இன்று இலங்கையைப் பொறுத்தவரை வலைப்பதிவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில் வலைப்பதிவர்கள் தொடர்பாக ஊடகங்களின் பங்களிப்பும் அதிகரித்துவருகின்றது. அத்தோடு பலரும் இன்று வலைப்பதிவர்கள் பக்கம் பார்வையினைச் செலுத்தத் தொடங்கியுள்ளனர்.
இலங்கையின் முதலாவது வலைப்பதிவர் சந்திப்பின் பின்னரே வலைப்பதிவர்கள் பக்கம் எல்லோரது பார்வையும் திரும்பியது என்று சொல்லலாம். முதலாவது வலைப்பதிவர் சந்திப்பின்பின் பல நல்ல விடயங்கள் நடந்தேறியிருக்கின்றன. சந்திப்பின் பின்னர் எதனைச் சாதித்தனர் என்று ஒரு சிலர் கேட்பது இலங்கைப் பதிவர்களின் வளர்ச்சியினைத் தாங்கிக்கொள்ள முடியாதவர்களின் பொறாமையின் உச்சகட்ட வெளிப்பாடுதான்.
இலங்கையின் வலைப்பதிவர்களைப் பொறுத்தவரை பல துறை சார்ந்தவர்கள் இருக்கின்றனர். அவர்கள நல்ல பல விடயங்களைப் பதிவிடுகின்றனர். அந்தப் பதிவுகள் இணைய வசதியினைக் கொண்ட சிலரையே சென்றடைகின்றன. அப்பதிவுகள் எல்லோரையும் சென்றடைய வேண்டுமானால் ஊடகங்களின் பங்கு அவசியமாகின்றது.
இலங்கையைப் பொறுத்தவரை இலத்திரனியல், அச்சு ஊடகங்களைச் சேர்ந்த பலர் வலைப்பதிவர்களாக இருக்கின்றனர். அவர்களுக்கிடையே ஒரு நட்பு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
அச்சு ஊடகங்களைப் போறுத்தவரை இன்று பதிவர்கள் பக்கம் தமது பார்வையினை அதிகரித்து இருக்கின்றனர்.
இன்று இலங்கையிலே இருக்கின்ற சில சஞ்சிகைகளும், பத்திரிக்கைகளும் பதிவர்களின் பதிவுகளை, ஆக்கங்களை பிரசுரிப்பதோடு பதிவர்களையும் அவர்களது வலைப்பதிவுகளைப் பற்றியும் அறிமுகம் செய்து வருகின்றன. இதன் மூலம் பதிவர்களுக்கு இன்னும் பல விடயங்களை பதிவிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகின்றது. பதிவர்கள் உச்சாகப்படுத்தப்படுகின்றனர்.
குறிப்பாக இருக்கிறம் சஞ்சிகை அவர்களது ஒவ்வொரு சந்சிகயிலும் பதிவர்களின் பதிவுகளை, ஆக்கங்களை முன்னுரிமை கொடுத்து பிரசுரித்து வருவதோடு ஊடகந்கலுக்கும் பதிவர்களுக்குமிடையே மேலும் ஒரு நெருக்கமான உறவினை ஏற்படுத்தும் வண்ணம் அச்சு, இலத்திரனியல் ஊடகங்களுக்கும் பதிவர்களுக்குமிடையே ஒரு சந்திப்பினை எதிர்வரும் திங்கட்கிழமை ஏற்பாடு செய்திருக்கின்றனர். இது வலைப்பதிவர்களுக்கு நல்ல பயனுள்ள விடயமாக அமைய இருக்கின்றது. (இதனைகூட சிலர் கிண்டல் செய்திருப்பது அவர்களின் அறியாமைதான்)
அத்தோடு தினக்குரல் பத்திரிகை பதிவர்களுக்கென ஞாயிறு தினக்குரலிலே ஒரு பக்கம் ஒதுக்கியிருப்பதோடு பதிவர்களது பதிவுகளையும், பதிவர்களைப் பற்றியும் அறிமுகம் செய்து வருகின்றது. மெட்ரோ நியூஸ் பத்திரிகைகூட பதிவர்களுக்கு முன்னுரிமை கொடுத்துவருகின்றன.
எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறும் சந்திப்புக்கு பின்னர் ஏனைய அச்சு ஊடகங்களும் பதிவர்களது பதிவுகளுக்கு, பதிவுகளுக்கு, ஆற்றல்களுக்கு இடங்கொடுக்கும் என்ற நம்பிக்கை இருக்கின்றது.
இலத்திரனியல் ஊடகங்களைப் பொறுத்தவரை இலங்கையிலே இருக்கின்ற அரச, தனியார் ஊடகங்களைச் சேர்ந்த பல ஒளி, ஒலிபரப்பாளர்கள் வலைப்பதிவர்களாக இருக்கின்றனர். இவர்களுக்கிடையே ஒரு நட்புறவுகூட இருக்கின்றன. வலைப்பதிவர்கள் தொடர்பில் இவர்களும் தமது ஊடகங்கள் மூலமாக தங்களால் முடிந்தவற்றைச் செய்துகொண்டு இருக்கின்றனர்.
இன்று இலங்கையிலே இருக்கின்ற சில இலத்திரனியல் ஊடகங்கள் பல தவறுகளைச் செய்து கொண்டிருக்கின்றன. தமிழ் மொழியை வளர்ப்பதாகச் சொல்லிக்கொண்டு தமிழ் மொழியினை கொலை செய்துகொண்டு இருக்கின்றன. இதனை பலரும் உரிய நிறுவனங்களுக்கு எடுத்துக்கூறியும் அவர்கள் தாங்கள் செய்வதுதான் சரி எனும் அளவுக்கு அவர்களின் அட்டகாசம் அதிகரித்துக்கொண்டு செல்கின்றன.
அச்சு ஊடகங்களும்கூட அவ்வப்போது இதனைச் சுட்டிக்காட்டியபோதும் குறிப்பிட்ட ஊடகங்கள் தவறுகளை திருத்துவதாக இல்லை. சில வலைப்பதிவர்கள் இவற்றினைச் சுட்டிக்காட்ட ஆரம்பித்தனர். நானும் பல இடுகைகள் மூலம் இவர்களது பிழைகளைச் சுட்டிக்காட்டினேன். காரணம் குறிப்பிட்ட ஊடகங்கனைச் சேர்ந்தவர்கள் வலைப்பதிவர்களாக இருக்கின்றனர் அவர்களாலாவது குறிப்பிட்ட ஊடகங்கள் விடுகின்ற பிழைகள் கவனத்தில் கொள்ளப்பட்டு திருத்தப்படலாம் என்ற எண்ணமே.
எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை அந்த ஊடகங்கள் தாங்கள் செய்வதே சரி என்று தமது வேலையினைச் செய்துகொண்டிருக்கின்றது. இலங்கையினைப் பொறுத்தவரை மிரட்டல்களுக்குக் குறைவில்லை. அவ்வப்போது வலைப்பதிவர்களுக்கு மிரட்டல்கள் வருவதுண்டு (எனக்கு பல தடவை) அண்மையிலே ஒரு அனானியால் எனக்கு ஒரு மிரட்டல் வந்திருந்தது ஒரு குறிப்பிட்ட இலத்திரனியல் ஊடகத்தைப் பற்றி எழுதவேண்டாம் எழுதினால் நடப்பது வேறு என்று மிரட்டப்பட்டிருக்கின்றது. இந்த மிரட்டல் எனக்கு மட்டும்தான் என்று நினைத்தேன் ஆனால் இலத்திரனியல் ஊடகங்களைப் பற்றி பதிவிட்ட அனைவருக்கும் இந்த மிரட்டல் கிடைத்திருப்பதாக பின்னர்தான் அறிந்தேன்.
