Tuesday, 14 June 2011

கச்சதீவு யாருக்கு? இலங்கை இந்திய அரசியல்வாதிகளின் காய் நகர்த்தல்கள்

பாக்கு நீரிணையில் இருக்கும் கச்சதீவு இலங்கைக்கு சொந்த மான ஒரு தீவு. இத்தீவின் நிர்வாகம் இலங்கையின் இறை மைக்கு உட்பட்டதாக அமைந்திருக்கிறது.


தமிழ்நாட்டின் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா கச்சதீவை மீண்டும் இந்தியா இலங்கையிடம் இருந்து பறித்து தமிழ்நாட்டின் ஒரு பிரதேசமாக இணைத்துக் கொள்ள வேண்டுமென்று மேற்கொள்ளும் போராட் டம் என்றுமே வெற்றியடையப் போவதில்லை என்று கடற்றொழில், நீர்வள அபிவிருத்தித் துறை அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.


இந்தியா சர்வதேச சட்டங்களை மதித்து நடக்கும் உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடாகும். எனவே, இந்திய அரசாங்கம் எக் காரணம் கொண்டும் செல்வி ஜெயலலிதாவின் கோரிக்கைக்கு செவிமடுத்து செயற்படப் போவதில்லை. இலங்கைக்கும் இந்தியா விற்கும் இடையிலான பல்லாண்டு காலம் நிலைத்திருக்கும் நல்லுற வும், பரஸ்பர ஒத்துழைப்பும் கச்சதீவு பிரச்சினையினால் என்றுமே சீர்குலைந்துவிடாது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.


1974ம் ஆண்டில் இந்தியாவின் பிரதம மந்திரியாக இருந்த இந்திரா காந்தி அம்மையாருக்கும், இலங்கைப் பிரதம மந்திரி சிறிமாவோ பண்டாரநாயக்க அம்மையாருக்கும் இடையிலிருந்த நட்புறவும், ஒத்துழைப்பு காரணமாகவே இந்திய அரசாங்கம் கச்சதீவு இலங் கைக்கு தான் சொந்தமானது என்ற தீர்க்கமான சரியான முடிவை எடுத்து, அதனை அவ்வாண்டில் நிறைவேற்றப்பட்ட இந்திரா – சிறிமாவோ ஒப்பந்தத்தின் மூலம் இலங்கைக்கு தாரைவார்த்துக் கொடுத்தது.


இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடும் வரையில் இலங்கை, இந்திய கடற் றொழிலாளர்கள் கடலில் நீண்டநேரம் மீன்பிடித்த பின்னர் கச்சதீவு கரையில் இறங்கி, அங்கு சில மணித்தியாலங்கள் ஓய்வெடுத்து தாங்கள் கொண்டுவந்த ஆகாரத்தை சமைத்து வயிறாற புசித்த பின்னர் மீண்டும் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடிப்பார்கள்.


இத்தகைய சந்தர்ப்பங்களில் இலங்கை மீனவர்களுக்கோ, இந்திய மீன வர்களுக்கோ இடையில் எக்காரணம் கொண்டும் கசப்புணர்வு களோ, வன்முறைகளோ ஏற்பட்டதில்லை. அதற்கு காரணம் கச்ச தீவில் இருக்கும் ஒரே ஒரு கட்டடத்தில் அமைந்திருக்கும் புனித அந்தோனியாரின் சிறிய தேவாலயமாகும். அங்கு மீனவர்கள் இந்துக் களாகவோ, கிறிஸ்தவர்களாகவோ இருந்தாலும் கடலில் தங்களை வழிகாட்டி காப்பாற்றும் தெய்வமாக மதிக்கும் புனித அந்தோனியாரின் திருப்பாதங்களில் மண்டியிட்டு அவரது ஆசிர்வாதத்துடனேயே தங்கள் கடற்றொழிலை ஆரம்பிப்பதுண்டு.

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தில் நடைபெறும் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவில் இலங்கையிலிருந்தும், இந்தி யாவில் இருந்தும் நூற்றுக்கணக்கான மக்கள் சென்று கலந்து கொள் வார்கள். இந்த சந்தர்ப்பத்தில் இந்தியர்கள் தங்கள் கைவசமுள்ள சேலை போன்ற பலதரப்பட்ட பொருட்களை அங்கு கொண்டு வந்து இலங்கைப் பயணிகளுக்கு விற்பனை செய்வார்கள். அது போன்று இலங்கையரும் இந்தியாவில் அன்று தட்டுப்பாடக இருந்த தேங்காய் எண்ணெய், சவர்க்காரம் போன்ற பொருட்களை இந்தியர்களுக்கு விற்பனை செய்வார்கள்.


இரு நாட்டு மக்களுக்கிடையில் இருந்த இந்த நல்லுறவு இலங்கையில் பயங்கரவாதம் தோன்றிய பின்னரே பாதிப்பிற்குள்ளானது. அதற்கு பின்னரே பாதுகாப்பு காரணங்களுக்காக இலங்கை கடற்படையி னரின் கெடுபிடிகளும் ஆரம்பமாகின.


70ம் ஆண்டு தசாப்தத்தில் சிறிமாவோ பண்டாரநாயக்க அம்மையா ரின் அரசாங்கம் இலங்கைக்கு வெளிநாட்டிலிருந்து உப உணவுப் பொருட்களின் இறக்குமதியை முற்றாக தடை செய்த போது, இலங்கையில் ஒரு இறாத்தல் செத்தல் மிளகாய் 45ரூபாவுக்கு விற் பனையாகியது. இது ஒரு பெரும் விலை அதிகரிப்பு என்பதனால் அன்று மக்கள் செத்தல் மிளகாய்க்கு பதில் மிளகையே காரத்தை அதிகரிப்பதற்காக பயன்படுத்தினார்கள்.


இந்த கச்சதீவு திருவிழா காலத்தில் இந்தியர்கள் ஒரு இறாத்தல் மிள காயை 4 ரூபாவிற்கு கச்சதீவில் விற்கும் போது அவற்றை எமது மக்கள் மகிழ்ச்சியுடன் வாங்கிக் கொள்வார்கள். கச்சத்தீவு இவ்விரு நாடுகளின் நட்புறவின் மையமாக அன்று விளங்கி வந்தது.


தமிழ் நாட்டின் அரசியல்வாதிகள் கச்சதீவையும், கடற்றொழிலாளர்களின் பிரச்சினையையும் அரசியலாக்கி தமிழ்நாட்டு மக்களின் அவதான த்தை திசைதிருப்பி மாநில அரசாங்கத்தின் பலவீனங்களை மறை த்துவிட எத்தனிக்கின்ற போதிலும் கச்சத்தீவுப் பிரச்சினை இலங்கை இந்திய நல்லுறவுக்கு எவ்வித பாதிப்புகளையும் ஏற்படுத்தப் போவதில்லை என்று டாக்டர் ராஜித்த சேனாரத்ன மேலும் தெரி வித்துள்ளார்.


இன்றும் கூட கச்சதீவு இலங்கையின் இறைமையின் கீழ் வரும் ஒரு பிரதேசமாக இருக்கின்ற போதிலும் அங்கு இந்திய மீனவர்கள் அனுமதியின்றி வந்து தங்கியிருந்து செல்வதற்கு இந்த கச்சதீவு உடன்படிக்கை இடமளிக்கிறது. இவ்விதம் இந்திய மீனவர்களுக்கு கச்சதீவிற்கு வந்து செல்வதற்கு பூரண உரிமையை இருக்கின்ற போதிலும் தமிழ்நாட்டின் மாநில அரசாங்கம் கச்சத்தீவின் மீது உரிமை கொள்வதற்கு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து நாம் உண்மையிலேயே வேதனை அடைகின்றோம்.


பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட பின்னர் இலங்கையில் மீண்டும் நிரந்தர அமைதியும், சமாதானமும் நிலைகொண்டிருக்கும் இவ்வேளையில் தமிழ் நாட்டிலுள்ள சில அரசியல் தலைவர்கள் கச்சத்தீவு விடயத் தில் அரசியல் இலாபம் தேட எத்தனிக்கும் முயற்சிகளை இனி மேலாவது கைவிட வேண்டும். இது இரு நாடுகளுக்கிடை யிலான நல்லுறவு மேலும் சிறப்புற்று விளங்குவதற்கு உதவியாக அமையும்.

நன்றிகள் - உண்மைகள்
read more...

Monday, 13 June 2011

காட்சிப் பொருளாக்கப்பட்ட பெண்கள்

பெண்கள் பற்றிய தொடர் பதிவொன்றை முன்னர் இடுகையிட்டிருந்தேன். அதன் தொடராக பதிவெழுத இருக்கின்றேன். அத்தொடரை தொகுத்து ஒரு பதிவாக தருகின்றேன்.


இப் பதிவு ஆண்களையோ, பெண்களையோ குற்றம் சொல்வதற்காக அல்ல. என்னால் அறியப்பட்ட  சில சம்பவங்களும் நான் என்னக்குள்ளே கேட்டுக்கொண்ட கேள்விகளுமே

இன்று பெண்ணடிமை பற்றி பேசப்பட்டாலும். பெண்களுக்கு எதிரான  வன்முறைகளுக்கு எதிராகா பல்வேறுபட்ட அமைப்புக்கள் குரல்கொடுத்து வந்தாலும். இன்று பெண்ணடிமை இன்று இல்லையா என்று கேட்டால். பதில் கேள்விக்குறிதான்.

இன்று பெண்ணடிமை இல்லை, பெண்களுக்கு எதிரான வன்முறைகள் இல்லை என்று சொல்ல முடியாது. பெண்ணடிமை என்று சொன்னாலே எல்லோரும் பெண்களை ஆண்கள்தான் அடிமைப் படுத்துகின்றனர் என்று கருத்திலெடுத்துக் கொள்கின்றனர். ஆண்கள் மட்டுமல்ல இன்று பெண்களை பெண்களே அடிமைப் படுத்துகின்ற நிலை பரவலாக இருக்கின்றது. பெண்கள் பல்வேறு வழிகளிலே பல்வேறு காரணங்களுக்காக  அடிமைப் படுத்தப் படுவதோடு வன்முறைகளுக்கும் ஆளாக்கப் படுகின்றனர்.

