Monday, 15 November 2010

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் முன்னாள் தலைவர் அமரர் குமாரசுவாமி நந்தகோபனின் (ரகு) 2ம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக அனுஸ்ட்டிக்கப்பட்டது.

 த.ம.வி.பு கட்சியின் காலஞ்சென்ற முன்னாள் தலைவர் அமரர் குமாசுவாமி நந்தகோபனின் இரண்டாம் ஆண்டு நினைவு எழுச்சிநாள் நிகழ்வுகள் இன்று த.ம.வி.பு கடசியினால் வெகு விமர்சையாக அனுஸ்ட்டிக்கப்பட்டது. இதன் முதற்கட்ட நிகழ்வாக ஆரையம்பதி முருகப்பெருமான் ஆலயத்தில் அவரது ஆத்மாசாந்தி வேண்டி பிரார்த்தனைகள் இடம்பெற்றதோடு. ஆரையம்பதி நந்தகோபன் கலாச்சார மண்டபத்தில் மாபெரும் எழுச்சி பேரணி கூட்டம் ஒன்றும் இடம்பெற்றது.

இதன்போது ஆரையம்பதி பிரதேசத்தில் 5ம் தர புலமைப்பரிசில் பரிட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு அமரர் ரகு அவர்களின் நினைவுப்பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது. அத்தோடு மாபெரும் அன்னதான நிகழ்வுகளும் இடம்பெற்று த.ம.வி.பு கட்சியின் ஆதரவாளர்கள் பெரும்பாலானோர் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
img_5596
img_5660
img_5692
img_5713
img_5717
read more...

Sunday, 14 November 2010

சூரியன் FM க்கு நன்றிகள்

நீண்ட நாட்களாக வலைப்பதிவுப் பக்கம் வரமுடியவில்லை விரைவில் பதிவுகளோடு சந்திக்கிறேன்.

இந்துக்களின் விரதங்களிலே சிறப்பான இடத்தினைப் பெறும் விரதங்களில் ஒன்றான கேதார கெளரி விரத நாட்களில் என்னால் வெளியிடப்பட்ட கேதார கெளரி விரதப் பாடல்களினை ஒலிபரப்பியரப்பிய சூரியன் FM க்கும் ஏனைய இணையத்தள வானொலிகளுக்கும் நன்றிகள்.

பாடல்களை பதிவிறக்க 
read more...

Saturday, 23 October 2010

வீட்டுக்கு வீடு வானொலிப் பெட்டிக்கருகில்

சில நாட்களாக என்னுள்ளே சில இனம் புரியாத கற்பனைகளும், கவலைகளும். இன்று நடப்பவைகளை எல்லாம் யோசித்து பார்க்கும்போது என்னடா உலகம் என்று எண்ணத் தோன்றுகின்றது. எழுத நினைப்பவை ஏராளம். ஆனால் எழுத முடியவில்லை. என் சுதந்திரம்தான் பர்றிக்கப்பட்டதென்றால். என் கருத்துச் சுதந்திரத்தையும் பறிக்க நினைப்பதா? ஏன் இந்த நாட்டில், இந்த உலகில் ஏன் பிறந்தோம் என்றே எண்ணத் தோன்றியது.

பல விடயங்கள் பதிவிட இருந்தாலும் மனம் இடம் கொடுக்காதபடியால். இணையத்திலே ஒரு சுற்று சுற்றிவந்தபோது நான் தேடிக்கொண்டிருந்த விடயங்களை கண்டுகொள்ளமுடிந்தது. அளவற்ற சந்தோசமடைந்தேன் அவற்றை உங்களோடும் பகிர்ந்து கொள்கின்றேன்.

என்னை அறிவிப்புத் துறைக்கு வருவதகு தூண்டுகோலாக இருந்தவரும், என்றும் நான் நேசிக்கின்ற, மறைந்தும் மறையாது மக்கள் மனங்களிலே இன்றும் நிலைத்திருக்கின்ற இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன அறிவிப்பாளராக இருந்து அறிவிப்புத் துறைக்கே பெருமை சேர்த்த மறைந்த அறிவிப்பாளர் கே.எஸ். ராஜா பற்றிய பல்வேறுபட்ட தகவல்களை அறிந்து கொள்ளமுடிந்தது அவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்கின்றேன்.


ஒரு நல்ல ரசிகனே நல்ல அறிவிப்பாளனாக இருக்கமுடியும். நான் அறிவிப்பாளனாக இருந்தாலும் கூட நான் அறிவிப்பாளன் என்பதனை வெளிக்காட்ட விரும்புவதில்லை. நல்ல ரசிகன். நல்ல நிகழ்சிகளை படைக்கின்ற எந்த அறிவிப்பாளராக இருந்தாலும் அவர்களின் ரசிகனாகிவிடுவேன். அதனால் என்னை நிறையவே வளர்த்துக்கொள்ள முடிந்தது.

எனது சிறிய வயதுமுதல் வானொலியோடு கட்டிப்போட்டவர் கே.எஸ் .ராஜா அவர்கள். நான் பிறந்து வளர்ந்தது பின்தங்கிய ஒரு பிரதேசம் மின்சார வசதிகூட இல்லை (அங்கே இன்றும் மின்சார வசதி இல்லை நான் இப்போ வேறு இடத்தில் இருக்கிறேன் ) உலர் மின்கலம் மூலம் இயங்கும் வானொலியில்தான் நிகழ்சிகளைக் கேட்பதுண்டு.

சிறு வயதிலே நான் எப்போது வானொலியோடுதான் இருப்பேன் படிக்கும்போதும் பக்கத்திலே வானொலிப்பெட்டி இருக்கும் ( இன்றும் அப்படித்தான்) அன்று கே.எஸ் ராஜா அவர்களால் உமாவின் வினோதவேளை நிகழ்சியினை தொகுத்து வழங்கிய விதமும் அவரின் குரலும் என்றும் என்னுள்ளே ஒலித்துக்கொண்டிருக்கின்றன.

நான் மிகவும் சிறு வயதாக இருக்கும்போது அவர் அறிவிப்பாளராக இருந்ததனால் என்னால் அவரது நிகழ்சிகளை முற்று முழுதாக கேட்க முடியவில்லையே என்று கவலைப் படுவதுண்டு. இன்று அவர் எங்களோடு இருந்திருந்தால் நான் இன்னும் எவ்வளவோ வளந்திருப்பேன்.

அவரிடம் நாங்கள் நிறையவே படித்திருக்கலாம். அவர் நிகழ்சிகளை செய்கின்ற விதம், அவரது உச்சாகமான அறிவிப்பு, விளம்பரங்கள் வாசிக்கும் விதம் என்று எல்லாவற்றிலுமே அவருக்கென்று ஒரு தனி இடம் இருக்கின்றது.
இன்று தமிழை வளர்க்கின்றோம் என்று தமிழ் மொழியை கொலை செய்பவர்கள் அவரின் அறிவிப்புக்களை கேட்கவேண்டும்.

அவரை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். நான் இன்று பல விடயங்களை இணையத்திலே அறிந்துகொள்ள முடிந்தது கே.எஸ்.ராஜா அவர்களைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகள் அவரால் செய்யப்பட்ட உமாவின் வினோதவேளை போட்டி நிகழ்சிகள், விளம்பரங்கள், அவரால் செய்யப்பட்ட இசை நிகழ்சிகள் என்று எல்லாமே ஒலி வடிவத்திலே இருக்கின்றது. அவற்ற்றை நீங்களும் கேட்டு மகிழலாம். தரவிறக்கிக் கொள்ளலாம்.

இன்று அந்த ஒலிவடிவங்களைக் கேட்கின்றபோது நேரடியாகவே கே.எஸ்.ராஜாவே என் முன்னால் நின்று பேசுவது போன்று ஒரு உணர்வும் சந்தோசமாகவும் இருந்தது.

1. கே.எஸ். ராஜாவால் செய்யப்பட்ட நிகழ்சிகள்

2.கே.எஸ்.ராஜாவின் விளம்பரங்கள்.

3.யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கே.ஜே. ஜேசுதாஸின் இசை நிகழ்சியினை கே.எஸ். ராஜா தமிழிலும் ஆங்கிலத்திலும் தொகுத்து வழங்கிய உச்சாகமான அறிவிப்பு நிறைந்த நிகழ்சியின் ஒலி வடிவம்

4.கே.எஸ்.ராஜா அவர்களுக்கு ராஜேஸ்வரி சண்முகம் அவர்கள் வழங்கிய அஞ்சலி

இன்னும் பல்வேறுபட்ட விடயங்களையும் அறிந்துகொண்டேன் . கே.எஸ். ராஜாவைப் பற்றி நீங்களும் அறிந்து கொள்வதோடு அவரது குரல்களை மீண்டும் கேட்டு மகிழ இங்கே செல்லுங்கள்.
நன்றி: யாழ் சுதாகர்
read more...

Thursday, 21 October 2010

இந்து மதம் சொல்வது என்ன

அர்த்தமுள்ள இந்து மதம் - 6



அர்த்தமுள்ள இந்து மதம் - 7



அர்த்தமுள்ள இந்து மதம் - 8



அர்த்தமுள்ள இந்து மதம் - 9



அர்த்தமுள்ள இந்து மதம் - 10



அர்த்தமுள்ள இந்து மதம் - 11



அர்த்தமுள்ள இந்து மதம் - 12



அர்த்தமுள்ள இந்து மதம் - 13

read more...

Wednesday, 20 October 2010

இந்து மதம் என்ன சொல்கிறது

அர்த்தமுள்ள இந்து மதம் -  1



அர்த்தமுள்ள இந்து மதம் - 2



அர்த்தமுள்ள இந்து மதம் - 3



அர்த்தமுள்ள இந்து மதம் -  4



அர்த்தமுள்ள இந்து மதம் -  5

read more...

Monday, 18 October 2010

கேதார கௌரி விரதத்தின் மகிமை கூறும் பாடல்களை பதிவிறக்கிக்கொள்ளலாம்.

இந்துக்களின் விரதங்களிலே சிறப்பான இடத்தினைப் பெறும் விரதங்களில் ஒன்றான கேதார கெளரி விரதத்தின் மகிமையினை கூறும் இறுவட்டு ஒன்றினை எமது கலைஞர்களின் பங்களிப்போடு வெளியிட்டு இருந்தேன்.
பாடல்கள் நல்ல வரவேற்பினைப் பெற்றிருந்தன. அப்பாடல்கள் நீங்களும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்

கதைச் சுருக்கம்
திருக்கைலாச மலையிலே பரமசிவன், பார்வதி சமேதராக வீற்றிருந்த வேளையிலே. தேவர்களும், முனிவர்களும் அங்கு சென்று இருவரையும் சுற்றி வந்து வணங்கினர். அந்த வேளையிலே அங்கு வந்த பிரிங்கி முனிவர விகடக் கூத்தொன்றை ஆடி அங்கிருந்தவர்களை மகிழ்ச்சி அடையச் செய்த பின்னர். உமாதேவியை விலக்கி விட்டு சிவபெருமானை மட்டும் சுற்றி வந்து வணங்கினர். உமாதேவியை அலட்சியம் செய்த முனிவரின் உடலிலிருந்த சக்தியை உமாதேவி எடுத்துக் கொண்டதனால் பிரிங்கி முனிவர் சபையிலே சோர்ந்து வீழ்ந்தார்.

