Saturday, 27 March 2010

தமிழர்கள் மஹிந்தவின் கரங்களை பலப்படுத்துவார்களா?

இலங்கையின் பாராளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை தமிழ் பிரதிநிதித்துவம் இல்லாமல் செய்யப்பட வேண்டும் என்பதிலே பல சக்திகள் முனைப்பாக ஈடுபட்டு வருகின்றன. இதற்கு சில தமிழர்களும் துணை போகின்றார்கள் என்பதுதான் கவலைக்குரிய விடயம்.

அன்றுதொட்டு இன்றுவரை சிங்கள பேரினவாத அரசுகள் மாறி, மாறி தமிழர்களின் எதிர்காலத்தையும், அரசியல் சக்தியையும் இல்லாதொழிக்க பல சதித் திட்டங்களை தீட்டி வருகின்றன.

இந்தத் தேர்தலிலே தமிழர்களின் அரசியல் எதிர் காலத்தை இல்லாதொழிக்க உச்ச கட்ட சதித் திட்டங்களை தீட்டி வருகின்றன. தமிழர்களின் அரசியல் எதிர் காலத்தை இல்லாதொழிக்க தமிலர்கழலே பயன்படுத்தப்படுவது வேதனைக்குரிய விடயமே. பணத்துக்கும், சுகபோகங்களுக்காக  தமிழர்கள் தமிழினத்தை விற்பது வேதனைக்குரிய விடயமாகும்.

தமிழர்களின் வாக்குகளை வேட்டையாடி தமிழர் பிரதிநிதித்துவத்தையும், தமிழரின் அரசியல் பலத்தையும் இல்லாதொழிக்க பேரினவாத அரசு தனது கட்சியிலே தமிழர்களை வேட்பாளர்களாக நிறுத்தி இருப்பதோடு பல சுயேட்சைக் குழுக்களையும் களமிறக்கி இருக்கின்றது.

இந்த வேட்பாளர்கள் சொல்கின்றனர் அரசோடு சேர்ந்தால்தான் அபிவிருத்திகளை செய்ய வேண்டும் என்று. அரசோடு சேர்ந்தால்தான் அபிவிருத்திகளை செய்ய முடியுமா? தமிழர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து தமிழ் பிரதிநிதித்துவங்களை அதிகரிப்பதன் மூலம் அரசோடு பேரம் பேசி பல அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கலாம்தானே.

அது ஒரு புறமிருக்க இந்த மகிந்தவின் அரசு தமிழர்களை இல்லாதொழிக்கின்றது. புலிகளே தமிழர்களின் ஏக பிரதி நிதிகள் என்று வீர வசனம் பேசியவர்கள் எல்லாம் இன்று மகிந்தவே சிறந்த தலைவர் என்று வால்ப்பிடிக்கின்றனர். இவர்களின் கொள்கைதான் என்ன? இன்று ஒரு கொள்கை நாளை ஒரு கொள்கையா? நாளுக்கொரு கொள்கை மாற்றும் இவர்களால் தமிழர்களுக்கு என்னதான் செய்ய முடியும். தமிழினத்தை விற்று தாம் சுகபோக வாழ்க்கை வாழ்வதைத் தவிர.

கிழக்கு மாகாணம் வன்னித் தலைமையினால் புறக்கணிக்கப்படுகின்றது. கிழக்கு மக்களுக்கு தனியே ஒரு தலைமைத்துவம் வேண்டும் கிழக்கு மாகாணம் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என்று புலிகளில் இருந்து பிரிந்து வந்தவர் என்ன செய்கிறார். அவர் புலிகளில் இருந்து பிரிந்து வந்ததன் நோக்கத்தை நிறைவேற்றுகின்றாரா? கிழக்கு மாகாண மக்களுக்காக ஒரு தனித்துவக் கட்சியை ஆரம்பித்தார?

இன்று இந்த அரசாங்கத்தின் கட்சியிலே போட்டியிடுபவர்கள் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப் பட்டாலும் அவர்களால் தன்னிட்சயாக செயற்பட முடியுமா? அரசின் பொம்மைகளாக அரசு சொல்வதற்கு தலையாட்டவேண்டியவர்கலாகத்தான் இருக்க வேண்டும். மீறி செயற்பட்டால் பதவிகள் பறிக்கப்படும் என்பது எல்லோரும் அறிந்த விடயமே.

தமிழர்கள் சிந்தித்து செயற்படவேண்டிய காலமிது. பேரினவாதக் கட்சிகளுக்கு தமிழினத்தை விற்காமல் தமிழர்களை பாராளுமன்றத்துக்கு அனுப்புவதிலே ஒவ்வொரு தமிழர்களும் உறுதியாக இருக்கவேண்டும்.
read more...

Friday, 26 March 2010

பிள்ளையான் தமிழ் மக்களுக்காக என்ன செய்யப்போகிறார்

இலங்கையின் பாராளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் காலமிது. தமிழர்களின் அரசியல் பலத்தை இல்லாதொழிக்க பல சதித்திட்டங்கள் நடந்து வருகின்றன என்பது பலரும் அறிந்த விடயம்.
மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரை 17 கட்சிகளும், 28 சுயேட்சைக் குழுக்களுமாக 360 பேர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டிருக்கின்றனர். 5 பாராளுமன்ற கதிரைகளுக்காக 360 பேர் போட்டியிடுகின்றனர். இதனால் தமிழர்கள் சிந்தித்து சேட்பட வில்லை எனில்  தமிழர்களின் அரசியல் எதிர் காலம் கேள்விக்குறியாகிவிடும்.

மட்டக்களப்பு மாவட்டத்திலே பல தமிழ் கட்சிகள் போட்டியிடுகின்றன. அதிலே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (T .M .V .P ) கட்சியானது கிழக்கு மாகாண சபையினை தன் வசம் வைத்திருப்பதோடு. பல்வேறு பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் மூலமும் அவர்களின் அண்மைக்கால செயற்பாடுகள் மூலமும் மக்கள் மத்தியிலே   செல்வாக்கு மிக்க கட்சியாக இருக்கின்றது.

கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தலைமையிலான இக் கட்சியினர் தமிழீழ  விடுதலைப் புலிகளிலிருந்து கருணா அம்மான் விலகி தனியாக வந்தபோது இவர்களும்  பிள்ளயானோடு சேர்ந்து வந்தவர்கள்தான் ஆனாலும் கருணா அம்மானின் சில நடவடிக்கைகள் காரணமாக பிள்ளையான் தலைமையிலே தனித்து ஒரு கட்சியாக செயற்பட்டு வருவதோடு கட்சியிலே பல கல்விமான்களையும் பல துறை சார்ந்தவர்களையும் இணைத்திருப்பதோடு இத் தேர்தலிலும் பல துறை சார்ந்தவர்களை களமிறக்கி இருக்கின்றனர்.