 பெண்களை ஏன் நாம் இரண்டாம் நிலைக்கு தள்ளுகின்றோம். பெண்களும் எங்களைப் போன்ற மனிதர்களேதான்.  அவர்களுக்கும் எல்லோர்போலவும் சம உரிமை இருக்கின்றது. ஆனால் என்ன செய்கின்றோம் பெண்களை சிலர் (பெண்கள் உட்பட) அடக்கியாள நினைக்கின்றோம். இதனால் சில பெண்கள் தாங்களாகவே பெட்டிப்பாம்பாக வீட்டுக்குள்ளேயே அடங்கி விடுகின்றனர்.

இந்த அடக்கு முறைகளையும் மீறி ஒரு பெண் தலை நிமிர்ந்து வாழ நினைத்தால், அடக்கு முறைகளுக்கும், சவால்களுக்கும் முகம் கொடுத்து அவள் சம உரிமையோடு முன்னேற நினைத்தால் அவளை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கின்ற சமூகமும் இருக்கின்றது. இதனால் அந்தப் பெண்ணால்  தொடர்ந்துதான் முன்னேற முடியுமா?

பெண்களுக்கு சில சமுக கட்டுப்பாடுகள் இருக்கின்றன. அதேபோல் ஆண்களுக்கும் கட்டுப்பாடுகள் இருக்கின்றன. ஆனால் பெண்கள் அந்த கட்டுப்பாட்டை சிறிது மீறினாலே   அவளைப் பற்றி இலவச விளம்பரம் செய்கின்ற மனிதர்களும் ஊடகங்களும் சில ஆண்கள் செய்கின்ற காம லீலைகளை ஏன் அரங்கேற்ற மறுக்கின்றன.

இன்று எத்தனை போலிசாமியார்களுக்கு எத்தனை ஊடகங்கள் விலைபோய் இருக்கின்றன. அவர்களின் காம லீலைகளை அரங்கேற்றலாம்தானே. அதனை விடுத்து ஒரு பெண் தெரிந்தோ தெரியாமலோ ஒரு தவறை செய்தால் ஏன் அவளை மட்டும் நடத்தை கெட்டவள் என்ற பெயர் சூட்ட வேண்டும்.

ஒரு பெண் விபச்சாரத்தில் ஈடுபட்டால் என்றால் அவளை கைது செய்து விபச்சாரி எனும் பட்டத்தோடு. உலகிக்கே அவளை மானம் கெட்டவள் என்று வெளிச்சம் போட்டுக்காட்டும் இந்த ஊடகங்களும் நபர்களும் ஏன் அந்த பெண்ணுடன் விபச்சாரத்தில் ஈடுபட்ட ஆணை வெளிச்சத்துக்கு கொண்டுவர மறுக்கின்றது.

பெண் தவறு செய்தால் நடத்தை கெட்டவள். ஆண் தவறு செய்தால் நல்லவனா?  ஒரு ஆண் ஒரு விபச்சாரியிடம் போகவில்லை என்றால் அவள் எப்படி விபச்சாரி ஆகமுடியும். இங்கே பெண்ணில் மட்டும் தவறில்லை. ஆண்களிலும் தவறு இருக்கின்றது. அதனை விடுத்து பெண்களுக்கு மட்டும் விபச்சாரி பட்டம் வழங்குவது என்ன நியாயம் இருக்கிறது?

இன்று பெண்களை காட்சிப் பொருளாக பார்க்கின்ற நிலை இருக்கின்றது.  பெண்கள் காட்சிப் பொருளாக பயன்படுத்தப் படாத இடம் இல்லை என்றேதான் சொல்லவேண்டும். கணவன் மட்டுமே கண் காணும் அழகை சில பெண்கள் காட்சிப் பொருளாக விற்றுக்கொண்டு இருக்கின்றனர்.

 விளம்பரங்களிலே அரை குறை ஆடைகளோடு ஒரு பெண் வந்தால்தான் அந்த பொருளுக்கு நல்ல விற்பனை வாய்ப்புக்கள் கிடைக்கும் என்ற நிலைக்கு வந்துவிட்டது. எப்படிப்பட்ட ஒரு தரமற்ற பொருளையும் ஒரு பெண்ணை அரை குறை ஆடைகளோடு காட்டி அதிக கேள்வியை ஏற்படுத்தி பொருளை இலகுவாக விற்க முடியும் என்ற நிலை தோன்றிவிட்டது.

இன்று வெளிநாடுகளில் மட்டுமல்ல எமது நாட்டை எடுத்துப் பாருங்கள் வீதிகளிலே இருக்கின்ற விளம்பரப் பலகைகளில் அதிகமானவை எப்படி இருக்கின்றன. இந்த சமுக சீர்கேடு தேவைதானா? அது அவர்களின் சுதந்திரம் என்று சொல்ல வேண்டாம் ஒருவரின் சுதந்திரம் மற்றவரின் மூக்குவரை செல்லாதவரைக்கும்தான். சுதந்திரம் இருக்கலாம் ஆனால் ஒரு சமுகத்தின் கலாசாரத்தை பதிக்காத வகையில் அந்த சுதந்திரம் இருக்க வேண்டும்.





சில விடயங்களைப் பேசுகின்றபோது சில எதிர்ப்புக்கள் வரலாம் என்பதனால் மேலோட்டமாக முந்திய இடுகையிலே  மேலோட்டமாக சில விடயங்களை குறிப்பிட்டு இருந்தேன். இருந்தாலும் இத்தொடருக்கு பாரிய ஆதரவு இருப்பது சந்தோசப்பட வேண்டிய விடயமாக இருக்கின்றது. இன்னும் விரிவாக ஆராயலாமே, தொடர்ந்து எழுதுங்கள் என்று பலரும் வேண்டிக்கொண்டதுக்கு இணங்க அனைத்து விடயங்களையும் சற்று விரிவாக ஆராயலாம் என்று இருக்கிறேன்.
அத்தோடு கடந்த இடுகையிலே கருத்துரைகளிலே சிலர் கேட்ட கேள்விகளுக்குரிய விளக்கங்களை. இங்கே கொடுக்கவும் இருக்கிறேன்.


பெண்ணடிமைத் தனமென்பது எங்கிருந்து ஆரம்பிக்கின்றது? பெண்களுக்கு எதிரான  வன்முறைகள் எங்கே ஆரம்பிக்கின்றன என்று பார்த்தால் ஒரு பெண்ணுக்கு தன் வீட்டிலேயும் குடும்பத்திலேயும்தான் ஆரம்பிக்கின்றது. அதனையும் விட ஒரு படி மேலே சென்று பார்ப்போமானால். பெண்களுக்கு எதிரான  வன்முறைகள் பெண் பிறப்பதற்கு முன்னரே கருவிலேயே ஆரம்பித்து விடுகின்றன. எத்தனை பெண் பிள்ளைகள் கருவிலேயே அழிக்கப்பட்டிருக்கின்றன, அழிக்கப் பட்டுக்கொண்டிருக்கின்றன.


எதற்காக இந்த பெண் பிள்ளைகள் கருவிலேயே அழிக்கப்படவேண்டும். இதற்கு அந்த பெண்ணும் காரணமாக இருக்கின்றாளே எனும்போது நாம் வெட்கித்தலை குனிய வேண்டி இருக்கின்றது. கருவிலே இருப்பது ஆண் குழந்தை என்றால் சந்தோசப்படும் பெண் கருவிலிருப்பது பெண் குழந்தை என்றால் அதனை அளக்க நினைப்பது ஏன். தானும் ஒரு பெண்தான் என்பதனை மறந்து விடுகின்றாளா?


சரி ஒரு பெண்குழந்தை பிறந்து விட்டது என்றால். அவளை எந்தளவு அடக்கி ஒடுக்க முடியுமோ எந்தளவுக்கு  அடக்கி ஒடுக்க நினைக்கும் சமூகமும் இல்லாமல் இல்லை. ஆண்களுக்கும், பெண்களுக்கும் சில சமூகக் கட்டுப்பாடுகள் இருக்கின்றன. ஆனாலும் இங்கே நடப்பது என்ன பெண்களை பெண்களை வெளியில் செல்ல விடாமல் பெட்டிப்பாம்பாக வீட்டுக்குள்ளேயே அடக்கி வைக்கின்ற எத்தனை பெற்றோர் இருக்கின்றனர். 


பெண் என்றால் அடுப்படிக்கு மாத்திரமே என்று சொல்லுகின்ற எத்தனையோ பெற்றோர் இருக்கின்றனர். இவர்களின் இந்த மூட எண்ணங்களால் எத்தனையோ பெண்கள் கல்வி இழந்து, தனது வாழ்க்கையையே தொலைத்து நிக்கின்றனர். 


இத்தனையையும் தாண்டி ஒரு பெண் திருமணம் என்று ஒரு படி சென்றுவிட்டால். சில கணவன்மார்களால் படுகின்ற சித்திர  வதைகள்தான் எத்தனை?  போதாக்குறைக்கு மாமியாரும் வந்து சேர்ந்து விடுவார். தன் மனைவியை அடிமைபோல் நடாத்துகின்ற எத்தனை கணவன்மார்களை பார்த்திருக்கின்றோம், தனக்கு சமைத்துப் போடுவதற்கும், தனது உடல் சுகத்துக்குமே பெண் என்று பெண்ணை ஒரு போகப் பொருளாக பார்க்கின்றவர்கள் எத்தனை  பேர் இருக்கின்றனர். (மனைவியை தெய்வம்போல் போற்றுகின்ற கணவன்மாரும் இல்லாமல் இல்லை) மாமியார்கள் விட்டார்களா பெண்களை எத்தனை பாடுபடுத்துகின்றனர். இந்த மாமியார்கள் ஒன்றை புரிந்து கொள்கின்றார்களா தானும் ஒரு பெண்தான் என்பதனை. 

முந்திய இடுகையிலே நண்பர் ரோஸ்விக் தனது கருத்திலே ...

கூர்ந்து நோக்குங்கள் எல்லா இடங்களிலும் பணம் ஒழிந்திருப்பது தெரியும். பெண் பணத்திற்காக விபச்சாரம் செய்கிறாள். பெண்களை விபச்சாரி என்று எழுதும்போது தான் பத்திரிக்கைகள் அதிகம் விற்கிறது. அங்கும் பணம். மாடலிங் மற்றும் திரைத்துறையில் அதிக பணம் பெற வேண்டி இவர்கள் ஆடை அவில்பிற்கு தயாராகிறார்கள். அதன் மூலம் படமும் நிறைய பணம் ஈட்டும் என்பதால் தயாரிப்பாளர்களும் உடன் படுகிறார்கள்.