சிவபெருமான் பிருங்கி முனிவரிடம் தடி ஒன்றைக் கொடுத்து அதனை ஊன்று கோலாகக் கொண்டு நடந்து செல்வதற்கு அனுக்கிரகம் செய்தார். இதனால் ஆத்திரமும் அவதானமும் அடைந்த உமாதேவி சிவபெருமானிடம் கோபித்துக் கொண்டு பூவுலகுக்கு வந்தார்.


ஒரு வில்வ மரத்தடியில் உமாதேவி வீற்றிருந்தார். உமாதேவியின் வருகையால் அந்த வனம் புதுப்பொலிவு பெற்றது. அந்த வனத்திலே வசித்த கௌதம முனிவர் திடிரென ஏற்பட்ட மாற்றத்துக்கான மாற்றத்துக்கான காரணத்தை அறிய முற்பட்டபோது. உமாதேவியைக் கண்டு நடந்த சங்கதிகளை அறிந்து கொண்டார்.


புரட்டாதி மாதம் சுக்கில பட்ச தசமி தொடக்கி இப்பசி மாதம் கிருஷ்ண பட்சம் தீபாவளி அமாவாசை வரையுள்ள கேதரேசுரர் விரத மகிமை பற்றியும் அதனை அனுஷ்டிக்கும் முறைமை பற்றியும் விளக்கமாகக் கூற அம்மை விரதம் நோற்று அர்த்தநாரீஸ்வரர் வடிவமாகினார்.
பதிவிறக்கங்கள்...
read more...

Tuesday, 28 September 2010

முதன் முறையாக மட்டக்களப்பில் .

சர்வதேச உல்லாச தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு கல்லடிக் கடற்கரை உல்லாச கடற்கரையாக உத்தியோக பூர்வமாக உல்லாசத்துறை அமைச்சர் பசில் ராஜபக்ஸ அவர்களினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வினைச் சிறப்பிற்கும் முகமாக மட்டக்களப்பு மாவட்டத்திலே சர்வதேச நிபந்தனைகளுக்கு அமைவாக முதன் முறையாக கல்லடி கடற்கரையில் கடற்கரை உதைப்நதாட்டப் போட்டி இடம் பெற்றது. இப் போட்டியினை உல்லாசத்துறை அமைச்சர் பசில்ராஜபக்ஸ, கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தன், கிழக்கு மாகாண சபை உறுப்பினரான பூ. பிரசாந்தன் அவர்களும் ஆரம்பித்து வைத்தார்கள். கல்லடிக் கடற்கரையினை முதலமைச்சர் சந்திரகாந்தன் அமைச்சர் பசில்ராஜபக்ஸ அவர்களுக்கு சுற்றிக் காட்டுவதனையும் படத்தில் காணலாம்.

img_89291
img_8938
img_8919
img_8920
read more...

எங்கள் தேசத்தில்

கல்லடிக் கடற்கரையில் சிரமதான நிகழ்வு

img_8503சர்வதேச சுற்றுலா தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்திலே பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன. பொருளாதார அபிவிருத்தி மற்றும் உல்வாசத்துறை அமைச்சருமான பசில் ராஜபக்ஸ அவர்கள் கிழக்கு மாகாண முதலமைச்சரின் வேண்டுதலின் பேரில் இந் நிகழ்வுகளுக்கு பிரதம அதிதியாக அழைக்கப்பட்டிருந்தார். அந் நிகழ்வுகளில் ஓர் அங்கமாக கல்லடி கடற்கரை சிரமதானம் செய்யப்பட்டது. இதில் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான  சிவநேசதுரை சந்திரகாந்தன் கலந்து கொண்டு அரம்பித்து வைத்தார்.
img_8527
img_8532
img_8540

உல்லாச தகவல் மையம் கிழக்கு முதல்வரினால் திறந்து வைப்பு.

சர்வதேச உல்லாச தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு நகரில் நெக்டெப்பினால் அமைக்கப்பட்ட உல்லாச தகவல் மையத்தினை கிழக்கு மாகாண முதலமைச்சரும் மாகாண உல்லாசத்துறை அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் திறந்து வைத்தார். இந் நிகழவிற்கு உல்லாசத்துpறை அமைச்சரும் ஜனாதியின் அலோசகருமான பசில் ராஜபக்ஸ அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார். அத்தோடு அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி, பிரதி அமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ்,மாகாண ஆளுணர் மொகான் விஜேவிக்ரம, மாகாண அமைச்சர்களான எம்.எஸ்.உதுமாலெவ்வே, எம்.எஸ்.சுபைர், மாகாண சபை உறுப்பினர் பூ. பிரசாந்தன் மேலும் பல அரசியல் பிலபல்யங்களும் கலந்து கொண்டார்கள்.
img_8630
img_86601

உல்லாச கற்கைகள் நிலையம் திறந்து வைப்பு

சர்வதேச உல்லாச தினத்தினை முன்னிட்டு கிழக்கு மாகான உல்லாசத்துறை அமைச்சினால் ஏறபாடு செய்யப்பட்டிருந்த பல்வேறு நிகழ்வுகள் மட்டக்ளப்பில் இடம்பெற்றன. மட்டு பாலமீன்மடுவில் நெக்டெப்பின் நிதியில் அமைக்கப்பட்டுள்ள உல்லாச கற்கைகள் நிலையத்தினை பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் உல்லாசத்துறை அமைச்சருமான பசில் ராஜபக்ஸ திறந்து வைத்தார். கிழக்கு மாகாண முதலமைச்சரும் மாகாண உல்லாசத்துறை அமைச்சருமான சவநேசதுரை சந்திரகாந்தன் அமைச்சர் பசில் ராஜபக்ஸ அவர்களுக்கு மட்டக்களபபு மாவட்டத்தின் உல்லாச பிரதேசங்கள் தொடர்பாக விளக்கமளிப்பதனையும் பாலமின்மடு உல்லாச பிரதேசத்தினைச் சுற்றிக் காட்டுவதனையும் தனது அழைப்பினை ஏற்று வருகைதந்த அமைச்சர் அவர்களுக்கு பொன்னாடை போற்றி கௌரவிப்பதனையும் கிழக்குப் பல்கலைக் கழக விபுலானந்தா அழகில் கற்கைகள் நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கலைநிகழ்வகளையும் படங்களில் காணலாம். img_8724
img_8821
img_8826
img_8730
img_8869
img_8853
img_8803
read more...

Monday, 27 September 2010

நடந்தவை, நல்லவை

சிறுபான்மை மக்களுக்கான குறைந்த பட்ச அதிகாரப் பகிர்வு முறைமை மாகாண சபை - கிழக்கு மாகாண முதலமைச்சர்.

img_8280அரசியல் அமைப்புக் கற்கைகள் நிறுவனத்தின் அனுசரனையுடன் மாகாண சபைகளுக்கான அதிகாரங்களைப் பெற்றுக் கொடுப்பதற்கான அமைப்பின் ஏற்பாட்டில் 13வது யாப்புத் திருத்தத்தை அமுல்படுத்துவது பற்றிய மாகாண செயலமர்வு மட்டக்களப்பு கோப் இன்னில் இடம் பெற்றது. இந் நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிரதம அதியாகக் கலந்து கொண்டார்.
இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய கிழக்கு  மாகாண முதலமைச்சர் சி. சந்திரகாந்தன், சிறுபான்மை மக்களுக்காக கொண்டுவரப்பட்ட குறைந்தபட்ச அதிகாரத் தீர்வு முறைமை இன்று நம் எல்லோராலும் பேசப்படுகின்ற 13வது அரசியல் திருத்தச் சட்டத்தின் கருவில் உருவான மாகாண சபை முறைமைதான். 1987ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட வடக்கு கிழக்கிணைந்த மாகாண சபையினால் 13அரசியல் திருத்தச்  சட்டமூலத்தினை அடிப்படையாகக் கொண்டு சுயாதீனமாக இயங்க முடியாது போனது. இதற்கு அப்போதைய ஒரு சில அரசியல்வாதிகள் மற்றும் மறைமுகமாக இருந்து செயற்பட்ட போராட்ட இயக்கங்கள் காரணம் என்று கூறலாம். ஆனால் இன்று இயங்குகின்ற கிழக்கு மாகாண சபை அவ்வாறான ஒன்றல்ல. மிகவும் பல்வேறு வழிகளிலும் அல்லலுற்ற எம் மக்கள் நிம்மதியாக வாழவேண்டும். அவர்களுக்கான அதிகாரங்களை குறித்தொதுக்கப்பட்ட சட்டவரையறைகளுக்குள் நின்று கொண்டு பெற்று அதனூடாக சிறப்பாக செயற்பட வேண்டும் என்பதே எமது மக்களின் அவாவாகும். அதனை நிறை வேற்றுவதற்காகத்தான் கிழக்கு மாகாண சபை தற்போது மக்கள் பிரதிகளிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது. இம் மாகாண சபைக்கு 13வது திருத்தச் சட்டத்தின் ஊடாக அளிக்கப்பட்டிருக்கின்ற அதிகாரங்களை முழுமையாக பெறுவற்கு அரசியல் வாதிகள் எனத் தங்களை இனங்காட்டுவோர் கட்டாயம் ஆதரவளிக்க வேண்டும். வெறமனே பேசுவதனால் மாத்திரம் பயன் இல்லை அதனை நடைமுறைப் படுத்துவதற்கான வழிவகைகளைத் தேட வேண்டும். அப்போதுதான் எமது சிறுபான்மை மக்களின் அபிலாசைகளை ஓரளவேனும் வென்றெடுக்க முடியும் என தான் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார். அத்தோடு கட்சி பேதங்களை மறந்து எமது சிறுபான்மை மக்களுக்களுக்கான குறைந்த பட்சத் தீர்வாக எம் கண் முன்னே இருக்கின்ற மாகாண சபையினை பலப்படுத்த அனைவரும் முன் வரவேண்டும். மாறாக சிறுபான்மை மக்கள் தொடர்பான சட்டத்திருத்தங்களை பாராளுமனறத்தில் வாக்கெடுப்பிற்காக அல்லது பரிசீலனைகளுக்காக  கொண்டுவருகின்ற போது பொறுப்பற்றவர்களைப் போன்று பாராளுமன்ற நடவடிக்கைகளலிருந்து வெளிநடப்புச் செய்வதும் சிலர் விடுமுறைகளில் நிற்பதும் தவிர்க்கப் படவேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
மேலும் அவர் பேசுகையில், கடந்த காலங்களில் செயற்பட்ட தமிழ் அரசியல் வாதிகள் போல் இனி மேலும் நாம் காலத்தை வீணடிக்க முடியாது. ஆரம்பத்தில் கொள்கை, கோட்பாடு, உரிமை, சமஸ்டி என்றெல்லாம் பேசியவர்களின் நிலை என்ன? அவர்களுக்கு நன்றாகத் தெரிந்திருந்த விடம் அவைகளெல்லாம் எமக்கு கிடைக்காது அவைகளெல்லாம் அசாத்தியமான விடயங்கள் என்று. அப்படி இருந்தும் காலத்தினை வீணடித்த  வரலாறுகள்தான் மிச்சம். ஆனால் இவர்கள் எல்லோரும் கேட்டதற்கு அப்பால் இன்று சிறுபான்மை மக்களுக்காக இந்நாட்டில் இருக்கின்ற அதிகாரப் பகிர்வு முறை என்றால் அது மாகாண சபை முறைமைதான். இது விரும்பியோ விரும்பாமலோ எமக்குக் கிடைத்திருக்கின்றது. அதனைச் சரியாகப் பயன்படுத்துவதற்கும், அதனைப் பலப்படுத்துவதற்குமான வழிவகைகளையே நாம் தேட வேண்டும். எமக்குத் தெரிந்த அத்தோடு இலகுவாக பெறக்;கூடிய விடயங்களைப் பற்றிச் சிந்திக்காமல் இன்றும் அன்று போல் பழைய பாணியில் வேதம் ஓத நினைப்பது வேதனையளிக்கிறது. அவற்றை எல்லாம் விடுத்து தமிழ் மக்களின் அரசியல் காவலர்கள் என்பவர்கள் எம் மக்களுக்கான அதிகாரங்களைப் பெறுவதற்கு சகல வழிகளிலும் முன்வரவேண்டும். அதனை விடுத்து காலங் கடந்த ஞானம் பெற்ற ஞானிகள் போல் திரியாமல் தற்போதைய சுமுகமான சூழ்நிலையில் எமக்கான அதிகாரங்களை நாம் பேசிப் பெறுவதற்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
இச் செயலமர்விற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள், கிழக்கு மாகாண அமைச்சர்கள், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், மாநகர மேயர், உள்ளுராட்சி சபைகளின் தவிசாளர்கள், சிரேஸ்ட விரிவுரையாளர்கள், ஆலோசகர்கள், அரசியல் ஆய்வாளர்கள் மற்றும் அரசியற் துறை சார்நத மாணவர்களும் வருகைதந்திருந்தார்கள்.
img_8279
img_8268
img_8272

