Monday, 17 October 2011

சிறப்பான முறையில் இடம்பெற்ற கிழக்கு மாகாண கலை இலக்கிய விழா

கிழக்கு மாகாண கல்வி அமைச்சும் மாகாண கலாச்சார பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் இணைந்து நடாத்தும் தமிழ் இலக்கிய விழா கடந்த மூன்று நாட்களாக மட்டக்களப்பில் இடம்பெற்றுவருகின்றது. இவ் இலக்கிய விழாவானது இலக்கிய ஆய்வரங்கு, பண்பாட்டு பேரணி, இலக்கியவாதிகள் மற்றும் கவிஞர்களுக்கான முதலமைச்சர் விருது வழங்கல் நிகழ்வு நடைபெற்று வருகின்றன. இறுதி நாளான இன்று முதலமைச்சர் விருது வழங்கும் நிகழ்வு மட்/மகாஜனக் கல்லூரியின் புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை அரங்கில் மிகவும் கோலாகலமாக இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிழக்கு மாகாணத்தில் தெரிவுசெய்யப்பட்ட 12கலைஞர்களுக்கு முதலமைச்சர் விருது வழங்கி கௌரவித்தார்;. அத்ஆதாடு இலக்கியத்தில் தேர்ச்சி பெற்றவர்களை கொளரவிக்கும் நிகழ்வும் இவ் அரங்கில் இடம்பெற்றமை விசேட அம்சமாகும்.

இவ் நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கலந்து கொண்டு உரையாற்றும் போது,.



கிழக்கு மாகாணத்திற்கென்று தனித்துவமான கலை, பண்பாடு, இலக்கியம்சங்கள் இயல்பாகவே அமையப் பெற்றிருக்கின்றன. அந்த வகையில் எமது பண்பாட்டுடன் பின்;னி பிணைந்து இருக்கின்ற கலை இலக்கிய அம்சங்களை பேணி பாதுகாப்பதற்கு இது போன்ற ஆக்கபூர்வமான நிகழ்வுகள் ஓர் ஆரம்பமாகும். கிழக்கு மாகாணத்திற்கே உரித்தான கலைஞர்களையும், இலக்கிய ஆர்வலர்களையும் பண்பாட்டு கலை சார்ந்த விரும்பிகளையும் இவ்வாறான நிகழ்வின் ஊடாக நாம் முன்னிலைப்படுத்தி கௌரவிப்பது கிழக்குமாகாணத்தில் பிறந்த ஒவ்வொருவருக்குமுரிய கடமையாகும்.




பண்பாட்டுடன் கூடிய கலையம்சங்களை பேணி பாதுகாப்பதென்பது இலக்கிய படைப்பாளிகளின் பொறுப்பு மாத்திரம் அல்ல. அவ் மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கலை, இலக்கிய துறையில் ஆர்வம் காட்டுகின்ற ஒவ்வொருவரினது தேவையாகும். காலத்தின் கட்டாய தேவை உணர்ந்தும் தமிழருக்கான இலக்கிய பாரம்பரியம், கலாச்சார விழுமியங்கள் என்பது தொன்றுதொட்டு வளர்க்கப்பட்டதொன்றாகும். இவ்வாறாக வளர்க்கப்பட்டு வந்த எமது மக்களின் அரும்பெரும் பொக்கிசமாக விளங்குகின்ற இக் கலையம்சங்களை தொடர்ந்தும் நாம் பேணி பாதுகாப்பதற்கு களம் அமைக்க வேண்டும். 

பாரம்பரிய உள்ளுர் எழுத்தாளர்களை ஊக்குவிப்பதனூடாக மறைந்த எமது கலையம்சங்களை இளம் தலைமுறையினருக்கும், எதிர்கால சந்ததியினருக்கும் கோடிட்டுக்காட்ட முடியும். எது எவ்வாறாயினும் கிழக்கு மாகாணத்திற்கு கிடைத்த சமாதான சூழலிலே கிழக்கு மாகாணத்திலே பிறந்த ஒவ்வொரு இலக்கிய துறையினருக்கும் எம்மாலான இயன்ற பணிகளை ஆற்றுவதற்கு நாம் அனைவரும் முன்வர வேண்டும். எனவும் தனது உரையில் கேட்டுக்கொண்டார்.

கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளரும், கல்வி அமைச்சின் பிரதிச் செயலாளரும் ஏ.எம்.ஈ.போல் தலைமையில் நடைபெற்ற இலக்கிய விழாவில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், வலயக்கல்வி பணிப்பாளர்கள், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி கே.பத்மராஜா, பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், மற்றும் இலக்கிய திறனாய்வாளர்கள், பண்பாட்டலுவல் திணைக்கள பணிப்பாளர், மற்றும் கலாசார உத்தியோகஸ்த்தர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.