பெண்களை இது போன்ற காரியங்களில் இருந்து வெளி வர சொல்லுங்கள். கட்டாயப்படுத்தும் ஆண்களை கால்களுக்கிடையில் மிதிப்போம். 
பெண்களை இது போன்ற விஷயங்களில் ஈடு படக்கூடாது என்று தடை போட்டால்.... அதற்கும் ஒரு கூட்டம் வரும், எங்கள் சுதந்திரம் பறிக்கப்படுகிரதேன்று....

பெண்களின் அழகு ஆண்களை மட்டுமல்ல... பெண்களையும் கவரக்கூடியது என்று நீங்கள் கருதினால், சில பெண்களை விளம்பரத்தில் இருந்து மட்டுமல்ல... விபச்சாரத்தில் இருந்தும் வெளிக்கொணர முடியாது. 

என்று சொல்லி இருந்தார் உண்மைதான் இன்று பணத்துக்காக மனிதன் எதனையும் செய்யத்துணிந்து விட்டான். விளம்பரம் சினிமா போன்ற துறைகளிலே தனது கவர்ச்சியைக் காட்டி பிழைப்பு நடாத்துகின்ற , எல்லா பெண்களிலும் நாம் தவறு சொல்ல முடியாது. எத்தனை பெற்றோர் பணத்துக்கு ஆசைப்பட்டு தனது பிள்ளை விரும்பாமலே சினிமா துறைக்குள் நுளைத்திருக்கின்றார்கள். சரி ஒரு பெண் தவறான முறையில் செல்கின்றாள் என்றால் அதனை முடிந்தவரை பெற்றோரால் தடுக்க முடியும் ஆனால் சில பெற்றோரின் அசமந்த போக்கினாலே இன்று பல பெண்கள் இத்துறைகளை நாடிச்செல்ல வேண்டி இருக்கின்றது.

இன்று விபச்சாரிகளாக இருக்குமதிகமான பெண்கள் பணத்துக்காகவே இந்த தொழிலை செய்கின்றனர். பெற்றோரால் கைவிடப்பட்டு, கணவனால் கைவிடப்பட்டு, சொந்தங்களால் தூக்கி எறியப்பட்டு தான் வாழ வழியின்றி இத் தொழிலுக்கு வந்த பெண்களே அதிகம். இந்த இடத்திலே இப்படிப்பட்ட பெண்களை நாம் எந்த வகையில் குற்றம் சொல்ல முடியும். இவள் சார்ந்த சமுகத்தின் மீதுதான் குற்றம் இந்த சொல்லவேண்டும். 

சரி அந்தப் பெண் தெரிந்தோ தெரியாமலோ தவறு செய்துவிட்டாள். எல்லாவற்றையும் விட்டு தடைகளை எல்லாம் தகர்த்தெறிந்துவிட்டு வெளி உலகுக்கு வருகின்றாள். அப்போது இந்த சமுகம் அவளை ஏற்கின்றதா? இல்லையே நடத்தை கெட்டவள் என்று ஒதுக்கி வைக்க நினைக்கின்றது. அவள் மணம் திருந்தி வந்துவிட்டாள் அவளை சமுகத்தில் ஒருத்தியாக ஏற்றுக்கொள்கிறதா சமுகம்? இல்லையே.

ஆனால் ஒரு பெண் இவ்வாறான நடவடிக்கைகளினால் நடத்தை கெட்டவனாக இருந்தால் அடுத்த நிமிடமே மறந்து விடுகின்றோம் ஏன் இந்த நிலை. நண்பர் கோபி தனது கருத்துரையிலே  சொன்னதுபோல் பெண் செய்கின்றபோது விபச்சாரமாகவும் ஆண்கள் செய்கின்றபோது ஆண்மையாகவும் பார்க்கின்றது இந்த சமுகம்.
ஒரு ஆணுடன் அதிகமாகப் பேசினாலே கட்டுக்கதைகள் கட்டி கெட்டவள் என்று பட்டம் கொடுக்கும் சமுகம் ஒரு ஆண் வீரம் பேசுவான் நான் அவளோடு அப்படி நடந்தேன், இவளோடு இப்படி நடந்தேன் என்று. இதனை கேட்டு இரசிக்கிறது நம் சமுகம். இது எந்த விதத்தில் நியாயமானது. ஏன் நாம் பெண்களை இந்த அளவுக்கு பெண்களை பார்க்கின்றோம்.

மதுவதனன் மௌ. தனது கருத்திலே....


//பதிவுகளில் பெண்களின் கவர்ச்சிப் படத்தைப் போடுவதில் எனக்கு சிறிதும் உடன்பாடில்லை. என்ன செய்வது ஆண்கள் ரசிக்கிறார்கள் என்பதற்காக கவர்ச்சிப் படத்தைப் போடுகிறார்கள்.


ஒவ்வொரு முறையும் பதிவுகளில் போடப்படும் கவர்ச்சிப் படங்களைப் பார்க்கும்போதெல்லாம், அதைப் பார்க்கும் பெண்கள் என்ன சிந்திப்பார்கள் என்பதுதான் எனது மனதில் ஓடும்.//


என்று தனது ஆதங்கத்தை சொல்லி இருந்தார். ஒருவரை நாம் இதனைப் பதிவிட வேண்டாம் என்று சொல்ல முடியாது. இருந்தாலும் பெண்களின் அரை குறை ஆடைகளுடனான கவர்ச்சிப் படங்களை போட்டு பதிவிடும்போது இளைஜர்கள் வலைப்பதிவுக்கு வருவது அதிகம்தான். ஆனாலும் எல்லோரும் வர மாட்டார்கள். இந்த படங்களை பார்த்ததுமே சங்கடப்படுகின்றவர்கள் எத்தனையோ பேர் இருக்கின்றனர். 


வீதிகளிலே விளம்பரப் பலகைகளில் இருக்கும் படங்களைவிடவா நாங்கள் போடுவது அசிங்கம் என்று கேட்கலாம் ஆனாலும் வீதிகளிலே இருக்கின்ற அந்த படங்களைப் பார்த்து செய்வதறியாது மனதை சன்சலப்  படுத்திக்கொண்டு போகின்ற எத்தனையோ பெண்கள் இருக்கின்றனர். ஒரு பதிவர் நல்ல விடயங்களை பதிவிட்டிருந்தாலும் இந்த படங்களால் அந்த பதிவையே பார்க்காதவர்களும் இருக்கின்றனர். 


படம் பார்க்க வருபவர்களைவிட எங்கள் கருத்துக்களுக்காக வருபவர்களே எங்களுக்கு முக்கியம். இப்படிப்பட்ட படங்களை போடுகின்ற வலைப்பதிவுகளை குடும்பத்தோடு இருந்து பார்க்கின்றவர்கள் பார்ப்பதற்கு முன்வரமாட்டார்கள்.

இத்தொடர் நான் நினைத்ததனைவிட பலரும் பாராட்டி இருப்பதோடு தொடரும்படியும் கருத்துரைகளில் மாத்திரமல்ல சிலர் மின்னஞ்சல்களும் அனுப்பி இருந்தார்கள். அதிலே சிங்கப்பூரிலிருந்து வந்த ஒரு மின்னஞ்சலிலே இத்தொடரி  பாராட்டியிருப்பதோடுதொடு பல விடயங்களை கேள்விகளாக கேட்கப்பட்டிருக்கின்றன. அந்த கேள்விகளுக்கான ஏன் பார்வையிலான பதில்கள் அடுத்த பகுதியில் தருகின்றேன்.




இத் தொடர் பதிவு தொடர்பாக எனக்கு மின்னஞ்சலில் வந்த சில கேள்விகளும் அதற்குரிய என் கருத்துக்களும் உங்களுக்காக. மின்னஞ்சல் நீளமானதாகையால் முக்கியமான பகுதியை மட்டுமே தருகிறேன்.
//மனைவியை இழந்தால் கணவனுக்கு ஏதாவது பட்டம் உண்டா?...............................?
ஒரு பெண் கற்பழிக்கப் பட்டாள் ...என்றால் அது யாரால்?..................?
ஒரு பெண் மானபங்கம் படுத்தப்பட்டாள் அது யாரால்?......................?
தனக்குப் பிறந்த மகளுடன் தந்தை தகாத உறவு  இதற்கு காரணம் யார்?..............?

பெண்கள் விலைமாது ஆவதற்கு சில ஆண்களே காரணம்.அவர்கள் விலைமாதர்கள் என்று தெரிந்தும்,தேடிப்போவதும் ஆண்களே! அவர்கள் தேடிப்போவதால் தான் அத் தொழில் நடக்கின்றது எந்த ஒரு ஆண்மகனையும் போகமல் இருக்கச் சொல்லுங்கள் பார்க்கலாம்  முடியுமா?எந்த ஒரு ஆண் மகனும் போகாமல் இருந்தால் விபச்சாரி இல்லை,விபச்சாரம் இல்லை விலைமாது இல்லை .இதற்கு காரணம் யார்?.............?//

அவர் முதலாவதாக கேட்ட கேள்வி கணவனை இழந்தால் அந்த பெண்ணுக்கு கொடுக்கும் பட்டம் கைம்பெண், விதவை. மனைவியை இழந்தால் கணவனுக்கு ஏதாவது பட்டம் கொடுக்கிறார்களா என்று கேட்டு இருந்தார்.  மனைவியை இழந்த கணவனை தபுதாரன் என்று சொல்கிறோம் ஆனால் இப்படி ஒரு தமிழ் சொல் இருப்பது மட்டுமே ஆனால் பயன்படுத்துவது குறைவு.

இந்த சமுகத்திலே கணவனை இழந்த பெண்கள் வெகுவாகவே பாதிக்கப் படுகின்றனர். பொருளாதார நிலைமை சிக்கல்கள் ஒருபுறமிருக்க. சமூகம் இவர்களை ஓரம் கட்ட நினைக்கின்றது, அதிகமான விடயங்களிலே கட்டுப்பாடுகளை விதிக்கின்றது.