இத் தேர்தலிலே மட்டக்களப்பு மாவட்டத்திலே 2 பாராளுமன்ற உறுப்பினர்களை இக் கட்சியிலே பெறுவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர்.

கடந்த காலங்களிலே கிழக்கு மாகாண சபை மூலமாக பல்வேறுபட்ட அபிவிருத்தித் திட்டங்களை செய்து வருகின்றனர். ஆனாலும் ஏனைய தமிழ் கட்சிகள் கிழக்கு மாகாண சபையினை ஏற்றுக்கொள்ளவில்லை.

கடந்த 30 ௦ வருட ஆயுதப் போராட்டாத்தத்தின் மூலம் நான் எதனையும் பெறவில்லை. விலை மதிக்க முடியாத உயிர்களையும், உடமைகளையும் இழந்து அனாதைகளானதுதான் மிச்சம்.

இன்று தமிழனுக்கு கிடைத்திருக்கின்ற மாகாண சபை மூலமாக நாம் தமிழர்களின் அபிலாசைகளை வென்றெடுக்க முயற்சி செய்யவேண்டுமேதவிர கிடைத்தவற்றையும் கை நழுவ விடக் கூடாது.  கடந்த காலங்களில் நாம் செய்த தவறு இதுதான் கிடைத்தவைகளை வைத்து இன்னும் பலவற்றை பெற்றிருக்க முடியும்.

இன்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளானது கிழக்கு மாகாண சபை மூலம் பல திட்டங்களை செய்து வருகின்ற இதே வேளை பாராளுமன்றத்திலே தமது உறுப்பினர்கள் 2 , 3  பேரை அனுப்புகின்றபோது இன்னும் பல அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க முடிவதோடு கிழக்கு மாகாண சபையினையும் பலப்படுத்த முடியும் என்று சொல்கின்றார்கள். இதுதான் சாத்தியமான விடயமும் கூட.

கிழக்கு மாகாண சபையைப் பொறுத்தவரை இன்றைய சிறுவர்களே நாளைய தலைவர்கள் என்ற ரீதியில் சிறுவர்களின் கல்வியிலே அக்கறை கொண்டு பல்வேறுபட்ட செயத்திட்டன்களை நடைமுறைப் படுத்தி வருகின்றது. பாடசாலையை விட்டு இடை விலகிய மாணவர்களை மீண்டும் பாடசாலையில் சேர்க்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.  அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்திலே   சிறுவர்களின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பது நல்ல விடயமாகும்.

எமது கல்வி அபிவிருத்தி சங்கமானது பல பிரச்சினைகளை  எதிர் நோக்கியபோது பல இலட்சம் பெறுமதியான பொருட்களை வழங்கியதோடு தொடர்ந்தும் பல உதவிகளை செய்வதாக உத்தரவாதம் வழங்கப் பட்டிருக்கின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரை பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் அதிகமாக இருக்கின்றன. இவர்கள் தொடர்பிலும் அதிக அக்கறை செலுத்தி வருவதோடு இவர்களை மையப்படுத்தி பல செயத்திட்டன்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இக் கட்சியானது கிழக்கு மாகாணத்தை மட்டு பிரதி பலிப்பதாக இல்லாமல் அனைத்து தமிழ் மக்களுக்கும் உரித்தான ஒரு கட்சியாகும். அதனால்தான் வடக்கு கிழக்கு உட்பட தமிழ் பிரதேசங்கள் அனைத்திலும் தமது வேட்பாளர்களை நிறுத்தி இருப்பதோடு. எதிர் வரும் காலங்களில் வட பகுதி மக்களுட்பட அனைத்து தமிழ் மக்களுக்காகவும் சேவையாற்றக் காத்திருப்பதாக  அண்மையில் களுவாஞ்சிகுடியில்  நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசும்போது அக் கட்சியின் செயலாளர் குறிப்பிடார்.

அன்று தொட்டு இன்றுவரை சில தமிழ் கட்சிகளும், அரசியல்வாதிகளும் மாகாண சபையினை ஏற்றுக்கொள்ளவில்லை சம்பந்தன் அவர்கள் கிழக்கு மாகாண சபை என்று ஒன்று இல்லை என்றே சொல்லி இருக்கின்றார்.

இவர்கள் கிழக்கு மாகாண சபையை ஏன் வெறுக்கின்றனர். கிடைப்பதனை வைத்துக்கொண்டு மேலதிகமாக பெறுவதற்கு முயற்சிகளை மேற்  கொள்ளாது தமிழ் பிரதேசங்கள் அபிவிருத்தி இன்றி இருக்கத்தான் வேண்டுமா? நாம் வீர வசனம் பேசிப்பேசியே செத்து மடிவதைத் தவிர வேறு வழி  இல்லையா?

கிழக்கு மாகாண சபையை வேருப்பவர்களிடம் கேட்கின்றேன் ஏன் கிழக்கு மாகாண சபையை வேருக்கின்றிர்கள்? கிழக்கு மாகாண சபை மூலம் தமிழர்கள் சிறிதேனும் அனுபவிக்கின்ற உரிமைகளை அனுபவிக்க வேண்டாமா
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பாராளுமன்றத்தேர்தல் விஞ்ஞாபனம்- 2010

அதிகாரமிக்க மாகாணசபையை கட்டியெழுப்புவோம்.

மாகாண சபையைப் பலப்படுத்தி, 13 ஆவது திருத்தச்சட்ட அரசியல் அதிகாரத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்காகவும் அழிவடைந்த தேசத்தை மீளக்கட்டியெழுப்புவதற்குமான மக்கள் ஆணையைக் கோரல்.சித்திரைமாதம் 08 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்; கட்சியானது தனது கட்சி; சின்னமான படகுச் சின்னத்தில் தனித்துக் களமிறங்கியுள்ளது.
தமிழ்பேசும் மக்களின் குறுகியகால, நீண்டகால நோக்கிலான அபிவிருத்தி, அரசியல் அபிலாசைகளின் நிமி;த்தம் இன்றைய காலத்தின் தேவையினை உணர்ந்து தூரநோக்குப் பார்வையுடன் இம்முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
இத்தீர்க்கமான முடிவானது தேர்தல் கால குறுந்தீர்மானம் அல்லாமல் கிழக்கு மாகாணத்தின் தனித்துவம், அதன் இருப்பு, ஒட்டுமொத்த தமிழ்பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளை உள்ளடக்கிய அரசியல் தீர்வு, நீண்டகால நோக்கிலான தொடர்ச்சியான அபிவிருத்தி போன்றவற்றின்பால் அதிக கரிசனை கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்டதொரு தீர்மானமாக உள்ளது.
 