நீலப்பனிக்கன் குள விவசாய வீதி பொது மக்களின் பாவனைக்காக  கிழக்கு மாகாண முதலமைச்சரால் (23.09.2010) கையளிக்கப்பட்டது.

திருகோணமலை நீலப்பனிக்கன் குள விவசாய வீதி கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனால் இன்று பொது மக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது



மாகாண நீர்ப்பாசன பொறியியலாளர் கட்டிடத்திற்கான அடிக்கல் குச்சவெளியில் முதலமைச்சரால் (23.09.2010) நடப்பட்டது.

img_7936-copy

மாகாண நீர்ப்பாசன பொறியியலாளர் கட்டிடத்திற்கான அடிக்கல் திருகோணமலையின் குச்சவெளியில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனால் நடப்பட்டது. இந்நிகழ்வில் மாகாண அமைச்சர் உதுமாலெப்பை, தவிசாளர் பாயீஸ், ஆரியவதி ஆகியோரும் குச்சவெளி பிரதேச செயலாளர் தவிசாளர் தௌபிக் ஆகியோர் கலந்து கொண்டனர்.


பாரம்பரிய கலை இலக்கியங்களைப் பாதுகாக்க வேண்டிய கடமை எம் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும். – கிழக்கு முதல்வர்.

img_78272

மட்டக்களப்பு மாவட்ட செயலக கலாசார அலுவலகம் நடாத்திய மக்கள் கலை இலக்கிய விழா  (22.09.2010) மட் மகாஜன கல்லூரி மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் சு. அருமைநாயகம் தலைமையில் இடம் பெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சி. சந்திரகாந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து பேசுகையில், ஒவ்வொரு சமுகத்தவர்களுக்கும் ஒவ்வொரு பாரம்பரிய கலை இலக்கிய பண்பாடு கலாசாரம் என குறித்தொதுக்கப்பட்டிருக்கிறது. அதனை அவர்கள் சரியாக பாதுகாத்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு அவர்களையே சார்ந்தது.


மட்டக்களப்பு மாவட்டத்தினைப் பொறுத்தவரையில், கலை இலக்கியங்கள் என்பது மக்களின் வாழ்வியலோடு பின்னிப் பிணைந்திருப்பது. விசேடமாக குறிப்பிட்ட சில கலைகளுக்கு மட்டக்களப்பு பெயர் போனது. கடந்த கால அசாதாரண சூழல் மற்றும் தற்போதைய நவீன யுகம் இவற்றிற்கிடையில் கலை இலக்கியங்கள் பாதுகாப்பதென்பது சவாலன விடயம்தான். இருந்த போதும் நகர்ப்புறங்களிலும் கிராமப் புறங்களிலும் இவ்வாறான கலை இலக்கிய நிகழ்வுகளை ஏற்படுத்த வேண்டும். அத்தோடு இது சார்நத பல போட்டிகளை நடாத்தி பரிசில்கள் வழங்க வேண்டும். அவ்வாறே மக்களுக்கும் இதன் முக்கியத்தவத்தையும் எமது பாரம்பரியங்கள் கலாசாரங்களையும் தெளிவுபடுத்த வேண்டும். இதற்காக கிழக்கு மாகாண சபையுடன் இனைந்து அதிகாரிகள் மற்றும் கலைஞர்கள் ஒத்துழைக்க வேண்டும் எனவும் அவர் தனதுரையில் குறிப்பிட்டார்.


இந் நிகழ்வில் மட்டக்களப்பிற்கே உரித்தான பல கலைநிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டன.  கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ. பிரசாந்தன், மூத்த பல கஞைர்கள், கிழக்கு மாகாண கலாசார பணிப்பாளர் யூ. கே. வெலிக்கல, மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா நெடுஞ்செலியன், கலாசார உத்தியோகஸ்த்தர் மலர்ச்செல்வன் அகியோரும் கலந்து கொண்டார்கள்.



ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் திருக்கோவில் கல்வி வலயத்தைச் சேர்ந்த மாணவி மாலவன் சுபதா அகில இலங்கை ரீதியில் முதலிடம்.

தற்போது வெளியாகியுள்ள ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறு அடிப்படையில் அம்பாறை திருக்கோவில் கல்வி வலயத்தைச் சேர்ந்த தம்பிலுவில் கலைமகள் வித்தியாலய மாணவி மாலவன் சுபதா தமிழ் மொழி மூலத்தில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார். இவர் 193 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.
இந்நிலையில் அகில இலங்கை ரீதியில் பன்னிபிட்டிய தர்மபால வித்தியாலயத்தைச் சேர்ந்த சனூஜ கல்ஹாசன் 196 புள்ளிகளை பெற்று முதலிடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பின் முன்னாள் எம். பி. கிழக்கு முதல்வருக்கு புகழாரம்.

img_78022மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இராஜதுரை கிழக்கு மாகாண முதலமைச்சரின் சேவை நலனைப் பாராட்டி முதல்வர் சந்திரகாந்தனுக்கு பொன்னாடை போற்றி கௌரவித்தார். இன்று(22.09.2010) மட்டக்களப்பில் அவரது வீட்டில் முதலமைச்சர் சநத்திரகாந்தனைச் சந்தித்து பேசுகையில், கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற தமிழ் மக்களுக்கான கட்சி என்ற அடிப்படையில், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்  கட்சி பல சேவைகளைப் புரிந்து வருவதாகவும் மக்களின் நலனில் அக்கறை கொள்கின்ற ஓர் கட்சியாகவும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். தொடர்நது தமது ஆதரவு த.ம.வி.பு கட்சிக்கு இருப்பதாகவும் மேலும் பல சேவைகளை எமது மக்களுக்காக ஆற்ற வேண்டி இருப்பதாகவும் அதற்கு த.ம.வி.பு கட்சியயுடனான உறவு வலுச்சேர்க்கும் என தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

read more...

Tuesday, 21 September 2010

முன்னாள் புலிப்போராளிகளும் கிழக்கு முதல்வரும்

புனர்வாழ்வளிக்கப்பட்டு தற்போது வெலிக்கந்த புனர்வாழ்வு முகாமில் இருக்கும் முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகள் உறுப்பினர்களுக்கு இன்று கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தொழிற்பயிற்சி உபகரணங்களை வழங்கி வைத்தார்.


முதலமைச்சரின் விடேச நிதியொதுக்கீட்டிலிருந்து சுமார் பத்து இலட்சம் ரூபாய் இதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய முதலமைச்சர், இப்புனர்வாழ்வு முகாமிலிருந்து விடுதலையாகின்ற போது அனைவரும் ஒரு தொழிலில் சிறப்புத் தேர்ச்சி உடையவர்களாக திகழ வேண்டும். அதற்கேற்றால் போல் பயிற்சிகளை நீங்கள் மேற்கொள்ள வேண்டும். அத்தோடு அதற்கான முதற்கட்டமகவே இதனை நான் பார்க்கின்றேன். நீங்கள் விடுதலை பெற்றுச் செல்கின்ற போது இயல்பு வாழ்க்ககை;கு திரும்ப வேண்டும். கடந்த காலங்களில் தோன்றிய கசப்பான சம்பவங்களை மறந்து, நாங்கள் அனைவரும் எமது குடும்பம, எமது தொழில், எமது வருமானம் என நாம் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும். மேலும் தேவையற்ற விதண்டா வாதங்களைப் பேசி இனியும் நாம் நாட்களைக் கடத்தக் கூடாது எனவும் அவர் குறிப்பிட்டார்.


தொடர்ந்து அவர் பேசுகையில், விடுதலைப் போராட்டம் ஏன் ஆரம்பிக்கப்பட்டது எனபதற்கு அப்பால் அதனால் எற்பட்ட தாக்கங்களே அதிகமாக எமக்குப் புலப்படுகின்றது. எனவே கடந்த காலங்களில் நாம் அனைவரும் விரும்பியோ விரும்பாமலோ அச்சூழ்நிலையில் சிக்கித் தவிர்த்தோம். ஆனால் இன்று அவ்வாறல்ல புதுமையான ஓர்; சிந்தனை உதயமாகி எமது மனங்களிலே விரோதப் பாங்கு மறைந்து அனனைவரும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழ்நிலை உருவாகி இருக்கின்றது. இதனை நாம் சரியாகப் பயன்படுத்தி எமது தனியாள் வருமானங்களை அதிகரித்து மென்மேலும் நாம் சிறப்பபுப்பெற உழைக்கவேண்டும். ஒரு மனிதன் எந்தவொரு தொழிலும் இல்லாமல் இருக்கின்ற போதுதான் அவனது சிந்தனை தவறான வழியில் செல்கின்றது. எனவே அனைவரும் உங்களது திறமைக்கும் ஆற்றலுக்கும்; ஏற்றால் போல் தொழில்களைத் தேர்ந்தெடுத்து, அதனைச்சிறப்பாக செய்து உங்களது இயல்பு வாழ்க்கையினைத் தொடர வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.