கணவனை இழந்த பெண் ஒரு நல்ல காரியத்துக்கு செல்ல முடியாது, நல்ல காரியம் நடைபெறும் இடத்திலிருந்து விலக்கி வைத்தல், நல்ல காரியத்துக்கு செல்கின்றபோது அந்த பெண் முன்னால் வந்தால் சகுனம் என்று சொல்வது. இது எல்லாம் எந்த வகையில் நியாயம்.






ஆனால் மனைவியை இழந்த ஒரு ஆணுக்கு இந்த கட்டுப்பாடுகள் இருக்கிறதா? இல்லையே மனைவியை இழந்த ஆண்கள் இந்த நிகழ்வுகளிலே முக்கியமானவர்களாக இருப்பார்கள் ஆனால் தனது சகோதரிக்கோ குடும்ப உறுப்பினர்களுக்கோதிருமணம் போன்ற  நல்ல விடயங்கள் நடை பெறும்போது இந்த பெண்கள் ஒதுக்கப் படுகின்றார்கள். அவர்களால் தான் பங்கு கொள்ளவில்லையே என்று அழுவதைத் தவிர வேறு வழியில்லை.

ஒரு பெண் கணவனை இழந்தால் பல கட்டுப்பாடுகள், குடும்பத்தில் பொருளாதார பிரச்சினைகள்,  பிள்ளைகளை வளர்த்து நல்ல வழிக்கு கொண்டு வரவேண்டும் என்று. ஒரு திருமணம் செய்ய நினைத்தால் எத்தனை கொடுமைகள் நடக்கின்றது. மறுமணம் செய்ய முடியாது என்று எத்தனை கட்டுப்பாடுகள். மீறியும் அந்தப் பெண் ஒருவரை திருமணம் செய்தால் நடத்தை கெட்டவள் என்ற பட்டத்துடன். அவளை ஒதுக்கியும் வைக்கின்றனர்.

ஆனால் ஒரு ஆண் மனைவியை இழந்தால் மனைவி இறந்து ஒரு மாதம் செல்ல முன்னரே அடுத்த திருமணம் செய்யவும் ஆதரிக்கின்றது இந்த சமூகம். மனைவியை இல்;அந்த ஒரு ஆண் எத்தனை திருமணம் செய்யவும் ஆதரிக்கும் சமூகம் ஏன் பெண்களை மட்டும் தனது குடும்ப நிலை காரணமாக மறுமணம் செய்ய நினைக்கும் போது மறுக்கிறது.


சில பெற்றோரோ ஒரு ஆணின் மனைவி இறந்துவிட்டால் உடனடியாக அந்த ஆணுக்கு வேறு பெண்ணை தேட ஆரம்பித்து விடுகின்றனர். ஆனால் இதே பெற்றோர் ஒரு பெண்ணின் கணவன் இறந்துவிட்டால் அவளை ஒதுக்கி வைப்பதுதான் ஏன்?

அவர் கேட்ட அடுத்த கேள்வி ஒரு பெண் மானபங்கப் படுத்தப் படுவது யாரால் என்று. ஒரு பெண் ஒரு ஆனால் மானபங்கப் படுத்தப் பட்டால், பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப் பட்டால். அந்தப் பெண் இந்த இடத்திலே தவறு செய்கிறாளா இல்லையே அப்பாவியான பெண் ஆனால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துகிறான் ஆனால் எந்த தவறும் செய்யாத அந்தப் பெண்ணை வித்தியாசமான கண்ணோட்டத்துடன் பார்க்கிறது இந்த சமூகம். அதுமட்டுமல்ல பாலியல் வல்லுறவு செய்த அந்த ஆணின் செயலை மறுகணமே மறந்து அந்த ஆணை நல்ல மனிதனாக பார்ப்பவர்களும் இருக்கின்றனர்.

தனது பிள்ளையையே பாலியல் வல்லுரவுக்குத் படுத்தும் எத்தனை தந்தைகள் இருக்கின்றனர். எத்தனை சகோதரர்கள் இருக்கின்றனர். இப்படியோப்பட்ட தந்தை, சகோதரர்களால் எத்தனை பெண்கள் இறந்திருக்கின்றனர், வாழ்க்கையை தொலைத்து தவிக்கின்றனர்.

விபசாரிகள் பற்றி அவர் குறிப்பிட்ட விடயங்கள் உண்மைதான். சில தவிர்க்க முடியாத காரணங்களால்  பெண்கள் விலை மாதர்களாக வந்துவிட்டார்கள். முக்கிய காரணம் பணம் உழைக்க வேண்டும் என்பதுதான். அப்படித்தான் அவர்கள் வந்தாலும் ஆண்கள் அவர்களை நாடி செல்லாவிட்டால் விலை மாதர்கள் இருக்க முடியாதுதானே.

இன்று பணக்கார வர்க்கத்தை சேர்ந்த சில ஆண்கள் என்ன செய்கிறார்கள். சில நல்ல பெண்களை பணத்தைக் காட்டியே ஆசையை வளர்த்து தங்களது உடல் இச்சைகளை தீர்த்து கொள்வதற்காக பயன்படுத்துகின்றனர். தாங்கள் எந்தளவு வேண்டுமோ அந்த அளவுக்கு அனுபவித்துவிட்டு அந்த பெண்ணை கைவிடுகின்றனர். இந்தப் பெண் தனது உடல் இச்சைகளை அடக்கிக்கொள்ள முடியாமல் மற்றவர்களை நாடிச்செல்ல நினைக்கின்றாள். இதனால் இவள் விலை மாதராகின்றாள்

read more...

Saturday, 11 June 2011

ஆண் பெண் நட்பு திருமணத்தின் பின்னும் தொடர்வது சரியா தவறா?

நல்ல நட்பு கிடைப்பதென்பது அரிது. நல்ல நட்பு கிடைத்துவிட்டால். பிரிவது மிக மிக கஸ்ரம்தான். இருந்தபோதும் நல்ல நண்பர்கள் சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால்
பிரிய வேண்டிய சந்தர்ப்பங்கள் ஏற்படுவதுண்டு. அதிலும் குறிப்பாக ஆண்பெண் நட்பு என்பது கேள்விக்குறியான விடயமாக இருப்பதுண்டு.

ஆணும் பெண்ணும் நெருங்கிய நண்பர்களாக இருப்பார்கள். ஆனால் அவர்கள் விரும்பாமலேயே சில சந்தர்ப்ப சூழ்நிலைகள் அவர்களை பிரிவிற்கு இட்டுச் செல்வதுண்டு
பல நெருங்கிய நண்பர்கள் அவர்கள் விரம்பாமலேயே பிரிவை சந்தித்திருக்கின்றனர். பல காலம் நண்பர்களாக பிரிக்கவே முடியாத நிலையில் இருந்த நண்பர்களின்
பிரிவைப் பார்த்திருக்கின்றோம்.

ஆண் பெண் நண்பர்கள் பிரிவென்பது அதிகமாக பெண்ணுக்கு திருமணம் ஏற்படுகின்றபோது நிகழ்கின்றது. திருமணம் என்று வருகின்றபோது நட்பு விடயத்திலும் பல
விட்டுக் கொடுப்புக்களை செய்யவேண்டி இருக்கின்றது. அதையும் தாண்டி நட்பு தொடர வேண்டுமென்றால் பல பிரச்சினைகளையும் எதிர்நோக்கவேண்டிய நிலைக்கும் 
தள்ளப்படுகின்றாள் அப் பெண். இதே நிலை ஆண்களுக்கும் இல்லாமல் இல்லை இருக்கின்றது ஆனால் மிக மிக அரிது. 

ஏன் இவர்கள் நட்புக்கள் தொடர்வதை விரும்புகின்றனர் இல்லை தன் வாழ்க்கைத் துணைமீது சந்தேகப் படுகின்றனரா? சிலர் தான் யாருடனும் நட்பு வைத்துக் கொள்ளலாம் 
தன் துணை நட்புக்களை இழக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். இவ்வாறான மன நிலைகள் மாறவேண்டும். நட்புகள் நிலைக்கவேண்டும்.

இதற்கு மாறாக பல நட்புக்கள் திருமணத்தின்பின் தொடர்வதுமுண்டு. 

உண்மைச் சம்பவம் ஒன்று 

ஒரு ஆணும் பெண்ணும் பத்து வருடங்களுக்கு மேலாக நல்ல நண்பர்களாக இருக்கின்றனர். ஆண் மிகவும் கஸ்ரப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர். பெண் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர்
எல்லா நிறைய உதவிகள் செய்திருக்கின்றார். பொருளாதார ரீதியிலும். கஸ்ரம் என்று வருகின்றபோது முதலில் நிற்பவர் அப் பெண்ணாகத்தான் இருப்பார். 

அவர் எதையும் எதிர் பார்த்து உதவி செய்வதில்லை நல்ல நட்டு மட்டுமே. அவர்கள் நட்பு என்பது பிரிக்க முடியாத ஒன்றாகிவிட்டது. தன் வீட்டில் விசேடமான ஏதாவது
உணவு சமைத்தால்கூட அவருக்கும் ஒரு பங்கு நிட்சயம் இருக்கும். அவருக்கு மட்டுமல்ல அவர் குடும்பத்தோடும் மிக நெருக்கமாக பழகுவார் அவர்களின் குடும்பத்தில் ஒருவர்போல்

இது இவ்வாறிருக்க அப் பெண்ணுக்கு திருமணம் நடற்துவிட்டது. பெண்ணின் கணவர் சொல்லிவிட்டார் தாராளமாக நண்பர்களாக இருக்கலாம் நான் தடை போடமாட்டேன் என்று
நட்பு முன்னர்போலவே தொடர்ந்தது. இந்த நேரத்தில் ஆணுக்கு திருமணம் நடைபெற்றது. இவர்களின் நட்பு நன்கறிந்தவர்தான் அவரை திருமணம் செய்திருக்கின்றார். அவர்கள் நட்பின்
ஆழமும் அறிந்தவர்.

ஓரிரு வருடங்கள் பிரச்சினை இல்லை. இப்போது அவர்களிடையே அடிக்கடி பிரச்சினை ஏற்படுவதுண்டு. அப்பெண் சொல்கின்றார் நட்பை நிறுத்தவேண்டும் என்று. அவரோ முடியாது
என்கின்றார். இத்தனைக்கும்மேல் இவர் மிக உயர்ந்த பதவியில் இருப்பவர். 

