சில நாட்களாக என்னுள்ளே சில இனம் புரியாத கற்பனைகளும், கவலைகளும். இன்று நடப்பவைகளை எல்லாம் யோசித்து பார்க்கும்போது என்னடா உலகம் என்று எண்ணத் தோன்றுகின்றது. எழுத நினைப்பவை ஏராளம். ஆனால் எழுத முடியவில்லை. என் சுதந்திரம்தான் பர்றிக்கப்பட்டதென்றால். என் கருத்துச் சுதந்திரத்தையும் பறிக்க நினைப்பதா? ஏன் இந்த நாட்டில், இந்த உலகில் ஏன் பிறந்தோம் என்றே எண்ணத் தோன்றியது.
பல விடயங்கள் பதிவிட இருந்தாலும் மனம் இடம் கொடுக்காதபடியால். இணையத்திலே ஒரு சுற்று சுற்றிவந்தபோது நான் தேடிக்கொண்டிருந்த விடயங்களை கண்டுகொள்ளமுடிந்தது. அளவற்ற சந்தோசமடைந்தேன் அவற்றை உங்களோடும் பகிர்ந்து கொள்கின்றேன்.
என்னை அறிவிப்புத் துறைக்கு வருவதகு தூண்டுகோலாக இருந்தவரும், என்றும் நான் நேசிக்கின்ற, மறைந்தும் மறையாது மக்கள் மனங்களிலே இன்றும் நிலைத்திருக்கின்ற இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன அறிவிப்பாளராக இருந்து அறிவிப்புத் துறைக்கே பெருமை சேர்த்த மறைந்த அறிவிப்பாளர் கே.எஸ். ராஜா பற்றிய பல்வேறுபட்ட தகவல்களை அறிந்து கொள்ளமுடிந்தது அவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்கின்றேன்.
ஒரு நல்ல ரசிகனே நல்ல அறிவிப்பாளனாக இருக்கமுடியும். நான் அறிவிப்பாளனாக இருந்தாலும் கூட நான் அறிவிப்பாளன் என்பதனை வெளிக்காட்ட விரும்புவதில்லை. நல்ல ரசிகன். நல்ல நிகழ்சிகளை படைக்கின்ற எந்த அறிவிப்பாளராக இருந்தாலும் அவர்களின் ரசிகனாகிவிடுவேன். அதனால் என்னை நிறையவே வளர்த்துக்கொள்ள முடிந்தது.
எனது சிறிய வயதுமுதல் வானொலியோடு கட்டிப்போட்டவர் கே.எஸ் .ராஜா அவர்கள். நான் பிறந்து வளர்ந்தது பின்தங்கிய ஒரு பிரதேசம் மின்சார வசதிகூட இல்லை (அங்கே இன்றும் மின்சார வசதி இல்லை நான் இப்போ வேறு இடத்தில் இருக்கிறேன் ) உலர் மின்கலம் மூலம் இயங்கும் வானொலியில்தான் நிகழ்சிகளைக் கேட்பதுண்டு.
சிறு வயதிலே நான் எப்போது வானொலியோடுதான் இருப்பேன் படிக்கும்போதும் பக்கத்திலே வானொலிப்பெட்டி இருக்கும் ( இன்றும் அப்படித்தான்) அன்று கே.எஸ் ராஜா அவர்களால் உமாவின் வினோதவேளை நிகழ்சியினை தொகுத்து வழங்கிய விதமும் அவரின் குரலும் என்றும் என்னுள்ளே ஒலித்துக்கொண்டிருக்கின்றன.
நான் மிகவும் சிறு வயதாக இருக்கும்போது அவர் அறிவிப்பாளராக இருந்ததனால் என்னால் அவரது நிகழ்சிகளை முற்று முழுதாக கேட்க முடியவில்லையே என்று கவலைப் படுவதுண்டு. இன்று அவர் எங்களோடு இருந்திருந்தால் நான் இன்னும் எவ்வளவோ வளந்திருப்பேன்.
அவரிடம் நாங்கள் நிறையவே படித்திருக்கலாம். அவர் நிகழ்சிகளை செய்கின்ற விதம், அவரது உச்சாகமான அறிவிப்பு, விளம்பரங்கள் வாசிக்கும் விதம் என்று எல்லாவற்றிலுமே அவருக்கென்று ஒரு தனி இடம் இருக்கின்றது.
இன்று தமிழை வளர்க்கின்றோம் என்று தமிழ் மொழியை கொலை செய்பவர்கள் அவரின் அறிவிப்புக்களை கேட்கவேண்டும்.
