Tuesday, 8 February 2011

கிழக்கின் சுயநிர்ணயமும் சில உண்மைகளும்

ஜேர்மனியிலுள்ள ஸருட்காட் நகரில் இலங்கையர் ஜனநாயக அரங்கு சார்பில் 2006-11-11இ12 ஆம் திகதிகளில் இடம் பெற்ற அரசியல் மாநாட்டில் எம்.ஆர்.ஸ்ராலின் அவர்களால் “கிழக்கின் சுயநிர்ணயம்” எனும் தலைப்பில் ஆற்றபட்ட உரை.

அன்பார்ந்த நண்பர்களே தோழர்களே!

இந்த அரங்கில் உரையாடுவதற்காக ‘கிழக்கின் சுயநிர்ணயம்’ எனும் தலைப்பு நிர்ணயிக்கப்பட்டமையானது சிலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கலாம். சிலவேளைகளில் கிழக்கு மாகாணம் எதிர்கொள்ளும் தனித்துவமான பிரச்சனைப்பாடுகளை ஒட்டிய உரையாடல்கள் ‘பிரதேசவாத நோக்கிலிருந்து எழுபவை என்கின்ற ஒரு தவறான புரிதலும் உங்களில் சிலரை ஆட்கொண்டிருக்கலாம். எனினும் இங்கு கூடியிருப்போரில் பெரும்பாலானோர் மாற்று கருத்துகளின் இருப்புக்காக உயிரையே கொடுத்து போராடும் பாரம்பரியத்தில் வருபவர்கள் என நான் நம்புகிறேன். எனவே பலமுனைகளிலும் ஒடுக்கப்பட்டு ஏமாற்றப்பட்டுஇ அலைக்கழிக்கப்பட்டுஇ சிதறடிக்கப்பட்டுள்ள மாகாணமொன்றின் குரலாக ஒலிக்கப்போகும் எனது உரையை பொறுமையுடன் புரிந்து கொள்ள முயலுமாறு தயவாக கேட்டுக்கொள்கின்றேன்.

தமிழ் பேசும் மக்கள் எனும் வகையில் நாம் அனைவரும் இணைந்து அல்லது நம்மில் பெரும் பாலானோர் இணைந்து நமது மக்களுக்கான விடுதலையைவேண்டி தமிழீழம் எனும் கோரிக்கையை முன்வைத்து இதுவரை போராடி வந்துள்ளோம் இக்கோரிக்கைக்கு வித்திட்டவர்கள்இ அதை ஜனநாயகவழியில் முன்வைத்தவர்கள்இ அதற்காக ஆயுதம் ஏந்தி போராடியவர்கள் என பலதரப்பட்டோரும் இங்கு கூடியுள்ளோம் இந்தவேளையில் விரும்பியோ விரும்பாமலோ அந்த தமிழீழம் நம்கண்முன்னாலேயே பலவீனப்பட்டு நிற்பதை நாம் ஏற்று கொண்டே ஆகவேண்டும்.
இந்த நிலையில்தான் தமிழீழம் எனும் கோட்பாட்டின் அடிப்படையான வடக்கு கிழக்கு இணைந்த தாயகம் என்கின்ற நிலையிலிருந்து விலகி கிழக்குமாகாணம் தனது சுயநிர்ணயம் பற்றி பேசவேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இந்த நிலையை நாம் ஆதரிப்பதா அல்லது எதிர்ப்பதா என்பதற்கு முன்னால் அந்த மாகாணம் எதிர்கொள்ளுகின்ற ஒடுக்குமுறைகள் என்ன? அதனது தனித்துவம் என்ன? பாரம்பரியம் என்ன? வரலாறு என்ன? என்பன குறித்து எமது பார்வைகளை திருப்புதல் அவசியம் என கருதுகின்றேன்.

வரலாற்று காலத்திற்கு முற்பட்ட புராண இதிகாசங்களில் இராமாயணம் எனும் இதிகாசம் முக்கியமானதொன்றாகும். இந்த இராமாயண காலத்தில் இலங்கையின் வேந்தனாக இராவணன் விபரிக்கப்படுகின்றமை நாமறிந்ததொன்றே. இந்த இராவணன் ஆட்சியின் இருபெரும் தடயங்களான திருகோணமலையையும்இ உகந்த மலையையும் தன்னகத்தே கொண்டதுதான் கிழக்கு மாகாணம் ஆகும்.

வரலாற்று ரீதியாக இலங்கையின் மிக புராதன வரலாற்று தடயங்களை கொண்ட இராசதானியாக கருதப்படுவது ‘தீகவாவி’ ஆகும். புதைபொருள் ஆராய்சிகளின் அவசியங்களுக்கு அப்பால் நேரடியாகவே இப்பழைய இராசதானியின் இடிபாடுகளை இத் தீகவாவியில் இன்றும் காணலாம். இந்த தீகவாவியிலிருந்துதான் கிழக்கு மாகாணத்தில் காணப்பட்ட அரசோற்றும் மையங்களின் உருவாக்கம் தொடங்குவதை நாம் அவதானிக்கலாம். அப்பாறை மாவட்டத்தினுள்ள அக்கரைபற்றுக்கு மேற்கே சுமார் 22 கி.மீ. தூரத்தில் இந்த தீகவாவி காணப்படுகின்றது. இதுபற்றிய சரித்திர சான்றுகளில் புத்தர் இங்கே விஜயம் செய்தமை முக்கியமானதொன்று(1). மகாவம்சத்தில் காணப்படுகின்ற இக்குறிப்புகள் சுமார் 2500 வருடகால வரலாற்று தொடர்ச்சிகொண்ட அரசியல் பாரம்பரியம் கிழக்குமாகாணத்திற்கு உண்டு என்பதை எழுத்துரு வடிவில் எமக்கு சொல்லிநிற்கின்றது. கி.மு. 145 ல் இலங்கை மீது படையெடுத்து வந்த எல்லாளன் திருகோணமலையில் தரையிறங்கியமையும்(2)இ சுமார் 44 ஆண்டுகள் இலங்கை முழுவதிலும் கோலோச்சிய அவனை தோற்கடித்த துட்டகைமுணுவின் படைகள் தீகவாவியிலிருந்தே புறப்பட்டமையும் கிறிஸ்துவிற்கு முற்பட்ட காலத்திலிருந்தே கிழக்கு மாகாணத்தில் ஒவ்வொரு பிரதேசங்களும் அரசியலில் கொண்டிருந்தகேந்திர முக்கியத்துவத்தினை எடுத்தியம்புகின்றன. மாகமம் எனும் இடத்திலிருந்து புறப்பட்ட துட்டகைமுணுவின் படைகளில் மட்டக்களப்பு தமிழர்களே(3) நிறைந்திருந்தார்கள் என்கின்ற உண்மை கிழக்கிலங்கையில் இனஇ மதஇ வேறுபாடுகள் அற்ற ஒரு வாழ்வியல் முறை நீண்டகாலமாகவே பலம்பெற்று இருந்துவந்துள்ளதை புலப்படுத்துகின்றது. ஆனால் இந்த உண்மைகள் எமது வரலாறுகளில் இருந்து மறைக்கப்பட்டிருக்கின்றது. சிங்கள வரலாற்று ஆய்வாளர்கள் துட்டகைமுணுவை சிங்கள குறியீடாக திரிபுபடுத்தினர். பதிலுக்கு தமிழ் வரலாற்றாய்வாளர்களும் எங்கிருந்தோ வந்த அன்னியனான எல்லாளனை இலங்கை தமிழர்களின் குறியீடாகவும் ஆக்கி மகிழ்ந்தனர். இந்த இனநோக்கு வரலாற்று எழுதுதலே கிழக்கிலங்கையின் உயிர்மூச்சான இனஇ மதஇ வேறுபாடற்ற ஒரு மக்கள் பண்பாட்டினை இன்று அந்த மாகாணம் இழந்து நிற்பதற்கான ஊற்றுக்கண் ஆகும்.

இன்றைய உலகிலுள்ள பூகோள வரைபடங்களுள் மிகதொன்மையானது கி.மு. 147 ல் ‘தொலமி’ என்பவர் வரைந்த படமாகும். கடந்த மாதம் இலண்டனில் இடம்பெற்ற ஏலமொன்றில் 3.9 மில்லியன் பவுண்களுக்கு விற்பனையான இந்த வரைபடத்தில் இலங்கை வரையப்பட்டுள்ளதோடு கல்முனைபிரதேசம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது கல்முனை துறைமுகமானது கிறிஸ்துவிற்கு முற்பட்ட காலத்தை சேர்ந்த கிரேக்கஇ பாரசீக வியாபாரிகளின் இறங்கு துறையாக இருந்துள்ளதனையும் அதுகொண்டிருந்த சர்வதேச வர்த்தக ரீதியான முக்கியத்துவத்தினையும் இதனூடாக அறியமுடிகின்றது.

இப்படியாக கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலம் தொட்டு உருவாகியிருந்த கிழக்கு மாகாணத்தின் அரசியல் வரலாறு தீகவாவிஇ மாகமம் போன்ற தலைநகரங்களிலிருந்து கோலோச்சிய உருகுணை ராச்சியரத்துடன் இணைந்தே இருந்து வந்துள்ளது. சுமார் 1000 ஆண்டுகாலம் நீடித்த உருகுணை ராச்சியத்தின் அரசர்கள் சிங்களவர்களாக இருந்தபோதும் கிழக்கிலங்கையின் ஏழுவகையான குறுநில சுயராச்சிய பிரிவுகளின் இராசபிரதானிகளாக தமிழர்களே ஆண்டு வந்திருக்கின்றனர். கி.பி. 8 ம் நூற்றாண்டில்தான் இந்த நிலையில் முதன்முதலாக மாற்றம் நிகழ்ந்தது. அனுராதபுரத்தை தலைநகராக கொண்டியங்கிய இராசரட்டயின் கீழ் கிழக்கின் பெரும்பகுதிகள் செல்லநேரிட்டது. அதன்பின்னர் 10 நூற்றாண்டில் சோழரது படையெடுப்பு இலங்கை முழுவதையும் ஆக்கிரமித்த வேளைகளில் கிழக்கின் அரசுரிமை மீண்டும் அந்நியர் வசப்பட்டது. இராஜேந்திர சோழனுடைய படைகள் கிழக்கை அடிமைகொண்ட வேளைகளில் ஆதமுனை என்றழைக்கப்பட்ட திருக்கோவிலில் இருந்த சேகு அசனாபள்ளி கரவாகு என்றழைக்கப்படும் கல்முனையிருந்த முகைதீன் பள்ளி போன்றவற்றை அழித்தொழித்தனர்(4). இந்த செய்திகள் இற்றைக்கு 1000 ஆண்டுகளுக்கு முன்பே கிழக்கின் கரையோர பட்டினங்களில் முஸ்லிம்களின் வாழ்விடங்கள் மதவழிபாட்டு தலங்களுடன் கூடிய பலமானதொரு சமூக அமைப்பாக இருந்திருப்பதனை எடுத்து காட்டுகின்றது.

இலங்கையில் 1017 ம் ஆண்டு தொடங்கிய சோழராட்சி 1070 ல் தோற்கடிக்கப்பட்டதை தொடர்ந்து மீண்டும் 11ம்இ 12ம் நூற்றாண்டுகளில் கிழக்கிலங்கை உட்பட்ட உருகுணை ராச்சியத்தின் கீழ் இருந்த பெரும்பகுதிகள் பொலநறுவையிலிருந்து ஆண்ட பராக்கிரமபாகுவின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தன. இந்த பராக்கிரமபாகுவின் ஆட்சி காலத்தில் மட்டக்களப்பில் குறுநிலமன்னனாக தினசிங்கன் எனும் தமிழ் மன்னன் ஆண்டு கொண்டிருந்தான். எனினும் அவனும் அவனது தமிழ் குடிகளும் சமண சமயத்தை பின்பற்றுவோராயிருந்தனர்(5). கரவாகு பகுதியாகிய கல்முனையை ரகுகுமான் ராஜா என்பவர் ஆண்டுகொண்டிருந்தார். இந்த தினசிங்கனது ஆட்சி மீண்டும் இந்தியாவிலிருந்து படையெடுத்து வந்த கலிங்க மாகோன் என்பவரால் தோற்கடிக்கப்பட்டது(6).

இந்த கலிங்க மாகோனே விஜயகாலிங்க சக்கரவர்த்தி எனும் பெயரில் இலங்கை முழுவதையும் ஆண்டான் அவ்வேளைகளில் பழுகாமம் அவனது கிழக்கு பிரதேசத்தின் உபராசதானியாக இருந்தது. கரவாகு பகுதிக்கு திஸ்ஸ அலிபோடி ஆளும் அதிகாரம் பெற்ற இராச பிரதானியாக இருதுள்ளார்(7).
1225 ல் தொடங்கிய மாகோனது ஆட்சி 1256 ல் தோற்கடிக்கப்பட்டதை தொடர்ந்து மீண்டும் முன்பு போலவே கிழக்கிலங்கை உருகுணை ராச்சியத்தின் கீழ் வந்தது(8). இந்நிலை ஐரோப்பியரது காலணித்துவ ஆட்சி தொடங்கும்வரை நீடித்ததை நாம் காணலாம். இந்த வரலாற்று குறிப்புகளின் பின்னணியின் இடையிடையே ஏற்பட்ட சோழஇ பாண்டியஇ ஆட்சிகாலங்களை தவிர சுமார் 2500 வருடகாலத்தின் பெரும் பகுதியில் கிழக்கிலங்கையானது தீகவாவிஇ மாகமம்இ கண்டி போன்ற தலைநகரங்களை கொண்டிருந்த உருகுணை ராச்சியத்துடன் இணைந்தே காணப்பட்டது. காலாகாலமாக கிழக்கில் வாழ்ந்த மக்கள் தமிழையே பேசினாலும் பௌத்தமும்இ சைவமும்இ இஸ்லாமும்இ ஏன் சமணமும் கூட அவர்களால் பின்பற்றப்பட்டு வந்துள்ளன. இனமத வேறுபாடுகள் அவர்களை கூறுபோட்டிருக்கவில்லை. உருகுணையின் கீழ் இருந்த போதும் அம்மக்கள் தத்தம் தனித்துவங்களை பேணும் வகையிலான வன்னிமைகள் என்றழைக்கப்ட்ட சுயராச்சிய பிரிவுகளை பேணியே வந்திருக்கிறார்கள் என்பது குறிப்பாக நோக்கற்பாலது.

காலணித்துவத்தின் வருகை

இலங்கையில் காலணித்துவ ஆட்சி ஏற்பட்டபோது மூன்றுவகை அரசுகள் காணப்பட்டிருந்தன. கோட்டை ராட்சியம்இ கண்டி ராட்சியம்இ யாழ்ப்பாண ராட்சியம் எனும் அரசுகளே அவையாகும். 1505 இல் முதன் முதலாக இலங்கையில் காலடி வைத்தவர்கள் போர்த்துக்கேயராகும். இவர்கள் 1597 இல் கோட்டை ராட்சியத்தை தமது முழுக்கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். அதன் பின்னர் 1619 இல் யாழ்பபாண ராட்சியத்தையும் போர்த்கேயர் தோற்கடித்து கைப்பற்றினர். இந்த வேளைகளில் கொட்டியாரம் என்றழைக்கப்பட்ட திருகோணமலைஇ மட்டக்களப்புஇ பழுகாகமம்இ பாணமை போன்ற நால்வகை வன்னிமைகள் கண்டிராட்சியத்துடன் இணைந்தே இருந்தன. இறுதியாக 1815 இல் ஆங்கிலேயேர் கண்டிராட்சியத்தை வீழ்த்தும் வரை தமது சுதந்திரத்தை விட்டுக்கொடுக்காமல் கண்டி ராட்சியத்தின் பிரசைகள் கடுமையாகப் போராடி வந்தனர்.

1818 ல் ஆங்கிலேயருக்கு எதிராக கண்டியில் ஏற்பட்ட கிளர்ச்சியானது ஆங்கிலேயர் தமது ஆட்சியமைப்பில் கூடிய கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தை அவர்களுக்கு உணர்த்தியது. கண்டி பிரசைகளின் தேசிய உணர்வானது ஆங்கிலேயருக்கு அச்சமூட்டியது. எனவேதான் எதிர்கால பாதுகாப்பினை உறுதிபடுத்தி கொள்வதற்காக கண்டி ராச்சியத்தை கூறு போடும் முயற்சியில் ஆங்கிலேயர் இறங்கினர். 1832 இல் கோல்புறுக் – கமறோன் குழுவினரின் ஆலோசனையின் பெயரில் இலங்கை 5 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு மாகாணங்கள் எனும் புதிய நிர்வாக அலகு உருவாக்கப்பட்டது. இதன்படி கண்டிராச்சியத்தின் தூரப்பகுதிகளான (திசாவைகள்) அனுராதபுரத்தின் வடக்கேயிருந்த சில பகுதிகள் மற்றும் மன்னார்இ காளிதேசம் என்று அழைக்கப்பட்டு நீண்டதொரு வரலாற்று காலத்தில் தனியரசாய் திகழ்ந்த முல்லைத்தீவு போன்றவற்றை யாழ்ப்பாண இராச்சியத்துடன் இணைத்து வடமாகாணமாகவும்இ கண்டிராச்சியத்தின் தீகவாவி அடங்கிய மட்டக்களப்பு திருகோணமலை பகுதிகளை ஒருங்கிணைத்து கிழக்கு மாகாணமாகவும் புதிய அலகுகள் உருவாக்கப்பட்டன(9).