நான் இந்த நிலைக்கு வரக்காரணம் என் நண்பிதான் அவரின் நட்பை இழக்க முடியாது என்கின்றார் அவர். அவரது படிப்பு விடயமாக இருக்கட்டும் எதற்கும் நிறையவே உதவி செய்தவர்.

தன் உயர்விற்கு காரணமான நட்பை இழப்பதா? மனைவி சொல்லே மந்திரமென்று இருப்பதா?....

எது சரி எது தவறு


நண்பர்களின் புது முயற்சி

நண்பர் செந்தூரன் வலையுலகு முலமாக எனக்கு அறிமுகமான நல்ல நண்பர். வலைப்பதிவுகள் எழுதுவது அரிது என்றாலும் தான் வானொலித்துறையில் அதிக ஈடுபாடு கொண்டவர்
தான் ஒரு வானொலி ஆரம்பிக்க வேண்டும் என்று பல முயற்சிகள் செய்தவர். அவரின் முயற்சி வெற்றியடைந்திருக்கின்றது. 

இணைய வானொலி (சஞ்ஜீவ ஒலி )  ஒன்றை ஆரம்பித்து சிறப்பாக தனது நண்பர்களுடன் சேர்ந்து செய்து வருகின்றார். அவரின் முயற்சிக்கு எமது வலைப்பதிவர் என்கின்ற ரீதியில் அவருக்கு வாழ்த்துக்கள்.

புதிய வானொலி புதியவர்கள் இருந்தபோதும் சிறப்பாக செய்கின்றனர்.

புதுமைகள் படைக்க வாழ்த்துக்கள் 

read more...

Thursday, 9 June 2011

வெளிநாட்டுப் பணமும் நம்ம ஊரு பொண்டுகளும் படும்பாடு

அக்கரை மாட்டுக்கு இக்கரைப் பச்சை என்று சொல்வார்கள். வெளிநாட்டிலே இருப்பவர்கள் பணம் பொருட்கள் அனுப்புகின்றபோது. பலரும் அவர்களைப் பார்த்து சொல்வார்கள் உங்களுக்கென்ன வெளிநாட்டுக்காரர்கள் வெளிநாட்டுப் பணம் என்றெல்லாம் சொல்வார்கள்.         

வெளிநாட்டுப்பணம்தான் பொருள்தான் அனுப்பப்படுகின்றது. அதனை அனுப்புவதற்கு உழைப்பதற்கு வெளிநாடுகளிலே இருக்கின்ற தங்கள் உறவுகள் எந்தளவிற்கு கஸ்ரப்படுகின்றனர் என்பதனை பலரும் உணர்வதில்லை.

நான் கட்டாருக்கு வந்தபோதுதான் உணர்ந்தேன் அவர்கள் படும் கஸ்ரங்களும் கஸ்ரப்பட்டு இரவு பகலாக உழைத்து அனுப்பும் பணத்தினை அவர்களின் மனைவி பிள்ளைகள் (எல்லோருமல்ல) வீனாண முறையிலே செலவு செய்து வருகின்றனர்.

 நாட்டிலே பணம் அனுப்பப்பட்டால் சில வீடுகளிலே கொண்டாட்டம்தான் பணம் அனுப்பியதுமே ஒரு ரூபா கூட மிச்சம் பிடிக்காமல் செலவு செய்வோர் பலர் இருக்கின்றனர்.

அதிகமாக ஆடம்பர செலவுகளைச் செய்துகொண்டிருக்கின்றனர். இரண்டு நாட்கள் நன்றாக செலவு செய்வார்கள் பின்னர் அடுத்த சம்பளம் எடுத்து கணவன் பணம் அனுப்பும்வரை ஒரு சதம்கூட இல்லாமல் பட்டினி கிடக்கின்ற குடும்பங்களும் இல்லாமல் இல்லை.

ஒரு வெளிநாட்டுக்காரனின் மனைவி ஒரு மாலை போட்டால் நான் இரண்டு மாலை போடவேண்டும் அவள் கட்டும் சாறியைவிட விலை உயர்ந்த சாறி தான் கட்ட வேண்டும் என்றும் பேராசைப்பட்டு பணத்தை வீண் ிரயம் செய்வோரும் இல்லாமல் இல்லை.

இங்கே பணம் உழைப்பதற்கு எவ்வளவு கஸ்ரப்படுகின்றனர் என்பதனை செலவு செய்பவர்கள் சிறிதளவேனும் சிந்தித்துப் பார்ப்பதில்லை. இலவசமாக கிடைத்த பணம் போல் செலவு செய்கின்றனர்.                 

ஒரு குடும்பம் நல்ல நிலைக்கு வரவேண்டும் என்று வெளிநாடு வருகின்றனர். இவ்வாறு வீண் விரயம் செய்தால் அவர்களின் குடும்பநிலை எப்போது முன்னேற்றம் அடைவது.


வெளிநாட்டிலே தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தொடராக எழுதிக்கொண்டே போகலாம் அவைகளையும் சந்தர்ப்பம் வரும்போது எழுதுகிறேன்.
                                                                          
எங்கள் பிரதேசத்திலே பெண்களை பொண்டுகள் என்று சொல்வதுண்டு.
read more...

Wednesday, 8 June 2011

இலங்கை வலைப்பதிவர்களும் அதிகார மையத்தின் அதிகாரங்களும்.


இலங்கை தமிழ் வலைப்பதிவர்களுக்கு எதற்கு சந்திப்பு என்று என்னை நானே கேட்டேன். அதனை உங்களிடமே கேட்கின்றேன். அவசர அவசியமான விடயத்துக்கு

ஒன்றுபடாத பதிவர்கள் சந்தித்து என்ன பயன். கிழக்கு மாகாணம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு கிழக்கு மாகாண மக்கள் பல கஸ்ரங்களை அனுபவித்தபோது

பதிரர்கள் நிவாரணப் பணிகளில் பங்கெடுப்பதாக முடிவெடுக்கப்பட்டது. ஆனால் ஒரு சில பதிவர்களைத் தவிர எவருமே முன்வரவில்லை.

ஆனாலும் நிவாரணப் பணிகளில் சில பதிவர்கள் நேரடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வந்து உதவிகளைச் செய்தனர் அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.





இது ஒருபுறமிருக்க இந்த சந்திப்புக்கு முன்னர் நாம் ஒவ்வொருவரும் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டிக்கொண்டு இருப்பதனைவிட வலைப்பதிவின் மூலம் நாம்

சமூகத்திற்கு என்ன செய்திருக்கின்றோம் என்று ஒவ்வொருவரும் எங்களை நாங்களே கேள்வி கேட்க வேண்டும்.



இலங்கைப் பதிவர்களைவிட வெளிநாட்டுப் பதிவர்களே அதிகமானவர்கள் எனக்கு நண்பர்களாக இருக்கின்றனர். பரவலாக இலங்கைப் பதிவர்கள் என்றதுமே

கும்மிப் பதிவர்கள் மொக்கைப் பதிவர்கள் ஒற்றுமை இல்லாதவர்கள் என்கின்ற ஒரு விம்பம் உருவாக்கப்பட்டிரக்கின்றது.



ஒருவர் பதிவிடுதல் என்பது அவரவர் விருப்பு வெறுப்புக்களைச் சார்ந்தது. நானும் கும்மி அடித்தவன்தான். மொக்கைப் பதிவுகள் எழுதுபவன்தான்.

இப்போது சிந்திக்கின்றேன். எமது சமூகத்தைப் பற்றி எத்தனையோ விடயங்களை எழுதலாம். அவசியம் எழுதவேண்டிய பல விடயங்கள் இருக்கின்றன.

எமது பதிவுகள் மூலமாக சமூகத்துக்கு சிறிதளவேனும் பயன் சிடைக்கட்டும்.



இலங்கையைப் பொறுத்தவரை புதிய பதிவர்கள் அதிகரித்துக் கொண்டு வருகின்றனர். பலர் திரட்டிகளில்கூட இணைக்காமல் எழுதிக் கொண்டிருக்கின்றனர்.

அவர்களையும் இந்தச் சந்திப்பில் இணைத்துக் கொள்வது நல்லது



இலங்கைப் பதிவர்களைப் பார்க்கின்றபோது பல குழுக்கள் இருப்பது போன்ற தோற்றப்பாடு தெரிகின்றது. பலர் என்னிடம் கேட்கின்றனர். உண்மையும் அதுதான்.

ஒரு சாராரை இன்னொரு சாரார் தாக்குவதும் குற்றம் சொல்வதும் பதிவுகள் ஹக் பண்ணப்படுவதும் அப்போது இன்னொருவரை குற்றம் சொல்வதுமாக

இருக்கின்றது.



நாம் ஒன்று படாமல் இருக்கின்றோம் பலர் இலங்கை பதிவர் குழுமத்திலோ அல்லது சந்திப்புக்களிலோ கலந்து கொள்ளாது பதிவர்களாக இருக்கின்றனர்.

இலங்கைப்பதிவர்களில் எத்தனை வீதமானவர்கள் பதிவர் சந்திப்புக்களில் கலந்துகொள்கின்றனர். எத்தனை வீதமானவர்கள் குழுமத்தில் இருக்கின்றனர்.

என்பதனைப் பற்றி பாருங்கள் குழுமத்திலும் பதிவர் சந்திப்புக்களிலும் குறிப்பிட்ட ஒரு சாராரே இருக்கின்றனர்.



இவ்வாறு இருப்பவர்கள் தனியாக ஒரு குழுமமா? தனியாக பதிவர் சந்திப்பக்களை ஏற்படுத்துவதா? சிந்திக்க வேண்டும். நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும்.

ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுவதை விடுத்து ஒன்று படுங்கள். கடந்த சந்திப்புக்களைவிட இந்;த சந்திப்பிலே பலர் சந்திக்கமாட்டார்கள் என்று நினைக்கின்றேன்.

காரணம் கடந்தகால இலங்கை பதிவர்களுக்கிடையே இடம்பெறுகின்ற கருத்து மோதல்களும். கடந்த கால பதிவர் சந்திப்பின் பின்னரான செயற்பாடகளுமே.