ஒரு பொறுப்புமிக்க மக்கள் கட்சி என்ற நிலையிலிருந்து சற்றும் பிசகாமல் கடந்த கால அரசியல் மற்றும் ஆயுதப் போராட்டத் தலைமைகளின் தவறுகளிலிருந்து கிடைக்கப் பெற்ற அனுபவங்களையும் கருத்திற்கொண்டே மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கட்சியின் அனைத்துமட்ட உறுப்பினர்கள், தமிழ்பேசும் மக்களின் அபிலாசைகளில் அக்கறை கொண்டவர்கள், புத்திஜீவிகள், புலம்பெயர்வாழ் சகோதரர்கள், சர்வதேச சமூகம் போன்றவர்களிடமிருந்து பெறப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையிலும் தனித்துக் களமிறங்கும் இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. எமது பரந்துபட்ட மக்களின் அரசியல் அபிலாசைகளின் பிரதிபலிப்புகளிலிருந்து இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதன் காரணமாக உறுதித்தன்மை இன்னும் வலுவாக இருக்கின்றது.
 
தனித்துப் போட்டியிடும் இத் தேர்தல்; பயணத்தினூடாக தமிழ்பேசும் சமூகத்தின் சார்பாக எமது கட்சியானது அடைய எத்தனிக்கும் தொலைநோக்குத் திட்டத்தினை விரிவாக தெளிவுபடுத்தும் எண்ணப்பாங்கில் இவ்; ஆவணம் வரையப்படுகின்றது.சுதந்திர இலங்கையின் ஆறு தசாப்தங்களுக்கு மேற்பட்ட வரலாற்றில் இந்நாட்டின் சிறுபான்மைச் சமூகமான தமிழ்பேசும் சமூகமானது தனக்குரிய அரசியல் உரிமைகளுக்காக பல்வேறுபட்ட போராட்ட யுக்திகளை மேற்கொள்ள உந்தப்பட்டது.

முதல் மூன்று தசாப்தங்களில் அரசியல் ரீதியான போராட்டமும், அடுத்த மூன்று தசாப்தங்கள் ஆயுதப் போராட்டமும் மேற்கொள்ளப்பட்டன.ஆனால் எந்தவொரு வழிமுறையும் உரிய இலக்கினை எய்தாமல் தோல்வி கண்டுள்ளன. இப்போராட்டங்களுக்காக தமிழ் சமூகமானது மீளப்பெறமுடியாத பெரும் விலைகளை செலுத்த நேரிட்டது.
 
அத்தோடு தொடர்ச்சியாக உயிரிழப்புக்கள், அகதிவாழ்க்கை, இளைஞர்கள், சிறுவர்களின் எதிர்காலங்களை வீணாக்கியமை, ஒட்டுமொத்த சமூகத்தின் சமூக உட்கட்டமைப்புகள் சீர்குலைந்தமை போன்ற பாரிய இழப்புக்களை உரிய இலக்கினை எய்தாமல் முடிவுறுத்தப்பட்டது. இப்போராட்டங்களின் காரணமாக அபிவிருத்தியின்மை, பாதுகாப்பின்மை, அச்சமான வாழ்வு என்பன பலமடங்கு அதிகரித்து மிகவும் நலிவடைந்தொரு சமூகமாகவும், அரசியல் ரீதியில் உறுதியான தலைமைகள் இல்லாத ஒரு சமூகமாகவும் மாறியுள்ளது.
 
அரசியல் ரீதியான போராட்டம் எமது சமூகத்துக்கு ஏற்படுத்திய தாக்கங்களை விட ஆயுத ரீதியிலான போராட்டம் மிகப்பெரும் எதிர்மறையான விளைவுகளையும் ஏற்படுத்தி சமூக இருப்பினையும் ஆட்டம் காணச் செய்துள்ளது. ஆயுதப்போராட்டமானது தோல்வியில் முடிவுறுத்தப்பட்டபோதும், அதனால் சமூகத்துக்கேற்பட்ட தாக்கம், பின்னடைவுகள் என்பனவற்றிலிருந்து மீண்டெழுவதற்கு தமிழ் சமூகமானது அர்ப்பணிப்பு, தியாகம், தூரநோக்குப்பார்வை, தனித்துவம்காக்கும் ஒரு உறுதியான அரசியல் தலைமையின் பின்னால் தனது பயணத்தை தொடர்வது இன்றைய காலத்தின் தேவையாக உள்ளது.50% க்கு 50%, சமஷ்டி, தனிநாடு ,உள்ளக சுயாட்சி என்று காலத்துக்குக் காலம் தமிழ் மக்களின் உரிமைப் பிரச்சினைக்கான இறுதி இலக்கின் வடிவம் மாற்றப்பட்டு, அதற்கான மாறுபட்ட போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு இறுதியில் இவை எதுவுமே கிடைக்கப்பெறாமல் பேரினவாத சக்திகளினாலும், தமிழ் அரசியல் தலைமைகளின் தவறான அணுகுமுறைகளினாலும்; தமிழ் பேசும் சமூகமானது அரசியல் அநாதைகளாக மாறநேர்ந்துள்ளது .
 
இவ்வாறான இழப்புக்கள், அழிவுகள், வலிகள், ஏமாற்றங்கள் போன்றவற்றிலிருந்து கிடைக்கப்பெற்ற கசப்பான அனுபவங்களை கருத்திற் கொண்டு நாம் முன்னேறவேண்டியுள்ளது. மிகமுக்கியமான வரலாற்றுத் தருணங்களில் அறிவு ரீதியான அரசியல் தீர்மானங்களை மேற்கொள்ளாமல், உணர்ச்சி வயமான தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.
 
 
இந்த தவறான வழிகாட்டல்கள் இனிமேலும் தொடரக் கூடாது என்பதையிட்டு நாம் மிகுந்த கவனம் கொள்ள வேண்டும். எனவேதான் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியானது இன்றைய காலத்தின் தேவையை உணர்ந்து யதார்த்தப+ர்வமானதும், நடைமுறையிற் சாத்தியமானதுமான அரசியல் தீர்வு பற்றி தெளிவான பார்வையைக் கொண்டுள்ளது.
 