 இலக்கிய விழாவில் இறுதி நாளான நேற்று புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை கலையரங்கில் 3இனங்களின் கலாச்சாரத்தை  பிரதிபலிக்கின்ற கலை நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


முதலமைச்சர் விருதுபெற்ற கலைஞர்களின் விபரம் 


திருகோணமலை மாவட்டம்:

1. அபுசாலி மீராமுகைதீன் - பல்துறை
2. தேவசகாயம் நந்தினி சேவியர் - ஆக்க இலக்கியம்
3. மு.பத்மநாத சர்மா - சிற்பம்
4. ஆ.அரசரெத்தினம் - பல்துறை


மட்டக்களப்பு மாவட்டம்:

1. அசோகாதேவி யோகராசா - கவிதை
2. அ.அரசரெத்தினம் - ஆக்க இலக்கியம்
3. உமாதேவி கனகசுந்தரம் - சாஸ்திரீய நடனம்
4. எஸ்.பி. பொன்னம்பலம் - ஆக்க இலக்கியம்


அம்பாறை மாவட்டம்:
1. திருமதி யோ.யோகேந்திரன் - சிறுகதை
2. அலியார் பீர்முகமது - கவிதை
3. எஸ்.அப்துல் ஜலீல் - ஓவியம்
4. க.யோன்ராஜன் - ஊடகம்


2010 ஆம் ஆண்டுக்கான இலக்கிய நூல் பரிசுப் போட்டியில் பரிசுபெற்ற நூல்கள்

1. எஸ் ..அரசரத்தினம் - "சாம்பல் பறவைகள்" -நாவல்
2. திருமதி ஆ.சின்னத்துரை - "நீலாவணன் காவியங்கள்"- காவியம்
3. செல்லில்லிதாசன் - "செம்மாதுழம்பூ"- கவிதை
4. அ.தி.மு.வேலழகன் "செங்கமலம்"- கவிதை
5. ச.அருளானந்தம் – "இசையோடு அசைபோடுவோம்"- சிறுவர் பாடல்கள்
6. ச.அருளானந்தம் –"சின்னஞ்சிறு கதை" -சிறுவர் சிறுகதை
7. ஓ.கே.குணநாதன் – "பறக்கும் ஆமை"- சிறுவர் நாவல்

8. பால.சுகுமார் – "கொட்டியாரம்"- இலக்கிய ஆய்வு










read more...

Monday, 10 October 2011

சொட்கண் வைத்திருந்தவர்களை ஆட்லறி வாங்க களம் அமைத்துக் கொடுத்தது தமிழீழப் பிரகடனமே

read more...

Sunday, 9 October 2011

கேதார கெளரி விரதம் பிடிப்பவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டியது.





இந்துக்களின் விரதங்களிலே சிறப்பான இடத்தினைப் பெறும் விரதங்களில் ஒன்றான கேதார கெளரி விரதத்தின் மகிமையினை கூறும் இறுவட்டு ஒன்றினை எமது கலைஞர்களின் பங்களிப்போடு வெளியிட்டு இருந்தேன்.
பாடல்கள் நல்ல வரவேற்பினைப் பெற்றிருந்தன. அப்பாடல்கள் நீங்களும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்

கதைச் சுருக்கம்
திருக்கைலாச மலையிலே பரமசிவன், பார்வதி சமேதராக வீற்றிருந்த வேளையிலே. தேவர்களும், முனிவர்களும் அங்கு சென்று இருவரையும் சுற்றி வந்து வணங்கினர். அந்த வேளையிலே அங்கு வந்த பிரிங்கி முனிவர விகடக் கூத்தொன்றை ஆடி அங்கிருந்தவர்களை மகிழ்ச்சி அடையச் செய்த பின்னர். உமாதேவியை விலக்கி விட்டு சிவபெருமானை மட்டும் சுற்றி வந்து வணங்கினர். உமாதேவியை அலட்சியம் செய்த முனிவரின் உடலிலிருந்த சக்தியை உமாதேவி எடுத்துக் கொண்டதனால் பிரிங்கி முனிவர் சபையிலே சோர்ந்து வீழ்ந்தார்.

சிவபெருமான் பிருங்கி முனிவரிடம் தடி ஒன்றைக் கொடுத்து அதனை ஊன்று கோலாகக் கொண்டு நடந்து செல்வதற்கு அனுக்கிரகம் செய்தார். இதனால் ஆத்திரமும் அவதானமும் அடைந்த உமாதேவி சிவபெருமானிடம் கோபித்துக் கொண்டு பூவுலகுக்கு வந்தார்.


ஒரு வில்வ மரத்தடியில் உமாதேவி வீற்றிருந்தார். உமாதேவியின் வருகையால் அந்த வனம் புதுப்பொலிவு பெற்றது. அந்த வனத்திலே வசித்த கௌதம முனிவர் திடிரென ஏற்பட்ட மாற்றத்துக்கான மாற்றத்துக்கான காரணத்தை அறிய முற்பட்டபோது. உமாதேவியைக் கண்டு நடந்த சங்கதிகளை அறிந்து கொண்டார்.


புரட்டாதி மாதம் சுக்கில பட்ச தசமி தொடக்கி இப்பசி மாதம் கிருஷ்ண பட்சம் தீபாவளி அமாவாசை வரையுள்ள கேதரேசுரர் விரத மகிமை பற்றியும் அதனை அனுஷ்டிக்கும் முறைமை பற்றியும் விளக்கமாகக் கூற அம்மை விரதம் நோற்று அர்த்தநாரீஸ்வரர் வடிவமாகினார்.
பதிவிறக்கங்கள்...
read more...

தமிழ் மக்களின் பொருளாதாரத்தை இந்து மதம் வீணடிக்கிறதா?


என்னுடைய இந்த பதிவைப்பார்த்து இந்து தீவிரவாதிகள் என்னை திட்டித் தீர்க்கலாம். நானும் ஒரு இந்து தீவிரவாதிதான். அளவு கடந்த கடவுள் நம்பிக்கை உடையவன்.