எல்லாவற்றிற்கும்மேல் இப்போது நான் கோபப்படுகின்ற விடயம். ஒரு சிலர் அதிகார மையம் அதிகார மையம் என்று பேசிக் கொள்கின்றனர். ஏதோ ஒருவன்

அதிகார மையம் என்று குற்றம்சாட்டிவிட்டான் என்பதற்காக அதனையே சொல்லிக்கொண்டிருப்பது சரிதானா. அல்லது அதிகார மையம் என்பதனை ஏற்றுக் கொள்வதா?

பதிவர் சந்திப்பு பற்றி பேச வந்தாலே அதிகார மையம் பற்றி பேசப்படுகின்றது.



சந்திப்பை நடாத்துவதற்குரிய ஏற்பாடுகளைச் செய்கின்றவருக்கு அதிகார மையப் பொறுப்பு வழங்கப் படுகின்றதா? எதற்காக இந்த அதிகார மையக் கதைகள் எல்லாம்

வழமையாக குரைக்கும் நாய் குரைத்துவிட்டது. என்று அதிகார மையக் கதையை விட்டுவிடுங்கள். குரைக்கும் நாயைக் கணக்கிலெடுத்தோம் என்றால் குரைத்துக் கொண்டே

இருக்கும் நாம் கணக்கிலெடுக்கவில்லை என்றால் தானாக அடங்கிவிடும்.



இவைகளை எல்லாம் பார்க்கின்றபோது இலங்கை தமிழ் வலைப்பதிவர்களை எல்லோரும் தவறான கண்ணோட்டத்தில் பார்த்துக்கொண்டிருக்கின்றனர்..


read more...

கட்டாரில் திண்டாடும் இலங்கைப் பட்டதாரிகள்



இலங்கையைப் பொறுத்தவரை வேலைவாய்ப்புப் பெறுவதென்றால்..... நான் சொல்லித்ததான் தெரியவேண்டும் என்பதில்லை. 
அதிலும் குறிப்பாக ஏழைகளைப் பொறுத்தவரை மிகவும் கடினமான விடயமாகிவிட்டது. மிகவும் கஸ்ரப்பட்டு படித்து பட்டம் பெற்று வேலை
தேட நினைத்தால் பல இலட்சங்கள் இருந்தால்தான் வேலை என்றாகிவிட்டது.

கஸ்ரப்பட்டு படித்து பட்டம் பெற்ற ஏழை மாணவர்கள் வேலையின்றி கஸ்ரப் பட்டுக்கொண்டே இருக்கின்றனர். ஆனால் பணம் படைத்தவர்கள் 
பல இலட்சங்களுக்கு வெலைகளை வாங்குகின்றனர்.

சரி நாட்டில்தான் வேலை கிடைக்கவில்லை வெளி நாட்டிலாவது வேலை கிடைக்கும் என்று கடன் பட்டு வெளிநாடுகளுக்கு வந்தால் வெளிநாடுகளிலே 
அதைவிடத் துயரம். 

இலங்கையிலிருந்து கட்டார் நாட்டக்கு 4, 5 மாதங்களுக்கு முன்னர் கட்டார் அரசாங்கத்தின்கிழ் இருக்கின்ற நிறுவனத்திலே வேலை செய்வதற்காக இலங்கை தமிழர்கள் பலர்
வருகை தந்திருந்தனர்.  இவர்களில் பலர் பட்டதாரிகள்.

கட்டருக்கு வந்து 4, 5 மாதங்களாகிவிட்டது. இன்னும் வேலை வழங்கப்படவில்லை. கட்டாரிலே வந்து வேலை செய்வதற்கு நிறைவேற்ற வேண்டிய விடயங்கள் அனைத்தும் செய்து முடிந்துவிட்டது. அடையாள அட்டைகள்கூட வழங்கப்பட்ட விட்டன. நேர்முகப் பரீட்சையும் முடிந்துவிட்டது. வேலை வழங்கப்படவில்லை. தங்குவதற்கு இடமோ சாப்பாடோ எதுவும்
வழங்கப்படவில்லை. மிகவும் கஸ்ரப்பட்டுக்கொண்டிருக்கின்றனர். 

வேலை எப்போது வழங்கப்படும் அல்லது வழங்கப்படாது என்கின்ற விடயங்கள்கூட சொல்வதாக இல்லை. வேலை கிடைக்காது என்றால் எங்களை நாட்டுக்கு அனுப்புங்கள் என்றால் அதற்குரிய 
ஏற்பாடுகளோ அல்லது பதில்களோ இல்லை.

என்ன அவர்களில் நானும் ஒருவன்...
read more...

Sunday, 22 May 2011

ஐக்கிய நாடுகளால் வெளியிடப்பட்ட அறிக்கைக்கு தமிழ் அரசியல்வாதிகள் கண்டனமா? ஆதரவா? தமிழ் தலைவர்களை மிரட்டும் மகிந்த அரசு


முதலமைச்சரின் வளாகத்தினுள் முறைகேடாக நுழைந்த இராணுவத்தினர் அங்கு அத்துமீறி செயற்பட்டுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு மட்டக்களப்பில் இடம்பெற்ற சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் புளியந்தீவு பிரிவு அமைப்பாளரின் படுகொலையில்  சம்பந்தப்படுத்தி கிழக்குமாகாண சபை உறுப்பினரான பிரதீப்  கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் நேற்று முதலமைச்சர் வளாகத்தை நோக்கிய இராணுவத்தினரின் அத்துமீறல் இடம்பெற்றுள்ளது. சட்டம் ஒழுங்குகளுக்கு உட்பட்டு இந்த செயற்பாடுகள் இடம்பெறவில்லை. முன்னறிவித்தல் இன்றியும் பொலிசார் துணையின்றியும் எதேச்சதிகாரப் போக்கில் இடம்பெற்ற இராணுவத்தினரின் செயற்பாடு குறித்து தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

முதலமைச்சர் சந்திரகாந்தன் மீதும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் மீதும் கடந்தகாலங்களில் அவ்வப்போது அரசு கொண்டிருக்கும்  அதிருப்தியின் வெளிப்பாடாகவே இச்சம்பவங்களை அவதானிக்கலாம்.

முதலமைச்சர் சந்திரகாந்தன் பதவியேற்ற நாள் முதல் அரசுடன் இணைந்து செயற்பட்டாலும் அவ்வப்போது அரசுடனான முரண்பாடுகளும் தொடர்ந்த வண்ணமே உள்ளது. கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் அவர் கிழக்கு மாகாணத்தின் முதலாவது முதலமைச்சராக பதவி ஏற்ற போது மக்கள் அவர் மீது பாரிய நம்பிக்கை கொண்டிருந்தனர். 30 வருட போராட்டத்தின் பின்னர் கிடைத்திருக்கக் கூடிய மாகாண சபையைக்கொண்டு தமிழ் மக்களின் அபிலாசைகளை ஓரளவுக்காவது ப+ர்த்திசெய்யவேண்டிய பாரிய பொறுப்பும் அவர் மீது சுமத்தப்பட்டது.

 அதன் பிரதிபலிப்பாக 13 வது சட்டத்திருத்தத்தின் ஊடாக மாகாணசபைகளுக்க வழங்கப்பட்டுள்ள காணி பொலிசு அதிகாரங்களை கிழக்கு மாகாணசபைக்கு வழங்கும்படி அவர் அரசிடம் அடிக்கடி கோரினார். அந்தவேளையில் கருணா அம்மானை வைத்துக்கொண்டு அரசாங்கம் அவரது கோரிக்கைகளை அவசியம் அற்றவை என்று பகிரங்கமாக அறிக்கைவிட்டது. அதுமட்டுமன்றி தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் தலைவரும் முதலமைச்சரின் வலது கரமாகவும் இருந்து வந்த நந்தகோபனும் கொலைசெய்யப்பட்டார். அக்கொலை நடந்த இடத்திற்கு ஓரிரு நிமிடங்களில் விரைந்த முதலமைச்சர் தடயங்களை ஆராய்ந்துவிட்டு அவ்விடத்தில் இருந்தே ‘இது புலிகளால் செய்யப்பட்ட கொலை அல்ல’ என்று பத்திரிகைகளுக்கு தெரிவித்தார்.

 இப்பகிரங்க அறிவிப்பானது தன்னைநோக்கியே முதலமைச்சரின் சுட்டுவிரல் நீட்டப்படுகின்றது என்பதை அரசினை நன்றாக உணரச் செய்தது. அரசாங்கத்தின் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்டு முதலமைச்சர் பதவியில் இருந்த போதிலும் மக்களின் அபிலாசைகள் என்று வருகின்றபோதோ சரி பிழை நடக்கின்ற போதோ அரசியல் சுளிவு நெளிவுகள் பற்றி அக்கறைப்படாமல் எதையும் நேர்மையாக முன்வைக்கும் சந்திரகாந்தனின் அரசியல்பாணி அரசாங்கத்தரப்பினருக்க உவப்பளிக்கவில்லை.


அதேபோன்று கிழக்கு மாகாணத்தின் கவர்ணர் தனது அதிகார எல்லைகளை தாண்டி மாகாணசபை விடயங்களில் தலையிடுவதையும் முதலமைச்சர் பலமுறை பகிரங்கப்படுத்தி வந்திருக்கின்றார். இது போன்ற முரண்பாடுகளுடனேயே கிழக்குமாகாண சபை கடந்த மூன்று வருடகாலமாக இயங்கிவருகின்றது. இருக்கின்ற அதிகாரங்களைக் கொண்டு 30 வருடகால யுத்தத்தால் அல்லலுற்ற மக்களுக்கு எதையாவது செய்யமுடிகின்றது என்ற குறைந்தபட்ச திருப்தியுடன் முதலமைச்சர் காலம்கடத்தி வந்திருக்கின்றார்.

 அதேவேளை கிழக்குமாகாண சபையில் இயற்றப்பட்டுவருகின்ற நியதிச்சட்டங்களும் தீர்மானங்களும் எதிர்காலத்தில் ஒரு சிறந்த அதிகாரப்பகிர்வுக்கான சட்டவலுகொண்ட அத்திவாரத்தை உருவாக்கிவருகின்றன என்கின்ற உண்மையை அதிகாரப்பகிர்வுக்கு எதிரானவர்கள் வரவேற்கப்போவதில்லை. இந்தநிலை தொடர்வதனை விரும்பாத அரச தரப்பு அவ்வப்போது முதலமைச்சருக்கு முடிந்தவரையான நெருக்கடிகளையும் கொடுத்துக்கொண்டே வருகின்றது.