இந் நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், புனர்வாழ்வுகளின் பொறுப்பதிகாரி கேணல் எஸ்.கே.ஜி.என்.பி.எகலமல்பே, கிழக்கு பிராந்திய புனர்வாழ்வுகளின் ஒருங்கிணைப்பு அதிகாரி கேணல் அபேயவர்த்தன, வெலிக்கந்தை புனர்வாழ்வு முகாம் பொறுப்பதிகாரி மேஜர் காமினி ரத்;நாயக்க மற்றும் முதலமைச்சர் செயலகத்தின் திட்டமிடல் பணிப்பாளர் கௌரிதரன் ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.









read more...

Monday, 13 September 2010

தமிழை கொலை செய்து வாழ்ந்து வரும் தமிழ் சினிமா

இன்று பல்வேறு வழிகளிலே தமிழ்மொழி கொலைசெய்யப்பட்டு வருகின்றது. இன்று எங்கு பார்த்தாலும் தமிழ் மொழியோடு தேவையற்ற விதத்திலே வேற்று மொழியினைக் கலந்து தமிழ் மொழியின் இனிமையினையும், தமிழ் மொழியின் சிறப்பினையும் குழி தோண்டிப் புதைக்கின்றனர்.


தமிழ் மொழியினை கொலை செய்வதிலே இன்று திரையுலகம்கூட விட்டு வைக்கவில்லை. திரையுலகத்தைப் பொறுத்தவரை பல வழிகளிலே எமது தமிழ் மொழியினை வளர்க்க முடியும். ஆனால் இன்று என்ன நடக்கின்றது? தமிழ் மொழியை வளர்ப்பதற்குப் பதிலாக எப்படி எல்லாம் தமிழ் மொழியினை கொலை செய்ய முடியுமோ அப்படி எல்லாம் கொலை செய்து கொண்டிருக்கின்றனர்.


திரையுலகம் சார்ந்த எல்லோரையும் குற்றம் சொல்லவில்லை. தமிழ் மொழியை வளர்ப்போரும் திரையுலகத்திலே இருக்கின்றார்கள். இருந்தாலும் இன்று திரைப்படங்களிலே பல்வேறு வழிகளிலே தமிழ்மொழி கொலை செய்யப்படுகின்றது.


அன்றைய திரைப்படங்களிலே தமிழ் மொழி இன்றுபோல் கொலை செய்யப்பட்டதா இல்லையே? இன்று என்ன செய்கின்றார்கள்.


இன்றைய தமிழ் திரைப்படங்களை எடுத்துக் கொண்டால் எமது கலாசாரத்துக்கு போருத்தமிலாத குடும்பத்தோடு பார்க்க முடியாத திரைப்படங்களே அதிகம் எனலாம். அதனை விட்டுவிடுவோம். திரைப்படங்களிலே தமிழ் மொழியிலே எத்தனை வீதம் பேசுகின்றார்கள் என்பதனை பார்த்திருக்கின்றீர்களா. ஏன் நாங்கள் தேவையற்ற முறையிலே வேற்று மொழிகளை பயன்படுத்துவதனை தவிர்த்து எமது தாய் மொழி தமிழினை பயன் படுத்துவதிலே என்ன தவறிருக்கின்றது.


இன்று வருகின்ற பாடல்களிலே என்ன செய்திருக்கின்றார்கள் அவர்கள் என்ன மொழியிலே பாடல்கள் எழுதியிருக்கின்றார்கள் என்பதே புரிந்து கொள்ள முடியாமலிருக்கின்றது. ஏன் தமிழ் பாடலிலே வேற்று மொழிகளை கலக்கின்றார்கள் தமிழ் மொழியிலே அழகான சொற்கள் இல்லையா? எத்தனை சொற்கள் இருக்கின்றன. இந்தக் கவிஞர்களுக்கு தமிழ் சொற்களுக்கு பஞ்சமா அல்லது தமிழ் மொழி தெரியாதவர்களா?


தமிழ் மொழியிலே பாடல் எழுதத் தெரியவில்லை என்றால் இவர்களுக்கு எதற்கு தமிழ் கவிஞர்கள் எனும் பட்டம். இவர்களுக்குத் இவர்களுக்குத் தெரிந்த வேற்று மொழிகளிலே பாடல்களை எழுதலாமல்லவா? ஏன் தமிழ் மொழியை கொலை செய்து தமிழ் மொழியின் சிறப்பை இல்லாதொழிக்க நினைக்கின்றனர்.



இவர்களால் எத்தனை இலக்கியப் பாடல்கள் கொச்சைப் படுத்தப்பட்டிருக்கின்றன. எத்தனை இலக்கியப் பாடல்களை தமது பாடல்களிலே புகுத்தி எமது தமிழ் மொழியினை கொச்சைப் படுத்தியிருக்கின்றனர்.எத்தனை தேவாரங்களை கொச்சைப் படுத்தியிருக்கின்றனர். வேறொரு மொழியிலே இவ்வாறு செய்ய அந்த மொழியினை சார்ந்தவர்கள் விடுவார்களா?


இவர்களால் தமிழிலே பாடல்களை எழுதுவதற்கு என்ன. தமிழ் மொழியிலே சொற்களுக்கு பஞ்சமா? அல்லது இவர்களுக்கு தமிழ்மொழி தெரியாதா? தமிழ் மொழியிலே பாடல் எழுதத் தெரியாதவர்கள் எதற்கு தமிழ் கவிஞர்கள் என்று தங்களை சொல்லவேண்டும். தமக்கு தெரிந்த மொழிகளிலே எழுதலாமே. எங்கள் தமிழ்மொழியை ஏன் சாகடிக்கவேண்டும்.


இன்று இரசிகர்கள் இதனைத்தான் விரும்புகிறார்கள் என்று சொல்லப்போகின்றார்களா? இரசிகர்கள் விரும்புவதை விட அவர்களால் திணிக்கப்படுகிறது. இரசிகர்களை பழக்கப்படுத்தி விட்டது யார்? இவர்களால் திணிக்கப்பட்டபோது ஆரம்பத்திலே சகித்துக் கொண்டு கேட்க ஆரம்பித்தனர். பின்னர் தங்களை பழக்கப் படுத்திக்கொண்டனர் என்றுதான் சொல்லவேண்டும்.


அன்று வேற்று மொழிக் கலப்பிலாத பாடல்கள் வெளிவரவில்லையா? அந்தப் பாடல்கள் இன்றும் மக்கள் மனதிலே இடம்பிடித்திருக்கின்றன. ஆனால் இன்றைய பாடல்கள் எவ்வளவு காலம் நிலைத்திருக்கின்றன? சினிமாப் பாடல்கள் இன்று தமிழ் மொழியினைக் கொலை செய்வதனை ஒரு தொடர் பதிவே எழுத முடியும்.


தமிழ் மொழியினை வளர்ப்பதற்காக தமிழ் மொழியிலே திரைப்படங்களின் பெயர்களை வைத்தால் வரி விலக்கு..... சரி திரைப்படங்களிலே தமிழ் மொழியும் எமது இலக்கியங்களும் கொலை செய்யப்படுவதை என்னவென்றே பார்க்காது. வேற்று மொழியிலே பெயர் வைப்பதை தடை செய்வதிலே என்ன இருக்கிறது? திரைப்படமே ஒட்டு மொத்தத்தில் தமிழ் மொழியை கொலை செய்கிறது.திரைப்பட பெயரினை தமிழில் வைத்து தமிழை கொலை செய்யும் திரைப்படங்களை என்ன செய்வது.


தமிழ் மொழி பற்றிப் பேசுகின்றவர்கள் திரைப்படப்பாடல்களும், திரைப்படமும் தமிழை கொலை செய்வதை பற்றி சிந்தித்திருக்கின்றார்களா?


இன்று தமிழ் மொழியை வளர்க்கின்ற திரையுலகம் சார்ந்தோரும். திரைப்படங்களும் இல்லாமல் இல்லை. தமிழ் மொழியினை கொலை செய்கின்றவர்கள் எமது மொழியின் வளர்ச்சிக்காக தமிழ் மொழியினை தமது பாடல்களிலே கொலை செய்வதனையாவது நிறுத்தி தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக நல்ல பாடல்களைத் தருவார்களா?
read more...

எவ்வளவோ எதிர்பார்ப்போடு வாக்களித்த தமிழ் மக்களுக்கு இந்தத் தமிழ் கூட்டமைப்பு செய்யும் பரிகாராம் என்ன?

கிழக்கு மாகாண விவசாய மீன்பிடி அமைச்சினால் மட்டக்களப்பு மீனவர்களுக்கு மீன்பிடி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு களுதாவளை மகாவித்தியாலயத்தில் இன்று ( 07.09.2010)இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்நது குறிப்பிடுகையில், தமிழ் மக்களை ஏமாற்றி அரசியல் நடாத்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பினரை நாம் இல்லாதொழிக்க வேண்டும். இவர்களால் எம் மக்களுக்கு எந்த விமோசனமும் கிடைத்ததும் இல்லை இனிமேலும் கிடைக்கப் போவதுமில்லை. எனவே மக்கள் இந்தத் தருணத்தில் சிந்தித்துச் செயற்பட வேணடும்.


மேலும் தொடர்நது பேசுகையில் எவ்வளவோ எதிர்பார்ப்போடு வாக்களித்த எமது தமிழ் மக்களுக்கு இந்தத் தமிழ் கூட்டமைப்பு செய்யும் பரிகாராம் என்ன? எதுவுமே இல்லை. காலங்காலமாக எம் மக்களை ஏமாற்றியே அரசியல் நடாத்தி இருந்திருக்கின்றார்கள். தற்போது ஏமாற்றிக் னெகாண்டே அரசியல் நடாத்துகின்றார்கள். உதாரணமாகச் சொல்லப் போனால் பத்திரிகைகளில் பேட்டி வழங்குவது. அதாவது அத்து மீறிய குடியேற்றம் செய்கிறது அரசு அதற்கு உடந்தையாக செயற்படுகிறது கிழக்கு மாகாண சபை என்று மக்களை திசை திருப்புவது. நான் இவர்களிடம் கேட்கின்றேன் கிழக்கில் எத்தனை அத்து மீறிய சிங்களக் குடியேற்றம் செய்யப்பட்டிருக்கின்றது. இதற்கு கிழக்கு மாகாண சபை எங்கே எப்போது அங்கிகாரம் வழங்கி இருக்கிறது. முடியுமானால் சொல்லட்டும். முதலில் அத்து மீறிய குடியேற்றம் என்பதன் வரைவிலக்கணத்தை இவர்கள் புரிந்து கொண்டு பேச வேண்டும். எது தொடர்பிலும் பூரணமான தரவுகள் இல்லாமல் வெறுமனே பத்திரிகைகளில் பேட்டி கொடுப்பதும் அத்தோடு அநாமதய இணையத் தளங்களுக்குச் செவ்வியளிப்பதுமாக இவர்களது வாழ்நாள் கழிகின்றது.


மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொண்ட இந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்பிக்கள் எத்தனை அபிவிருத்தித் திட்டங்களைச் செய்திருக்கின்றார்கள் என்று நான் கேடட்கின்றேன். நிச்சயமாகச் சொல்லமுடியும் எதுவும் இல்லை என்று. தமிழ் தேசிய கூட்மைப்பின் தலைவரான சம்பந்தன் அவர்கள் இன்னும் தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியினைச் செலவு செய்யவில்லை. காரணம் அவர் நாட்டில் இருப்பதேயில்லை. மட்டக்ளப்பு மாவட்டத்தைச் சேர்ந்த இன்னொரு எம்.பி கோயில்களில் பூஜை செய்து திரிகின்றார்.

அத்தோடு இருக்கும் இடம் எல்லாம் கோயில் கட்ட நிதி சேர்க்கின்றார். போதாமல் புலம்பெயர் தமிழ்களிடம் நிதி சேகரித்து கோயில் கட்டப் பாடுபடுகின்றார். பாருங்கள் மக்களே நன்றாகச் சிந்தியுங்கள் கோயில் என்பது எமது மக்களின் நிதியைக் கொண்டே எம்மால் கட்ட முடியும்.

இவர் வெளிநாட்டிற்குச் சென்று கோயில் கட்ட நிதி சேகரிக்கின்றார். மக்களுக்கு எத்தனையோ அடிப்படைப் பிரச்சினைகள் இருக்கின்றது அதனைத் தீர்பதற்கு வழிகளைத் தேடாமல் மக்களை ஏமாற்றிக் கொண்டு அரசியல் லாபம் தேடுகின்றார்கள். இவர்களுக்கு எதிர்வருகின்ற காலங்களில் மக்கள் சரியான பாடத்தினைப் புகட்டி இவர்களை ஓரங்கட்ட வேண்டும் அப்போதுதான் எமது தமிழ் மக்களுக்கு விடிவு கிடைக்கம் என மிகவும் காரசாரமாக முதலமைச்சரது பேச்சு அமைந்திருந்ததது.
read more...

Saturday, 11 September 2010

காதலில் உங்கள் குணம் எப்படி

காதலில் உங்கள்  குணம் எப்படி என்று இலகுவாக அறிந்து கொள்ளலாம். நீங்களும் காதலிக்கின்றிர்களா, அல்லது உங்கள் நண்பர்கள் காதலில் என்ன குணம் என்று அறிய ஆவலா? இலகுவாக பிறந்த திகதியை வைத்து அறியலாம்.

உ+ம் 2.2.1969 2+2+1+9+6+9+=29 இதையும் பிரித்துக் கூட்ட வேண்டும் 2+9=11 1+1=2 இதுதான் இவருடைய காதல் எண் {love number}

 லவ் நம்பர் ஒன்று ==>>சின்னம் ==>மான்

பெண்ணுக்குரிய குணம் ==>> வாழ்கையை நுனிக்கரும்பு வரை சுவைத்திட ஆர்வமுள்ளவர் வரப்போகும் கணவன் தன்னைவிட எல்லா அம்சங்களிலும் உயர்ந்து நிற்க வேண்டுமென்று எதிர்பார்பவர் அப்படிப்பட்டவரை ஆதாரனை செய்யத் தவறமாட்டீர்கள் லட்சியப்போக்கும்,சாதுர்யமும்,நகைச்சுவையும் நிரம்பியவர்

ஆணுக்குரிய குணம் ==>> காதல் கல்யாணத்தில் நிறையத் தோல்வி jgகாண்பீர்கள் ஆனால் நீங்கள் மனைவியிடத்தில் விசுவாசத்தோடும்,பெருந்தன்மையோடும்,நன்றியுணர்ச்சியோடும் இருப்பீர்கள் படுக்கையில் மனைவி நல்ல ஒத்துழைப்பை அளிப்பாள் மனைவியின் நடத்தையைக் கலர் கண்ணாடி கொண்டு பார்க்காமல் இருந்தால்,வாழ்க்கை சொர்க்கம்தான் மண்டைகனத்தையும் தவிர்த்தால் எல்லாம் இன்பமயம்

லவ் நம்பர் இரண்டு ==>> சின்னம் ==>> பட்டாம்பூச்சி
பெண் ==>> கணவர் எள் கொண்டு வா என்றால் எண்ணெய் இதோ என்று சொல்லும் சுபாவம் உடையவர்.அடிக்கடி உணர்ச்சிகளுக்கு அடிமையாகும் தொட்டாற்சிணுங்கி நீங்கள் உங்கள் ஒவ்வொரு பணியையும்,உங்கள்அலங்காரத்தையும்,உங்கள் கணவர்{அ} காதலர் வாய் நிறைய மெச்ச வேண்டுமென்று எதிர்பார்பவர் நீங்கள் நல்ல நகைச்சுவை நிரம்பியவர் நீங்கள் இருக்குமிடத்தில் சதாசர்வ காலமும் கலகலப்புத்தான்.

ஆண் ==>> நீங்கள் ஒரு காதல் மன்ன்ன அதோடு உங்கள் காதலியின் முறையீடுகளை அனுதாபத்தோடு கேட்டு, தீர்வு காணத்தவறமாட்டீர்கள் மனைவியின் உடல் சுகத்தைப்பெற சந்திரனைக்கூட கையில் பிடிக்க முயல்வீர்கள்.ஆனாலும் கொஞ்சம் பொறாமைக் குணம் உண்டு.

லவ் நம்பர் மூன்று ==>> சின்னம் ==>>மீன் தின்னி பிராணி}{otter}

பெண் ==>> ஆண்மை நிறைந்தவன்னையே எதிர்பார்பீர்கள்,அழகுகூட இரண்டாம் பட்சம்தான்.நாகரீகத்தை எதிர்பார்பீர்கள்,வீட்டுப் பணியுடன்,வெளிப்பணியையும் திறம்பட வகிக்கக் கூடியவர் உச்சிமீது வானிடிந்து வீழினும் அச்சமில்லை அச்சமில்லை என்ற பாரதியின் பாட்டுக்கு இலக்கணம் நீங்களேதான்.

ஆண் ==>> ஓர் உத்தம புருஷனின் கல்யாணகுணங்கள் அத்தனையும் பொருந்தியவர் எல்லோருக்கும் பரிசுகளையும் பண்டங்களையும் வாரி வழங்கும் கர்ணன் எல்லா விஷயங்களையும் பேதமின்றி விளையாட்டாகவே எடுத்துக்கொள்வார் சுவையான பேச்சாளர் பொறாமை என்றால் அது என்ன விலையென்று கேட்பவர்

லவ் நம்பர் நான்கு ==>> சின்னம் ==>> தேனீ

பெண் ==>> உங்களை நேசிப்பவரிடம் விசுவாசமாகவும்,நன்றியுள்ளவராகவும்,அனுசரணையுள்ளவராகவும்,இருப்பீர்கள்.நீங்கள் இருக்குமிடத்தில் கும்மாளமும் வேடிக்கையும் ,சிரிப்புந்தான்.

ஆண் ==>> நீங்கள் உணர்ச்சிவசப்படும் டைப் முன் யோசனையுடையவர் குழந்தைகளையும்,மனைவியையும் அதிகமாக நேசிப்பவர். விசாலமனமும்,பெருந்தன்னையும் நிறைந்தவர்.உங்கள் மனதை பறிகொடுத்தவருக்காக உயிரைக் கூட தியாகம் செய்யத்தயங்காதவர்.பரிபூரண சுதந்திரத்தை வழங்குபவர்.உங்களைக் கணவராக அடைய ரொம்ப கொடுத்துவைத்திருக்க வேண்டும்.

லவ் நம்பர் ஐந்து ==>> சின்னம் ==>> குருவி

பெண் ==>> பெண்மை பரிபூரணமாக குடிகொண்டுள்ளவர்.

இவரை மனைவியாக அடையப்போகிறவர்கள் ரொம்பவும் அதிஷரசாலிதான் உலகை ஒரு சுற்றுசுற்றிவர,பேராசை கொண்டவர் யாராவது சுவையாகச் சமைத்து வைத்தால் நாக்கை நொட்டை விட்டுக்கொண்டு சாப்பிடத் தயாராகும் உங்களுக்கு

சமையல்.வீட்டுவேலையெண்றால் எட்டிக்காய்தான் இவளை மனைவியாக அடைந்த நான் சந்தேகமில்லாமல் பாக்கியசாலிதான் என்று உங்கள் கணவர் நினைக்கும் அளவுக்கு நீங்கள் ஐர்க்பாட்.

ஆண்   ==>>  பெண்களிடையே நீங்கள் ரொம்பவும் பாப்புலர் டைப் உங்கள் பார்வைக்காக ஏங்கும் பெண்கள் ஏராளம் உங்களின் போக்கு எதிர்த்தரப்பினருக்கு அதிர்ச்சியையும்,அளிக்கலாம் ,ஆனந்த்ததையும் அளிக்கலாம் உங்களுக்கு வாழ்கை ஒரு சவால்தான்! .

லவ் நம்பர் ஆறு ==>> சின்னம் ==>> வாத்து

பெண் ==>> குப்பை மேட்டைக்கூட கோவிலாக்கும் கலைநயம் படைத்தவர் என் கணவர்,என் கு்ழந்தைகள்ளாதான் உலகம் என்று வாழ்ந்து காட்டக் கூடிய உண்மையான தாய் நீங்கள் அதது அதனிடத்தில் இருக்க வேண்டுமென்பதில் தீவிரம் காட்டுவீர்கள். எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும் என்ற கொள்கையால் கணவனைத் திக்குமுக்காட வைப்பீர்கள் ஓர் ஆதர்ச மனைவி என்பதற்கு உண்டான அத்தனை தகுதிகளையும் கொண்டவர் .

ஆண்  ==>> காதல் பவித்திரமானது,பெண்ணை மலரெனக் கையாளும் பாங்குடையவர் உடலைக் காயப்படுத்தக் கூட உங்கள் மனம் இடம் கொடுக்காது. அழகை ஆராதனை செய்யும் அதே சமயத்தில் கவிதைகளையும் எழதித் தள்ளுவீர்கள் மணாளனே மங்கையின் பாக்கியம் என்ற வாசகம் உங்களுக்காகவேதான்.