பதிவர்களால் சுட்டிக்காட்டப்படுகின்ற குறிப்பிட்ட ஊடகங்கள் மீதான குற்றச்சாட்டுக்களை குறிப்பிட்ட குற்றம் சுமத்தப்பட்ட ஊடகங்கள் தங்கள் மீது தவறு இல்லை என்றால் தங்கள் கருத்துக்களை சொல்லலாமல்லவா? அல்லது தங்கள்மீது தவறு என்றால் அதனைத் திருத்திக்கொள்ளலாமல்லவா?
தவறுகள் சுட்டிக்காட்டப்படும்போது தமது தவறுகளை ஏற்றுக்கொள்ளும் ஒளி, ஒலிபரப்பாளர்கள் ஒரு, சிலரே இருப்பதாக தென்படுகின்றது. ஒரு சிலரின் குற்றச் சாட்டு ஊடகங்கள் பற்றி எழுதும் பதிவர்கள் பக்கம் சார்ந்து எழுதுவதாகவும் ஒரு நிறுவனத்தை சாடுவதாகவும், ஒரு நிறுவனம் சார்ந்து இருப்பதாகவும். இந்த குற்றச்சாட்டு தவறானது. அத்தனை இலத்திரனியல் ஊடகங்களும் விடுகின்ற தவறுகளும் சுட்டிக்காட்டப்படுகின்றன.
இங்கே லோஷன் போன்றோர் தங்களது நிறுவனங்களது குறைகளைச் சுட்டிக்காட்டியபோது சரியான விமர்சனமாக இருந்தால் ஏற்றுக்கொண்டு திருத்திக்கொள்கின்றனர். அல்லது தமது பக்க நியாயங்களைச் சொல்கின்றனர். இதனை பக்கம் சார்ந்து இருக்கின்றோம் என்று சொல்வது தவறானது.
ஏனைய ஊடகங்கள் சார்ந்தோர் தமது பக்க நியாயங்களைச் சொல்லலாம். தாம் விடுகின்ற தவறுகளை திருத்திக்கொள்ளாது அல்லது தமிழ் மொழியினை கொலை செய்கின்ற ஊடகங்கள் விடுகின்ற தவறுகளை வலைப்பதிவர்கள் அவ்வப்போது சுட்டிக்காட்டுவதில் தவறில்லை.
இலங்கையின் ஊடகங்களுக்கும் வலைப்பதிவர்களுக்குமிடையில் நல்ல உறவு இருக்கவேண்டும்.
எனது இப்பதிவினையும் பார்க்கலாம்.
18 comments: on "இலங்கையின் தமிழ் ஊடகங்களும் வலைப்பதிவர்களும்."
அருமையான பதிவு சந்ரு. நன்றாக அலசியிருக்கிறீர்கள்.
//இதனை பக்கம் சார்ந்து இருக்கின்றோம் என்று சொல்வது தவறானது//
வெற்றியில தொழில் கிடைக்கும் என்டுதானே அப்ப்டி செய்யிறீர்? நீர் மட்டுமல்ல மத்தவங்களும்..
மட்டக்களப்பில் நடப்பதென்ன...
வியாழன், 17 செப்டம்பர், 2009 இல் வந்தது. உண்மையை கண்டறிவதாக கூறினீர்கள். இன்னும் இல்லை. Late ஆகுமா? அதன்பின் எவ்வளவோ பதிவுகளையும் இட்டுள்ளீர்கள். இல்லை நான் எழுதியது சரி என்று ஏற்றுக்கொள்கிறீர்களா? தெளிவாக சொல்லவும்.. அப்போதுதான் மற்றவர்களுக்கும் எது உண்மை, யார் பொய் சொல்லும் பதிவர் எல்லாம் தெரியவரும்.. உங்கள் கருத்து பிழையாயின் நீங்களும் என் கருத்து பிழையாயின் நானும் பகிரங்கமாக தனிப்பதிவாக மன்னிப்புக்கோரவேண்டும். எங்களுக்கு கருத்துச் சுதந்திரம் இருக்கலாம். அக் கருத்துக்கள் உண்மையானதாக இருக்க வேண்டும். அப்படித்தானே..
