Thursday, 29 October 2009

கிராமியத் தெய்வ வழிபாடும் மூட நம்பிக்கைகளும்

கடவுள் இருக்கின்றார் என்பதனை 100 % நம்புபவன் நான் ஆனாலும் சில மூட நம்பிக்கைகள் இந்துக்களிடையே இருக்கின்றது. அந்த மூட நம்பிக்கைகள் தகர்த்தெறியப்படவேண்டும். என்பதே என் அவா.

இந்த மூட நம்பிக்கைகள் இந்து சமயத்தின் மீதும், கடவுளின்மீதும் இருக்கின்ற நம்பிக்கையினை இல்லாமல் செய்பவையாக இருக்கின்றன. இந்த மூட நம்பிக்கைகள் பொதுவாக கிராமியத் தெய்வ வழிபாட்டிலே அதிகமாகக் காணப்படுகின்றன.

அண்மையிலே ஒரு ஆலயத்திலே இடம்பெற்ற சில சம்பவங்களை இடுகையிடுகின்றேன். இந்தச் சம்பவங்கள் பலரது விமர்சனத்துக்கும் உள்ளானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆலயம் ஒரு காளி ஆலயம். பல வருடங்கள் பழமையான ஆலயம். பல சிறப்புக்களை உடைய ஆலயம். அண்மையிலே ஆலயமானது சிறப்பான முறையிலே ஆலயம் புனரமைக்கப்பட்டு. கும்பாபிசேகம் இடம்பெற்றதோடு கடந்த வருடம் முதல் தெய்வம் ஆடி கட்டுச் சொல்லுகின்ற முறையும் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த சடங்கினைச் செய்வதற்கு வேறு கிராமங்களிலே இருந்து பூசாரிமார் வரவளைக்கப்பட்டனர். அவர்கள் நடந்துகொண்ட விதம் மக்களிடம் இருக்கின்ற கடவுள் நம்பிக்கையினை இல்லாமல் செய்யும் ஒன்றாகவே இருந்தது.

இந்த ஆலயத்திலே பலர் தெய்வம் ஆடினார். பலரை அழைத்து கட்டுச் சொன்னனர். ஆனால் நல்ல விடயங்கள் எதுவும் சொல்லப்பட்டதாகத் தெரியவில்லை. அங்கே சொல்லப்பட்ட விடயங்கள். பலரது எதிர்ப்பினையும் சம்பாதிக்க வேண்டியிருந்தது.

நான் பல ஆலயங்களிலே பார்த்திருக்கின்றேன் சில நிமிடங்களே தெய்வம் ஆடுவார்கள் ஆனால் இந்த ஆலயத்திலே பல மணித்தியாலங்களாக தெய்வம் ஆடப்பட்டது. அங்கே வந்த பக்தர்கள் பலரை அழைத்து தெய்வம் ஆடியவர்களால் சொல்லப்பட்ட விடயங்கள்.

1. எதிர்வரும் வருடம் ஆலயத்திலே சடங்கு நடப்பதற்கு முன்னர் குறிப்பிட்ட பணத்தினை ஆலயத்துக்கு செலுத்தவேண்டும், அல்லது குறிப்பிடுகின்ற வேலைகளை செய்து கொடுக்கவேண்டும். அப்போதுதான் நீங்கள் நினைக்கும் எந்தக் காரியமும் வெற்றியடையும் இல்லையேல் கடவுளின் தண்டனைக்கு ஆளாக நேரிடும் என்று சொல்லப்பட்டது.

இது கடவுளே இலஞ்சம் வாங்குவது போன்று இருக்கின்றது. கடவுளுக்கு நாம் ஒன்றைக் கொடுத்தால்தால் கடவுள் எமக்கு வரமருளுவார் என்றால் எதற்கு அந்தக் கடவுளை வணங்கவேண்டும்.

நாம் நேர்கடன் வைப்பது நாம் நினைப்பதனை கடவுள் நிறைவேற்றிவிட்டார். அவர் நிறைவேற்றியதட்காக நாம் செய்யும் கைமாறாகும். அதனை இங்கே வேறு முறையில் பயன்படுத்த நினைத்துவிட்டனர்.

2. ஒரு இளைஞர் அழைக்கப்பட்டார் அவரிடம் சொல்லப்பட்ட விடயம் எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்தது. எந்த ஒரு நண்பரோடும் கதைக்கக் கூடாது. என்று அம்மன் மீது சத்தியம் செய்து வாங்கப்பட்டது. அவர் நண்பர்களோடு கதைக்கின்றபோது அவரது படிப்பு தடைப்பட்டு விடும் என்றும் சொல்லப்பட்டது. ஆனால் அவர் படிப்பினை நிறுத்தி பல வருடங்களாகிவிட்டது.

இங்கு அவரை நண்பர்களோடு பழகவேண்டாம் என்று சத்தியம் வாங்குவது பொருத்தமானதா? அவர் இதனால் தனிமைப் படுத்தப்படும்போது அவரது எதிர்கால நிலை என்ன?

3. ஒரு மீன் வியாபாரியின் மனைவி அழைக்கப்பட்டு உங்கள் கணவன் மீன் விற்பனை செய்வதனால் ஆலயத்துக்கு வரக்கூடாது என்று சொல்லப்பட்டது .

இது சரியானதா? இன்று மீன் சாப்பிட்டுவிட்டே ஆலயத்துக்கு செல்வோர் இருக்கின்றனர். மீன் விற்பனை செய்வோர் ஆலயத்துக்கு வரக்கூடாது என்று எங்கே சொல்லப்பட்டிருக்கின்றது? ஆனால் இந்த பூசாரிமார் ஆலய நிகழ்வுகள் இல்லாத நாட்களில் மீன் சாப்பிடுவதாகவும், மது அருந்துவதாகவும் பின்னர் அறிந்துகொண்டேன்.

4. ஒருவர் மது அறிந்துவிட்டு ஆலயத்துக்கு வந்திருந்தார். மது அருந்திவிட்டு ஆலயத்துக்கு வரக்கூடாது என்று தெய்வம் ஆடிய ஒருவர் மோசமான முறையிலே அடித்து தாக்கினார்.