லவ்நம்பர்  ஏழு  ==>> {சின்னம் ==>>ஆந்தை}

பெண்  ==>> உடுப்பது,உண்பது,பேசுவது,காதலிப்பது எல்லாமே ஏனோதானோதான். பணம்,பதவி,பகட்டு எல்லாமே உங்களுக்கு அனாவசியம்தான்....சராசரிப் பெண்ணின் ஆபாசங்களிலிருந்து வேறுபட்டு தனித்து நிற்கும் ஆபூர்வப்பிறவி நீங்கள் எந்த ஒரு விக்ஷயத்திலும் கட்டுப்பாடற்ற தனிக்காட்டு ராணி நீங்கள் வெளிவேக்ஷம் போடத்தெரியாத வெகுளிடைப் நீங்கள் மற்றவர்களின் கருத்து திணித்தலை ஒதுக்கி தன்னிச்சையாக நீங்கள் செயல்படும்பொழுது அடங்காப்பிடாரி என்ற பட்டத்தைப் பெறுவீர்கள்.

ஆண் ==>>சதாசர்வகாலமும் கற்பனை உலகில் சிறகடித்துப் பறக்கும் டைப் அதோடு புத்தகமும் கையுமாய் காரணகாரியத்தில் ஆராய்ச்சில் மூழ்கிவிடுவீர்கள். ஒரு பெண் உங்களைக் காதலிக்க நேர்ந்தாலும் அவள் என்னை ஏன் காதலித்தாள்,எந்த அம்சம் பிரதானம் ,எந்த அடிப்படையில் காதலித்தாள் என்ற ஆராய்ச்சியில் மூழ்கி,அனுபவிக்க வேண்டியதையெல்லாம் கைநழுவ விட்டுவிடுவீர்கள்.திருமணவாழ்கை வெற்றியடைவது அதிக்ஷடத்தைப் பொறுத்த்து.

லவ்நம்பர் எட்டு ==>> சின்னம் ==>>எறும்பு

பெண் ==>> களைபொருந்திய,கவர்ச்சி நிரம்பிய முகம் முதல் சந்திப்பில் நீங்கள் திமிர்பிடித்தவர் போல் பழகுவீர்கள்,ஆனால் பழகப்பழகத்தான் நீங்கள் இனியவர் என்று நிரூபிப்பீர்கள். இக்ஷடப்பட்டதை அடையத்தவறமாட்டீர்கள்.அதிகாரமும்,பணமும் உள்ளவரைத் தான் நீங்கள் தேர்தெடுப்பீர்கள் நீங்கள் உணர்ச்சிவசப்படும்பொழுது ஒருவரை இமயமலையின் உச்சியில் கொண்டு உட்காரவும் வைப்பீர்கள். அல்லது அவரை அதலபாதாளத்திலும் தள்ளுவீர்கள்.

ஆண் ==>> காதலுக்காக ,சாம்ராஐயத்தை இழந்த வின்ஸ்டர் கோமகனை உங்களுக்கு ஒப்பிடலாம் நல்ல தாம்பத்தியத்துக்கு நந்தியாக நிற்பது உங்களின் பொறாமைக்குணம்தான் சமூக‌அந்தஸ்திலும், பொருளாதார மட்டத்திலும் உயர்ந்து நிற்கும் நீங்கள் சொர்க்க வாழ்க்கை அடைவீர்கள். வெற்றிகளும்,தோல்விகளும் அடுக்கடுக்காக எதிர்பட்டாலும்,சிறிதும் மனம் தளராமல் லட்சியவாதியாகச் செயல்பட்டு வெற்றியின் சிகரத்தை எட்டிப்பிடித்திடுவீர்கள்.நீங்கள் பிறக்கும்பொழுதே சாமர்தியமும்,புத்திசாலித்தனமும் உங்களுடன் ஒட்டிக்கொண்டிருந்தால் நீங்கள் வெற்றித்திருமகனாக விளங்குவதில் வியப்பில்லை.

லவ் நம்பர் ஒன்பது ==>>சின்னம் ==>>கீரிப்பிள்ளை

பெண் ==>> இவளுடன் சேர்ந்து வாழும் வாழ்கைதான் சொர்க்கம் ,என்று துணைவர் கூறும் அளவுக்கு நீங்கள் சலிப்பைத் தராதவர் காதல் உணர்ச்சி மிக அதிகமாக உள்ளவர் பள்ளி நாள் நட்பையும், பள்ளியறை நட்பையும் எப்பொழுதும் நிறுத்திக் கொள்பவர்.

ஆண் ==>>உங்களது ஏகபத்தினி விரதத்துக்கு பங்கம் ஏற்படுத்த அநேக சூழ்ச்சிகள் வீசப்படும் கவனம் தேவை விசுவாமித்திரர்_மேனகையை நினைவில் கொண்டு உங்கள் வாழ்கைத் துணையை எல்லா வகைகளிலும் திருப்தி செய்வீர்கள். எறும்பின் சுறுசுறுப்போடும்,லட்சியத்தோடும்,உறுதியோடும் செயல்பட்டு அடையவேண்டியதெல்லாம் அடைவீர்கள் எந்தப் பணியை ஒப்படைத்தாலும் திறம்பட நிர்வகித்து நல்ல நிர்வாகி என்ற பாராட்டைப் பெறுவீர்கள்.அரசியலில் நுழைந்தால் மக்கள் அபிமானத் தலைவனாக்க கொடிகட்டிப் பறக்கலாம்.

ஆதாரம் _the book of love

நன்றிகள் கலா..
read more...

Tuesday, 24 August 2010

இணையத்தில் காதலித்துச் சம்பாதிக்கலாம்

இன்று இணையத்திலே பலரையும் கட்டிப்போட்ட்டிருக்கின்ற ஒன்றுதான் இணைய அரட்டை. இந்த அரட்டைகள் மூலம் நல்ல பல சம்பவங்கள் இடம்பெறுவதோடு. சில சுத்துமாத்து வேலைகளும் இடம் பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன.

இன்று பல சமுகத்தளங்கள் இருக்கின்றன. அதன் மூலம் பலர் தமது நண்பர்கள் வட்டத்தை அதிகரித்துக்கொண்டே இருக்கின்றனர். இதன் மூலம் காதல், திருமணம், வியாபாரம் என்று நல்ல பல விடயங்கள் நடை பெற்றாலும் இன்று பலர் இணைய அரட்டையே வாழ்க்கை என்று தினமும் அரட்டையிலேயே தமது காலத்தை வீணடித்துக்கொண்டு இருக்கின்றனர்.
இங்கே அரட்டை அடிப்போர் பலர் தமது உண்மையான விபரங்களை விடுத்து பொய்யான தகவல்களைத்தான் பகிர்ந்து கொள்கின்றனர் என்பது வேறு விடயம். சில ஆண்கள் பெண்களின் பெயரிலே அரட்டை அடித்து பல சுத்துமாத்து வேலைகள் செயவோருமுண்டு.

சிலர் இந்த அரட்டைகளைப் பயன் படுத்தி நிறையவே சம்பாதித்துக்கொண்டிருக்கின்றனர். இதிலே சில பெண்கள் ஆண்களை காதலிப்பதாக நடித்து அவர்களிடமிருந்து பணங்களை பெற்று பின்னர் ஏமாற்றி வருகின்ற சம்பவங்களும் நடந்துகொண்டு வருகின்றன.

நான் இணையத்திலே உலாவ வந்த ஆரம்பத்திலே வலைப்பதிவுகள் பற்றி எல்லாம் தெரியாது. நண்பர்கள் மூலமாக சில சமுக வலையமைப்புகள் பற்றி அறிந்தேன். அவ்வப்போது அந்த இணையத்தளங்களிலே அரட்டையோடு என்பொழுது போகும்.

இத் தளங்களிலே அதிகமாக ஆண்கள் என்றால் பெண் நண்பர்களை வைத்துக் கொள்வார்கள். பெண்கள் ஆண் நண்பர்களை வைத்துக் கொள்வார்கள். ( ஈநேன்று தெரியவில்லை தெரிந்தவங்கள் சொல்லுங்கள்) ஆனால் நான் ஆண், பெண் என்று பாகுபாடின்றி எல்லா நண்பர்களையும் இணைத்துக்கொண்டேன். ஆனால் என்னிடம் இருக்கின்ற ஒரு கெட்ட குணம் எல்லோரையும் நம்பிவிடுவது.

இந்த அரட்டையிலே இருக்கின்ற பொய் நண்பர்களையும் இவர்களின் சுத்துமாத்துக்களையும் அறிந்தபோது அரட்டைப் பக்கமே போவதில்லை. அவ்வப்போது போய் என்ன என்ன நடக்கிறது என்று பார்த்துவருவதுமுண்டு.

இப்போ சொல்ல வந்த விடயத்துக்கு வருகிறேன். அரட்டை மூலம் எனக்கு பல நண்பர்கள் கிடைத்தனர். ( நான் நண்பனின் கதை என்று சொன்னால் நம்பவா போறிங்க அதுதான் எனக்கு என்று ஆரம்பிக்கிறேன்) இதிலே சில வெளிநாட்டு நண்பிகள் நெருக்கமானார்கள். அதிலே ஒரு நண்பி எப்போதும் இணைய இணைப்பிலே இருப்பார். எப்போதும் என்னோடு அரட்டை அடித்துக்கொண்டே இருப்பார்.

இவரது நண்பர் வட்டத்திலே பல ஆயிரக்கணக்கான நண்பர்கள் இருக்கின்றனர். எவரும் பெண்கள் இல்லை. மிகவும் அழகானவர், என்னுடைய வலைப்பதிவை பார்த்து கருத்துக்களைச் சொல்வார். அடிக்கடி என்னைப் பற்றி புகழ ஆரம்பித்துவிட்டார். பின்னர் என்னைக் காதலிப்பதாக அடிக்கடி சொல்வார். நான் இப்போத்துதான் பச்சிளம் பாலகன் என்பதனால் முடியாது என்று சொல்லிவிட்டேன்.

இக்கால கட்டத்திலே இவரது நட்புவட்டத்திலே இருக்கின்ற இலங்கையைச் சேர்ந்த மத்திய கிழக்கு நாடொன்றிலே இருக்கின்ற ஒரு நண்பரை நான் எனது நட்பு வட்டத்திலே இணைத்துக் கொண்டேன். அந்த நண்பரும் என்னோடு நல்ல நெருக்கமான நண்பரானார்.