அங்கு வலைப் பதிவர்களுக்கு வாராவாரம் பக்கம் ஒதுக்குகிற மாதிரி இங்கு எந்த பத்திரிக்கையும் செய்வதில்லை என்று நினைக்கிறேன். அல்லது நான்தான் பார்க்கவில்லையோ என்னமோ? ஒன்றிரெண்டு குமுதம் விகடன் இதழ்களில் அபூர்வமாக ஓரிரெண்டு குறிப்புகள் வந்ததாக ஞாபகம்.
//யோ வாய்ஸ் (யோகா) கூறியது...
அருமையான பதிவு சந்ரு. நன்றாக அலசியிருக்கிறீர்கள்.//
வருகைக்கு நன்றிகள்
//எழில் கூறியது...
//இதனை பக்கம் சார்ந்து இருக்கின்றோம் என்று சொல்வது தவறானது//
வெற்றியில தொழில் கிடைக்கும் என்டுதானே அப்ப்டி செய்யிறீர்? நீர் மட்டுமல்ல மத்தவங்களும்..//
முதலில் நீங்கள் உங்கள் சொந்தப் பெயரில் வந்து கருத்துக்களைச் சொல்லுங்கள்.
இன்று ஊடகங்கள் பற்றி எழுதப்படும்போது யார் தவறு செய்தாலும் சுட்டிக்காட்டப்படுகின்றது. வெற்றியில் இருக்கும் பிழைகளும் சுட்டிக்காட்டப்பட்டன. (லோஷனின் வலைப்பதிவிலேகூட) வெற்றியின் ஒரு சில அறிவிப்பாளர்களின் உச்சரிப்பு தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டன. அப்போது அதனை லோஷன் ஏற்றுக்கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனை ஏனைய ஊடகங்கள் செய்யவில்லை. எந்த ஊடகங்கள் தவறு செய்தாலும் சுட்டிக்காட்ட தயங்கமாட்டேன்.
நான் வெற்றியில் தொழில் கிடைக்கவேண்டும் எனும் நோக்கோடு நான் பதிவிடுவதில்லை எனக்கு அனைத்து ஊடகங்களிலுமே நெருங்கிய நண்பர்கள் இருக்கின்றனர் அவர்களோடு நேரடியாக நான் பிழைகளைச் சுட்டிக்காட்டி இருக்கின்றேன்.
நான் கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக அரச ஊடகத்திலே அறிவிப்பாளராக இருக்கின்றேன். எனக்கு தனியார் ஊடகமொன்றுக்கு தொழிலுக்குச் செல்லவேண்டிய அவசியமில்லை. ஆனால் நான் தவறுகளைச் சுட்டிக்காட்டுகின்ற ஊடகந்களிலே இருந்து எனக்கு பலமுறை அழைப்பு விடுக்கப்பட்டது தங்கள் நிறுவனத்தில் வந்து சேரும்படி. நான் தப்போது பணியாற்றும் ஊடகத்திலிருந்து வேறு ஊடகத்துக்கு செல்லவேண்டிய அவசியமுமில்லை.
தமிழ்மொழி தமிழ்மொழியாக இருக்கவேண்டும் என்று நினைப்பவன். தமிழ் மொழியினை யார் கொலை செய்தாலும் தட்டிக்கேட்க தயங்கமாட்டேன். தமிழ்மொழியினை வளப்பவர்களை பாராட்டாமலும் விடமாட்டேன்.
//என்ன கொடும சார் கூறியது...