ஆட்சி அதிகார ரீதியாக மட்டும் அல்ல கிழக்கு மாகாண மக்கள் தமக்கான சமூகவியல் அம்சங்களிலும் யாழ்ப்பாணத்தில் இருந்தும் அங்கு வாழும் மக்களில் இருந்தும் அதிகளவில் வேறுபட்டே நிற்கிறார்கள் என்பதுவும் மிகமுக்கியமானதொன்றாகும்.
கிழக்கு மாகாண மக்கள் தமது கலைஇ கலாசாரம்இ பண்பாடுஇ சடங்கு சம்பிரதாயங்கள்இ மற்றும் உணவு முறைகளிலும் கூட தமக்கான தனித்துவமான பழக்கவழக்கங்களை கொண்டிருக்கிறார்கள். இவைகளில் பெரும்பாலானவை ஆரியகலப்பற்றவையாகவும் தாய்வழி உரிமைகளை பேணுபவையாகவும்இ மற்றும் சாதிவாரியாக தீண்டாமை இறுக்கமற்றவையாகவும் காணப்படுகின்றது. இப்பண்புகள் ஒரு சமூகவியல் பார்வையில் முற்போக்கு அம்சங்கள் நிறைந்தனவாகும். இந்த அம்சங்களடங்கிய சமூக ஒழுங்குகளையும் அவைசார்ந்த பண்பாட்டு கூறுகளையும் பேணிபாதுகாப்பதற்காக கிழக்குமாகாணம் தனக்கான தேசவழமைகளை காலா காலமாக கைக்கொண்டு வந்திருக்கின்றது. அந்தவகையில் 1876 ல் ஊ.டீசுஐவுழு என்பவரால் கிழக்கில் நிலவிய இந்த தேசவழமைகள் ஒரு நூலாக தொகுக்கப்பட்டு ‘முக்குவர் சட்டம்’ எனும் அந்தஸ்தை பெற்றது(10).

யாழ்ப்பாண மக்களிடையே காணப்பட்ட இத்தகைய தேசவழமைகள் எப்படி 1707 இல் தொகுக்கப்பட்டு யாழ்ப்பாண தேசவழமை சட்டம் எனும்(11) சட்ட அந்தஸ்தை பெற்றனவோ அதேபோன்று கிழக்கில் வாழ்ந்த முஸ்லிம்கள் அல்லாத தமிழர்களுக்குரியனவாக இந்த முக்குவர் சட்டமும் ஆங்கிலேயரால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பேசுகின்ற மொழியில் தமிழர்களாகவே இருந்தபோதும் கிழக்கும் வடக்கும் ஒரே விதமான சட்டத்திட்டங்களால் கட்டுப்படுத்தப்பட முடியாதவையாக உள்ளன என்பதை இங்கு கூடியுள்ள யாவருக்கும் சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளேன். இதே போன்றே கிழக்கில் வாழும் முஸ்லிம்களுக்கும் அவர்களது மத நம்பிக்கையின் அடிப்படையிலமைந்த இஸ்லாமிய சரியா சட்டகோவை இலங்கையில் காலணித்துவ ஆட்சியாளர்களினாலேயே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளமை நம் எல்லோரது கவனத்திலும் கொள்ளப்பட வேண்டியதொன்றாகும்.

இந்நிலையில்தான் நாடுபிடித்துவந்த அன்னியரின் வருகை எமது நாட்டினுடைய அரசியலில் மட்டுமல்ல சமூக பொருளாதார கட்டமைப்புகளிலும் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியது. அவையனைத்தும் முழுஅளவிலான இலங்கையருக்கு பாதகமான அம்சங்களையே பெருமளவில் ஏற்படுத்தியிருந்தாலும் யாழ்ப்பாணத்தவருக்கு இந்த அன்னியரின் வருகை பெரும் வரப்பிரசாதமாய் அமைந்தது. காலணித்துவ ஆட்சியாளர்களின் நவீன அரசியல் செயற்பாடுகளும் நீதி, நிர்வாக சேவைகளும் பெருந்தோட்டத் துறையினூடு விரிவடைந்த போக்குவரத்துஇ தபால்சேவை போன்றவைகளும் அறிமுகப்படுத்திய உத்தியோகங்கள் யாழ்ப்பாண மக்களை கவர்ந்தது. பெருந்தோட்டத் துறையின் மேற்பார்வையார்களாகவும் நீதிநிர்வாகத் துறையின் அடிமட்ட உதவியாளர்களாகவும் பிரித்தானிய ஆட்சியாளர்களுக்கு கைகட்டி சேவை புரிந்த இவர்கள் காலப்போக்கில் நிர்வாகத் தேர்ச்சி பெற்ற உத்தியோகத்தர்களாகவும்இ அரச அதிகாரிகளாகவும்இ ஆசிரியர்களாகவும் இலங்கை எங்கும் வியாபித்தனர். இந்த போக்கு ஆட்சியாளர்களிடம் சம்பளம் பெறும் கணிசமான ஒரு கூட்டத்தினராக யாழ்ப்பாணத்தவரை அடையாளம் காட்டியது.

இந்த உத்தியோகத்தர்களின் சமூக பரம்பலே யாழ்ப்பாணத்தில் ஒரு மத்தியதர வர்க்கத்தின் தோற்றத்துக்கு வித்திட்டது. வெள்ளை ஆதிக்கத்தின் பாதுகாவலராக தம் வாழ்வைத் தொடங்கிய இவ்வர்க்கத்தினரே படிப்படியாக இலங்கையருக்கான அரசியல் போக்குகளை நிர்ணயிப்பவர்களாகவும் உருவாகினர்.படிப்பறிவு, பணம், அந்தஸ்து என்பவற்றை அடிப்படையாகக் கொண்டே இலங்கை மக்களுக்கான அரசியல் கோபுரத்தை வெள்ளயைர் அத்திவாரம் இட்டனர். ஆகவேதான் இந்த அத்திவாரம் ஆனது யாழ்ப்பாணத்திலேயே கட்டப்பட முடிந்தது. அங்கிருந்து உருவான அரசியல் வாதிகளே இலங்கையின் முதல் தலைமுறை அரசியல் தலைவர்களாகவும் இலங்கை அரசியலில் போக்கை தீர்மானிக்கும் சக்தி பெற்றவர்களாகவும் பரிணமித்தனர். இலங்கையின் சிங்கள மக்கள் இடத்திலும் இதுபோன்றதொரு மத்தியதரவர்க்கம் உஇருவாகியிருந்தது. அங்கு ராஜ பரம்பரையினர் என தம்மைச் சொல்லிக்கொள்ளும் கொவிகம எனப்படுகின்ற ஒருவித சமூக அந்தஸ்துகொண்ட பிரிவினரே மேற்படி மத்தியதர வர்க்கமாக உருவாகியிருந்தனர். இவர்கள் சிங்களவராய் இருந்தபோமுதும் கராவஇ சாலக என்கின்ற சாதிப்பிரிவினரான சிங்களவரை தம்மிலும் கீழானவர்களாகவே கணித்து வந்தனர்.

இந்த வகையில் தமிழ் – சிங்கள உயர்வர்க்க கூட்டின் பிரதிநிதியான சேர்.பொன்.இராமநாதன் எனும் யாழ்ப்பாணத்தவர் வெள்ளையரிடையே பெருமதிப்பைப் பெற்றிருந்தார். ஆங்கிலேயருக்கு மிக நெருங்கிய விசுவாசியான இவர் 1911 ம் ஆண்டு படித்த இலங்கையருக்கான முதல் செனட்சபை உறுப்பினர் ஆகும் வாய்ப்பை பெற்றார். கல்வியறிவு பெற்றவர்களுக்கும் சொத்துரிமைகொண்ட தனவந்தர்களுக்கு மட்டுமே அந்நிலையில் வாக்களிக்கும் தகுதி இருந்தது. ஆதலால் மொத்த சனத்தொகையில் சுமார் 4 வீதமான மேல்தட்டு வர்க்கத்தினர் மட்டுமே இந்த வாய்ப்பை பெற்றிருந்தனர். இவ்வகையில் அரசியல் பிரதிநிதிகளை தெரிவுசெய்யும் அதிகாரம் கொண்டவர்கள் தமிழ் – சிங்கள வேறுபாடுகள் எதையும் கொண்டிருக்கவில்லை. இனவேறுபாடுகளை தாண்டிய உயர்தட்டு வர்க்க ஒற்றுமையே இந்த இரு சமூகங்களின் பிரதிநிதிகளிடம் காணப்பட்டது. 1911ம் ஆண்டு தேர்வில் சேர்.பொன்.இராமநாதன் தெரிவு செய்யப்பட்டமை பற்றி அவ்வேளை கவனர் ஆக இருந்த சேர்.கியு.கிளிபார்ட் கூறுகையில் “படித்த இலங்கையரை தேர்ந்தெடுப்பதில் தமிழர் சிங்களவர் என்ற இனவேறுபாடு இல்லாமல் தமிழர் உயர் சாதியினரும் சிங்கள உயர் சாதியினரும் சேர்ந்த ஓர் உயர்சாதியினரையே தெரிவுதெய்தார்கள்” என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

1917 ம் ஆண்டு தேர்விலும் இது மேலும் உறுதியானது கரையோர சிங்களவரான மாக்கஸ் பெர்னாண்டோ என்பவரை விடுத்து தமிழராய் ஆனபோதும் வெள்ளாள சமூகத்தை சேர்ந்தவரான சேர்.பொன்.இராமநாதனையே சிங்களவரும் சேர்ந்து தெரிவுசெய்தனர். 1919 இல் உருவான இலங்கை தேசிய காங்கிரசின் தலைவராக யாழ்ப்பாண தமிழரான சேர்.பொன்.அருணாசலம் என்பவர் தெரிவானார். ஆனாலும் இன்னிலையை சுதந்திரத்தைநோக்கிய சீர்திருத்தங்களும்இ மாற்றங்களும் தொடர்ந்து அனுமதிக்கவில்லை. இலங்கை முழுக்க தமது ஆதிக்கத்தை பேணிவந்த யாழ்ப்பாண மத்தியவர்க்கத்தினரின் எதிர்கால அந்தஸ்தை அரசியல் மாற்றங்கள் கேள்விக்குறியாக்கியது. அதுவரைகாலமும் இலங்கையின் அரசியல்இ சமூகஇ பொருளாதார கட்டுமானங்களில் நிரம்பியிருந்த யாழ்ப்பாணத்தவரின் செல்வாக்குகளை தொடர்ந்துவந்த காலங்களிலும் காப்பாற்றி கொள்ளும் எத்தனிப்போடு அன்றைய அதிகார ருசி கொண்ட தலைமைகள் முன்னெடுத்த நகர்வுகளே இலங்கை தமிழர்களின் வாழ்வை சீர்குலைத்தது. இத்தலைமைகள் அரசியல் விழிப்புணர்வுகள் பரந்துபட்ட மக்களுக்கு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் கவனமாயிருந்தனர். அதற்காகவே வெள்ளையாட்சியாளர்களின் அரசியல் சீர்திருத்த நடவடிக்கைகளை கடுமையாக எதிர்க்கவும் துணிந்தனர். குறிப்பாக அரசியல் சீர்திருத்தத்திற்கான டொனமூர் ஆணைக்குழு முன் சாட்சியமளிக்கையில் எல்லா பிரசைகளுக்கும் தமது தலைமைகளை தெரிவுசெய்யும் வாய்ப்பை வழங்கும் “சர்வசனவாக்குரிமை” வழங்கப்படுவதை கடுமையாக எதிர்த்து விளக்கமளித்தனர். சர்வனவாக்குரிமை வழங்கப்பட்டால் அது “இந்து மத வாழ்க்கை முறைக்கு பழிகேடு விளைவிக்கும் என்றும்”கும்பலாட்சிக்கு வழிவகுக்கும்” என்றும் வாதிட்டார் சேர்.பொன்.இராமநாதன். அதாவது யாழ்ப்பாணத்திலுள்ள உயர்சாதிப்பிரிவை தவிர மற்றயோரும் கிழக்கிலிருக்கும் முஸ்லிம்கள்இ முக்குகர்கள்இ மற்றும் சூத்திரர்கள் அனைவருமே சமூகத்தின் கீழ்நிலையில் இருக்க வேண்டுமென்பதற்காக பகிரங்கமாக கீழ்தரமான கருத்துகளை தெரிவித்தார் இவர். கிழக்கிலங்கை மக்களெல்லோரும் அரசியலுக்கு வந்தால் அதுவே கும்பலாட்சிக்கு வழிவகுக்கும் என்பதே அவரது வாதமாயிருந்தது. ஆனபோதும் வெள்ளையர்களது நிர்வாகம் இவ்விதவாதங்களை கவனத்தில் கொள்ளாது சர்வனவாக்குரிமை வழங்குவதை உறுதிசெய்தது. சர்வசனவாக்குரிமை விரைவில் வழங்கப்படப்போகுதென்ற எதிர்பார்ப்புகள் உறுதியானதும் இதனால் தமது தலைமைகளை காப்பாற்றி கொள்வதற்காக தமிழ்மக்களை ஏமாற்றி தம்வசம் இழுக்கும் சூது விளையாட்டுக்களில் ஈடுபடத்தயாராகினர் யாழ்ப்பாணத் தலைமைகள்.

இலங்கைத் தேசியகாங்கிரசில் தமிழருக்கு உரிய இடம் அளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகளுடன் 1921 இல் அந்த அமைப்பை விட்டு வெளியேறினார் சேர்.பொன்.அருணாசலம். 1923 இல் இலங்கைத் தமிழ் லீக் எனும் அமைப்பைத் தொடங்கிய கையோடு தமிழீழம் பெறுவதே அதனது குறிக்கோள் என கடுமையான பிரச்சாரத்தில் இறங்கினார்.(12)

1923 இல் நடந்த இலங்கைத் தமிழ் லீக் கூட்டத்தில் “தமிழீழம் என்ற நம் குறிக்கோளை அடைய வேண்டுமானால் எம்மிடையே ஒற்றுமையை வளர்ப்பதோடுஇ எமது கொள்கைகளை நாம் என்றும் கடைப்பிடிக்கவேண்டும். எமது பாரம்பரியத்தை நினைவு கூருவதோடு எமது தனித்துவத்தை நாம் பாதுகாக்கவேண்டுமானால் ஒரு பலமுள்ள சமுதாயமாக எம்மை மாற்றிக்கொள்ளவேண்டும்” என சேர்.பொன்.அருணாசலம் முழங்கினார்(13). தமிழர் ஒற்றுமைக்கோஇ தமிழர் பாரம்பரியத்திற்கோஇ தமிழர் தனித்துவத்துக்கோ அன்றைய நிலையில் (1920 களில்) சிங்களவர்களால் எந்தவித ஊறும் விளைவிக்கப்பட்டிருக்கவில்லை. மாறாக ஆங்கில மமதையில் ஆட்சி அதிகார பீடமாக உயர்ந்திருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இந்தத் தலைமைகளே தமிழ்மக்களின் ஒற்றுமை குறித்து அக்கறைப்படாது இருந்தவர்கள். சொந்தமக்களின் உரிமைகளை மறுத்து சிங்கள அதிகார பீடத்துடன் அதிகாரத்தை பங்கிட்டுக்கொண்டிருந்தவர்கள். தமிழர் பாரம்பரியத்தைகுழிதோண்டிப்புதைத்து தாய்மொழியை ஈனமொழியாக்கியவர்கள். அப்படியிருக்க அவர்களே இவற்றுக்காக அழுவது என்பது ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுவதற்கு ஒப்பாய் இருந்தது.

ஆகவே எந்தவொரு பாரிய அச்சுறுத்தலையும் தமிழ் சமூகம் எதிர்கொள்ளாத வேளையில் வெறும் யாழ்ப்பாணத்து மேல்தட்டினரின் நலங்களுக்கு பலம் சேர்ப்பதற்காகவே இந்த தமிழீழ கோரிக்கை 1923 இல் இருந்தே போலியானதாக எழுப்பப்பட்டிருக்கிறது. இந்த எவ்விதத்திலும் அர்த்தபுஷ்டியற்ற ஒரு போலிப் பிரச்சாரத்தினூடு கிழக்கு மக்களையும் உள்வாங்கி ‘வாக்கு பொறுக்கி’ அரசியல் நடத்துவதற்காகவே இந்த தமிழீழத்தை முன்வைத்தனர் என்பதை இனியாவது தமிழர்களாகிய நாமும் கிழக்கு சமூகங்களும் புரிந்துகொள்ள வேண்டும். வெற்று இனவாதக் கூச்சலாகவும், விசமத்தனமானதொன்றாகவும் உருவாக்கப்பட்ட ஒரு நச்சுப்பிரச்சாரமே இந்த தமிழீழம் என்றால் அது மிகைப்படுத்தப்பட்ட கூற்றல்ல.

1944 ஆண்டு கொண்டுவரப்பட்ட இலவசக் கல்வித்திட்ட மசோதாவை பாராளுமன்றத்தில் எதிர்ப்பதில் ஜீ.ஜீ.பொன்னம்பலம்இ மகாதேவாஇ சிறிபத்மநாதன் என்கின்ற தமிழ் பெரும் தலைவர்கள் ஒற்றுமையாக நின்று எதிர்த்தனர். மத்தியதர வர்க்கம் நிறைந்த யாழ்ப்பாணத்தைத் தவிர கிழக்கிலங்கை மக்களும்இ தென்னிலங்கை மக்களும் கல்வியறிவு பெறக்கூடாது என்பதில் இந்த யாழ்ப்பாணத் தலைமைகள் மிகக் கவனமாக செயற்பட்டனர். பாமர மக்களுக்கு அறிவுப் பொக்கிசத்தைத் திறந்துவிட முனைந்த சிங்கள அரசியல்வாதியான டபிள்யு.டபிள்யு.கன்னங்கரா போன்றவர்களுடன் ஒப்பிடுகையில் நமது தலைமைகளே துரோகங்களின் பிறப்பிடமாய் இருந்திருக்கிறார்கள்.கல்வியில் பின்தங்கியிருந்த கிழக்கிலங்கை தென்னிலங்கைப் பிரதேசங்களுக்கு அவ்வாய்ப்புகள் கிடைக்காது தடுக்க முயன்ற யாழ்ப்பாணத் தலைமைகளின் வஞ்சகத் தன்மையை நாம் புரிந்துகொள்ள வரலாறுகள் இதுவரை வாய்ப்பளிக்கவில்லை.