இருந்தபோதும் இந்துக்களின் மூட நம்பிக்கைகள் தொடர்பாக மாற்றுக் கருத்துக்களைக் கொண்டவன்.

இந்துக்களின் சமய சம்பிரதாயங்கள் அர்த்தம் மிக்கவை ஆனாலும் சில விடயங்கள் ஏன் இப்படி எல்லாம் செய்கின்றார்கள் என்று எண்ணத் தோன்றுகின்றது.

அண்மையில் எனது கிராமத்திலே ஆலய திருவிழா ஒன்று நடைபெற்றது. ஒரு நாள் சுவாமி கிராமத்தின் அத்தனை வீதிகளிலும் வீதி உலா வருகின்ற நிகழ்வு இடம் பெற்றது.

கிராமத்தில் இருக்கின்ற அத்தனை வீடுகளுக்கு முன்னாலும் நிறைகுடங்கள் வைக்கப்பட்டிருந்தன. நிறைகுடம் வைக்கப்பட்டிருந்த தேங்காய்கள் தகர்த்து எறியப்பட்டன. எமது கிராமத்திலே 2500 க்கு மேற்பட்ட குடும்பங்கள் இருக்கின்றன. ஆனைத்து குடும்பங்களும் நிறைகுடம் வைத்திருந்தனர்.
2000 குடும்பங்கள்தான் நிறைகுடம் வைத்திருந்தாலும் 2000 தேங்காய்கள் வீணடிக்கப்பட்டிருக்கின்றன. ஒரு தேங்காய் 30 ரூபாய் படி பார்த்தாலும் 60000 ரூபாய் வீணடிக்கப்பட்டிருக்கின்றது. எத்தனையோ பேர் ஒருவேளை உணவின்றி கஸ்ரப்படுகின்றனர்.

இது ஒரு புறுமிருக்க எமது கிராமத்தின் குறிப்பிட்ட ஒரு பகுதியில் தாழ்த்தப்பட் சாதியினர் இருக்கின்றனர். அவர்களின் வீதிகளுக்கு சுவாமி வீதிவலம் வருவதற்கு கொண்டு செல்லப்படவில்லை. இங்கே கடவுளும் சாதி பார்க்கின்றாரா? அல்லது தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு கடவுள் தரிசனம் கொடுக்கக் கூடாதா?

இன்று இந்து ஆலயங்கள் வியாபார நிலையங்களாக மாறிவிட்டன. இங்கு கற்பூரம் எரிக்க கூடாது என்று எழுதி வைத்திருக்கின்றனர். கற்பூரத்தை வைப்பதற்கு இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த கற்பூரம் மீண்டும் மீண்டும் விற்பனை செய்யப்படுகின்றன.

வுpரதம் பிடித்து காப்பு கட்டுவதாக இருந்தாலும் சரி தீ மிதிப்பதாக இருந்தாலும் சரி பணம் கட்ட வேண்டும். பணம் கட்ட முடியாமல் கஸ்ரத்தின் மத்தியிலும் இருக்கின்றவர்களுக்கு தெய்வம் இல்லையா?

ஒரு கோவில் கட்டவேண்டும் என்றால் கிராமத்தில் ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் பணம் அறவிட்டு ஏனைய கோவில்களைவிட பெரிதாக கோவில் கட்டவேண்டும் என்று போட்டிபோட்டுக்கொண்டு கோவில் கட்டுகின்றனர்.

கோவில்களை அமைப்பதற்காக இந்துக்கள் எவ்வளவு பணத்தினை செலவு செய்கின்றனர் என்பதனை சிந்தித்து பாருங்கள். பெரிதாக பிரமாண்டமாக கோவில்களை அமைத்தால்தான் கடவுள் அந்த கோவிலில் இருப்பாரா? இந்த பணம் முழுவதும் முடக்கப்படுகின்றதல்லவா?

இவ்வாறெல்லாம் செலவு செய்யும் இந்து ஆலயங்கள் கஸ்ரப்படும் மக்களுக்காக எத்தனை இந்து ஆலயங்கள் உதவி செய்கின்றன?
read more...

பார்க்காமல் விட்டுவிடாதிங்க... கண்டிப்பா பாருங்க..

நேற்று நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. 23 உள்ளுராட்சி சபைகளில் 21 சபைகளை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கைப்பற்றியுள்ளது.  

கொழும்பு மாநகர சபையின் 5 பிரிவுகளையும் ஜக்கிய தேசியக் கட்சி அதிக வாக்குகளைப் பெற்று கைப்பற்றியுள்ளது.


கல்முனை மாநகர சபையினை
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து புதிய பத்திரிகை ஒன்று புதிய விடியல் எனும் பெயரில் வாரம்தோறும் வெளிவந்து கொண்டிருக்கின்றது.  இதில் செய்திகள் மற்றும் அரசியல் கலை கலாசார அம்சங்களுடன் சமுகத்தின் பிரச்சினைகள் பற்றியும் அலசி ஆராயும் பல அம்சங்களை தாங்கி வெளிவருகின்றது.
அத்துடன் புதிய விடியல் எனும் இணையத்தளத்தினையும் ஆரம்பித்துள்ளனர்.  இந்த இணையத்தளம் மூலம்  உடனுக்குடன் செய்திகளை வழங்கவும் இருக்கின்றனர். உடனுக்குடன் செய்திகளைப் பெற நீங்களும் புதிய விடியலுடன் இணைந்திருங்கள்.  http://puthiyavidiyal.com        
read more...