இது நாகரிகமான முறையா? அங்கே தெய்வத்துக்கு மதுக்கொடுத்தல் எனும் போர்வையில் சாராயம் கொடுக்கப்பட்டது. கடவுளே மது அருந்தும்போது ஒரு பக்தன் மது அருந்திவிட்டு வந்தது தவறு என்று அடிப்பது சரியா?

5. இக் கிராமத்திலே ஒரு பகுதியிலே தாழ்த்தப்பட்ட சாதியினர் இருக்கின்றனர். சுவாமி கிராமத்தின் வீதிகளிலே வலம் வருகின்றபோது ஆலய நிர்வாகத்தினரும் இன்னும் சிலரும் இந்த தாழ்த்தப்பட்ட சாதியினர் இருக்கும் பிரதேசத்துக்கு சுவாமியைக் கொண்டு செல்வதற்கு மறுத்துவிட்டனர்.

இங்கே கடவுள் சாதி பார்ககின்றாரா? அல்லது கிராமத்தினை இரண்டாகப் பார்க்கின்றனரா? சாதி என்பது கடவுளால் உருவாக்கப்பட்டதல்ல செய்யும் தொழிலை வைத்தே மனிதனால் உருவாக்கப்பட்டதே சாதி. இன்னும் நாம் சாதி பார்த்துக்கொண்டிருப்பது நல்ல விடயமல்ல.

6. இங்கே கட்டுச் சொல்வதற்கு தெய்வம் ஆடுபவர்களால் அழைக்கப்பட்டவர்களில் 90 வீதமானவர்கள் இளம் பெண்களாகவே இருந்தனர். தெய்வம் ஆடியவர்களும் இளம் வாலிபர்கள்தான்.

இங்கே பலரும் கேட்ட கேள்வி ஏன் ஆண்களை அழைக்க முடியாதா. தெய்வம் இளம் பெண்களுக்கு மட்டுமா அருள் கொடுக்கும்.

7. அங்கே மக்கள் இவர்களையே கடவுளாக மதிக்கப்பட்டனர். அங்கே ஆலயத்திலே இருந்த கடவுளை மக்கள் வணங்கியதனைவிட இவர்களை வணங்கியதே அதிகமாக இருந்தது. பலர் கால்களிலே விழுந்து வணங்கினர். இவர்களைத் தொட்டு கண்களிலே ஒற்றிக் கொண்டனர். ஏன் இந்த மூட நம்பிக்கை?

இன்னும் பல விடயங்கள் இருக்கின்றன...

நான் கேட்பது இந்த ஆலயம் ஆகம விதிப்படி அமைந்தது. முறைப்படி குருவாகப் படித்து தீட்சைபெற்று பல வருடங்களாக பூசை செய்து வருகின்ற ஒரு குருக்களுக்கு காட்சி கொடுக்காத கடவுள் இந்த மந்திரவாதிகளுக்கு காட்சி கொடுத்தாரா? அவர்களோடு மட்டும்தான் பேசுவாரா? ஏன் இந்தப் பூசாரிகள், மந்திரவாதிகள் மக்களையும் கடவுளையும் ஏமாற்றுகின்றனர்

ஏன் இவர்கள் மக்களை ஏமாற்றிப் பிழைப்பு நடத்திக்கொண்டு இருக்கின்றனர். இவர்களை ஏன் சிலர் முன்னிலைப்படுத்திக்கொண்டு இருக்கின்றனர்.

கடவுள் நம்பிக்கை இல்லாதவன் அல்ல கடவுளை 100% நம்புபவன் ஆனாலும் மூட நம்பிக்கையையும், மனிதக் கடவுளர்களையும் துரத்த நினைப்பவன்.

இன்னும் பல பல மூட நம்பிக்கைகள் இந்துக்களிடையே இருக்கின்றன அவ்வப்போது உங்களை வந்து சேரும்.

இதனையும் பாருங்கள்
மதத்தின் பெயரால் பிழைப்பு நடத்துகின்றார்களா?
கடவுளின் பெயரால் கொடுமைகள்.
கடவுள் நேற்று முளைத்த காளானா...

Post Comment

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

49 comments: on "கிராமியத் தெய்வ வழிபாடும் மூட நம்பிக்கைகளும்"

ஹேமா said...

சந்ரு நீங்க சொல்றதையெல்லாம் பாத்தா இருக்கிற கொஞ்ச நம்பிக்கையும் இல்லாமப் போயிடும்.
எதைத்தான் வியாபாரமாக்காமல் இருக்கிறார்கள்.எங்கள் நாட்டுக்கு இவ்வளவு கேடு வந்தும் திருந்தவேயில்லை.

ஆ.ஞானசேகரன் said...

நல்ல சிந்தனைகள் தொடரட்டும்... அடுத்து நானும் இதே எண்ணங்களில் இருக்கின்றேன்... வாழ்த்துகள் சந்ரு

அன்புடன் நான் said...

இங்கே கட்டுச் சொல்வதற்கு தெய்வம் ஆடுபவர்களால் அழைக்கப்பட்டவர்களில் 90 வீதமானவர்கள் இளம் பெண்களாகவே இருந்தனர். தெய்வம் ஆடியவர்களும் இளம் வாலிபர்கள்தான்.

இங்கே பலரும் கேட்ட கேள்வி ஏன் ஆண்களை அழைக்க முடியாதா. தெய்வம் இளம் பெண்களுக்கு மட்டுமா அருள் கொடுக்கும்.//

க‌ட‌வுளை ந‌ம்புவ‌தும்...ம‌றுப்ப‌தும் அவ‌ர‌வ‌ர் எண்ண‌ம்.ஆனா நீக‌ சொல்லியிருப்ப‌தை பார்த்தால் அது க‌ட‌வுளின் பெய‌ரால் அர‌ங்கேறும் கீழ்த்த‌ன‌ம்... இதை க‌வ‌னித்து முறைப்ப‌டுத்துவ‌து அவ‌சிய‌ம். அத‌ற்கான‌வ‌ர்க‌ள் முற்ப‌டுவார்க‌ள் என‌ ந‌ம்புவோம். ந‌ல்ல‌ ப‌திவு.

kuma36 said...