ஐக்கியதேசியக் கட்சி அரசாங்கத்தில் அவ்வேளையில் அமைச்சராய் இருந்த அருணாசலம் மகாதேவா என்பவரை தமிழினத் துரோகி என்றும் தமிழ் பேசும் மக்களின் மீட்பர் தான் மட்டுமே என்றும் திரும்பத் திரும்ப பேசி 1947 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் ஜீ.ஜீ.. ஆனால் அந்த தேர்தலில் வெற்றிபெற்ற கையோடு டி.எஸ்.சேனநாயக்காவின் இரு அமைச்சு பதவிகளுக்காக ஐக்கியதேசியக் கட்சி ஆட்சியில் பொன்னம்பலமும் பங்கெடுத்தார்.

15-நவம்பர்-1948 அன்று பாராளுமன்றத்தில் யு.என்.பி. அரசு கொண்டுவந்த பிரஜாவுரிமைச் சட்த்தின்மீது தமிழ்காங்கிரஸின் பொன்னம்பலம் தலைமை ஆதரவைத் தெரிவித்தது. இதன்மூலம் 10 இலட்சம் தோட்டத்தொழிலாளர்களின் வாக்குரிமையை ஒரேநாளில் பறித்த யு.என்.பி முதலாளித்துவ அரசினது அநாகரிக செயலுக்கு பொன்னம்பலம் உடந்தையாயிருந்தார்.
இந்த செயற்பாட்டின்மீதும் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் தலைமையிலான ஒரு குழுவினர் தமிழ்காங்கிரசின் தலைமைமீது முரண்பட்டனர். இந்த முரண்பாடுகளின் தொடர்ச்சியாகவே இலங்கை தமிழ்காங்கிரசில் இருந்து செல்வநாயகம் வெளியேறி “தமிழரசுக்கட்சி” என்கின்ற ஒரு அரசியல் கட்சியைத் தோற்றுவித்தார்.

“தமிழ்த் தேசியம்” என்கின்ற ஒன்று நோக்கி முஸ்லிம்இ மலையகஇ கிழக்குவாழ் தமிழர்களை அணிதிரட்டும் பணியில் அவர் ஈடுபட்டார். மதஇ பிரதேச எல்லைகளைத் தாண்டிய தமிழ்பேசும் மக்களுக்கான ஒருமித்த “ஆன்மா” ஒன்றினை கட்டியமைக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டிருந்தார் என இதனைக் கொள்ளலாம். பரந்துபட்ட தமிழ் பேசும் மக்களுக்கான சமஸ்டிக் கோட்பாடுகளுடனும் மலையக மக்களின் அடிப்படை உரிமைகளுக்கான கோரிக்கைகளுடனும் மக்களைச் சந்தித்த தமிழரசுக்கட்சி 1952 ஆம் ஆண்டுத் தேர்தலில் கடுமையானதொரு தோல்விக்கு முகம்கொடுக்க நேரிட்டது.

1949 இல் ஆரம்பிக்கப்பட்ட தமிழரசுக் கட்சி தான் முதன்முதலாக எதிர்கொண்ட தேர்தலில் மட்டக்களப்பினது கல்லோயக் குடியேற்றத்திட்டத்தையும்இ திருகோணமலை கந்தளாய்க் குடியேற்றத்திட்டத்தையும் கடுமையாக எதிர்த்துப் பிரச்சாரம் செய்தனர். திட்மிட்ட சிங்களக் குடியேற்றத்தினால் தமிழ் மக்களது பாரம்பரிய தாயகம் பறிபோவதாக பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டது. ஆனால் இந்தப் பிரச்சாரங்களின் பின்னணியில் உண்மையிலேயே தேர்தலை நோக்கிய அணிதிரட்டலே மேற்கொள்ளப்பட்டது என்பதே உண்மையாகும். 1941 ஆம் ஆண்டு டி.எஸ்.சேனநாயக்காவினால் முன்னெடுக்கப்பட்ட இந்தக் குடியேற்றத்திட்டத்தில் சிங்களவருக்கென்று விசேடமான சலுகைகள் எதுவுமே அளிக்கப்பட்டிருக்கவில்லை. காணிக்கச்சேரிகளில் பொதுக்கூட்டங்கள் நடாத்தப்பட்டு கல்லோயா குடியேற்றத்திட்டத்தில் குடியேற விரும்புவர்களது பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டது. மட்டக்களப்பு தமிழர்களில் யாருமே அங்கு போய்க் குடியேறுவதை விரும்பவில்லை. ஏனெனில் சுமார் 10000 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பையுடைய கிழக்கு மாகாணத்தில் அவ்வேளை இரண்டு லட்சத்துக்கும் குறைவானோரே வசித்து வந்தனர். நிலத்துக்கு பஞ்சமற்ற கிழக்கு மாகாண மக்கள் கல்லோயாவில் போய்க் குடியேறுவதற்கும் கரும்புத் தோட்டத்தில் வேளை செய்வதற்கும் எவ்வித அவசியமும் இருக்கவில்லை. இந்தநிலையில் கல்லோயாவை சிங்களவர் வந்து குடியேறுவதையிட்டு மட்டக்களப்புத் தமிழர்களோ முஸ்லிம்களோ பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. இதன்பின்னரே சிங்களவருக்கு காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. முதன்முதலாக ஆரம்பிக்கப்பட்ட குடியேற்றத்திட்டத்தில் உருவாக்கப்பட்ட 44 கிராமங்களில் ஆறு கிராமங்களில் மட்டுமே தமிழர்கள் குடியேற விண்ணப்பித்திருந்தனர். இதன் காரணமாகவே எஞ்சிய 38 கிராமங்களும் சிங்களவருக்கு வளங்கப்பட்டது. ஆனால் இந்த உண்மைகள் எமது வரலாறுகளில் மறைக்கப்பட்டிருக்கின்றன. நீர்வளம் குறைவாக இருந்த பல ஏக்கர் கணக்கான நெற்காணிகள் இந்த குடியேற்றத்திட்டத்தின் காரணமாக பசுமைமிகு தரைகளாக மாறின. இந்த நிர்வளங்களல் கால்வாய்த் திட்டங்களினால் குடியேற்றத்திட்டங்களில் அண்டிவாழ்ந்த தமிழர்களது நெற்காணிகளும் நீhப்பாசன வசதி பெற்றன. இந்த உண்மை நிலைகளை கவனத்தில் கொள்ளாமல் தமிழ்இ தமிழன்இ தமிழ் பிரதேசம் என்று இனவெறியைக் கிளறுகின்ற நடவடிக்கைகளையே யாழ்ப்பாணத் தலைமைகள் செய்தன.

இதேபோன்றே திருகோணமலையில் இடம்பெற்ற கந்தளாய்க் குடியேற்றத்திட்டத்தையும் தமக்கு வாய்ப்பாக திரித்து தமிழரசுக் கட்சியினர் அரசியலாக்கினர்.

மலையக மக்களின் வாக்குரிமைப் பிரச்சனைகள் மீதும் கிழக்கிலங்கை மக்களது குடியேற்றப் பிரச்சனை மீதும் எவ்வளவு தூரத்திற்கு யாழ்ப்பாண சமூகம் அக்கறை காட்டியதென்கின்ற வேதனைக்குரிய செய்தியே இத்தோல்வி மூலம் வெளியானது. சுயபாஷைகளுக்கு அரச அந்தஸ்து கோருகின்ற குரல்கள் சமூகத்தின் கீழ்தட்டு மக்களிடம் இருந்து ஒலிக்கத்தொடங்கின. “உண்மையில் ஆங்கிலத்தை அரசமொழி ஸ்தானத்தில் இருந்து நீக்கி சிங்கள-தமிழ் மொழிகளை அரசமொழிகளாக மாற்ற வேண்டும் என்கின்ற இயக்கம் 1920 ஆம் ஆண்டிலேயே ஆரம்பித்துவிட்டது.”

இந்த சுயபாஷைகளை அரசகரும மொழியாக்குவதில் தடையாக இருந்தவர்கள் யாரென்பதை இனவாத கூச்சல்களில் இருந்து வெளியேவந்து இனியாவது எமது மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். ஜீ.கே.டபிள்யு.பெரேராஇ ஜே.ஆர்.ஜெயவர்த்தனாஇ எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்கா போன்ற தலைவர் முன்வைத்த சுதேசமொழிக்கொள்கைகளுக்கு பலரும் ஆதரவு தெரிவித்திருந்தனர். மட்டக்களப்பு நல்லையாஇ டபிள்யு.டபிள்யு.கன்னங்கரா. தஹாநாயக்காஇ டி.பி.ஜாயாஇ மட்டக்களப்பு எஸ்.ஓ.கனகரெட்னம் போன்ற மூவினத்தைச் சேர்ந்த தலைவர்களும் சுயபாசைகளை அரசகருமமொழியாக்குவதில் அக்கறைகாட்டி அரசசபையில் உரையாற்றினர். இவர்கள் எல்லாம் ஒருமித்து ஆதரவு தருகையில் பெருந்தலைவர்இ தமிழ்காங்கிரஸ்இ தமிழீழம் என்று புரளிகளைக் கிளப்பி தமிழ் மக்களின் தலைவனாக வலம் வந்த ஜீ.ஜீ.பொன்னம்பலம் ஆங்கிலத்தைக் காப்பதற்காக சுயபாஷைகளை எதிர்த்தமை எப்படிப்பட்ட துரோகம்?

இந்த துரோகத்தின் பின்னால் மறைந்திருந்த சக்திகள் யார்? யாழ்ப்பாண உயர்வர்க்கத்தினுடைய ஆங்கில ஆதிக்கம் இலங்கை எங்கும் தக்கவைக்கப்படுவதற்கேற்ப “ஆங்கிலம் மட்டும்” என்கின்ற மொழிக்கொள்கையில் விடாபிடியாய் நின்ற ஜீ.ஜீ.பொன்னம்பலம் போன்றவர்கள் எப்படி அடிமட்ட மக்களினதும்இ கிழக்கு மாகாண மக்களினதும் தலைவர்களாய் இருக்கமுடியும்?ஆங்கில பிடியில் இருந்து மாறவிரும்பாத தமிழ்காங்கிரஸ் போன்ற கட்சிகளின் வெகுஜன விரோதப் போக்குகளே காலப்போக்கில் தென்னிலங்கையில் சுடர்விட்ட சுயபாஷைகளுக்கான இயக்கத்தை தமிழை விடுத்து தனிச்சிங்களத்துக்கான இயக்கமாக குறுக்கிவிடும் வாய்ப்புகளை வழங்கியது.

1956 ஆம் ஆண்டு சிங்கள அரசகரும மொழிச்சட்டம்.

1920களில் இருந்து இலங்கையில் உருவான சுயபாஷைகளுக்கான இயக்கம் காலப்போக்கில் ஏற்பட்ட சமூகஇ மதஇ பொருளாதாரஇ கலாச்சார நெருக்கடிகளினாலும்இ தேர்தல் அரசியலை நோக்கிய தமிழ் – சிங்கள அரசியல்வாதிகளின் குறுகிய நலன்களினாலும் உருமாறி சிங்கள அரசகருமமொழிச்சட்டம் ஆக குறுக்கப்பட்டு இறுதியில் (1956இல்) நிறைவேற்றப்பட்டது. இதனையே தனிச்சிங்களச்சட்டம் என திரிவுபடுத்தி சிங்கள பேரினவாதத்தின் செயற்பாடாக தமிழ் தலைமைகள் இன்றுவரை வர்ணித்து வருகின்றன. இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டமையை தமிழர்கள் எதிர்கொண்ட விதம் தொடர்ந்துவந்த இலங்கை அரசியலில் பாரிய விளைவுகளுக்கும் மாற்றங்களுக்கும் இட்டுச்சென்றது.

இந்தச் சட்டத்தினூடு இலங்கையின் அரசகரும மொழியாக சிங்களம் பிரகடனப்படுத்தப்பட்டது உண்மைதான். அது காலணித்துவ மொழியான ஆங்கிலத்தை அகற்றும் ஒரு செயற்பாட்டின் இறுதிக்கட்டம் எனும் வகையில் சாதகமான ஒன்றாகவும் சிறுபான்மைமொழியான தமிழையும் அதே தரத்துடன் அரசகரும மொழியாக்கத் தவறியது எனும் வகையில் பெருந்தன்மையற்ற ஒன்றாகவும் மட்டுமே பார்க்கப்பட்டிருக்க வேண்டும்;. தமிழ் மக்களின் நலனில் அக்கறை கொண்டவர்கள் என்று சொல்லப்பட்டவர்கள் தமிழுக்கும் சம அந்தஸ்து கேட்டு போராட முன்வந்தது நியாயமானதொன்று. ஆனால் தமிழ் பேசும் பகுதிகளில் இந்தப் போராட்டம் நியாயமான வடிவங்களில் முன்னெடுக்கப்படவில்லை. “தனிச்சிங்களச் சட்டம்” என்று திரும்பத் திரும்ப பிரச்சாரப்படுத்தியதன் மூலம் இச்சட்டமானது தமிழ்மொழியை அழித்து சிங்களத்தை மட்டும் இலங்கைவாழ் மக்கள் எல்லோர்மீதும் திணிக்கும் ஒரு சட்டமாக உருவகிக்கப்பட்டது. இந்த உருவகிப்பானது சிங்களப் பெரும்பான்மை இனம்மீது ஒரு அச்ச உணர்வை தமிழ் பேசும் மக்கள் எனும் வகையில் கிழக்கு மாகாணத்தமிழர்களிடமும் ஏற்படுத்தியதில் வியப்பு ஏதும் இல்லை.

இதற்கு வசதியாக வடகிழக்குப் பிராந்தியத்துக்கு வெளியே அரச உத்தியோகத்தர்களாய் இருந்த பல யாழ்ப்;பாணத்தவர்கள் இடைநிறுத்தப்பட்டமை அமைந்தது. கிழக்கு மாகாணத்தில் இருந்து வெகுசிலரே இச்சட்டத்தினால் (தென்னிலங்கைப் பகுதியில்) வேலைவாய்ப்பினை இழந்தனர். இது எப்படியிருந்தபோதும் ஆங்கிலம் தெரியாத சிங்கள பாமர மக்களிடையே பணிபுரிகின்ற அரச உத்தியோகஸ்தர்கள் அம்மக்களுக்குப் புரியக்கூடிய சிங்கள மொழியில் அடிப்படை அறிவு பெற்றிருக்க வேண்டும் என கேட்கப்படுவதில் எவ்வித தவறும் இருக்கமுடியாது. இதையே தமிழ் பகுதியில் பணிபுரிந்தவர்களிடமும் சிங்களத்தைக் கற்கக் நிர்ப்பந்தித்திருந்தால் அதுவே இனவாதமாக இருக்கமுடியும். அதைவிடுத்து பொத்தாம் பொதுவாக “சிங்களம் தெரியாவிட்டால் அரசபணி புரியமுடியாது” என்கின்ற நிலை ஏற்பட்டுவிட்டதாக திரிபுபடுத்தல் பிரச்சாரங்களை தமிழரசுக்கட்சி மேற்கொண்டது. இப்படியான ஒரு மாயையை தமிழ் மக்களிடையே பரப்பும் விதமான ஒருபிரச்சாரம் அதிக கல்விபெறாது தமது கிராமிய பொருளாதார வாழ்வினில் நிம்மதியுடன் வாழ்ந்து வந்த கிழக்கிலங்கை மக்களிடத்தில் “கலவர” மனநிலையை உருவாக்கியது. தமிழ் மொழியின் எதிர்காலப் பாதுகாப்புச் சம்பந்தமாக பாரிய ஆபத்தொன்;றை எதிர்கொள்ள வேண்டிய நிலை இருப்பதாக யாழ்ப்பாணத்து அரசியல்வாதிகள் மேற்கொண்ட பிரச்சார யுத்தி கிழக்கிலங்கை மக்களை வெகுவாக அச்சமடையச் செய்தது. சிங்களக் கிராமங்களைக் கொண்ட நீண்ட எல்லைப்புறங்களை மிக அண்மித்ததாக உடைய கிழக்கிலங்கை மக்களுக்கு தமது எதிர்காலப் பாதுகாப்பு என்ன என்கின்ற கேள்விகள் எழுந்தது. இதன்காரணமாக தமது பாதுகாப்பு உணர்வினைக் கருத்தில் கொண்டு செயற்படும் பெரும்பான்மை தமிழர்களைக் கொண்ட வடமாகாணத்து அரசியலுடன் இணைந்து கலப்பதே ஒரே வழியென கிழக்கிலங்கை எங்கும் பொதுசன மனநிலையொன்றை தோற்றுவிப்பதில் யாழ்ப்பாணத்து அரசியல்வாதிகள் வெற்றி கண்டனர்.

ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் “கொழும்பு” அரசியலை நிராகரித்து வடகிழக்கின் முலை முடுக்கு எங்கும் தமிழ் அரசியலை நுழைத்தவர் எனும் வகையில் 1956 ஆம் ஆண்டுத் தேர்தலில் சா.ஜே.வே.செல்வநாயகம் பெரு பெற்றியைப் பெற்றுக்கொண்டு தமிழ் மக்களுக்கான தலைமையை ஏற்றார்.ஆனால் 1956 ஆம் ஆண்டு வெற்றிக்குப் பின்னர் இந்த செல்வநாயகம் எனும் தலைமையும் சரிஇ தமிழரசுக் கட்சியும் சரி நடந்துகொண்ட விதம் கடுமையான விமர்சனத்துக்குரியது. அதாவது 1957 ஆண்டு கொண்டுவரப்பட்ட நெற்காணிச் சட்டத்தினை எதிர்த்தமைஇ 1957 இல் நிறைவேற்றப்பட்ட பண்டா – செல்வா ஒப்பந்தத்தில் மலையக மக்களை காட்டிக்கொடுத்து துரோகம் இழைத்தமை, 1965 ஆம் ஆண்டில் யு.என்.பி. அரசுடன் அமைச்சுப் பதவிகளுக்காக இணைந்து விலைபோனமை போன்ற வரலாற்றின் நிகழ்வுகள் இவர்களின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தப் போதுமானவை.

1965 ஆம் ஆண்டு தேர்தல் வரை தமிழரசுக்கட்சியின் “ஸ்ரண்ட்” அரசியல் வடகிழக்குப் பகுதிகளில் அதிகமாகவே களைகட்டியது. சத்தியாக்கிரகப் போராட்டம் (1961)இ தமிழரசு தபால் சேவைப் போராட்டம் (1961)இ 1964 இல் சிறிமா சாஸ்திரி ஒப்பந்த எதிர்ப்புப் போராட்டம் என்று பெரும் கலக சூழல் ஒன்றை வடகிழக்குப் பகுதிகளில் இவர்கள் ஏற்படுத்தினர். ஆனால் இவை அனைத்துமே இந்த போராட்டங்களில் மையங்கொண்டிருந்த அரசியல் கோரிக்கைகளைவிட தேர்தலை ஒட்டிய வாக்கு சேகரிப்பு நாடகங்களாகவே உண்மையில் இருந்தன. ஒவ்வொரு தேர்தலின் பின்னரும் இப்போராட்டங்கள் எல்லாம் மூட்டை கட்டப்பட்டு ஒரு மூலைக்குள் போடப்படும். அதைத்தொடர்ந்து அமைச்சு பதிவிகளுக்காகவும்இ தாம் சார்ந்த வர்க்கத்தினரின் சலுகைகளைப் பெற்றுக்கொள்வதற்காகவும் யு.என்.பி. அரசுடன் கொஞ்சுக் குலாவி வந்ததன் மூலம் இதனை அறிந்துகொள்ள முடியும். 1965 இல் பெற்றுக்கொள்ளப்பட்ட வெற்றியை வைத்து யு.என்.பி. இன் சார்பில் அரசமைக்கவிருந்த டட்லி சேனநாயக்காவுடன் தமது சலுகைகளை உறுதித் படுத்திக்கொள்வதற்காக இரவிரவாக ரகசியப் பேச்சுக்களில் தமிழ் தலைவர்கள் ஈடுபட்டனர். இதன்பலனாக கொழும்பில் செனட்டராக வாழ்ந்து வந்த திருச்செல்வம் என்பவரை அமைச்சராக்குவதற்காக டட்லி சேனநாயக்காவிடம் இருந்து உறுதி வாங்கிக் கொண்டனர். அதற்கு கைமாறாக யு.என்.பி. அரசு அமைவதற்கு தமிழரசுக் கட்சி எம.பிக்கள் ஆதரவு தெரிவிப்பதற்கு உறுதி கொடுத்தனர். கேவலம் தமது ஆதரவு சக்திகாளாய் இருந்த கொழும்பு கனவான் ஒருவரை அமைச்சராக்குவதற்காக தமிழ் மக்களை உணர்ச்சி பீறிட வைத்து தெருவில் இறக்கி சத்தியாக்கிரகம் செய்தவர்கள் அனைத்தையும் கைவிட்டனர்.

அதுவரைகாலமும் இவர்கள் சொல்லிவந்த கிழக்குமாகாண விவசாயிகளது குடியேற்றப் பிரச்சனையும் கிடப்பிலே போட்டனர். இதற்கு அப்பால் கிழக்கில் வாழ்ந்த லட்சக்கணக்கான விவசாயிகளின் நீர்ப்பாசனப் பிரச்சனைகளையோஇ நீண்ட கடல்பரப்பினைக் கொண்ட கிழக்கு மாகாண கடல் தொழிலாளிகளின் மீன்பிடித்துறைசார்ந்த பிரச்சனைகளையோ பின்தங்கிய நிலையில் இருந்த கிழக்கு மகாண தமிழ் முஸ்லிம் மக்களின் கல்விநிலை குறித்த அக்கறைகளையோ இவர்கள் தமது அரசியல் கட்சியின் கொள்கைகளுக்கான அடிப்படை விசயங்களாகக் கொள்ளவில்லை. மக்களின் தேவைகளை முன்னிறுத்தி அதற்காகப் போராடுவதினூடாக தலைமை வகிக்கும் வாய்ப்பினை பெற்றுக்கொள்வதைவிட ஹர்த்தால்இ வன்முறைஇ கிளர்ச்சி போன்ற குறுக்கு வழியினூடு தலைவர்கள் ஆவதிலேயே தமிழரசுக்கட்சியினர் முனைப்புக் காட்டினர்.1965 – 1970 ஆம் ஆண்டுவரை எவ்வித சலனமும் இன்றி அமைதியாக யு.என்.பி. ஆட்சியில் பங்கெடுத்துவந்த தமிழரசுக்கட்சியினர் 1970 ஆண்டில் கிடைத்த தோல்வியைத் தொடர்ந்தே இந்த வன்முறை வழிகளைத் திட்டமிட்ட ரீதியில் அதிகரித்து வந்திருப்பதனைக் காணலாம்.

மேற்படி எதிர்ப்பு நடவடிக்கைகளின் ஊடாக 1977 ஆம் ஆண்டுத் தேர்தல்வரை அரச பிரதிநிதிகளையும் அரசபடைகளையும் எதிர்ப்பதுதான் தமிழ் மக்களின் கடமை எனும் புதிய மரபொன்றினை தமிழர்விடுதலைக் கூட்டணி தோற்றுவித்தது. அதுமட்டுமன்றி சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்த தமிழ் பிரதிநிதிகளை தமிழ் மக்களின் துரோகி என பட்டம் சூட்டிவிடுவது என்பதினையும் வழக்கமாகக்கொண்டனர். இதனூடாக தமது அரசியல் எதிரிகளை எதிர்கொண்டு வெல்லுவது என்பதைவிட அழித்து வெல்லும் குறுக்கு வழியை நோக்கி தமிழர்விடுதலைக் கூட்டணியினர் தமது கவனத்தைத் திருப்பினர். அமைச்சர்களுக்கு கறுப்புக்கொடி காட்டுதல்இ குடியரசுத் தினத்தை பகிஸ்கரித்தல் என்பதெல்லாம் தனி ஈழம் ஒன்றை அமைப்பதற்கான முன்னோடி நிகழ்வுகளாக மக்கள் உணரவைக்கப்பட்டனர். ஆனால் தமிழரசுக்கட்சியினர் யு.என்.பி. ஆட்சியில் இருந்த 1965 – 1970 காலப்பகுதியில் தாமும் அந்த அரசில் பங்கெடுத்திருந்தனர். இந்தவேளைகளில் இத்தகைய அரச எதிர்ப்பு நடவடிக்கைகள் ஒன்றில் கூட ஈடுபடாதிருந்தனர். ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினம் அனுஸ்டிக்கப்பட்டதை ஏன் அதை பகிஸ்கரிக்கக் கோரவில்லை? ஏன் ஒரு சந்தர்ப்பத்தில் கூட கிழக்கிலங்கையில் தமிழரசுக்கட்சிக்காக உழைத்த தலைவர்களுக்கு அமைச்சுப்பதவி பெறும் அந்த வாய்ப்புகள் வழங்கப்படவில்லை? 1952 ஆம் ஆண்டுத் தேர்தலில் வடமாகாணத்தில் ஒருவரைத் தவிர பெரும்தலைவர்கள் எல்லோரும் படுதோல்வி அடைந்த நிலையில் திருகோணமலையில் தமிழரசுக்கட்சிக்கு பெரு வெற்றியீட்டிக் கொடுத்த இராஜவரோதயம் அவர்களுக்கு என் அந்த வாய்ப்புக்கொடுக்கப்படவில்லை? செனட்சபை உறுப்பினர்களான மட்டக்களப்பு கல்விமான் கனகரெட்னம் அவர்களுக்கு ஏன் அந்த வாய்ப்பு வழங்கப்படவில்லை. கொழும்புச் சீமான் திருச்செல்வத்திற்கு பெற்றுக்கொடுக்கப்ட்ட உள்ளுராட்சி பதவி 1956 ஆம் ஆண்டில் இருந்து தமிழ் மக்களின் தனிப்பெரும் தலைவனாக தொடர்ந்து வெற்றியீட்டி வந்த சொல்லின் செல்வர் இராஜதுரைக்கு ஏன் வழங்கப்பட்டிருக்கக் கூடாது? தமிழரசுக்கட்சியின் தலைமை கதிரையைக்கூட அலங்கரித்த பெருந்தலைவரும் தனித்தமிழ் தொகுதியான பட்டிருப்பின் பிரதிநிதியுமான மு.இராசமாணிக்கம் அவர்கள் அமைச்சுப் பதவிக்கு தகுதி அற்றவரா? என்கின்ற கேள்விகள் அன்று இல்லாவிடினும் இன்று கிழக்கிலங்கை மக்களிடையே கிளறப்படத் தொடங்கியுள்ளன. தமிழ் தமிழ் என்று கிழக்கிலங்கை மக்களை ஏமாற்றிக்கொண்டு அவர்களின் ஆதரவினால் வருகின்ற எல்லாவித அரசியல் இலாபங்களையும் வடக்குக்குள் மட்டுமே சுருட்டிக்கொள்ளும் தமிழரசுக்கட்சியினரின் கபடத்தனங்களை இன்று கிழக்கிலங்கை மக்கள் உணரத் தலைப்பட்டுள்ளார்கள்.

இதே போன்று 1971 ஆம் அண்டின் கல்வி தரப்படுத்தல் என்கிற சட்டத்தினூடு யாழ்ப்பாணம் எதிர்கொண்ட பாதிப்புகளை தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பாரிய பிரச்சனைகளாக பிரச்சாரப்படுத்தி அதில் வெற்றியும்கண்டனர். ஆனால் இந்தப் பிரச்சனையின் உள்நோக்கம் யாழ்-அதிகார-வர்க்கத்தின் ஆதிக்கத்தை நிலைநிறுத்திக்கொள்ளும் நோக்கு மட்டுமேயன்றி தமிழ் மக்களின் நலன் அல்ல.
இனிமேலாவது அம்பலத்திற்கு வரவேண்டிய ஒன்று.1975 ஆம் ஆண்டின் இலங்கையின் சனத்தொகை கணக்கெடுப்பின் படி சிங்களவர்கள் 72 வீதம்மாகவும் இலங்கைத் தமிழர்கள் 11.2 வீதம் மாகவும் இந்தியத் தமிழர்கள் 9.3 வீதம் மாகவும்முஸ்லிம்கள் 7.1 வீதம் மாகவும் ஏனையோர் 0.5 வீதமாகவும் காணப்பட்டனர். இதேவேளை 1970ஆம்ஆண்டில் பல்கலைக்கழக அனுமதியை நோக்கும் இடத்து 40.8 வீதத்தினை பொறியியல்துறையிலும்இ 35 வீதத்தினை விஞ்ஞானத்துறையிலும்இ 50 வீதத்தினை மருத்துவத் துறையிலும்இலங்கைத்தமிழர்கள் பெற்றிருந்தனர். ஒரு நாட்டின் சனத்தொகையில் 11 வீதத்தினை மடடுமேகொண்டுள்ள ஒரு இனம் அந்நாட்டின் பல்கலைக்கழக அனுமதிகளில் மேற்படி அதீத இடங்களைஅனுபவித்து வருவதை ஏனைய சமூகங்கள் அpங்கீகரிக்க வேண்டும் என்று கோருவது எவ்வகையிலும்நியாயமானதாகாது.

இந்த “மாவட்ட ரீதியான கல்வி தரப்படுத்தல்” என்பதன் உள்ளீடு என்ன? கல்வி வாய்ப்புகள் மீதான ஒதுக்கீடு என்பதற்கப்பால் ஏதுமில்லை. இந்தியாவில் தங்களுக்கான தகுதிகளை பெற்றுக்கொள்ள வாய்ப்புகள் மறுக்கப்பட்டிருந்த தலித்துகளுக்காக வழங்கப்படும்இட ஒதுக்கீடுகளுக்கு ஒப்பானது இந்த தரப்படுத்தல் எனலாம். இலங்கையில் கல்விரீதியாக வளர்ச்சியடைந்த கம்பஹாஇ கொழும்புஇ யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளின் மாணவர்கள் மட்டுமே பல்கலைக்கழக வாய்ப்புகளை அதிகம் பெற்றுக் கொண்டிருந்தனர். அன்றைய கணிப்பின்படி இருபத்திரெண்டு மாவட்டங்களில் ஏனையவற்றில் பெரும்பாலானவை பல்கலைக்கழகத்திற்கான புகுமுக வாய்ப்புகளை பெறவாய்ப்பின்றி இருந்தனர். இன்னிலையில் இலங்கைத் தீவின் சமத்துவத்திற்கான திட்டங்களில் ஒன்றாகவே இத்திட்டம்முன்னெடுக்கப்பட்டது. பின்தங்கிய மாவட்டங்களுக்கு முடிந்தவரை அதிக இடங்களை பல்கலைக்கழகங்களில் பெற்றுக்கொடுப்பதற்காக இத்திட்டம் பயன்பட்டது. அதுவரை
பெரும்பகுதி பல்கலைக்கழக இடங்களை அபகரித்து வந்த மேட்டுக்குடிகளுக்கும், வாய்ப்புகள்கிடைக்காது அவ்விடங்களை நழுவ விட்டுவந்த அடித்தட்டு மக்களுக்கும் இருந்த ஒரேவித
அளவுகோல் நிறுத்தப்பட்டது. மேட்டுக்குடிகளை அதிகம் கொண்டிருந்த வாய்ப்புகள் கூடிய
மாவட்டங்கள் அதிக எல்லைப் புள்ளிகளை பெறவேண்டும் என்றும் பின்தங்கிய (பிற்படுத்தப்பட்ட) பிரதேசங்களடங்கிய மாவட்டங்கள் என இனங்காணப்பட்டவை குறைந்த எல்லை புள்ளிகளுடன் பல்கலைக்கழக வாய்ப்புகளை பெறலாம் என்பதாக தரப்படுத்தப்பட்டன. ஓவ்வொரு மாவட்டத்திலும் தரங்களுக்கேற்ப குறைந்த பட்ச தகுதிக்கான எல்லை புள்ளிகள் வௌ;வேறாக நிர்ணயிக்கப்பட்டன.
இதன் பின்னர் குறிப்பாக யாழ்ப்பாணம்இ கம்பஹாஇ கொழும்பு போன்ற மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் பெற்றுவந்த அதிகப்படியான இடங்களை இழந்தனர். அதேவேளை அவ்விடங்கள் பின்தங்கிய மாவட்ட மாணவர்களுக்கு கிடைப்பது ஏதுவாயிற்று. குறிப்பாக தமிழர்கள் செறிந்து வாழும் மாவட்டங்களான மன்னார்இ வவுனியாஇ முல்லைத்தீவுஇ திருகோணமலைஇ மட்டக்களப்புஇ அம்பாறை என்பன (கவனிக்க இவையனைத்தும் தமிழ்தேசியம் கட்டமைத்த புவியியல் எல்லைக்குள் வருபவை) பயனடைந்தன. அத்தோடு இந்திய வம்சாவளியினரான மலையக தோட்டத் தொழிலாளர்கள் செறிந்து வாழும் பகுதிகளான பதுளை, நுவெரெலியாஇ மாத்தளை போன்ற பிரதேசங்களின் மாணவர் சமுதாயம் முதன் முதலாக பல்கலைக்கழக வாசல்களை மிதிக்கும் வாய்ப்புகளை இந்த மாவட்டரீதியான தரப்படுத்தலே வழங்கியது. இதுபோன்றுதான் விவசாயிகளையும் மீனவர்களையும் அதிகம் கொண்டிருந்த அம்பாந்தோட்டை, மாத்தறை, மொனறாகலை பீட்டர் கெனமன், என். எம். பெரேரா, கொல்வின் ஆர்.டி. சில்வா போன்ற இடதுசாரிகள் இச்சட்டத்தை ஆதரித்தனர் என்பதை கவனிக்க தவறக்கூடாது அதுமட்டுமல்ல இச்சட்டம் கொண்டுவரப்படவேண்டும் என அரசிற்கு அழுத்தம் கொடுத்ததிலும் இவ் இடதுசாரிகளின் பங்கு அதிகமாயிருந்ததை அறிய முடிகிறது.இந்த கல்வி தரப்படுத்தல் அமுலான பின்பு அதுவரை முழு இலங்கைக்குமான உயர்கல்வி வாய்ப்புகளை தமக்குள் பங்கிட்டுக்கொண்டிருந்த மேட்டுக்குடிகளின் மாவட்டங்கள் பாதிப்படைந்தது உண்மை.