Wednesday, 5 October 2011

நடைபெற உள்ள வட மாகாணசபைக்கான தேர்தலும் எதிர்நோக்க இருக்கும் சவால்களும்

வடக்கு மாகாணசபைக்கான தேர்தல் 2012ம் ஆண்டு நடைபெறும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அலரிமாளிகையில் இடம்பெற்ற பத்திரிகை ஆசிரியர்களுடனான சந்திப்பில் கூறியிருந்தார்.

வடமாகாண சபைக்கான தேர்தலுக்கு முன் ஏற்ப்பாடாகவே யாழ் மாவட்ட உள்ளுராட்சி மன்ற தேர்தல்கள் நடைபெற்றன. அமைச்சர்கள் பட்டாளமும், அரச இயந்திரமும் முழுமையாக அரசாங்கத்துக்கு சார்பாக முடிக்கிவிடப்பட்ட நிலையிலே அவ் உள்ளுராட்சி மன்றத்தேர்தல்கள் நடைபெற்றன. ஆனாலும் பெரும்பாலான உள்ளுராட்சி சபைகளை தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு கைப்பற்றியது. 2012ம் ஆண்டு நடைபெற உள்ள வட மாகாண சபைத்தேர்தல்லானது அரசாங்கத்திற்கும், தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கும் மிக முக்கியமானது மட்டுமின்றி சவால் நிறைந்ததும் கூட. 

இலங்கையின் ஏனைய மாகாண சபை தேர்தல்களை விட வட,கிழக்கு மாகாண சபைத்தேர்தல்களுக்கு தேசிய, சர்வதேச ரீதியில் அதிகளவான முக்கியத்துவம் உண்டு. 1987ம் ஆண்டு கையெழுத்தான இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் ஊடாக அறிமுகம் செய்யப்பட்ட மாகாண சபை முறைமையானது வட,கிழக்கில் வாழ்கின்ற தமிழ் மக்களை மையப்படுத்தியும், இனப்பிரச்சனை தீர்வில் அதிகாரப்பரவலாகத்திற்கான அடிப்படை தொடக்க மையமாக கொண்டு வரப்பட்ட போதும் இம்முறைமை அறிமுகப்படுத்தப்பட்டு இரு தசாப்தங்கள் கடந்து விட்ட நிலையில் இணைந்த வட, கிழக்கிற்க்கு ஒரு தடவையும் 20வருடங்களுக்கு பின் பிரிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்திற்கு ஒரு தடவையும் மாகாண சபைத்தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. 

வட மாகாணத்துக்கு இதுவரை மாகாண சபை தேர்தல் நடைபெறவில்லை. ஏனைய மாகாணங்களுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை எனும் அடிப்படையில் கிரமமாக தேர்தல்கள் நடைபெற்று இருக்கின்றன. 2008ம் ஆண்டு நடைபெற்ற கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலுக்கு சர்வதேச ரீதியாக கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் வட,கிழக்கு மாகாண சபைக்கான அங்கீகராத்தின் சிறந்த வெளிப்பாடாகும். சமீபத்தில் வட மாகாணத்தில் நடைபெற்ற தேர்தல்களின் படியும், இன்றைய அரசியல் நிலைமைகளின் படியும் வடமாகாண சபைக்கான தேர்தலில் அரசாங்கத்தை விட தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கு வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளன. வட மாகாணத்தின் தேர்தல் மாவட்டங்களில் ஒன்றான யாழ்ப்பாணத்தில் அரசாங்கத்தின் பங்காளிக்கட்சியான EPDP சில இடங்களில் பலமாக இருக்கின்ற போதும் பெரும்பாலான இடங்களில் தமிழ்த்தேசியக்கூட்டமைப் பின் ஆதிக்கமே காணப்படுகின்றது.

மற்றொரு தேர்தல் மாவட்டமான வன்னியில் அரசாங்கமோ, பங்காளிக்கட்சிகளோ வலுவான மக்கள் செல்வாக்குடன் இல்லை. இதனை விட வட மாகாணத்தில் செயற்படுகின்ற தமிழ்கட்சிகளில் EPDP தவிர ஏனைய கட்சிகள் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புடன் இணக்கமாக செயற்படுவதால் வன்னித்தேர்தல் மாவட்டத்திலும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் கையே ஒங்கியுள்ளது. தமிழ் மக்களுக்கு அரசியல் உரிமை ரீதியாகவோ, அபிவிருத்தி ரீதியாகவோ தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு எதுவும் செய்யாத போதும் அதன் மிகப்பெரிய பலம் தமிழ் மக்களின் பலவீனங்களை நன்றாக புரிந்து கொண்டு உரிய தருணத்தில் அப்பலவீனங்களுக்கு ஊடாக தமது பலத்தைக்காட்டுவது தான். வட மாகாண சபைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதும் முள்ளிவாய்க்கால் படுகொலைகளை காரணம் காட்டி அதற்கு காரணமான மஹிந்த அரசாங்கத்தை சர்வதேச குற்றவாளி கூண்டில் ஏற்ற வட மாகாண சபைக்கான ஆணையைத்தருமாறு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு வட பகுதி மக்களிடம் உணர்ச்சி பூர்வமாக கேட்கும். மக்களும் அதற்கு ஆணை வழங்கலாம்.