மட்டக்களப்பில் நடப்பதென்ன...
வியாழன், 17 செப்டம்பர், 2009 இல் வந்தது. உண்மையை கண்டறிவதாக கூறினீர்கள். இன்னும் இல்லை. Late ஆகுமா? அதன்பின் எவ்வளவோ பதிவுகளையும் இட்டுள்ளீர்கள். இல்லை நான் எழுதியது சரி என்று ஏற்றுக்கொள்கிறீர்களா? தெளிவாக சொல்லவும்.. அப்போதுதான் மற்றவர்களுக்கும் எது உண்மை, யார் பொய் சொல்லும் பதிவர் எல்லாம் தெரியவரும்.. உங்கள் கருத்து பிழையாயின் நீங்களும் என் கருத்து பிழையாயின் நானும் பகிரங்கமாக தனிப்பதிவாக மன்னிப்புக்கோரவேண்டும். எங்களுக்கு கருத்துச் சுதந்திரம் இருக்கலாம். அக் கருத்துக்கள் உண்மையானதாக இருக்க வேண்டும். அப்படித்தானே..//
அனைவருக்கும் கருத்துச் சுதந்திரம் இருக்கின்றது. ஆனாலும் உண்மைத் தகவல்கள் வெளியிடப்படவேண்டும் என்று நினைப்பவன்.
மட்டக்களப்பில் நடப்பதென்ன எனும் எனது இடுகையிலே சொல்லப்பட்ட சம்பவங்கள் தொடர்பிலே உரிய அதிகாரிகளிடமிருந்து தகவல்கள் பெற்றிருக்கின்றேன்.
பதிவிடுவதிலே எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை ஆனாலும் மீண்டும் இந்த பிரச்சனைக்குரிய விடயங்களை பேசுகின்றபோது வருகின்ற பிரச்சனைகளைப் பற்றி சிந்திக்கவேண்டி இருக்கின்றது.
நான் மீண்டும் இது தொடர்பிலே பதிவிடுகின்றபோது. நீங்கள் மீண்டும் உங்கள்பக்க நியாயங்களை சொல்வதற்காக புலிகள் சார்ந்த அமைப்புக்கள் கல்லூரியிலே இருப்பதாக குற்றம் சுமத்துகின்றபோது. அதன்மூலம் வருகின்ற பிரச்சனைகளுக்கு முகம் கொடுப்பதும், பாதிக்கப்படுவதும் தமிழ் மாணவர்களாகவே இருக்கப்போகின்றனர். இக்காலகட்டத்திலே இன்னும் இந்த நிலையினை நான் ஆராய முற்பட்டால் கல்லூரியிலே புலிகள் சார்ந்த அமைப்பு இருக்கின்றது என்ற குற்றச்சாட்டு வரும்போது. அது பொய்யாக இருந்தாலும் நிட்சயமாக தமிழ் மாணவர்கள், கைது செய்யப்படுவதும், விசாரணைக்குட்படுத்தப்படுவதும். இடம்பெறும் இதன் மூலம் தமிழ் மாணவர்களே பாதிக்கப்படுவர்.
தகவல்கள் திரிவுபடுத்தப்படுகின்றன என்பதும், சிறிய பிரட்சனைகள் பெரிது படுத்தப்பட்டன என்பது, கல்லூரியிலே புலிகள் சார்ந்த அமைப்பு இல்லை என்பதுமே உண்மை.
பதிவிட்டு பிரட்சனைகளை இன்னும் அதிகரிக்க விரும்பாததால்தான் நான் பதிவிடவில்லை இருந்தும் நீங்கள் கேட்டிருக்கிறுர்கள் விரைவிலே உண்மை நிலை பதிவாக வரும் அப்போது யார் பொய்சொல்லும் பதிவர், யார் உண்மைப் பதிவர் என்பது தெரியவரும்.
//ஸ்ரீராம். கூறியது...