வரலாற்றில் எப்போதும் இல்லாத சவால்கள் நிறைந்த இக்காலத்தில் இன்றைய அரசியல் சூழ்நிலையில் அரசியல் யாப்பினூடாக வரையப்பட்டு தமிழ்மக்களுக்கு கிடைக்கப்பெற்றிருக்கும் குறைந்தபட்ச உரிமை மாகாண சபை முறைமையாகும்.

 
இம்மாகாணசபை முறைமையை தொடர்ந்து பேணிப்பாதுகாப்பதும் ஜனநாயக வழிமுறைகள் ஊடாக அதனை வலுப்படுத்துவதும் அவசியமானதொன்றாகும். 13 ஆவது அரசியல் திருத்தத்தினூடாக வழங்கப்பட்டுள்ள குறைந்தபட்ச அதிகாரங்கள் மட்டுமே தமிழ் மக்களின் நிறைவான இறுதியான அரசியல் உரிமை அல்ல. என்றபோதிலும் இத்தனை வருட போராட்டங்களுக்குப்பின் கிடைக்கப்பெற்றிருக்கும் இவ்அரசியல் அடிப்படை உரிமையினைத் தளமாகக் கொண்டு, அதனைப்பயன்படுத்தி அதனூடாக தமிழ்பேசும் மக்களின் ப+ரணப்படுத்தப்பட்ட அரசியல் அபிலாசைகளையும் அபிவிருத்திகளையும் எய்தமுடியும் என்ற, தீர்மானத்திற்கு நாம் வந்துள்ளோம்.
 
அதனடிப்படையில் அதிகாரமிக்க மாகாணசபைக்கான மக்கள் ஆணையைக் கோருமுகமாகவே தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி இப்பொதுத்தேர்தலில் தனித்து களமிறங்கியுள்ளது.60 வருடகால அரசியல், ஆயுத ரீதியான போராட்டம் ஏற்படுத்திய பாரிய திருப்பங்களைக் கடந்த நிலையில், அனைத்து இழப்புகளுக்கும் ஈடாக தமிழ்பேசும் மக்களுக்கு கிடைத்துள்ள யாப்புரீதியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள தீர்வு மாகாணசபை முறைமை மட்டுமேயாகும்.

1987 ஆம் ஆண்டு இந்திய அரசின் தலைமையில் ஏற்படுத்தப்பட்ட மாகாண சபைமுறைமைக்கு 20 வருடங்கள் கடந்து விட்டபோதிலும் இப்போது இரண்டு வருடங்களாகத்தான் கிழக்கு மாகாண மக்களினால் இம்மாகாண சபை அனுபவிக்கப்பட்டு வருகின்றது. ஆனாலும் அதிகளவு எதிர்பார்ப்புக்களும், ஏக்கங்;களும் உள்ள சமூகத்தின் தேவைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாத துரதிர்ஷ்டவசமான சூழ்நிலையில்தான் மாகாணசபை நிர்வாகம் இயங்கிக் கொண்டிருக்கின்றது.
 
கிழக்கு மாகாணத்தில் ஏற்படுத்தப்பட்ட மாகாணசபை விரைவில் வடமாகாணத்திலும் ஏற்படுத்தப்படவேண்டும்.இம்மாகாணசபைகளுக்கென கொண்டுவரப்பட்ட 13 ஆவது சட்டத்திருத்தத்தினூடான அரசியலதிகாரங்கள் முழுமையாக அமுல்படுத்தப்படவேண்டும். இதனூடாக கிழக்கு, வடக்கு போன்ற மாகாணங்கள் தமிழ்பேசும் மக்களின் உறுதியான அரசியல் தீர்வுக்கும், அபிவிருத்திக்குமாக கரம் கோர்த்து செயற்பட வேண்டும்.

இவ் இலக்கினை எய்தவேண்டுமானால் மாகாணசபையின் அதிகாரங்களை வழங்கக்கோரும் கட்சியின் பிரதிநிதித்துவம் பாராளுமன்றத்திலும் உறுதிப்படுத்தப்படவேண்டும்.கடந்த கால தமிழ் சமூகத்தின் அரசியல் வரலாற்றில் கசப்பான அனுபவங்கள் எமக்குக் கற்றுத்தரும் முக்கிய பாடம் யாதெனில், கிடைத்த சந்தர்ப்பங்களைத் தவறவிட்டமையும், காலத்தின் தேவையுணர்ந்து செயற்படாமையும், நடைமுறையிற் சாத்தியமான அரசியல் இலக்குகளை வகுக்காமையுமாகும்.

ஆயுதப்போராட்டம் தோல்வியில் முடிவுற்றபோதிலும், அரசியல் ரீதியில் பலவீனமாகஉள்ள நிலையிலும், தேசிய, சர்வதேச, அரசியல் எதிர்பார்ப்புகளுக்கேற்ப நம்பிக்கையினைக் கட்டியெழுப்பவேண்டிய பாரியபணி பொறுப்புமிக்க அரசியற் கட்சிக்குண்டு.எமது மக்களின் விருப்புவெறுப்பிற்கேற்ப மக்கள் பொறுப்பினை உணர்ந்து செயற்படுகின்ற தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியானது, மாகாணத்தை அடிப்படை அலகாகக் கொண்ட அதிகாரப்பகிர்வுக்கான அரசியல் நகர்வுகளை ஏலவே ஆரம்பித்து, அதன் ஒரு முக்கிய திருப்பமாக இப்பாராளுமன்றப் பொதுத்தேர்தலை எதிர் கொள்கின்றது.

 
அந்தவகையில் கிழக்கு மாகாணசபையில் பொறுப்புமிக்க ஆளுங்கட்சியாக இருக்கின்ற தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியானது, மாகாணசபையினை அரசியல் அதிகாரங்களுடாகப் பலப்படுத்தி, அதிலிருந்து தமிழ்பேசும் சமூகத்தின் முழுமை பெற்ற அரசியல் உரிமைகளையும், அபிவிருத்திகளையும் பெற்றுக் கொள்வதற்காகவும் தனித்துவமான தனது அடையாளத்தை தொடர்ந்தும் பேணவும் மக்கள் ஆணையைக் கேட்கின்றது.