 பல நியதிச் சட்டங்களுக்கான ஒப்புதல் கையொப்பங்களை வழங்குவதை கவர்ணர் இழுத்தடித்துக்கொண்டு வருகின்றார். முதலமைச்சரதும் அவர் கட்சி பிரமுகர்களதும் பாதுகாப்புகளை அவ்வப்போது வாபஷ்  வாங்கிய நிகழ்வுகளும் இடம்பெறற்று வந்துள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்சவை ஆதரித்து தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் செயற்பட்ட போதிலும் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தனித்துப்போட்டியிட எடுக்கப்பட்ட முடிவு அரசு தரப்பினருக்கு பெரும் கோபத்தை உண்டுபண்ணியது.

 தாம் அரசுடன் இணைந்து செயற்படுகின்ற போதிலும் சுதந்திரமானவர்கள் என்று தமது கட்சியின் தனித்துவத்தை விட்டுக்கொடுக்காத ஒரு போக்கு தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளிடம் காணப்படுகின்றது. கொழும்பில் இருக்கின்ற தமிழ் தலைவர்களை போன்று தலையாட்டிப் பொம்மைகளாக அல்லாது “கௌரவமான பங்காளிகளாக” கிழக்கு மகாண மண்ணில் இருந்துகொண்டு நேர்மையாக அரசியல் செய்துவருவது முதலமைச்சர் சந்திரகாந்தனின் பாணியாகும். அண்மையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட உள்ளுராட்சி மன்ற திருத்தச்சட்டத்தினை கடந்த ஒரு வருடத்திற்கு முன்னரேயே மாகாணசபைகளினூடாக நிறைவேற்றி பாராளுமன்றத்திற்கு கொண்டுசெல்கின்ற அரசினுடைய உத்தி கிழக்குமாகாண சபை ஒன்றினது ஒப்புதல் இன்மை காரணமாக தடுக்கப்பட்டது. சிறுபான்மை இனங்களுக்கு எதிர்காலத்தில் பாரிய ஆபத்தை விளைவிக்கக்கூடிய இச்சட்டத்தை நிறைவேற்றாமல் கிழக்கு மாகாணசபை காலங்கடத்தியது.

 இவ்வாறாக மக்களின் நலன் சார்ந்த விடயங்களில் விட்டுக்கொடுக்காத சமரசம் செய்யாத ஒரு அரசியல் சக்தியாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் எதிர்காலத்தில் வளர்ச்சியடைவதை விரும்பாதவர்கள் பலர் உண்டு. அண்மையில் கூட ஐ.நாடுகளால் வெளியிடப்பட்ட தருஷ்மன் அறிக்கையை முன்வைத்து இலங்கையின் அனைத்து அரசியல் தரப்பினரும் கண்டனமா? ஆதரவா? என்று கன்னை பிரித்து நிற்கின்றார்கள். ஆனால்  தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளோ முதலமைச்சரோ இது பற்றி ஒற்றை வரியில் கருத்துக்கூறுவதை தவிர்த்து வந்துள்ளனர். முரளிதரன், டக்ளஷ் தேவானந்தா, நோயல் நடேசன், அலவி மௌலானா என்று ஐ.நா. அறிக்கைக்கு எதிராக கண்டனக்கணைகளை அள்ளிவீசி வருகின்ற நிலையில் கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சரிடமிருந்தோ, மாகாண சபையிடம் இருந்தோ இதுபோன்ற கண்டன அறிக்கை ஏதும் வெளிவராமை அரசுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. கடந்த வாரம் கிழக்கு மாகாணசபை அமர்வின்போது ஐ.நா. அறிக்கைக்கு எதிரான கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று கொழும்பு மட்டத்தில் எதிர்பார்க்கப்பட்டது.

 யாருடைய எதிர்பார்ப்புகளுக்காகவும் கிழக்குமாகாணசபை இயங்கமுடியாது என்பதையும் மக்களினுடைய எதிர்பார்ப்பு ஒன்றே மாகாணசபையின் செயற்பாடுகளை தீர்மானிக்கும் என்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாத சக்திகள் கிழக்குமாகாண சபைக்கும் முதலமைச்சர் சந்திரகாந்தனுக்கும் எதிரான சதி முயற்சியில் ஈடுபட்டு வருகின்றார்கள் என்று மட்டக்களப்பு மாவட்டம் எங்கும் பரவலாக மக்கள் பேசிக்கொள்கின்றனர்.


இப்பொழுது இடம்பெற்று வருகின்ற கொலைகளும், அதையொட்டிய கைதுகளும், விசாரணைகளும், இராணுவத்தினரின் அத்துமீறல்களும் முதலமைச்சர் சந்திரகாந்தனுக்கு எதிராக அதிகார உயர்மட்டங்களால் தீட்டப்படும் சதிகளே ஆகும்
read more...

Sunday, 15 May 2011

இப்போ எந்த உலகத்தில் ஐயா இருக்கிறீங்க கலைஞருக்கு ஒரு கடிதம்

முந்திய பதிவில் பதிவை இணைப்பதிலும் ஓட்டு படையிலும் பிரசினை இருக்கின்றது அதனால் அதன் சுட்டியை மீண்டும் இணைக்கிறேன் 

read more...

இப்போ எந்த உலகத்தில் ஐயா இருக்கிறீங்க கலைஞருக்கு ஒரு கடிதம்


தேர்தல் நடந்து முடிந்து இருக்கின்றது அம்மா ஆட்சிக்கு வந்திருக்கின்றார். தமிழக அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை இலங்கை தமிழர்களையும் இலங்கையின் இனப்பிரட்சினையையும் வைத்து அரசியல் நடாத்த நினைப்பவர்கள். 

யார் ஆட்சிக்கு வந்தாலும் இலங்கைத் தமிழர்களுக்கு தமிழக அரசியல்வாதிகளால் எதுவும் கிடைக்கப்போவதில்லை.

இலங்கைத் தமிழர்கள் சொல்லொண்ணா துயரங்களை அனுபவிக்கின்றபோது கண்டும் கானாதவர்கள்போல் இருக்கின்ற தமிழக அரசியல்வாதிகள் தேர்தல் நெருங்குகின்றபோது இலங்கை தமிழர்களை தமது துருப்பு சீட்டாக பயன்படுத்துவது யாவரும் அறிந்ததுதான்.

இலங்கையின் இறுதிக் கட்டப்போரின்போது உலகமே தமிழருக்காக குரல்கொடுத்தபோது தமது இனம் படுகொலை செய்யப்படுவதையே காணாததுபோல் இருந்த தமிழக அரசியல்வாதிகள் அன்று இறுதி யுத்தத்தின்போது தமிழனுக்காக குரல்கொடுக்காத தமிழக அரசியல்வாதிகள் இன்று இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்றும் இலங்கை அரசுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோஷமிடுவது சிரிக்கத் தோன்றுகின்றது.

இன்று குரல் கொடுப்பவர்கள் அன்று தமிழன் யுத்த முனையில் சிக்கித் தவிக்கும்போது குரல் கொடுத்திருக்கலாம்தானே.

 கலைஞருக்கு மக்கள் சரியான தீர்ப்பை வழங்கி இருக்கின்றனர். இருந்தபோதும் ஆட்சிக்கு வந்திருக்கின்ற அம்மாவினாலும் இலங்கை தமிழர்களுக்கு எதுவும் கிடைக்கப்போவதில்லை. இதற்கு அவரது கடந்தகால நடவடிக்கைகள் சாட்சி...


எது எப்படி இருப்பினும் அன்று தமிழனுக்காக தனது இனத்துக்காக குரல் கொடுக்காத தமிழக அரசியல்வாதிகள் இன்று இலங்கை அரசுக்கு எதிராக குரல்கொடுப்பதட்கு அருகதை அற்றவர்களே.

அன்று கலைஞருக்கு நான் எழுதிய கடிதம் மீண்டும் தருகிறேன். காலத்துக்கு பொருத்தமாக இருப்பதனால். 


வணக்கம் ஐயா....




நலம்தானே..... நலமாக இருப்பிர்கள் என்று நம்புகின்றேன்.....


உங்களை நான் அறிந்த நாள் முதல் எனக்குப் பிடித்த முதன்மையான மனிதர்களில் ஒருவராக நினைத்துவந்தேன். இருந்தும் இன்று இலங்கைத் தமிழர்கள் மீதான உங்களின் பாராமுகமும், நடவடிக்கைகளுக்கும் உங்கள் மீதிருக்கின்ற எனது நல்ல அபிப்பிராயங்களை தவிடுபொடியாக்கிவிட்டன.




உங்களின் தமிழ் பற்றே எனக்கு உங்களைப் பிடிப்பதற்குக் காரணம். ஆனால் இன்று பார்க்கின்றபோது உங்களிடம் உண்மையான தமிழ் பற்று இருக்கின்றதா? அல்லது உங்களின் இருப்புக்கான தமிழ் பற்றா என்றெல்லாம் எண்ணத் தோன்றுகின்றது. 
உங்கள் தமிழ் பற்று உண்மையானதெனில் பாராட்டப்படவேண்டியதுதான். இருந்தாலும் சில விடயங்களிலே நீங்கள் பாராமுகம் காட்டியிருப்பது வேதனையளிக்கின்றது.
இலங்கையிலே இருக்கின்ற தமிழ் மக்கள் பல காலங்களாக பல அடக்கு முறைகளுக்கும் இன்னல்களுக்கும் ஆளாகிவருகின்றனர். இது நீங்கள அறியாமல் இல்லை. இந்த அடக்குமுறைகளுக்கு எதிராக அவ்வப்போது நீங்கள் குரல் கொடுத்தமைக்கு நன்றிகள். இதனை எமது பிரதேசத்திலே குரைத்துவரும் நாய்க்கு தேங்காய்க் கட்டி போடுவது என்று சொல்வார்கள். இலங்கைத் தமிழர்கள் உங்களை நம்பி கையேந்துகின்றபோது உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் என்று ஏதாவது செய்து இலங்கைத் தமிழர்களை ஏமாற்றி விடுவிர்கள்.



