மனிதன் இன்று எப்படி எப்படி எல்லாம் உழைக்கக் கற்றிருக்கின்றான். இன்று வேலையில்லையென்று பலர் திண்டாடிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் சிலர் மிகவும் சுலபமான முறையிலே. உடலை வருத்தாது இருந்த இடத்திலே இருந்து ஒரு சில நிமிடங்களிலே நிறையவே பணம் உழைக்கின்ற சிலர் இருக்கத்தான் செய்கின்றனர்.
இவ்வாறு சுலபமா பணம் சம்பாதிக்க பல வழிகள் இருக்கின்றன. அண்மையிலே எனது நண்பர் ஒருவருக்கு உடனடியாக பணம் தேவைப் பட்டது. அவரிடம் எந்தவிதமான பணமும் இல்லை. அவரிடம் இருந்ததங்க நகைகள் வங்கியிலே அடகு வைக்கப்பட்டிருந்தது.
அந்த நகைகளது பெறுமதியிலிருந்து மிகவும் குறைந்த பெறுமதிக்கே அடகு வைக்கப்பட்டிருந்தது. அப்போது நண்பர் வங்கியிலே இருக்கின்ற நகைகளை எடுத்து மீண்டும் பெரிய தொகைக்கு அடகு வைக்கலாம் என்று சொன்னார். என்னிடமோ அவரிடமோ எந்த பணமும் இல்லை. நான் அவரிடம் கேட்டேன் பணம் இல்லாமல் போகிறோம் பணத்துக்கு என்ன செய்வது என்று நீ வா அதற்கு வழி இருக்கிறது என்று சொன்னார். நானும் சரி என்று சொல்லிவிட்டு அவரோடு சென்றேன்.
இருவரும் வங்கிக்கு சென்றோம். நண்பர் வங்கியிலே நின்ற வாடிக்கையாளர் ஒருவரை சந்தித்து ஏதோ பேசினார். அவர் உடனே தன்னிடம் இருந்தா பணத்தில் நண்பருக்கு தேவைப்பட்ட பணத்தைக் கொடுத்தார். div align="justify">நண்பனோ நகையினை எடுத்து மீண்டும் அடகு வைத்துவிட்டு வந்து நண்பருக்கு பணம் கொடுத்த நபருக்கு பணம் கொடுக்கும் போதுதான் அறிந்தேன் இவர் வட்டிக்கு பணம் கொடுப்பவர் என்று.
சரி எவ்வளவு வட்டி கொடுத்தாய் என்று கேட்டேன் நண்பர் சொன்ன பதில் என்னால் நம்ப முடியவில்லை. ஒரு இலட்சம் ரூபாவுக்கு ஒரு மணித்தியாலம் இரண்டாயிரம் ரூபாய் என்று சொன்னார்.
இது வங்கியில் மட்டுமல்ல சந்தைகளில்கூட நடப்பதாக பின்னர்தான் அறிந்து கொண்டேன். எப்படியெல்லாம் உழைக்கிறார்கள்.
இது இவ்வாறிருக்க இன்னொரு புறத்திலே வட்டிக்கு பணம் கொடுப்போரால் அதிகமாக பாதிக்கப்பட்டு வருவது ஏழைக்களாக இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள் அதிகமாக பணக்காரர்களாகவே இருக்கின்றனர். ஏழைகளுக்கு பணம் தேவைப்படும்போது உடனடியாக இவர்களை நாடுகின்றனர். அப்போது வட்டிக்கு பணம் உடனடியாக வழங்கப் படுவதில்லை. வட்டிக்கு பணம் பெறுபவரின் காணி, வீடு என்பன அடமானம் வைத்தே வழங்கப்படுகின்றது. அத்தோடு ஒருவருடத்துக்குள் பணம் வழங்கப்படவில்லை எனில் பிணையாக வழங்கப்பட்ட சொத்துக்கள். வட்டிக்கு பணம் கொடுப்பவருக்கே சொந்தமாக்கப்படும் என்று எழுதி வாங்கிக்கொள்ளப்படுகின்றது.