////////இக் கிராமத்திலே ஒரு பகுதியிலே தாழ்த்தப்பட்ட சாதியினர் இருக்கின்றனர். சுவாமி கிராமத்தின் வீதிகளிலே வலம் வருகின்றபோது ஆலய நிர்வாகத்தினரும் இன்னும் சிலரும் இந்த தாழ்த்தப்பட்ட சாதியினர் இருக்கும் பிரதேசத்துக்கு சுவாமியைக் கொண்டு செல்வதற்கு மறுத்துவிட்டனர்.
/////////////

இதையெல்லாம் பார்க்கும் போது கடவுள் இருகின்றாறா என்ற சந்தேகம் எழத்தான் செய்கின்றது சந்துரு!!!!!!!

வால்பையன் said...

//கடவுள் இருக்கின்றார் என்பதனை 100 % நம்புபவன் //

எங்கே இருக்கிறார்னு சொல்லிட்டா எல்லோரும் நம்புவோம்ல!

வால்பையன் said...

//இது கடவுளே இலஞ்சம் வாங்குவது போன்று இருக்கின்றது. கடவுளுக்கு நாம் ஒன்றைக் கொடுத்தால்தால் கடவுள் எமக்கு வரமருளுவார் என்றால் எதற்கு அந்தக் கடவுளை வணங்கவேண்டும்.//

நீங்கள் கடவுளை கும்பிடுவதே லஞ்சம் கொடுப்பது போலத்தான்!

வால்பையன் said...

//நாம் நேர்கடன் வைப்பது நாம் நினைப்பதனை கடவுள் நிறைவேற்றிவிட்டார். அவர் நிறைவேற்றியதட்காக நாம் செய்யும் கைமாறாகும்.//

ஓ, இது நீ ஒன்னு கொடு, நான் ஒன்னு கொடுக்கிறேன்னு நடக்குற வியாபாரமா?
அப்ப கடவுள் ஒரு வியாபாரின்னு சொல்லுங்க!

வால்பையன் said...

/அங்கே தெய்வத்துக்கு மதுக்கொடுத்தல் எனும் போர்வையில் சாராயம் கொடுக்கப்பட்டது. கடவுளே மது அருந்தும்போது ஒரு பக்தன் மது அருந்திவிட்டு வந்தது தவறு என்று அடிப்பது சரியா?//

அதானே!
என்னைக்கூட ஏண்டா குடிக்கிறேன்னு நிறைய பேர் கேள்வி கேக்குறாங்க!

வால்பையன் said...

//இக் கிராமத்திலே ஒரு பகுதியிலே தாழ்த்தப்பட்ட சாதியினர் இருக்கின்றனர். சுவாமி கிராமத்தின் வீதிகளிலே வலம் வருகின்றபோது ஆலய நிர்வாகத்தினரும் இன்னும் சிலரும் இந்த தாழ்த்தப்பட்ட சாதியினர் இருக்கும் பிரதேசத்துக்கு சுவாமியைக் கொண்டு செல்வதற்கு மறுத்துவிட்டனர்.//

இப்படிபட்ட சாமி தேவைக்காகும்!
உயர்சாதிக்கு மட்டும் தான் சாம்மின்னா எதுக்கு அந்த சாமியை கும்பிடனும்னு கேக்குறேன்!

அதை தான் இங்கேயும் செய்து கொண்டிருக்கிறார்கள், ஆதிக்க சாதி வெறியர்களும், பார்பனர்களும்!

வால்பையன் said...

//முறைப்படி குருவாகப் படித்து தீட்சைபெற்று பல வருடங்களாக பூசை செய்து வருகின்ற ஒரு குருக்களுக்கு காட்சி கொடுக்காத கடவுள்//

என்னாத்த படிச்சானம்மா அந்த குருக்கள்!
அவனும் ஏமாத்துற கேஸ் தான்! கடவுள் என்ன தமிழில் வேண்டினால் ஒத்துக்க மாட்டேன்னு சொன்னாரா!?
சமஸ்கிருதத்தில் சொன்னால் தான் அவர் காதுல ஏறுமாக்கும்!

Admin said...

//வால்பையன் கூறியது...
//கடவுள் இருக்கின்றார் என்பதனை 100 % நம்புபவன் //

எங்கே இருக்கிறார்னு சொல்லிட்டா எல்லோரும் நம்புவோம்ல!//

கடவுளை நம்புவோருக்கு எங்கும் இருப்பார். நம்பாதவர்களுக்கு தெரியாமலே அவர்களுடனிருப்பார்.

வால்பையன் said...

//கடவுள் நம்பிக்கை இல்லாதவன் அல்ல கடவுளை 100% நம்புபவன் //

கடவுள் என்பதே ஒரு மூட நம்பிக்கை தான்! இதில் தனியாக வேற மூடநம்பிக்கை இருக்காக்கும்!

Admin said...

//வால்பையன் கூறியது...
//இது கடவுளே இலஞ்சம் வாங்குவது போன்று இருக்கின்றது. கடவுளுக்கு நாம் ஒன்றைக் கொடுத்தால்தால் கடவுள் எமக்கு வரமருளுவார் என்றால் எதற்கு அந்தக் கடவுளை வணங்கவேண்டும்.//

நீங்கள் கடவுளை கும்பிடுவதே லஞ்சம் கொடுப்பது போலத்தான்!//

கடவுளைக் கும்பிடுவது இலஞ்சமல்ல. எம்மை காப்பவரை வணங்குகின்றோம்.

Admin said...

//வால்பையன் கூறியது...
//நாம் நேர்கடன் வைப்பது நாம் நினைப்பதனை கடவுள் நிறைவேற்றிவிட்டார். அவர் நிறைவேற்றியதட்காக நாம் செய்யும் கைமாறாகும்.//

ஓ, இது நீ ஒன்னு கொடு, நான் ஒன்னு கொடுக்கிறேன்னு நடக்குற வியாபாரமா?
அப்ப கடவுள் ஒரு வியாபாரின்னு சொல்லுங்க!//

இதெல்லாம் கடவுள் கேட்கவில்லை மனிதனால் உருவாக்கப்பட்டவைதான்.

Admin said...

