Showing posts with label தமிழர்கள். Show all posts
Showing posts with label தமிழர்கள். Show all posts

Saturday, 27 March 2010

தமிழர்கள் மஹிந்தவின் கரங்களை பலப்படுத்துவார்களா?

இலங்கையின் பாராளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை தமிழ் பிரதிநிதித்துவம் இல்லாமல் செய்யப்பட வேண்டும் என்பதிலே பல சக்திகள் முனைப்பாக ஈடுபட்டு வருகின்றன. இதற்கு சில தமிழர்களும் துணை போகின்றார்கள் என்பதுதான் கவலைக்குரிய விடயம்.

அன்றுதொட்டு இன்றுவரை சிங்கள பேரினவாத அரசுகள் மாறி, மாறி தமிழர்களின் எதிர்காலத்தையும், அரசியல் சக்தியையும் இல்லாதொழிக்க பல சதித் திட்டங்களை தீட்டி வருகின்றன.

இந்தத் தேர்தலிலே தமிழர்களின் அரசியல் எதிர் காலத்தை இல்லாதொழிக்க உச்ச கட்ட சதித் திட்டங்களை தீட்டி வருகின்றன. தமிழர்களின் அரசியல் எதிர் காலத்தை இல்லாதொழிக்க தமிலர்கழலே பயன்படுத்தப்படுவது வேதனைக்குரிய விடயமே. பணத்துக்கும், சுகபோகங்களுக்காக  தமிழர்கள் தமிழினத்தை விற்பது வேதனைக்குரிய விடயமாகும்.

தமிழர்களின் வாக்குகளை வேட்டையாடி தமிழர் பிரதிநிதித்துவத்தையும், தமிழரின் அரசியல் பலத்தையும் இல்லாதொழிக்க பேரினவாத அரசு தனது கட்சியிலே தமிழர்களை வேட்பாளர்களாக நிறுத்தி இருப்பதோடு பல சுயேட்சைக் குழுக்களையும் களமிறக்கி இருக்கின்றது.

இந்த வேட்பாளர்கள் சொல்கின்றனர் அரசோடு சேர்ந்தால்தான் அபிவிருத்திகளை செய்ய வேண்டும் என்று. அரசோடு சேர்ந்தால்தான் அபிவிருத்திகளை செய்ய முடியுமா? தமிழர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து தமிழ் பிரதிநிதித்துவங்களை அதிகரிப்பதன் மூலம் அரசோடு பேரம் பேசி பல அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கலாம்தானே.

அது ஒரு புறமிருக்க இந்த மகிந்தவின் அரசு தமிழர்களை இல்லாதொழிக்கின்றது. புலிகளே தமிழர்களின் ஏக பிரதி நிதிகள் என்று வீர வசனம் பேசியவர்கள் எல்லாம் இன்று மகிந்தவே சிறந்த தலைவர் என்று வால்ப்பிடிக்கின்றனர். இவர்களின் கொள்கைதான் என்ன? இன்று ஒரு கொள்கை நாளை ஒரு கொள்கையா? நாளுக்கொரு கொள்கை மாற்றும் இவர்களால் தமிழர்களுக்கு என்னதான் செய்ய முடியும். தமிழினத்தை விற்று தாம் சுகபோக வாழ்க்கை வாழ்வதைத் தவிர.

கிழக்கு மாகாணம் வன்னித் தலைமையினால் புறக்கணிக்கப்படுகின்றது. கிழக்கு மக்களுக்கு தனியே ஒரு தலைமைத்துவம் வேண்டும் கிழக்கு மாகாணம் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என்று புலிகளில் இருந்து பிரிந்து வந்தவர் என்ன செய்கிறார். அவர் புலிகளில் இருந்து பிரிந்து வந்ததன் நோக்கத்தை நிறைவேற்றுகின்றாரா? கிழக்கு மாகாண மக்களுக்காக ஒரு தனித்துவக் கட்சியை ஆரம்பித்தார?

இன்று இந்த அரசாங்கத்தின் கட்சியிலே போட்டியிடுபவர்கள் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப் பட்டாலும் அவர்களால் தன்னிட்சயாக செயற்பட முடியுமா? அரசின் பொம்மைகளாக அரசு சொல்வதற்கு தலையாட்டவேண்டியவர்கலாகத்தான் இருக்க வேண்டும். மீறி செயற்பட்டால் பதவிகள் பறிக்கப்படும் என்பது எல்லோரும் அறிந்த விடயமே.

தமிழர்கள் சிந்தித்து செயற்படவேண்டிய காலமிது. பேரினவாதக் கட்சிகளுக்கு தமிழினத்தை விற்காமல் தமிழர்களை பாராளுமன்றத்துக்கு அனுப்புவதிலே ஒவ்வொரு தமிழர்களும் உறுதியாக இருக்கவேண்டும்.
read more...

Monday, 31 August 2009

தமிழர்கள் என்பதன் அடையாளம் என்ன?

எனது வலைப்பதிவு திருடப்பட்டபோது எனக்கு தெரியப்படுத்திய மற்றும் உதவிய அத்தனை நண்பர்களுக்கும் எனது நன்றிகள் பல.


எனது வலைப்பதிவிலே தமிழ் மொழி தொடர்பாக இடம் பெற்ற விவாதங்கள் மூலம் எனக்கு பல சந்தேகங்களை ஏற்படுத்தியது. என் மனதுக்குள் நானே கேட்டுக்கொண்ட கேள்விகளை உங்களிடம் கேட்கின்றேன்.