மாவட்ட ரீதியான தரப்படுத்தலும்இ ஒதுக்கீடும் 1974 இல் அறிமுகப்படுத்தப்பட்ட பின்பும் இது இனரீதியாகவோஇ மொழிரீதியாகவோ தமிழர்களை மட்டும் பாதித்ததாக சொல்வது பிழை இதன் பாதிப்பை எதிர்கொண்ட உயர்வர்க்கத்தினரில் தமிழ் மேட்டுக்குடியினரும் அடங்குவர். அதேவேளை இதனால் லாபமடைந்தவர்கள் சிங்களவர்கள் மட்டுமல்ல அறிக்கையின் முன்பகுதியில் குறிப்பிட்டதுபோல் தமிழ் பேசும் அதிக மாவட்டங்கள் இதனால் பயனடைந்தன.கம்யூனிச விரோதமும் உயர்சாதித் தடிப்பும் கொண்டியங்கிய தமிழரசுக் கட்சியினர் 1970 ம் ஆண்டுத் தேர்தலில் படுதோல்வியடைந்தனர். இடதுசாரிகளது சாதி எதிர்ப்புப் போராட்டங்களின்போது தமிழரசுக்கட்சியினரது காட்டிக் கொடுப்புகள் அத் தேர்தலில்வடபகுதியில் அவர்களை படுதோல்விக்கு தள்ளியது. தமிழ் தளபதி என்றும்இநல்லூர் சிங்கம்என்றும் அழைக்கப்பட்ட பெரும் தலைவர்கள் மக்களிடையே அம்பலமாகினர். இன உணர்வுகளை கிளறிதமிழ் தேசிய வெறிய+ட்டுவது மட்டுமே வாக்கு வேட்டைகளுக்கு உகந்த ஒரே வழியாக எஞ்சிநின்றது. யாழ் மத்தியதர வர்க்கத்தினரது அபிலாசைகள் ஒரு தமிழினத்தின் அரசியல் அபிலாசைகளாக முன்னிறுத்தப்பட்டது மட்டுமன்றி யாருக்கு இச்சட்டம் ஒதுக்கீடுகளையும்இ வாய்ப்புகளை வழங்கியதோ அவர்களைக் கொண்டே அதனை எதிர்க்கும் வண்ணம் கிழக்கிலங்கை தமிழர்கள் திசைதிருப்பப்பட்டனர். தாம் ஆதரிக்க வேண்டிய சட்டத்தை எதிர்க்கும்படி யாழ் தவிர்ந்த ஏனைய ஏழு மாவட்டத் தமிழர்களும் ஏமாற்றப்பட்டது மிகவும் பரிதாபமான அதிசயம்.

இதே வேளை யாழ்ப்பாணத்துக்கு வெளியே ஆசிரியர்களாக கடமை புரிந்துவந்த யாழ் மத்தியதர வர்க்க உத்தியோகத்தர்கள் தமது பரம்பரையினரை மன்னார்இ வவுனியாஇ முல்லைத்தீவு, திருகோணமலைஇ அம்பாறைஇ மட்டக்களப்பு போன்ற பகுதிககளில் உள்ள பாடசாலைகளில் பதியச் செய்து அங்கே பரீட்சை எடுக்க வைத்து தாம் இழந்துபோன வாய்ப்புகளை மீண்டும் பெற்றுக்கொண்டனர். ஏழ்மையான மாவட்டங்களுக்கு இலங்கை அரசாங்கம் வழங்கிய ஒதுக்கீடுகளின் ஊடாக கிடைக்கப்பெற்ற பல்கலைக்கழக இடங்கள் யாழ்ப்பாண ஆசிரியர்களினால் களவாடப்பட்ட உண்மைகள் வெட்கத்துக்குரியன.

வட்டுக்கோட்டை

கல்விதரப்படுத்தலை தமக்கு சாதகமாக பயன்படுத்திய கூட்டணியினர் தமது கோரிக்கைகளுக்கு பலன் சேர்க்கும் நடவடிக்கைகளாக ஒரு மாநாட்டை நடாத்த தீர்மனித்தனர். இம்மநாட்டில் வடகிழக்கை இணைத்து தமிழீழ தாயகத்தை வென்றெடுப்பதே நோக்கம் என தீhமானம் நிறைவேற்ற ஏற்பாடுகள் ஆகியிருந்தது. கிழக்கில் இருந்தும் மலையகத்தில் இருந்தும் சென்ற தலைமைகள் இக்கோரிக்கையின் பொருத்தமின்மையை சுட்டிக்காட்ட முற்பட்ட வேளையில் அவை கருத்தில் கொள்ளப்படவில்லை. கே.டபிள்யு. தேவநாயகம்இ சௌ.தொண்டமான் போன்றோர் தமது பிரதேசங்கள் குறித்து எடுத்துக்கூறிய நியாயங்களை யாழ்ப்பாணத் தலைமைகள் கருத்தில் எடுக்கவில்லை. மாற்றுக்கருத்துக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் வட்டுக்கோட்டைத் தீர்மானம் 14-மே-1976 இல் நிறைவேற்றப்பட்டது.

1977 ஆம் ஆண்டு பாராளுமன்ற பொதுத்தேர்தலும் இராசதுரையை ஓரங்கட்டிய அமிரும்எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தின் மறைவிற்குப் பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவராக வந்திருக்க வேண்டியவர் செ.இராசதுரையாகும். இவர் 1956 ஆம் ஆண்டில் இருந்து தொடர்ச்சியான மக்கள் ஆதரவுடன் பாராளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்பட்டு வந்திருந்தவர். ஆனால் அமிர்தலிங்கம் அவர்களோ தனது சொந்தத் தொகுதி மக்களாலேயே 1970 ஆண்டுத் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டவர். இந்த நிலையில் தமிழர்விடுதலைக் கூட்டணியின் தலைவராக அமிர்தலிங்கம் தெரிவுசெய்யப்பட்டமை யாழ்ப்பாணத்துக்கு வெளியே தமிழ்த் தலைமைகளின் பதவி போய்விடக்கூடாது என்கின்ற பிரதேச மேலாதிக்க தன்மை வாய்ந்தது எனக் கூறுவதில் என்ன தவறு இருக்கமுடியும். 1977 ஆம் ஆண்டு தேர்தலில் தனது வெற்றி வாய்ப்பில் சந்தேகம் கொண்ட அமிர்தலிங்கம் இறந்துபோன செல்வநாயகத்தின் அனுதாப வாக்குகளைப் பெற காங்கேசன் துறைத் தொகுதிக்கு தாவினார். அதுமட்டுமன்றி மட்டக்களப்பில் இராசதுரையை தோற்கச் செய்வதற்கான சதி முயற்சிகள் பலவழிகளிலும் மேற்கொள்ளப்பட்டன. ஒரே கட்சிக்குள் நடந்த இந்த குழிபறிப்புகள் கிழக்கில் இருந்து ஒரு தலைமை உருவாகி விடக்கூடாது என்கின்ற கபட நோக்குக் கொண்டவையாகும். காசிஆனந்தனையும், மட்டக்களப்பு தேர்தல் களத்தில் தமிழரசுக் கட்சியின் சார்பில் இறக்கி போட்டியிட வைத்தன் மூலம் தமிழர்களது வாக்குகளைப் பிரிப்பதும் அதனூடாக இராசதுரையை தோற்கடிப்பதும் மிகத் திட்டமிடப்பட்ட முறையில் அமிர்தலிங்கத்தினால் நிறைவேற்றப்பட்டது என்கின்ற உண்மை மட்டக்களப்பைப் பொறுத்தவரையில் ரகசியமானதொன்றல்ல. காசியானந்தனுக்கு சார்பாக தேர்தல் மேடைகளில் பிரச்சாரம் செய்வதற்கென ஈழவேந்தன், கோவை மகேசன், மாவை சேனாதிராசா போன்றோரெல்லாம் யாழ்ப்பாணத்தில் இருந்து வந்து மட்டக்களப்பில் முகாமிட்டிருந்தனர். ஆனாலும் யாழ்;ப்பாண சூதில் அகப்பட்ட காசியானந்தனை மட்டக்களப்பு மக்கள் படுதோல்வியடையச் செய்தனர். வழமைபோன்றே 1977 ஆம் ஆண்டுத் தேர்தலிலும் மட்டக்களப்பில் இருந்து இராசதுரை பாராளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்பட்டார். திட்டமிடப்பட்ட வகையில் தம்மை ஓரங்கட்ட எடுக்கப்பட்ட முயற்சிகளை மக்கள் முன் அம்பலப்படுத்தவோ, அதற்காகப் போராடவோ முடியாத நிலையில் யு.என்.பி. அரசாங்கத்தில் சேர்ந்துகொண்டார். இதை பெருந்துரோகம் என்று அமிர்தலிங்கம் உட்பட யாழ்ப்பாணத் தலைமைகள் எல்லாம் கூக்குரலிட்டன. ஆனால் மட்டக்களப்பு மக்களுக்கு இது துரோகமாகப் படவில்லை. இராசதுரை கட்சிமாறிய மறுநாளில் வடகிழக்கு எங்கும் துரோகக் குற்றச் சாட்டுக்களே அள்ளிவீசப்பட்டது. ஆனால் மட்டக்களப்பில் அமைந்திருந்த இராசதுரையின் வீட்டின்மீது ஒரு கல்லெறிகூட விழவில்லை என்பது இந்த அரங்கில் பதிவுசெய்ய விரும்புகிறேன். அதேவேளை இந்தத் தேர்தலை தமிழீழம் பெறுவதற்கான ஆணைகோரும் தேர்தலாக த.வி.கூட்டணியினர் அறிவித்திருந்தனர். உதயசூரியனுக்கு முன்னால் இடப்படுகின்ற ஒவ்வொரு புள்ளடியும் தமிழீழத்துக்கான ஒவ்வொரு ஆணை என பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. ஆனால் கிழக்கில் வாழுகின்ற பல்லின மக்களினதும் அபிலாசைகள் இந்த தமிழீழத்தின் பின்னால் செல்ல விரும்பவில்லையென்பதை தேர்தல் முடிவுகள் எடுத்துக்காட்டியது. கிழக்கு மாகாணத்தின் பல்லினச் சூழல் மட்டும் அல்ல இராசதுரைக்கு எதிராக அரங்கேற்றப்பட்ட யாழ்ப்பாணத்தின் சதியும் இந்தத் தேர்தலில் தமிழ் ஈழத்தை நிராகரித்தே பெரும்பாலான மக்களை வாக்களிக்கச்செய்தது. கிழக்கில் இருந்து 37 சதவீதத்தினர் மட்டுமே சூரியனுக்கு ஆதரவாய் வாக்களித்ததின் ஊடாக மிகத் தெளிவாக தமிழீழத்தை கிழக்கிலங்கை மக்கள் நிராகரித்திருந்தனர். அதுமட்டும் அன்றி அளிக்கப்பட்ட வாக்குகள் கூட சூரியனுக்கே இடப்பட்டிருந்தாலும் யாழ்ப்பாண மேலாதிக்கத்திற்கு எதிரான வாக்குகளாகவே அவை இருந்தன. அந்தவகையில் அவையும்கூட தமிழீழக் கோரிக்கையை நிராகரித்த வாக்குகளாகவே கொள்ளப்படவேண்டும். யாழ்ப்பாணத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மேடைப் பேச்சாளர்கள் ஆதரித்த காசியானந்தனுடைய வீட்டுச் சின்னம் மட்டக்களப்பு மக்களால் தோற்கடிக்கப்பட்டது. அந்தவகையில் கிழக்கு மகாணத்தில் 67 சதவீதத்துக்கும் எதிரான மக்கள் தமிழீழத்தை நிராகரித்திருந்தனர். ஆனாலும் தென்னிலங்கையை பொறுத்தவரையில் மிக முக்கியத்துவம் வாய்ந்த கட்சிகளில் ஒன்றான சி.சு.கட்சி பரந்துபட்ட இலங்கையில் வரலாறு காணாத தோல்வியடைந்தமையினால் த.வி. கூட்டணி பிரதான எதிர்க்கட்சியாகும் அரிய வாய்ப்பைப் பெற்றது. இந்த எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பயன்படுத்தியே 1977 ஆண்டுத் தேர்தல் தமிழீழம் பெறுவதற்கான ஆணையை தமக்குத் தந்துவிட்டதாக த.வி.கூட்டணியினர் இன்றுவரைக் கூறிவருகின்றனர். உண்மையில் இது ஒரு பொய்ப் பிரச்சாரமேயாகும். கிழக்கு மாகாண மக்கள் விரும்பாத கோரிக்கை ஒன்றை அவர்கள் மீது திணித்து அவசியம் அற்ற போர்ச்சூழல் ஒன்றுக்கு அவர்களை இழுத்துவிட்டமை யாழ்ப்பாணத் தலைமைகள் செய்த மாபெரும் வரலாற்றுக் கொடுமையாகும்.

இந்தநிலையில் வடக்கில் தோன்றிய விடுதலை இயக்கங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட இராணு நடவடிக்கைகள் முழுத்தமிழர்களுக்கும் எதிராக திருப்பப்பட்டதன் காரணமாகவே கிழக்கில் இருந்த மக்களும் தவிர்க்கமுடியாமல் அரச எதிர்ப்பினையும் இயக்கங்களை ஆதரிக்க வேண்டிய நிலையினையும் கைக்கொள்ளவேண்டிய நிலைக்குத் தள்ப்பட்டார்கள்.

1983 ன் பின்னர் கிழக்கு மாகாணத்தின் பெரும்பாலோராயிருந்த உழைக்கும் (அடிப்படையிலேயே போர்க்குணாம்சம் கொண்ட) மக்களின் முழுமையான பங்களிப்பு உளப்ப+ர்வமானதாயும் ஒதுங்கி கொள்ளும் மனப்பாங்கற்றதாகவும் மாறியது. குறிப்பாக இந்தியாவில் தமிழ் தீவிரவாத இயக்கங்கள் பயிற்சி முகாம்களை அமைக்கத்தொடங்கிய போது அங்கு பயிற்சிபெற்ற போராளிகளில் கணிசமானோர் கிழக்குமாகாண (தமிழ்இ முஸ்லிம்) இளைஞர்களாக இருந்தார்கள்(14).

1) 1986 இல் புலிகளால் இவ்வியக்கங்கள் தடைசெய்யப்பட்டபோதும் P.டு.ழு.வு போன்ற அமைப்புகளுக்குள் உடைவுகள் ஏற்பட்ட போதும் தமிழகத்தில் இருந்த யாழ்ப்பாணத்து இளைஞர்களுக்கு வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல கிடைத்த வாய்ப்புகள் போல் கிழக்கிலங்கை இளைஞர்களுக்கு கிடைத்திருக்கவில்லை. தமிழகப் பெருவீதிகள் எங்கும் அநாதரவாக அலைந்ததெல்லாம் இந்த கிழக்கு மாகாணத்து இளைஞர்களே.

2) ஆரம்பகாலங்களில் யாழ்ப்பாணத்தை காப்பாற்றுவதிலேயே எல்லா இயக்கங்களும் கவனங்கொண்டதால் கிழக்கு மாகாணம் சிறிலங்கா படைபலங்களின் எல்லாவித ஒடுக்குமுறைகளையும் ஒழுங்கை ஒழுங்கையாக அனுபவிக்க நேர்ந்தது. இதன்காரணமாக ப+சாஇ வெலிக்கடை போன்ற பாரிய தடுப்பு சித்திரவதை முகாம்களில் அடைக்கப்பட்ட இளைஞர்களில் கிழக்குமாகாண இளைஞர்களே ஆயிரக்கணக்கில் காணப்பட்டனர்.

2) கொக்கட்டிசோலை படுகொலை போன்ற சிறிலங்கா இராணுவத்தின் அழித்தொழிப்புகள் பிற்படுத்தப்பட்ட படுவான்கரைக் கிராமங்களான மகிழடித்தீவுஇ முனைக்காடுஇ முதலைக்குடா……. போன்ற கிராமங்களின் அத்தனை இளம் (சுமார் 400 க்கும் மேற்பட்ட) சந்ததியினரையும் அழித்தொழித்தது.

4) மாற்று இயக்கங்களை புலிகள் தடைசெய்தபோது யாழ்ப்பாணத்தில் மாட்டிகொண்டு உயிரிழந்த பல போராளிகள் கிழக்குமாகாணத்தை சேர்ந்தவர்களாகும் இதற்கு “கந்தன் கருணை” படுகொலை நல்ல உதாரணமாகும்.

5) இராணுவத்தினது தாக்குதல்கள் மூர்க்கத்தனமாக இருந்தவேளைகளில் வடமாகாண மக்கள் போல் தப்பியோடி இந்தியாவில் லட்சகணக்கில் தஞ்சம்புகும் வாய்ப்பு கூட புவியியல் ரீதியாக கிழக்கிலங்கை மக்களுக்கு வாய்த்திருக்கவில்லை. அன்றிலிருந்து இன்றுவரை எரியும் கிழக்கிலே வாழ்வை எதிர்கொள்வதே அவர்களின் விதியாயிற்று.

6) 1987 இல் இலங்கை இந்திய ஒப்பந்தத்தை தொடர்ந்து ‘மாகாணசபையை’ புலிகளிடமிருந்து பாதுகாக்க பலவந்தமாக தமிழ்தேசிய இராணுவத்தில் இணைத்;துக்கொள்ளப்பட்ட சிறுவர்கள் கிழக்கிலிருந்தே அதிகம் பிடித்தெடுக்கப்பட்டார்கள். யாழ்ப்பாணம் போன்று வெளிநாடுகளுக்கு ஓடிதப்பும் ‘வாய்ப்பும் வசதியும்’ அவர்களுக்கு இருக்கவில்லை. இதனால் ஐ.P.மு.கு. வெளியேற்றத்தின் பின்னர் புலிகளால் தமிழ் தேசிய இராணுவம் வெற்றிகொள்ளப்பட்டபோது மட்டக்களப்பு (மீன்பாடும்) வாவியெங்கும் நாட்கணக்கில் பிணங்கள் மிதந்தன. இதில் சுமார் 1800 கிழக்கு மாகாண இளைஞர்கள் கொன்றொழிக்கப்பட்டனர்.

7) புலிகளது முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் உக்கிரமானபோது காத்தான்குடிஇ ஏறாவ+ர்இ அழிஞ்சபொத்தானைஇ கிரான்குளம்இ ….. என்று சுமார் 700 வரையான கிழக்கு முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.