//வால்பையன் கூறியது...
/அங்கே தெய்வத்துக்கு மதுக்கொடுத்தல் எனும் போர்வையில் சாராயம் கொடுக்கப்பட்டது. கடவுளே மது அருந்தும்போது ஒரு பக்தன் மது அருந்திவிட்டு வந்தது தவறு என்று அடிப்பது சரியா?//

அதானே!
என்னைக்கூட ஏண்டா குடிக்கிறேன்னு நிறைய பேர் கேள்வி கேக்குறாங்க!//

கடவுளுக்கு சாராயம் கொடுப்பதென்பதே மூட நம்பிக்கைதான்.

இங்கே கடவுளுக்கு கொடுப்பதாக தெய்வம் ஆடுபவர்கள்தான் குடிக்கின்றனர்.

வால்பையன் said...

/இதெல்லாம் கடவுள் கேட்கவில்லை மனிதனால் உருவாக்கப்பட்டவைதான். //

கொஞ்சம் வார்த்தைகளை மாற்றி போடுங்கள், கடவுளே மனிதனால் உருவாக்கப்பட்டது தான்!

Admin said...

//வால்பையன் கூறியது...
//இக் கிராமத்திலே ஒரு பகுதியிலே தாழ்த்தப்பட்ட சாதியினர் இருக்கின்றனர். சுவாமி கிராமத்தின் வீதிகளிலே வலம் வருகின்றபோது ஆலய நிர்வாகத்தினரும் இன்னும் சிலரும் இந்த தாழ்த்தப்பட்ட சாதியினர் இருக்கும் பிரதேசத்துக்கு சுவாமியைக் கொண்டு செல்வதற்கு மறுத்துவிட்டனர்.//

இப்படிபட்ட சாமி தேவைக்காகும்!
உயர்சாதிக்கு மட்டும் தான் சாம்மின்னா எதுக்கு அந்த சாமியை கும்பிடனும்னு கேக்குறேன்!

அதை தான் இங்கேயும் செய்து கொண்டிருக்கிறார்கள், ஆதிக்க சாதி வெறியர்களும், பார்பனர்களும்!//

சாதிகளை பிரித்தவர்களும் மனிதர்களே, கடவுளை அங்கே கொண்டு போகவேண்டாம் என்றதும் மனிதர்களே, கடவுள் இவர்கள் கொண்டு போகவில்லை என்று சொல்லி அவர்களுக்கு வரம் கொடுக்காமலும் விடவில்லை.

மொத்தத்தில் சாதி வெறியர்களை இல்லாதொழிக்க வேண்டும்.

Admin said...

//SShathiesh கூறியது...
லோஷன் அண்ணா நீங்கள் சொன்னதேதான். என் பெயரை உச்சரிக்கும் போது இருக்கும் வேறுபாடுதான் அது வால்பையன். புரிந்திருக்கும் என நினைக்கின்றேன். ஏனெனில் உங்களுக்கு அதிக தமிழ் அறிவு உண்டு என்பதை நீங்களே சொல்லாமல் சொல்லி இருக்கின்றீர்கள்.

உங்களிடம் ஒரு கேள்வி. உங்கள் பெயர் வால்பையன் என குறிப்பிட்டீர்கள் உண்மையில் தமிழில் அப்படி வருமா என சிந்தித்ததுண்டா. நீங்கள் உங்கள் பெயரை முறையாக தமிழில் எழுதுவதென்றால் வாற்பையன் என தான் எழுத வேண்டும். உங்கள் பெயரில் இருக்கும் பிழையே தெரியாத நீங்கள் என் பெயரின் உச்சரிப்பு தெரியாமல் இரண்டு எழுத்துக்கும் வித்தியாசம் கேட்டதுக்கு நான் என்ன செய்வேன்.//

வால் இது எனது முந்திய பதிவிலே சதீஷ் உங்களிடம் கேட்ட கேள்வி

வால்பையன் said...

//மொத்தத்தில் சாதி வெறியர்களை இல்லாதொழிக்க வேண்டும். //

அதற்கு சாதியை ஒழிக்க வேண்டும்!

Admin said...

//வால்பையன் கூறியது...
/இதெல்லாம் கடவுள் கேட்கவில்லை மனிதனால் உருவாக்கப்பட்டவைதான். //

கொஞ்சம் வார்த்தைகளை மாற்றி போடுங்கள், கடவுளே மனிதனால் உருவாக்கப்பட்டது தான்!//

இது கடவுளில் நம்பிக்கை இல்லாதவர்கள் சொல்லும் வார்த்தை அவ்வளவுதான்.

வால்பையன் said...

//வால் இது எனது முந்திய பதிவிலே சதீஷ் உங்களிடம் கேட்ட கேள்வி //

நான் ஒரு கேள்வி கேட்டேன், அதற்கு சதீஷ் திரும்ப ஒரு கேள்வி கேட்டிருக்கிறார்!

எங்களுக்குள் அது சரியா போச்சு!
இப்ப உங்களுக்கு என்ன பிரச்சனை!?

Admin said...

//வால்பையன் கூறியது...
//மொத்தத்தில் சாதி வெறியர்களை இல்லாதொழிக்க வேண்டும். //

அதற்கு சாதியை ஒழிக்க வேண்டும்!//

சாதி வெறியர்கள் இருக்கும்வரை சாதியை இல்லாதொழிக்க முடியாது. முதலில் சாதி வெறியர்களை துரத்தியடிப்போம்.

வால்பையன் said...

/இது கடவுளில் நம்பிக்கை இல்லாதவர்கள் சொல்லும் வார்த்தை அவ்வளவுதான். //

நீங்கள் சொல்வதும் வார்த்தை தான்!
வேதமல்ல

Admin said...

//வால்பையன் கூறியது...
//வால் இது எனது முந்திய பதிவிலே சதீஷ் உங்களிடம் கேட்ட கேள்வி //

நான் ஒரு கேள்வி கேட்டேன், அதற்கு சதீஷ் திரும்ப ஒரு கேள்வி கேட்டிருக்கிறார்!

எங்களுக்குள் அது சரியா போச்சு!
இப்ப உங்களுக்கு என்ன பிரச்சனை!?//

உங்கள் பதிலைக் காணவில்லையே என்று கேட்டேன்.

Unknown said...