ஆனால் இதனால் எதுவுமே நடைபெறாது என தமிழ்த்தேசியக்கூட்டமைப்புயின் தலைவர்களுக்கு நன்கு தெரியும். இறுதியில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு ஜெயிக்க மக்கள் தோற்ப்பார்கள். தமிழ்த்தேசியக்கூட்டமைப்பpன் பிரதான அரசியல் மார்க்கமே தமிழ் மக்களின் இரத்தமும், மரணக்கிடங்குகளும் தான். இவற்றின் மீதே தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தனது அரசியல் பாதையைக் கொண்டு செல்கின்றது. ஆனால் இவ்இரத்தம் சிந்தலுக்கும், மரணக்கிடங்குகளுக்கும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு கனமான பாத்திரம் வகித்தது என்பதை பலரும் மறந்து போவது தான் ஆச்சரியம். முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் பின்னர் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு ஜனாதிபதி தேர்தல், பாராளுமன்ற தேர்தல், உள்ளராட்சிமன்ற தேர்தல்களை சந்தித்திருக்கின்றது. மூன்று தேர்தல்களிலும் ஒரே நோக்கத்திற்காகவே மக்களின் ஆணையைக்கேட்டது. மக்களும் ஆணை கொடுத்தார்கள் ஆனால் இதற்காக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு மேற்கொண்ட முன் நகர்வுகள் தான் என்ன? குறைந்த பட்சம் இலங்கையில் போர்க்குற்றம் அல்லது இனப்படுகொலை நடைபெற்றது என்று உத்தியோக பூர்வமாக சொல்லக்கூட இல்லை. 

அரசாங்கம் நியமித்த நல்லிணக்க ஆணைக்குழுவின் நோக்கம் எதுவாக இருந்த போதும் அதன் இறுதி அறிக்கைக்கு சர்வதேச ரீதியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இதனை பயன்படுத்தி தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் எந்தத்தலைவராவது நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் போர்க்குற்றம் நடந்ததாகவோ அல்லது தமிழ் மக்களுக்கான இறுதி அரசியல் தீர்வு தொடர்பாகவோ சான்று பகின்றார்களா?. பேச்சுவார்த்தைகளில் திருப்தி இல்லை என்று கூறிக்கொண்டே அரசாங்கத்துடன் 10 சுற்றுக்கள் பேச்சு வார்த்தைகள் நடத்தியுள்ளனர். இதில் அரசியல் தீர்வுக்காக முன் வைக்கப்பட்ட எழுத்து பூர்வமான ஆவணம் என்ன?. எனவே நடைபெறவுள்ள வட மாகாண சபை தேர்தலிலும் தன்னால் செய்யமுடியாததை உணர்ச்சி பூர்வமாக முன்வைத்து மக்களின் ஆணையைப்பெறும் ஆவலில் தான் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தலைவர்கள் இருப்பார்கள் என்பதில் ஜயமில்லை.

அரசாங்கமும் தமிழ்மக்களின் இனப்பிரச்சனைக்கான காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புடன் மட்டும் பேச்சுவார்த்தை எனும் நாடகத்தை நடாத்துவதும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கு வாய்ப்பாகவுள்ள விடயம் தான். வட மாhகண சபைத்தேர்தலானது தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கு பாரிய சவாலாக அமைய உள்ளதுடன் அக்கட்சியின் பிளவுக்கான களமாகவும் அமையலாம். தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் கொள்கை அடிப்படையில் நோக்கினால் வட மாகாண சபைக்கான தேர்தலில் போட்டியிக்கூடாது. கிழக்கு மாகாணசபைத்தேர்தல் நடைபெற்ற போது வட,கிழக்குப்பிரிப்பை தாம் ஏற்றுக் கொள்ளவில்லை எனக்கூறி அத்தேர்தலில் போட்டி இடவில்லை.

அத்துடன் கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தன் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புத்தலைவர் சம்பந்தரை பாராளுமன்ற தேர்தல் விடயமாக சந்தித்த போது தாம் கிழக்கு மாகாணத்தையோ கிழக்கு முதலமைச்சரையோ ஏற்றுக்கொள்ளவில்லை என சம்பந்தர் கூறியதாக கிழக்கு முதலமைச்சர் கூறியதும் இங்கு சுட்டிக்காட்டதக்கது. 2012ம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தல் இணைந்த வட,கிழக்கிற்கான தேர்தல் அல்ல. பிரிக்கப்பட்ட வடக்கு மாகாணத்திற்கான தேர்தல.; 2008ம் ஆண்டு கடைப்பிடித்த கொள்கையை 2012ம் ஆண்டு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு கடைப்பிடிக்காது என்றே தோன்றுகின்றது. தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் யார்?. என்பதில் தான் அக்கட்சியின் மிகப்பெரிய சவாலே உள்ளது. வட மாகாண முதலமைச்சர் பதவி என்பது பதவி நிலை அடிப்படையில் மத்திய அரசாங்கத்தின் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப்பதவிக்கு இணையானது. 

