எனது வைரஸ் விளையாடிய வலைப்பதிவில் நான் பதிவு செய்த கவிதைகலில் சில புதிய வலைப்பதிவில் உங்களுக்காக....
என் விரல்களுக்கு
ஏற்பட்ட அவசரத்தில்
தொலைபேசியில்
இலக்கங்களை
தவறாக
அழுத்தியதால் -என்
விரல்களை
திடடினேன் -அன்று
இன்று என்
விரல்களுக்கு -நன்றி
சொல்கிறேன் -அந்த
அழைப்பில்
கிடைத்தவள் - நீ
என்பதனால்
உன் முகம்
தெரியாதவன் -நான்
உன் அகம்
தெரிந்தவன் -நான்
உன்னோடு
பேசுவது -என்
தொலைபேசிக்கே
பொறாமை வந்துவிட்டது போல
அடிக்கடி இயங்க
மறுக்கின்றது.-அது
நினைக்கவில்லை
இப்போ -
என் இதயத்தில் -நீ
இருப்பதை.
***************************************************************************************
உன் தரிசனம்
கிடைக்குமென
காத்திருந்தேன்
பல காலம்
கிடைத்தது
ஏமாற்றம் - இன்று
எனக்கு தூக்கமே
அதிகம்-நீ
கனவிலாவது
வருவாயல்லவா...
3 comments: on "எனது கிறுக்கல்களில் சில..."
அருமையான கவிதை சரி பாலோவர் விட்ஜட் எங்கே
//அருமையான கவிதை//
உங்கள் வருகைக்கு நன்றி சுரேஷ்....
வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்...
தொடருங்கள் சுரேஷ்...
//பாலோவர் விட்ஜட் எங்கே//
எனது வலைப்பதிவில் தோன்றவில்லை என்ன செய்யலாம் என்று சொல்லுங்கள் சுரேஷ்...
Post a Comment