இவையனைத்தும் முஸ்லிம்கள் தமிழீழ கோரிக்கையிலிருந்து முழுமையாக வெளியேறும் வரையான கிழக்கு மாகாணத்தின் குறிப்பிடும்படியான விலைகொடுப்புகள் ஆகும். இந்தநேரத்தில் நான் ஒன்றைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் புலிகள் செய்த மேற்படி கொலைகளினாலேயே கிழக்குப் பிரிப்புக்கான கோரிக்கை முன்னெடுக்கப்படுவதாக புலிகள்மீது பழியைப் போட்டுவிட்டு யாழ்ப்பாண மேலாதிக்கத்தின் கடந்தகால வரலாறு முழுவதையும் மூடிமறைக்கின்ற செயல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த படுகொலைகளுக்கு முன்பே முஸ்லிம்கள் மத்தியில் இருந்து தமிழீழத்தின் மீதான வெறுப்பு வெளிக்காட்டப்பட்ட செய்தி பொய்யானதொன்றல்ல. தமிழ் பேசும் மக்கள் எனும் கதையாடலில் இருந்து முஸ்லிம்கள் 1987 ஆம் ஆண்டுதொடக்கம் மெது மெதுவாக வெளியேறத் தொடங்கினர். 1987 ஆண்டு இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் இந்த முஸ்லிம்கள் முழுமையாக ஓரங்கட்டப்பட்டதின் காரணமாக தமக்கான தனித்துவ அரசியல் கோரிக்கைகளை நோக்கி நடைபோடத்தொடங்கினர். காலஞ்சென்ற அஸ்ரப் அவர்களின் முழுமையான ஆளுமை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் அமைப்பினூடு அந்தக் கடமையை முஸ்லிம்களுக்காக செய்ய முன்வந்தது. இன்னிலைமைக்கு புலிகள் மட்டும் காரணமல்ல. இலங்கை இந்திய ஒப்பந்தத்தற்கு உடந்தையாக செயற்பட்ட அனைத்துவித தமிழ் அமைப்புகளுமே பொறுப்பெடுக்க வேண்டும். 1985 ஆம் ஆண்டு மட்டக்களப்பில் உருவான முதலாவது முஸ்லிம் கலவரத்தில் புளொட் முஸ்லிம்களுக்கு எதிராக தமது துப்பாக்கிகளை திருப்பியது. 1987 இல் வீரமுனையில் 22 முஸ்லிம்கள் ரெலோவினது தாக்குதலால் உயிரிழந்தார்கள். இந்திய அமைதிப்படை வெளியேறிய காலங்களில் ரி.என்.ஏ. என அழைக்கப்பட்ட மாகாணசபையை அடிப்படையாகக் கொண்ட தமிழ் இராணுவம் மட்டக்களப்பு அம்பாறை பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கெதிராக பல படுகொலைகளில் ஈடுபட்டிருந்தது. ஆகவே முஸ்லிம்களுக்கெதிரான இந்த நடவடிக்கைள் தனியோர் இயக்கத்தினதோ அல்லது புலிகளினதோ விசேடமான பண்பல்ல என்பதை நாங்கள் புரிந்துகொள்ளப்பட வேண்டும். முஸ்லிம் எதிர்ப்புவாதம் என்பது யாழ்ப்பாணத்தில் வைசவேளாள கருத்தியலில் இருந்து உருவாவதாகும்.முஸ்லிம்களது தனித்துவமான அரசியல் போக்கினை அங்கீகரிக்க மறுத்த புலிகள் முஸ்லிம்களது இருப்பையே அச்சுறுத்தும் செயற்பாடுகளில் இறங்கினர். கிழக்கில் பள்ளிவாசல் படுகொலைகள், முஸ்லிம் கிராமங்கள் மீதான தாக்குதல்கள், வடக்கில் இருந்து ஒரு இலட்சம் முஸ்லிம்கள் துரத்தியடிக்கப்பட்டமை என்று 1990 ஆண்டு பாரியதொரு இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகளில் புலிகள் இறங்கினர். இந்த ஆண்டுதான் புலிகளை ஒரு குறுந்தேசியவாதிகள் என்பதை விட பாஸிஸ்டுகாளாக இனங்காட்டியது. இதன்காரணமாக மொழி ரீதியில் தமிழ் பேசும் மக்களாய் இருந்தபோதும் மத அடையாளத்தைக் கொண்டு முஸ்லிம்களை புலிகள் வேறுபடுத்தினர். இதுவே முஸ்லிம்கள் தம்மை தமிழர்களாய் இருந்தபோதும் முஸ்லிம்கள் எனும் மத அடையாளத்தை முன்னிறுத்திய போராட்டப்பாதையில் செல்வதை துரிதப்படுத்தியது.
இதன்காரணமாக கிழக்குமாகாணத்தில் தமிழ் பேசும் மக்கள் என்று தந்தை செல்வாவினால் பெயரிட்டு அழைக்கப்பட்ட மக்கள் கூட்டத்தில் சரிபாதியான முஸ்லிம் பிரிவினர் தமிழீழத்தின் பெயரில் தாம் ஏமாற முடியாது என்று முழுமையாக விலகிச் சென்றனர்.

இதன் பின்னரும் கிழக்கிலங்கை வாழ் (முஸ்லிம்கள் அல்லாத) தமிழர்கள் தமிழீழத்தில் நம்பிக்கை வைத்து 2004 ஆம் ஆண்டுவரை தமது முழுமையான பங்களிப்பை செலுத்தி வந்தனர். இதன் பின்னர் கிழக்கில் வாழும் தமிழ் பேசும் மக்கள் இருதுருவங்களாக பிரிந்து வாழவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். ஒருபுறம் வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைத்து அதில் முஸ்லிம்களையும் உள் – அடக்கிய தமிழீழத்தில் நம்பிக்கை கொண்டு போராட வேண்டிய நிலையில் கிழக்குவாழ் தமிழர்களின் தலைவிதியை புலிகள் தீர்மானித்தனர். மறுபுறம் முஸ்லிம்களோ தமிழீழத்தை மறுத்து தமது பலவிதமான தனித்துவக் கட்சிகளினூடாக முஸ்லிம்களுக்கான ஒரு தனி அலகு கிழக்கில் உருவாக்கப்படவேண்டும் எனும் கோரிக்கையை அடிப்படையாகக் கொண்டு ஜனநாயக வழிகளில் போராடினர். ஒன்றை ஒன்று மறுக்கின்ற இந்த இருவகையான கோரிக்கைகள் கிழக்கு வாழ் சமூகங்களிடையே மென்மேலும் விரிசல்களையே ஆழப்படுத்தியது. 1990 ஆண்டு கசப்புணர்வுகள் மறைந்துவிடாமல் குரோதங்களே கோலோச்சும் நிலை தொடர்ந்தது.புலிகளும் தமது படைப்பிரிவுகளை கிழக்கே நம்பியே விஸ்தரிக்க வேண்டி இருந்தமையால் கிழக்கு மாகாண தமிழர்களிடையே முஸ்லிம் எதிர்ப்புணர்வுகளையே தக்கவைக்கும் வகையிலேயே திட்டமிட்டு செயற்பட்டனர். “முஸ்லிம்கள் அரசினுடைய கைக்கூலிகள்”இ “சிங்களவர்களுடன் சேர்ந்து கிழக்கு மாகாணத்தை ஆக்கிரமிக்க போகிறார்கள்”இ “கிடைக்கப்போகின்ற தமிழீழத்தில் மட்டுமே கிழக்கு வாழ் தமிழர்களுக்கு பாதுகாப்பு உத்தரவாதப் படுத்தப்பட முடியும்.” என்றவாறான கட்டுக்கதைகளை புலிகளின் பிரச்சார ஊடகங்கள் கிழக்கிலே பரப்பி அதில் வெற்றியும் கண்டனர். இதன்காரணமாகவே ஐ.P.மு.கு. வெளியேற்றத்தின் பின்னர் டு.வு.வு.நு. எனும் அமைப்பின் முதுகெலும்பாக கிழக்குப்போராளிகள் பரிணமித்தனர். இன்று புலிகள் பீற்றிக்கொள்கின்ற ஆனையிறவுஇ முல்லைத்தீவுஇ ஜெயசிகுறு என்கின்ற வெற்றிகள் கிழக்கு மாகாண இளைஞர்கள் இன்றி சாத்தியப்பட்டிருக்க முடியாது. இரண்டுவருடங்கள் தொடர்ச்சியாக நடந்த ஜெயசிக்குறு சமரில் பங்கெடுத்த போராளிகள் 7000 – 9000 ஆகும். இதில் ஜெயந்தன் படையணிஇ அன்பரசிப் படையணி போன்றவற்றில் இருந்து மட்டும் சுமார் 6000 போராளிகள் களத்தில் நின்றனர். புலிகளுக்கு மரபுவழிப்போர் நடத்தும் திறமை கொண்ட கெரில்லா அமைப்பு எனும் சான்றிதழ் சர்வதேச ரீதியாகக் கிடைப்பதற்கு இந்த சமரில் மட்டும் கிழக்கிலங்கை தமது 1090 இளம் உயிர்களை ஓமந்தை வீதிகளில் பலியிட்டது.

13 வது நாடாளுமன்றத் தேர்தல் – 2004

இறுதியாக நடைபெற்ற பாராளுமன்ற பொதுத்தேர்தலிலும் தமிழீழத்திற்காக ஆணைகோருவதாக புலிகளின் முழு ஆதரவுடன் தமிழ் கூட்டமைப்பினர் போட்டியிட்டனர். இந்த தேர்தலிற்கு இரு மாதத்திற்கு முன்பாக மார்ச் -03 ல் புலிகளுக்குள் கிழக்கு பிளவு ஆனது இடம்பெற்றது. இப்பிளவு ஆனது மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டங்களை அடிப்படையாககொண்டு போட்டியிட்ட கூட்டமைப்பு வேட்பாளர்களிடையேயும் கருத்தியல் ரீதியான பிளவை ஏற்படுத்தியிருந்தது. தமிழ் தேசியத்தை ஆதரிப்பவர்கள்இ எதிர்ப்பவர்கள் என்று பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டன. இறுதியில் பகிரங்கமாக தமிழ் தேசியத்திற்கு ஆதரவாக போட்டியிடுவதாக அறிவித்த யோசப் பரராசசிங்கம் 21940 வாக்குக்களை மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்தார். அதேவேளை தமிழ் தேசியவாதத்தை நிராகரித்தும் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களின் அபிவிருத்தியே தமது இலக்கு என்று போட்டியிட்டோர் அமோக வெற்றியீட்டினர். சுமார் 3 லட்சம் (303928) வாக்காளர்களை கொண்ட மட்டக்களப்பில் சுமார் 1 1ஃ2 தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு இடப்பட்டது. அதில் தமிழ் தேசியம் பெற்றுக்கொண்ட வாக்குகள் 25000 மட்டுமே. இது வீதாசார ரீதியாக வெறும் 8.2 மட்டுமேயாகும். பேரினவாத கட்சிகள் என்று சொல்லப்படுகின்ற ஜனநாயக மக்கள் சுதந்திர முன்னணி (26268) இ யு.என்.பி யும் (6151) இணைந்து 32419 வாக்குகளை பெற்றிருக்கின்றன. இவையனைத்தும் புலப்படுத்துவது எதனை? தமிழ் பேரினவாதஇ யாழ் மேலாதிக்க வாதிகளை விட சிங்கள பேரினவாதிகள் பரவாயில்லை எனும் முடிவுக்கு மட்டக்களப்பு மக்கள் வந்துள்ளமையைத்தான் இதே நிலைதான் அம்பாறை மற்றும் திருகோணமலையிலும் தமிழ்தேசியத்திற்கு ஏற்பட்டது. விரிவஞ்சி அவற்றை இங்கே தவிர்த்து கொள்ளுகின்றேன். இந்த யதார்த்தத்தை புரிந்துகொள்ள மறுத்து எங்கோ இருந்துகொண்டு யாரோ சில தலைமைகள் கிழக்கு மாகாண மக்கள் எதிர்காலத்தை தீர்மானிப்பது இனிமேலாவது நிறுத்த வேண்டும்; 2004 மார்ச் மாதம் தமிழீழ விடுதலைப்புலிகளுக்குள் ஏற்பட்ட பிளவானது கிழக்கு மாகாணத்தில் இருந்த முஸ்லிம்கள் அல்லாத தமிழர்களையும் தமிழீழ தாயகக் கோட்பாட்டில் இருந்த இறுதிக்கட்ட நம்பிக்கையும் கைவிடச் செய்திருக்கிறது. . இன்றைய நிலையில் கிழக்கிலங்கையின் தமிழ் பேசும் மக்கள் எல்லோரும் தமிழீழத்துக்கு வெளியே தமது அரசியல் அபிலாசைகளை தேடத்தொடங்கியுள்ளனர். இந்நிலைமையானது கிழக்கு மாகாணத்தில் தமிழீழ தாயகக் கோட்பாட்டினுடைய பொருத்தப்பாட்டின் மீது பாரிய கேள்விகளை எழுப்பியுள்ளது. அதேவேளை சிறுபான்மை முஸ்லிம்களை மற்றய தமிழர்களின் எதிரிகளாகக் கட்டமைத்து அதனூடாக கிழக்கில் வாழும் முஸ்லிம்கள் அல்லாத தமிழர்களை தமிழீழத்தின் பக்கம் தக்கவைத்திருந்த நிலையும் முடிவுக்கு வந்துள்ளது. தமிழீழ ப+ச்சுத்தலில் இருந்து விடுபட்ட கிழக்கிலங்கை வாழ் மக்கள் எல்லோரும் தமது கால் நூற்றாண்டுகால தமிழீழம் எனும் கனவுலக வாழ்வில் இருந்து விடுபட்டு யதார்த்தம் குறித்து ஒருமித்து சிந்திக்கத் தலைப்பட்டுள்ளனர்.
இந்த வரலாற்றுப் பின்னணிகளின் ஊடாக குறிப்பாக சில அவதானங்களை எடுத்துக்காட்டி எனதுரையை முடிக்க விளைகிறேன்.

1) கிழக்கு மாகாணமானது வாய்மொழி வரலாறுகள் ஊடாகவும்இ எழுதப்பட்ட வரலாறுகள் ஊடாகவும் அறியப்பட்டிருக்கின்ற வரலாற்றுப் பின்புலத்தில் ஒருபோதும் யாழ்ப்பாணத்துடன் எவ்வித தொடர்புகளையும் கொண்டிருக்கவில்லை என்பதாலும்;

2) அங்கு வாழும் மக்கள் தமது சமூக, பொருளாதார, கலாச்சார, பண்பாட்டு அம்சங்கள் அனைத்திலும் தனித்துவமான தேசவழமைகளை கைக்கொண்டு வருவதனாலும்

3) கிழக்கில் தமிழ், முஸ்லிம், சிங்கள, பறங்கியர் என்று தனியொரு மொழியினருக்கோ, இனத்தினருக்கோ, மதத்தினருக்கோ மட்டும் உரிமைகோர முடியாதவாறு ஒரு பன்மைத்துவ மக்கள் கூட்டம் ஐக்கியமாக வாழ்நது வந்திருப்பதனாலும்

4) 1977, 1989, 2004 போன்ற முக்கிய தேர்தல்களில் யாழ்ப்பாணத் தலைமைகளையும் அவர்களது கோரிக்கைகளையும், அவர்களது பிரதிநிதிகளையும் கிழக்குமக்களில் பெரும்பான்யோர் நிராகரித்து வந்துள்ளமையினாலும்

5) இவற்றைக் கருத்தில் எடுக்காத வகையில் கிழக்கு மண்ணுக்கு பொருந்தாத ஒரு தமிழ்த் தேசியம் எனும் ஒற்றை அடையாளம் அங்கு திணிக்கப்பட்டமையினாலேயே வரலாற்றில் என்றும் இல்லாதவாறான இரத்த ஆறு எங்கள் பள்ளிவாசல்களிலும்இ எங்கள் எல்லைக் கிராமங்களிலும்இ எங்கள் வெருகல் ஆற்றிலும் ஓட நேர்ந்தது என்பதாலும்

6) கடந்த நூற்றாண்டு முழுக்கவும் இந்த நூற்றாண்டிலும் தொடர்ந்து வருகின்ற எல்லாவிதமான யாழ்ப்பாண தலைமைகளும் கிழக்குமாகாணத்துக்கு தீங்கிழைத்துஇ மட்டம் தட்டி எமது உரிமைகளை நாமே தீர்மானித்துக்கொள்ள முடியாதவாறு தடையாக இருந்து வருவதனாலும்

7) கிழக்கில் அமைதியும் சமூக நல்லிணக்கவும் பேணப்பட்டு மீண்டும் அங்கு ஒரு சமாதான சகவாழ்வு ஏற்பட வேண்டுமானால் அது கிழக்கு மாகாணத்தின் அரசியல் தலைவிதியை அங்கு வாழும் மக்களே தீர்மானிக்கும் நிலை ஒன்று ஏற்படுவதனாலேயே சாத்தியமாகும். அதுவே இலங்கை தேசத்திலும் இனக்குரோதங்கள் மறைந்து மீண்டும் சமாதானம் நிலவ முன்நிபந்தனையும், முன்னுதாரணமாகவும் அமைய முடியும்.

இலங்கையின் ஆகவே இனச்சிக்கலுக்கு தீர்வைநாடி நடத்தப்படப் போகின்ற எந்தவொரு பேச்சு வார்த்தை மேடையிலும் கிழக்கு மாகாணத்தின் பிரதிநிதிகளுக்கு சம அந்தஸ்தை வழங்குகின்ற ஒரு முத்தரப்பு பேச்சுவார்தையே பொருத்தமானதொன்றாக இருக்கும். அதேபோன்று எடுக்கப்படுகின்ற எந்வொரு தீர்விலும் வடக்கை வடக்காகவும்இ கிழக்கை கிழக்காகவும் கொண்ட தனித்தனி அலகுகள் உருவாக்கப்பட வேண்டும் என்பதே எனது கருத்தாகும்.

