இந்தப்பதிவு மூலமாகவும் சிறுவர்கள் பற்றியே பேசப்போகின்றேன். என்னடா இவன் சிறுவர்கள் பற்றியே பேசிக்கொண்டு இருக்கின்றான் என்று நீங்கள் கேட்பது புரிகின்றது. எமது சிறுவர்கள் பல்வேறு வழிகளிலே பாதிக்கப்பட்டு இருக்கின்றார்கள்.அவர்களைப் பற்றிவும் அவர்களின் எதிர்காலம் பற்றியும் நாம் சிந்திக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம்.
இன்று இலங்கையைப் பொறுத்தவரையில் எமது சிறுவர்கள் பாடசாலையை விட்டு இடை விலகுகின்ற வீதம் அதிகமாக இருக்கின்றது. அதிலும் குறிப்பாக வடக்கு, கிழக்கு பகுதிகளிலேதான் இந்நிலை அதிகமாகக் காணப்படுகின்றது
நாட்டில் இடம் பெற்ற உள்நாட்டு யுத்தம் முக்கிய காரணம் என்பதை நான் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதற்கில்லை. இதைத்தவிர இன்னும் பல காரணங்கள் இருக்கின்றன.
ஆறாம் ஏழாம் தரங்களிலே கல்வி கற்கின்ற சிறுவர்களே அதிகமாக பாடசாலையை விட்டு இடை விலகிச் செல்கின்றனர். இதன் காரணம் என்ன என்று ஆராய்ந்து பார்த்த பொழுது ஆறாம், ஏழாம் தரங்களுக்கு வருகின்றபோதே அவர்களுக்கு சமுகத்தை பற்றிய உணர்வு தோன்றுகின்றது. அவர்கள் ஆறாம்,ஏழாம் தரங்களை அடையும் வரை அவர்கள் தாங்கள் எழுத வாசிக்க தெரியாமல் இருக்கின்றோமே படிக்கவேண்டுமே என்று சிந்திக்காமல் விளையாட்டுத்தனமாக இருந்து விடுகின்றனர்.
இவர்கள் சமுகத்தை பற்றிய உணர்வு வருகின்ற போது. தாங்கள் எழுத வாசிக்க தெரியாமல் இருக்கின்றோமே, என்ற ஒரு சிந்தனை தோன்றுகின்றது. இவர்கள் பாடசாலையை விட்டு விலக நினைக்கின்றார்கள். காரணம் வகுப்பிலே இருக்கின்ற சக மாணவர்கள் தங்களை கேலியாக பார்ப்பார்கள், தாங்கள் கேலி நிலைக்கு சென்று விட்டோமே என்ற ஒரு மனப் பாண்மை தோன்றுகின்றது. இதனால் படிப்படியாக பாடசாலையை விட்டு இடை விலகுகின்றனர்.
இவ்வாறு இடை விளகுகின்றவர்களின் நிலை .கேள்விக்குறியாகின்றது இவர்கள் பல்வேறு பட்ட பிரட்சனைகளை எதிர் நோக்குகின்றனர். இது ஒரு புறமிருக்க. இவர்கள் இவ்வாறு இடை விலகுவதை தவிர்ப்பதற்குரிய வழிகளை ஆராய வேண்டியவர்களாக இருக்கின்றோம்.
இவ்வாறு இடை விளகுபவர்களின் வீதம் கிராமப்புரங்களிலேதான் அதிகமாகக் காணப்படுகின்றன. இவர்களை பற்றி ஆராய்ந்து பார்க்கின்ற பொழுது. இவர்களது பெற்றோரும் கல்வியிலே பின் தங்கி இருப்பதை காணக் கூடியதாக இருக்கின்றது. இவர்கள் தங்கள் பிள்ளைகளின் கல்வியிலே அக்கறை செலுத்தாதவர்களாக இருக்கின்றனர். முதலிலே இப்படியான பெற்றோருக்கு சிறுவர்களின் கல்வியின் அவசியம் பற்றி. பல விழிப்புணர்வுக் கருத்தரங்கு போன்ற பல்வேறு செயற்பாடுகளை செயட்படுத்த வேண்டி இருக்கின்றது.