அங்கு வலைப் பதிவர்களுக்கு வாராவாரம் பக்கம் ஒதுக்குகிற மாதிரி இங்கு எந்த பத்திரிக்கையும் செய்வதில்லை என்று நினைக்கிறேன். அல்லது நான்தான் பார்க்கவில்லையோ என்னமோ? ஒன்றிரெண்டு குமுதம் விகடன் இதழ்களில் அபூர்வமாக ஓரிரெண்டு குறிப்புகள் வந்ததாக ஞாபகம்.//
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.
நீங்கள் ஏன் மரத்தை பற்றி எழுதச்சொன்னால் மாட்டை கட்டி அதை பற்றி எழுதுகிறீர்கள்? தமிழ் மீது காதல் கொண்ட உங்களால் தமிழில் எழுதப்பட்ட பதிவை வாசித்து அதன் கருப்பொருள் என்ன என்று விழங்க முடியவில்லையா?
என்னுடைய பதிவு மட்டக்களப்பு கல்வியியல் கல்லூரியில் இன துவேஷக்காரர்களால் (அவர்கள் எந்த அமைப்பை சார்ந்தவர்களாகவும் இருக்கலாம்) முஸ்லிம் மாணவிகளுக்கு பர்தா அணிவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது என்பதே.
முஸ்லிம் மாணவிகளுக்கு பர்தா அணிவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது என்பது உண்மையா இல்லையா? ஆம் அல்லது இல்லை என்று பதில் சொல்ல வேண்டும்.
//என்ன கொடும சார் கூறியது...
நீங்கள் ஏன் மரத்தை பற்றி எழுதச்சொன்னால் மாட்டை கட்டி அதை பற்றி எழுதுகிறீர்கள்? தமிழ் மீது காதல் கொண்ட உங்களால் தமிழில் எழுதப்பட்ட பதிவை வாசித்து அதன் கருப்பொருள் என்ன என்று விழங்க முடியவில்லையா?
என்னுடைய பதிவு மட்டக்களப்பு கல்வியியல் கல்லூரியில் இன துவேஷக்காரர்களால் (அவர்கள் எந்த அமைப்பை சார்ந்தவர்களாகவும் இருக்கலாம்) முஸ்லிம் மாணவிகளுக்கு பர்தா அணிவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது என்பதே.
முஸ்லிம் மாணவிகளுக்கு பர்தா அணிவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது என்பது உண்மையா இல்லையா? ஆம் அல்லது இல்லை என்று பதில் சொல்ல வேண்டும்.//
அனைத்துமே என்னால் விளங்கிக் கொள்ளப்பட்டன. என் பதிவிலே நான் உங்களை அதிகமாகச் சாடியிருந்த விடயம் என்ன என்று பாருங்கள். அப்போது புரியும் மரத்தை பற்றி எழுதச்சொன்னால் மாட்டை கட்டி அதை பற்றி யார் எழுதுகின்றார்கள் என்று. நீங்கள் புலிகள் சார்ந்த அமைப்பு கல்லூரியிலே இருக்கிறது என்று குற்றம் சாட்டி இருப்பதுதான் நான் அந்த இடுகையினை இடக்காரணமாக இருந்தது. நான் உங்களிடம் கேட்ட கேள்விகள் கல்லூரியிலே புலிகள் சார்ந்த அமைப்பு இருக்கின்றதா? உங்களால் நிருபிக்க முடியுமா? என்பதும் ஏன் அப்பாவி தமிழ் மாணவர்களை புலிச்சாயம் பூசி பலிக்கடாவாக்க நினைக்கிறீர்கள் என்பதுதான்.
ஒரு பிரச்சனை இடம்பெறும்போது போய்க் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது தவறானது. இன்றைய காலகட்டத்தில் புலிகள் சார்ந்த அமைப்பு கல்லூரியிலே இருப்பது சாத்தியமா? அப்படித்தான் இருந்தாலும் அவர்களால் முஸ்லிம் மாணவர்களை நேரடியாகக் கட்டுப்படுத்துவது சாத்தியமா?