மத நம்பிக்கைகளும், முறைகளும் அவரவர் தனிப்பட்ட உரிமைகள்....
ஆனாலும் மதங்கள் சாாதியத்தை வளர்க்கின்றன என்ற கோபம் எனக்குண்டு....
பிறப்பில் சைவனான நான், சைவ ஆலயங்கள் போதிய அளவவில் மக்களுக்கு சேவை வெய்ய முன்வருவதில்லை என்ற கோபத்தையும் உடையவன்....
தேவையற்ற கூத்துக்களை நிறுத்திவிட்டு மக்களின் இதயநாடிகளை பிடித்துப் பார்ப்பதில் மதங்கள் செயற்படவேண்டும்.
சைவ ஆலயங்கள் சரியாக செயற்படுவதில்லை என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா?

வால்பையன் said...

//சைவ ஆலயங்கள் சரியாக செயற்படுவதில்லை என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா? //

சைவ ஆலயங்கள் என்றால் என்ன?
அசைவ ஆலயங்கள் என்றால் என்ன?

இது பற்றி கொஞ்சம் விளக்கமாக சொல்ல முடியுமா!?

ஸ்ரீராம். said...

வால் பையன் வந்து வாதம் பண்ண ஆரம்பிச்சிட்டா நாம சொல்ல வந்தது எல்லாம் மறந்து போய் 'ஆ'ன்னு பார்த்துகினு இருக்க வேண்டியதா இருக்கு. ஸாரி சந்துரு சொல்ல வந்ததே மறந்து போச்சு...!

மாடல மறையோன் said...

சாதிகளை பிரித்தவர்களும் மனிதர்களே, கடவுளை அங்கே கொண்டு போகவேண்டாம் என்றதும் மனிதர்களே, கடவுள் இவர்கள் கொண்டு போகவில்லை என்று சொல்லி அவர்களுக்கு வரம் கொடுக்காமலும் விடவில்லை.//

அய்யா ச்ந்துரு அவர்களே!

கடவுளே மக்களை நாற்குலங்களாகப் பிரித்தார் என்று இந்துக்கள் நம்பிக்கை. இக்குலங்களே பின்னர் ஜாதிப்பிளவுகளாக கொடூரவடிவமெடுத்தன; அதில் ஒன்றைத்தான் நீங்கள் உங்கள் இப்பதிவில் குறிப்பிட்டீர்கள்.

பகவத்கீதையையே மனிதன் எழுதினான் என்று சொல்லிவிட்டுப்போங்கள். அது சரி. ஆனால், கடவுள் மனிதர்களைப்பிரிக்கவில்லை என்று பொய் சொல்லவேண்டாம்.

மாடல மறையோன் said...

//கடவுளுக்கு சாராயம் கொடுப்பதென்பதே மூட நம்பிக்கைதான். //

அய்யா சந்துரு அவர்களே!

கடவுள் ஏன் சாராயம் குடிக்கக்கூடாது?

கடவுள் காதலிக்கிறார்; இரண்டு, மூன்று மனைவகள் கட்டிக்கொள்கிறார். சாதிக்கொன்னாக. முருகன், வெள்ளையா உயர்ந்தஜாதிப்பெண்ணொன்றையும் (தெய்வானை), கருப்பா கீழ்ஜாதிப்பெண்ணையும் (வள்ளி) கட்டிக்கொள்கிறார். கோபம் கொண்டு பெற்றோரை விட்டுப்பிரிகிறார். இராமன் தன் மனைவியின் கற்பைசோதிக்கிறார். கடவுள் விதவைதமான் உணவுகளை உண்டு, கேளிக்கை வாழ்க்கையை வாழ்கிறார்கள்.

இவற்றுக்கெல்லாம் ஒரு உள்ளர்த்தம் உண்டு; அதைத் தேடிக்கண்டு பயனடைய வேண்டும் என இந்துக்கள் சொல்கிறார்கள்.

ஏன் கடவுள் சாராயத்தைமட்டும் குடிக்ககூடாது என்கிறீர்கள்?

கள்ளக்கலவியே பண்ணுவதைவிட இது அசிங்கமா?

மனிதன் செய்யும் அனைத்தையும் எங்கள் சாமிகள் செய்யும்; அது சரி என்று சொல்லிவிட்டு, சாராயம் மட்டும் கூடாது என்பதில், ஒரு உயர்ஜாதித்திமிர் உள்ளது/

மேலும், எவ்வளவுதான் நல்லெண்ணத்தில் எழுதியிருப்பினும், உங்கள் பார்வை கிராமத்து மனிதர்களில் கலாச்சாரத்தை எள்ளல் பண்ணுவதாகத்தான் தெரிகிறது!

Muniappan Pakkangal said...

It is in all religions Shanthru,the priests are money oriented.But still you find places where you are close to the God in mind.

Admin said...

//ஹேமா கூறியது...
சந்ரு நீங்க சொல்றதையெல்லாம் பாத்தா இருக்கிற கொஞ்ச நம்பிக்கையும் இல்லாமப் போயிடும்.
எதைத்தான் வியாபாரமாக்காமல் இருக்கிறார்கள்.எங்கள் நாட்டுக்கு இவ்வளவு கேடு வந்தும் திருந்தவேயில்லை.//

இப்படிப்பட்ட பூசாரிகள் இருக்கும்வரை மூட நம்பிக்கைகள் இருக்கும். என்று எண்ணத் தோன்றுகின்றது.

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.

Admin said...

//ஆ.ஞானசேகரன் கூறியது...
நல்ல சிந்தனைகள் தொடரட்டும்... அடுத்து நானும் இதே எண்ணங்களில் இருக்கின்றேன்... வாழ்த்துகள் சந்ரு//

நீங்களும் மூட நம்பிக்கைகள் தொடர்பாக பதிவிடுவது நல்ல விடயம் தொடருங்கள்.

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.

Admin said...

// சி. கருணாகரசு கூறியது...
இங்கே கட்டுச் சொல்வதற்கு தெய்வம் ஆடுபவர்களால் அழைக்கப்பட்டவர்களில் 90 வீதமானவர்கள் இளம் பெண்களாகவே இருந்தனர். தெய்வம் ஆடியவர்களும் இளம் வாலிபர்கள்தான்.

