நாம் ஒவ்வொருவரும் வலைப்பதிவு எழுத வந்ததன் நோக்கம் ஒருவருக்கொருவர் வேறுபடலாம். ஒருவர் பொழுதுபோக்குக்காக எழுத வந்திருக்கலாம். சிலரோ சமூகத்துக்காக எழுத வந்திருக்கலாம். ஆனாலும் நாம் சமூகத்துக்காக ஏதாவது செய்ய வேண்டும்.
இன்று பதிவர்கள் நாம் சமூகம் சமூகம் தமிழன் தமிழன் என்றெல்லாம் கோசம் எழுப்பிக் கொண்டிருக்கின்றோம். இவையெல்லாம் உனக்கில்லடி உபதேசம் ஊருக்குத்தாண்டி என்பதுபோல் வெறும் வேசம் என்று எண்ணத் தோன்றுகின்றது.
நாம் வலைப்பதிவு எழுத வந்து சமூகத்தக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைப்பவன் நான். சமூகத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் எனும் நோக்குடன் வலைப்பதிவு எழுத வந்தவன் நான். மிகவும் கவலைக்கிடமாக இருக்கின்ற ஒரு மாணவனுக்கு இருதய சத்திர சிகிச்சைக்காக உதவும்படி கடந்த இரு மாதங்களாக அடிக்கடி பதிவிட்டு வருகின்றேன். இதுவரை அந்த மாணவனுக்கு ஒரு சதக்காசுகூட எவராலும் வழங்கப்படவில்லை.
ஒரு உயிரைக்காக்க எவரும் முன்வராதிருப்பது கவலைப்பட வேண்டிய விடயம். இன்று எத்தனையோ பதிவர்கள் நாம் பதிவிட்டுக்கொண்டிருக்கின்றோம். தினம் எவ்வளவோ பணத்தினை செலவு செய்கின்றோம். ஒரு பதிவர் 100ரூபா உதவி வழங்கினாலே பெருந்தொகைப் பணம் வரும். சமூகம் சமூகம் என்று எழுதிக் கொண்டிருப்பதெல்லாம் வெறும் வேசம்தானா என்று எண்ணத் தோன்றுகின்றது. ஒரு உயிரைக் காக்க உதவ முடியாத நாம் சமூகம் சமூகம் என்று எழுத வேண்டிய அவசியமில்லை.
சரி உதவத்தான் பணம் இல்லை என்றாலும். ஒரு பதிவாவது இட முடியாதா? நாம் ஒருவரை ஒருவர் பாராட்டி புகழ்ந்து எழுதுவதனைவிட உயிரைக்காக்க ஒரு பதிவு எழுதுங்கள். ஒரு உயிரைக் காக்க உதவாத பதிவுலகம் தமிழ் பதிவுலகம். அதற்குள் நான் பெரிது நீ பெரிது என்ற சண்டைகளும் சச்சரவுகளும்.
பதிவர்கள் மீது இருந்த நம்பிக்கை எல்லாம் பொய்விட்டது. பதிவுகளை படிக்கின்ற தனவந்தர்கள் சமூக சேவை நோக்கம் கொண்டவர்கள். புலம்பெயர் தமிழர்கள் உதவ முன்வாருங்கள் குறித்த மாணவன் மிகவும் வறிய குடும்பத்தைச் சேர்ந்தவன் அவனுக்கு உடனடியாக சத்திர சிகிச்சை செய்ய வேண்டும். இல்லையேல் அவரது உடல்நிலை கவலைக்கிடம்..
முன்னைய பதிவு
நண்பர்களே ஒரு மாணவனின் உயிரைக் காப்பாற்ற உதவுங்கள் என்று இரண்டு பதிவுகள் போட்டும் சிலர் உதவுவதாக சொல்லி இருக்கின்றனர். இருந்தும் எந்த உதவியும் இதுவரை கிடைக்கவில்லை விரைவில் குறித்த மாணவனுக்கு சத்திரசிகிச்சை செய்ய வேண்டிய நிலையில் இருக்கின்றார். முந்திய பதிவை அப்படியே தருகிறேன்.
வலைப்பதிவு எழுதும் நாம் எழுத்துக்களுடன் நின்று விடாது சமூகத்திற்காக ஏதாவது செய்ய வேண்டும். சில பதிவர்கள் இதனைச் செய்து வருகின்றனர். நானும் சமூக சேவை செய்து வருபவன் எனும் வகையில் உங்களிடம் ஒரு கோரிக்கையை முன்வைக்கின்றேன்.
தற்போது உயர்தரம் படித்துக் கொண்டிருக்கும் ஒரு மாணவனுக்கு இருதய நோய் இருக்கின்றது. உடனடியாக இருதய சத்திரசிகிச்சை செய்ய வேண்டிய நிலையில் இருக்கின்றார். உடனடியாக சத்திரசிகிச்சை செய்யாவிட்டால் உயிராபத்து ஏற்படும் நிலையில் இருக்கின்றார். இருதய சத்திர சிகிச்சைக்காக இலங்கை ரூபா ஐந்து இலடசத்திற்குமேல் செலவாகும்.