அடிக்கடி என்னோடு பேசும் ஒரு நண்பராக மாறிவிட்டார். அப்போது அந்த நண்பர் என்னிடம் நான் குறிப்பிட்ட அந்த பெண் தன்னை இரண்டு வருடங்களாகக் காதலிப்பதாகவும் மாதாமாதம் அந்த பெண்ணுக்கு தான் பணம் அனுப்புவதாகவும் சொன்னார். நான் அவரிடம் எதுவும் சொல்லவில்லை

மறுபுறத்திலே அந்தப்பெண் என்னிடம் விருப்பம் கேட்டு என்னை விடுவதாக இல்லை. அடிக்கடி அவசரமாக பணம் தேவைப்படுகின்றது. என்றெல்லாம் பேசுவார் நான் காதில் கேட்காதது போன்று இருந்து விடுவேன்.

இவர் நிறையப்பேரை ஏமாற்றி வருகின்றார் என்பது மட்டு எனக்கு புரிந்துகொள்ள முடிந்தது. இவரை பற்றி ஆராய வேண்டு மென்று நினைத்தேன் இவரது நண்பர் வட்டத்திலே இருக்கின்ற பலரை என் நண்பர் வட்டத்திலே இணைத்தேன். அப்போது பலரை இந்தப் பெண் காதலிப்பதாக அறியக் கிடைத்தது. நான் எவரிடமும் இந்தப்பெண் பற்றிய விடயங்களை சொல்லவில்லை.

அவர் தனக்கொரு வலைப்பதிவு உருவாக்கித்தரும்படி அடிக்கடி என்னிடம் கேட்பதுண்டு. நான் உங்கள் மின்னஞ்சல் முகவரி, கடவுச் சொல் என்பவற்றை தாருங்கள் என்று கேட்டு வங்கிக் கொண்டேன். வலைப்பதிவு உருவாக்கியக் கொடுப்பது என் நோக்கமல்ல இவரது ஏமாற்று வேலைகளை அறிய வேண்டும் என்பதே என் எண்ணம்.

உடனடியாக நான் அவரது மின்னஞ்சலை பார்த்தபோது பலரிடமிருந்து நிறையவே பணம் பெற்றிருப்பது அறிய வந்தது. அவர் பலரை காதலிப்பதாக நடித்துக்கொண்டிருக்கின்றார். பலர் இவருக்கு மாதாந்தம் பணம் அனுப்பிக்கொண்டிருக்கின்றனர். என்பதும் தெரிய வந்தது.



உடனடியாக நான் மத்திய கிழக்கிலே இருக்கின்ற இலங்கையைச் சேர்ந்த நண்பருடன் தொடர்புகொண்டு விபரங்களைச் சொன்னேன் அவர் நம்பவே இல்லை. அவரால் அவள் மீதான காதலிலிருந்து வெளியே வர முடியவில்லை.

அந்த நண்பரைப் பற்றி நினைக்கும்போது இன்றும் நான் கவலைப் படுவதுண்டு. அவரது குடும்பம் சாதாரண ஏழைக் குடும்பம். தந்தை இறந்துவிட்டார். தாய், இரு தங்கைகள் அவர்களைப் பார்க்கின்ற பொறுப்பு இவரிடமே. இவர் செய்தவை தனது வருமானத்தில் அரை வாசியை அந்தப் பெண்ணுக்கும் அரை வாசியை தாய்க்கு அனுப்புவதும். இன்று அந்தப் பெண்ணின் தொடர்பு இல்லாமல் போய்விட்டதாகவும் அந்தப் பெண்ணால் நிறையவே இழந்திருப்பதாகவும் கூறினார்.

இவர் மாத்திரமல்ல இன்று பல இளைஞர்கள் இவ்வாறு ஏமாற்றப்பட்டுக் கொண்டு இருக்கின்றனர். பல சமுக இணையத்தளங்களிலே பல பெண்கள் காதல் எனும் போர்வையில் இளைஞர்களை சிக்கவைத்து பணம் பறித்துக்கொண்டிருக்கின்றனர். இணையத்திலே அரட்டை அடிப்பவர்கள் நிதானமாக சிந்தித்து செயற்படுவது நல்லதே.



சம்பவங்கள் உண்மை..... நீயா அவன் என்று கேட்கவேண்டாம். நான் அவனில்லை.
read more...

Saturday, 21 August 2010

இதெல்லாம் ஒரு ஊடகம்.

ஊடகங்கள் பக்கச் சார்பின்றி செயற்பட வேண்டும் ஆனால் சில ஊடகங்கள் தாங்கள் சுய இலாபம் தேடுவதற்காக சமூகங்களுக்கிடையே பிரிவினையினை
ஏற்படுத்தி வருவதோடு தமது அரசியல் இருப்பை தக்க வைத்துக் கொள்ள எதனையும் செய்யத் துணியும் சில அரசியல்வாதிகளின் சந்தர்ப்பவாத
அரசியலுக்கு துணைபோகும் பல ஊடகங்கள் இருக்கின்றன.

அண்மையிலே மட்டக்களப்பு ஆரையம்பதியிலே இடம்பெற்ற ஒரு நிகழ்விலே கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் ஆற்றிய
உரையினை முற்றிலும் திரிவு படுத்தி தமிழ்வின் இணையத்தளம் செய்தியினை வெளியிட்டிருந்தது.

நான் ஒரு முதலமைச்சராக இன்றி பழைய பிள்ளையானாக மாற வேண்டி வரும்: எச்சரிக்கிறார் கிழக்கு மாகாண முதலமைச்சர் எனும் தலைப்பிலே எழுதப்பட்டிருக்கும் அச் செய்தியில். 18.08.2010ம் திகதி கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் பிறந்த தினத்தையொட்டி மட்டக்களப்பு ஆரையம்பதியிலுள்ள
ஆரையம்பதி சமூக அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் முதலமைச்சரை வரவேற்று வாழ்த்துவதற்காக ஒரு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. என்றும்
அங்கே மகஜர் ஒன்று முதலமைச்சரிடம் கையளிக்கப்பட்டதாகவும். முதலமைச்சர் பேசும்போது “முஸ்லிம் மக்களுக்கான மாதிரிக் கிராமம் அமைக்கப்படுவதை யாராலும்
தடுக்க முடியாது. இதையும் மீறி தடுக்கும் முயற்சியில் யாராவது தமிழர்கள் ஈடுபட்டால்
அதை எதிர்கொள்வதற்கு நான் ஒரு முதலமைச்சராக இன்றி பழைய பிள்ளையானாக மாற வேண்டி வரும்” என உரத்த குரலில் எச்சரிக்கை விடுத்தார். என்றும்
குறிப்பிடப் பட்டிருக்கின்றது.

இது முற்றிலும் தவறான ஒரு செய்தியாகும் இந்த நிகழ்வுகளிலே நானும் கலந்து கொண்டேன்.

 உண்மையில் நடந்தவை என்ன...


18.08.2010ம் திகதி கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் பிறந்த தினத்தையொட்டி பிறந்தநாள் நிகழ்வும் முதலமைச்சரின் இரண்டு
வருட அபிவிருத்திப் பணிகளின் தொகுப்பு இறுவட்டு வெளியீடும் மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்திலே இடம்பெற்றது.

பிறந்தநாள் நிகழ்வு
ஆரையம்பதியில் இடம்பெறவில்லை. மட்டக்களப்பு ஆரையம்பதியிலுள்ள ஆரையம்பதி சமூக அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில்
எந்த ஒரு நிகழ்வும் ஆரையம்பதியில் இடம்பெறவில்லை.



ஆரையம்பதியிலே மதலமைச்சரின் பிறந்த தினத்தன்று நெக்டெப் திட்டத்தின் மூலம் இரண்டு கோடி செலவில் இளைஞர் வள நிலையம் முதலமைச்சரினால்
திறந்து வைக்கப்பட்டது. இங்கே பிறந்தநாள் நிகழ்வு இடம்பெறவில்லை. இத்திறப்பு விழாவினை ஆரையம்பதி பிரதேச செயலகத்தினர் ஏற்பாடு செய்திருந்ததோடு
பிரதேச செயலாளர் தனபாலசுந்தரம் அவர்களின் தலைமையிலேதான் நிகழ்வு இடம்பெற்றது.


அந்த நிகழ்வில் முதலமைச்சர் உரையாற்றும்போது. காங்கேயனோடையில் அமைக்கப்பட இருக்கின்ற மாதிரிக் கிராமம் தொடர்பாக தான் இப்போது
ஒரு முடிவெடுக்க முடியாது எனவும் தான் ஒரு முதலமைச்சராக இருந்து பக்கச் சார்பான முறையிலே முடிவெடுக்க முடியாது. இரு இனத்தவரினுடைய உரிமை கௌரவம்
என்பவற்றுக்கு மதிப்பளித்து தான் செயற்பட வேண்டும் என்றும் இந்த மாதிரிக் கிராமம் அமைக்கப்படும் பிரதேசம் தங்களுடையது என்று தமிழர்களும்
முஸ்லிம்களும் உரிமை கோரி வரும் நிலையில் இதன் உண்மை நிலையினை அறிய தான் ஒரு குழுவினை அமைத்து ஆராய்ந்து வருவதாகவும் கூறினார்.

மேலும் இப்பிரச்சினையை ஒரு சில அரசியல்வாதிகள் இரு சமுகங்களுக்கிடையே விரிசலை ஏற்படுத்தி தமது இருப்பினை தக்க வைத்து
அரசியல் ஆதாயம் தேட முற்படுகின்றனர். அதேபோல் சில அதிகாரிகளும் தமது ஊழலை மூடி மறைப்பதற்காக இரு சமூகங்களையும் மோதவிட்டு வேடிக்கை பார்க்க
நினைக்கின்றனர் என்றும் குறிப்பிட்டார்.

ஊடகங்கள் சமூகங்களுக்கிடையே பிரச்சினைகளை ஏற்படுத்தும் பொய்யான செய்திகளை தவிர்க்க வேண்டும். இவ்வாறான பல பொய்யான பிரச்சாரங்கள் மூலம் எமது
தமிழ் சமூகம் பல அவலங்களை சந்தித்திருக்கின்றது. இது போன்ற பொய்யாய செய்திகள் மூலம் இரு சமூகங்களையும் மோதவிட்டு வேடிக்கை பார்க்க நினைப்பதை
ஊடகங்களும் சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளும் நிநுத்திக் கொள்ள வேண்டும்.
read more...

Sunday, 15 August 2010

தமிழ்க்கட்சிகளின் அரங்கம்

தமிழ் கடசிகளின் அரங்கம் 5வது தடவையாகவும் (14.08.2010) மட்டக்களப்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சி. சந்திரகாந்தன் தலைமையில் கூடியுள்ளது.