பலர் கடனை உரிய காலத்தில் செலுத்த முடியாமல் தமது சொத்துக்களை இழந்திருக்கின்றனர். வட்டிக்கு பணம் கொடுப்போரால் ஏழைகளின் சொத்துக்கள் அபகரிக்கப்படுகின்றன. இவர்களுக்கு கடன் வழங்கப்படுகின்ற வட்டி வீதமும் அதிகம். இதனாம் ஏழைகள் உழைக்கின்ற பணத்தினை வட்டிக்காகவே செலவு செய்கின்றனர்.
திருந்துவார்களா இவர்கள்.
44 comments: on "திருந்துவார்களா இவர்கள்"
அய்யோ இந்த வட்டிக்கு வாங்குவது ரொம்ப கொடுமைடா சாமி.இதெல்லாம் நானும் அனுபவித்திருக்கேன்.இப்போ நினைத்தாலும் பயமா இருக்கும்.
வட்டிக்குப் பணம்... ம்...
சொல்லிச் சொல்லி அலுத்துவிட்டேன் சந்ரு அண்ணா...
தமிழர்கள் திருந்தமாட்டார்கள்...
அவர்களின் வட்டி வீதங்களைக் கேட்டால் பில்கேட்ஸ் பின்னங்கால் பிடரியில அடிக்க ஓடுவார்...
என்னத்தச் சொல்ல நான்?
சந்ரு இப்பிடி அடிபட்டு,ஓடி ஒளிஞ்சு, நாடு நாடா அலைஞ்சே எங்கட சனங்கள் திருந்த மாட்டேன் என்குதுகள்.என் உப்புமடச் சந்தியிலயும் இப்படியான ஒரு ஏமாத்து வேலைப் பதிவு போட்டேனே.
வட்டிக்கு வாங்கி அட்டிகை பண்ணு
அட்டிகை வித்து வட்டியைக் குடு
இந்த பழமொழியை கேட்டவுடன் சிரிப்புதான் வருகிறது'
நாமெல்லாரும் இதைத்தானே செய்து கொண்டிருக்கிறோம்.
ம்ஹூம் திருந்தாத சென்மங்கள் சந்ரு...
இவங்கள் எல்லாம் திருந்தாத ஜென்மங்கள்
என்ன செய்வது இவங்களை ...
அப்புறம் டெம்ப்ளேட் லாம் புதுசா இருக்கு
தேவையான இடுகை.
கஷ்டப்படும் மக்களை நினைத்தால் பாவமாக இருக்கிறது.
அவரசத்துக்கு இதை விட்டால் வேறு வழி இல்லை.
வாங்குபவர்கள் இருந்தால் கொடுபவர்களும் இருக்க தானே செய்கிறார்கள். என்று திருந்தும் இந்த சமுதாயம். நண்பா பல நாட்கலாக் உங்களுக்கு பதிவு க்கு கருத்து போட முடியாதிருந்தது, இன்றாவது கிடைத்ததில் சந்தோசம். முடிந்தால் தொடர்பு கொள்ளுங்கள். நட்புடன்.நிலாமதி
சீ.. இப்படி வாங்கும் காசில் எப்படி தான் சாப்பிட மனம் வருதோ தெரியாது. இதுகள் எல்லாம் ஒரு ஜென்மங்கள் எண்டு. சாபப்பட்ட பூமியில் வாழ்ந்து துலைக்க வேண்டியதுதான்.
கொஞ்ச நேரத்தில்..... இப்படியெல்லாம்
நடக்குமா? மாதத்துக்குத்தான், வட்டி
கொடுப்பதை கேள்விப்பட்டிருக்கின்றேன்
மணித்தியாலத்துக்குமா!?
அங்கு நீதீ தேவதையே இல்லை
நியாயமாய் எப்படி வரும்?
எல்லாம் ஏமாற்றுத்தான்.
உங்கள் வலைத் தளம் திருத்தத்தால்
மிளிர்கிறது நன்றி.
இருந்தும் ஒரு அன்பு வேண்டுகோள்
தலையங்கங்கள்{கடைசியத் தவிர}
ஓன்றோடு ஒன்று பின்னிக் கிடப்பது
மனதுக்கு வருத்தமாய் உள்ளது
{பாவம் எழுத்தாவது சுதந்திரமாய்
முகம் காட்டட்டும்}அப்பதான் அதன்
அழகை இரசிக்க முடியும்.
