எதிர் வரும் 18ம் திகதி மட்டக்களப்பில் இடம்பெற இருக்கின்ற தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியன் தேசிய மாநாட்டுக்கு பிரதி அமைச்சர் வினாயகமூர்த்தி முரளிதரனுக்கு (கருணா) அழைப்பு விடுக்கப்படவில்லை என அறிய முடிகின்றது.
இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது
கிழக்கு மாகாணத்திற்கென தனியான ஒரு கட்சி வேண்டும் கிழக்கு மக்கள் வடக்குத் தலைமைகளினால் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டு வரக்கூடாது கிழக்கு மக்களுக்கு தனித்துவமான கிழக்குத் தலைமைத்தவம் வேண்டும் என்று புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்து வந்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உருவாக்கத்திற்கு காரணகர்த்தாவாக இருந்தவர் கருணா அவர்கள். எதிர்வரம் 18ம் திகதி இடம்பெற இருக்கின்ற கட்சியின் தேசிய மாநாட்டுக்கு கருணாவிற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
இலங்கையின் அரசியல் தலைவர்கள் பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டபோதிலும் கட்சியின் உருவாக்கத்திற்கு காரணமான பிரதி அமைச்சர் வினாயகமூர்த்தி முரளிதரனுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. பிரதி அமைச்சர் அவர்களுக்கு அழைப்பு விடுவதில்லை என கட்சியின் தலைவர் செயற்குழு தீர்மானித்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து அறிய முடிகின்றது.
அழைப்பு விடுக்கப்படாமைக்கு காரணம் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உருவாக்கத்திற்கு கரணகர்த்தாவாக இருந்த போதிலும் அவர் கிழக்கு மக்கள் மீதும் கிழக்கின் தனித்தவ கட்சியில் பற்கு இல்லாததன் காரணமாகவே வேறு ஒரு கட்சியில் இணைந்து செயற்படுவதன் காரணமாகவே அழைப்பு விடுக்கப்படவில்லை எனவும் அறிய முடிகின்றது.
0 comments: on "தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உருவாக்கத்துக்கு காரணகர்த்தாவான கருணாவிற்கு கட்சியின் மாநாட்டிற்கு அழைப்பு இல்லை"
Post a Comment