அத்துடன் வட மாகாண முதலமைச்சருக்கு தேசிய, சர்வதேச ரீதியில் பெரும் அங்கீகாரம் கிடைக்கும். எனவே பதவி நிலை அடிப்படையிலும் அங்கீகாரத்திலும் முதலமைச்சர் பதவியானது தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் கட்சித்தலைவர், செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் போன்றோரை விட உயர்வானது. இவ்வகையில் நோக்கையில் வட மாகாண முதலமைச்சர் வேட்பாளராக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு சார்பில் பிரேரிக்க பதவி நிலையிலும், மூப்பு அடிப்படையிலும் பொருத்தமானவர் கட்சித்தலைவரான இரா. சம்பந்தர் மட்டுமே. ஆனால் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த சம்பந்தரை வட மாகாண முதலமைச்சராக அவரது கட்சி ஏற்றுக்கொள்ளுமா? வட பகுதி மக்கள் ஏற்றுக்கொள்வாரர்களா! வட,கிழக்கு என்று தங்களுக்குள் பாகுபாடு கிடையாது என கூறும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு கட்சியினர் தமது பிரதேச பாகுபாட்டு இன்மையை சம்பந்தரை வட மாகாண முதலமைச்சர் வேட்பாளராக அறிவிப்பதன் மூலம் நிரூபிப்பார்களா?

இது சாத்தியமாகாத பட்சத்தில் தனக்கு கீழ் நிலையில் உள்ள மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமசந்திரன் போன்றோரை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்து பதவி நிலையையும், மூப்பு நிலையையும் விட்டுக்கொடுக்க சம்பந்தர் முன் வருவாரா? தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் இரண்டாம்கட்ட தலைவர்களில் சுரேஸ் பிரேமச்சந்திர முன்னாள் ஆயுத குழுவின் தலைவர் புலிகளின் உயிர் அச்சுறுத்தலுக்கு பயந்து தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் ஜக்கியமானவர். அவர் முதலமைச்சர் வேட்பாளர் பதவிக்கு பிரேரிக்கப்படுவதை பழம் பெரும் கூட்டமைப்பு தலைவர்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. அதே நேரம், சுமத்திரன், ஸ்ரீதரன் போன்ற புதியவர்களையும் பழையவர்களையும் ஏற்க்கமாட்டார்கள். இவ்வாறான நிலையில் முற்றிலும் புதியவரை தேடினாலும் பதவி நிலைமை, நீண்ட கால உறுப்புரிமை போன்ற ஈகோக்களும் மேலாதிக்க மனப்பாங்கும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தலைவர்களை விடப்போவது இல்லை. இதனை விட தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு சார்பாக முதலமைச்சர் வேட்பாளர் கனவு புலம்பெயர் வாழ் முக்கியஸ்தர்கள் சிலருக்கும் யாழ்பல்கழைகலக போராசிரியர்கள் இருவருக்கும் உள்ளதாக கூறப்படுகின்றது. 

ஆனால் இவர்களை பிரேரிப்பதில் கட்சி தலைமை முரண்படும் என்றே தோன்றுகின்றது. இவ்வாறான நிலையில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் அடுத்த தெரிவு என்னவாக இருக்கும். தமிழ்த்தேசியக்கூட்டமைப்புத் தலைவர் சம்பந்தர் முதலமைச்சராக தனது கட்சியை சேர்ந்த வேறொருவர் தெரிவு செய்யப்பட்டால் தனது நிலைமை என்னவாக இருக்கும் என்பதை நன்கு அறிவார். நிச்சயமானக தனக்கு கீழ் பணியாற்றுகின்ற மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன் போன்றோர் தனது பதவியை விட உயர்ந்த பதவியான முதலமைச்சர் பதவிக்கு வருவதை அவர் விரும்பப்போவதில்லை. எனவே தனக்கு மிகவும் விசுவாசமான தனது பணிப்புரையின் கீழ் செயற்படக்கூடிய பல்கலைகழக முன்னால் பேராசிரியர் ஒருவரும், கட்சியில் தேர்தலில் போட்டியிடாமல் பதவியை அநுபவிக்கின்ற ஒருவரும் அவரின் சிந்தனையில் இருக்கலாம். 

ஆனால் கட்சி தலைவரின் இம்முடிவை மாவை சேனாதிராஜா, சுரேஸ்பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கல நாதன் போன்றோர் ஏற்பார்கள் என்றால் அது கடினம் தான். எனவே வட மாகாண சபை தேர்தல் அறிவிக்கப்பட்டதும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு எனும் குட்டை குழம்பப்போகின்றது. இக்குட்டைக்குள் அரசாங்கம் மீன் பிடிக்குமா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். அரசாங்க தரப்பில் வட மாகாண முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட அமைச்சர் டக்கிளஸ் தேவாநந்தா பகிரங்கமாக விருப்பம் தெரிவித்திருக்கின்றார். 

ஆனால் யாழ்ப்பாணத்தில் சில இடங்களில் மாத்திரமே செல்வாக்குடன் இருக்கும் அவர் தனது நிலையை இன்னும் விஸ்திரப்படுத்த வேண்டும். அவரும் அவரின் கட்சியும் எல்லாவற்றுக்கும் அரசாங்கத்துக்குப் பின் ஒழித்துக் கொள்ளாமல் தனித்துவத்தையும் சர்வதேச அங்கீகாரத்தையும் பெற வேண்டும். ஆயுதக்குழு, கப்பம் பெறுபவர்கள் எனும் பெயரை போக்கி வெளிப்படைத்தன்மையுடன், சிவில் சமூகத்துடன் இணைந்து செயலாற்ற வேண்டும். அண்மையில் அமெரிக்காவின் வெளி உறவு உதவிச்செயலாளர் றொபட் ஓபிளேக் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த போது EPDP நடவடிக்கைகள் கடும் விமர்சனத்துக்கு உள்ளாயின இது போன்ற செயல்கள் தவிர்க்காவிட்டால் அமைச்சர் டக்கிளஸ் தேவாநந்தனின் வட மாகாண முதலமைச்சர் கனவு கனவாகவே போய்விடும்.