இஸ்லாம் இவ்வாறான பிரச்சினைகளைலிருந்து பதுகாக்க வட்டியை தடை செய்துள்ளது. அதேவேளை கடன் கொடுப்பதை ஊக்குவித்துள்ளது. நேரடியாக கடன் தொடர்பான நடைமுறைகளை அல் குர்ஆன் மூலம் தெளிவுபடுத்தியுள்ளது.
இஸ்லாத்தின் கடன் தொடர்பான விதிகள் ஆழமானவை
இந்த வட்டி மீது கட்டப்பட்டதால்தான் அமெரிக்க பொருளாதார கோட்டை சரிந்து விழுந்தது.
கந்து வட்டி மீட்டர் வட்டி போல இதுக்கு என்ன பேரோ?
உங்கள் புதிய முயற்சி குறித்து கலாவின் கருத்தை ஆமோதிக்கிறேன்...!
"ஒரு இலட்சம் ரூபாவுக்கு ஒரு மணித்தியாலம் இரண்டாயிரம் ரூபாய் என்று சொன்னார்".
இவற்றைத்தான் பகல் கொள்ளை என்பதா.
ஈழத்திலும் உள்ளதா இந்த கொடுமை
ஆம் சந்துரு
நீங்கள் சொல்வது சரிதான் கஷட்டப்படுரவங்க கஷட்டப்படுகையில் இம்மாதிரி மக்களை சுரண்டி உழைப்போரும் இருக்கவே செய்கின்றனர்.
வட்டிக்கு விடுவதை வங்கிகள் செய்வது மட்டுமே போதுமானது
தனி மனிதர் பல்வேறு விதமான வட்டிகளில் மாட்டி அவதி உறுவதைக் கண்டு வருந்தி இருக்கிறேன்
உங்களை ஒரு தொடருக்கு அழைத்து இருக்கிறேன் நண்பரே
பிடித்த பத்தும் பிடிக்காத பத்தும்
தொடருங்கள்
வாழ்த்துக்கள்
//இதனாம் ஏழைகள் உழைக்கின்ற பணத்தினை வட்டிக்காகவே செலவு செய்கின்றனர்.
//
ம்ம்ம்ம்ம் என்ன செய்ய
ஒரு லட்சம் ரூபாவிற்கு ஒரு மணித்தியாலத்திற்கு இரண்டாயிரம் ரூபாயா சந்ரு!!! என்ன கொடுமை இது? ஷ.... இவர்கள் எல்லாம் எப்பவுமே திருந்த மாட்டார்கள்.
நானும் பாத்திருக்கிறேன் வட்டிக்கு பணம் வசூலிப்பவர்கள் எல்லாம் கோடீஸ்வரர்களாகவும் 2, 3 வீடு வளவு வைத்திருப்பவர்களாகவும் இருப்பார்கள். ஆனால் அவர்களை இறைவன் நல்ல முறையில் தண்டிப்பான்.
விலைவாசி
உயர்வுக்கு இந்த
வட்டிவிகிதமும்
ஓர் காரணமே..
திருந்துறதா????
எந்தக் காலத்திலும் இல்ல!!!
//Mrs.Menagasathia கூறியது...
அய்யோ இந்த வட்டிக்கு வாங்குவது ரொம்ப கொடுமைடா சாமி.இதெல்லாம் நானும் அனுபவித்திருக்கேன்.இப்போ நினைத்தாலும் பயமா இருக்கும்.//
உங்களுக்கும் அனுபவம் இருக்கிறதா?
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்
//கனககோபி கூறியது...
வட்டிக்குப் பணம்... ம்...
சொல்லிச் சொல்லி அலுத்துவிட்டேன் சந்ரு அண்ணா...
தமிழர்கள் திருந்தமாட்டார்கள்...
அவர்களின் வட்டி வீதங்களைக் கேட்டால் பில்கேட்ஸ் பின்னங்கால் பிடரியில அடிக்க ஓடுவார்...
என்னத்தச் சொல்ல நான்?//
நல்லது பில்கேட்சிடம் சொல்லிவிடாதிர்கள்.
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.
// ஹேமா கூறியது...