இங்கே பலரும் கேட்ட கேள்வி ஏன் ஆண்களை அழைக்க முடியாதா. தெய்வம் இளம் பெண்களுக்கு மட்டுமா அருள் கொடுக்கும்.//

க‌ட‌வுளை ந‌ம்புவ‌தும்...ம‌றுப்ப‌தும் அவ‌ர‌வ‌ர் எண்ண‌ம்.ஆனா நீக‌ சொல்லியிருப்ப‌தை பார்த்தால் அது க‌ட‌வுளின் பெய‌ரால் அர‌ங்கேறும் கீழ்த்த‌ன‌ம்... இதை க‌வ‌னித்து முறைப்ப‌டுத்துவ‌து அவ‌சிய‌ம். அத‌ற்கான‌வ‌ர்க‌ள் முற்ப‌டுவார்க‌ள் என‌ ந‌ம்புவோம். ந‌ல்ல‌ ப‌திவு.//

நீங்கள் சொல்வதுபோல் கடவுளை நம்புவதும் நம்பாமல் விடுவதும் அவரவர் விருப்பம். ஆனாலும் மூட நம்பிக்கைகளை எல்லோரும் ஒழிக்க வேண்டும்.

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.

Admin said...

//கலை - இராகலை கூறியது...
////////இக் கிராமத்திலே ஒரு பகுதியிலே தாழ்த்தப்பட்ட சாதியினர் இருக்கின்றனர். சுவாமி கிராமத்தின் வீதிகளிலே வலம் வருகின்றபோது ஆலய நிர்வாகத்தினரும் இன்னும் சிலரும் இந்த தாழ்த்தப்பட்ட சாதியினர் இருக்கும் பிரதேசத்துக்கு சுவாமியைக் கொண்டு செல்வதற்கு மறுத்துவிட்டனர்.
/////////////

இதையெல்லாம் பார்க்கும் போது கடவுள் இருகின்றாறா என்ற சந்தேகம் எழத்தான் செய்கின்றது சந்துரு!!!!!!!//

இச் செயல்களைப் பார்க்கும்போது எல்லோருக்கும் தோன்றும் எண்ணம்தான்.

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.

Admin said...

//வால்பையன் கூறியது...
/இது கடவுளில் நம்பிக்கை இல்லாதவர்கள் சொல்லும் வார்த்தை அவ்வளவுதான். //

நீங்கள் சொல்வதும் வார்த்தை தான்!
வேதமல்ல//

நான் சொல்லும் வார்த்தை வேதமாக வேண்டும் என்று எவரும் சொல்லவில்லையே.

வால்பையன் said...

//நான் சொல்லும் வார்த்தை வேதமாக வேண்டும் என்று எவரும் சொல்லவில்லையே. //

நீங்கள் உபயோகப்படுத்திய வார்த்தையில் இருந்த ”அவ்வளவு தான்” என்ற சொல்லில் இருக்கும் அகம்பாவத்திற்கும், ஆணவத்திற்கும் உங்களுக்கு அர்த்தம் புரிய வேண்டும் என்பதற்காக தான் வேதம் இல்லை என்று சொன்னேன்!

Admin said...

//கனககோபி கூறியது...
மத நம்பிக்கைகளும், முறைகளும் அவரவர் தனிப்பட்ட உரிமைகள்....
ஆனாலும் மதங்கள் சாாதியத்தை வளர்க்கின்றன என்ற கோபம் எனக்குண்டு....
பிறப்பில் சைவனான நான், சைவ ஆலயங்கள் போதிய அளவவில் மக்களுக்கு சேவை வெய்ய முன்வருவதில்லை என்ற கோபத்தையும் உடையவன்....
தேவையற்ற கூத்துக்களை நிறுத்திவிட்டு மக்களின் இதயநாடிகளை பிடித்துப் பார்ப்பதில் மதங்கள் செயற்படவேண்டும்.
சைவ ஆலயங்கள் சரியாக செயற்படுவதில்லை என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா?//

நீங்கள் சொல்வதில் உண்மையிருக்கின்றது. இன்று மதம் எனும் பெயரால் பலர் சாதியை வளர்த்துக்கொண்டு இருக்கின்றனர்.

ஆலயத்துக்கு வருகின்ற பணங்களை, பொருட்களை சிலர் வீணாக்கிக் கொண்டு இருக்கின்றனர். பசியால் பட்டினியால் வாடுகின்றவர்களுக்கு என்ன செய்கின்றார்கள் என்று பார்த்தால் பதில் கேள்விக்குறிதான்.

எத்தனையோ ஆலயங்கள் தினமும் பல இலட்சம் ரூபாய்களை உழைத்துக்கொண்டு இருக்கின்றன. இந்த ஆலயங்கள் அகதியாக இருக்கின்ற மக்களுக்கு என்ன செய்தன?

இதுதான் என் கேள்வியும்

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.

Admin said...

//வால்பையன் கூறியது...
//சைவ ஆலயங்கள் சரியாக செயற்படுவதில்லை என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா? //

சைவ ஆலயங்கள் என்றால் என்ன?
அசைவ ஆலயங்கள் என்றால் என்ன?

இது பற்றி கொஞ்சம் விளக்கமாக சொல்ல முடியுமா!?//

சைவ ஆலயம் என்றுதான் இருக்கின்றது, அசைவ ஆலயம் என்று நான் அறியவில்லை.

கோபி சைவ ஆலயம் என்று குறிப்பிட்டதில் பொருள் மயக்கம் இருப்பதாக நான் நினைக்கவில்லை.

ஆலயம் எனும் சொல்லை இந்துக்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்பது தவறானது என்று நான் நினைக்கின்றேன்.

இன்று இந்துக்கள் தங்களின் கடவுள் இருக்கும் இடத்தினை ஆலயம் அல்லது கோவில் என்றும், முஸ்லிம்கள் பள்ளிவாசல் என்றும், கிறிஸ்தவர்கள் தேவாலயம் என்றும் நாம்தான் வழக்கப்படுத்திக் கொண்டோம்.

பள்ளிவாசல் என்பது முஸ்லிம்களின் இறைவன் பள்ளிகொள்ளும் இடம். பள்ளிவாசல் என்று இந்துக்கள் தமது கடவுள் இருக்கும் இடத்தினை குறிப்பிடுவதில் தவறு இல்லை.

