Friday, 16 October 2009

கிழக்கிலங்கையில் சுதந்திரம் பெற்ற அரசியல்வாதிகள்

கிழக்கிலங்கையில் சுதந்திரம் பெற்ற அரசியல்வாதிகள்


இன்று தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள். கிழக்கிலே சுதந்திரமாக நடமாடித்திரிவதை காணக்கிடைக்கின்றன. அத்தோடு அவர்கள் மக்களைச் சந்திப்பது என்று பல செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இது அவர்களின் எதிர்கால அரசியல் இருப்பை தக்கவைத்துக்கொள்ளும் முயற்சியாகவே தெரிகின்றது.


மட்டக்களப்பிலே பல வருடங்களாக காலடி வைக்காமல் இருந்த சில பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று சுதந்திரமாக நடமாடி வருகின்றனர். தங்களுக்கு தகுந்த பாதுகாப்பு இல்லை என்றும், தமது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் பல அறிக்கைகளை விட்டுக்கொண்டிருந்த இவர்கள் இன்று ஜனாதிபதியோடு பேச்சுவார்த்தை நடாத்தி இருப்பதாகவும். தமக்கு பாதுகாப்பு வழங்குவதாக ஜனாதிபதி உறுதி அளித்திருப்பதாகவும் சொல்கின்றனர் இது வேடிக்கையாக இருக்கின்றது. அன்று ஜனாதிபதியை நம்மப மறுத்தவர்கல்ளூக்கு இன்று நம்பமுடிகின்றதா?


இவர்களுக்கென ஒரு கொள்கை இல்லையா? இவர்கள் மக்களுக்காக என்ன செய்தார்கள்? தாமும் சுகபோக வாழ்க்கை அனுபவித்து தமது குடும்ப உறுப்பினர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பியவர்களே சிலர். இன்று மீண்டும் தேர்தலில் போட்டியிட இருப்பதாகவும் அறியமுடிகின்றது. இவர்களுக்கு தங்களது சொந்த ஊரிலேயே மக்கள் ஆதரவு இல்லை என்பது வேறு விடயம். இவர்களுக்கு மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள்.


தமிழக அரசியல் வாதிகளின் வருகை


அன்று இலங்கைத் தமிழர்கள் பல இன்னல்களை அனுபவித்துக்கொண்டிருந்தபோது. உலகெங்குமிருக்கி்ற தமிழர்களே. தமிழக அரசியல்வாதிகள் இலங்கைத் தமிழர்களுக்காக குரல் கொடுக்கமாட்டார்களா என்று எதிர்பார்த்திருந்தபோது. தமது அரசியல் இருப்புக்காக பாடுபட்டுக்கொண்டிருந்தவர்கள் இன்று இலங்கை வந்ததன் நோக்கம்தான் என்ன?



இது ஒரு அரசியல் நாடகமே. அன்று எம் சொல்லொண்ணா துயரங்களை அனுபவித்தபோது வராதவர்கள் இன்று எதற்காக வந்தனர்? எத்தனை தமிழர்கள் மீதமிருக்கின்றனர் என்பதனைப் பார்க்கவா? இவர்களால் எதுவும் எமக்குக் கிடைக்கப்போவதில்லை. தமிழகத் தலைவர்களை நம்பி ஏமாந்த காலம் போய்விட்டது. இனியும் நாம் நம்பவேண்டிய அவசியமுமில்லை.


சில காரணங்களினால் என்னால் சில நாட்கள் வலைப்பதிவுப்பக்கம் வர முடியவில்லை இது எனது அவசரப் பதிவு. விரைவில் எனது வழமையான பதிவுகள் தொடரும்.




Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

8 comments: on "கிழக்கிலங்கையில் சுதந்திரம் பெற்ற அரசியல்வாதிகள்"

வேந்தன் said...

ஹிஹிஹி... இதைதான் சொல்லுறது அரசியல் எண்டு....
நீங்க உங்கட பதிவை தொடருங்கோ....

Menaga Sathia said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!!

ஆ.ஞானசேகரன் said...

//சில காரணங்களினால் என்னால் சில நாட்கள் வலைப்பதிவுப்பக்கம் வர முடியவில்லை இது எனது அவசரப் பதிவு. விரைவில் எனது வழமையான பதிவுகள் தொடரும்.//

வாருங்கள் சந்ரு... உங்களுக்காக வலையுலகம் காத்துகிடக்கின்றது

சுசி said...

இனிய தீபாவளி வாழ்த்துக்கள் சந்ரு.

ஹேமா said...

சந்ரு,எங்கே நிறைய நாட்களாகக் காணோம்.சுகம்தானே.இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

Prapa said...

தெரியுமில்ல ப்ளானிங்.... அடிச்சமுல்ல 100 ( 100th follower )..............................

Kala said...

சந்ரு நலமா?சுகமா?? செளக்கியமா???
ஓஓ..ஓஅந்த சில காரணங்கள், சில நாட்கள்
எனக்கு தெரியுமே! ஆனால்....சொல்லமாட்டேன்
சொல்லட்டுமா?வேண்டாமா?

அரசியல்,அரசியல் அது ஒரு சாக்கடை
அதில் போய்...........
எல்லாம் ஒழுங்காக ,நேர்மையாக.
விசுவாசமாகபேதமில்லாமல்
நடந்திருந்தால் நாம் ஏன்?ஏன??ஏன்???
என்ன வளம் இல்லை அந்தத்
திருநாட்டில் ஏன்?கை{யில்}யை ஏந்த
வேண்டும் {திருவோட்டை}
வெளிநாட்டில்......

ஸ்ரீராம். said...

நலம்தானே...நீண்ட நாட்கள் விடுப்பா...!

Post a Comment