அவரை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். நான் இன்று பல விடயங்களை இணையத்திலே அறிந்துகொள்ள முடிந்தது கே.எஸ்.ராஜா அவர்களைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகள் அவரால் செய்யப்பட்ட உமாவின் வினோதவேளை போட்டி நிகழ்சிகள், விளம்பரங்கள், அவரால் செய்யப்பட்ட இசை நிகழ்சிகள் என்று எல்லாமே ஒலி வடிவத்திலே இருக்கின்றது. அவற்ற்றை நீங்களும் கேட்டு மகிழலாம். தரவிறக்கிக் கொள்ளலாம்.
இன்று அந்த ஒலிவடிவங்களைக் கேட்கின்றபோது நேரடியாகவே கே.எஸ்.ராஜாவே என் முன்னால் நின்று பேசுவது போன்று ஒரு உணர்வும் சந்தோசமாகவும் இருந்தது.
1. கே.எஸ். ராஜாவால் செய்யப்பட்ட நிகழ்சிகள்
2.கே.எஸ்.ராஜாவின் விளம்பரங்கள்.
3.யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கே.ஜே. ஜேசுதாஸின் இசை நிகழ்சியினை கே.எஸ். ராஜா தமிழிலும் ஆங்கிலத்திலும் தொகுத்து வழங்கிய உச்சாகமான அறிவிப்பு நிறைந்த நிகழ்சியின் ஒலி வடிவம்
4.கே.எஸ்.ராஜா அவர்களுக்கு ராஜேஸ்வரி சண்முகம் அவர்கள் வழங்கிய அஞ்சலி
இன்னும் பல்வேறுபட்ட விடயங்களையும் அறிந்துகொண்டேன் . கே.எஸ். ராஜாவைப் பற்றி நீங்களும் அறிந்து கொள்வதோடு அவரது குரல்களை மீண்டும் கேட்டு மகிழ இங்கே செல்லுங்கள்.
நன்றி: யாழ் சுதாகர்
25 comments: on "வீட்டுக்கு வீடு வானொலிப் பெட்டிக்கருகில்"
கே.எஸ்.ராஜா தமிழ் ஒலிபரப்புக்கு ஒரு வரப்பிரசாதம்தான்.
உங்கள் முயற்சிக்கு இப்பொழுது நல்ல நிலையில் இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்
நான் சின்னப் பையன் என்பதால் முன்னைநாள் 'திறமையான' அறிவிப்பாளர்களை கேட்கக் கூடிய பாக்கியம் இல்லாமல் போய்விட்டது...
இன்று திறமையான அறிவிப்பாளர்களை விட பிரபலங்கள் தான் அதிகம்....
பகிர்வுக்கு நன்றி அண்ணா...
சரி ஒரு மொக்கை போடவே?
//அதனால் என்னை நிறையவே வளர்த்துக்கொள்ள முடிந்தது. //
எங்கயய்யா வளர்ந்தீங்க?
அப்பிடியே சின்னப்பையனா தானே இருக்கிறீங்க? (உயரத்தைச் சொன்னன்... ஹி ஹி...)
நல்லதொரு தகவல்.
தாங்கள் எந்த வானொலி என் அறிய தரலாமா?
(நமக்கு பிரபா, லோஷன் மற்றும் சர்வதேச வானொலியில் அறிமுகம் உண்டு.)
அதுவுமில்லாமல் நாங்கள் தமிழ் நாடூ என்பதாலும் உள்மாவட்டங்களான ஈரோடு
பகுதியாதலால் எப்போதேனும் வானிலை மாறுபாட்டால் எப்.எம் வானொலிகளை
கேட்பதுண்டு. அவ்வாறு கேட்கும்போது தங்கள் குரலும் கிடைக்குமா என தேட உதவியாக இருக்கும்.
//ராஜ நடராஜன் கூறியது...
கே.எஸ்.ராஜா தமிழ் ஒலிபரப்புக்கு ஒரு வரப்பிரசாதம்தான்.//
உண்மைதான் தமிழ் ஒளிபரப்புக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம் என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் அவரை இழந்துவிட்டோம் என்பதுதான் கவலைக்குரிய விடயம்.
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.
//கவிக்கிழவன் கூறியது...
உங்கள் முயற்சிக்கு இப்பொழுது நல்ல நிலையில் இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்//
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.
