக்கிரி, திமிரு, பொறுக்கி,
என்னத்த சொல்ல....ம்ம்ம்ம்...
தமிழுக்கு இடுப்பிலதான் கத்தி
ஞாயமான ஆதங்கம்
சரியான கருத்துக்கள்
நன்றாக உள்ளது . வாழ்த்துக்கள் .
நல்ல பதிவு, அருமையான கட்டுரை, நன்றி.
உண்மை தான், தமிழுக்கு அமுதென்று பெயர் என்பார்கள், இந்தத் தமிழைக் கேட்பவர்கள் இதுவா தமிழ் என்கின்ற அளவுக்கு ஆகிவிடும் போலிருக்கிறது..
எந்தவிதக் கலப்பும் இல்லாமல் பாடல் எழுதும் பாடலாசிரியர்களில் பாடலாசிரியர்களில் யுகபாரதியும் ஒருவர். அவர் பாடல்களைத் தவறாகப் பாடும் பாடகர்களை அனுமதிப்பதில்லை...
நல்ல பதிவு...
புது வீடும் சூப்பர்...
நடிகர்களிலிருந்து அரசியல்வா(ந்)திகள் வரை வானொலி முதல் தொலைக் காட்சி அறிவிப்பாளர்கள் வரை தமிழைக் கடித்துக் குதறுவதைத்தான் பார்க்கிறோமே..... .
//சுப.நற்குணன் கூறியது...
நன்றாகத் தான் எழுதியிருக்கிறீர்கள் நண்பரே!
இன்றைய திரைப்படக்காரர்களிடம் மொழி உணர்வையெல்லாம் பார்க்க முடியாது.. கூடாது!
அது மில்லியன் கணக்கான பணம் புரளும் வணிகமாகிவிட்டது. அதில் தமிழ் மிதிபட்டு கொண்டிருப்பதில் அவர்களுக்கு கவலை இருக்கும் என்று நினைக்கிறீர்கள்..?
ஒருகாலத்தில் நல்லதமிழ் பேசி வயிறுகழுவிய சினிமா.. இன்று தமிழைக் கொச்சைப்படுத்தி தின்று கொழுக்கிறது.//
உண்மைதான் நண்பரே இவர்கள் பணம் உழைப்பதை மட்டுமே நோக்ககாக கொண்டு செயற்படுகின்றனர். இப்படியே போனால் நம் தமிழின் நிலை எங்கே போய் முடியுமோ என்று எண்ணத் தோன்றுகின்றது.
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.
//mix கூறியது...
நண்பர்கள் கவனத்திற்கு
HOME Tamil SEO Submit
Video Search Top Blogs Trends Blog Video Images India News//
நன்றிகள்.
//கனககோபி கூறியது...
சந்ரு அண்ணா!
இரசிகர்களை பழக்கப்படுத்திவிட்டார்கள்.
ஆரம்பத்தில் ஒழுங்காக இருந்தவர்களை ஒருவாறு இவ்வகை மொழிக்குள் திணித்துவிட்டார்கள்.
சுத்த மரக்கறி உணவுகளை உண்ட ஒருவனுக்கு அசைவ உணவுகளை பழக்கப்படுத்தி பழக்கப்படுத்தி விட்டால் அதன் பிறகு அவனால் அசைவ உணவின்றி உண்ண முடியாமல் போன கதைதான் எங்களுக்கும்.
ஓரிரண்டு வலைத்தளங்களில் அண்மைக்காலத்தில் தமிங்கில பிரயோகத்தை ஆதரித்து ஏராளமான கருத்துரைகள் இடப்பட்டிருந்தன.
கவலையும் அதீத கோபமும் வந்திருந்தது...
உதித் நாராயணன் தமிழைச் சப்புதை இரசிப்பதாக பெரிய கூட்டமே அலைகிறது....
ஒன்று மட்டும் சொல்வேன்...
எப்போது தமிழர்கள் வெள்ளைத் தோலும், வெள்ளைக் காரன் மொழியும் எம்மை விட சிறந்தன, எம்மை விட மதிப்பு கூடியன என்று மாயையிலிருந்து வெளிவருகிறானோ, அப்பொது தான் தமிழ் அழியாமலாவது இருக்கும்....//
உண்மைதான் எனது சில இடுகைகளிலேயே சிலர் தமிழோடு வேற்று மொழி கலப்பதிலே தவறில்லை என்று வாதிட்டனர். நமது மொழியை நாமே வளர்க்கவேண்டும். மாறாக நமது மொழியை நாமே இல்லாதொளித்துக்கொண்டிருக்கின்ற நிலையில் இருக்கின்றனர் பலர்.
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.
// சி. கருணாகரசு கூறியது...
நல்ல பதிவுங்க சந்ரு...
விபச்சாரம் கூட அவரவர் உடலை விற்பதுதான். ஆனால் காசுக்காக ஒரு இனத்தின் அடையாளத்தை விற்பதை என்னவென்று சொல்ல???//
இவர்களுக்கு மொழிப் பற்று இருக்கின்றதா என்றுதான் தெரியவில்லை. இருந்தால் இப்படியெல்லாம் செய்யமாட்டார்கள்.
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.
//S.Gnanasekar கூறியது...