 
கடந்த காலங்களில் அரசியல் ரீதியான, காலத்தின் தேவைக்கேற்ப அரசாங்கத்துடன் இணைந்து தேர்தலை சந்தித்த தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியானது இன்றைய காலத்தின் தேவையுணர்ந்து தனித்து போட்டியிடுகின்றது. புதிதாகப் பொறுப்பேற்கும் அரசாங்கத்திடமிருந்து கிழக்கு மாகாணசபைக்குரிய முழுமையான அதிகாரங்களைப் பெற்றுக் கொள்வதற்கான வலுவானதொரு பேரம் பேசும் சக்தியாக தன்னை இனம் காட்டமுனைகிறது. தமிழ் சமூகத்தின் பலமான அரசியல் அடையாளமாக விளங்குகின்ற இக்கட்சியின் தனித்துவம் தொடர்ந்தும் பேணப்படுவதற்காகவும் அதிகாரமிக்க மாகாணசபையினைக் கட்டியெழுப்பவும் இப்பாராளுமன்றத் தேர்தலினூடாக மக்கள் ஆணையை கோருகின்றோம்.

 
இந்த ஆணையினை வழங்கவேண்டியது எமது பிரஜைகள் ஒவ்வொரவரதும் வரலாற்றுக் கடமையாகும்.சமுதாய பொருளாதார அபிவிருத்தி வேலைத்திட்டங்கள்நடைபெறவுள்ள பொதுத்தேர்தலின் எமது மக்களின் சமூக பொருளாதார கல்வி கலாசார மற்றும் சமூக மேம்பாட்டு விடயங்கள் அனைத்திலும் அபிவிருத்தி காணவேண்டும் என்கின்ற இலக்கை மையமாகக் கொண்டு தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியானது பொதுத்தேர்தலுக்கு முகம் கொடுத்துள்ளது.

 
பாரம்பரிய கலை கலாசார பண்பாடுகளையும் தொன்மைமிக்க வரலாற்றையும் கொண்ட எமது சமூகம் இன்று தனது வரலாற்று அடையாளங்களைத் தொலைத்த நிலையில் காணப்படுகின்றமை வேதனைக்குரிய விடயமாகும். இந்த நிலைமையிலிருந்து மீண்டெழுவதற்கு நாம் கல்வித்துறையில் மிகப்பெரிய பாய்ச்சல் ஒன்றை ஏற்படுத்த வேண்டியது அவசியமானதாகும்.
 
 
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியானது கடந்த மாகாணசபைத் தேர்தலில கலவித்துறையையும் அபிவிருத்தித் திட்டங்களையும் முன்னிறுத்தி களமிறஙகியது.நடந்து முடிந்த யுத்தமானது எமது சமூகத்தின் கல்விவளத்தைப் பெருமளவில் சூறையாடியுள்ளது. பௌதீக வளங்கள் அழிவடைந்துள்ள நிலையிலும் அச்சமான சூழ்நிலையிலும். கல்வியைத் தொடர்வதில் எமது சமூகம் பல சவால்களை எதிர் கொண்டது. ஆனால் மாகாணசபை பொறுப்பேற்கப்பட்டதன் பின்பு முதலமைச்சர் கல்வித்துறையின்பால் காட்டிய அதீத ஈடுபாடு காரணமாக இன்று கிழக்கு மாகாணத்தின் கல்வித்துறையில் அபரிதமான முன்னேற்றம் காணப்படுகின்றது.

பல சவால்களுக்கு மத்தியிலே இந்த வளர்ச்சி எய்தப்பட்டுள்ளது. நடைபெறவுள்ள பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினது பிரதிநிதித்துவங்கள் உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் இன்னும் அதிகளவிலான அபிவிருத்திகளை கல்வித்துறையிலே எய்தமுடியும்.இதே போன்று கிழக்கு மாகாணத்திலுள்ள இன்னொரு பிரதான சவால் கணவனை இழந்த பெண்களும், பெண் தலைமைக் குடும்பங்களுமாகும். யுத்தம் இயற்கை அனர்த்தம் என்பன காரணமாக சுமார் 32000 க்கு மேற்பட்ட கணவனை இழந்த பெண்கள் கிழக்கு மாகாணத்தில் உள்ளனர். இவர்களுக்கான அடிப்படை வாழ்வாதார வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதை ஒரு முக்கிய இலக்காகக் கொண்டு கிழக்கு மாகாணசபையும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியும் செயலாற்றி வருகின்றது.
 
 
அவ்வகையில் எதிர்வருகின்ற பாராளுமன்ற தேர்தலைத் தொடர்ந்து எமது மக்களினதும் பிரதேசத்தினதும் மேம்பாட்டுக்கான பல அபிவிருத்திக்கான முன்னெடுப்புக்கள் செயற்படுத்தப்படவுள்ளன. பெண்கள்பாராளுமன்றப் பொதுத்தேர்தலின் பின்பு மாகாணசபை ஊடாக கணவனை இழந்த பெண்களுக்கான விசேட வாழ்வாதார மற்றும் கொடுப்பனவுத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும்.
 
வறுமை கோட்டின்கீழ் வாழ்வோர்
• வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களுகn;கன வழங்கப்படும் ஊக்கத்தொகையான (பிச்சைச் சம்பளம்) ரூபா 100 இனை ரூபா 1000 ஆக உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.முதியோர், மற்றும் விசேட தேவைக்குட்பட்டோர்.

• முதியோர் உள ஆற்றுப்படுத்தல் நிலயங்களை பிரதேசங்கள் தோறும் ஆரம்பிக்கபபடும்.

• விசேட தேவைக்குட்பட்டோருக்கான அரச கொடுப்பனவுகளை உருவாக்குவதற்கும் அதிகரிப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளல்.
• முதியோர் பராமரிப்புக்கான மாற்றுத் திட்டங்களை முதியோர் சங்கங்களினூடாக கண்டறிதலும் நடைமுறைப்படுத்தலும்.

 
ஆரம்பக்கல்வி
• கிராமப்புறங்களில் பெருமளவில் காணப்படும் பாடசாலை மாணவர்களின் இடைவிலகலுக்கான காரணங்களை கண்டறிந்து அவர்களை மீளவும் பாடசாலைக் கல்வியைத் தொடர்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

சிறுவர் பாதுகாப்பு

• பராயமடையாத சிறுவர்களை வேலைக்கமர்த்துதலுக்கெதிராக கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதோடு, அவை முற்றாக தடைசெய்யப்படும். அத்தோடு அவர்களது கல்விநடவடிக்கைகள் தொடர வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்படும்.

பட்டதாரிகள்

• வேலையற்ற பட்டதாரிகளுக்குப் பொருத்தமான வேலை வாய்ப்புக்கள் வழங்க துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இளைஞர் யுவதிகள்

• படித்த இளைஞர் யுவதிகளுக்கு பொருத்தமான வேலைவாய்ப்புக்கள் ஏற்படுத்திக் கொடுக்கப்பதுடன், அவர்களுக்கு சில விசேட துறைகளில் பயிற்சிகளை வழங்குவதனூடாக இவர்களது தொழிநுட்ப அறிவை மேம்படுத்தலும் சுயதொழிலுக்கான வழிகாட்டலும் நடைமுறைப்படுத்தப்படும்.