நானும் சின்னப் பையன் என்பதால் முன்னைநாள் 'திறமையான' அறிவிப்பாளர்களை கேட்கக் கூடிய பாக்கியம் இல்லாமல் போய்விட்டது..
பகிர்வுக்கு நன்றி அண்ணா...
வரவர இவன் கோபியின் அட்டகாசம் தாங்க முடியல. பேசாமல் A/L றிசல்ட்டை இப்பவே அறிவிக்கச்சொல்லி உண்ணாவிரதம் இருப்பமே?
//Subankan கூறியது...
வரவர இவன் கோபியின் அட்டகாசம் தாங்க முடியல. பேசாமல் A/L றிசல்ட்டை இப்பவே அறிவிக்கச்சொல்லி உண்ணாவிரதம் இருப்பமே? //
நான் என்னய்யா செய்தன் உங்களுக்கு?
ஏனய்யா தூக்குத்தண்டனையைக் காட்டி பயமுறுத்துறியள்?
(நீங்கள் உண்ணாவிரதம் இருந்தாலும் நான் சாப்பாடு வாங்கித்தர மாட்டன்.)
//கனககோபி சொன்னது…
நான் சின்னப் பையன் என்பதால் முன்னைநாள் 'திறமையான' அறிவிப்பாளர்களை கேட்கக் கூடிய பாக்கியம் இல்லாமல் போய்விட்டது...
இன்று திறமையான அறிவிப்பாளர்களை விட பிரபலங்கள் தான் அதிகம்....
பகிர்வுக்கு நன்றி அண்ணா...//
இன்று திறமை மூலம் புகழ் பெற்றவர்கள் பலர் இருக்கின்றனர். ஆனால் தமிழை கொலை செய்தே புகழ் பெற்றோரும் இருக்கின்றனர்.
//சரி ஒரு மொக்கை போடவே?//
அது வேறயா?
////அதனால் என்னை நிறையவே வளர்த்துக்கொள்ள முடிந்தது. //
எங்கயய்யா வளர்ந்தீங்க?
அப்பிடியே சின்னப்பையனா தானே இருக்கிறீங்க? (உயரத்தைச் சொன்னன்... ஹி ஹி...)///
அடப்பாவி என் வயசுக்கேத்த வளர்ச்சி போதாதா? உங்களைப்போல் வளர்ந்தால் எங்களால் தாங்க முடியாதுடா சாமி...
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.
//கனககோபி கூறியது...
நான் என்னய்யா செய்தன் உங்களுக்கு?
ஏனய்யா தூக்குத்தண்டனையைக் காட்டி பயமுறுத்துறியள்?
//
பின்னூட்டத்தொல்லை கோபியால் கூடிப்போச்சு என்றதற்கு இதைவிட வேறு சாட்சி வேண்டுமா? இதுக்குத் தூக்கே பரவாயில்லை
//(நீங்கள் உண்ணாவிரதம் இருந்தாலும் நான் சாப்பாடு வாங்கித்தர மாட்டன்.)//
அது உண்ணாவிரதமைய்யா, யூஸ் தந்தாப் போதும்.
//வாய்ப்பாடி குமார் சொன்னது…
நல்லதொரு தகவல்.
தாங்கள் எந்த வானொலி என் அறிய தரலாமா?
(நமக்கு பிரபா, லோஷன் மற்றும் சர்வதேச வானொலியில் அறிமுகம் உண்டு.)
அதுவுமில்லாமல் நாங்கள் தமிழ் நாடூ என்பதாலும் உள்மாவட்டங்களான ஈரோடு
பகுதியாதலால் எப்போதேனும் வானிலை மாறுபாட்டால் எப்.எம் வானொலிகளை
கேட்பதுண்டு. அவ்வாறு கேட்கும்போது தங்கள் குரலும் கிடைக்குமா என தேட உதவியாக இருக்கும்.//
நான் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன அறிவிப்பாளர்.
நானும் பிரபாவும் ஒன்றாகவே கடமையாற்றுகின்றோம்.
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.
//அது உண்ணாவிரதமைய்யா, யூஸ் தந்தாப் போதும். //
உண்ணாவிரதம் எண்டா என்னெண்டு தெரியாதே?
அய்யோ அய்யோ...
பக்கத்தில மக்டொனாட்ஸ் இருந்தா அங்க வாங்கித் தந்திருப்பன்...
இல்லாத படியா சிந்து கபேயில வாங்கித் தாறன்....
//அடப்பாவி என் வயசுக்கேத்த வளர்ச்சி போதாதா?//
உதில சந்தேகம் வேறயே?
