Tuesday, 2 June 2009

மலையக நாட்டுப்புறப்பாட்டு......

எனது தொலைந்து போன வலைப்பதிவில் மலையாக நாட்டுப்புறப்பாட்டு பதிவுகளை உங்களுக்காக புதிய வலைப்பத்திவில் தருகிறேன்.....

தமிழருக்கென்று ஒரு தனித்துவமான கலை,கலாச்சார , பாராம்பரியங்கள் இருக்கின்றது.
அவற்றில் குறிப்பாக தமிழர்களது கலைகள் தமிழ் மக்களின் வாழ்வோடு பின்னிப்பிணைநத ஒன்றாக காணப்படுகின்றது. தமிழருக்கே தனித்துவமான பல கலைகள் இருக்கின்றன. அதிலும் கிராமங்கள் என்றால் சொல்லவே தேவையில்லை ,கிராமத்து மக்களின் வாழ்வியலோடு பின்னிப்பிணைந்த ஒன்றாக கிராமியக்கலைகள் விளங்குகின்றன.

நான் அடிக்கடி கவலைப்படுவதுண்டு இப்போது கிராமப்புரங்களில்கூட கலைகளை காணமுடியாது தமிழர்களின் தனித்துவமான கலைகள் மறைந்து கொண்டு வருகின்றன். இவற்றுக்கான காரணம்தான் என்னவோ தமிழர் கலைகளுக்கு ஒரு தனித்துவம் இருக்கின்றது அவை கட்டிக்காக்கப்பட வேண்டும்.ஆரம்பத்திலே இருந்த தமிழர் கலைகள் அமக்கு தெரியாது அம்மா அப்பா பாட்டன், பாட்டி சொல்ல கேள்விப்பட்டிருக்கின்றோம். எமது எது எதிர்கால சந்ததி நாம் அறிந்த அளவுக்குகுட அறிய வாய்ப்பு இல்லாமல் போகும் போல் இருக்கிறது...

சரி விடயத்துக்கு வருகிறேன் எமது தமிழர் பாரம்பரியங்கள், கலைகள் பற்றி எல்லா தொடர்ந்து எழுதலாம் என்று இருக்கின்றேன் . பல கலைத்துறை சார்ந்தவர்களையும் அவர்களது அனுபவங்களையும் எதிர்வரும் காலங்களில் பதிவு செய்யலாம் என்று இருக்கிறேன்.

இன்று மலையாக மக்களோடுடும் அவர்களது வாழ்வோடும் பின்னிப்பினந்த மலையகப் பாடல்களிலே எனக்குப்பிடித்த சில வரிகளை தரலாம் இன்று நினைக்கிறேன் [தமிழர் கலைகள் பற்றி தொடர்ந்து எதிர்பாருங்கள்]

மலையாக மக்களின் நேரடி அனுபவங்களை எப்பாடல்கலிலே கானக்குடியதாக இருக்கின்றது

"கண்காணி காட்டுமெல்லெ
கண்டக்கைய ரோட்டுமேலே
பொடியன் பலமேடுக்க
பொல்லாப்பு நேர்ந்ததையா"

"கலையிலே நேர புடிறசு
காட்டுத்தொங்க பொய் முடித்சு
குட நேரயலையே - எந்தக்
குனப்பய தோட்டத்திலே"

அந்தணா தொட்டமினு
ஆசையா தானிந்தேன்
ஓர முட்ட துக்கத்சொல்லி
ஒதக்கிராரே கண்டாக்கையா"

"கல்லாறு தோட்டத்திலே
கண்டக்கையா பொல்லாதவன்
மொட்டே புடுன்குதின்னு
முனாலு விரட்டிவிட்டான்"

ஓடி நேர புடிறசு
ஒரு குட கொளுந்தேடுக்க
பாவி கணக்குப் புள்ளே
பத்து ராத்து போடுறானே"

"எண்ணிக்குளி வெட்டி
எடுப்போடின்சு நிற்கையிலே
வேட்டுவேட்டு என்கிறானே
வேலையத்த கண்காணி"

"தோட்டம் புறலியிலே
தொரமேல குத்தமில்லே
கண்காணி மாராலே
காண பிரளி யாகுதையா"

எப்படி தமது தொழிலும், தொழில் சார்ந்த வாழ்க்கையும் அதில் அவர்களுக்கு ஏற்படும் பிரட்சனைகளும் இப்பாடல் தொட்டுக்காட்டுகின்றன.

வறுமை, வரட்சி எண்பவத்ரிநாலும், பண்ணையாளர்களின் அடக்கு முறையாலும்,சாதிக்கொடுமயாலும் எவர்கள் புலம் பெயர்ந்து இருந்தாலும். பிழைப்புத்தேடி வந்த ஒரு இடமாகத்தான் கண்டியை [இலஙகையை] பார்த்தார்கள்.அவர்கள் தாயக நினைவிலிருந்து விடுபடாதவர்கலாகவும் மிண்டும் தாயகம் நோக்கி போக வேண்டும் என்ற எதிர் பார்ப்புடநேயே வாழ்ந்தார்கள் என்பதற்கு பல பாடல்கள் சான்று பகர்கின்றன.