சந்ரு இப்பிடி அடிபட்டு,ஓடி ஒளிஞ்சு, நாடு நாடா அலைஞ்சே எங்கட சனங்கள் திருந்த மாட்டேன் என்குதுகள்.என் உப்புமடச் சந்தியிலயும் இப்படியான ஒரு ஏமாத்து வேலைப் பதிவு போட்டேனே.//
எங்கள் சனங்கள் திருந்துவதேன்றால் கஸ்ரம்தான். உங்கள் பதிவைப் பார்த்தேன்.
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.
//Atchu கூறியது...
வட்டிக்கு வாங்கி அட்டிகை பண்ணு
அட்டிகை வித்து வட்டியைக் குடு
இந்த பழமொழியை கேட்டவுடன் சிரிப்புதான் வருகிறது'
நாமெல்லாரும் இதைத்தானே செய்து கொண்டிருக்கிறோம்.//
நல்ல பழமொழிதான்.
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.
// Starjan ( ஸ்டார்ஜன் ) கூறியது...
இவங்கள் எல்லாம் திருந்தாத ஜென்மங்கள்//
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.
//பிரியமுடன்...வசந்த் கூறியது...
ம்ஹூம் திருந்தாத சென்மங்கள் சந்ரு...//
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.
//Starjan ( ஸ்டார்ஜன் ) கூறியது...
அப்புறம் டெம்ப்ளேட் லாம் புதுசா இருக்கு//
ம்ம்... மாற்றவேண்டும் போல் இருந்தது மாற்றிவிட்டேன்.
வருகைககும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.
//அக்பர் கூறியது...
தேவையான இடுகை.
கஷ்டப்படும் மக்களை நினைத்தால் பாவமாக இருக்கிறது.
அவரசத்துக்கு இதை விட்டால் வேறு வழி இல்லை.//
வருகைககும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.
//நிலாமதி கூறியது...
வாங்குபவர்கள் இருந்தால் கொடுபவர்களும் இருக்க தானே செய்கிறார்கள். என்று திருந்தும் இந்த சமுதாயம். நண்பா பல நாட்கலாக் உங்களுக்கு பதிவு க்கு கருத்து போட முடியாதிருந்தது, இன்றாவது கிடைத்ததில் சந்தோசம். முடிந்தால் தொடர்பு கொள்ளுங்கள். நட்புடன்.நிலாமதி//
திருந்துவார்கள் என்று சொல்லமுடியாது... உங்களுக்கு உடல்நிலை சரியில்லை என்று அறிந்து கொண்டேன்.
வருகைககும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.
//முகிலினி கூறியது...
சீ.. இப்படி வாங்கும் காசில் எப்படி தான் சாப்பிட மனம் வருதோ தெரியாது. இதுகள் எல்லாம் ஒரு ஜென்மங்கள் எண்டு. சாபப்பட்ட பூமியில் வாழ்ந்து துலைக்க வேண்டியதுதான்.//
வருகைககும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.
//Kala கூறியது...
கொஞ்ச நேரத்தில்..... இப்படியெல்லாம்
நடக்குமா? மாதத்துக்குத்தான், வட்டி
கொடுப்பதை கேள்விப்பட்டிருக்கின்றேன்
மணித்தியாலத்துக்குமா!?
அங்கு நீதீ தேவதையே இல்லை
நியாயமாய் எப்படி வரும்?
எல்லாம் ஏமாற்றுத்தான்.
உங்கள் வலைத் தளம் திருத்தத்தால்
மிளிர்கிறது நன்றி.
இருந்தும் ஒரு அன்பு வேண்டுகோள்
தலையங்கங்கள்{கடைசியத் தவிர}
ஓன்றோடு ஒன்று பின்னிக் கிடப்பது
மனதுக்கு வருத்தமாய் உள்ளது
{பாவம் எழுத்தாவது சுதந்திரமாய்
முகம் காட்டட்டும்}அப்பதான் அதன்
அழகை இரசிக்க முடியும்.//
எழுத்துக்களை மாற்றுவதிலே கொஞ்சம் சிக்கலாக இருக்கிறது மாற்ற முடியவில்லை மாற்ற முயற்சிக்கிறேன்
வருகைககும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.
//இர்ஷாத் கூறியது...