நன்றிகள் - உண்மைகள் 
read more...

இந்துக்களே....


கேதார கெளரி விரதம் ஆரம்பமாக இருப்பதனால் முன்னைய பதிவொன்று மீண்டும் உங்களுக்காக

இந்துக்களின் விரதங்களிலே சிறப்பான இடத்தினைப் பெறும் விரதங்களில் ஒன்றான கேதார கெளரி விரதத்தின் மகிமையினை கூறும் இறுவட்டு ஒன்றினை எமது கலைஞர்களின் பங்களிப்போடு வெளியிட்டு இருந்தேன்.
பாடல்கள் நல்ல வரவேற்பினைப் பெற்றிருந்தன. அப்பாடல்கள் நீங்களும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்

கதைச் சுருக்கம்
திருக்கைலாச மலையிலே பரமசிவன், பார்வதி சமேதராக வீற்றிருந்த வேளையிலே. தேவர்களும், முனிவர்களும் அங்கு சென்று இருவரையும் சுற்றி வந்து வணங்கினர். அந்த வேளையிலே அங்கு வந்த பிரிங்கி முனிவர விகடக் கூத்தொன்றை ஆடி அங்கிருந்தவர்களை மகிழ்ச்சி அடையச் செய்த பின்னர். உமாதேவியை விலக்கி விட்டு சிவபெருமானை மட்டும் சுற்றி வந்து வணங்கினர். உமாதேவியை அலட்சியம் செய்த முனிவரின் உடலிலிருந்த சக்தியை உமாதேவி எடுத்துக் கொண்டதனால் பிரிங்கி முனிவர் சபையிலே சோர்ந்து வீழ்ந்தார்.

சிவபெருமான் பிருங்கி முனிவரிடம் தடி ஒன்றைக் கொடுத்து அதனை ஊன்று கோலாகக் கொண்டு நடந்து செல்வதற்கு அனுக்கிரகம் செய்தார். இதனால் ஆத்திரமும் அவதானமும் அடைந்த உமாதேவி சிவபெருமானிடம் கோபித்துக் கொண்டு பூவுலகுக்கு வந்தார்.


ஒரு வில்வ மரத்தடியில் உமாதேவி வீற்றிருந்தார். உமாதேவியின் வருகையால் அந்த வனம் புதுப்பொலிவு பெற்றது. அந்த வனத்திலே வசித்த கௌதம முனிவர் திடிரென ஏற்பட்ட மாற்றத்துக்கான மாற்றத்துக்கான காரணத்தை அறிய முற்பட்டபோது. உமாதேவியைக் கண்டு நடந்த சங்கதிகளை அறிந்து கொண்டார்.


புரட்டாதி மாதம் சுக்கில பட்ச தசமி தொடக்கி இப்பசி மாதம் கிருஷ்ண பட்சம் தீபாவளி அமாவாசை வரையுள்ள கேதரேசுரர் விரத மகிமை பற்றியும் அதனை அனுஷ்டிக்கும் முறைமை பற்றியும் விளக்கமாகக் கூற அம்மை விரதம் நோற்று அர்த்தநாரீஸ்வரர் வடிவமாகினார்.
பதிவிறக்கங்கள்...
read more...

Tuesday, 27 September 2011

பறக்கும்போது சுட்டது

கட்டார் நாட்டுக்கு தொழில் தேடி சென்று ஏமாற்றத்துடன் நாட்டுக்கு வந்து சேர்ந்தேன். வந்து இரண்டு மாதங்களாகிவிட்டது என் கைப்பேசியில் சுட்ட சில படங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

கட்டாரில் இருந்து துபாய் போய் துபாயில் இரண்டரை மணித்தியாலங்களும் அங்கிருந்து மாலைதீவு சென்று மாலைதீவில் எட்டரை மணித்தியாலங்கள் விமான நிலையத்தில் தங்கியிருந்து நாட்டுக்கு வந்து சேர்ந்தேன்.

நான்கரை மாதங்கள் என்னை அரவணைத்து தங்குவதற்கு இடம் உணவு உட்பட அத்தனை உதவிகளையும் செய்த என் நண்பர்களில் சிலரும் நானும். கட்டார் வீதிகளில். 









இது நண்பர்களும் நானும் இருந்த இருப்பிடம் இதை பார்த்து நீங்களே உணர்ந்து கொள்ளுங்கள் நம் உறவுகளின் நிலையை 


 மாலைதீவிற்கு சென்றதும் சுட்டவை


 மாலைதீவு விமான நிலையத்தின் சுவர்கள் வெடித்து கட்டிடம் விழும் நிலையில் இருக்கிறது.


 எட்டரை மணித்தியாலங்களை என்ன செய்வது உணவு தண்ணீர் இன்றி நண்பர்கள் படும்பாடு. உணவு சாப்பிடுவதானால் டொலர் வேண்டும் எங்களிடம் எவரிடமும் டொலர் இல்லை.
 3 சிங்கள நண்பிகள் விமானத்தில் கிடைத்ததனால் நண்பர்களுக்கு மட்டற்ற மகிழ்சி


 சிங்கள நண்பிகளோடு சந்தோசமாக நண்பர்கள்






 மொட்டையுடன் அடியேன்
 பறக்கும்போது சுட்டது இதுதான்




















read more...