அத்தோடு நாங்கள் உடனடியாக இடைவிலகிய சிறுவர்களை பாடசாலையில் சேர்த்துக் கொள்வதனால் அவர்கள் மீண்டும் இடை விலகக் கூடிய சந்தர்ப்பங்கள் அதிகமாகவே காணப்படுக்கின்றன. முதலிலே இவர்களை தனிப்பட்ட ரீதியிலே அணுகி இவர்களை எழுத வாசிக்க பழக்க வேண்டும். பல சிறுவர்கள் நன்றாக படிக்கக்கூடியவர்கள் இன்று பாடசாலையை விட்டு இடை விலகியவர்களாக இருக்கின்றனர். அவர்கள் கண்டறியப்பட்டு இன்று கல்வியிலே முன்னிலையில் வந்து கொண்டிருக்கின்றனர். அவர்களை தனிப்பட்ட ரீதியிலே எழுத வாசிக்க பழக்கிய பின்னர் அவர்களை பாடசாலையில் சேர்க்கின்ற போது அவர்களது மனதிலே இருந்த படிக்கத் தெரியாதவர்கள் என்ற குற்ற உணர்வு நீங்குகின்றது. கல்வியிலே முன்னிலைக்கு வரக்கூடிய சாத்தியங்கள் அதிகமாகவே இருக்கின்றன. இதில் பாடசாலையை விட்டு இடை விலகிய மாணவர்கள் தொடர்பாக பல்வேறு செயத் திட்டங்களை மேற்கொண்டு வரும் களுதாவளை கல்வி அபிவிருத்தி ஒன்றியம் வெற்றியும் கண்டுள்ளது. பல இடை விலகிய மாணவர்களின் மீது தனிப்பட்ட கவனம் செலுத்தி அவர்களை பாடசாலைகளிலே மீண்டும் சேர்த்து இன்று கல்வியிலே நல்ல நிலையில் இருப்பதை காணக் கூடியதாக இருக்கின்றது.
இன்னும் பல காரணங்களை சொல்லிக்கொண்டே போகலாம். காரணங்களையும் தடுப்பதற்குரிய வழிவகை என்ன?... அவ்வப்போது உங்களுக்காக வந்து சேரும்.
படங்கள் பல இணையத் தளங்களிலிருந்து பெறப்பட்டவை.
6 comments: on "இன்றைய சிறுவர்களின் கல்வி நிலைதான் என்ன?"
பாடசாலை இடைவிலகல் என்பது கொங்சம் அதிகரித்துத் தான் விட்டது.
ஆனால் உயிருக்குப் பயப்படும் வேளையில் படிப்பது என்பது அவ்வளவு சாதாரணமான விடயமல்ல....
உயிர் பற்றி பிரச்சினைகள் இல்லாதவர்களுக்கு வறுமை...
இவை இரண்டும் சாதாரணமானவையன்று.
6 பேர் கொண்ட குடும்பத்தில் மூத்த பையனாக ஒருவன் பிறந்தால், அவனின் தந்தை இறந்தால் அவனுக்கு இருக்கும் ஒரே வழி பாடசாலையை விட்டு விலகி தொழில் தேடுவது தான்....
இலங்கையைப் போன்ற வறிய அல்லது மூன்றாந்தர நாடுகளில் பாடசாலை இடைவிலகலைத் தடுக்க முதலில் நாட்டின் பொருளாதாரம் மேம்பட வேண்டும்...
இதற்கு தெளிவான தீர்வு நாட்டின் பொருளாதார முன்னேற்றம் தான் (உள்நாட்டுச் சண்டை என்று இப்போது குறிப்பிட முடியாது. வேண்டுமானால் உள்நாட்டுச் சண்டையின் வடுக்கள் என்று குறிப்பிடலாம்) என்றாலும் குறுகிய ரீதியில் தொண்டு அடிப்படையில் இம் மாணவர்களுக்கு கல்வி அளித்தால் இந்தப் பிரச்சினையை தணிக்கலாம் அல்லது குறைக்கலாம் என்பது என் கருத்து.
இத்தனை அனர்த்தங்களுக்கு அப்புறமும் சிறுவர்களின் மனதை கல்வியின் பக்கம் திருப்புவது என்பது சாதாரண விடயமில்லை...
பெரும்பாலும் பதினைந்து வயதுக்கு மேற்பட்டவர்கள் மனநிலை வேறாகவே இருக்கும்.
நல்ல பகிர்வு.
பொறுப்பு மிக்க பதிவுங்க சந்ரு.... அங்கே விடியல் பிறக்கட்டும்...நம்மவர் கல்வியில் சிறக்கட்டும்.
நல்ல பதிவு.
இடைவிலகிய சிறுவர்கள், மற்றும் பின் தங்கிய பிள்ளைகளை முன்னுக்குக் கொண்டு வருவதற்கு எனது ஆரம்ப பாடசாலையில் மெல்லக் கற்போருக்கான விசேட வகுப்புகளளை ஆரம்பித்துள்ளோம்.
http://msvoldpupilsforum.blogspot.com
பதிவில் Labelsல் மெல்லக் கற்போர் பதிவில் விபரம் உள்ளது.
இவ்வளவு கஸ்டத்தின் நடுவிலும் நம் பிள்ளைகள் படிக்கிறார்களே.அதுவும் சந்தோஷமான விஷயம் சந்ரு.சிந்திக்க வைக்கும் பதிவு.
நிறைவான இடுகை
Post a Comment