இலங்கை தமிழ் மக்கள் படுகின்ற இன்னல்களை நீங்கள் அறியாதவர் இல்லை இதுவரை நீங்கள் இலங்கைத் தமிழர்கள் தொடர்பிலே காத்திரமான என்ன நடவடிக்கைகள் எடுத்திருக்கின்றீர்கள். 
எமது மக்களின் குரல்கள் நசுக்கப்பட்டு எமது மக்கள் மரணத்தின் பிடியிலே சிக்கித் தவித்தபோது எமது மக்கள் மட்டுமன்றி உலகத் தமிழர்களே உங்களை நம்பியிருந்தனர். உங்கள் மூலமாக, இந்திய மூலமாக தமிழர்களின் இறுதி மரண ஓலங்கள் நிறுத்தப்படுமென்று. அன்றைய நாட்களில் எம் மக்கள் பட்ட,சந்தித்த அவலங்களைப் பார்த்து உலக மக்களே கண்ணீர் வடித்தனர். நீங்கள் என்ன செய்தீர்கள்? 
அன்றைய நாட்களில் உங்கள் காதுகள் செவிடானதா? கண்கள் பார்வை இழந்ததா? அல்லது வேறு உலகத்திலே இருந்தீர்களா? எம் தமிழினம் அழிந்துகொண்டிருக்கும்போது பாராமுகமாக இருந்துவிட்டு தமிழ் மொழியை வளர்ப்பதுபற்றிப் பேசுவது சிரிக்கத் தோன்றுகின்றது. 


தமிழ் மொழியை வளர்ப்பதுபற்றிப் பேசுவது சிரிக்கத் தோன்றுகின்றது. தமிழை வளர்ப்பதற்கு முன்னர் தமிழைப் பேசுகின்ற மக்கள் அழிக்கப்படுவதை நிறுத்த நடவடிக்கை எடுங்கள் அம்மக்களால் தமிழ்மொழி தானாகவே வளர்க்கப்படும்.



செம்மொழி மாநாடு பற்றிப் பேசுகின்றீர்கள் இன்றைய காலத்தில் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்று அறியாத தலைவராக இருக்கின்றிர்களா நீங்கள்? இன்றைய தேவை தமிழை வளர்ப்பதனைவிட தமிழ் மொழியை வளர்க்கின்ற தமிழர்கள் அழிக்கப்படுவதை நிறுத்துவதே. அத் தமிழர்களின் உரிமைக்காகக் குரல் கொடுப்பதே.



தமிழர்களே அழிந்து போகும்போது தமிழ் மொழியை வளர்த்து என்ன பயன்? முதலில் தமிழர்களைக் காப்பாற்றுங்கள் அத் தமிழர்களால் தமிழ்மொழி வளர்க்கப்படும். 
இலங்கைத் தமிழர்கள் பல இன்னல்களை அனுபவித்தபோது, அவர்களின் மரண ஓலங்கள் உலகெங்கும் சென்றடைந்தபோது உங்கள் காதுகளுக்கும் வந்திருக்கும்.



அப்போது மெளனம் சாதித்த நீங்கள் இன்று தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவை இலங்கைக்கு அனுப்பியதன் நோக்கம்தான் என்ன? இன்று எத்தனை தமிழர்கள் மீதமிருக்கின்றார்கள் என்று பார்ப்பதற்காகவா? அல்லது இன்னும் எத்தனை தமிழர்கள் அவலங்களை எதிர்நோக்கக் காத்திருக்கின்றார்கள் என்பதனை அறியவா? 



அவர்களின் வருகையின் நோக்கம் என்னால் புரியமுடியவில்லை. எம் மக்கள் அகதி முகாங்கலிலே படுகின்ற அவலங்களை பார்வையிடவா வந்தனர், நாடு சுற்றிப் பார்க்கவா வந்தனர், பொன்னாடை போர்த்தவா வந்தனர்? அல்லது எதற்காக வந்தனர்? என்ன செய்தனர்? அவர்கள் வந்து என்ன நடவடிக்கைகளை எடுத்தனர்? 



தமிழ் மொழியை வளர்க்கவேண்டும் என்று சிந்திக்கும் நீங்கள் தமிழர்கள் அழிக்கப்படுவதனையும், தமிழர்களின் உரிமைக்காகவும் குரல்கொடுப்பதோடு இலங்கைத் தமிழர்கள் தொடர்வில் அதிக அக்கறை செலுத்துங்கள் என்றும் பணிவாக வேண்டிக் கொள்கின்றேன்.



அன்புடன்...
சந்ரு
read more...

Wednesday, 4 May 2011

பெண்கள் ஆண்களை தங்கள் பின்னால் அலைய வைப்பது எப்படி..

முன்னைய பதிவொன்று மீண்டும் பதிவாகிறது


ஆண்களுக்குத்தான் அதிகமாக ஆலோசனைகள் வழங்குகிறேன் ஆனால் பெண்களுக்கும் நல்ல ஆலோசனை தரவேண்டும் என்று பல பெண்கள் வேண்டிக்கொண்டனர். சில நன்பிகளோ என்னோடு பேசுவதே இல்லை அவர்களுக்காகவே இந்த ஆலோசனைகள்.

இன்று சில (பல) பெண்கள் ( பெண்கள் என்னை திட்டவேண்டாம் எல்லோரும் இல்லை என்று சொல்ல்கிறேன்). ஆண்களை ஏதோ ஒரு வகையில் தன் பின்னால் அலைய வைக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். சில அப்பாவி ஆண்கள் நாய் போல் அலைந்து. கடைசியில் எல்லாம் இழந்து, எல்லாம் புரிந்து..... என்னவோ எல்லாம் நடக்குது...

சில பெண்கள் தங்கள் நண்பிகளிடம் கேட்டுக்கொள்வார்கள் "அடப்பாவி எப்படிடி இப்படி உன்னாலமட்டும் இப்படி ஆண்களை உன் பின்னால அலைய வைக்க முடியும் என்று" அது பெரிய வேலை இல்லை தங்களால் முடியவில்லையே என்று கவலைப்படுபவர்களுக்காகவே இந்த ஆலோசனைகள்.

பெண்கள் ஆண்களை தன் பின்னால் அலைய வைப்பது எப்படி

01 . ஆண்களைக் காணும்போது கடைக்கண் பார்வை பார்த்துவிட்டு ஒரு புன்னகை செய்தால் போதும்.

02. ஆண்கள் இருக்கும் அல்லது ஆண்கள் அதிகம் இருக்கின்ற இடங்களில் அடிக்கடி நடமாடுங்கள். அங்கே இருக்கின்ற ஆண்களைத்தான் நீங்கள் பார்க்க வருவதுபோல் பாவனை செயுங்கள்.

03 . அடிக்கடி வாகனங்களில் பயணம் செய்பவர் நீங்களாக  இருந்தால் வாகனத்தில் வருகின்ற ஆண்களின் முகத்தை ஒரு தடவை பார்த்து சிறிய புன்னகை... அவ்வளவுதான் உங்களை பின்தொடர்வோர் அதிகமாகிவிடுவார்கள்.

04 .  நீங்கள் இணையத்தில் அரட்டையடிப்பவரா? அப்படியாயின் ஆண் அரட்டை நண்பர்களுக்கு ஒரு ஹாய் (hi ) சொன்னால்போதும் உங்களை ஒரு தேவதையாக நினைத்துவிடுவார்கள்.

05 . நீங்கள் தமிழ் கலாசார ஆடைகளை தவிர்த்து நவீன நாகரிக அரை, குறை ஆடைகளோடு பவனி வாருங்கள் உங்கள் பின்னால் நாயும் அலையும்.

06 . எப்பவும் உங்கள் கையில் கைத்தொலைபேசி இருக்கட்டும். ஆண்கள் உங்கள் தொலைபேசி இலக்கத்தை கேட்கும்போது கொடுத்துவிடுங்கள். நீங்கள் அடிக்கடி ஆண்களின் தொலைபேசி இலக்கங்களுக்கு ஒரு missed call (தவறவிட்ட அழைப்பு) பண்ணினால் போதும். ஆண்கள் அழைப்பை எடுத்தால் நீங்கள் பேசவேண்டாம் அல்லது  ஹாய்  மட்டும் சொல்லிவிட்டு துண்டித்து விடுங்கள்.

07 . ஆண் நண்பர்களோடு பேசும்போது நெருக்கமாக காதலிப்பதுபோல் பேசிக்கொள்ளுங்க. எல்லா நண்பர்களோடும் இப்படியே பழகுங்கள் அவர்கள் உங்களை காதலிக்க ஆரம்பித்தால் நீங்கள் காதலிக்கவில்லை என்றாலும் நீங்கள் காதலிக்கவில்லை என்ற விடயத்தை தெரியப்படுத்த வேண்டாம். வழமையாக நெருக்கமாக பழகுவது போன்றே பழகுங்கள்.

08. உங்களிடம் பலர் காதலை வெளிப்படுத்தி உங்கள் சம்மதம் கேட்டிருக்கலாம், கேட்கலாம் அப்போது முடியாது என்று சொல்லவேண்டாம். பின்னர் சொல்கிறேன் என்று  கேட்பவர்கள் எல்லோரிடமும் சொல்லிவிடுங்கள்.

09. உங்களோடு சில பெண் நண்பிகளை வைத்துக் கொள்ளுங்கள். அவர்கள் உங்கள் கதை கேட்டுத்தான் செயற்படுவது போன்று காட்டிக்கொள்ளுங்கள். இந்த நண்பிகளையும் உங்கள் ஆண் நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள். ஆனால் அந்த நண்பிகளை உங்கள் ஆண் நண்பர்களோடு தனிப்பட்ட தொடர்பு வைத்துக்கொள்ள விடவேண்டாம்.

10 . இதுதான் முக்கியமானது....  எங்களைப் போன்றவர்களிடம் இது மாத்திரமல்ல எதனை செய்தாலும் நாங்கள் பெண்கள் பின்னால் அலையமாட்டோம். ஆனால் பெண்களைத்தான் எங்கள் பின்னால் அலைய வைப்போம். எங்களைப் போன்றவர்களிடம் உங்கள் வேலையே காட்டி நேரத்தை வீணடித்து எங்கள் பின்னால் நீங்கள் அலைவதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்.

இது ஒரு  நகைச்சுவை பதிவு மட்டுமே....


read more...