சிறிய பிரச்சனைகள் இருக்கின்றன அவைகள் சிலரால் பெரிதாக்கப்பட்டன. புலிகள் சார்ந்த அமைப்புக்கள் இருப்பதாக குற்றம்சாட்டி தமிழ் மாணவர்களை பழிவாங்க சில விசமிகள் திட்டமிட்டு செயற்படுகின்றனர்.
தமிழ் முஸ்லிம் மாணவர்கள் பலர் நல்ல உறவோடு இருக்கின்றனர். சிலர் வேண்டுமென்று குழப்பத்தினை ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர்.
இந்தப் பிரச்சனை தொடர்பான விபரங்கள் விரைவில் பதிவாக வரும்.
எனது பதிவின் சுட்டி : http://shanthru.blogspot.com/2009/09/blog-post_17.html
உங்கள் பதிவின் சுட்டி : http://eksaar.blogspot.com/2009/07/blog-post_21.html
என் பதிவில் எந்த இடத்தில் புலி என்ற சொல் பாவிக்கப்பட்டுள்ளது?
சைவ மறு மலர்ச்சி இயக்கம், பொங்கும் தமிழர் படையணி இயங்குவாதாக கூறியுள்ளேன். அது உண்மை. நீங்கள்தான் அவை புலி சார்பு இயக்கங்கள் என்று கூறவிழைகிறீர்கள்.
இப்போது உங்கள் பதிவில் காட்டப்பட்டுள்ள மேற்கோள்களைப்பார்ப்போம்.
சிவப்பு நிறத்தில் இருப்பவை
//மட்டக்களப்பு தாழங்குடா ..
இது முஸ்லிம் மாணவிகள் பர்தா அணிவது தடுக்கப்பட்டுள்ளது என்று கூறுகிறது.
//பகிடிவதை (ரெகிங்
இனட்துவேச நடவடிக்கை என்று கூறுகிறது
/மாணவர்கள் 3 பேருக்கு
மாணவர்கள் இரண்டுவிதமாக கவனிக்கப்படுகிறார்கள் என்று கூறுகிறது.
இவற்றை மேற்கோளாக கொண்டே சாடியிருக்கிறீர்கள். இவற்றில் ஒரு இடத்திலும் புலி சார்பு என்று வரவில்லையே? என்னுடைய பதிவில் புலிச்சாயம் பூசும் நோக்கம் இல்லை என்பது புரியவில்லையா?
இவ்வியக்கங்கள் புலிச்சார்பு என நீங்கள் கருதினால் அவற்றை நடாத்தும் மாணவர்களிடம் கேளுங்கள். அல்லது யாரும் இல்லையா என்று கேட்டவர்களிடம் கேளுங்கள். ஏன் நீங்கள் புலிச்சாயம் பூசிக்கொள்கிறீர்கள் என்று. என்னிடம் அல்ல.. யாரோ பெற்ற பிள்ளைக்கு நான் பதிவு வைக்கத்தேவையில்லை.
மற்றும் உங்கள் பதிவில் வெறும் 2 பந்திகளில் புலி சார்பு பற்றி நீங்களே கற்பனைசெய்து எழுதியிருக்கிறீர்கள். மொத்தம் 11பந்திகளில் 2. ஆகவே வீதம் 18%. அப்படியாயின் உங்கள் பதிவு புலி சார்பு என்று நீங்கள் கருதியதை எதிர்த்து எழுதியிருந்ததாக கொள்ளமுடியுமா?