தேவாலயம் என்பதும் கிறிஸ்தவர்களின் தேவன் இருக்கும் இடம் இதனையும் இந்துக்களோ, முஸ்லிம்களோ தமது கடவுள் இருக்கும் இடத்தினை தேவாலயம் என்று சொல்வதில் தப்பு இல்லை.

ஆலயம், கோவில், பள்ளிவாசல், தேவாலயம் என்பதனை எந்த மதமும் பயன்படுத்துவதில் தவறு இருப்பதாக நான் உணரவில்லை. நாம்தான் ஒவ்வொரு மதமும் தமக்கென அந்தந்த சொற்களை பயன்படுத்துகின்றனர்.

இந்த நோக்கிலேதான் கோபி சைவ ஆலயங்கள் என்று குறிப்பிட்டிருக்கின்றார். என்று நினைக்கின்றேன்.

Admin said...

//ஸ்ரீராம். கூறியது...
வால் பையன் வந்து வாதம் பண்ண ஆரம்பிச்சிட்டா நாம சொல்ல வந்தது எல்லாம் மறந்து போய் 'ஆ'ன்னு பார்த்துகினு இருக்க வேண்டியதா இருக்கு. ஸாரி சந்துரு சொல்ல வந்ததே மறந்து போச்சு...!//

சொல்ல வந்தத சொல்ல மறந்திடாதிங்க அந்த இடத்தில.....

வருகைக்கு நன்றிகள்.

வால்பையன் said...

//ஆலயம் எனும் சொல்லை இந்துக்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்பது தவறானது என்று நான் நினைக்கின்றேன். //

ஆலயம் என்ற வார்த்தையை முதலில் தமிழர்ல் பயன்படுத்தக்கூடாது!

ஆலயம் என்பது சமஸ்கிருதச்சொல்,,
ஹிமாலயம் ஒரு உதாரணம்,

ஆலயத்திலிருந்து வந்தது தான் ஆங்கில hall!

தமிழனுக்கும் இந்து என்ற மதத்திற்கும் சம்பந்தமே இல்லாத போது எதுக்கு ஆலயமும், சைவமும்!

Admin said...

//ஜோ அமலன் ராயன் பர்னாண்டோ கூறியது...
சாதிகளை பிரித்தவர்களும் மனிதர்களே, கடவுளை அங்கே கொண்டு போகவேண்டாம் என்றதும் மனிதர்களே, கடவுள் இவர்கள் கொண்டு போகவில்லை என்று சொல்லி அவர்களுக்கு வரம் கொடுக்காமலும் விடவில்லை.//

அய்யா ச்ந்துரு அவர்களே!

கடவுளே மக்களை நாற்குலங்களாகப் பிரித்தார் என்று இந்துக்கள் நம்பிக்கை. இக்குலங்களே பின்னர் ஜாதிப்பிளவுகளாக கொடூரவடிவமெடுத்தன; அதில் ஒன்றைத்தான் நீங்கள் உங்கள் இப்பதிவில் குறிப்பிட்டீர்கள்.

பகவத்கீதையையே மனிதன் எழுதினான் என்று சொல்லிவிட்டுப்போங்கள். அது சரி. ஆனால், கடவுள் மனிதர்களைப்பிரிக்கவில்லை என்று பொய் சொல்லவேண்டாம்.//

இந்துக்களிடையே நம்பிக்கை மூட நம்பிக்கை என்று இருக்கின்றது. நம்பிக்கையைவிட சில மூட நம்பிக்கைகள் மக்களை தீய வழியிலே கொண்டு செல்கின்றன.

எனது முன்னைய பதிவுகளிலே இந்துக் கடவுளர்களின் அவதாரமும் நோக்கங்களும் பற்றி குறிப்பிட்டிருக்கின்றேன் அதனைப் பாருங்கள் உங்கள் கேள்விக்கான பதில் கிடைக்கும்.

இந்துக்களிடையே நம்பிக்கை, மூட நம்பிக்கை என்று இருக்கின்றது. நம்பிக்கையைவிட சில மூட நம்பிக்கைகள் மக்களை தீய வழியிலே கொண்டு செல்கின்றன.

எனது முன்னைய பதிவுகளிலே இந்துக் கடவுளர்களின் அவதாரமும் நோக்கங்களும் பற்றி குறிப்பிட்டிருக்கின்றேன் அதனைப் பாருங்கள் உங்கள் கேள்விக்கான பதில் கிடைக்கும்.

பகவத் கிதையினை தரம் குறைப்பதற்கு நான் கடவுள் நம்பிக்கையில்லாதவன் இல்லை.

Admin said...

//ஜோ அமலன் ராயன் பர்னாண்டோ கூறியது...
//கடவுளுக்கு சாராயம் கொடுப்பதென்பதே மூட நம்பிக்கைதான். //

அய்யா சந்துரு அவர்களே!

கடவுள் ஏன் சாராயம் குடிக்கக்கூடாது?

கடவுள் காதலிக்கிறார்; இரண்டு, மூன்று மனைவகள் கட்டிக்கொள்கிறார். சாதிக்கொன்னாக. முருகன், வெள்ளையா உயர்ந்தஜாதிப்பெண்ணொன்றையும் (தெய்வானை), கருப்பா கீழ்ஜாதிப்பெண்ணையும் (வள்ளி) கட்டிக்கொள்கிறார். கோபம் கொண்டு பெற்றோரை விட்டுப்பிரிகிறார். இராமன் தன் மனைவியின் கற்பைசோதிக்கிறார். கடவுள் விதவைதமான் உணவுகளை உண்டு, கேளிக்கை வாழ்க்கையை வாழ்கிறார்கள்.

இவற்றுக்கெல்லாம் ஒரு உள்ளர்த்தம் உண்டு; அதைத் தேடிக்கண்டு பயனடைய வேண்டும் என இந்துக்கள் சொல்கிறார்கள்.

ஏன் கடவுள் சாராயத்தைமட்டும் குடிக்ககூடாது என்கிறீர்கள்?

கள்ளக்கலவியே பண்ணுவதைவிட இது அசிங்கமா?