அன்றைய திரைப்படங்களிலே தமிழ் மொழி இன்றுபோல் கொலை செய்யப்பட்டதா இல்லையே?
அன்று கவிஞர்கள் தமிழ் அறிஞர்களாக இருந்தார்கள் இன்று கவிஞர், கவியரசர், என்பவர்கள் எல்லாம் மலட்டுக் கவிஞர்கள் அதனால்தான் இந்த நிலமை.//
அன்றைய பாடல்கள் கேட்கக் கேட்க சலிப்படையாத பாடல்களாக இருக்கின்றன. இன்றைய பாடல்களை கேட்கும்போது வெறுப்புத்தான் வருகிறது. அப்படி தமிழ்மொழி கொலை செய்யப்பட்டிருக்கிறது.
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.
// Priya கூறியது...
//இன்று இரசிகர்கள் இதனைத்தான் விரும்புகிறார்கள் என்று சொல்லப்போகின்றார்களா? இரசிகர்கள் விரும்புவதை விட அவர்களால் திணிக்கப்படுகிறது. இரசிகர்களை பழக்கப்படுத்தி விட்டது யார்? இவர்களால் திணிக்கப்பட்டபோது ஆரம்பத்திலே சகித்துக் கொண்டு கேட்க ஆரம்பித்தனர். பின்னர் தங்களை பழக்கப் படுத்திக்கொண்டனர் என்றுதான் சொல்லவேண்டும்.//
100% உன்மை... நல்ல பதிவு!//
இன்றைய இரசிகர்கள் மீது திணிக்கப்படுகின்றது என்பதுதான் உண்மை.
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.
//ஹேமா கூறியது...
மொழிப்பற்று இனப்பற்று காசுக்கு விற்கப்படுகிறது.விரும்பினால் வாங்கிகொள்ளலாம்.இல்லாட்டி இன்னொரு மொழியைக் கடனாய்ப் பாவிக்கலாம்தானே.என்ன இது !தமிழனின் அழிவுக்கே காரணம் இதுதான்.//
இன்று தமிழினமும், தமிழ் மொழியும் பணத்துக்காக விற்கப்படுவது உண்மைதான். இன்று நாமும்நம் மொழியும் இந்த நிக்லைக்கு வருவதற்கு சிலரின் பேராசைகள்தான் காரணம்.
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.
//ரோஸ்விக் கூறியது...
தமிழ் படப் பெயர்கள். - போக்கிரி, திமிரு, பொறுக்கி,
என்னத்த சொல்ல....ம்ம்ம்ம்...//
தமிழ் மொழியைக் கொலை செய்பவர்களுக்கு பொருத்தமான பெயர்தான்.
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.
//கவிக்கிழவன் கூறியது...
தமிழுக்கு இடுப்பிலதான் கத்தி//
என்னத்தச் சொல்ல....
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.
// ஆ.ஞானசேகரன் கூறியது...
ஞாயமான ஆதங்கம்//
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.
//Sabarinathan Arthanari கூறியது...
சரியான கருத்துக்கள்//
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.
//MALARVIZHI கூறியது...
நன்றாக உள்ளது . வாழ்த்துக்கள் .//
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.
//பித்தனின் வாக்கு கூறியது...
நல்ல பதிவு, அருமையான கட்டுரை, நன்றி.//
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.
// விபு கூறியது...
உண்மை தான், தமிழுக்கு அமுதென்று பெயர் என்பார்கள், இந்தத் தமிழைக் கேட்பவர்கள் இதுவா தமிழ் என்கின்ற அளவுக்கு ஆகிவிடும் போலிருக்கிறது..
எந்தவிதக் கலப்பும் இல்லாமல் பாடல் எழுதும் பாடலாசிரியர்களில் பாடலாசிரியர்களில் யுகபாரதியும் ஒருவர். அவர் பாடல்களைத் தவறாகப் பாடும் பாடகர்களை அனுமதிப்பதில்லை...//
தமிழ் மொழியை வளர்ப்பதிலே பங்காற்றி வருகின்ற கவிஞர்கள் இல்லாமல் இல்லை அவர்களும் தங்களால் இயன்றவரை முடிந்தவரை செய்துகொண்டிருக்கின்றனர்.
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.
//சுசி கூறியது...
நல்ல பதிவு...
புது வீடும் சூப்பர்...//
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.
//ஸ்ரீராம். கூறியது...
நடிகர்களிலிருந்து அரசியல்வா(ந்)திகள் வரை வானொலி முதல் தொலைக் காட்சி அறிவிப்பாளர்கள் வரை தமிழைக் கடித்துக் குதறுவதைத்தான் பார்க்கிறோமே..... .//
இவர்களிலே தமிழ் மொழியை வளர்ப்போரும் இல்லாமல் இல்லை.
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.
நன்றாகக் கூறி இருக்கிறீர்கள்.
பெரும்பாலும் அழகிய தமிழ் எனக் கருதி கொலை செய்கின்றார்கள் என்றே சொல்லலாம்.
//மாதேவி கூறியது...
நன்றாகக் கூறி இருக்கிறீர்கள்.
பெரும்பாலும் அழகிய தமிழ் எனக் கருதி கொலை செய்கின்றார்கள் என்றே சொல்லலாம்//
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.
Post a Comment