//Subankan கூறியது...
நானும் சின்னப் பையன் என்பதால் முன்னைநாள் 'திறமையான' அறிவிப்பாளர்களை கேட்கக் கூடிய பாக்கியம் இல்லாமல் போய்விட்டது..
பகிர்வுக்கு நன்றி அண்ணா...
வரவர இவன் கோபியின் அட்டகாசம் தாங்க முடியல. பேசாமல் A/L றிசல்ட்டை இப்பவே அறிவிக்கச்சொல்லி உண்ணாவிரதம் இருப்பமே?//
கோபி A/L என்று சொல்லி ஏன் நீங்கள் அவனின்ர வயசக் குறைத்துக்காட்டப் பார்க்கிறிங்க
உண்ணாவிரதம் இருக்கலாம். ஆனால் காலையில் இருந்து மதியம் வரைக்கும்தான் உன்னாவிரதமிருப்பன்.
அட நானும் K.S. ராஜா ரசிகன்தான்
அவரது வேடிக்கை வினோத போட்டி நிகழிச்சியை சிறு வயதில் கேட்ட ஞாபகம் உண்டு
நடிகர் தாமு அவரைப் போலவே மிமிக்ரி செய்வார்
//கனககோபி சொன்னது…
//அது உண்ணாவிரதமைய்யா, யூஸ் தந்தாப் போதும். //
உண்ணாவிரதம் எண்டா என்னெண்டு தெரியாதே?//
என்னய்யா நீங்க...... உன்னாவிரதமென்றால் என்ன என்று கலைஞரிடம் கேளுங்கள் சொல்லித்தருவார்
//தர்ஷன் கூறியது...
அட நானும் K.S. ராஜா ரசிகன்தான்
அவரது வேடிக்கை வினோத போட்டி நிகழிச்சியை சிறு வயதில் கேட்ட ஞாபகம் உண்டு
நடிகர் தாமு அவரைப் போலவே மிமிக்ரி செய்வார்//
அப்போ நீங்கள் நம்ம பக்கமா? நானும் அவரைப்போன்று அறிவிப்பு செய்து பார்ப்பதுண்டு...
அவரின் குரல்களை குறிப்பிட்ட தளத்துக்கு சென்று கேளுங்கள் நண்பா.
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.
கே.எஸ்.ராஜா தமிழ் ஒலிபரப்புக்கு ஒரு வரப்பிரசாதம்
//கோபி A/L என்று சொல்லி ஏன் நீங்கள் அவனின்ர வயசக் குறைத்துக்காட்டப் பார்க்கிறிங்க
உண்ணாவிரதம் இருக்கலாம். ஆனால் காலையில் இருந்து மதியம் வரைக்கும்தான் உன்னாவிரதமிருப்பன் //
ஏனய்யா இந்தக் கொலைவெறி?
ஏன் இந்த கொலைவெறி?
ஒருத்தன் உண்மையச் சொன்னாலும் பொறாமை..........
அருமையான தகவல்கள்.
//நான் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன அறிவிப்பாளர்.
நானும் பிரபாவும் ஒன்றாகவே கடமையாற்றுகின்றோம். //
யப்பாடி சொல்லவேயில்லை..
பெரிய ஆளுகதான்பா நீங்க...
தொடர்ந்து சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள் சந்ரு சார்.......
சந்ரு,ராஜாவின் குரல் யாழ் சுதாகரின் பக்கத்தில் கேட்டேன்.
எனக்கும் "வீட்டுக்கு வீடு வானொலிப்பெட்டியருகில்..."சின்னதா ஞாபகமிருக்கு.தொப்பி போட்டபடி போட்டோவில பாத்திருக்கிறன்.
அவரின் இழப்பும் அநியாயமானதே !
நல்ல பகிர்வு சந்ரு
நான் சிறு வயதில் இலங்கை வானெலியின் நிகழ்வுகளைக் கேப்பேன், அந்த தமிழ் நடை எனக்குப் பிடிக்கும். இப்ப நான் எந்த நிகழ்வும் கேப்பதில்லை. நன்றி.
திரு K.S. ராஜா மறைந்து விட்டார் என்ற தகவல் வருத்தத்தை அளித்தது. என்றும் அவர் குரல் எங்கள் மனங்களில் ஒலித்துக் கொண்டே இருக்கும். ஏற்கெனவே ஒருமுறை நான் உங்கள் பதிவு ஒன்றில் இவர் பற்றி பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.
Post a Comment