மனிதன் செய்யும் அனைத்தையும் எங்கள் சாமிகள் செய்யும்; அது சரி என்று சொல்லிவிட்டு, சாராயம் மட்டும் கூடாது என்பதில், ஒரு உயர்ஜாதித்திமிர் உள்ளது/

மேலும், எவ்வளவுதான் நல்லெண்ணத்தில் எழுதியிருப்பினும், உங்கள் பார்வை கிராமத்து மனிதர்களில் கலாச்சாரத்தை எள்ளல் பண்ணுவதாகத்தான் தெரிகிறது!//

இதற்கான பதிலையும் எனது முன்னைய பதிவுகளையும் அப்பதிவுகளின் எனது பின்னூட்டங்கையும் பாருங்கள் விடை கிடைக்கும்.

வால்பையன் said...

//பகவத் கிதையினை தரம் குறைப்பதற்கு நான் கடவுள் நம்பிக்கையில்லாதவன் இல்லை. //

கீதையை கேள்வி கேட்பதற்கு படிக்க தெரிந்தவனாக இருந்தால் போதும்!

இன்று உன்னுடயது
நாளை மற்றவருடயதுன்னு சொல்றாங்களே

பொண்டாட்டிய அப்படி விட்டுடலாமா?

பாஞ்சாலியை ஐந்து பேர் கட்டினா மாதிரி நாம ஆம்பளைங்க ஐந்து பேர் ஒரு பொம்பளைய கட்டிகலாமா?

Admin said...

//வால்பையன் கூறியது...
//ஆலயம் எனும் சொல்லை இந்துக்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்பது தவறானது என்று நான் நினைக்கின்றேன். //

ஆலயம் என்ற வார்த்தையை முதலில் தமிழர்ல் பயன்படுத்தக்கூடாது!

ஆலயம் என்பது சமஸ்கிருதச்சொல்,,
ஹிமாலயம் ஒரு உதாரணம்,

ஆலயத்திலிருந்து வந்தது தான் ஆங்கில hall!

தமிழனுக்கும் இந்து என்ற மதத்திற்கும் சம்பந்தமே இல்லாத போது எதுக்கு ஆலயமும், சைவமும்!//

தமிழனுக்கும் இந்து என்ற மதத்துக்கும் தொடர்பில்லை என்று நீங்கள் குறிப்பிடுவது
சிரிக்கத் தோன்றுகின்றது.

Admin said...

//வால்பையன் கூறியது...
//பகவத் கிதையினை தரம் குறைப்பதற்கு நான் கடவுள் நம்பிக்கையில்லாதவன் இல்லை. //

கீதையை கேள்வி கேட்பதற்கு படிக்க தெரிந்தவனாக இருந்தால் போதும்!

இன்று உன்னுடயது
நாளை மற்றவருடயதுன்னு சொல்றாங்களே

பொண்டாட்டிய அப்படி விட்டுடலாமா?//

பகவத் கீதையினை மேலோட்டமாக பார்க்காமல் அதன் உள் அர்த்தங்களை ஆராய்ந்து பாருங்கள் பொருள் விளங்கும்.

//பாஞ்சாலியை ஐந்து பேர் கட்டினா மாதிரி நாம ஆம்பளைங்க ஐந்து பேர் ஒரு பொம்பளைய கட்டிகலாமா?//

இதற்கான பதிலை எனது முன்னைய பதிவுகளிலே உங்களால் இந்தக் கேள்வி கேட்கப்பட்டபோது சொல்லி இருக்கின்றேன்.

உலகத்தில் அதர்மம் தலை தூக்கும்போது மக்களை நல்வழிப்படுத்துவதட்காக இறைவன் பல அவதாரங்களை எடுத்திருக்கின்றார். அந்தந்த அவதாரங்கைப் பற்றி ஆராய்ந்து பார்த்தால் புரிந்து கொள்ள முடியும்.

வால்பையன் said...

//இதற்கான பதிலையும் எனது முன்னைய பதிவுகளையும் அப்பதிவுகளின் எனது பின்னூட்டங்கையும் பாருங்கள் விடை கிடைக்கும். //

பரவாயில்லை, அங்கிருந்து காப்பி செய்து இங்கே பேஸ்ட் செய்யுங்கள்!

மொட்டாராசா குட்டய விழந்த கதையா தப்பிக்க பார்க்காதீர்கள்!

வால்பையன் said...

//தமிழனுக்கும் இந்து என்ற மதத்துக்கும் தொடர்பில்லை என்று நீங்கள் குறிப்பிடுவது
சிரிக்கத் தோன்றுகின்றது. //

மக்கள் வேற எதாவது நினைச்சிக்க போறாங்க! தனியா நின்னு சிரிக்காதிங்க!

கேட்டதுக்கு பதில் சொல்லனும் இப்படி சிரிக்க கூடாது! தமிழனுக்கும், இந்து மதத்துக்கும் என்ன சம்பந்தம்?

வால்பையன் said...

//பகவத் கீதையினை மேலோட்டமாக பார்க்காமல் அதன் உள் அர்த்தங்களை ஆராய்ந்து பாருங்கள் பொருள் விளங்கும். //

நான் சொன்னது என்ன அட்டையிலா இருக்கு!?
உள் அர்த்தத்தை தானே சொல்லிகிட்டு இருக்கேன்!

//உலகத்தில் அதர்மம் தலை தூக்கும்போது மக்களை நல்வழிப்படுத்துவதட்காக இறைவன் பல அவதாரங்களை எடுத்திருக்கின்றார். //

அப்பவெல்லாம் ஊருல இருக்குற பொம்பளைங்க சேலையை திருடு விளையாடுவாராக்கும்! அதுக்கு ஒரு உள் அர்த்தம் வேற இருக்காக்கும்!

தூங்குறவங்களை எழுப்பலாம், தூங்குற மாதிரி நடிக்கிறவங்கள!?

விவிக்தா said...

மூட நம்பிக்கையில் தொடங்கி அப்பிடியே மெல்ல மெல்ல பஹவத்கீதை பக்கம் போனதால இதையும் கொஞ்சம் பாருங்க...
http://ithuvum.blogspot.com/

Post a Comment