ஒரு இனத்தை பிரதிநிதித்துவப் படுத்துவது (அடையாளப் படுத்துவது) என்ன?. ஒருவரை எதனை வைத்துக்கொண்டு இவர் இந்த இனம்தான் என்று மதிப்பிடுகின்றோம்?.

தமிழர்கள் என்று சொன்னால் தமிழர்கள் என்று சொல்வதனை எதனை வைத்துத் தீர்மானிக்கின்றோம். என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. சரி தாய் மொழி தமிழாக இருக்க வேண்டும் என்று சொன்னால் நாம் தமிழ் பேசுகிறோமா? எத்தனைபேர் தமிழை மறந்து இருக்கின்றார்கள். நான் கண்டிருக்கின்றேன். இனறு கொழும்பிலே எத்தனை தமிழ் பிள்ளைகள் தமிழ் தெரியாது. சிங்களம் ஆங்கிலம் மட்டும் தெரிந்து இருக்கின்றார்கள்

தாய் மொழி என்பது எது? தாய் பேசும் மொழியா அப்படி என்றால் எனது தாய் கொழும்பிலே சிறு வயது முதல் இருந்தவர் தமிழ் என்பதே தெரியாது தமிழ் ஒரு நாள் கூட பேசியதில்லை என்றால் என் தாய் மொழி என்ன?


இன்று தமிழ் மொழி தெரியாமல் கொழும்பிலே இருக்கும் அந்த பிள்ளைகளின் பெற்றோரில் சிலருக்கு தமிழ் மொழி தெரியாது அப்போ இவர்களின் தாய் மொழி என்ன?

தமிழர்களுக்கு என்று சில கலாசாரங்கள் இருக்கின்றன என்று சொல்லப்போகின்றீர்ளா? அப்படியானால் தமிழர்கள் என்பதனை அடையாள படுத்தும் அந்தக் கலாசாரங்கள் என்ன? அவை கடைப்பிடிக்கப் படுகின்றனவா? என்பதே எனது கேள்வி.



ஒரு இனத்தை பிரதிநிதித்துவப் படுத்துவது மொழியா, கலாசாரமா, அல்லது வேறு ஏதாவதா? அவை சரியாகக் கடைப்பிடிக்கப் படுகின்றதா? தமிழர்களை பிரதி நிதிப் படுத்துவது என்ன?


உங்கள் பதில்கள் பின்னூட்டங்களாக வரட்டுமே
read more...

Sunday, 23 August 2009

தமிழர்களே சிந்தியுங்கள்...




இன்று தமிழர்களும். தமிழ் மொழியும் ஒழிக்கப்பட வேண்டும் என்று பலர் கங்கணம் கட்டிக்கொண்டு துரிதமாக செயற்பட்டு வருவது ஒரு புறமிருக்க. நாமும் எமது மொழி அழிவதற்கு உறுதுணையாக இருக்கக்கூடாது. எமது மொழியினை வளர்ப்பதற்கு எங்களால் முடிந்தவற்றை நாம் செய்யவேண்டும்.



இன்று தமிழ் ஆர்வலர்கள் அனைவராலும் பேசப்படுகின்ற ஒரு விடயம்தான் மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையில் ஏற்பட்டுள்ள பனிப்போர் – பதவிப்போர்.... இது பற்றிய முழுமையான விளக்கங்களைத் நண்பர் சுப.நற்குணன் தனது வலைப்பதிவிலே குறிப்பிட்டு இருக்கின்றார் இதனை உங்களோடு பகிர்ந்து கொள்கின்றேன்.

தமிழ்த் துறை சார்ந்த ஆர்வலர்கள் இந்தப் பிரட்சனை தொடர்பில் அக்கறை செலுத்தி எமது மொழியினை வளர்க்கவேண்டும் என்பதே எனது அவா...



நண்பர் சுப.நற்குணன் அவர்களின் வலைப்பதிவிலே......



மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையில் ஏற்பட்டுள்ள பனிப்போர் – பதவிப்போர் இன்று எல்லாருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதுமட்டுமா? தமிழர்களின் அடிவயிற்றில் புளியைக் கரைத்துக் கொண்டிருக்கிறது!


அங்கே ஏற்பட்டுள்ள உட்பகையின் காரணமாக, இந்திய ஆய்வியல் துறையே பறிபோகும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது. என்றுமே இல்லாத ஒன்றாக, இப்போது அத்துறைக்கு தமிழரல்லாத ஒருவர் தலைவராக நியமிக்கப்படுள்ளார். இதனினும் கொடுமை, ‘இந்திய ஆய்வியல் துறை’ என்ற பெயர் நீக்கப்பட்டு தென்னாசிய ஆய்வியல் துறை என்று மாற்றப்படவுள்ளதாகத் தகவல் கசிந்திருகின்றது.இந்த நிலையில், “இந்திய ஆய்வியல் துறை நிலைநிறுத்தப்பட வேண்டும்; அதன் தலைவராக ஒரு தமிழரே நியமிக்கப்பட வேண்டும்” எனப் பொது இயக்கங்கள் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளன. இந்த இழுபறிக்கு என்ன விடிவு? எதுதான் முடிவு?சரி,


சரி, அதற்கென்ன இப்போது என்கிறீர்களா?


தொடர்ந்து அறிய இங்கே http://thirutamil.blogspot.com/2009/08/blog-post_22.html செல்லுங்கள்...
read more...