மற்றும் என் இலகுகேள்வியான ஆம் அல்லது இல்லைக்கு இதுவரை பதில் நீங்கள் சொல்லவில்லை. (பர்தா அணியும் உரிமை மறுக்கப்பட்டது)
//@ என்ன கொடும சார் //
நான் எழுதியவை எதுவும் கற்பனை அல்ல உங்கள் மறைமுகமான குற்றச்சாட்டுக்கான என் பதில்கள். உங்கள் கேள்விக்குரிய பதில்கள் விரைவில் பதிவாக வரும் யாரது பதிவில் உண்மைத் தன்மையும் புரியும்.
நீங்க பதிவை ஆற அமர இருந்து எழுதுங்கோ.. இப்போ எழுதவேண்டியது 2 அல்லது 3 எழுத்து. அதாவது ஆம் அல்லது இல்லை. (கூரை ஏறி கோழி பிடிக்காதவன் வானம் ஏறி வைகுண்டம் போவானா?) அதுவும் கஷ்ட்டமாயின் ஆம் எனில் Y என்வும் இல்லை எனில் N எனவும் குறியிடுக..
(நீங்கள் எழுதியது ஆராயாமல் வெறுமனே எதிர்க்கவேண்டும் (MIND PIOSION) என எழுதியது என்பதும் எனக்கும் தெரியும்)
//என்ன கொடும சார் கூறியது...
நீங்க பதிவை ஆற அமர இருந்து எழுதுங்கோ.. இப்போ எழுதவேண்டியது 2 அல்லது 3 எழுத்து. அதாவது ஆம் அல்லது இல்லை. (கூரை ஏறி கோழி பிடிக்காதவன் வானம் ஏறி வைகுண்டம் போவானா?) அதுவும் கஷ்ட்டமாயின் ஆம் எனில் Y என்வும் இல்லை எனில் N எனவும் குறியிடுக..
(நீங்கள் எழுதியது ஆராயாமல் வெறுமனே எதிர்க்கவேண்டும் (MIND PIOSION) என எழுதியது என்பதும் எனக்கும் தெரியும்)//
சில கேள்விகளுக்கு ஆம் அல்லது இல்லை என்று சொல்லமுடியாது. நீங்கள் கேட்கும் கேள்வியும் அதுபோன்றதுதான். என்ன நடந்தது என்று விரிவாக சொல்லவேண்டும். அதனை தனிப்பதிவாக இடவேண்டும் அப்போதுதான் யாரில் தவறு என்பதனை சொல்ல முடியும்.
இந்த விடயங்கள் கண்ணை மூடிக்கொண்டு பதிலளிக்க முடியாது. இரு சமுகம் சார்ந்த விடயம். எல்லோருக்கும் நடந்த விடயங்களை தெளிவுபடுத்தவேண்டும்.
மட்டக்களப்பு கல்வியல் கல்லூரியில் என்ன நடந்தது?......
விரைவில் எதிர்பாருங்கள்.
அப்படி என்ன பெரிய கேள்வி கேட்டுபுட்டேன்? சின்னதா பர்தா தடைசெய்ய்ப்பட்டதா
என்று மட்டும்தானே கேட்கிறேன். ஏன் தடைசெய்யப்பட்டது என்றா கேட்டேன்? அதுக்கும் உங்களுக்கும் சம்பந்தம் இல்லை. உங்கள் கட்டுப்பாட்டிலும் இல்லை. வேலியில போகும் ஓணானை மடியில் கட்டிக்கொண்டால்? விருப்பமாயின் அதையும் செய்யவும்.. என்க்கும் இன்னும் இலகுவாகும்..
உண்மைதான்
மிகவும் நல்லது சந்துரு.
இன்றைய காலப்பகுதியில் பத்திரிகைகளுக்கு சவால் விடும் ஒரு பிரிவுதான் இந்த வலைப்பதிவு என்று கூறலாம். தினக்குரலில் ஒரு பக்கம் வலைப்பதிவுகளுக்காக ஒதுக்கியிருப்பதென்பது மிகவும் வரவேற்கத்தக்க விடயம்
Post a Comment