கிராமிய அபிவிருத்தி


• கிராமப்புறங்கள் மற்றும் அபிவிருத்தி குன்றிய எல்லைக்கிராமங்கள் போன்றவற்றில் வாழும் மக்களுக்கு அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை முழுமையாக நிறைவேற்ற ஆவன செய்யப்படும்.

கிராமியப் பொருளாதாரம்
• கிராமிய ரீதியில் அப்பிரதேசத்துக்கென தனித்துவமானதும் மற்றும் அப்பிரதேசங்களில் விளையக்கூடியதுமான பயிர்ச்செய்கைகளை இனங்கண்டு அவற்றை ஊக்குவித்தலும் அவ்வுற்பத்தியில் அப்பிரதேசத்தினை தன்னிறைவடையச்செய்தலுக்குமான திட்டங்கள் அமுல்படுத்தப்படும்

புனர்வாழ்வு
• உயர்பாதுகாப்பு வலயத்துள் தள்ளப்பட்ட பயிர்செய்கைக் காணிகள் மற்றும் தனியார் உடைமைகளை மக்களுக்கு மீளவும் கையளிப்புச் செய்வதற்கு ஏற்பான பிரேரணைகளைப் பாராளுமன்றத்தில் முன்வைத்து, நிவாரணம் பெறவும் அவற்றினை எமது மக்கள் மீளக் கையேற்கவும் நடவடிக்கை எடுத்தல்.
கல்விமேம்பாடு

• கிராமப்புற மற்றும் நகர்ப்புற பாடசாலைகளின் அடிப்படைத்தேவைகள் பூர்த்திசெய்யப்படும். உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.
மீன்பிடி

• மீன்பிடித்தடைகள் நீக்குவதற்கு உச்சபட்ச நடவடிக்கைகள் எடுப்பதோடு, கடல் மற்றும் நன்னீர் மீன்பிடி துறைகளை நவீனமயப்படுத்தவும் சந்தைப்படுத்தல் வாய்ப்புக்களை ஏற்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
விவசாயம்

• விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு போன்றவற்pல் முன்னணி மாகாணமாக திகழும் வகையில் பிரமாண்டமான விவசாயப்பண்ணைகள் நவீPனமுறையில் உருவாக்கப்படும்.
சுகாதாரம்
• கிராமிய வைத்தியசாலைகளைப் புனரமைத்தலும் தரமுயர்த்தலும்,

கலை, கலாசாரம்
• எமது பாரம்பரிய கலைகலாசாரங்களை பேணுவதும், நவீன உலகின் புதிய கலை கலாசாரங்களை எமது சமூக யதார்த்தத்திற்கேற்ப உள்வாங்கவும் நடவடிக்கை எடுத்தல். இதற்காக உலக கலாசார மையம் ஒன்று கிழக்கு மாகாணத்தின் மையமான மட்டக்களப்பில் நிறுவப்படும்.

• முத்தமிழ் வித்தகர் விபுலானந்த அடிகளாரின் 100 அடி உயர முழுஉருவச்சிலை ஒன்றை மீன்பாடும் மட்டக்களப்பு வாவியில் நிறுவுதல்.

• முதுமையுற்ற கலைஞர்களுக்கு மாதாந்த ஓய்வூதிய திட்டம் ஒன்று உருவாக்கப்படும்.

நகர்ப்புறத்தொழிலாளர்கள்

• தனியார் பேருந்துக்கள், ஆட்டோக்கள், தெருவோர வியாபாரம் போன்றவற்றில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கும் மற்றும் கூலித்தொழிலாளர்களுக்குமான ஓய்வூதியத்திட்டம் ஒன்றை உருவாக்குதல்.

பண்பாடு

• இலங்கையில் வாழும் தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய வரலாற்று பொக்கிசங்களை சேகரித்து, ஆவணப்படுத்த கிழக்கு மாகாணத்தில் ஒரு நூதனசாலையை அமைத்தல்.

கைதிகள் விடுதலை

• பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டிருப்போரின் விடுதலை தொடர்பாக உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
விளையாட்டுத்துறை

• பாடசாலை விளையாட்டுக்கழகங்கள், இளைஞர் கழகங்கள் ஊடாக விளையாட்டுத்துறையினை நிதி நிர்வாக ரீதியாக விருத்தி செய்து புதிய யுத்திகளுடாக தேசிய சர்வதேச மட்டங்களிலான பங்குபற்றலுக்கும் வெற்றியீட்டலுக்குமான வழி சமைத்தல்.

உல்லாசத்துறை

• உள்நாட்டு, சர்வதேச உல்லாச பயணிகளை கவரும் அளவிற்கு அடையாளம் காணப்பட்ட உல்லாச பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.


வர்த்தகத்துறை

• சிறிய, நடுத்தர வர்த்தக துறையை ஆரம்பிப்பதற்கும், விருத்தி செய்வதற்குமான மானியம் மற்றும் இலகு கடன் வசதிகளை ஏற்படுத்தப்படும்.

இலங்கையின் அனைத்து தமிழர்களும், புலம்பெயர் தமிழர்களும் கிழக்கு மாகாண சபையை ஏற்றுக் கொள்கின்றனரா? ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் காரணம் என்ன?
read more...

Thursday, 25 March 2010

சாமியார்களும், மாமியார்களும்

இன்று போலி சாமியார்களின் லீலைகள் அதிகரித்துக் கொண்டுதான் செல்கின்றன. இவர்கள் கடவுளின் பெயரில் மக்களை ஏமாற்றி பிழைப்பு நடாத்திக்கொண்டு வருகின்றனர்.

நான் பல தடவை மனிதக் கடவுளர்களை கடவுளாக மதிப்பதை மக்கள் நிறுத்த வேண்டும் மூட நம்பிக்கைகளை கைவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறேன். நாம் ஏன் மனிதர்களை வணங்க வேண்டும். இந்து சமயம்தான் சொல்கின்றது ஆதியும் அந்தமும் இல்லாதவன்தான் இறைவன் என்று அப்படி இருக்கும்போது மனிதனை நாம் ஏன் வணங்க வேண்டும் என்று மக்கள் சிந்திக்க வேண்டும்.

இன்று கடவுளை வணங்குபவர்களைவிட மனிதக் கடவுளர்களை வணங்குபவர்களின் தொகை அதிகமாகிக் கொண்டு வருகின்றது. இப்படியே போனால் எதிர் காலத்தில் உண்மையான கடவுளை எவருமே வணங்கமாட்டார்கள் போலாகிவிட்டது. 