Monday, 15 August 2011

அரசியலாகும் மர்ம மனித விவகாரம்.


படித்து பட்டம் பெற்றும் இலங்கையில் வேலை கிடைக்கவில்லையே என்று வெளிநாடு சென்றால் அங்கேயும் வேலை கிடைப்பதாக இல்லை. ஏமாற்றம்தான் கிடைத்தது. கடந்த மாதம் 10ம் திகதி நாட்டுக்கு வந்துவிட்டேன். தொடர்ந்தும் பதிவுகளோடு சந்திப்போம். 


இன்று பரவலாகப் பேசப்படுகின்ற விடயம் மர்ம மனிதன் விடயம். அவ்விடயம் தொடர்பாக கிழக்கு மாகான முதலமைச்சரின் கருத்துக்கள்.


இது தொடர்பான பல விடயங்களை தனி ஒரு பதிவாக தர இருக்கின்றேன். மர்ம மனிதன் விடயம் அதிகமான வதந்திகளால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கின்றது என்பதுதான் உண்மை.


மர்ம மனிதன் தொடர்பான எனது விரிவான பதிவு வரும்....

தற்போது நாட்டின் பல பாகங்களிலும் கிரீஸ் மனிதன் , மர்ம மணிதன் என்கின்ற ஓர் மாயை தோற்றுவிக்கப்பட்டு குறித்த சில பிரதேசங்களில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டு இருக்கின்றது. இவ்வாறான சூழலை தங்களுக்கு ஏற்றால் போல் ஒருசில அரசியல்வாதிகள் சாதகமாக்கி மக்களை மீண்டும் பீதியில் உறையச்செய்திருக்கிறார்கள் என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். நேற்று  (14.08.2011) மட்டக்களப்பு இருதயபுரம் ஈஸ்;டன் ஸ்டார் விளையாட்டு மைதானத்தின் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.

தோடர்ந்து அவர் பேசுகையில் நாடெங்கிலும் பல பாகங்களிலும் அபிவிருத்திப்பணிகள் துரிதமாக முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது.  நாட்டின் சகல பாகங்களிற்கும் எந்நேரத்திலும் சென்று வரக்கூடிய ஓர் சமாதான சூழ்நிலை காணப்படுகின்றது. இதனை குழப்புவதற்கான சதிமுயற்சிகளாக கூட இது இருக்கலாம். உன்மையில் பார்த்தால் கடந்த ஒரு சில நாட்களாக மட்டக்களப்பு மாவட்டத்திலே குறிப்பிட்ட சில நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. இதனால் முற்று முழுதாக இயல்பு நிலை பாதிக்கப்பட்டு சன நடமாட்டம் குறைவடைந்து இரானுவ வீரார்களே தெருக்களெல்லாம் குவிக்கப்பட்டுள்ளார்கள்.
இதனால் மக்கள் மத்தியில் பல்வேறு ஐதீகங்களும் எழுகின்றது. இதனை முதலில் கட்டுப்படுத்தி பூரண தெளிவுபடுத்தலை ஏற்படுத்தி சமாதான நிலையினை கொண்டு வருவதற்கு பாதுகாப்பு தரப்பினர் முதலில் முன்வரவேண்டும். 

நேற்று (13.08.2011) நாவற்குடா என்ற இடத்தில் நடாத்த ஓர் சம்பவம் அதாவது வெளிஊரில் உள்ள ஒரு பையன் தனது உறவினர் வீட்டுக்கு வந்திருக்கிறான், வீடு சரியான முறையில் அடையாளம் காணமுடியாததால் அயலில் உள்ள ஒருவரிடம் விசாரித்து இருக்கின்றனர். அவர் கிரிஸ் மணிதன் என சந்தேகித்து அவரை கடுமையமக தாக்கி கம்பத்திலும் கட்டி வைத்திருக்கின்றார்கள் அதனை அறிந்த பொலிசார் குறித்த ஸ்தலத்திற்கு விரைந்த போது பொலிசாருக்கும் பொதுமக்களுக்கும் முறுவல் கிலை மேற்பட்டு கலவரமாகமாறி பிரச்சனைகள் ஏற்பட்டிருக்கின்றது. குறித்த சம்பவம் அவ்விடத்தில் நடைபெற்றிருக்கும் போது அவ்விடத்திற்கு சென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் மீண்டும் அங்கொரு முறுவல் நிலை தோற்றுவித்திருக்கின்றார்.

அதாவது உன்மை நிலை என்னவென்று அறியாது அவர் குறித்த நகரை தாக்கியது சரிஎனவா தீட்டு பிரச்சனையை தோற்று வித்திருக்கின்றார்கள்.
எதுவமே அறியாத அந்த அப்பாவி தாக்கப்பட்டிருக்கின்றான். அதனை விசாரிக்காமல் அரசியல் இலாபம் தேடுவதற்கு அவ்விடத்திற்கு சென்று போதைக்காக ஏதும் கதைக்கவேண்டும் என்பதற்காக கதைத்துவிட்டு வந்திருக்கிறார். எனவே இயல்பு வாழ்க்கையரும் குழப்புவதற்கு இடமளிக்கக்கூடாது.
read more...