அடிக்குறிப்புகள்

1 – மட்டக்களப்பு தமிழகம் பக்:398 (வீ.சி.கந்தையா)
2 – யாழ்ப்பாண சரித்திரம் பக்:07 (ஆ.முத்துதம்பிபிள்ளை)
3 – மட்டக்களப்பு தமிழகம் பக்:401 (வீ.சி.கந்தையா)
4 – கரவாகு வரலாறு பக்:04 (எம்.எம்.காசீம்)
5 – மட்டக்களப்பு மாண்மீகம் பக்:52இ பக்:55 (எவ்.எக்ஸ்.சி.நடராசா)
6 – யாழ்;பாண சரித்திரம் பக்:36 (ஆ.முத்துதம்பிபிள்ளை)
7 – கரவாகு வரலாறு பக்:05 (எம்.எம்.காசீம்)
8 – மாகோன்வரலாறு பக்:127 (தங்கேஸ்வரி கந்தையா)
9 – ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சனைகள் ஐஏ பக்:220 (அ.முகமது சமீம்)
10 – இலங்கை தமிழர் தேசவழமைகளும் சமூக வழமைகளும் பக்:257 (சி.பத்மநாதன்)
11 – இலங்கை தமிழர் தேசவழமைகளும் சமூக வழமைகளும் பக்:06 (சி.பத்மநாதன்)
12 – “மற்றது” சஞ்சிகைஇ இதழ்-01 பக்:38 (எம்.ஆர்.ஸ்ராலின்)
13 – இலங்கை தமிழ் தேசியவாதம் அதன் ஆரம்பதோற்றம் பற்றியதோர் ஆய்வு பக்:315 (கலாநிதி முருகர் குணசிங்கம்)
14 – “மற்றது” சஞ்சிகைஇ இதழ்-02 பக்-62 (எம்.ஆர்.ஸ்ராலின்)

பிரசுர வெளியீடு : “ஜனநாயகத்துக்கான கிழக்கிலங்கை முன்னணி.



நன்றி www.thuuu.net
read more...

Monday, 7 February 2011

சமூகங்களை மோதவிட்டு வேடிக்கை பார்க்க நினைக்கும் பதிவர்கள்.

பதிவர்கள் பலவிதம். ஒவ்வொருவரும் ஒருவிதம். இருப்பினும் சமூகங்களை அல்லது பதிவர்களை மோதவிட்டு வேடிக்கை பார்க்க நினைக்கும் ஒருசில பதிவர்களும்??????? இல்லாமல் இல்லை. இவர்களின் வலையில் நானும் சிக்கித் தவித்ததுண்டு.

இலங்கையைச் சேர்ந்த ஒரு பதிவர் என்னையும் வடபகுதி பதிவர்களையும் மோதவிட்டு வேடிக்கை பார்க்க நினைத்த சம்பவங்கள் பல.. நான் மட்டக்களப்பு என்பதனால்.

அண்மைக்காலமாக தமிழக இலங்கை மீனவர்கள் பற்றிப்பேசப்படுகின்றது. பல பதிவர்கள் தங்கள் சார்பான கருத்துக்களை பதிவிட்டிருந்தனர்.

தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்பாக பரவலாக எதிர்ப்பலைகள் வந்தநேரத்தில். சில இலங்கைப்பதிவர்கள் இலங்கை மீனவர்கள் தமிழக மீனவர்களினால் வெகுவாகப் பாதிக்கப்படுகின்றனர் என்பதனை சுட்டிக்காட்டினர்.

அவர்களின் எண்ணம் தமிழக மீனவர்களை குற்றம் சொல்வதாகவோ தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதற்கு எதிரான பிரச்சாரத்தை வலுக்குன்ற செய்வதற்கான ஒரு முயற்சியாகவோ அமையவில்லை.

மாறாக தமிழக மீனவர்களின் படுகொலைக்கு எதிராக பரவலாக எதிர்ப்பலைகள் வருகின்றபோது அலங்கை குறிப்பாக வடபகுதி மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பாகவும் பேசுகின்றபோது இலங்கை மீனவர்களின் பிரச்சினைகளையும் இந்தியா உட்பட உலகறியச் செய்யலாம் என்பதே அப்பதிவர்களின் எண்ணமாக இருந்தது. காரணம் தமிழக மீனவர்களினால் இலங்கை மீனவர்கள் வெகுவாகப் பாதிக்கின்றனர் என்பது பலருக்கு தெரியாது.

தமிழக மீனவர்களினால் இலங்கை மீனவர்கள் பாதிக்கின்றனர். நானும் முற்று முழுதாக ஏற்றுக்கொண்டதோடு இலங்கை மீனவர்கள் தொடர்பாக பேசப்படவேண்டிய நேரம் இதுவல்ல என்பதனையும் சுட்டிக்காட்டி இருந்தேன்.

இலங்கை மீனவர்கள் தொடர்பாக இலங்கைப் பதிவர்கள் எழுதியதை இலங்கை இந்திய பதிவர்கள் சண்டையாகவும் தமிழக தமிழர்களினதும் இலங்கை தமிழர்களினதும் சண்டையாக ஒரு சிலர் திசை திருப்ப நினைத்துவிட்டனர்.

இதில் வேடிக்கை என்னவென்றால் இலங்கைத் தமிழர்கள் பல்வேறு அவலங்களை கடந்தகாலங்களிலே சந்தித்திருக்கின்றனர். இலங்கையிலே இடம்பெற்ற இறுதி யுத்தத்திலே தமிழர்கள் சொல்லொண்ணா துயரங்களை அனுபவித்தனர்




தமிழர்கள் எத்தனையோ அவலங்களை சந்தித்தபோது அவர்கள் பற்றி அக்கறைப்படாதவர்கள் வடபகுதி தமிழர்களுக்காக இப்போது குரல்கொடுக்க வந்திருக்கின்றனர். சில நண்பர்கள் மன்னிக்கவேண்டும்.

ஒவ்வொரு தமிழன் மனதையும் விட்டு அகலாத விடயம் யாழ் Áலகம் எரிப்பு. தமிழர்களின் அரிய பொக்கிசமாக இருந்த யாழ் Áலகம் எரிப்பு தொடர்பாக எழுதும்போது யாழ் Áலகத்திலே என்ன பொக்கிசம் இருந்தது என்று யாழ் Áலகத்தை தரக்குறைவாக எழுதியவர்கள் இன்று வடபகுதி மக்களுக்காக குரல் கொடுக்க முன்வந்ததன் நோக்கம் என்ன?

இலங்கை மீனவர்கள் பாதிக்கப்படுவது தொடர்பாக எழுதிய இலங்கைப் பதிவர்கள் பலர் புரிந்துணர்வோடு தமிழக மீனவர்கள் சார்ந்து இலங்கை மீனவர்களின் பிரச்சினைகளையும் முன்வைத்தனர்.

ஆனால் மோதவிட்டு வேடிக்கை பார்க்க நினைத்தவர்கள் பல்வேறு இடங்களிலே பதிவர்களை Àண்டிவிட நினைத்தனர். இலங்கை வலைப்பதிவர் குழுமத்திலும் இப்பிரச்சினை தொடர்பாக விவாதம் இடம் பெற்றது. அங்கேயும் ஒருவரின் கருத்து தொடர்பாக நான் சில கேள்விகள் கேட்டும் பதில் இல்லை வெறுமனே பதிவர்களை Àண்டிவிடுவதாகவே இருந்தது.


இவ்வாறான பதிவர்களிடம் சொல்கின்றேன். பதிவெழுத எதுவுமில்லையா. பதிவுகளை திருடியாவது எழுதுங்கள் பதிவர்களையும் சமூகங்களையும்  மோதவிட்டு வேடிக்கை பார்க்காதீர்கள்.
read more...

Sunday, 6 February 2011

தொடரும் போராட்டங்கள்.


மட்டக்களப்பு மாவட்டத்தின் களுதாவளைக் கிராமத்திலே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்படவில்லை என்று நேற்று மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில்
  
இன்று காலையிலும் குறித்த பிரதேச மக்கள் களுதாவளை பிரதான வீதியில் ஆர்ப்பாட்டத்தில்


முன்னர் இடம்பெற்ற வெள்ள அனர்த்தத்தின்போதும் தங்களுக்கு உரிய முறையில் நிவாரணங்கள் வழங்கப்படவில்லை என்றும் இப்போது இடம்பெற்ற வெள்ள அனர்த்தத்தின்போதும் தாம் வெகுவாகப் பாதிக்கப்படடு; தங்கள் இருப்பிடங்களுக்குள் வெள்ளம் புகுந்ததனால் தாம் பாடசாலையில் தங்குவதற்கு வந்தபோது வந்தபோது தங்க வேண்டாம் உறவினர் வீடுகளுக்கு செல்லுங்கள் என்று பிரதேச செயலாளரினால் கூறப்பட்டதாக அம்மக்கள் தெரிவத்தனர்.


இன்று ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்துக்கு பிரதி அமைச்சர் வினாயகமூர்த்தி முரளிதரன் நிவாரணங்கள் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக அம்மக்களிடம் சொல்லிச் சென்றார்.


கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனும் மாகாணசபை உறுப்பினர் பிரசாந்தன் அவர்களும் களுதாவளைக் கிராமத்துக்கு வருகைதந்து பாதிக்கப்பட்ட பகுதிகள் அனைத்தையும் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளைக்கேட்டறிந்து கொண்டதோடு மக்கள் தங்கியிருக்கும் முகாமுக்கும் சென்றார்.


பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒருதொகை உலருணவுப் பொருட்களை வழங்கியதுடன் களுதாவளை மற்றும் ஏனைய பிரதேசங்களிலே பாதிக்கப்பட்டிருக்கின்ற மேட்டுநில பயிர்ச் செய்கை தொடர்பாக விவசாயிகளிடம் கேட்டறிந்து கொண்டதோடு அவர்கள் தொடர்பிலும் அவர்களுக்கான நிவாரணங்கள் தொடர்பிலும் தாம் கவனம் செலுத்துவதாகவும் குறிப்பிட்டார்.

read more...

Saturday, 5 February 2011

தமிழன் படும்பாடு

இன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்துக்கு முன்னால் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட களுதாவளைக் கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்திலே தொடர்ந்து பெய்துவரும் கடும் மழையினால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியிருக்கின்றன. வெள்ளத்தின் காரணமாக தமது இருப்பிடங்களைவிட்டு வெளியேறிய களுதாவளைக் கிராம மக்கள் பலர் இரண்டு  நாட்களுக்கு முன்னர் பாடசாலை ஒன்றில் தங்குவதற்கு சென்றபோது பிரதேச செயலாளரினால் உறவினர் வீடுகளுக்கு செல்லும்படி பாதிக்கப்பட்ட மக்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

மேலதிக தகவல்கள் இங்கு சென்று பார்க்கவும்.

என்ன செய்வதென்று தெரியாமல் இருந்த மக்கள் இன்று பிரதேச செயலகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அந்த மக்களுக்கு மூன்று நாட்களின் பின்பு இன்று பாடசாலையில் தங்குவதற்கு அனுமதி வழங்கப் பட்டிருக்கின்றது.

மூன்று நாட்களாக தங்குவதற்கு அனுமதி வழங்கப்படாமைக்கான காரணம் தான் பல தடவை அரச அதிபருக்கு அறிவித்தும் அரச அதிபர் முகாம் அமைப்பதற்கு தனக்கு அரச அதிபர் அனுமதி தரவில்லை என்றும் பிரதேச செயலாளர் குறிப்பிட்டார்.


திருமலையிலிருந்து மட்டக்களப்பிற்கு நடைபாதையாக கிழக்கு முதல்வர் 



_mg_2000
img_1231
img_1358
img_1411
img_1426



_mg_2039
img_1388
img_1397


read more...

Friday, 4 February 2011

வலைப்பதிவர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் அவசியமான அழைப்பு

கிழக்கு மாகாணத்திலே மீண்டும் தொடர் மழை பெய்துகொண்டிருக்கின்றது. அதிலும் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரை பல பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கின்றன.

பல பிரதேசங்கள் முற்றாக நீரில் மூழ்கியிருப்பதுடன் பல இடங்களுக்கான தரைவழிப் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டிருக்கின்றன.

முன்னரும் மட்டக்களப்பு மாவட்டம் வெள்ளத்தினால் அதிகமாகப் பாதிக்கப்பட்டிருருந்தன. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாகப் பாதிக்கப்பட்டிருந்தன.

விவசாயம் மீன்பிடி உட்பட பல துறைகளும் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருந்தன. ஆனாலும் மக்களுக்கு உரிய முறையில் நிவாரணங்கள் வழங்கப்படவில்லை.

அது ஒரு புறமிருக்க மீண்டும் பேரவலத்தை இந்த சந்தித்திருக்கின்றனர். பாதிக்கப்பட்டிருக்கின்ற மக்களுக்கு எந்தவிதமான உதவிகளும் பல இடங்களில் வழங்கப்படவில்லை. சில பிரதேசங்களிலே மக்களை முகாம்களை அமைக்க வேண்டாம் என்று உயரதிகாரிகள் சொல்கின்றனர்.

முன்னர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு அனைத்தையும் இழந்த மக்கள் இந்த வேளையில் சொல்லொண்ணா துயரத்தை எதிர்நோக்குகின்றனர்.

பல மக்கள் பட்டினியால் வாடுகின்றனர். இது நான் நேரடியாக கண்ட உண்மை இன்று ஒரு வீட்டுக்கு சென்றேன் நேற்றும் இன்றும் உணவில்லாமல் பட்டினியில் இருந்தனர். இவ்வாறு பல குடும்பங்கள் இருக்கின்றனர்.

அரசாங்கமோ உதவி செய்வதாக சொல்கின்றது எமது தமிழ் உறவுகள் பட்டினியால் வாடுகின்றனர்.

நான் தொடர்ந்து நிவாரணப்பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றேன்.

உலகெங்கும் இருக்கின்ற தமிழர்களிடம் அன்பான வேண்டுதல் ஒன்றை விடுக்கின்றேன். எமது தமிழ் உறவுகள் பல அவலங்களை எதிர்நோக்கியிருக்கின்றனர். அவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்யுங்கள் இதனை அலட்சியம் செய்ய வேண்டாம்.

read more...

சில அரச அதிகாரிகளின் அடாவடிகள். பாதிக்கப்படும் மக்களின் அவலம்

கிழக்கு மாகாணத்திலே தொடர்ந்தும் கடும் மழை பெய்து வருகின்றது. இதனால் பல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியிருக்கின்றன.

இதனால் பல மக்கள் தங்கள் இருப்பிடங்களைவிட்டு வெளியேறவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்களை எவ்வாறு காப்பாற்றலாம். அவர்களுக்கு எவ்வாறு உதவலாம் என்று பலரும் ஈடுபட்டு வரும் நிலையில் பாதிக்கப்பட்ட மக்களைக் காப்பாற்ற வேண்டிய உயரதிகாரிகளே மக்கள் நலனில் அக்கறையின்றி செயற்படுவது கவலைக்குரிய விடயமாகும்.

நேற்று முன்தினம் எனது கிராமத்திலே பாதிக்கப்பட்ட மக்கள் பாடசாலை ஒன்றில் தங்குவதற்காக வந்திருந்தனர். உடனடியாக மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் அருள்ராஜா அவர்களிடம் பாதிக்கப்பட்ட மக்கள் பாடசாலையில் தங்குவதற்கு வந்திருக்கின்றனர் என்று அறிவித்தோம்.

அவரால் எங்களுக்கு கொடுக்கப்பட்ட பதில் பாடசாலையில் தங்க வேண்டாம். உறவினர் வீடுகளுக்கு போக சொல்லுங்கள். மக்கள் செய்வதறியாது அவ்விடத்தைவிட்டு சென்றுவிட்டனர்.

இங்கு மட்டுமல்ல மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குற்பட்ட பாதிக்கப்பட்ட மக்களை உறவினர் வீடுகளுக்கு செல்லுங்கள் பாடசாலைகளிலோ அரச கட்டிடங்களிலோ தங்கவேண்டாம் என்று சொல்லி இருக்கின்றார்.

பரவலாக எல்லா இடங்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இவ்வாறான நிலையில் உறவினர் வீடுகளைத்தேடி மக்கள் எங்கே செல்வது.

இன்று அரசாங்கம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படுகின்றன என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது இந்த பிரதேச செயலாளர் ஏன் இப்படி நடந்து கொள்கின்றார்.

முன்னர் வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டபோது பாதிக்கப்பட்ட பல மக்களுக்கு இன்னும் நிவாரணங்கள் வழங்கப்படாத பிரதேச செயலகப் பிரிவும் இதுவாகும்.
இப்பிரதேச செயலாளரின் இந்த நடவடிக்கையால் பல ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இப்பிரதேச செயலாளரின் இந்த நடவடிக்கை தொடர்பில் உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

read more...

Thursday, 3 February 2011

ஏன்?.. ஏன்?.. ஏன்?.. இப்படி எல்லாம் நடக்கிறது?..

 கிழக்கில் மீண்டும் பேரவலம்.