இஸ்லாம் இவ்வாறான பிரச்சினைகளைலிருந்து பதுகாக்க வட்டியை தடை செய்துள்ளது. அதேவேளை கடன் கொடுப்பதை ஊக்குவித்துள்ளது. நேரடியாக கடன் தொடர்பான நடைமுறைகளை அல் குர்ஆன் மூலம் தெளிவுபடுத்தியுள்ளது.
இஸ்லாத்தின் கடன் தொடர்பான விதிகள் ஆழமானவை
இந்த வட்டி மீது கட்டப்பட்டதால்தான் அமெரிக்க பொருளாதார கோட்டை சரிந்து விழுந்தது.//
வருகைககும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.
//ஸ்ரீராம். கூறியது...
கந்து வட்டி மீட்டர் வட்டி போல இதுக்கு என்ன பேரோ?
உங்கள் புதிய முயற்சி குறித்து கலாவின் கருத்தை ஆமோதிக்கிறேன்...!//
வருகைககும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.
//மாதேவி கூறியது...
"ஒரு இலட்சம் ரூபாவுக்கு ஒரு மணித்தியாலம் இரண்டாயிரம் ரூபாய் என்று சொன்னார்".
இவற்றைத்தான் பகல் கொள்ளை என்பதா.//
வருகைககும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.
//tamiluthayam கூறியது...
ஈழத்திலும் உள்ளதா இந்த கொடுமை//
நிறையவே இருக்கிறது.
வருகைககும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.
//தர்ஷன் கூறியது...
ஆம் சந்துரு
நீங்கள் சொல்வது சரிதான் கஷட்டப்படுரவங்க கஷட்டப்படுகையில் இம்மாதிரி மக்களை சுரண்டி உழைப்போரும் இருக்கவே செய்கின்றனர்.//
வருகைககும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.
//thenammailakshmanan கூறியது...
வட்டிக்கு விடுவதை வங்கிகள் செய்வது மட்டுமே போதுமானது
தனி மனிதர் பல்வேறு விதமான வட்டிகளில் மாட்டி அவதி உறுவதைக் கண்டு வருந்தி இருக்கிறேன்//
உண்மைதான்.
//thenammailakshmanan கூறியது...
உங்களை ஒரு தொடருக்கு அழைத்து இருக்கிறேன் நண்பரே
பிடித்த பத்தும் பிடிக்காத பத்தும்
தொடருங்கள்
வாழ்த்துக்கள்//
நான் இந்த தொடர் பதிவை முன்னர் இடுகையிட்டுவிட்டேன். உங்கள் அன்புக்கு நன்றிகள்.
வருகைககும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.
//ஆ.ஞானசேகரன் கூறியது...
//இதனாம் ஏழைகள் உழைக்கின்ற பணத்தினை வட்டிக்காகவே செலவு செய்கின்றனர்.
//
ம்ம்ம்ம்ம் என்ன செய்ய//
வருகைககும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.
//யாழினி கூறியது...
ஒரு லட்சம் ரூபாவிற்கு ஒரு மணித்தியாலத்திற்கு இரண்டாயிரம் ரூபாயா சந்ரு!!! என்ன கொடுமை இது? ஷ.... இவர்கள் எல்லாம் எப்பவுமே திருந்த மாட்டார்கள்.
நானும் பாத்திருக்கிறேன் வட்டிக்கு பணம் வசூலிப்பவர்கள் எல்லாம் கோடீஸ்வரர்களாகவும் 2, 3 வீடு வளவு வைத்திருப்பவர்களாகவும் இருப்பார்கள். ஆனால் அவர்களை இறைவன் நல்ல முறையில் தண்டிப்பான்.//
கடவுள் எங்களை பார்த்துக்கொண்டிருக்கிறார் என்பதை நினைத்தார்கள் என்றால் சரிதான்.
வருகைககும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.
//சந்தான சங்கர் கூறியது...
விலைவாசி
உயர்வுக்கு இந்த
வட்டிவிகிதமும்
ஓர் காரணமே..//
வருகைககும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.
//சுசி கூறியது...
திருந்துறதா????
எந்தக் காலத்திலும் இல்ல!!!//
வருகைககும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.
Post a Comment