போலி சாமியார்களின் சுத்துமாத்துக்கள், லீலைகள் காரணமாக இன்று மக்கள் மத்தியிலே கடவுள் மீது இருக்கின்ற நம்பிக்கை இல்லாமல் போகின்றது. இந்து சமயத்தைப் பொறுத்தவரை மனித கடவுள்கள் (சாமியார்கள்) தேவை இல்லை இந்து சமயம் மக்களை நல்வழிப் படுத்துகின்றது.

நாம் மனிதர்களை ஏன் கடவுளாக வணங்க வேண்டும். இவர்கள் கடவுளை மீறிய ஒரு சக்தியா இல்லையே. மக்கள் சிந்திக்க வேண்டும். இந்து சமயம் சார்ந்த அமைப்புக்கள் இதிலே தலையிட வேண்டும். இந்து சமயத்தைப் பொறுத்தவரை மனிதக் கடவுளர்கள் தேவை இல்லை.

இந்த ஆசாமிகளின் மந்திர மாய, தந்திர காம லீலைகளில் நடிகைகள், பிரபலங்கள் மட்டுமல்ல சாதாரண மக்களும் வசப்படுத்தப்படுகின்றனர். ஆனால் சாதாரண மக்கள் பற்றிய தகவல்கள் வெளிவருவதில்லை.


இந்த ஆசாமிகளின் மாய வலையில் பல மக்கள் சிக்கித்தவிக்கின்றனர் என்பதுதான் உண்மை. இந்த ஆசாமிகளிளிருந்து மக்களை காப்பாற்ற வேண்டுமாக இருந்தால் அத்தனை சாமியார்களும் ஒழித்துக்கட்டப்பட வேண்டும் இவர்கள் கடவுளுக்கு நிகரானவர்கள் இல்லை.

இந்து அமைப்புக்கள் இதிலே கவனம் செலுத்த வேண்டும். ஒன்று மட்டும் கேட்கின்றேன் இந்து அமைப்புக்களிடம் நான் சாமியாராக வேண்டும் என்றால் எனக்கு என்ன தகுதி இருக்க வேண்டும்? நானும் சாமியாராகப் போகிறேன்.
read more...

Tuesday, 23 March 2010

இலங்கையின் பாராளுமன்றத் தேர்தலில் விலை போகும் தமிழர்கள்

இலங்கையில் பாராளுமன்றத் தேர்தல் சூடு பிடித்திருக்கும் காலமிது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8 ம் திகதி இடம்பெற இருக்கின்ற இந்த பாராளுமன்றத் தேர்தலிலே. தமிழர்களின் அரசியல் எதிர்காலத்தை
இந்தத் தேர்தலிலே தமிழர்கள் சிந்தித்து செயற்பட வேண்டியவர்களாக இருக்கின்றோம். சிங்கள பேரினவாத அரசும், தீய சக்திகளும் தமிழர்களின் அரசியல் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் முயற்சிக்கு சில கேள்விக்குறியாக்கும் முயற்சியிலே பல தீய சக்திகள் சதித்திட்டங்களை தீட்டி வருகின்றன.

தமிழர்களே அவர்களின் அடிவருடிகளாக இருப்பது கவலைக்குரிய விடயமாகும்.


இந்தத் தேர்தலை பொறுத்தவரை மட்டக்களப்பு மாவட்டத்திலே பல தமிழ் கட்சிகளும் , சுயேட்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன. இந்த தமிழ் கட்சிகளும், சுயேட்சைக் குழுக்களும் ஏன் இவ்வாறு பிரிந்து தமிழர்களின் வாக்குகளை சிதறடிக்கின்றார்கள் என்று பார்க்கும்போது. அங்கே தமிலர்களுக்கேதிராக பல சதித்திட்டங்கள் இருப்பது புலனாகின்றது
 
தொடர்ந்து பார்க்க....
read more...

இலங்கையின் பாராளுமன்றத் தேர்தலில் விலை போகும் தமிழர்கள்

இலங்கையில் பாராளுமன்றத் தேர்தல்  சூடு  பிடித்திருக்கும்  காலமிது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8 ம் திகதி இடம்பெற இருக்கின்ற இந்த பாராளுமன்றத் தேர்தலிலே.   தமிழர்களின் அரசியல் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் முயற்சியிலே பல தீய சக்திகள்  சதித்திட்டங்களை தீட்டி வருகின்றன.

இந்தத் தேர்தலிலே   தமிழர்கள் சிந்தித்து செயற்பட வேண்டியவர்களாக இருக்கின்றோம். சிங்கள பேரினவாத அரசும், தீய சக்திகளும் தமிழர்களின் அரசியல் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் முயற்சிக்கு சில தமிழர்களே அவர்களின் அடிவருடிகளாக இருப்பது கவலைக்குரிய விடயமாகும்.

இந்தத் தேர்தலை பொறுத்தவரை மட்டக்களப்பு மாவட்டத்திலே பல தமிழ் கட்சிகளும் , சுயேட்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன.   இந்த தமிழ் கட்சிகளும், சுயேட்சைக் குழுக்களும் ஏன் இவ்வாறு பிரிந்து தமிழர்களின் வாக்குகளை சிதறடிக்கின்றார்கள் என்று பார்க்கும்போது. அங்கே தமிழர்களுக்கெதிராக பல சதித்திட்டங்கள்  இருப்பது புலனாகின்றது.

பேரினவாதக் கட்சிகளும், ஏனைய சில தீய சக்திகளும் தமிழர்களின் வாக்குகளை சிதறடிப்பதன் மூலம் தமிழர்களின் பாராளுமன்றப் பிரதிநித்தித்துவத்தை இல்லாமல் செய்வதற்கு முயற்சி செய்து வருகின்றார்கள். இங்கே பணம் கொடுத்து சில தமிழ் வேட்பாளர்கள் வாங்கப்பட்டிருக்கின்றனர். பணத்துக்கும், சுகபோக வாழ்க்கைக்கும் ஆசைப்பட்டு இவர்கள் தமிழினத்தையே விற்கவும் துணிந்து விட்டனர்.


 சிங்கள பேரினவாதக் கட்சிகளிலே பல தமிழர்கள் களமிறக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களில் சிலர் அரசியலுக்கு புதியவர்கள். ஆனாலும் தமிழர் உரிமைகளை  வென்றெடுக்கப் போகின்றோம். நாங்கள் தமிழர்கள், தமிழர்களுக்காக குரல் கொடுக்கப்போகின்றோம் என்றெல்லாம் வீர வசனம் பேசியவர்கள்.  இன்று எங்கே போனது இந்த வீர வசனங்கள். இவர்கள் தமிழ் பற்றாளர்கள் என்றால் ஒரு தமிழ் கட்சியிலே போட்டியிட்டிருக்கலாமே.