இவ் அரங்கத்துக்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி உறுப்பினர்கள் பலரும் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் ஆனந்த சங்கரி, தமிழர் தேசிய ஜனநாயகக் கூட்டமைப்பு சார்பாக சிவாஜிலிங்கம், ஈழம்கள் ஜனநாயகக் கட்சி சார்பில் சந்திரகுமார் மற்றும் இராசமாணிக்கம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி பத்மநபா அணி சார்பாக துரைரெட்ணம், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி சார்பாக சதானந்தம் இராகவன் மற்றும் தனபாலசிங்கம், ஈழ ஏதிலிகள் மறுவாழ்வுக் கழகத் தலைவர் சந்திரகாசன், ஈரோஸ் சார்பாக உதயவேல் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அமைப்பு விடுக்கப்பட்டும் கலந்து கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

கடந்த தமிழ் கட்சிகளின் இரங்கத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கமைய தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு விடுக்கப்பட்ட அமைப்புக்கு
அவர்கள் உத்தியோகபூர்வமான பதிலளிக்காமையினையிட்டு அரங்த்தில் கவலை வெளியிடப்பட்டுள்ளது.

இன்றைய தமிழ் கட்சிகளின் அரங்கத்தில் தமிழ் மக்கள் எதிர் நோக்குகின்ற உடனடித் தேவைகள் குறித்து ஆராயப்பட்டுள்ளதாகவும், அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று சாத்தியமான வழியில் விரைவாகத் தீர்வை பெற்றுக் கொடுப்பது குறித்து தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அவைகளாவன....

1. அர்த்தமுள்ள மீள் குடியேற்றம்.

2. உட்கட்டமைப்புடன் கூடிய மீள் கட்டுமானம்.

3. உயர் பாதுகாப்பு வலயங்கள். மீள் குடியேற்றங்கள்.

4. மக்களின் வாழ்விடங்களில் அமைக்கப்படும் இராணுவக் குடியேற்றங்கள்.

5. முழுமையான சிவில் நிர்வாகத்தினை ஏற்படுத்தல்.

6. ஆயுதப் போராட்டத்தினால் உடமைகளை உறவுகளை அங்கங்களை இழந்த மக்களுக்கு நட்ட ஈடுகளைப் பெற்றுக் கொடுத்தல்.

7. வடகிழக்கு உட்பட தமிழ் பேசும் பகுதிகளில் இனப்பரம்பலில் மாற்றத்தை ஏற்படுத்தும் செயற்பாடுகளைத் தடுத்து நிறுத்தல்.

8. யுத்தம் இடம் பெற்ற காலப்பகுதியில் கடைப்பிடிக்கப்பட்ட பாதுகாப்பு நடைமுறைகளைத் தளர்த்துதல்.

9. மீள் குடியேற்றத்தினை வெளிப்படையாகச் செய்வதுடன் அதை மக்கள் பிரதிநிதிகள் சர்வதேச உள்ள+ர் தொண்டு நிறுவனங்களின் பங்களிப்பை பெற்றுக் கொள்ளல்.

10. இனப்பிரசிசினை தீர்வுக்கு மாகாண சபைகளுக்கென பரிந்துரை செய்யப்பட்டிருக்கின்ற அரசியல் அமைப்பிலுள்ள 13 வது அரசியல் அதிகாரங்களை
முழுமையாக அமுல் படுத்துதல் ஆரோக்கியமான முன் முயற்சியாக அமையும்.

11. அடுத்து வரும் கட்டங்களில் தமிழ் கட்சிகளின் அரங்கத்தில் முஸ்லிம் மலையக கட்சிகளை இணைப்பது குறித்து ஆராயப்படும்.

12. தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற அரசியல் கைதிகள் இறுதி யுத்த நடவடிக்கையின்போது சரணடைநடத கைது செய்யப்பட்ட போராளிகளின் விபரங்களை வெளிப்படுத்துவதுடன் அவர்களின் விடுதலைக்கு ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுத்தல்.
read more...

Thursday, 12 August 2010

பறிபோகும் தமிழர் பிரதேசங்கள்

வடக்கு கிழக்கு மாகாணங்களிலே தமிழர்களது நிலங்கள் திட்டமிட்டு வேறு இனத்தவர்களினால் அபகரிக்கப் படுவதாக குற்றம் சாட்டப்படுகின்றது.
குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களிலே சிங்களவர்களும் முஸ்லிம்களும் தமிழர் பிரதேசங்களிலே குடியமர்த்தப் படுவதாக குற்றம்
சுமத்தப்படுகின்றது.

வடக்கு கிழக்கிலே திட்டமிட்டு இலங்கை அரசாங்கம் சிங்களவர்களை குடியேற்றி வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் குற்றம்
சுமத்துகின்றனர். இவர்கள் குற்றம் சுமத்துவதோடு நின்றுவிடாது இக் குடியேற்றங்களை தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டிய
பொறுப்பு இருக்கின்றது.

ஆனால் இது தொடர்பில் குற்றச்சாட்டுக்களையும் கண்டனங்களையும் தவிர ஆக்கபூர்வமாக எதனையும் செய்வதாக தெரியவில்லை

அண்மையிலே 4தமிழ் மீடியாவிலே இடம் பெற்ற செய்தி...


சிறிலங்காவின் வடக்கு, கிழக்கு பிரதேசங்களிலே பரவலாக புத்த விகாரைகளும், சிங்களக் குடியேற்றங்களும், ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும், இதனால் அப்பகுதியில் வாழும் தமிழ மக்கள் அச்சமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


குறிப்பாக வடக்க கிழக்கு பிரதேசங்களில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து சிறிலங்கா இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசமாக மாற்றம் பெற்றுள்ள பகுதிகளிலேதான் இவ்வாறான நடவடிக்கைகள் பரவலாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அறியப்படுகிறது.


இவ்வாறு நடைபெறும் விகாரைகள் அமைப்பும், சிங்களக் குடியேற்றமும், மிக நுட்பமாக ஏற்புடுத்தப்பட்டு வருவதாகவே அவதானிக்கப்பட வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படகிறது.


இராணுவ காவலரண்களை அண்டிய பகுதிகளிலே சிறு, சிறு விகாரைகள் அமைக்கப்படுகின்றன. இவ் விகாரைகளிலே பெளத்த மதம் சார்ந்த நிகழ்வுகள் அவ்வப்போது இடம் பெற்று வருகின்றன. எதிர் காலத்தில் இவ் விகாரைகள் பாரிய விகாரைகளாக உருவெடுக்கக்கூடிய சாத்தியங்கள் இருப்பதாக மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.


இது தொடர்பாக அரசாங்கத்திலே அங்கம் வகிக்கின்ற அரசியல்வாதிகள் கருத்துத் தெரிவிக்கின்றபோது இராணுவ முகாம்களிலே இருக்கின்ற இராணுவ விரர்களின் வணக்கஸ்தலமாக மட்டுமே இந்த விகாரைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. வேறு நோக்கங்களுக்காக அமைக்கப்படவில்லை என்று குறிப்பிடுகின்றனர்


இதுபோலவே தமிழ் பிரதேசங்களில் இராணுவ முகாம்களுக்கு பக்கத்தில் சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்துவதற்கு திட்டமிடப்படுவதாக மக்கள் அச்சம் கொண்டுள்ளனர். வடக்கு கிழக்கிலே இருக்கின்ற இராணுவ முகாம்களுக்கு அருகிலே இருக்கின்ற காணிகளிலே பல சிங்கள குடியேற்றங்கள் ஏற்படுத்தப் பட்டிருப்பதாக சொல்லப்படுகின்றது.
ஒரு இராணுவ முகாமை எடுத்துக் கொண்டால் அந்த இராணுவ முகாமுக்கு அருகில் இருக்கின்ற காணியிலே அந்த இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவ வீரர்களின் குடும்பங்கள் தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டிருப்பதாகவும் எதிர் காலத்திலே இப்பிரதேசங்கள் முற்று முழுதாக சிங்களப் பிரதேசங்களாக மாறக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அப்பிரதேச மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

நன்றிகள் 4தமிழ் மீடியா


இது ஒரு புறமிருக்க முஸ்லிம்களாலும் தமிழர் நிலப்பரப்புக்கள் அபகரிக்கப்படுவதாக தமிழ் மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
அண்மையில் மட்டக்களப்பு ஆரையம்பதி மக்கள் முஸ்லிம்கள் தமிழர் பிரதேசங்களை அபகரிப்பதை நிறுத்த வேண்டும் எனக்கோரி
உண்ணாவிரதம் ஒன்றினை மேற்கொண்டனர்.

உண்ணாவிரதம் இடம்பெற்ற இடத்துக்கு சென்ற கிழக்கு மாகாண முதலமைச்சரிடம் மக்களால் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது அதனை
அப்படியே தருகின்றேன்.


01. மண்முனை பிரதேச சபைக்குரிய வடக்கு எல்லையினுள் காத்தான்குடி நகர சபை அத்து மீறி நிருவாகம் செய்வது உடன் நிறுத்தப்பட வேண்டும்.


02. மண்முனைப்பற்று பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட பகுதியியில் நீதி மன்றத்தினால் தீர்ப்பு வழங்கப்பட்டதன்படி அரச காணிகளிலுள்ள காத்தான்குடி முஸ்லிம்களும் வேறு பிரதேச முஸ்லிம்களும் உடன் வெளியேற்றப்படவேண்டும். மேலும் இவ்வாறான குடிNயுற்றங்கள் இனிமேலும் இடம்பெறக்கூடாது.


03. கோயில்குளம் பகுதியில் நீர் வினியோகத்திட்டம் அமுல்படுத்தப்படுவதால் பிரதேசத்தில் நீர் வற்றும் நிலை ஏற்படும் இதனால் எமது ஜீவனோபாயமான பயிர்ச்செய்கை அழிவுறும் என்பதால் இச் செயற்றிட்டம் உடனே நிறுத்தப்படவேண்டும்.


04. காங்கேயன் ஓடை வீட்டுத்திட்டம் காங்கேயனோடை மக்களுக்கு அவரவர் வளவினுள்ளேயே கட்டிக்கொடுக்க வேண்டும். பள்ளிவாயல் காணி என்ற பேரில் மாவிலங்குதுறையில் இடம்பெறும் குடிNயுற்றம் உடன் நிறுத்தப்படவேண்டும்.


05. திண்மக்கழிவு சேகரிப்பு இடம் ஒன்று காத்தான்குடி நகரசபையால் எமது பிரதேசத்தில் ஆரம்பிக்க ஏற்பாடாகி வருகின்றது அது உடன் நிறுத்தப்படவேண்டும்.


06. மாவிலங்குதுறையில் பள்ளிவாயல் காணி என்ற பேரில் பரம்பரையாக வாழ்ந்து வரும் தமிழ் மக்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கை உடனடியாக நிறுத்தப்படவேண்டும்.


07. தமிழர்களின் பூர்வீக பிரதேசமான ஆரையம்பதியில் கடற்கரைப்பிரதேசத்தினுள் ஆட்சி உறுதிகளையும் போலியான ஆவணங்களையும் வைத்து குடியிருப்புக்களை ஏற்படுத்துவது நிறுத்தப்படவேண்டும்.



read more...