ஆனாலும் அம்மாணவனின் குடும்பம் மிகவும் வறிய நிலையில் இருக்கின்றது. நல்ல எண்ணம் கொண்டவர்கள் இவரின் உயிரைக் காக்க உதவி செய்யுங்கள். இவர் மட்டக்களப்பு களுதாவளையைச் சேர்ந்தவர் பெயர் இராஜேந்திரம் நிமல்ராஜ் மட்களுதாவளை மகா வித்தியாலயத்தில் உயர்தரம் படிக்கின்றார். மாணவனின் உயிரைக்காக்க உதவ நினைப்பவர்கள் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள் நேரடியாக குறித்த மாணவனுடன் தொடர்புபடுத்தி விடுகிறேன்.
எனது மின்னஞ்சல் :-shanthruslbc@gmail.com
தொலைபேசி இலக்கம் : - 0094778548295
எனது மின்னஞ்சல் :-shanthruslbc@gmail.com
தொலைபேசி இலக்கம் : - 0094778548295
சில நண்பர்கள் உதவுவதாக தெரிவித்தனர் அவர்கள் விரைவு படுத்துமாறு கேட்டுக்கொள்கினறேன். பதிவிட்ட நண்பர்களுக்கும் நன்றிகள். அத்துடன் மதிசுதா அவர்கள் பதிவிட்டதுடன் பல நடவடிக்கைகளை மேற்கொண்டார். அவருக்கு நன்றிகள் அவரின் நடவடிக்கைகளை துரிதப்படுத்தமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன். எனது இந்தப் பதிவினைப் பார்த்து பதிவர்கள் என்மிது கோபப்பட்டால் அது என்னை ஒன்றும் செய்யப் போவதில்லை. குறித்த மாணவன் தன் நிலை தொடர்பாக நேற்று என்னிடம் மிகவும் கவலையுடன் கூறியபோது என்னை அறியாமலே என் கண்ணில் கண்ணீர் வந்தது.
2 comments: on "உனக்கில்லடி உபதேசம் ஊருக்குத்தாண்டி பதிவர்கள் நிலைப்பாடும் இதுதானா? புலம்பெயர் உறவுகளிடம் அன்பான வேண்டுகோள்"
வணக்கம் நண்பா, ஒரு கேள்வி,
பதிவர்கள் உதவுவது ஒரு புறம் இருக்கட்டும்!
இவ் விடயத்தில் கிழக்கு முதலமைச்சரின் நிலைப்பாடு என்ன?
அவரால் பாதிக்கப்பட்ட மாணவன் தொடர்பில் என்ன செய்ய முடியும்?’
வணக்கம் நண்பா... இக் கேள்விக்கு நான் பதில் சொல்ல முடியாது. இருந்தும் சில விடயங்களை குறிப்பிடுகிறேன்.
இப்பதிவில் முதலமைச்சரின் நிலைப்பாடு தொடர்பில் என்னிடம் கேட்பது பொருத்தமானதா தெரியவில்லை. நான் முதலமைச்சரின் பிரதிநிதி அல்ல முதலமைச்சரின் ஆதரவாளன் மட்டுமே.
முதலமைச்சர் தொடர்பாகவும் கட்சியின் நிலைப்பாடுகள் தொடர்பாகவும் ஒரு ஆதரவாளன் எழுதுகின்றபோது அக்கட்சியன் அல்லது முதலமைச்சரின் நிலைப்பாடுகள் தொடர்பாக நான் கருத்துக் கூற முடியாது. ஆனாலும் இவ்வாறான விடயங்களுக்கு முதலமைச்சர் அவர்கள் உதவி செய்து வருகின்றார்.
நாள் தோறும் இவ்வாறான பிரச்சினைகள் ஏராளம் முதலமைச்சரிடம் வந்துகொண்டிருக்கின்றன. அனைவருக்கும் உதவி செய்வதொன்பது சாத்தியமான விடயமல்ல. அரச நிதிகளை பயன்படத்துவதென்பது சாதாரண விடயமல்ல என்பது உங்களுக்கு தெரியும். ஆனாலும் தன்னால் முடிந்தவற்றை இவ்வாறான விடயங்களுக்கு செய்து வருகின்றார். நான் முதலமைச்சருக்கு ஆதரவாக எழுதுவதனால் என்னைப்பற்றி பொய் பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அவற்றை நம்பாதீர்கள் நான் முதலமைச்சரின் ஆதரவாளன் மட்டுமே பணத்துக்காக எதுவும் செய்பவனல்ல. சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைப்பவன். சமூகத்திற்காக நிறையவே பாடுபடுகின்ற ஒருவரின் ஆதரவாளனாக மட்டுமே இருக்கின்றேன்.
Post a Comment