அன்று தமிழ் தேசிய  கூட்டமைப்பிலே இருந்து கொண்டு புலிகள்தான் தமிழர்களின் ஏக பிரதி நிதிகள் என்றும், இந்த அரசாங்கம் தமிழர்களை கொலை செய்கின்றது, என்றெல்லாம் அரசாங்கத்துக்கு எதிராகப் பேசியவர்கள் இன்று பேரினவாதக் கட்சியிலே போட்டியிடுகின்றனர். இவர்களின் நோக்கம்தான் என்ன? தமிழர்களை முட்டாள்கள் என்று நினைத்துவிட்டார்களா? இவர்களுக்கு இன்று ஒரு கொள்கை நாளை ஒரு கொள்கை. இப்படிப்பட்டவர்கள் மக்களுக்கு என்ன செய்யப்போகிறார்கள்?

கடந்த பாராளுமன்றத் தேர்தலிலே 22 ஆசனங்களைப் பெற்று அமோக வெற்றியீட்டிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்தத் தேர்தலிலே கோட்டை விட்டுவிடும் போலிருக்கிறது.  இவர்களால் நிறுத்தப் பட்டிருக்கின்ற வேட்பாளர்களுக்கு மக்கள் மத்தியிலே செல்வாக்கு இருக்கின்றதா என்று பார்த்தால் கேள்விக்குறியே. அது ஒரு புறமிருக்க இவர்கள் தமிழர்களுக்காக என்ன செய்தார்கள்? அன்று பல்லாயிரக் கணக்கான மக்கள் முள்ளி வாய்க்காலிலே கொலை செய்யப்பட்டபோது ஒரு பாராளுமன்ற உறுப்பினராவது தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராயினமா செய்தாரா? தமிழர்களுக்காக குரல் கொடுத்தாரா? வெளி நாடுகளிலே சுகபோக வாழ்க்கைதான் வாழ்ந்தார்கள்.

இது ஒரு புறமிருக்க அரசியலிலே இன்னொரு சக்தியாக இன்று உருவெடுத்திருக்கின்றது சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்)  தலைமையிலான கட்சியினர்.  இவர்களைப் பொறுத்தவரை பாராளுமன்றத் தேர்தலுக்கு புதியவர்களாக இருந்தாலும் கிழக்கு மாகாண சபையை தன் வசம் வைத்திருப்பதோடு கிழக்கு மாகாண சபையின் மூலம் பல அபிவிருத்தி திட்டங்களை செய்து  மக்கள் மத்தியிலே இவர்களுக்கு வரவேற்பு இருக்கின்றது.

இவர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து கருணா அம்மானோடு பிரிந்து வந்தாலும் சில காரணங்களினால் கருணா அம்மானிடமிருந்து பிரிந்து தனி ஒரு தமிழ் கட்சியாக இன்று ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்திருக்கின்றனர். இவர்களால் இந்தத் தேர்தலிலே களமிறக்கப் பட்டிருக்கின்றவர்கள் மக்கள் மத்தியிலே செல்வாக்குள்ள பல துறை சார்ந்தவர்களாக இருக்கின்றனர். இத் தேர்தலிலே   தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (T.M.V.P) கட்சியும் மட்டக்களப்பு மாவட்டத்திலே ஒரு பலம் பொருந்திய கட்சியாக இருக்கின்றது.

அடுத்து பார்க்கின்றபோது தமிழர் விடுதலைக் கூட்டணியும் மட்டக்களப்பு மாவட்டத்திலே இத்தேர்தலிலே களமிறங்கி இருக்கின்றது. இக் கட்சியின் அண்மைக்கால செயற்பாடுகள் காரணமாகவோ என்னவோ மக்கள் மத்தியிலே வரவேற்பு குறைந்திருப்பது போன்று தெரிகின்றது.

தேர்தல் தினம் நெருங்க, நெருங்க தேர்தல் பிரச்சாரங்களும் அதிகரித்த வண்ணமிருப்பதோடு.  ஒரே கட்சியின் வெட்பாளர்களுக்குள்ளே அதிக விருப்பு வாக்குகளை யார் பெறுவது என்பதிலே பலத்த போட்டி நிலவுகின்றது. இதன் காரணமாக ஒரே கட்சியின் வேட்பாளர்கள் தங்களுக்குள்ளே முட்டி மோதிக் கொள்கின்றனர்.  தங்களுக்குள்ளே முட்டி மோதிக்கொள்ளும் இவர்களால் தமிழர்களின் அபிலாசைகளை வென்றெடுக்க முடியுமா?

இத் தருணத்திலே தமிழ் மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டியவர்களாக இருக்கின்றனர்.
read more...

Monday, 22 March 2010

தமிழினத்தை விற்றும் தேர்தலில் போட்டியிடலாம்

சில நாட்களாக தவிர்க்க முடியாத காரணங்களாக வலைப்பதிவுப் பக்கம் வர முடியவில்லை. மீண்டும் உங்களோடு இணைந்து கொள்வதில் மகிழ்சி.

இலங்கைத் தமிழர்கள் சிந்திக்க வேண்டிய காலகட்டமிது. எதிர் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலிலே தமிழர்களின் வாக்குகளை வேட்டையாடி தமிழர்களின் ஒற்றுமையை, தமிழர்களின் பலத்தை இல்லாதொழிக்க பல சக்திகள் பல சதித்திட்டங்களை தீட்டிக்கொண்டிருக்கின்றனர்.

அதிலும் மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரை பல அரசியல் கட்சிகளும், சுயேட்சைக் குழுக்களும் இந்தத் தேர்தலிலே களமிறங்கி இருப்பதோடு மக்களை குழப்பமடைய வைத்திருக்கின்றனர். தாங்கள் சுகபோக வாழ்க்கை வாழ்வதற்காக தமிழினத்தை விற்கத் துணிந்திருக்கின்றனர். தமிழ் மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டிய காலமிது.

எனது பதிவுகளில் சமகால அரசியல் சார்ந்த பல பதிவுகளைத் தர இருக்கின்றேன்.  இன்னும் ஒரு சில நிமிடங்களில் இலங்கையின் பாராளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பின் கல நிலவரம் பற்றிய ஒரு பார்வை உங்களை வந்து சேரும்.

read more...