"ஆளு கட்டும் நம்ம சிமை
அரிசி போடும் நம்ம சிமை
சோறு போடும் நம்ம சிமை
சொந்தமேன்னு என்னாதிங்க"

புலம் பெயரும் எவரும் தமது தாயகத்தை மறக்க மாட்டார்கள் தங்களது தாயக நினைவுகளை சொல்லும் இவர்கள்...

"உரான உரிழந்தேன்
ஒத்தப்பன தோப்பிழந்தேன்
பேரான கண்டியிலே
பெத்த தாய நாமறந்தேன்"

"பாதையிலே விடிருக்க
பலனித்சம்பா சோறிருக்க
எரும தயிருரிக்க
ஏனடி வந்த கண்டி சிமை"

என்ற வரிகள் தாயக நினைவுகளை மட்டுமல்லாமல் தாம் வாழ்ந்த வாழ்க்கையும் தமது தாய் மண்ணின் பிடிப்பினும் கோடிட்டுக் காட்டுகின்றன...

[தொடந்து வரும்...]


மலையக நாட்டுப்புறப்பாட்டு பதிவு 2

மலையக மக்களின் வாழ்வியலோடு பின்னிப்பிணைந்த ஒன்றான மலையக நாட்டுப்புறப்பாட்டு பதிவு 2 முலமாக ஒருசில பாடல்களை தர நினைக்கின்றேன்.....

மலையக தொழிலாளர்கள் தாங்கள் தொழில் செய்கின்றபோது பாடப்படுகின்ற பாடல்கள் வேடிக்கையாகவும் நகைசுவை நிறைந்ததாகவும் காணப்படும். இப்பாடல்கள் பெரும்பாலும் தொழிலாளர்கள் தங்களை வேலை வாங்குகின்ற தொழிலாளர்களைபபற்றிய பாடல்களே அதிகம் என்று சொல்லலாம்.

இருப்பினும் காதல்பாடல்களும் இடம் பெற்று இருக்கிறன. தொட்டப்புரங்களிலே சிங்கள, தமிழ், முஸ்லிம் தொழிலாளர்களிடையே காதல் ஏற்பட்டமைக்கான பதிவுகள் நாட்டுப்புரப்பாடல்கலிலே காணப்படுகின்றன.
,
தாழ்நிலை, இடைநிலை,பெருந்தோட்டங்களில் சிங்கள-தமிழ் தொழிலாளர்கள் இணைந்து வேலை செய்வதற்கான வாய்ப்புக்கள் அதிகம். இவர்களிடையே இன ,மொழி
மத, சாதிபேதங்களுக்கு அப்பால் தொழிலாளர்கள் என்ற உணர்வின் மேலோங்கள் ஏக காதல் மலர்வதற்கு காரணமாகலாம்.

"சிங்களக்குட்டி அடி செவத்தக்குட்டி ரன்மேனிகே
ஒன்னாலே என் உசிரு என் தங்க ரேத்தினமே
வினாகப்போகுதடி என் தங்க ரத்தினமே"

எனும் இப்பாடல் இன முரண்பாடுகளுக்கு அப்பால் மலர்ந்த காதலுக்கு ஆவணமாகின்றது.

மலையக நாட்டார் பாடல்களிலே இன புரிந்துணர்வை ஏற்படுத்துகின்ற பாடல்கள் இருந்தபோதிலும். இன முரண்பாடுகளை வெளிப்படுத்துகின்ற பாடல்களும் காணப்படுகின்றன. இன முரண்பாடு ஏற்படுவதற்கு பல காரணங்களும் இருக்கின்றன.

"அப்பு குசினி மெட்டி
ஆயம்மா சிங்களத்தி
வான்கோழி ரெண்டு காணோம்
வங்க மட்சான் தேடிப்போகலாம்"

"சிங்களவா சிங்களவா
தவறான சிங்களவா
நாலு பணத்துக்கு
நீ கொடுத்த சாராயம்
ஆழ மயக்குது
அல்லோல கல்லோல"
என்ற பாடல்களோடு

"ஆப்பத்தோடு சுட்டு வாட்சு
அது நடுவே மருந்து வைத்சு
கொப்பிக்குடிக்க சொல்லி
கொள்ளுராலே சிங்களத்தி"

போன்ற பாடல்களும் மலையக வாழ்வியல் சுழலில் இன முரண்பாடுகளை எடுத்துக்காட்டும் பாடல்களாக அமைந்துள்ளன.

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

1 comments: on "மலையக நாட்டுப்புறப்பாட்டு......"

Anonymous said...

நீங்களும் தமிழர்ஸ் டாட்காமின் இவ்வார தமிழராக தேர்ந்தெடுக்கப்படலாம்... இவ்வார தமிழர் பட்டை உங்கள் தளத்தின் டிராபிக்கை உயர்த்த சரியான தேர்வு.

இவ்வார தமிழராக நீங்கள் தேர்ந்து எடுக்கப்படும் போது, அனைத்து பதிவர்களின் பதிவுகளிலும் மின்னுவீர்கள். இது உங்களது பதிவுலக வட்டத்தை தாண்டி உங்களுக்கு புதிய நண்பர்களையும், டிராபிக்கையும் வர வைக்கும்

இவ்வார தமிழர் பட்டையை எப்படி இணைப்பது என்ற விவரங்களுக்கு

இந்த சுட்டியை சொடுக்குங்கள்

தமிழர்ஸ் பிளாக்

Post a Comment