5vellamகிழக்கு மாகாணத்தில் மீண்டும் பெய்து வரும் அடைமழையினால் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
வெள்ளம் வடிந்து காணப்பட்ட அனைத்து பகுதிகளிலும் மீண்டும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதனால் மக்கள் மீண்டும் தமது சொந்த இடங்களை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி, கிரான், மற்றும் வவுனதீவு, வெல்லாவெளி, களுவாஞ்சிகுடி, காத்தான்குடி ஆகிய பகுதிகள் உட்பட ஏறாவூர் நகர், பட்டிப்பளை, மண்முனை வடக்கு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் மீண்டும் தாழ் நிலப் பிரதேசங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில் பல குடும்பங்கள் வெள்ளத்தினால் இடம்பெயர்ந்து உறவினர்களின் வீடுகளில் தங்கியிருக்கின்றனர்.
கடந்த ஜனவரி மாதத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 1346.5 மில்லி மீற்றர் மழை பெய்துள்ளதாக மட்டக்களப்பு வானிலை அவதான நிலைய பொறுப்பதிகாரி எஸ். சிவதாஸ் தெரிவித்தார்.
கடந்த ஜனவரி மாதத்தின் முதலாம் திகதியிலிருந்து 31 ஆம் திகதி வரை இம் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
ஜனவரி மாதத்தில் 8 ஆம் திகதியன்று 331.2 மில்லி மீற்றர் ஒருநாளுக்கான அதிக மழை வீழ்ச்சியாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளது

சேனநாயக்க சமுத்திரத்தின் வான்கதவுகள் திறப்பு.

grandcouleespill_dam_11இங்கினியாகல சேனநாயக்க சமுத்திரத்தின் அணை உடைப்பெடுக்கலாம் என்ற அச்சத்தின் காரணமாக அதன் ஐந்து வான் கதவுகள் நேற்றுக் காலை (02) திறந்துவிடப்பட்டன.
இங்கினியாகல பிரதேசத்தில் தொடர்ச்சியாகப் பெய்துவரும் கடும் மழையின் காரணமாக சேனநாயக்க சமுத்திரத்தின் நீர் மட்டம் உயர்வடைந்துள் ளது. இதனால்இ அணை உடைப்பெடுத்துப் பாரிய அனர்த்தம் ஏற்படுவதைத் தவிர்க்க வான் கதவுகள் அரையடி உயரத்திற்குத் திறக்கப்பட்டதாக இங்கினியாகல பொலிஸார் தெரிவித்தனர்.
வான் கதவுகள் திறக்கப்படுவது குறித்துஇ அந்தப் பிரதேசத்தின் மக்களுக்கு அறிவுறுத்தியதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
வான்கதவுகள் திறக்கப்படுவதால் கல்முனைஇ அக்கரைப்பற்றுஇ சம்மாந்துறைஇ இங்கினியாகலஇ தமண ஆகிய பிரதேசங் களின் தாழ்ந்த பகுதிகள் பாதிப்புக்கு உள்ளாகுமென எச்சரிக்கப்பட்டது.
வான்கதவுகள் திறக்கப்படும் செய்தி காட்டுத்தீ போல் பரவியதனால் நேற்று அம்பாறை மாவட்டத்தில் பதற்றமும்இ பீதியும் நிலவியது. பல பொலிஸ் நிலையங்களிலும் எச்சரிக்கை ஒலிபரப்பு செய்யப்பட்டது. இச் செய்தியால் பாடசா லைகள்இ அலுவலகங்கள் யாவும் காலை 9.30 மணியுடன் இழுத்து மூடப்பட்டன. மக்கள் பாதுகாப்பான இடம் தேடிச் சென்றனர். சேனநாயக்க சமுத்திரத்தின் நீர் மட்டம் காலையில் 104 அடியாகக் காணப்பட்டது. அதனால் வான்கதவு திறக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதனிடையேஇ மாவடிப்பள்ளி கிட்டங்கி தாம்போதிகளில் மீண்டும் வெள்ளம் பாய்ந்தோடுகிறது. போக்குவரத்து துண்டிக் கப்பட்டுள்ளது. மண்டூர் வெல்லாவெளி வீதியில் 3 தாம்போதிகளுக்கு மேல் 4 அடிவெள்ளம் பாய்கிறது. நவகிரி நீர்ப்பாசனக்குளம் திறந்துவிடப்பட்டதே காரணமாகும். அதனால் அப்பகுதி போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. வெள்ளநிலைமை படுமோசமாக மாறுகிறது. அடைமழையும் தொடர்ந்து பெய்து கொண்டிருக்கிறது

மட்டு ரயில் சேவை பாதிப்பு.

train_2005_10231 கொழும்பில் இருந்து மட்டக்களப்பிற்கு எரிபொருள் ஏற்றிச் சென்ற ரயில் மன்னம்பிட்டியில் வைத்து நேற்று முன்தினம் தடம்புரண்டது. இதனால்இ மட்டக்களப்புக்கான சேவை நேற்றும் தடைப்பட்டது. மட்டக்களப்புக்கான ரயில் சேவைகள் இன்று வழமைக்குத் திரும்பும் என அறிவிக்கப்படுகிறது

read more...

Wednesday, 2 February 2011

உண்மையா? மூட நம்பிக்கையா?

இது மூட  நம்பிக்கையா? 

இன்று ஒரு வீட்டுக்கு சென்றேன் எல்லோரும் சற்று பதட்டத்துடன் இருந்தார்கள். என்ன என்று கேட்டேன் வீட்டு சாமி அறையில் இருந்த பிள்ளையார் படம் விழுந்து நொறுங்கிவிட்டது ஏதோ கெட்ட காரியம் நடக்கப்போவதாக பலர் சொன்னதாக சொன்னார்கள் எனக்கு சிரிப்பு வந்தது.

நான் மூட நம்பிக்கைகளை வெறுப்பவன் எமது மக்களிடம் பல மூட நம்பிக்கை இருக்கின்றது. 

சாமி படம் விழுந்து உடைந்தால் கெட்டகாரியம் நடக்கும் என்பது உண்மையா? மூட நம்பிக்கையா?

கிழக்கு மாகாண சபையின் அவசர வெள்ள நிவாரணக்குழு

மட்டக்களப்பு மாவட்டத்திலே தொடர்ந்தும் கடும் மழை பெய்துகொண்டிருக்கின்றது. கிழக்கு மாகாண சபை உடனடியாக நிவாரணக் குழு ஒன்றினை அமைத்திருக்கின்றது. 


srilankamap2010-2நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினால் அதிகளவான மழை வீழ்ச்சி ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றது. இதனால் நாட்டில் பல பாகங்களிலும் வெள்ள அபாயம் ஏற்பட்டிருக்கின்றது. விசேடமாக கிழக்கு மாகாணமே அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கின்றது. இன்று (02.02.2011) கிழக்கு மாகாண சபையின் அமர்வின்போது கட்சித் தலைவர்களின் கூட்டம் இடம் பெற்றது. இதன்போது கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்த நிலைமைகளை ஆராய்வதற்காக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான வெள்ள நிவாரணக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவானது கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இவ் வெள்ள நிவாரணக்குழுவானது கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், தவிசாளர் எச்.எம் பாயிஸ் அமைச்சர்களான எம்.எஸ் உதுமாலெப்பை, துரையப்பா நவரெட்ணராஜா, டபுள்யு.எ.விமலவீர திசாநாயக்க, எம்.எஸ். சுபைர், எதிர்கட்சி தலைவர் தயாகமகே, மாகாண சபை உறுப்பினர்களான எ.எஸ். ஜவாகிர் ஸாலி அப்துல் மஜீத், எ.சசிதரன், கே.யே.விமல் பியதிஸ்ஸ, எம்.எ.எம். மக்ரூப், இரா துரைரெட்ணம் ஆகியோர் இக்குழுவில் அங்கம் வகிக்கின்றார்கள்.

read more...

மீண்டும் அழிவுகளை நோக்கி கிழக்கு மாகாண தமிழர்கள்

கிழக்கு மாகாணத்திலே மீண்டும் தொடர்ந்தும் கடும்மழை பெய்துகொண்டு வருகின்றது. குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்திலே நேற்றும் இன்றும் இடைவிடாது மழை பெய்துகொண்டிருக்கின்றது.

பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியிருக்கின்றன. பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியிருக்கின்றன. பாதிக்கப்பட்ட மக்கள் பாடசாலைகளையும் பொது கட்டிடங்களையும் நோக்கி வர ஆரம்பித்திருக்கின்றனர்.

முன்னரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இடைத்தங்கல் முகாம்களிலே இருந்த மக்கள் இன்னும் தமது பழைய நிலைக்கு திரும்பாத நிலையில் மீண்டும் இடைத்தங்கல் முகாம்களுக்குள் முடங்கவேண்டிய நிலை.

இது ஒரு புறமிருக்க முன்னர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சரியான முறையில் நிவாரணங்கள் வழங்கப் படவில்லை என்று பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த குற்றச்சாட்டு முற்று முழுதான உண்மை. வெள்ளத்தினால் நானும் முற்று முழுதாகப் பாதிக்கப்பட்ட ஒருவன் எங்களுக்கு இதுவரை வழங்கப்பட்ட நிவாரணம்

1 கிலோகிராம் அரிசி
500 கிராம் சீனி
400 கிராம் பருப்பு
200 கிராம் தேங்காய் எண்ணை

ஆனால் விவசாயம் கால்நடை என்று பாரிய இழப்புக்களை சந்தித்தோம். ஒரு குடும்பம் மேலே கொடுக்கப்பட்ட பொருட்களை வைத்து என்ன செய்வது.

ஆனால் அரசாங்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவதற்காக கொடுக்கப்பட்ட பொருட்களை கொள்ளையடித்த அதிகாரிகள் பலர்.
(யார் யார் எவ்வாறு கொள்ளையடித்தனர் விபரங்கள் விரைவில்) அங்கர் பால்மா பக்கட்டுக்கள் பல இலட்சக்கணக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவதற்காக கொள்வனவு செய்திருக்கின்றனர். ஒரு அங்கர் பக்கட்டுக்கு மொத்த விலையிலும் பார்க்ள 15 ரூபா மேலதிகமாக விலை குறித்து பற்றுச்சீட்டு பெற்றிருக்கின்றனர்.
ஆறு இலட்சம் ரூபாவிற்கு தண்ணீர் போத்தல்கள் வாங்கியதாக பற்றுச்சீட்டு  பெற்றிருக்கின்றனர். ஆனால் தணணீர்ப் போத்தல்கள் வாங்கவில்லை இவ்வாறு பல விடயங்கள்.

மீண்டும் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான முறையில் நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும்.

முன்னர் வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டபோது நான் பலருக்கு அழைப்பு விடுத்திருந்தேன் முடிந்தவரை பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுங்கள் என்று.

மட்டக்களப்பு மக்கள் பாரிய அழிவினை சந்தித்திருந்தனர். அவர்களுக்கு உதவுவது தொடர்பாக சர்வதேசத்திலே இருக்கின்ற தமிழர்கள் அக்கறை காடடியது மிக மிகக் குறைவு.

குறிப்பாக தமிழக தமிழர்களின் பங்களிப்பு மிக மிகக் குறைவாகவே இருந்தது. ஒரு சிலர் தங்களால் முடிந்ததை செய்திருக்கின்றனர். அவர்களுக்கு நன்றிகள்.

என்னுள்ளே இருக்கின்ற சந்தேகம் சின்ன சின்ன விடயங்டகளை எல்லாம் பெரிது படுத்தி ஒன்றுபடும் உலகத் தமிழர்கள் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் வெள்ளத்தால் வெகுவாகப் பாதிக்கப்பட்டபோது அக்கறை செலுத்தாதது ஏன் மட்டக்களப்பு என்பதாலா?

read more...

Tuesday, 1 February 2011

இலங்கை தமிழன் என்றால் உசிரு. இந்திய தமிழன் என்றால் மசிரு.

இன்று இணையத்தளங்கள் வலைப்பதிவுகளில் அதிகமாக பேசப்படுகின்ற விடயம் தமிழக மீனவர்களின் கொலை பற்றிய விடயமாகவே இருக்கின்றன.

இந்தப் பிரச்சினை தொடர்பிலே சில வலைப்பதிவுகளிலும் சமூகத் தளங்களிலும் வாதப்பிரதிவாதங்கள் இடம் பெற்றுக்கொண்டிருக்கின்றன.

இலங்கை வலைப்பதிவர்கள் பலர்; இலங்கை மீனவர்கள் குறிப்பாக வடபகுதி தமிழ் மீனவர்கள் தமிழக மீனவர்களால் பல்வேறு வழிகளிலே பாதிப்புக்குட்படுத்தப்படுவதாக குற்றம் சாட்டுகின்றனர்.

இலங்கை மீனவர்கள் மீன்பிடிக்கின்ற இலங்கையின் கடலெல்லைக்குள் இந்திய மீனவர்கள் அத்துமீறிப் பிரவேசித்து இலங்கை மீனவர்களின் வலைகள் என்பவற்றை சேதப்படுத்தி தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களைப் பயன்படுத்தி இலங்கை மீனவர்களின் வயிற்றிலடித்துச் செல்லும் செயல் அன்று தொட்டு இன்றுவரை நடந்து வருகின்றது. இது யாவரும் அறிந்த விடயம்.

தமிழக  மீனவர்களால் வெகுவாகப் பாதிக்கப்பட்ட இலங்கை வடபகுதி மீனவர்கள் பலர் இருக்கின்றனர்.

தமிழக மீனவர்களினால் இலங்கை மீனவர்கள் பாதிக்கப்படுவதுபோல் அன்றுதொட்டு இன்றுவரை இலங்கை கடற்படையினரால் பல தமிழக மீனவர்களின் உயிர்களும் பறிக்கப்பட்டிருக்கின்றன.

ஆனால் இன்று தமிழக மீனவர்களின் படுகொலைக்கு எதிர்ப்பலைகள் அதிகமாகி இருக்கின்றன.

உலகத்தில் எந்த ஒரு மூலையிலாவது ஒரு தமிழனுக்கு ஏதாவது ஒன்று நடந்துவிட்டால் ஒவ்வொரு தமிழனும் அவனுக்காகக் குரல் கொடுக்க வேண்டும். அவன் இலங்கைத் தமிழனாக இருந்தால் என்ன இந்தியத் தமிழனாக இருந்தால் என்ன. இன்று தாக்கப்பட்டிருப்பவன் தமிழன். ஒவ்வொரு தமிழனும் அவனுக்காகக் குரல் கொடுக்கவேண்டும்.

பல காலமாக தமிழக மீனவர்களால் இலங்கை மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இருந்தபோதும் தமிழக மீனவர்களின் படுகொலை தொடர்பாக பரவலாக எதிர்ப்பலைகள் வந்துகொண்டிருக்கின்றபோது. அவர்களுக்காக பலரும் குரல் கொடுத்துக் கொண்டீருக்கும்போது நாமும் அவர்களுக்காக குரல் கொடுக்கவேண்டும்.

அதைவிடுத்து தமிழக மீனவர்கள் என்றும் இலங்கை மீனவர்கள் என்றும் பிரித்து பேசாதீர்கள். இங்கே இரு பக்கமும் பாதிக்கப்படுவது எம் உறவுகள் அப்பாவித் தமிழர்கள்.

இன்று தமிழக மீனவர்களின் படுகொலைக்கு எதிராக எல்லோரும் குரல் கொடுக்கும் நேரத்தில் இலங்கை மீனவர்கள் தமிழக மீனவர்களால் பாதிக்கப்படுகின்றனர் என்று குற்றம் சுமத்துவது எந்த வகையில் நியாயம்.

இலங்கை மீனவர்கள் பாதிக்கப்படுகின்றார்கள் இல்லை என்று சொல்லவில்லை. இந்த நேரத்தில் இந்தக் குற்றச்சாட்டுக்கள் தேவையானதா?

இலங்கை மீனவர்களின் வலைகள் வெட்டப்படுகின்றன இதனை தமிழகத்திலே இருக்கின்ற அனைத்து மீனவர்களும் செய்கின்றனரா? இல்லையே. இன்று உயிரிழந்திருக்கின்ற இந்திய மீனவன்தான் இலங்கை தமிழர்களின் வலையை வெட்டினானா?

எவனோ ஒருவன் செய்திருக்கலாம் அதற்காக இன்று அப்பாவியாக உயிரிழந்திருக்கின்ற தமிழக மீனவனை குற்றம் சொல்லலாமா? அவனுக்காக குரல் கொடுக்காமல் விடலாமா?

இலங்கை பதிவர்கள் சிலர் தமிழக மீனவர்களினால் இலங்கை மினவர்கள் வெகுவாகப் பாதிக்கின்றனர் எனும் குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்கின்றேன். நானும் குற்றம்சாட்டுகின்றேன். ஆனாலும் குற்றம்சாட்டுவதற்குரிய நேரம் இதுவல்ல.

இலங்கையிலே இறுதிக்கட்ட யுத்தம் நடைபெற்றபோது. எதுவுமே அறியாதவர்கள்போன்று தமிழக அரசியல்வாதிகள் மௌனம் சாதித்தபோது (தமிழக அரசியல் வாதிகளென்ன உலகமே மௌனம் சாதித்தபோது) இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுக்கவில்லையா? உயிரைக்கூட கொடுத்தார்கள்.

இந்திய தமிழன் இலங்கை தமிழன் என்பதனை மறந்து தமிழன் என்று சிந்திப்போம் பாதிக்கப்பட்ட உறவுகளுக்காகக் குரல்கொடுப்போம்.

தலைப்பை பார்த்தே பலர் என்னைத் திட்டியிருப்பீர்கள். திட்டிய அனைவருக்கும் நன்றிகள்.

இன்று பதிவிட முடியாதபோதும் பதிவிட வேண்டும் என்பதற்காக பதிவிட்டேன்.

ஒரு கையினால் Type பண்ணிய பதிவு இது.  ஒரு கை அசைக்க முடியாத நிலை நல்ல மனிதன் ஒருவன் கையை வெட்டிவிட்டான்.
read more...